புதன், 15 ஜூலை, 2009

கொல்கத்தா, ஜூலை. 15-

தெற்கு கொல்கத்தாவில் ககுலியா ரோடு பகுதியை சேர்ந்தவர் கோகுல் சட்டோ பாத்தியாயா (வயது 86). பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே இவருக்கு திருமணமாகி விட்டது. இதனால் அவரது கல்வி தடைபட்டது. கணவர், குழந்தைகள், குடும்பம் என “பிசி” யாகிவிட்டார். இருந்தாலும் கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வம் அவரது அடி மனதில் இருந்தது.

தற்போது அவருக்கு 86 வயதாகிவிட்டது. உடல் தளர்வுற்ற நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு மேலோங்கி இருந்தது.

இந்த நிலையில் இவர் வீட்டில் இருந்தே தபால் மூலம் பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார். நேதாஜி நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் தேர்வு எழுதினார்.

தள்ளாத வயதிலும் சோர்வடையாமல் தேர்வு எழுதிய இவரை பார்த்து மாணவிகளும், கல்லூரி நிர்வாகத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர்.

தள்ளாத வயதை கருத்தில் கொண்டு தேர்வு எழுதும் அறையை 2-வது மாடியில் இருந்து தரை தளத்தில் உள்ள அறைக்கு கல்லூரி நிர்வாகத்தினர் மாற்றி தந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக