சனி, 10 ஜூலை, 2010


மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும்: ஜெயலலிதா

சென்னை, ஜூலை 9: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டிக்கும் வகையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் கடிதங்களை எழுதியதுபோல, மீனவர்கள் பிரச்னையிலும் கடிதம் எழுதியும், கண்டனம் தெரிவித்தும் காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரைக்கும், தோப்புத் துறைக்கும் இடையே தங்களது படகுகளில் புதன்கிழமை (ஜூலை 7) அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் செல்லப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்கள், உணவுப் பொருட்கள் மற்றும் வலைகளை இலங்கை கடற்படையினர் கடலில் தூக்கி வீசியுள்ளனர். அறிவழகன் என்பவரின் படகில் இருந்தவர்களை கொடூரமாகத் தாக்கி, நிர்வாணப்படுத்தி விரட்டி அடித்துள்ளனர். நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் கொடுமைபடுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் இலங்கை அரசு அடிக்கடி ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதி வழக்கம்போல பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இலங்கை தூதரகம் முன்பு தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. உண்மையிலேயே கருணாநிதிக்கு மீனவ மக்களின் மீது அக்கறை இருக்குமானால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். மத்தியில் உள்ள தி.மு.க. அமைச்சர்களை ராஜிநாமா செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஆனால், இதை அவர் செய்ய மாட்டார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்

அப்பொழுதுதான் அ.தி.மு.க. காங்.உடன் ஒட்டிக் கொள்ள முடியும். ஆட்சிக் கவிழ்ப்பைப் பயன்படுத்தாமலேயே தி.மு.க இங்கே பதவியை இழக்கும். இங்கும் மத்தியிலும் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும். என்ன பேராசையடா! வேடிக்கையைச் சுவைக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2010 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும்: திருமாவளவன் அறிக்கை



சென்னை, ஜூலை 9- சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக் கோரி ஜூலை 12-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் செல்லப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். இத்தகைய தாக்குதல்களை மத்திய அரசு இதுவரை கண்டிக்கவோ தடுத்து நிறுத்தவோ முனைப்புடன் செயல்படவில்லை.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவை கலைக்க வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய சிங்கள இனவெறியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக் கோரி வரும் 12-ம் தேதி காலை 10 மணியளவில் அத்தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தாமசு எழுதியதற்குப் பாராட்டு உள்ளது. ஆனால் அவர் சொன்னது நீக்கப்பட்டுள்ளது. அவர் என்ன சொன்னார்? எதற்கு நடக்காததற்கெலலாம் போராட்டம்? மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால தமிழகக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என முதல்வரை அறிவிக்கச் செய்து அவ்வாறே நடவடிக்கை எடுக்கலாமே.மீனவர் பகுதியைத் தனிநாடாக அறிவிக்கச செய்யப் போராடலாமே! என்ன போராடினாலும் இந்தியம் சிங்களத்தின் பக்கமே என்ற பிணைப்பை மாற்ற முடியாதே! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2010 3:58:00 AM
After having supported MK during the Eelam war, he has lost his locus standi to talk in support of Tamilians. Now, his statements supporting Tamil fishermen will only heap ridicule on him.
By sbala
7/9/2010 10:29:00 PM
muthala un vaaya mooduda
By bala
7/9/2010 9:34:00 PM
Mr.Thomas....well said brother...
By Selva
7/9/2010 6:17:00 PM
Thiruma, why dont you join hands with "non-political" movement under Nedumaran and show solidality? You are with them - then jumped to put "jalra" to MK. Shame on you....
By kirukkan
7/9/2010 5:14:00 PM
..HE..HE..HE CLOWN ..SL TAMILS ALREADY KNOW ABOUT YOUR DOUBLE STANDARDS.....CAN YOU RESIGN YOUR MP POST FOR THIS?..GO TO HELL...TRAITER....YOU ARE LICKING WALKING CORPSE KARUNANIDHI ALIAS THADCHANAMOORTHY AND SONIA...BUT NO SHORTAGE FOR STATEMENTS...
By KOOPU
7/9/2010 5:07:00 PM
..HE..HE..HE CLOWN ..SL TAMILS ALREADY KNOW ABOUT YOUR DOUBLE STANDARDS.....CAN YOU RESIGN YOUR MP POST FOR THIS?..GO TO HELL...TRAITER....YOU ARE LICKING WALKING CORPSE KARUNANIDHI ALIAS THADCHANAMOORTHY AND SONIA...BUT NO SHORTAGE FOR STATEMENTS...
By KOOPU
7/9/2010 5:07:00 PM
He is another Jokker cum brutus... how long these kind of people are going to cheat tamils in india and world.?.. He should be taught a lesson in the comeing election. If he is havin greal interest for tamils, he sould do two things. 1. He should come out from the present aliiance... and 2. He should joined with others (except Jaya, karuna and ramdass) for tamils in tamilnadu and Srilanka... Otherwise, HE IS ALSO ANOTHER CHEATER ONLY.. NOTHING ELSE..
By Echaivetri
7/9/2010 4:39:00 PM
What would be the benefit to Tamils by closing Consolate Office of Srilanka?If Tirumavalavan and other like minded persons really feel the pains of Srilanka Tamils, he should not have gone with T.R.Baalu to Srilanka and the net result he derived was only humiliation from Rajabakshe.Instead of doing dharna, he could as well resign MP post and come out from DPA.Mere publity stunts will not yield any fruitful result.
By K.Thirumalairajan
7/9/2010 4:19:00 PM
DAI KARUNANITHI KOVICHIKKA PORAN PARTHU PESU APPURAM RAJPAKSHEE UNNAI YUM KANIMOZIIYUM KUPPITU GIFT KODUPARU VANGITU VANTHUDA NAYEEEE !!!!!NEYAELLAM ORU EENA PIRAVI
By KASAMALM KARUNANIDHI
7/9/2010 3:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழில் படித்தவருக்கு அரசு வேலை: முதல் நியமன உத்தரவை வழங்கினார் முதல்வர்


சென்னை, ஜூலை 9- தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி முதல் நியமனமாக பொ. பேதுரு என்பவருக்கு நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான நியமன உத்தரவை அவரிடம் இன்று முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் அவர் நகல் பெருக்கியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சமீபத்தில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

அவசரப்படுத்தி விளம்பரப்படுத்தியிருக்க வேண்டா. மேலும் பல நியமனங்கள் ஆனபின்பு வந்திருந்த போட்டியாளர்களில் தமிழ்வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொடுத்த பணியிடங்கள் என்ற அளவில் விரிவாக வெளியிட்டிருக்க வேண்டும். பொறுப்புள்ள பணி ஒன்றில் தமிழ்வழி பயின்றவர் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளித்து நியமனம் வழங்கியிருந்தால் பெருமை கொள்ளவும் வாய்ப்பாக இருந்திருக்கும். இப்பொழுது் அடிப்படைப்பணி (கடைநிலைப்பணியை)யைப் போன்ற பணிகளுக்குத்தான் தமிழில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் ஏற்படும். மேலும் அரசாணை பிறப்பிக்காமலேயே தமிழில் படித்தவர் என்ற முன்னிரிமை அடிப்படையில் இப்பொழுது வேலை வழங்கியிருந்தால் இதற்கு முன்பு இந்த நடை முறையைப் பின்பற்றாதது ஏன் என்ற வினாவும் வெளிவரும். கருணை அடிப்படைப்ப ணியமர்த்தம்போல் தோன்றும் இப்பணியமர்த்தத்திற்குரிய பணியிடம் பெயர் ஒளிப்பட இயக்கியர் என்பதாகும். நகல் பெருக்கியாளர் என்பது முன்பு வெட்டச்சுத்தாள் (stencil paper)மூலம் படிப்பெருக்கியில் படிகள் எடுக்கும் பணியிடத்தைக் குறிப்பதே. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2010 3:38:00 AM
டேய் நாதாரி புதியவன் ராஜ்,உங்க தலைவர் ...தமிழிலில் படித்தவருக்கு ..ஒரு கல்லூரி விரிவுரையாளர் பதவியோ ..அல்லது ஒரு உயர்த்த அரசு பதவியோ ...தகுதியின் அடிப்படையில் வழங்கி இருந்தால் பெருமை படலாம்...இதற்கு...ஏனடா ...இந்த விளம்பரம்....பண்ணாடைகள...
By Rajendran
7/9/2010 11:33:00 PM
சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற தி.மு.க. வின் கொள்கைக்கு ஏற்ப தமிழில் படித்தவருக்கு வேலையில் முன்னுரிமை என்று சொன்ன வாக்குறுதியை காப்பாற்றிய கலைஞருக்கு பாராட்டுக்கள். முன்னுரிமையில் பேதுருவுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அவர் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். நல்ல விசயங்கள் காமாலை கண்களுக்கு தெரிவதில்லை அதான் வழக்கம் போல தூற்றுகிறார்கள்.
By புதியவன் ராஜ்
7/9/2010 9:32:00 PM
Xerox operator? For this you need only to push some buttons. One need not need Tamil. Even a lay man can operate. Xerox also will come in any language and not only in classical Tamil. What for this dramas? Appoint vice chancellors, professors,teachers, Chief Secretaries, secretaries etc., if Tamil need to be respected. Appointing a xerox operator is just to see the opposition and court cases, RTI applications etc. rushing for the act and to stop the drama, citing the cases.
By karunakaran
7/9/2010 8:12:00 PM
வேலை அவருக்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது . அவர் கட்சிகாரரா , வேலைக்கு அவர் மபு செய்திருந்தாரா , அவர் தமிழில் எதுவரை படித்திருக்கிறார் . இல்லை இந்த பெயரில் வேலை பெறுவதற்கு எதாவது செலவு செய்தாரா. நல்ல தமிழ் நாடு , வேலை ஆணையைக் கூட விழா நடத்திக் கொடுப்பது. பொது நல வழக்குப் போட நல்ல காரணம். ஆனால் தலைவிதி தமிழனுக்கு , கூத்தாடி கூத்தாடி , போட்டு உடைக்கிறாண்டி கருப்புக் கண்ணாடி. கண்ராவி
By ambalavanan
7/9/2010 7:57:00 PM
only can do karunanithi, play like this ugly ugly drama, see what this posting xerox operator, what a shame man. 60 lack employee has been with out any job. please dont issue like this news please.
By riyas ksa
7/9/2010 6:53:00 PM
தலைவா போதும் உங்கள் தமிழ் பற்று, தமிழும் திராவிடமும் பேசி, இந்தியா ஆத்திரம் அடைந்து லட்சகனக்கான தமிழர்களை கொன்றுவிட்டது, இன்னும் கோடிக்கணக்கான தமிழர்கள் சாவுக்கு வழி செய்து விடாதீர்கள்.
By CH
7/9/2010 4:49:00 PM
அவனவன் இங்கிலிஷ்ல படுச்சுப்புட்டு ..வக்கீல் ஆகுறான்!!!...தமிழன் தமிழ்ல படுச்சுப்புட்டு அந்த வக்கீலுக்கு பியுனாவும் ::பெல்பாயாவும் ...கக்கூஸ் கூட்டவும் பணி நியமனம் பெற்று இன்புறுகிறான் ! எண்ணற்ற மொழிகளில் புலைமை பெறுவதில் தவறில்லையடா தமிழா !!!!! நீ கிணற்றுத் தவளையாக இருந்து குண்டிச் சட்டிக்குள் குதிரை ஒட்டாதேட என் இன்பத் தமிழா !!! @ rajasji
By rajasji
7/9/2010 4:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 9 ஜூலை, 2010

"தமிங்கிலம்' எனும் திமிங்கிலம்!


இன்றைய மெட்ரிக் பள்ளிகள் தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகின்றன' - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியை ஒருவர் இவ்வாறு வருத்தம் தெரிவித்தார். இது முற்றிலும் உண்மை. தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்ற தீராத ஆசையுடன் பெற்றோர்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பணக்கார வர்க்கம், நடுத்தர வர்க்கம், ஏழை வர்க்கம் என எந்தத் தரப்புப் பெற்றோருமே இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த ஆங்கில மோகத்தைப் பயன்படுத்தித்தான் மூலைக்கு மூலை மெட்ரிக் பள்ளிகள் முளைத்துக் கல்வியை அமோகமாக வியாபாரம் செய்து வருகின்றன. ஆனால், இதன் உண்மையான விளைவு என்ன தெரியுமா? பனிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்திலேயே பயின்றாலும் ஆங்கிலத்தில் முழுமையாகப் பேசவோ, எழுதவோ தெரியாத நிலையில்தான் பெரும்பாலான மாணவர்கள் உள்ளனர். ஆங்கில வழியில் படித்ததன் இலவச இணைப்பாக, அவர்களால் தமிழிலும் பிழையின்றி பேசவோ எழுதவோ முடிவதில்லை. பேசும்போது இடையிடையே "வெயிட்டிங், கோயிங், ஈட்டிங், ஸôரி, பை-பை, மிஸ்டேக்' என ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவதால், ஆங்கிலத்தில் பேசுவதாக அர்த்தம் ஆகிவிடுமா? இன்றைய மெட்ரிக் பள்ளி பாடத்திட்டமும், பயிற்றுவிக்கும் முறையும் இந்த அளவில்தான் உள்ளன. ஒரு பக்க ஆங்கில கட்டுரையை வரிவிடாமல் ஒப்பித்தாலும்,  அதற்கு பிள்ளைகளுக்கு அர்த்தம் தெரிவதில்லை. பாடப் புத்தகத்தில் மாதிரி வடிவம் இல்லாத விடுப்பு விண்ணப்பத்தைச் சுயமாக யோசித்து எழுதத் தெரியவில்லை. பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் முறையான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் அல்லர். ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதுமா, ஆசிரியருக்கான தகுதியைப் பெற்றுவிடுவார்களா? ஆனால், குறைந்த ஊதியத்திற்கு ஆள்களைத் தேடும் கல்வி நிறுவனங்கள், இவர்கள் போன்றோரைத்தான் ஆசிரியர்களாக நியமிக்கின்றன. விளைவு... தமிழுமின்றி ஆங்கிலமும் இன்றி புது மொழியே உருவாகிவிட்டது. சில ஊடகங்களும் இந்த த(தி)மிங்கிலத்தை தீனிபோட்டு வளர்க்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பெருமை உள்ளது; ஆங்கிலத்தைத் தடையின்றி பேசுவது  எளிதல்ல; அது பெருமைப்படக் கூடிய செயல்தான். அதேநேரம் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தைக் கூடியவரை பயன்படுத்தாமல் தமிழைத் தமிழாகப் பேச வேண்டும். தமிழுடன் இரண்டற கலந்துவிட்ட(!) பிறமொழிச் சொற்களை அப்படியே  பயன்படுத்துவதில் தவறில்லை என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த பிறமொழிச் சொற்களுக்கு இணையான, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது, ஏன் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? ஒரு சிறிய சொற்றொடரை கவனிப்போம். "ஹலோ, தியேட்டர்ல ஈவ்னிங் ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கிறேன். நான் வரும் வரை வெயிட் பண்ணு. படம் சூப்பரா இருக்குதாம், மிஸ் பண்ணிடக் கூடாது'- மொத்தம் 17 வார்த்தைகளில் 9 வார்த்தைகள் ஆங்கிலம். இதுதான் இன்றைய தமிழகம். அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய டி.வி., பஸ், பஸ்-ஸ்டாண்ட், ஸ்டாப், ஸ்பீட், ஸ்லோ, டீ, சினிமா போன்ற சொற்களுக்கு இணையாக தொலைக்காட்சி, பேருந்து, பேருந்து நிலையம், நிறுத்தம், வேகம், மெதுவாக, தேநீர், திரைப்படம் போன்ற இனிமையான தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவற்றைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். அப்படியிருக்கையில், பஸ் வந்துவிடுமா?  சினிமாவுக்கு போகிறேன், லஞ்ச் சாப்பிட வருகிறீர்களா? டி.வி. புரோகிராம் என ஏன்  ஆங்கிலத்தை இழுத்துப் பிடிக்க வேண்டும்? "ஐயம் கோயிங் டூ திரைப்படம்' என எந்த ஆங்கிலேயரும் சொல்லமாட்டார்கள். பொறியியல் கல்வியே தமிழில் வந்துவிட்டது. கணினி தொடர்பான ஆங்கில சொற்களுக்கு மிகப் பொருத்தமான தமிழ் கலைச் சொற்கள் கண்டறியப்பட்டுவிட்டன. மென்பொருள் உலகை ஆளும் தகுதியை தமிழ் பெற்றுவிட்டது. எத்தனையோ மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன. அது தமிழுக்குப் பெருமை. ஆனால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பது நமக்குச் சிறுமை. பேச்சுத் தமிழுடன் ஒப்பிடுகையில் உரைநடைத் தமிழ் சற்று பரவாயில்லை. உரைநடைத் தமிழ் மென்மேலும் மேம்பட்டு, தமிழர்கள் எல்லோரும் தனித்தமிழில் பேசினால் நன்று; அது சாத்தியப்படாவிட்டால் முடிந்தவரை பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தாமல் பேசலாமே?
கருத்துக்கள்

நம்மிடம் சொற்கள் இருக்கும் பொழுது பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் நம் மொழிச் சொற்கள் அழிந்து விடும்; அவ்வாறுதான் அழிகின்றன. பிற மொழியினர் தம்மிடம் இல்லாத சொற்களையும் அவற்றைத் தம் மொழியில் உருவாக்க இயலாத பொழுது பயன்படுத்துகின்றனர். தமிழில் சொற்கள் இருக்கும் பொழுதும் தமிழில் சொற்களை உருவாக்க முடியும் என்கின்ற பொழுதும் வீண்பெருமை, சோம்பல், தீய எண்ணம் முதலியவற்றால் பிற சொற்களைக் கலந்து தமிழ்க்கண்டம் முழுவதும் பேசி வந்த தமிழ் மொழியைச் சுருக்கி விட்டோம். இனியாவது பிற மொழிக் கலப்பின்றித் தமிழில் பேசுவோம்! தமிழில் எழுதுவோம்! கட்டுரையாளருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 7:13:00 AM
நீங்க சொன்னதுலே தவறு இருக்கு எப்ப திராவிட கழகம் தமிழை பிடித்ததோ அப்பொழுதிலிருந்து சனியன் பிடித்து விட்டது உரை நடை தமிழ் பேசினால் அது கருணாநிதி பேசுவது போலவே இருக்கு.அசிங்கம இருக்கு.எண்பது திரை படங்களில் கூட தமிழ் வார்த்தைகள்தான் இருந்தது .ஆனால் சன் டி வீ ஆரம்பித்தவுடன் அவர்கள் காட்டிய வழி.இது .முழுக்க முழுக்க தமிழ் கொலையின் காரணங்கள் கருணாநிதியும் கேபிள் ஆரம்பித்த சன்னும் தான் .ஆங்கிலம் கலந்து கொஞ்சி கொஞ்சி அசிங்கமாக அவர்களின் தொலை காட்சி பேச ஆரம்பித்தது மீதி ஆரம்பித்த மகனுபாவர்களும் அதை நடை மொழி கிறார்கள் .இன்னும் பெரியார் சீர் திருத்த தமிழ் என்று ஒரு சித்ரவதை சம்ஸ்க்ருதம் கலக்காத ஒரு சித்ரவதை பிற அயல் நாட்டு உபகரணங்களுக்கு புது வாயில் நுழையாத (எவன் கண்டு பிடிக்கிறானோ ?வார்த்தைய!!!!)பெயர் தமிழை இன்னமே கொல்ல உயிருடன் இல்லை
By sumban
7/8/2010 5:46:00 PM
PUBLIC MENTALITY SHOULD GET CHANGED. THE STATE GOVT. SHOULD CORRECT WHEN THE PUBLIC IS WRONGLY DIVERTED. GOVT. SHOULD BELL THE CAT. MOSTLY IN METRO & MAJOR CITIES THESE LANGUAGE "TSUNAMI" OCCURS, DUE TO MIGRATION OF OTHER STATE / LANGAUGE PEOPLE. TN GOVT. SHOULD INSIST TAMIL BEING TAUGHT IN ALL SCHOOLS IN TN THAT TOO IN DEPTH [SYA ABOIUT 5 PAPERS OF TAMIL; - PROSE, POEM, THIRUKKURAL, IYMPERUMKAAPIYAM, NOVELS AND LITERATURE & GRAMMAR. ATLEAST THE FIRST STEP SHOULD BE THIS - ABOVE SAID AND LET THE STUDENTS STUDY ACCORDING TO THEIR OPTIONAL MEDIUM BUT WITH THESE 5 TAMIL PAPERS COMPLUSORILY FROM 1 STD ~ +2 AND SHOULD CONTINUE IN COLLEGES FOR FIRST YEAR ATLEAST.
By Kee Yea Raa
7/8/2010 2:01:00 PM
பிற மொழிச் சொற்கள் கலக்காமல் எந்த மொழியும் வளர்ந்ததில்லை. உண்மை தான். பிற மொழிச் சொற்கள் கலந்துதான் பேசுவேன்; அதுதான் ஸ்டைல் (Style); அதுதான் படித்தவர்களின் அடையாளம் என்ற மாயையை உருவாக்குவது தவறல்லவா?
By S. RAVIKUMAR, 2/18 C.V. STREET, SANRORKUPPAM - 635814
7/8/2010 6:32:00 AM
தமிழ் வார்த்தைகள் பிற மொழியில் இருப்பது மட்டும் பெருமையாம். ஆனால், பிற மொழி வார்த்தைகள் தமிழில் இருப்பது தமிழுக்கு பெருமையின்மையாம் . வாதம் சரியாக இல்லையே? பிற மொழிச் சொற்கள் கலக்காமல் எந்த மொழியும் வளர்ந்ததில்லை.
By NAGARAJAN
7/8/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்