வியாழன், 17 பிப்ரவரி, 2011

suba.muthukumar murdered: தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை

நேற்று இந்தத்துயரச் செய்தியைப் படித்த பொழுதே நெஞ்சு கனத்தது. நாட்டு நலனில் ஈடுபாடு செலுததும் நல்லிளைஞர்,  இன நலனுக்கெனத் தன்னை இணைத்துக் கொண்ட  இனிய பண்பினர், இல்லறத்தில் ஓராண்டிற்குமுன்தான் அடியெடுத்து வைத்த நல்லறம் பேணுபவர், காட்டு விலங்கினரால் கடித்துக் குதறி மாய்க்கப்பட்டுள்ளாரே! அவரது குடும்பத்தினருக்கும் இயக்கத்தினருக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்கள். ஆனால்,
இந்த  இரங்கல்கள் இறந்தவரை மீள வரச் செய்யாதே! என்ன கொடுமை இது!
இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எவ்வாறு? எப்போது?  ஈழத்தமிழர்கள உள்ளாக்கப்படும் கொடுமைகளுக்காக உயிர்க்கொடை ஈந்தான் வீரப்போராளி முத்துக்குமார்! இன்றைக்கு வஞ்சகர் செயல்களால்  தன்னுயிர்  ஈகம் செய்தான் இன்னொரு முத்துக்குமார்! முத்துக்குமார்கள் உயிரிழந்தது போதும்! கொடியவர்கள் கூண்டிற்குள் அடைபடும் நாள்  வரட்டும் விரைவில்! வருத்தத்துடனும் துயரத்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை

puzhalfront_muththukkumar001
தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார்.
ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர்.   இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு.
இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின் மகளை திருமணம் செய்தார்.
சமீபகாலமாக  ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார்.     சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார்.
சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.
கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும்,  சீமானுக்கு  பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான்.
இந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்