வெள்ளி, 12 நவம்பர், 2021

சி.இலக்குவனார் 112-ஆவது பிறந்த நாள் விழா & உலகத் தமிழ் நாள்

 அகரமுதல


தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ் அமைப்புகள்தமிழ்நாடுபுதுவை

 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

112-ஆவது பிறந்த நாள் விழா

உலகத் தமிழ் நாள்

 

ஐப்பசி 28, 2052 / ஞாயிறு / 14.11.2021

காலை 10.00 / இணையக் கூட்டம்

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 

கவிவாழ்த்து:

பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்

தலைவர்குளித்தலை தமிழ்ப் பேரவை

 

கவிஞர் சுரதா கல்லாடன்,

தலைவர்உலகத்தமிழ்க்கவிஞர் பேரவைபுதுச்சேரி

பாவரசு முனைவர் திலை பிரதாபன்

தலைவர்மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்

 காவலர் கவிஞர் .விசயகுமார்புதுச்சேரி

தொல்காப்பியத் தொண்டர் முனைவர் பத்துமநாபன்,

 தலைவர்உலகத்தொல்காப்பிய மன்றம்புதுச்சேரி

 பாவலர் முனைவர் ளவரச அமிழ்தன்

தலைவர், அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்

கல்வியாளர் வெற்றிச்செழியன்
தலைவர், மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை

முனைவர் பா.தேவகி

தலைவர்திருப்புகழ் அறக்கட்டளை

கவிஞர் கருங்கல் கி.ண்ணன்

நிறுவனர்தமிழன்னைத் தமிழ்ச்சங்கம்

கவிஞர் கிருட்டிண திலகா

மகளிர் அணித் தலைவர்தமிழன்னைத் தமிழ்ச்சங்கம்

இதழாளர் பசுமை ழிலரசு,

தலைவர்உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்

பேரா.முனைவர் இலலிதா சுந்தரம்,

 கபிலர் விருதாளர்

உரை வாழ்த்து :

மருத்துவமாமணி பேரா.புது.செ.நாராயணன்

முனைவர் சந்திரிகா சுப்பிரமணியம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞர், ஆத்திரேலியா

 தஞ்சைத் மிழ்ப்பித்தன்,

 தலைவர்தமிழ்ச் சங்கப்பலகை

 பைந்தமிழ்ப்பரப்புநர் யாழ் பாவாணன்

தலைவர், யாழ்பாவாணன் கலைப் பணி மன்றம்

மூத்த இதழாளர் இரியாசு அகமது

  விழா பேருரை :   முனைவர் .சுந்தர மூர்த்தி

மேனாள் துணைவேந்தர்தமிழ்ப்பல்கலைக்கழகம்.

 நிறைவுரை : தோழர் தியாகு,

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

 நன்றியுரை: புலவர் துரையரசி







செவ்வாய், 9 நவம்பர், 2021

சதுரங்கப் போட்டி, வ.அ.த.ச.

 அகரமுதல




வணக்கம்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வணக்கம் வட அமெரிக்காவின் ஏழு வண்ணப் போட்டிகளோடு சதுரங்கப் போட்டியையும் நடத்த ஆயத்தமாக உள்ளது.

போட்டியில் பங்கு பெற இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

https://tinyurl.com/VVAChessRegistration

போட்டியின் அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்களுக்கு இங்கே சொடுக்கவும்.

https://tinyurl.com/VVAChessRules

சதுரங்கப் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்வீர்!

தமிழ் வாழ்க!

 

 



கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது

 அகரமுதல




கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப்
‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது

சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்
பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர்.

இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார்.

கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும், பரிசுத்தொகை உரூ.50 ஆயிரத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விழாப்பேருரையாற்றினார்.

இவ்விழாவில், திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழக இணைவேந்தர் இரவி பச்சமுத்து, தலைவர் சி.நிரஞ்சன், பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, துணைவேந்தர் செ.முத்தமிழ்ச்செல்வன், பேராசிரியர்கள் பா.செய்கணேசு, தி.ஞா.நித்யா, வே.பிரபாகரன், விருதாளரின் கணவரும் புகழ்மிகு குறும்பாக் கவிஞருமான மு.முருகேசு முதலானோர் பங்கேற்றனர்.