சனி, 4 நவம்பர், 2017

Colombo fails to arrest STF commandos who shot and killed Tamil youth in Jaffna

Colombo fails to arrest STF commandos who shot and killed Tamil youth in Jaffna


A five-member squad of the so-called Special Task Force is believed to be behind the highhanded crime of firing at two unarmed Tamil fishermen and causing death to one of them in Ariyaalai East, a suburb of Jaffna city on 22 October. Despite the discovery of a handgun and vehicles suspected to be used by the killers from a STF camp in the same area, none of the STF commandos have been detained or arrested by the SL Police investigators conducting preliminary investigations so far. The STF, organised under the SL Police department, as a full-fledged military force, which is being operated by the intelligence wing of the occupying Sinhala military in North. Colombo has been replacing key officers of the SL Police in North with former STF commandos who have been promoted to higher ranks. 

SL Policemen are complicit in similar firing incidents reported in recent times in Jaffna. 

Two Tamil students of the Art Faculty of the University of Jaffna were cold-bloodedly gunned down by Sinhala ‘policemen’ at Kokkuvil, Jaffna, in October 2016. Police said the students were shot as they failed to stop at a police barricade. In July this year, SL policemen shot and killed a daily wage worker from Thunnaalai, Vadamaraadchi while he was in a vehicle that was transporting illegally scooped sand.

These brutal acts have exposed the tendency prevailing among the SL policemen/STF personnel rushing ahead with firing to kill unarmed Tamils without hesitation. This is in sharp contrast to their conduct in the Sinhala South, legal activists in Jaffna said. 

A handgun allegedly used by the gunmen, a motorbike and a three-wheeler used by the five-member STF squad have been recovered from a STF camp at Pa'n'nai, not far from the site of the crime on 31 October. 

Two gunmen who came in a motorbike were in civil clothes according to the survivor. 

The police investigation team that has arrived from Colombo to carry out preliminary investigations has been working on a theory that the youth were either involved in narcotic trafficking or they were in possession of crucial information. 

The investigators are under pressure from Sinhala political quarters in Colombo as well as the STF command in Jaffna to conceal their findings. 

There has been a systematic increase of appointments/transfers of STF personnel to command positions in the North-East replacing SL Police officers. This trend has been observed under the regime of SL President Maithiripala Sirisena and SL Prime Minister Ranil Wickramasinghe. A conflict is also raging between the STF circles and the SL Police investigators on this regard, the sources further revealed.

A section of STF commandos who had taken part in the war for more than 8 years of active service were promoted as Sub-Inspectors and those who had 18 years of military background were accorded with Inspector rank. After the regime change, several of these STF-turned police officers have been posted as Officers-in-Charge at several police stations in the North. 

The STF, formed during the times of late SL President J.R. Jayawardene was trained by the British. It functions as an extended arm of the SL military receiving instructions from the SL Defence Ministry in Colombo. The STF was directly engaged in brutal acts of genocide in the East as well as in Vanni during the war. The massacre five Tamil students in Trincomalee in 2006 is a well-documented case involving direct complicity of SL Defence Department in the crime. 

After the genocidal onslaught in May 2009, Colombo has been stepping up the deployment of the notorious STF commandos in all the districts in the Northern and Eastern provinces. There are currently more than 8,000 STF personnel attached to 69 camps, most of them situated in the occupied country of Eezham Tamils in the North and East of the island.




Related Articles:


Chronology:

வெள்ளி, 3 நவம்பர், 2017

இலை அறிவியல் (science of leaf )-இலக்குவனார் திருவள்ளுவன்

இலை அறிவியல் (science of leaf )

   காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள்உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில் எஞ்சியுள்ள உயிர்வளி நுண்துளைகள் மூலமே வெளியேறுகிறது.
  இலை என நாம் எல்லாப்பயிரினங்களின் இலைகளையும் கூற இயலாது. இலையானது தழை, (பனை)ஓலை, (தாழை)மடல், (கரும்புத்)தோகை, (வெங்காயத்)தாள், எனப் பல பெயர் பெறும். தமிழில் அறிவியல் உண்மையை அறிந்து அதற்கேற்ப  இலைகளுக்குப் பெயர் சூட்டி உள்ளனர்.
மெல்லியதாய் இருப்பது இலை. எ.கா.: புளி, வேம்பு
தண்டு ஆகிய தாளை ஒட்டி நீண்டு சுரசுரப்பாய் இருப்பது தாள். எ.கா.: நெல், புல்.
பெருந்தாளாக  இருப்பது தோகை. எ.கா. சோளம், கரும்பு
திண்ணமாய் இருப்பது ஓலை. எ.கா.: தென்னை, பனை.
 மரபறிவியல் எடுத்துக்காட்டுகளுடன் சொல்வதானால் பின்வருமாறு சொல்லலாம். வாழை மரம், அரச மரம், ஆல மரம் முதலிய மரங்களின் இலை, இலை என்றுதான் அழைக்கப் பெறுகிறது. ஆனால், நிலத்தொடு படரும் சிறு செடிகொடி வகைகளின் இலை, பூண்டு எனக் குறிக்கப் பெறுகிறது. (சிறு சிறு பற்களாய் அமைந்த பூண்டு போன்றவை வேறு) கோரை, அறுகு இவற்றின் இலையை நாம் புல் என்றுதான் வகுத்துள்ளோம். நெல், கேழ்வரகு இவற்றின் இலை, தாள் எனப்படுவதே சரியாகும். மலையைச் சார்ந்த மரங்களின் இலையோ தழை எனப் பெறும். சப்பாத்தி, தாழை இவற்றின் இலை, மடல் என்றுதான் சொல்லப்பெற வேண்டும். நாணல், கரும்பு இவற்றின் இலையைத் தோகை என்பதுதான் முறை. தென்னை, பனை இவற்றின் இலை, ஓலை என்றுதான் அழைக்கப்பட வேண்டும். அகத்தி, பசலை இவற்றின் இலை, கீரை  என்று சொல்லப் பெறுவதே செம்மையான முறையாகும்.
  பயிரினங்களுக்கும் உயிர் உண்டு எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே கண்டறிந்தவர்கள் அல்லவா நம் முன்னைத் தமிழ் மக்கள். எனவே, இலைகளை வேறுபடுத்திக் கண்டதில் வியப்பில்லை. இலையையும் அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப வேறுபடுத்திக் கண்டுள்ளனர். தொடக்கநிலையில் கொழுந்து, அடுத்த நிலையில் தளிர், முழு நிலையில் இலை, தளரும் நிலையில் பழுப்பு, வீழ் நிலையில் சருகு எனப் பாகுபடுத்தி உள்ளனர்.
 தண்டின் உட்பகுதி உறுதியற்ற – அகக்காழ்  இல்லாத – நெல், கம்பு, சோளம், கரும்பு, தென்னை, பனை  முதலியன  புல் எனப் பெறும். புல் விளையும் இடத்தைப் புலம்  என்றனர்.
கொழுந்து வகை
 துளிர் அல்லது தளிர். நெல் புல் முதலியவற்றின் இளந்தளிரே கொழுந்து; புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து முறி  அல்லது கொழுந்து;  சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் இளந்தளிரானது குருத்து ; கரும்பின் நுனிப்பகுதி கொழுந்தாடை என வகைப்படுத்தி உள்ளனர்.
 இலைக்காம்பு வகை
 இலையின்அடிநுனி காம்பு எனவும்  தாள், தோகை இவற்றின் காம்பு அடி எனவும், ஓலையின் காம்பு மட்டை எனவும் பாகுபடுத்தப்பட்டுள்ளன.
 இலைப்பரப்பில் நடு நரம்பு பல திசைகளிலும் பரவி இருக்கும்முறை
1. வலைப்பின்னல் (rediculate) எனப் பெறுகிறது.
 நரம்புகள் ஏறத்தாழ சம அளவாயும்  ஒன்றுக் கொன்று இணையாயும்  அமைதல்
2. இணைப்போக்கு (parallel venation) எனப் பெறுகிறது.

முதல்வகையானது,
  1.  இறகு வலைப்பின்னல் (pinnete rediculate) எனவும்
  2. அங்கை வலைப்பின்னல் (palmately) எனவும் பகுக்கப்பெறுகிறது.

இரண்டாம் வகையானது,
  1.     இறகு இணைப்போக்கு  ( pinnately parallel) எனவும்
  2.  அங்கை இணைப் போக்கு(almately parralel) எனவும்
வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இலை வகை
1.     தனியிலை(simple leaf)
2.    கூட்டிலை(compound leaf)
3.    சிறப்பிலை(special leaf)
என மூவகைப்படும்.

கூட்டிலை
  1.  சிறகுக் கூட்டிலை (pinnately compound leaf)
  2. அங்கைக் கூட்டிலை(palmately compound leaf)
என இரு வகைப்படும்.

சிறகுக் கூட்டிலையானது,
1.    ஒற்றைச் சிறகுக் கூட்டிலை(unipinnate)
2.     இரட்டைச் சிறகுக் கூட்டிலை(bipinnate)
3.     முச்சிறகுக் கூட்டிலை (trypinnate)
என முப்பிரிவாகும்.

இவற்றுள் ஒற்றைச்சிறகுக் கூட்டிலை,
1.    ஒரு சிற்றிலைச் சிறகுக் கூட்டிலை impari pinnate
2.    இரு சிற்றிலைச் சிறகுக் கூட்டிலை paribinnete
என  மேலும் பிரிக்கப்படும்.

மேலும், அங்கைக் கூட்டிலை
1.    ஒரு சிற்றிலை (unipoleate)
2.    இரு சிற்றிலை (bipoiate)
3.    முச் சிற்றிலை (trifoliate leaf)
4.    நாற்சிற்றிலை(detrapoliate)
5.    பல சிற்றிலை (multipoliate)
என ஐவகையாகப் பகுக்கப்படும்.

சிறப்பிலைகள் பின்வருமாறு பிரிக்கப்படும்
1.    செதில் இலைகள் (scale leaves)
2.    வித்திலைகள்(seedlings)
3.    செதில்கள்(scales)
4.    பூவிலைகள்(floral leaves)
5.    புறவிலைகள் (dorciventral)
6.    ஓரக இலைகள்(isobilatrel)
7.    மைய இலைகள்(centeric)
8.    தண்டிலைகள் (பொதுஇலைகள்)(plyageleaves)

செதில்கள்
1.     பூவடி(ச் செதில்)(breaket)
2.     பூக்காம்பு(ச் செதில்) (braktiyate)
3.     இலையடி(ச் செதில்) (stipulate)
என மூவகையாகும்.
இலையின் வேறு வகைப் பாகுபாடுகளை அடுத்துப் பார்ப்போம்.
 இலக்குவனார் திருவள்ளுவன்

 http://www.newscience.in/articles/ilai-ariviyal


Student leaders vow to step up protests in support of hunger-striking political prisoners

Student leaders vow to step up protests in support of hunger-striking political prisoners


The president of Jaffna University Student Union K. Krishnameenan and Secretary K. Jackson have sent an urgent appeal to SL President Maithiripala Sirisena through various offices in Colombo and Jaffna on Wednesday urging immediate response in resolving the demands of the three hunger-striking Tamil political prisoners at Anuradhapura prison. 14 days have elapsed since the student leaders met the SL President in Colombo on 19 October. Mr Sirisena had promised swift action either before the student leaders returned to Jaffna the next day or at latest on 25th of October after having consulted with SL Attorney General and SL Justice Minister who were out of the island at that time. But, nothing has happened since then. As such the student leaders are planning to step up the protest to next level, they told media on Wednesday. 

The students have been boycotting classes since 20 October. Ten days later, they stepped up the protest by laying siege to the administrative offices through blocking the main entrances in the main premises of the Jaffna University on 30 October. The Teachers Union and Non-Academic Staff at the University have extended their support to the protests. 

As the health situation of hunger-striking Tamil prisoners has worsened, the student leaders said they are forced to proceed to the next level of protest with the support of twenty civil, political and grassroots groups in Jaffna. 

Earlier, the students of the Art Faculty were planning to stage a fast-unto-death campaign inside the University premises. The protest was cancelled after the JUSU leaders intervened. 

In the meantime, the University Administration, particularly its Vice Chancellor Prof R. Vigneswaran, responded by closing down three faculties, including the Art faculty, until further notice. 

The VC has also gone on record implying that he chose to shut down the faculties to dilute the student protests, the student leaders said. 

The JUSU leaders have insisted in their letter Mr Sirisena should fulfil his promises without further delay. 

The student leaders said they would involve the grassroots and the public in the North in staging a multi-pronged agitation. 

In a separate letter issued to Tamil parliamentarians elected from North-East, the student leaders have demanded the MPs to attend a consultation meeting with the student community on Friday. Their failure to attend the meeting would be interpreted as an insult to the aspirations of the Tamil people, the student leaders said. 


JUSU letter to Tamil parliamentarians
Student leaders demand Tamil parliamentarians to take part in a consultation meeting Friday at 2:00 p.m. at



Chronology:

வியாழன், 2 நவம்பர், 2017

பாரதிதாசன் விழா, மும்பை


04.11.2017 சனிக்கிழமை மாலை 6.30

05.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00

பாவேந்தர் பாரதிதாசன் விழா, மும்பைத் தமிழ்ச்சங்கம்

சிறப்பு விருந்தினர் : முனைவர் ய.மணிகண்டன்

சிறப்புரை : வெ.பாலு


எசு.இராமதாசு, தலைவர்
கு.ஆறுமுகப்பெருமாள், சுந்தரி வெங்கட்டு, செயலர்கள்

மாற்றுத் திறனாளிகளைக் காப்போம் – தி.வே. விசயலட்சுமி


மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்!

  உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் அருவினையை/சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அருவினைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர்.
கண்பார்வையற்ற கிரேக்கக் கவிஞர் ஓமர், இலியம், ஒடிசி போன்ற காவியங்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றனர். தமிழகத்தில் அந்தகக்கவி வீரராகவர் போன்ற எண்ணற்றோர் தீந்தமிழ்ப் பாக்களைத் தீட்டியுள்ளார்.
  பார்வையற்ற, காது கேளாத, பேச வியலாத பெண்மணி எலன் கெல்லர்ஆடம் என்ற அமெரிக்க எழுத்தாளர், பிறவியில் பார்வையிழந்து பேசும் திறன் அற்ற பேராசிரியர். ஊனமுற்றோர் நலனுக்காக அரும்பாடுபட்டவர். ஆசுகர் போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  மதுரையைச் சார்ந்த அமுதசாந்தி என்ற பெண் தனக்கு ஒரு கை இல்லாவிட்டாலும், மாற்றுத்திறனாளி பெண்கள் பலருக்குத் தன்னம்பிக்கையைத் தரும் ஊன்றுகோலாக விளங்குகிறார்.
  தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம், தொழில் செய்யவும் கடன் உதவி பெறவும் திட்டங்கள் தீட்டி உதவுகின்றன. ஊனமுற்றவர்களைக் குறைபாடுகள் உடையவர்களாய்க் கருதும் மனப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
  பெற்றோர்களும் மனம் நொந்து போகாமல் தம் குழந்தைகளை ஊக்கப்படுத்தி உரிய கல்விதரும் வழிவகைகளை ஆய்ந்து அவர்களை வாழவைக்க வேண்டும். ஓர் உறுப்பு ஊனமுற்றால் மற்றைய நல்லுறுப்புகள் சிறந்த முறையில் செயலாற்றும் செயல்திறம் படைத்தவை என்பதை உணர வேண்டும்.
  மாற்றுத் திறனாளிகள் அனைவர்க்கும் அரசாங்கம் ஊர்தோறும் பல குழுக்களை அமைத்தும், தனிப்பட்ட துறையை அமைத்தும், கல்வியில் தேர்ந்த இளைஞர்கட்குத் தனிப்பயிற்சி கொடுத்தும், வேலைவாய்ப்பாகவும் மாற்றி அத்தகையோரைக் கண்காணிக்க ஏற்பாடும் செய்ய வேண்டும்.
அவர்களைக் கண்டறிந்து ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் இல்லந்தோறும் சென்று அரசின் செயற்பாடுகளை எடுத்துக் கூறலாம். தொலைக்காட்சி, அனைவரும் படிக்கும் இதழ்களில் பயனற்ற விளம்பரங்கட்கு மாற்றாக மாற்றுத் திறனாளிகட்கு உதவும் அமைப்புகள் எடுத்துரைத்தும் தன்னம்பிக்கையூட்டும் குறும்படங்கள், கதைகள் இவற்றின் மூலமாகவும் உதவ முற்படலாம்.
  ஐக்கிய நாடுகள் அவை 1981-ஆம் ஆண்டை ஊனமுற்றோர் ஆண்டாக அறிவித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
  இவ்வாண்டு பள்ளியிறுதித் தேர்வில் பார்வையற்ற பள்ளி மாணவ, மாணவியர் நன்மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்று, எதிர்காலத்தில் ஓர் இலக்கை அடைய நினைத்து மகிழ்ச்சியாய்ப் பேசுதல் வரவேற்கத்தக்கது. ஆசிரியர்கள் பங்கு இதில் மகத்தானது.
  உதவும் முகாம்கள் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பெற்று அரசு நலத்திட்டங்கள் கிடைக்கப் பதிவு செய்தும், அவர்கள் சலுகைகள் பெறுவதையும் கண்காணித்து வருகின்றனர்.
 மாற்றுத் திறனாளிகள் இத்திட்டங்கள்பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்று தன்னார்வத் தொண்டு அமைப்பாளர்கள் கூறுகின்றனர். தங்கட்கு மறுவாழ்வு இருக்கிறது என்பதை உணர வைக்க இன்னும் பல முயற்சிகள் அரசு உருவாக்க வேண்டும்.
  கல்வி, உதவித் தொகை, வங்கிக் கடன், பயணச் சலுகை, ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து பயிற்சியளிக்கும் மையம், தேசிய அடையாள அட்டை, பாதுகாவலர் நியமனம் என்ற பல திட்டங்களும் வேலைவாய்ப்புத் துறையில் ஏற்ற பணிகள் கொடுத்து, உதவித் தொகை அளிக்கப்பட்டும், முழுமையாக அறியாது துன்புறும் அவர்கள் துயரைத் துடைக்க அனைவரும் வழிவகைகள் சொல்ல வேண்டும். உறுப்புக் கொடையபால் பலர்பயன்பெற்று வருவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.
  அரசுப் பேருந்துகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சிக் குன்றியோர் ஆகிய மாற்றுத் திறனாளிகட்கு இலவசப் பயணச் சலுகைகளை அளித்து வருவது உண்மை’. ஊனம் என்பதே இயலாத் தன்மைதான்.
  உடற்குறைபாடு, புலன் குறைபாடு, அறிவுத்திறன், உளவியல், பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை ஊனமுற்றோர் நம்பிக்கையை எக்காலத்திலும் கைவிடக்கூடாது. ‘நம்பிக்கை என்ற சொல்லின் முன் துன்பங்கள் எல்லாம் பாழடைந்த வீடுபோல் சரிந்துவிடும் என்றார் நெப்போலியன் என்ற மாவீரன்.
  மாற்றுத் திறனாளிகளை அதிகாரத்தில் அமர்த்தும் மத்திய அரசு இதற்கான தேசிய விருதுகள் அளிக்க விண்ணப்பங்களை வரவேற்பது மகிழ்ச்சிக்குரியது. மாற்றுத் திறனாளிகட்கும், மறுவாழ்வு அளிக்கும் மாவட்டங்கள், அவர்கட்கு உதவி செய்பவர்கள் அனைவரும் பயனுறத்தக்க வகையில் விருதுகள் அளிக்க முன்வந்துள்ளது.
  இவ்வறிவிப்பு இந்நாள் வரை வெளிவராத ஒரு திட்டம். இஃது அனைவரையும் சென்றடைய, தேர்தல் பரப்புரை போல் நாடு முழுவதும் செய்தால்தான், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் இவ்வறிக்கையை விளம்பரப் பலகையில் இணைத்தல் நன்று. மனவுளம் குன்றியோரையும் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இணைத்து உதவுதல் அரசின் கடமை.
  உரிய முறையில் அரசு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டுதாழ்வான எண்ணம்ஊக்கமற்ற சிந்தனைசிறுமையுணர்வுபொறாமை இவற்றை மனத்தைப் பாதிக்கவிடாமல் எதிர்காலத்தை மாற்றுத் திறனாளிகள் ஒளிமயமாக்கிக் கொள்ளல் வேண்டும்.







     
தி.வே. விசயலட்சுமி