வெள்ளி, 17 ஜூலை, 2009

துன்பத்தில் வாடும் தமிழ் மக்களுக்கு இந்த அரசால் தீர்வு தர இயலாது ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு




வடக்குத் தமிழர்கள் துன்பத்தில் வாடுகி றார்கள். அவர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்குச் சமமான உரிமை களை வழங்கவேண்டியது அரசின் கடமை. தற்போதைய அரசுதனிப்பட்ட அரசாக இருப்பதால், தமிழ்மக்கள் தொடர்ந்தும் கஷ்டப்படுகிறார்கள். இந்த அரசினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
இப்படி ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நடத்திய செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
யாழ். மாநகர சபைத் தேர்தலையொட்டி, யாழ். நகருக்கு வருகைதந்த ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனா, ஐ.தே.கட்சியின் யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் எஸ்.சத்தியேந்திரா ஆகியோர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
யாழ். சிற்றி இன் @ஹாட்டலில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஒற்றுமையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப ஐ.தே.கட்சியின் செயற்குழு அதிகாரமளித்துள்ளது. ஐ.தே.கட்சி தலைமையில் அமையும் அரசுஅனைத்து மக்களதும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தமிழர்களின் உதவியைக் கோரியுள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு ஒரேமாதிரியான நீதி கிடைக்கவேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். அரசின் பொய்களுக்கு முன்னால் வாடிக்கிடக்கும் மக்களின் துயரங்கள் நீக்கப்படவேண்டும். எல்லாக் கட்சிகளும் நீதியான ஜனநாயக நாட்டை உருவாக்க முன்வர வேண்டும்.
வடக்கு யுத்தத்தால் பெரும் எண்ணிக்கையான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். எமது அடிப்படை நோக்கம் இந்த அப்பாவி மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்பதே.
தமிழர் பிரச்சினை குறுகிய காலத்தில் தீர்க்கப்படவேண்டும்
தரைவழிப்போக்குவரத்து தடையின்றித் தொடர வேண்டும். ஏ9 வீதியைத் திறந்து மக்களின் சுமூகமான வாழ்வுக்கு வழிசமைக்க வேண்டும். இதற்காக எமது கட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2002 இல் நாங்கள் அரøசப் பொறுப்பேற்றிருந்தபோது இவ்விடயங்களுக்குரிய அமைச்சராக இருந்தவர் ஜயலத் ஜயவர்தன. அப்போது அவர் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயற்பட்டார்.
குறுகிய காலத்தில் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சிகள் தேவை. ஜயலத் தலைமையில் ஐ.தே.கட்சி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் சத்தியேந்திரா மக்களின் குறைகள் குறித்து முறையிட்டுள்ளார்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளவை அனைத்துக்கும் தீர்வு காணப்படும். தேர்தலின் பின்னர் திட்டங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்படும்.
எமது ஆட்சிக் காலத்தில் மீன்பிடித் தடைகள் இங்கு இருந்ததில்லை.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை ஐ.தே.கட்சிக்கு வழங்கி அதன் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர். நடக்கவிருக்கும் தேர்தலிலும் நீங்கள் ஐ.தே.கட்சியை ஆதரியுங்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வை எங்களால் மட்டுமே தரமுடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக