சனி, 19 மார்ச், 2011
Mamta announced candiates list independently:; கூட்டணிப் பேச்சு முடியும் முன்னரே தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா
<நடிகர் சிரஞ்ஜீத்> இவ்வாறு, மீண்டும் மீண்டும் தினமணி கிரந்தத்திணிப்பில் ஈடுபட்டு வருவது அதற்கு நல்லதல்ல.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
Last Updated :
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அக்கட்சித் தலைவரும்,
கொல்கத்தா, மார்ச் 18: மேற்கு வங்க மாநிலத்தில், பேரவைத் தேர்தலுக்கான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தன்னிச்சையாக வெளியிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18 முதல் மே 10 வரை 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் இடதுசாரி கூட்டணியை வீழ்த்துவதற்காக இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸýம், திரிணமூல் காங்கிரஸýம் பேச்சு நடத்திவந்தன. 90-க்கும் அதிகமான தொகுதிகளை கோரிவந்த காங்கிரஸ், கடைசியாக குறைந்தபட்சம் 70 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், வெள்ளிக்கிழமை வரை எந்த முடிவும் எட்டப்படாததால் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 64 தொகுதிகளை காங்கிரஸýக்கும், 2 தொகுதிகளை மற்றொரு கூட்டணிக் கட்சியான எஸ்யூசிஐ-க்கும் ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 228 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மம்தா அறிவித்தார். திங்கள் வரை கெடு: பட்டியலை வெளியிட்டபின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒதுக்கப்பட்ட 64 தொகுதிகளுக்கு தனது வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தால் மகிழ்ச்சி. இல்லையெனில் அந்த தொகுதிகளுக்கும் எங்கள் வேட்பாளர்களை திங்கள்கிழமை அறிவிப்போம். காங்கிரஸ் தலைவர்களுடன் வியாழக்கிழமை இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொண்டதன் அடிப்படையிலேயே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சு நடத்த மேலும் கால அவகாசம் கேட்பது சரியல்ல. வேட்பு மனு விண்ணப்பங்கள் கடைசித் தொகுதி வரை சென்று சேர வேண்டியுள்ளது. போதுமான அளவு காத்திருந்தாகிவிட்டது. காங்கிரஸ் தலைமை விரும்பியபோதெல்லாம் பேசியாகிவிட்டது என்றார் மம்தா. முக்கிய வேட்பாளர்கள்:ஜாதவ்பூர் தொகுதியில் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யவுக்கு எதிராக முன்னாள் தலைமைச் செயலர் மனீஷ் குப்தாவும், கார்தாஹா தொகுதியில் மாநில நிதியமைச்சர் அசிம் தாஸ் குப்தாவுக்கு எதிராக ஃபிக்கி பொதுச் செயலர் அமித் மித்ராவும் திரிணமூல் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர நடிகை தேபஸ்ரீ ராய், நடிகர் சிரஞ்ஜீத், நாடக நடிகர் விரத்ய பாசு, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ரச்பால் சிங், சுல்தான் சிங், சாஃப்வி, அபானி ஜோர்தார், லாலு பிரசாத் மீதான தீவன ஊழல் வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் மண்டல இயக்குநர் உபேன் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2007-ல் ஹிந்து தொழிலதிபரின் மகளைத் திருமணம் செய்தபின் மர்மமான முறையில் இறந்த ரிஸ்வானூர் ரெஹ்மானின் சகோதரர் ருக்பானூர் ரெஹ்மானுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த 42 பேருக்கும், மகளிர் 34 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மம்தா போட்டியில்லை: இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்தார். திரிணமூல் ஆட்சியைப் பிடித்தால் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவேன் என்றும் அவர் அறிவித்திருந்தார். மேலிடம் முடிவு செய்யும்- காங்கிரஸ்: மம்தாவின் முடிவு குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது: திரிணமூல் ஒதுக்கியுள்ள 64 தொகுதிகளில் போட்டியிடுவதா அல்லது 294 தொகுதிகளிலும் போட்டியிடுவதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவே விரும்புகிறோம். இரு கட்சிகளும் இணைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் அவர்.
வெள்ளி, 18 மார்ச், 2011
not-happy-in-admk- confused alliance: தேர்தல் களத்தில் பலமான எதிரி வேண்டும்: அ.தி.மு.க. கூட்டணி குழப்பத்தால் மகிழ்ச்சி அடையவில்லை; மு.க.தாலின் பேச்சு
மனம் மகிழ்ந்தாலும் இப்படிப் பேசுவதுதான் பண்பாடு. உண்மையிலேயே வலுவான எதிரி இருந்தால் போராட்டக் குணத்துடன் செயல்படமுடியும். ஏனோ அவசரப்பட்டு திருமாவும் இராமதாசும் மகிழ்ச்சி அடைவதாகப் பேசி விட்டார்கள். முதல்வரைப் பார்த்தாவது அடுத்த வீட்டுச் சண்டை குறித்து அலட்டிக் கொள்ளவில்லை எனக் கூறியிருக்கலாம்.
அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /
Chennai வெள்ளிக்கிழமை, மார்ச் 18, 1:28 PM IST


சென்னை, மார்ச். 18-
சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் முப்பெரும் விழா தியாகராய நகரில் அவ்வியக்கத்தின் தலைவர் லியாகத்அலிகான் தலைமையில் நடந்தது. அன்பு செரீப், கே.ஏ.நாகூர் மீரான் வரவேற்றனர். விழாவில் துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் ஓர் காவியம் என்ற நூலை வெளியிட்டார்.லியாகத் அலி கான் பெற்றுக் கொண்டார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டை 58 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று கூறுகிறார்.
இது மைனாரிட்டி மக்களுக்கு பாடுபடும் அரசாக உள்ளது. எனவே அவர் மைனாரிட்டி அரசு என்று பேசுவதால் வருத்தம் இல்லை. இந்த அரசை தேர்தலில் மக்கள் மெஜாரிட்டியாக மாற்ற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும்.சிறுபான்மை மக்கள் பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது.உலமாக்கள் நல வாரியமும் அமைக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அ.தி. மு.க கூட்டணியின் குழப்ப நிலைப்பற்றி நிருபர்கள் முதல்வரிடம் கருத்து கேட்ட போது குழப்பத்தை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். அந்த மன நிலையில் நாம் இருக்கிறோம்.
தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த எதிரி இருக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமும் சுறு சுறுப்பும் ஏற்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நிர்வாகிகள் வி.ராமலிங்கம், முகமது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1 1
No attempt for third front-tha.pandiyan: மூன்றாவது அணிக்கு முயற்சி செய்யவில்லை: தா.பாண்டியன்
எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று எடுத்துக் கொள்வதா? நாங்கள் கொத்தடிமைகளாகத்தான் இருப்போம். அதிலிருந்து மீளமாட்டோம் என்று எடுத்துக் கொள்வதா? அம்மையார் அரற்றுகிறாரா? மிரட்டுகிறாரா? என்பதைப் பொறுத்து நிலை மாறும்.எனினும் இதுவே மாற்று அணிக்கான நல்வாய்ப்பான நேரம். வைகோ தலைமையில் ஒன்று கூடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /
/தமிழே விழி! தமிழா விழி! /
Last Updated :
சென்னை, மார்ச் 17: அதிமுக வேட்பாளர் பட்டியலால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று காலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் கூடிப் பேசினர். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிருப்தி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது அணி அமைக்கக்கூடும் என்று செய்திகள் உலவின. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்குப் பின் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், தாங்கள் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கவில்லை என்றும், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தங்களுக்கிடையே எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக மீண்டும் ஜெயலலிதாவைச் சந்திக்க இருப்பதாகவும், விரைவில் தங்கள் கூட்டணிக்குள் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள்


By ராஜ்
3/17/2011 11:15:00 PM
3/17/2011 11:15:00 PM


By mubaarak
3/17/2011 10:49:00 PM
3/17/2011 10:49:00 PM


By Rajasekar.D
3/17/2011 10:43:00 PM
3/17/2011 10:43:00 PM


By mathew
3/17/2011 10:37:00 PM
3/17/2011 10:37:00 PM


By வெங்கடேசன்.t
3/17/2011 9:53:00 PM
3/17/2011 9:53:00 PM


By mohan
3/17/2011 9:45:00 PM
3/17/2011 9:45:00 PM


By ஆனந்தன்
3/17/2011 7:46:00 PM
3/17/2011 7:46:00 PM


By S .PRABHAKARAN
3/17/2011 7:11:00 PM
3/17/2011 7:11:00 PM


By S .PRABHAKARAN
3/17/2011 7:11:00 PM
3/17/2011 7:11:00 PM


By ரவிக்குமார்
3/17/2011 6:12:00 PM
3/17/2011 6:12:00 PM


By udayavanan
3/17/2011 5:35:00 PM
3/17/2011 5:35:00 PM


By arumugham
3/17/2011 5:25:00 PM
3/17/2011 5:25:00 PM


By Mahesh
3/17/2011 5:00:00 PM
3/17/2011 5:00:00 PM
வியாழன், 17 மார்ச், 2011
Election obstructions: தேறுமா தேர்தல் கெடுபிடி?
எங்கள் வீட்டிலுள்ள ௪ வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் நீக்கம்.இப்படி எத்தனை நூறாயிரம் வாக்காளர்கள் பெயர்கள் காணாமல் போயினவோ! அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
First Published : 17 Mar 2011 01:37:13 AM IST
Last Updated :
தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோலாகிவிட்டன அரசுத் திட்டங்கள் மற்றும் பணிகள். திடீரென தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு அவகாசம்கூட அளிக்காமல் அடுத்தடுத்து கெடுபிடிகளைச் செய்து வருகிறது தேர்தல் ஆணையம். இதைக் கண்டு அரசியல் கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் நியாயமானவைதான்.ஆனால் ஆணையத்தின் புதிய உத்தரவால் வாக்காளர்கள் பலர் குழம்பிப் போயிருக்கின்றனர். புதிதாக விலை உயர்ந்த பொருள்கள் எதையும் வாங்கக் கூடாது. விருந்து வைக்கக் கூடாது, திருமண மண்டபங்களில் விழாக்கள் நடத்துவதில் கட்டுப்பாடு, பணப் பரிமாற்றத்தில் நிபந்தனை என ஏகப்பட்ட அதிரடி உத்தரவுகள். ஒரு சில அரசியல் கட்சிகளுக்காக இவ்வளவு கெடுபிடி தேவைதானா என கேட்கத் தோன்றுகிறது. பொதுவாகத் தவறு செய்யும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதுதானே நியாயம். அதை விடுத்து, வாக்காளர்களின் சுதந்திரத்தில் தலையிடலாமா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் அறிவித்துவிட்டால் அதை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. அதற்காக வானாளாவிய அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதும், அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என மக்களுக்கே உத்தரவு போடுவதும் வருத்தத்தை அளிக்கிறது.இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது திடீரென தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளித்தது யார்? இவர்களின் உத்தரவுக்குப் கட்டுப்படத்தான் வேண்டுமா என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அப்படியானால் அவர்கள் எழுப்பும் சில நியாயமான கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்.வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் அத்தனை பேருக்கும் அந்த அட்டைகள் வழங்கப்படவில்லை. பல இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன. இந்த அட்டைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் சத்துணவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள்தான். இவர்கள் கிராமப்புறங்களில் யார் வீட்டுக்காவது நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்றிருப்பார்களா அல்லது அது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்திருப்பார்களா என விசாரித்தால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் நியாயமானதுதான் என நம்பலாம்.ஆனால் அப்படி எதுவுமே செயல்முறையில் இல்லை. ஏனென்றால் பட்டியலில் பெயர் இல்லாதோர் பலர். நிலைமை இப்படி இருக்க வாக்களிப்பவர்களுக்கு மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் பொருந்தும். வாக்களிக்காதவர்கள் இந்த உத்தரவுக்குப் பணிய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதற்கான காரணம் என்ன என்பதையும் அப்படியே ஆணையம் விளக்கினால் நன்றாக இருக்கும். ஜனநாயக நாட்டில் விளக்கம் அளிக்க எதிரிக்கும் அவகாசம் அளிக்க வேண்டும். அதை விடுத்து அத்தனை பேருமே இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டுமா என்பதே வாக்களிக்க முடியாதவர்களின் கேள்வி.கட்சிகள் பணம் கொடுப்பதை வாக்காளர்கள் வாங்கக் கூடாது என்பது சரிதான். அதைத் தரக்கூடிய கட்சிகளைக் கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ ஆணையம்தான் முன்வர வேண்டும். அதைவிடுத்து திருவிழா நடத்துவதற்கும், பிற விழாக்கள் நடத்துவதற்கும் தடை விதிப்பது மறு பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமாகும்.பாதிப்பேருக்கு மேல் வாக்குரிமை கிடையாது. அதைச் சரிசெய்யாத ஆணையம் தேவையற்ற நிபந்தனைகளை மக்களிடம் விதிப்பது அதிருப்தியை ஏற்படுத்தும் செயலாகும்.இப்படித்தான் கடந்தமுறை திருமங்கலம் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. நரேஷ்குப்தா தேர்தல் ஆணையராக இருந்தபோது அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்தார். அப்புறம் என்ன ஆனது. யாருக்காவது தண்டனை அளிக்கப்பட்டதா அல்லது நீதிமன்றப் படிக்கட்டுகளையாவது அவர்கள் மிதித்தார்களா என்பது கேள்விக்குறிதான்.இப்போது அதிரடியாகத் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள் அனைவரும் பாராட்டக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வாக்காளர்களை கவனிக்கப்போகும் கட்சிகளை எப்படிச் சமாளிப்பார்களோ தெரியவில்லை. தேர்தல் முடிந்ததும் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமே என்பதுதான் அனைவரின் கவலை.இதே சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் தேர்தல் முடிந்தபிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்தான் இருக்கிறது. எப்படி நடக்கிறது என்று பார்க்கலாம்.
Shock to admk alliance parties: கூட்டணிக் கட்சிகள் கடும் அதிர்ச்சி!
முதலமைச்சர் கனவில் இப்பொழுதே கூட்டணியினரை அடிமையாகக் கருதி விட்டார். ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்ற சிந்தனையை எழுப்பி விட்டார். கொலைகாரக் காங்.ஐ எதிர்க்க முடிவெடுத்தோர் அதன் கூட்டணியான தி.மு.க.வை எதிர்ப்பதாயின் அம்மையார் பக்கம் சாய வேண்டி வருமே எனக் கவலைப்பட்டனர். அவர்கள் கவலையைப் போக்கும் வண்ணம் ம.தி.மு.க. தலைமையில ௩ ஆவது அணிக்கு வழி வகுத்து விட்டார்.தி.மு.க.விற்கு எதிராக அ.தி.மு.க.பக்கம் போக விரும்பாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர்கள் அமைதியடைய வகை செய்து விட்டார். இனி விரைந்து செயல்படட்டும் ம.தி.மு.க.. தமிழ்த்தேசிய உணர்வாளைர்களையும மனித நேயர்களையும் ஊழலுக்கு எதிரானவர்களையும் ஒன்று சேர்த்து வாகை சூட வழி காணட்டும்.! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
First Published : 17 Mar 2011 04:21:50 AM IST
Last Updated :
சென்னை, மார்ச் 16: சட்டப்பேரவை தேர்தலுக்காக அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலால் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10, மனிதநேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றிய ஆலோசனை சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்தனர். பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க.வுடன் அடுத்த சுற்று பேச்சு நடத்த காத்திருந்தன.இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை மாலை வெளியிட்டார்.இதில் கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற பல தொகுதிகளை இப்போது அ.தி.மு.க. எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பேச்சு நடத்திய பின் அங்கிருந்து புறப்பட்ட கூட்டணி கட்சியினர் தங்கள் அலுவலகத்தில் நுழைந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இதனால் அந்தக் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், சிவகங்கை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 தொகுதிகளிலும் இப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அக்கட்சி இப்போது கேட்ட தொகுதிகளில் தளி உள்ளிட்ட ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 9 தொகுதிகளில், திண்டுக்கல், பெரம்பூர், அரூர், திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை (தெற்கு) ஆகிய 6 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அக்கட்சி கேட்டிருந்த கீழ்வேளூர் உள்ளிட்ட மிகப் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, ஒட்டபிடாரம், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளைக் கேட்டு வந்ததாக செய்திகள் வெளியாயின. எனினும், இப்போது அவ்விரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.அதேபோல், பார்வர்டு பிளாக் கட்சி கேட்டதாகக் கூறப்பட்ட உசிலம்பட்டி தொகுதிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. தலைமையின் இந்த அறிவிப்பு அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் புதன்கிழமை நடத்திய பேச்சின்போது, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளோடு, மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து விட்டு, புதன்கிழமை இரவே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொகுதிகள் பற்றி இறுதி செய்வதாக கூறினர்.ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியிடப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், கடந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்ற 6 தொகுதிகள், நாங்கள் கேட்டு வரும் பிற தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இப்போதைய நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரனிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பாராதது. எனவே, இது பற்றி விவாதிக்க எங்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார்.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியது: 4 தொகுதிகளின் பெயர்களை கூறுமாறு எங்களிடம் கேட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், அதிலிருந்து 2 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்குவதாகக் கூறியிருந்தனர். இதன்படி, வாசுதேவநல்லூர், ஒட்டபிடாரம், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் பெயர்களைக் கொடுத்திருந்தோம். இப்போது, 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி. தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பது தேமுதிக தரப்பிலும் எரிச்சலையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ""இப்படிப்பட்ட போக்கை அதிமுக தலைமை தொடருமானால், அந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்து எப்படி செயல்பட முடியும்'' என்று மூத்த நிர்வாகிகளிடம் கட்சித் தலைவர் விஜயகாந்த் சலித்துக் கொண்டதாகக் கேள்வி. இது தவிர, 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துள்ளதன் மூலம், இதுநாள் வரை அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க.வுக்கு இனி அந்தக் கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது.அதிருப்தியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து மதிமுக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்குமா என்பது சனிக்கிழமை நடக்க இருக்கும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம்.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்த வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதன், 16 மார்ச், 2011
Why grantham in writing Siranjeevi? : சிரஞ்ஜீவியின் மருமகனுக்கு எதிராக விசாரணை தொடக்கம்
/ தமிழே விழி! தமிழா விழி! /
Last Updated :
ஹைதராபாத், மார்ச்.16: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மருமகனுக்கு எதிரான வரதட்சணை புகார் குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் துணை கமிஷனர் சத்யநாராயணா தெரிவித்தார்.கணவர் ஷிரிஷ் பரத்வாஜூம் அவரது தாயார் சூர்யமணியும் கூடுதலாக ரூ 50 லட்சம் வரதட்சணை கேட்டு கடந்த 1 வருடமாக கொடுமைப்படுத்தி வந்தனர் என சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் அளித்திருந்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் இருவருக்கு எதிராகவும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, தனது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக 2007-ல் ஷிரிஷை திருமணம் செய்துகொண்டார். தனது குடும்பத்தினரிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பின்னர் நீதிமன்றத்தை அணுகி இருந்தது குறிப்பிடத்தக்கது
Sathiq basha, friend of A.Raja, expired: ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் சாவு
குற்றமற்றவர் என மெய்ப்பிக்க வழியில்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டால் - தொடர்புள்ள பிறரால் - உயிர் வாழ வழியில்லை. என்ற எண்ணத்தில் தற்கொலையை நாடியிருக்கலாம். அல்லது இறந்த முறையைக் குடும்பத்தினர் மறைத்து இருக்கலாம். இருந்தாலும் ஆழந்த இரங்கல்கள்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
First Published : 16 Mar 2011 02:36:39 PM IST
Last Updated : 16 Mar 2011 04:38:24 PM IST
சென்னை, மார்ச்.16: தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா சென்னையில் இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். எனினும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.பிற்பகல் 1.30-க்கு இறந்த நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் தூக்கிட்டுக் கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். போலீசார் இதுவரை எதையும் உறுதிசெய்யவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.47 வயதான பாட்சா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது இறந்திருந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.ராசாவுக்கு நெருக்கமானவரான பாட்சா, கிரீன்ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.முன்னதாக 2ஜி ஊழல் தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை நடத்தி இருந்தது. 2ஜி ஊழல் தொடர்பாக பாட்சா முக்கிய துப்புகளை சிபிஐயிடம் வழங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.ஊழல் பணத்தில்தான் கிரீன்ஹவுஸ் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என சிபிஐ சந்தேகித்தது. ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் பாட்சா. அவரின் சென்னை அலுவலகங்களும், வீடுகளும் சிபிஐயால் கடந்த டிசம்பரில் சோதனையிடப்பட்டன.கிரீன்ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ராசாவின் மனைவி 2008-ல் ராஜிநாமா செய்துவிட்டார். எனினும் அவரது நெருங்கிய உறவினர்களான பரமேஷ்குமார் மற்றும் ராசாவின் சகோதரர் கலியபெருமாள் ஆகியோர் இயக்குநர்களாக பதவியில் நீடித்து வந்தனர்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் பதவிக்காலத்தின்போது ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்ற பின்னர் 2004 ஆகஸ்டில் கிரீன் ஹவுஸ் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.ராசா தொலைத்தொடர்பு அமைச்சரான பின்னர் 2007-ல் சிங்கப்பூரில் கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டது.வெளிநாட்டில் கிளை தொடங்கப்பட்டதில் அந்நிய நிதி மேலாண்மை சட்டமும், ரிசர்வ் வங்கி விதிமுறைகளும் பின்பற்றப்பட்டனவா என்பதை சிபிஐ விசாரித்தது. கிரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும், அதன் சிங்கப்பூர் கிளைக்கும் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தியது.ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் எப்படி 600 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்ட முடிந்தது என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
languages in dying status - article in dinamani : அழிவின் விளிம்பில் மொழிகள்
புள்ளி விவரங்கள் எவற்றில் இருந்து எடுக்கப்பட்டன என்று குறிததிருக்கலாம். பல தவறாகப் படுகின்றன. ஆசியா என்றும் இந்தியா என்றும் தனியே குறிக்கப்பட்டுள்ளது. ஆசிய எண்ணிக்கையில் இந்தியா அடங்கி உள்ளதா? இந்திய மொழி எண்ணிக்கையும் தவறே! ஒருவர் மட்டுமே அறிநத மொழி எவ்வாறு பேசப்பட்டிருக்கும்? எனவே, ஒருவர் மட்டும் பேசத் தெரிந்ததாகக் குறிக்காமல் ஒருவர் மட்டுமே அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கலாம். கட்டுரை விரிவாக இருப்பதால், இந்திய அரசு கமிரந்தத்தைப் புகுத்தியும் குறைந்த எண்ணிக்கையில் பேசுவோரின் மொழிகளுக்கான எழுத்து வடிவைச் சிதைத்தும் மொழி அழிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதையும் குறிப்பிட்டு ௨ பகுதிகளாகப் போட்டிருக்கலாம். தாய்மொழி நாளுக்காகத் தந்த
கட்டுரையை இப்பொழுது போட்டு உள்ளீர்களோ!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
கட்டுரையை இப்பொழுது போட்டு உள்ளீர்களோ!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
பிரெஞ்சு கலந்த கிரயோல் மொழி , மொரீசசில் பேசப்படுகின்றது. அவாய் கிரயோல். எயிட்டிய கிரயோல் என்றும் சிலவகைக் கிரயோல் மொழிகள் உள்ளன. ஆனால், கட்டுரையில் குறிப்பிட்டது போன்று கேரளத்தில் மலையாள ப் போர்ச்சுகீசு கிரயோல் அல்லது கிரியோல் மொழி இருந்தாகக் கூறப்படுவது உண்மைதானா? கலப்பு மொழியின் பொதுப்பெயராக அச் சொல் குறிக்கப் பட்டிருக்கலாம். எனினும் கொச்சியில் அம்மொழி வழங்கியதற்கான சான்றுகளைக் கட்டுரையாளர் அளிததால் நன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
Last Updated :
Ruthrakumaran at the Secretariat of U.N.O. ஐநாவுக்கான சப்பான் செயலகத்தில் ருத்திரகுமாரன்
சம்சுதீன் அவர்களே ! தலாய்லாமா போன்றவர்கள் நீங்கள் கருதும் இல்லாத நாட்டிற்குத்தான் தலைவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியுமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
/ தமிழே விழி! தமிழா விழி! /
Last Updated :

கொழும்பு, மார்ச் 15- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஐநாவுக்கான ஜப்பான் செயலகத்துக்கு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் நேற்று வந்து, ஜப்பான் மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இயற்கைப் பேரழிவில் சிக்கியுள்ள ஜப்பானுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அவர் ஆறுதலை தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், இதுதொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் ஜப்பான் செயலக அதிகாரியிடம் வழங்கினார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By சரவணன்
3/15/2011 8:56:00 PM
3/15/2011 8:56:00 PM


By Samsudheen
3/15/2011 6:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/15/2011 6:29:00 PM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)