சென்னை, ஜூலை 12: திமுகவில் மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் வகித்து வந்த பொதுப்பணித்துறை இலாகாவை திடீரென முதல்வர் கருணாநிதி தன்வசம் எடுத்துக் கொண்டது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை, திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்கள் யாரும் நிறைவேற்றுவதில்லை என்று நீண்டநாள்களாகவே மனக்குமுறல் இருந்து வருகிறது. இந்த விஷயத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் கருணாநிதியிடம் நேரில் முறையிட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக பொதுப்பணித்துறை சார்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிகிறது. காங்கிரஸôர் ஆட்சியில் பங்கு கேட்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று திமுக தலைமை கருதுகிறது.இதைத்தொடர்ந்தே, மூத்த அமைச்சர்கள் மீது முதல்வர் கருணாநிதிக்கு சற்று கோபம் இருந்து வந்துள்ளது. அதேபோல, காந்தி மண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியாருக்கு விடப்பட்ட விஷயத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணி தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கவேண்டிய தர்ம சங்கடம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் மனம் குமுறுகின்றனர்.நாட்டு மக்களால் மதிக்கப்படும் தலைவர் ஒருவரின் மண்டபத்தைப் பொதுப்பணித்துறை பராமரிக்காமல், தனியார்வசம் ஏன் ஒப்படைக்கப்பட்டது என்பதில் துரைமுருகனுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கருத்து மோதல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.முதல்வர் குடும்பத்துடனும், துணை முதல்வருடனும் நெருக்கமாக இருந்தும், துரைமுருகனின் பொதுப்பணித்துறை இலாகா பறிப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கருத்துக்கள்
தினமணியின் கருதுகையெல்லாம் தவறே! இது முதல்வரின் தனி யுரிமை. இதில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. என்றாலும் துணை முதல்வரைத் தவிர வேறு யாரையும் மூத்த அமைச்சர் என்று கூறினால் அவர்களின் பல்லும் பிடுங்கப்படும் என்ற எச்சரிக்கையும் உள்ளடங்கியுள்ளது. கலைஞர் முதலில் அமைச்சுப் பொறுப்பு ஏற்ற துறை இன்றைய ஆட்சியின் நிறைவின் பொழுதும் கலைஞரையே அடைந்துள்ளது. பொன் கொழிக்கும் இத்துறை பற்றி நன்கு அறிந்த அவர் அதற்கேற்ற வகையில் திறம்படவே செயல்படுவார் எனலாம்.
இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 3:59:00 AM
7/13/2009 3:59:00 AM