சனி, 1 அக்டோபர், 2011

UK Appeal Court stays deportation order of Tamil asylum seekers

2ND LEAD (Adds details)

UK Appeal Court stays deportation order of Tamil asylum seekers

[TamilNet, Thursday, 29 September 2011, 03:54 GMT]
An unknown number of Tamils, rumoured to be close to 50, who were to have been on today’s flight and who had appealed for judicial review of their cases have had their High Court removal orders overturned in the Court of Appeal Wednesday, Channel-4 reported. An appeal court judge had overturned one Tamil woman’s removal orders on the grounds that the UK Border Agency had breached British and European law by disclosing potentially sensitive information on the individual to the Sri Lankan authorities, thus placing her at greater risk upon her return, the report added. However, Friday's edition of a Sri Lanka daily said that 50 deported asylum seekers arrived from UK. The true facts behind the conflicting stories is expected to emerge during the day.

News on stay of deportation
Courtesy: Channel-4
The Appeal court said in ordering the stay of removal: "It is reasonably arguable that there has been breach of the prohibition of section 13(3) of the Immigration and Asylum Act 1999 and the UK's Charter Obligations in giving information about the "failed asylum status' of the applicant which may reasonably form the basis of an application for a judicial review," the report said.

Section 13(3) of the relevant UK Act states, "In providing identification data, the Secretary of State must not disclose whether the person concerned has made a claim for asylum."

Channel 4 report further said:

Since the end of a brutal civil war in Sri Lanka in May 2009, human rights groups have repeatedly highlighted serious concerns over the safety of members of the island’s Tamil minority.

Human Rights Watch, Amnesty International and the British-based charity Freedom from Torture cite continued credible evidence of physical abuse, disappearances, rape and detention without trial.

"The position of the present government is untenable. We have documented evidence that torture is continuing in Sri Lanka,” says Keith Best, Chief Executive of Freedom from Torture (formerly known as the Medical Foundation for the Care of Victims of Torture).

“The UK is leaving itself wide open to allegations of turning a blind eye to torture by removing people in this manner,” said Mr Best. “There is no evidence that the British government is attempting to monitor what happens to them on their return."

Official documents obtained by Channel 4 News indicate that Flight PV030 was scheduled to depart for Sri Lanka with “up to 50 returnees” at 1500hrs on Wednesday 28th September. The documents reveal that passengers would comprise a mixture of failed asyslum-seekers, foreign national prisoners and other immigration offenders.

Related Articles:
26.09.11   UK plans bulk deportation of Eezham Tamil asylum seekers


External Links:
Guardian: UK not monitoring safety of Tamils deported to Sri Lanka
DNA: UK stops deportation of Tamils to Sri Lanka over fears of torture
channel4: Last minute court order halts Sri Lanka deportation
Guardian: Torture charity calls on UK to halt deportation flight to Sri Lanka

Sri Lanka’s removal from Commonwealth urged in Canadian parliament

Sri Lanka’s removal from Commonwealth urged in Canadian parliament

[TamilNet, Saturday, 01 October 2011, 05:22 GMT]
“Will the Prime Minister take steps today to urge the commonwealth to revoke Sri Lanka’s membership until it holds the perpetrators to account and they are judged in international courts? Will he support calls from the international community for action against the Sri Lankan government, asked Liberal MP Jim Karygiannis in the Canadian parliament Thursday, accusing the government for doing nothing when thousands were butchered. Supporting the line, and criticising the government for idling too long, New Democratic Party MP, Rathika Sitsabaiesan urged the government to commit to a stand with immediate effect in calling for a UN inquiry on Sri Lanka. Replying, the foreign minister of the Conservative government, John Baird said, “The Prime Minister did not sit idly by when he expressed grave concern about attending a future summit of the Commonwealth in Colombo.”

“I can say that the Prime Minister has spoken out loudly and clearly on this very important issue of human rights. I have certainly relayed the Government of Canada's position to both the high commissioner and directly to my counterpart, the minister of foreign affairs of Sri Lanka, to express our concerns on the lack of accountability for the serious allegations of war crimes, the lack of reconciliation with the Tamil community and with events that have taken place since the end of the civil war,” the Canadian foreign minister said.

“Canada will continue to speak loudly and clearly on behalf of human rights around the world, especially in Sri Lanka,” he assured.

Replying Rathika, the foreign minister said: “We did not sit idly by at the United Nations on Monday where I brought the plight of human rights violations to the floor of the General Assembly. The Prime Minister did not sit idly by when he expressed grave concern about attending a future summit of the Commonwealth in Colombo. We did not sit idly by when we spoke with the high commissioner to Sri Lanka and raised our concerns. I did not sit idly by last week when I met with the foreign minister of Sri Lanka to express our significant concerns.”

“We have not sat idly by. We will continue to stand up, do the right thing and fight for human rights around the world, especially in Sri Lanka,” he reiterated.

* * *


There is a dramatic shift in the Canadian Conservative approach to Sri Lanka’s fractured politics. “The new approach, a mix of diaspora politics and foreign-policy principles, will have implications abroad and at home with a long-frustrated Tamil-Canadian community,” said the Canadian media The Globe and Mail, Wednesday.

But the main issue of concern for Eezham Tamils is that they are always at the receiving end in international diplomacy – whether the US-tagged countries come out with the paradigm of ‘war on terrorism’ or they now call for international investigation of the war crimes – because in both instances the national question of Eezham Tamils is twisted to get coupled with bloc interests, perverting delivery of universal justice for the question, commented a young generation Tamil political analyst in Canada.

The Tamil analyst cited the Canadian foreign minister’s speech at the UN, coupling the question of Sri Lanka’s war crimes on Eezham Tamils with that of US-Canada’s stand on Iran and North Korea.

It is this kind of ‘twist’ in projection that makes some powers and many countries in the world to mobilise against the delivery of justice to Eezham Tamils. In the same way, some Tamils, hijacked to jump on the bandwagon, equating genocidal Rajapaksa with Bin Laden and Gadaffi also sends wrong signals harming delivery of justice to Eezham Tamils, the analyst said.

Whether the twist of the national question as ‘terrorism’ coupling it with an imperialist war paradigm, or whether the reduction of the genocide into mere ‘war crimes of both sides’ and coupling it with an East-West contention, Genocidal Sri Lanka as a State was benefited and is benefited on both counts, the analyst points out.

The Canadian Tamil analyst cited the kind of polarisation that took place in the Human Rights Council at Geneva in September, the line of thinking expressed by some powers as well as small countries knowingly shielding genocidal Sri Lanka, the artful silence of India, the Indian PM’s speech supporting Palestine independence at the UN but contributing to Tamil genocide in its backyard, and the twisted or skewed application of ‘anti-imperialist’ (anti-US) excuse by Sri Lanka articulated through the left of the by-gone generation ready for exploitation, like Tamara Kunanayagam (SL ambassador in Cuba and now in Geneva).

Tamara’s associate Mr. Jean Pierre Page, who also spoke at Geneva on behalf of World Federation of Trade Unions, blamed the West for imperialist and colonialist schemes on Sri Lanka but did not say a single word on the oppression of Tamil people, Colombo media reports said.

The precarious part of the whole scenario is the West getting ‘pardonable’ excuse for its inaction that actually results from its calculated misapplications. Thus, in strange ways both blocs help each other in helping genocidal Sri Lanka.

It won’t be of any surprise if Canada again finds excuses to back out on Sri Lanka at the Commonwealth Prime Minister’s meet in Perth, Australia, this month, commented the Canadian Tamil analyst.

* * *


The Canadian Tamil political analyst continues:

Eezham Tamil diaspora, especially in North America, should realise that without the support of the non-West, nothing could be achieved in the international forums, unless the West is prepared for unilateral action.

Unilateral action of the West is not possible as long as India and the USA have contentious views on the national question of Eezham Tamils.

Only a determined and articulated stand taken by Tamil Nadu could move New Delhi in this regard.

For Tamil Nadu to take an unambiguous and determined stand, the Eezham Tamils have to first demonstrate their determination in every possible way.

So, if for any reason the Eezham Tamils blunt the fundamentals of their righteous demands then everything will be blunted.

The diaspora should learn from Sri Lanka deploying Tamaras and Dayans on one hand and the military diplomats on the other to ‘coordinate’ from Beijing and Moscow to New Delhi and Washington.

The diaspora should also realise that what is more important than jumping on the bandwagon is seeing that the aspirations of Eezham Tamils are rightly and righteously represented and not perverted.

Politicians like Rathika may have to imbibe the point into progressive political circles in Canada, rather than being carried away by the connotations of the terms, ‘Sri Lanka’ and Sri Lankans’.

The theoretical position on the Collective Human Right, i.e., The Right to Self Determination of Eezham Tamils as a Nation, should always be upheld and should never allowed to be diluted or deviated by the hoodwink of individual human rights reforming a habitually genocidal State.

The theoretical position has to be strengthened by our alliance with the other nations without State all over the world.

These are very important in getting the universal support, which is the only guarantee for our liberation.

The moral strength on the side of the Eezham Tamils is that who ever paves way for bringing in justice to them will get accreditation as the power of human civilisation of our times.

Related Articles:
30.09.11   Politics of Human Rights
28.09.11   Canada responsible for Tamils becoming refugees: NDP parliam..
27.09.11   Inaction on Sri Lanka undermines UN Convention: Canadian for..
22.09.11   Discussions in Geneva show world plunging into ‘State Anarch..
12.09.11   Harper to boycott Sri Lanka CHOGM over rights concerns

குசராத் கலவரங்களை வடிவமைத்துச், சதித்திட்டம் தீட்டி, நடத்தி முடித்தவர் நரேந்திரமோடிதான்

மோடி மதக்கலவரத்தை தூண்டினர் என்று சாட்சியம் அளித்தவர் கைது !

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த மதக்கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி குஜராத் மாநில  காவல்துறைக்கு உத்தரவுயிட்டதாக  உச்சநீதிமன்றத்தில் சாட்சிப் அளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் நேற்று வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார்.
 இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருக்கும் சஞ்சீவ் பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும்படி வற்புரித்தினார் என்று   புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இந்த வாதத்தை ஏற்கமறுக்கிறார் குஜராத் மாநிலத்ததின் முன்னாள் டி ஜி பி ஸ்ரீகுமார். நரேந்திரமோடிக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று சாட்சியமளித்ததற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
குஜராத் மதக்கலவரங்களை நரேந்திரமோடி தான் திட்டமிட்டு நடத்தினார் என்று முதன்முதலில் கூறிய தான் பதவி உயர்வு அளிக்கப்படாமலும், ஓய்வூதியம் வழங்கப்படாமலும் பழிவாங்கப்பட்டதாக கூறும் ஸ்ரீகுமார், அதே போல சஞ்சீவ் பட்டும் நரேந்திரமோடிக்கு எதிராக சாட்சியமளித்ததற்காக தற்போது பழிவாங்கப்படுவதாகக் கருதுகிறார்.
குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி தலைமையில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை நடத்திய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்துகொண்டதாக தெரிவிக்கிறார் ஸ்ரீகுமார். சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்வதற்காக கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பதிலடியாக, முஸ்லீம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை நடத்துவதற்கு மூன்று நாட்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் அவர்களை காவல்துறை தடுக்கக்கூடாது என்றும் நரேந்திரமோடி உத்தரவிட்ட தகவலை சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார் என்பது தான் அவர் மீது நரேந்திரமோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கோபம் வரக்காரணம் என்கிறார் ஸ்ரீகுமார். ஆனால் சஞ்சீவ் பட்டின் இந்த சாட்சியத்தை மோடி தரப்பு மறுத்துவருகிறது.
 ஆனாலும், நரேந்திரமோடிக்கு எதிரான சஞ்சீவ் பட்டின் சாட்சியம் மிக மிக முக்கியமானது என்கிறார் ஸ்ரீகுமார். “குஜராத் கலவரங்களை வடிவமைத்து, சதித்திட்டம் தீட்டி, நடத்தி முடித்தவர் நரேந்திரமோடிதான் என்பதற்கான ஒரே நேரடி சாட்சியமாக சஞ்சீவ் பட் இருக்கிறார். மோடியின் ஆணையின்படியே காவல்துறை அதிகாரிகள் எல்லாம் செயற்பட்டார்கள் என்பதற்கான ஒரே நேரடி சாட்சியமாக சஞ்சீவ் பட் இருக்கிறார். அதனால் தான் அவரை குறிவைத்து பழிவாங்குகிறார்கள். இதில் மேலும் கவலை தரும் விடயம் என்னவென்றால், இந்த பிரச்சினைக்காக, ராகவன் தலைமையில் உச்சநீதிமன்றம் நியமித்திருக்கும் சிறப்பு புலனாய்வுக்குழுவும் குஜராத் அரசாங்கத்தோடு ஒத்துப்போகிறதே தவிர, உண்மையை வெளிக்கொண்டுவர மறுக்கிறது. குஜராத் அரசு போட்டுக்கொடுக்கும் செயற்திட்டத்திற்கேற்ப இவர்களின் புலனாய்வு சென்று கொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், நான் எப்படி தனி மனிதனாக நீதிமன்றம் போய் எனக்கான நியாயத்தை பெற்றேனோ, சஞ்சீவ் பட்டுக்கும் அது தான் ஒரே வழி. வேறு வழியில்லை,” என்கிறார் குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார்.

பிபிசி

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது

மாட்ரிட், அக். 1-
 
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் 34 வயது மதிக்கதக்க ஒரு மர்ம மனிதன் புகுந்தான். திடீரென அவன்தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணியின் தலையில் சுட்டான். பின்னர் மற்றொரு பெண்ணின் மார்பில் சுட்டான்.
 
உடனே இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அந்த நபர் அந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குண்டு காயத்துடன் கிடந்த 2 பெண்களையும் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பிணி உள்ளிட்ட 2 பெண்களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
ஆனால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருப்பது தெரிந்தது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை ஆபரேசன் மூலம் உயிருடன் வெளியே எடுத்தனர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Saturday, October 01,2011 05:06 PM, க.தங்கதுரை. ராந்தம் said:
கடவுள் கடவுளாக இருக்கின்றார். மனிதன் மனிதனாக இருப்பதில்லை. மிருகமாக மாறிக்கொண்டு இருக்கின்றான்.
Saturday, October 01,2011 04:13 PM, பெ வீரமுத்து said:
இறந்த பெண்ணே மீண்டும் உயிர் பிழைத்ததற்கு சமம் / அந்த குழந்தை அந்த நாட்டை ஆளும் அளவிற்கு வாழவேண்டும் என்பது எனது ஆசை .
On Saturday, October 01,2011 04:26 PM, சித்திக் said :
ஐயோ பாவோம் இந்த கருத்து நிறைவேறாது என்று தெரிந்தும் ஆசை பட்டுவிட்டிர் போன்கோல்
On Saturday, October 01,2011 05:00 PM, siva said :
எதுவும் நடக்கும்.இப்போதே எதையும் தீர்மானம் செய்ய முடியாது.நாடகமே உலகம். நாளை நடப்பதை யாரறிவார் ?மொத்தத்தில் ஒரு வித்யாசமான கோணத்தில் வீரமுத்து அவர்கள் ஆசை பட்டிருக்கிறார்.
Saturday, October 01,2011 04:00 PM, muthu said:
ஐயோ கடவுளே
 

Anna University: அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைப்பு: அரசிதழ் வெளியீடு

ஆணை பிறப்பிக்கவுடன்தான் அரசிதழில் வெளியிடுவார்கள். இங்கே அரசிதழில் வெளியிட்டபின்பு  ஆணை பிறப்பிக்கப்படும் என உள்ளதே!. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைப்பு: 
அரசிதழ் வெளியீடு

First Published : 01 Oct 2011 02:59:46 PM IST


சென்னை, அக். 1: அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து, ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக உருவாக்கும் சட்டத் திருத்த அரசிதழ் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.இது அரசாணையாக வெளியிடப்பட்ட உடன், அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுவிடும்.கடந்த திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என 5 பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் இந்த 5 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், அதன் உறுப்புக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டக் கல்லூரி (எஸ்.ஏ.பி.) உள்ளிட்ட நான்கு கல்லூரிகள் மட்டும் இணைவு பெற்றிருந்தன.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்தற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு அறிவித்தது.இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டதால் கல்வித் தரம் குறைந்துவிட்டது. ஒவ்வொரு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் வெவ்வேறு பாடத் திட்டங்கள், பிற நடைமுறைகளை பின்பற்றுகின்றன. எனவே, பிரிக்கப்பட்ட 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, மீண்டும் மூன்பிருந்ததுபோல் ஒரே சென்னை அண்ணா பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என அறிவித்தது.தொடர்ந்து இதற்கான சட்டத் திருத்த மசாதோவும் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இப்போது இந்த சட்டத் திருத்தம் அரசிதழாக வெளியிடப்பட்டுள்ளது.இது ஒரிரு நாள்களில் அரசாணையாக வெளியிடப்படும். அவ்வாறு அரசாணையாக வெளியிடப்பட்ட உடன், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு விடும். அன்றைய தினமே இந்த 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரும் பதவி இழந்துவிடுவர். இவர்கள் அனைவரும், அவரவர்களுடைய முந்தைய பணிக்கு சென்று விடுவர்.பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மட்டும் அவர்களுடைய பணியை தொடர்வர்.
கருத்துகள்

good for higher education. no corruption hereafter.
By muthu
10/1/2011 4:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர்கள்

சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர்கள் : 

அதிர்ச்சியில் சர்வேந்திர சில்வா!

வெள்ளிக்கிழமை, 30 புரட்டாசி 2011.
savendra-sillva-america-30-09-11
சமீபத்தில் அமெரிக்காவில் தங்கியுள்ள சர்வேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டமை யாவரும் அறிந்ததே. 58ம் படைக்கு தளபதியாக இவர் இருந்த கால கட்டத்தில் யுத்தக்குற்றங்கள் இழைத்தார் என இவர்மேல் வழக்கு தொடரப்பட்டு நஷ்ட ஈடும் கோரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு விடுத்த அழைப்பாணையின் பிரதியை சர்வேந்திர சில்வாவின் வீட்டிற்குச் சென்று சிலர் வழங்கியுள்ளனர். நியூயோர்க்கில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வசித்துவரும் அவர் வாசல்ஸ்தலதைத் தட்டி அங்கே இருந்த அவரது உதவியாளிடம் இந்த அழைப்பாணையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. இதனை இவர் இனி மறுக்க முடியாது. காரணம் அனைத்தும் படமாக்கப்பட்டு அவை ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டத்துக்கு அமைவாக நீதிமன்றத்தால் வழங்கப்படும் சில அழைப்பாணை 120 நாட்களுக்கே செல்லுபடியாகும். அதனை 120 நாட்களுக்குள் குறிப்பிட்ட நபரின் கைகளில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்க்காவிட்டால் போட்ட வழக்கு காலாவதியாகிவிடும். எனவே சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கை தொடுத்த அலி பவுடா என்னும் வழக்கறிஞர் சாதூரியமான முறையில் இந்த அழைப்பாணையை சர்வேந்திர சில்வாவிடம் ஒப்படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது அதனை படமாக்கி ஆதாரத்தையும் திரட்டிவிட்டார். எனவே இனி நிச்சயமாக சர்வேந்திர சில்வா நீதிமன்ற வாசல் ஏறியே தீரவேண்டும்.  அது உறுதியாகிவிட்டது. இவ்வழக்கைத் தொடுக்க உலகத் தமிழர் பேரவை(GTF) வழக்கறிஞர் அலி பவுடாவுக்கு உறுதுணையாக நின்றமை பாரட்டத்தக்கவிடையமாகும்.

இதனையே செயல் திறன் என்று அழைப்பார்கள். அதை விடுத்து நான் வழக்கைப் போட்டு விட்டேன். போடப் போகிறேன் என்று கதை அளப்பதும் கண்ணாம்பூச்சி காட்டுவதையும் விடுத்து ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுவது நல்லது. ஆதாரங்களை தகுந்த முறையில் வெளியிடுவது நல்லது. அறிக்கையை மட்டும் விட்டு விட்டு செயல் திறன் இல்லாமல் இருக்கும் ஒரு சில அமைப்புகளைப் பற்றி நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தோம். அவர்களுக்கு இது நல்லதொரு முன் உதாரணமாக அமையும். தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு அதனை இதனைச் சொல்லி ஏமாற்றுவதை விடுத்து செயல்திறன்கொண்ட இனமாக நாம் மாறவேண்டும். உண்மையை எழுதினால் “பொய் கூறும் இனமாக எம்மைச் சித்தரிக்கவேண்டாம்” என கவிதைகளை பாடுகிறார்கள். கவிதை கட்டுரை எல்லாவற்றையும் ஒரு புறம் மூட்டை கட்டிவிட்டு 40,000 தமிழர்களைக் கொன்ற சிங்களதேச அரசியல்வாதிகளையும் இராணுவத்தையும் யுத்தக் குற்றக் கூண்டில் ஏற்ற அனைவரும் ஒன்றாக முயலுவோண்டும்.

 .

 

மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது



சென்னை : முறிந்த மரத்தை வெட்டக் கோரி, முன்கூட்டியே மாநகராட்சிக்கு சொல்லியும், அலட்சியம் காட்டியதால் வந்தது விபரீதம். லாரி மோதி முறிந்த மரம், பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே விழுந்தது.

வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பெருமாள்; கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகள் கவிதா, 26. இவரது வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையின் மீது, குப்பை லாரி மோதியதில், மரத்தின் அடிப்பகுதி முறிந்து, மரம் கீழே விழத் துவங்கியது. உடனே அப்பகுதி மக்கள், அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும், மாநகராட்சிக்கும் தொடர்பு கொண்டு, முறிந்த மரத்தை முழுவதும் வெட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள், "இதெல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் வராது' என, அலட்சியம் காட்டினர்.

மரமும் கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டே வந்ததைக் கண்ட, பெருமாளின் மகள் கவிதா, அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களிடம்,"மரம் முறிந்து வருகிறது, அருகே வராதீர்கள்' என, எச்சரித்தபடி இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரம், கவிதா மேலேயே விழுந்தது. இதில் கவிதாவின் முகத்தில் அடிபட்டு, நான்கு பற்களும் உடைந்து கீழே விழுந்தன.உடனடியாக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கவிதாவை அழைத்துச் சென்றனர். அங்கு, "மரம் விழுந்து அடிபட்டுள்ளது. போலீசில் புகார் கொடுத்து விட்டு வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும்' என, மருத்துவர்கள் கூறினர். கவிதாவின் உறவினர்கள், போலீசில் புகார் கொடுத்த பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முறிந்து கொண்டிருந்த மரத்தை, புகார் கொடுத்த போதே வெட்டி இருந்தால், இந்த அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருந்திருக்கும். சம்பந்தப்பட்ட துறையினரின் அலட்சியத்தால், இளம்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதுடன், முகமும் ஒரு பக்கம் வீங்கிக் கொண்டே வருகிறது. திருமண வயதில் உள்ள தனது மகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாவது, முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என, கவிதாவின் தந்தை, மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

pe'sum padam, dinamalar :பேசும்படம், தினமலர்


Aruna sayram's corruption: அருணா சாய்ராமின் நாணயமின்மை

நன்றாகப் பாடக்கூடிய கலைஞர். ஆனால், நாணயமற்றவர். எனவே,  இவரின் கருத்திற்கு முதன்மைஅளிக்கக்கூடாது. தமிழக அரசின் இசைக்கல்லூரிகளின் அறிவுரைஞராக நியமிக்கப் பெற்று மாதம் தவறாமல் ஊதியம் வாங்கினார. ஆனால், பெரும்பாலும் மும்பையிலும் வெளிநாட்டுஇசை நிகழ்ச்சிகளிலும் காலத்தைச் செலுத்தினார். ஒற்றைப்பட எண்ணிக்கையில்மட்டுமே துறைக்கு வந்துள்ளார்.தி.மு.க.தலைமைக்கு அப்பொழுது வேண்டப்படாதவராக இருந்த நாட்டியப் பெண் ஒருவரின் நிகழ்ச்சிக்குச் சென்றதால்பதவி பறிக்கப்பட இருந்தது. ஆனால், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரையால் வந்தவர் அவரால் மீண்டும் காப்பாற்றப்பட்டார். ஐந்தாண்டுகளில் அரசிடம் இருந்து பெற்ற ஊதியங்களையும் சலுகைகளையும் திருப்பித் தந்தால் இவரை நாணயமானவர் எனக் கருதலாம்.  தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற தலைக்கனம் இல்லையேல்  நாணயமாக நடந்து கொள்ளட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். / தமிழே விழி! தமிழா விழி!

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

Boycott Srilanka : கனடாவில் சிறிலங்காவின் உல்லாச பயணத்துறைக் கண்காட்சியை எதிர்ப்போம்

கனடாவில் சிறிலங்காவின்

உல்லாச பயணத்துறைக் கண்காட்சியை எதிர்ப்போம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

பதிவு செய்த நாள் : 30/09/2011


சிறிலங்கா அரசினால் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Sri Lanka Travel Show எனும் உல்லாச பயண வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு கனடிய தமிழர்களை தாயாராகுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் 16-17 ஆகிய இருநாட்களுக்கு Mississaugaவில் உள்ள Living Arts Center416இல் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.
கண்காட்சி இடம்பெறும் இருநாட்களும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் ‘சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்’ ஒன்று நா.த.அரசாங்கத்தின் கனடா-மக்கள் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரிதிநிதிகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
தமிழர்கள் மீதான போரின் வடுக்களையும் – வலிகளையும் மறைத்து, இலங்கைத்தீவை ஒரு உல்லாசபுரியாக, சர்வதேத்துக்கு காட்ட சிறிலங்கா அரசு முற்றபட்டு வருகின்றது.
வர்த்தக, பொருளாதார முதலீடுகளைக் பெருக்கவும், உல்லாசத்துறைக்கு வருவாயை ஈட்டவும்; சிறிலங்கா அரசாங்கத்தினால், இந்த உல்லாச பயண வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கா தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டை கனடிய அரசு எடுத்துள்ள இவ்வேளை, தமிழர்களாகிய நாங்கள் எமது பலமான எதிர்பை சிறிலங்கா அரசுக்கு காட்டுவோம்.
‘சிறிலங்கா புறக்கணிப்பு’ எனும் மக்கள் போராட்டம் ஊடாக கண்காட்சியில் பங்கெடுப்போருக்கு சிறிலங்கா குறித்து விழிப்பை ஏற்படுத்துவோம்.
கண்காட்சி நடைபெறும் இருநாட்களும் மக்கள் திரட்சியாக ஒன்றுதிரண்டு கொட்டொலிகள், பாதாதைகள் மூலம் எமது எதிர்ப்பபை காட்டுவதோடு துண்டுப்பிரசுரங்கள் கையேடுகள் மூலம் விழிப்பையும் ஏற்படுத்துவோம்.


இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம் -ஒளிப்படங்கள்

டாக்டர். சி.இலக்குவனார் 

நூற்றாண்டு உரையரங்கம்

பதிவு செய்த நாள் : 30/09/2011


நேற்று காலை “இலக்குவனாரின் பன்முக ஆளுமை” என்னும் தலைப்பில் இந்திய ஒலிபரப்பு நிறுவனம் – அகில இந்திய வானொலி நிலையம் – மாநிலக் கல்லூரி – இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்திய  முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்க ஒலிப்படங்கள்








இந்த உரையரங்கின் ஒலிப்பதிவினை 18/10/2011 இரவு 10மணி முதல் தமிழகத்திலுள்ள  அகில இந்திய வானொலி நிலையங்கள் அனைத்தும் ஒலிபரப்பும்.


http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-1.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-2.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-3.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-4.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-5.jpg
http://www.natpu.in/wp-content/uploads/2011/09/Air-ilakku-6.jpg
0

new software for govt.depts.


தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 50 பேரையும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்து பிரித்தானியா

தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 50 பேரையும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்து பிரித்தானியா

பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 50 பேர் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு பிரித்தானியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்களுக்குப் பாதுகாப்பாக பிரித்தானிய குடிவரவு மற்றும் காவல்துறை அதிகாரிகள் 100 பேரும் இந்த சிறப்பு விமானத்தில் கொழும்பு வந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய அதிகாரிகளால் இவர்கள் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் இருந்து கட்டாயமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 50 பேரில் 27பேர் தமிழர்களாவர். ஏனையோரில் 12 சிங்களவர்களும், 11 முஸ்லிம்களும் அடங்கியுள்ளனர்.
நாடுகடத்தப்பட்ட தமிழர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களும் அடங்கியிருக்கலாம் என்பதால், அவர்களை குற்றப்புலனாய்வுத் துறையினரும் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் தனித்தனியாக விசாரிக்கவுள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகள் நேற்றைய தினமே மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.
திருப்பி அனுப்படும் அகதிகள் சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என்று பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதும் பிரித்தானிய அரசு 50 பேரையும் நாடு கடத்தியுள்ளது.
பிரித்தானிய அரசு திருப்பி அனுப்பப்படுவோரின் பாதுகாப்புக் குறித்த கவலைப்படவில்லை என்று பிரித்தானிய ஊடகங்களாக காடியன், டெய்லி ரெலிகிராப் போன்றன விசனம் வெளியிட்டுள்ளன.

மகிந்தவுக்கு வாக்குறுதி ஏதும் கொடுக்கவில்லை – மாலைதீவு உதவிஅதிபர் கைவிரிப்பு

மகிந்தவுக்கு வாக்குறுதி ஏதும் கொடுக்கவில்லை – மாலைதீவு உதவிஅதிபர் கைவிரிப்பு

நியுயோர்க்கில் மகிந்த ராஜபக்சவுடன் சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து மாலைதீவு உதவி அதிபர் மொகமட் வாகிட் ஹசன் கலந்துரையாடியதாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவலை மாலைதீவு உதவி அதிபரின் செயலகம் நிராகரித்துள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது சிறிலங்கா அதிபரை மாலைதீவு உதவி அதிபர் சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து அதன்போது பேசப்படவில்லை என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதஉரிமை நிலைமைகள் குறித்த சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குவதாக மாலைதீவு உதவிஅதிபர், சிறிலங்கா அதிபருக்கு வாக்குறுதி அளித்ததாக ஹவீரு என்ற ஊடகத்துக்கு சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மாலைதீவு உதவிஅதிபரின் செயலகம், மகிந்த ராஜபக்சவை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்ததாகவும், ,அதில் வர்த்தக உறவுகள் தொடர்பாகவும் ஐ.நாவில் வடக்கு, தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு பற்றியுமே பேசப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பில் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து எதுவுமே பேசப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் முயற்சியில் பரப்புரைகளில் மாலைதீவு அதிபர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது – எங்கு சென்று முடியுமோ!

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது – எங்கு சென்று முடியுமோ!

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் பெ‌ரிய க‌ற்களா‌ல் த‌ாக்கு‌த‌ல் நட‌த்‌தியு‌ள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இ‌தில் பல ‌மீனவ‌ர்க‌ள் காய‌ம் அட‌ை‌ந்ததாகவும் மீனவ‌ர்க‌ளி‌ன் வலைகளை அறு‌த்து எ‌‌றி‌ந்து‌ படகுகள் சேத‌ப்படு‌த்‌தப்பட்டுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
ராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் 400‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌விசை‌ப்படகுக‌ளி‌ல் நே‌ற்று ‌மீ‌ன்‌பிடி‌‌க்க செ‌ன்றுள்ளன‌ர். க‌ச்ச‌த்‌தீவு அருகே அவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது 5 படகுக‌ளி‌ல் இல‌ங்கை க‌ட‌ற்படை‌யின‌ர் வ‌ந்து‌ள்ளன‌ர்.
அவ‌ர்க‌ள் ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை பெ‌ரிய பெ‌ரிய க‌ற்களா‌ல் த‌ா‌க்‌கியு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் பல ‌மீனவ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர். வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்து கட‌லி‌ல் ‌வீ‌சிய ‌இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், படகுகளையு‌ம் சேத‌ப்படு‌த்‌தின‌ர். ‌மீ‌ன்களையு‌ம் கொ‌ள்ளையடி‌த்து செ‌ன்று‌வி‌ட்டன‌ர்.
உ‌யி‌ர் ‌பிழை‌த்தா‌ல் போது‌ம் எ‌ன்று ‌மீனவ‌ர்க‌ள் இ‌ன்று காலை கரை ‌திரு‌ம்‌பின‌ர். இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ரி‌ன் இ‌ந்த நடவடி‌க்கை கு‌றி‌த்து ‌மீனவ‌ர்க‌ள் புகா‌ர் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர்.
த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், அ‌ந்நா‌ட்டு ‌மீனவ‌ர்க‌ள் மா‌றி மா‌றி தா‌க்குத‌ல் நட‌த்‌தி வருவது த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளு‌க்கு பெரு‌ம் அ‌ச்ச‌த்தை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்ற போதும் அப்படி ஒரு சம்பவமே இடம்பெறவில்லை என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு' நூல் வெளியீட்டு விழா


சென்னை: ""திருவிதாங்கூர் மக்களின் போராட்டத்திற்காகவே "தினமலர்' பத்திரிகை உருவெடுத்தது,'' என, "தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். பேராசிரியர் யோகீசுவரன் எழுதிய, "திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு' நூல் வெளியீட்டு விழா, சென்னை, தேவநேயப் பாவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் முதன்மை மேலாளர் பொன்னுசுவாமி வரவேற்புரையாற்றினார். பின், நூலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் வெளியிட, "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

இதில், "தினமலர்' நாளிதழ் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: வரலாற்று நூலை எழுத வேண்டுமென்றால் சில அடிப்படை ஆதாரங்கள் தேவை. அந்த அடிப்படை ஆதாரங்களை சேகரிக்காமல் எந்த ஒரு வரலாற்று நூலையும் எழுத முடியாது. ராஜராஜனைப் பற்றி எழுத வேண்டுமென்றால் செப்பேடுகள், இதர கல்வெட்டுகளை வைத்து தான் சோழர் காலத்து வரலாற்றை எழுத முடியும். அதேபோல, திருவிதாங்கூர் தமிழர்களின் விடுதலை பற்றி எழுத வேண்டுமென்றால், அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பெரியோர்கள் கூற்றை வைத்தும், பத்திரிகை, வார ஏடுகளில் வந்துள்ள செய்திகளை வைத்தும் தான் எழுத முடியும். திருவிதாங்கூர் போராட்டத்தைப் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், பெரும்பாலும் ஏதோ ஒரு குறை இருப்பது போல என் மனதில் தோன்றும். ஒரு சார்புடைய எழுத்தாகவே தென்படும். அதை வரலாற்று நூலாகக் கருத முடியாது.
என் தந்தை 1951ம் ஆண்டு, "தினமலர்' இதழை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தார். அவருக்கும், பத்திரிகைத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு விவசாயி. தமிழ்ப் பற்று காரணமாக பத்திரிகை துவங்கினார். நாலு பக்க நாளேடு விலை ஓரணா. திருவிதாங்கூர் மக்களின் போராட்டத்திற்காகவே பத்திரிகையைத் துவங்கினார் என்பதும் உண்மை. போராட்ட காலத்தில் முதல்வர் பட்டம் தாணுபிள்ளையின் தூண்டுதலால், போலீசாரும் சோதனையிட்டது செய்திகளாக உள்ளன.

நூலாசிரியர் யோகீசுவரன் நான்கு ஆண்டுகளாக பல இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்து, ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். போராட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் பலர் இறந்திருப்பர். முதுமையின் காரணமாக பலருக்கு போராட்டத்தைப் பற்றிய நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. அச்சில் வந்த செய்தியை வைத்து தான் எழுத வேண்டியுள்ளது. அதைத் தான் நூலாசிரியர் யோகீசுவரன் செய்துள்ளார். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் கோடிட்டு, இந்த செய்தி இந்த நாளிதழில் எடுக்கப்பட்டது என தேதியையும், பக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இப்போது அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இது, அம்மக்களின் முயற்சியால் வந்த வளர்ச்சி. ஒரு காலக்கட்டத்தில், கொள்ளை அரசியல்வாதிகள் நம்மை மலையாளி என்றனர். அந்தக் காலக்கட்டத்தில் சென்னையிலிருந்து வெளியான தமிழ், ஆங்கிலம் பத்திரிகை எல்லாம் இதை மலையாளிகள் போராட்டம் என செய்திகளை சரியாக வெளியிடவில்லை. சென்னையில் அரசியல் தலைவர்களும் நம்மை புறக்கணித்தனர். நம் காலால் நின்று நாம் வெற்றி பெற்றோம். தமிழகத்தில் அதிகமாக கற்றவர்கள் குமரி மாவட்டத்தில் தான் உள்ளனர் என, மக்கள் தொகை கணக்கீடு சொல்கிறது. 100ல் 92 பேர் உள்ளனர். இது, மாவட்ட மக்களின் முயற்சியால் வந்தது.
தா.பாண்டியன் பேச்சு ஜீவா போல் உள்ளது. இளம் வயதில் ஜீவாவின் பேச்சைக் கேட்டிருக்கிறோம். "மடை திறந்த கடல் போல' அவரின் பேச்சு இருக்கும். அவரைப் போல ஒரு பேச்சாளரை நான் இதுவரை கண்டதில்லை.
திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் பாதை திட்டம், மாவட்டத்திற்கு மற்றொரு வளர்ச்சியாக இருந்தது. ரயில் பாதை இல்லாமல் மக்கள் நிறைய துன்பப்பட்டனர். ரயில் பாதை வரக்கூடாது என, பஸ் அதிபர்கள் முயற்சி செய்தனர். அதற்கு அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்தனர். என் தந்தை ஒரு குழுவை அமைத்து, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவதும், அறிக்கை கொடுப்பதும் என, ரயில் பாதை திட்டத்திற்கு முயற்சி மேற்கொண்டார். பின், இந்திராவின் முயற்சியால் இந்த ரயில் இணைப்பு கிடைத்தது. இவ்வாறு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசியதாவது: விடுதலை அடைந்த பின் பேச்சு, எழுத்து சுதந்திரம் பெற்ற பின், மொழி வழி மாநிலம் அவரவர் தாய்மொழியில், இனத்தின், கலாசாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. மொழி வழி மாநிலம் அமைய, பலர் உயிர் துறக்க நேர்ந்தது. தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய எல்லையோர பகுதிகள், தமிழ் மக்களுக்கு சொந்தமா அல்லது ஆந்திர மக்களுக்கு சொந்தமா என்ற விவாதத்தின் முடிவில், சென்னை தமிழகத்திற்கு தான் என உறுதி செய்யப்பட்டது. ஆந்திர மக்கள் போராடி அவர்கள் விட்ட பாதி பகுதி, கேரள மக்கள் விட்ட மீதி பகுதி போக மிச்சம் இருந்தது தான் தமிழகம். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.

நூலாசிரியரும், பேராசிரியருமான யோகீசுவரன் பேசியதாவது: தமிழர்களின் உயிர் மூச்சாக இருந்து, கன்னியாகுமரி தமிழகத்துக்கு கிடைக்க அச்சாரமாக இருந்தவர், "தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பைய்யர். திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் பாதை திட்டத்துக்கு காரணமாக இருந்தவர் அவரே. கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை கடும் தொல்லை கொடுத்தபோதிலும், நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அதையெல்லாம் தாங்கி பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தினார். கூட்டங்களுக்கு செல்ல தலைவர்களுக்கு பணம் கொடுத்து உதவியவர் அவர். இதை தலைவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். வரலாற்று ஆவணங்கள் தேட வேண்டும் என்ற பெரும் உணர்ச்சி தான் என்னை இந்த புத்தகம் எழுத வைத்தது. ஏராளமான நூலை ஆய்வு செய்த பிறகு தான் இந்த நூலை எழுதியுள்ளேன். இது முழுமையான நூலாக இருக்கும் என கருதுகிறேன். இவ்வாறு யோகீசுவரன் பேசினார்.
 

அக்டோபர் 1- இலிருந்து இரண்டடுக்குத் தொடரி

அக்டோபர் 1-லிருந்து இரண்டடுக்கு ரயில்

First Published : 30 Sep 2011 04:11:07 AM IST


கொல்கத்தா, செப்.29: மேற்கு வங்கத்தில் உள்ள ஹெளராவிலிருந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் நகருக்கு இரண்டடுக்கு விரைவு ரயில் சேவை வரும் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.  மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இந்த சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.  ஹெüரா-தன்பாத் இடையேயான இந்த இரண்டடுக்கு ரயில் சேவை வாரத்துக்கு 5 நாள்கள் இருக்கும் என்று கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.  முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த இரண்டடுக்கு ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதில் 9 பெட்டிகள் உள்ளன. 128 இருக்கை வசதிகள் கொண்ட 7 ஏசி இருக்கை பெட்டிகளும் இதில் அடங்கும். இந்த இரண்டடுக்கு ரயில் சேவை (12383-12384) ஹெüராவிலிருந்து வர்தமான் ரயில் வழித்தடம் வழியாக இயக்கப்படும்.

தில்லித் தமிழ்ச் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள்

தில்லி தமிழ் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்

First Published : 30 Sep 2011 03:41:29 AM IST


சங்கத் தலைவர் கிருஷ்ணமணி, செயலர் முகுந்தன்.
 புது தில்லி, செப்.29: தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:  தலைவர் : எம்.என். கிருஷ்ணமணி.  பொதுச் செயலாளர் : ஆர். முகுந்தன்.  துணைத் தலைவர்: ரமாமணி சுந்தர்.  இணைச் செயலர்கள்: கெளரி இளங்கோவன், பி. ராகவன் நாயுடு.  பொருளாளர்: பி. அறிவழகன்.  இணைப் பொருளாளர்: எஸ். நரசிம்ம மூர்த்தி  செயற்குழு உறுப்பினர்கள்: வி.அனுராதா, உமா பிரபாகர், எம். ஆறுமுகம், கே.ஆர். இளங்கோ, சு. லட்சுமணன், ப. ராமமூர்த்தி, சேதுராமன், பி.சங்கர், டாக்டர் எம். சுந்தரராஜன், அ. வெங்கடேசன்.  பேனல் உறுப்பினர்கள் (காத்திருப்பு உறுப்பினர்கள்): பி. குமார், எஸ். பெரியசாமி.  

சென்னையைச் சார்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது

சென்னையைச் சார்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது

First Published : 30 Sep 2011 03:32:09 AM IST


புது தில்லி, செப். 29: சென்னையைச் சார்ந்த ராஜேந்திரகுமார் அனாயத் என்பவருக்கு ஊடகக் கல்வித் துறையில் சாதனை படைத்ததற்காக அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருது அமெரிக்காவின் அச்சுத் தொழிலகத்தைச் சார்ந்தவர்களால் அச்சு ஊடகத்தில் சிறந்து விளங்கியமைக்காக ராஜேந்திரகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெறும் முதல் அமெரிக்கர் அல்லாதவர் இவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.இந்த விருது ஊடகத்தின் ஆஸ்கார் விருதாக கருதப்படுகிறது.இவர் தற்போது சென்னையில் அச்சு ஊடக சங்கத்தின் தலைவராக உள்ளார்.

லையங்கம்: தர்மம் வென்றது!

First Published : 30 Sep 2011 04:40:29 AM IST

Last Updated : 30 Sep 2011 04:42:39 AM IST

1992-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி, தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக்கூறி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையின்போது அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்களுக்கு 2011 செப்டம்பர் 29-ல் தண்டனை கிடைத்திருக்கிறது.  பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் கிடைத்திருக்கிறது. காலம் கடந்து கிடைத்த தீர்ப்பு என்றாலும், இக்கிராம மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.  இதற்காக அந்தக் கிராம மக்களும், மலைவாழ் அமைப்புகளும், இடதுசாரி இயக்கங்களும் தொடர்ந்து போராடியதால்தான் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, இப்போதாகிலும் நியாயம் கிடைத்திருக்கிறது.  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது உயிருடன் உள்ள 215 பேருமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன், இவர்களில் 17 பேருக்கு அந்தக் கிராமப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தண்டனை வழங்கப்பட்டிருப்பது, இவர்கள் எந்த அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பதை, இப்போதாவது உலகம் அறிந்துகொள்ள வழிகோலியிருக்கிறது.  மற்ற மாநிலங்களிலும் பழங்குடியினர் மீது தாக்குதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்கொடுமைகள் நடக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சிலராக மட்டுமே இருப்பார்கள். வாச்சாத்தி போன்று ஒரு கிராமம் முழுவதுமே பாதிக்கப்படுவது மிக அரிது.  மணக்கும் சந்தனக் கட்டைக்காக தமிழ்நாடு வனத்துறை நாறிப்போனதைப் போன்று இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது.  கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் வந்தது என்று கூறிக்கொண்டு, வனத்துறையினர் 155 பேர், காவல்துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என்று 269 பேர் ஒரு மலைக் கிராமத்தில் புகுந்தனர். சந்தனக்கட்டை குறித்துத் தகவல் வந்ததைப்போல, அந்தக் கிராமத்தில் இருந்த ஆண்கள் அச்சத்தில் வெளியேறிவிட்டார்கள் என்ற தகவல் மட்டும் இவர்களுக்குக் கிடைக்காமலா இருந்திருக்கும்? ஆனாலும், அத்தனை பேரும் அந்தச் சிறிய கிராமத்தில் புகுந்து 90 பெண்கள், 15 முதியவர்கள், 28 குழந்தைகளை "சிறைப்பிடித்தனர்'. இதுவே வனத்துறைக்கு மிகப்பெரிய அவமானம்.  ""அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலர்கள் முறைகேடாக சந்தனக்கட்டையை வெட்டிக் கடத்திக் கொண்டிருந்தபோது, இவர்கள் இருவரும் எல்லை கடந்துபோய் மரம் வெட்டியதில் ஏற்பட்ட மோதல்தான் இந்த ரெய்டுக்கு காரணம்'' என்று பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்தின் பெருமாள் (75 வயது) இப்போதுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றால், சந்தனக்கடத்தல் வீரப்பனை யார் வளர்த்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வது எளிது. கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தி, பெண்களைத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வனத்துறை அதிகாரிகளின் "தொழில்போட்டி' இருந்திருக்கிறது.  இந்தக் கிராம மக்கள் சந்தனக்கட்டைகளை வெட்டினார்கள் என்பது வனத்துறையின் வாதமாக இருந்தாலும், அது உண்மையாகவே இருந்தாலும், இவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகவும் கூலிக்காகவும் மரங்களை வெட்டிக் கொடுத்தவர்களாக இருந்திருப்பார்களேயொழிய, சந்தன மரங்களை விற்றுக் கொழித்தவர்கள் அல்ல என்பது சர்வநிச்சயம். இந்த உண்மை தெரிந்திருந்தும், இந்த மக்கள் மீது இத்தனை வன்மத்துடன், இத்தனை பேர் கும்பலாகச் சென்று வன்கொடுமை செய்கிறார்கள் என்றால், சந்தனமரத்தில் கிடைத்த லாபத்தின் பெருந்தொகை எவ்வளவாக இருந்திருக்கும்! சந்தன எண்ணெய்க் கூடத்தில் சந்தனக்கட்டைகள் தீப்பற்றி எரிந்துபோனதாகச் சொல்லப்படும்போது, இவை கணக்குக் காட்டப்படுவதற்காக வனத்துறையால் நாடகம் ஆடப்பட்டதோ என்று சந்தேகம் ஏற்படுவது நியாயம்தானே?  இந்தியாவின் மையப் பகுதியான தண்டேவாடாவிலும், தெலங்கானாவிலும் இவ்வாறு பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையின் விளைவுதான் இன்று மாவோயிஸ்ட் பிரச்னை. இந்திய அரசும், ராணுவமும்கூட அங்கே உள்ளே நுழைய முடியாத அளவுக்குப் பெரும்பிரச்னையாக மாவோயிஸ்ட் பிரச்னை உருவெடுக்கக் காரணம், இதுபோன்ற சில சம்பவங்களும், வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் சுயநலமுமேயாகும்.  ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய தீவிரவாத அமைப்புகள் தலையெடுக்கவில்லை. சில நேர்வுகளில் ஒரு சிலர் தீவிரவாதத்தில் இறங்கியிருந்தாலும்கூட அவர்கள் மிகச் சிலராகவும் அவர்களுக்கு மலைவாழ் மக்களின் ஆதரவு இல்லாமலும் போனதற்குக் காரணம், 19 ஆண்டுகள் ஆனாலும் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களாகத் தமிழகப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த மக்களின் பொறுமைக்குத் தமிழகம் தலைவணங்க வேண்டும்.  சந்தன மரத்தின் பெயராலும், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் பெயராலும் வனத்துறையினரும் காவல்துறையினரும் பழங்குடியினர் மீது நடத்திய அத்துமீறல்கள் கொஞ்சமல்ல. வாச்சாத்தி கிராமம் வெளியில் தெரியவந்த மிகச் சில நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், வெளியில் வராத சோகங்கள் இன்னும் பல மலைக்கிராமங்களில் புதைந்து கிடக்கின்றன. அந்த அநியாயங்களுக்குத் தீர்ப்பு வழங்க, கலையாத சாட்சியாய் காத்து நிற்கிறது காடு.  தாமதமானாலும்கூட நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கி வாச்சாத்தி கிராமத்துக்கு நியாயம் வழங்கி இருக்கிறது. "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்' என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 29 செப்டம்பர், 2011

waterless vaigai


இப்படித்தான் தள்ளிக்கிட்டு போகணும்!

இப்படித்தான் தள்ளிக்கிட்டு போகணும்!வேறு வழி?!
கருத்துகள்

ஓங்கி மிதித்து கீழே தள்ள வேண்டிய அரசு இது.
By Sankaran
9/29/2011 1:54:00 PM
எல்லாம், நம்மளோட நேரம்டா சாமி. இப்படியிருந்தால், அப்புறம் எப்படி நாடு உருப்படும்?
By P.T.முருகன்.
9/29/2011 7:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வாச்சாத்தி வழக்கு: 17 பேருக்குக் கடுங்காவல்; 215 பேரும் குற்றவாளிகள்- பரபரப்பு தீர்ப்பு

வாச்சாத்தி வழக்கு: 17 பேருக்கு கடுங்காவல்; 215 பேரும் குற்றவாளிகள்- பரபரப்பு தீர்ப்பு

First Published : 29 Sep 2011 12:35:56 PM IST

Last Updated : 29 Sep 2011 04:40:25 PM IST

தருமபுரி, செப்.29: 19 ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த வாச்சாத்தி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி குமரகுரு அறிவித்துள்ளார். இதில் வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி குமரகுரு இதர வழக்குகளை விசாரித்துவிட்டு 11 மணியளவில் வாச்சாத்தி வழக்கை விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து குற்றவாளிகளின் கருத்தைக் கேட்டார்.அவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் குற்றவாளிகள் அல்ல. சம்பவம் நடந்த இடத்தில் தாங்கள் இல்லை என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டனர்.இதைத்தொடர்ந்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே அரசு ஊழியர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதுவே அவர்களுக்கு பெரிய தண்டனை என்றும் தெரிவித்தனர்.மேலும் அரசு ஊழியர்களான அவர்கள் அரசுப் பணியைத் தான் செய்தனர். இந்த வழக்கு சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பானது என்பதால் இதில் வழங்கப்படும் தீர்ப்பு சந்தனக் கட்டை கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்று தெரிவித்தனர்.இந்த வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 155 பேர் வனத்துறை அலுவலர்கள். 108 பேர் போலீஸ்காரர்கள். 6 பேர் வருவாய்த் துறை ஊழியர்கள். அவர்களில் 54 பேர் மரணமடைந்துவிட்டனர்.இந்த வழக்கின் விவரம்:தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக் கிராம‌‌ப் பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக கடந்த 1992-ம் ஆண்டு வனத்துறையினருக்கு புகார் வ‌ந்தது தொடர்பான விசாரணையின்போது சந்தன கட்டை கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று வாச்சாத்தி கிராம பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய கூட்டுக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் உள்பட மொத்தம் 133 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வாச்சாத்தி பகுதியில் கூட்டுக்குழுவினர் சோதனை நடத்தியபோது மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை, காவல்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம், வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கிராம மக்கள் தரப்பில் பரபரப்பான புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை 1992-ம் ஆண்டு ஜூன் 22-‌ம் தேதி அரூர் காவ‌ல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவை விசாரித்த உ‌ச்ச ‌நீ‌தி‌ம‌ன்ற‌ம், வாச்சாத்தி கிராமத்தில் கூட்டுக் குழுவினர் சோதனையின்போது நடந்தது என்ன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் த‌‌மிழக அரசுக்கு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென்மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தியது. இந்த குழுவின் அறிக்கை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்யப்பட்டதை‌த் தொடர்ந்து இந்த தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ன்பே‌ரி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின‌ர்.இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 17-‌ம் தேதி இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.இந்த நிலையில் வாச்சாத்தி சம்பவத்தின்போது தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்த ஆட்சியர், மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர், உதவி ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சா‌ற்றப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தருமபுரி அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனுவை ‌நீ‌திம‌ன்ற‌ம்‌ ‌நிராக‌ரி‌த்தது. இது தொடர்பாக சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் ‌நிராக‌ரி‌க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது.பின்னர் வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்தில் கடந்த ஜூலை 5-‌ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துவந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. மற்றும் குற்றம்சா‌ற்றப்பட்டவர்கள் தரப்பு வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.
கருத்துகள்

ADMK செய்தது தவறென்றால், இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படிருக்கும் அதிகாரிகளுக்கு ஊதிய /பதவி உயர்வுமளித்த திமுக் ஆட்சியை என்ன சொல்வது?ஒருவரையாவது கருணாநிதி சஸ்பெண்டு செய்தாரா?அல்லது இந்த வழக்கை துரிதபடுத்தினாரா ?(வழக்குநடந்த 18 ஆண்டுகளில் 10ஆண்டு திமுக ஆட்சி!வழக்கு நடத்திய CBIகூட திமுக கூட்டணி மந்திரிசபையின் கீழ்).ஆகமொத்தம் தேர்தல்முறைகேடுகளுக்கு அதிகாரவர்க்கத்தின் துணை தேவை என்பதால் கழகங்களும் அரசுஅலுவலர்களின் அராஜகங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றன!இப்போதும் கூட அப்பீலில்,அரசு இவர்களைத் தப்பிக்கவிட முழுமுயற்சி செய்யப்போவது உறுதி!கழகங்களோ, காங்கிரசோ வாச்சாத்தி விவகாரத்திற்காகப் போராட்டம் நடத்தியதில்லை!நாட்டினை சீரழிக்கும் கிரிமினல் அரசியல்வாதிகள்-அலுவலர்கள்- போலீஸ்- கேடிகள் கூட்டணியை அழித்தொழிக்க அனைவரும் கை கோர்ப்போம்!
By மணி
9/29/2011 4:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 28 செப்டம்பர், 2011

அற்புதம் அம்மாளின் புத்தகம் வெளியீடு: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

அற்புதம் அம்மாளின் புத்தகம் வெளியீடு: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

First Published : 28 Sep 2011 04:02:04 PM IST


மும்பை, செப்.28: ராஜிவ் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் பேரறிவாளனின் வேண்டுகோளை மும்பையில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இந்த புத்தகம் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எஸ்யுஐ தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரையும் தூக்கிலிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

S.M.S. limited to 100 - suppression of basic right: தேவையற்ற அழைப்பு,குறுந்தகவல் இன்று முதல் விடுதலை

சரியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.  தேவையற்ற அழைப்புகளை நிறுத்துவது முன்பே நடைமுறைக்கு வந்து விட்டது. இப்பொழுது ஒரு நாளைக்கு ஒருவர் ஓர் அலை பேசியில் இருந்து  நூறு குறுந்தகவல் மட்டுமே அனுப்ப இயலும். அதற்கு மேல்தடை செய்யப்படும்.    நல்ல பொன்மொழிகளைப் பகிர்ந்து கொள்ள உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ள, இலக்கிய, கலை, பிற நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள எனப் பலவகையில் பயன்பட்டு வரும்   குறுந்தகவல் தொண்டினைக் கட்டுப்படுத்தியிருப்பது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும். இதை எதிர்த்துத் தினமணியில் ஆசிரியவுரை வர வேண்டும். தவறான செய்தி வரக்கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

தேவையற்ற அழைப்பு, எஸ்எம்எஸ்: இன்று முதல் விடுதலை

First Published : 27 Sep 2011 12:03:05 PM IST

Last Updated : 27 Sep 2011 12:24:19 PM IST

புதுதில்லி, செப்.27: வாடிக்கையாளர்களுக்கு வரும் தேவையற்ற வணிக அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுத்து நிறுத்துமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விவரங்கள் என தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இந்த பிரச்சனையைத் தீர்க்க டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையற்ற அழைப்புகளின் பதிவு என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ. 2. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று டிராய் எச்சரித்துள்ளது.
கருத்துகள்

START 0 என்பது "ஓ" என்று எடுத்து கொள்ளவா "பூஜியம்" என்று எடுத்து கொள்ளவா. வேற எழுத்தே கிடைக்க வில்லையா?
By manoharan
9/27/2011 2:18:00 PM
அப்பாடா விட்டதடா தொல்லை
By வே.காளீஸ்வரன்
9/27/2011 12:41:00 PM