சனி, 26 மார்ச், 2011

Vaiko interview - vikadan : செயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!” – வைகோ

ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!” – வைகோ

வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார்.
ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு. கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்… வெறும் பார்வையாளர்!
”நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?”
”மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.
பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.
ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.
‘நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல… எண்ணமே காரணம்!”
”ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?”
”2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார். எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், ‘அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!
அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை. ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, ‘இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9… என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.
சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?”
”குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?”
”21 இடங்கள்… அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!
48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், ‘ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை… திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.
ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, ‘வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? ‘உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?
என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!”
”மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?”
”தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி… மூன்றாவது இடத்தில்தான் வரும்!”
”தனியாக நிற்பது..?”
”ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!”
”தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?”
”நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.
ஒரு பக்கம்… தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா – இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், ‘தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்… சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!”
”பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?”
”எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, ‘நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!”
”யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?”
”ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!”
”இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?”
”சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், ‘மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!”
” ‘என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?”
”ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!”
”இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை…வருத்தமாக இல்லையா?”
”தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!”
நன்றி: விகடன்
ப.திருமாவேலன், படங்கள் : சு.குமரேசன்
Popularity: 41% [?]

dinamalar cartoon about election announcements of free supplies



leaders contest at native places: dinamalar cartoon


Red cross society closed at vavuniya : வவுனியா சர்வதேசச் செஞ்சிலுவை சங்கமும் மூடப்பட்டது

தமிழர் பகுதிகளில் செஞ்சிலுவைச் சங்கம் கூட வைக்க தடை செய்யும் சிங்கள அரசைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!

வவுனியா சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மூடப்பட்டது


கொழும்பு, மார்ச் 25: இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இப்போது மூடப்பட்டுள்ளது.  இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் பிரச்னையை துவங்கியபோது 1987-ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் துவங்கப்பட்டது. 2009-ல் விடுதலைப்புலிகளுடன் நடந்த போருக்குப் பின்னர் பல்வேறு செஞ்சிலுவை சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.  ஆனாலும் வவுனியாவில் இருந்த சங்கம் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது.  இந்த நிலையில் இந்த சங்கம் இப்போது மூடப்பட்டுள்ளது.  இதுகுறித்து செஞ்சிலுவை சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கொழும்பிலிருந்து மட்டும் செஞ்சிலுவை சங்கம் செயல்படவேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வவுனியாவில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம் மூடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  அனைவரும் ஏற்கும் தீர்வை விரும்புகிறோம் - ராஜபட்ச: தமிழர்கள் பிரச்னையில் அனைவரும் ஏற்கும் தீர்வை மட்டுமே விரும்புகிறோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கூறினார்.  இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணிக் கட்சியினருடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அனைவரும் ஏற்கக்கூடிய சிறந்தத் தீர்வை அடைவதே எனது குறிக்கோள்.  விடுதலைப்புலிகளின் கோரிக்கையான தனி நாடு என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 60 ஆண்டுகளாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இதை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும்.  தமிழ் தேசிய கூட்டணியுடன் இதுவரை 3 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சு நடத்தி வருகிறது என்றார் அவர்.

Azhagiri against Virudhagiri film: உத்தமபாளையத்தில் "விருதகிரி' படம்: மு.க.அழகிரி எதிர்ப்பு

அரசு ஊடகங்களில்தான் அரசியல் தொடர்புடையவர்கள் படங்களை வெளியிடக்கூடாது. திரையரங்கத்தில் வெளியிட்டால் அஞ்சா நெஞ்சர் அஞ்சுவானேன்?  இதன் காரணமாகக் குறுவட்டு மூலம் இல்லங்களில் மிகுதியானவர்கள் பார்க்க மாட்டார்களா?  மேலும்  தேர்தல் விதிமுறை மீறல் என்ன உள்ளது என்று ஆட்சியர் தாளம் போட்டுள்ளார் என்றும் தெரியவில்லை.  இத்தகைய போராட்டங்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான சூழலைத்தான் உருவாக்கும்.
தமிழ்ப்பெயர் இல்லாத் திரைப்படம் கண்டு அஞ்ச வேண்டா!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!

உத்தமபாளையத்தில் "விருதகிரி' படம்: மு.க.அழகிரி எதிர்ப்பு


கம்பம், மார்ச் 25: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் விஜயகாந்த் நடித்த விருதகிரி திரைப்படம் திரையிடப்பட்டதற்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெள்ளிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க.வினர் தியேட்டரை முற்றுகையிட்டதால், படம் மாற்றப்பட்டது, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தே.மு.தி.க.வினரின் முற்றுகையால் போலீஸôர் தியேட்டரில் குவிக்கப்பட்டுள்ளனர்.  மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேனி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளையும், வேட்பாளர்களையும் நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். போடியிலிருந்து கம்பம் வரும்போது கோம்பை, உத்தமபாளையம் பகுதியில் அதிகளவில் விஜயகாந்த் நடித்த விருதகிரி திரைப்பட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், இது குறித்து தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்ததோடு, எதிர்ப்புத் தெரிவித்தாகத் தெரிகிறது.  உடனடியாக, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி பெ.செல்வேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் விருதகிரி திரைப்படம் குறித்தும், தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் ஒன்றியச் செயலாளர் முல்லை சேகர் தலைமையிலான நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் விருதகிரி திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டு, உடனடியாக திரைப்படத்தை மாற்றக் கோரினர். தியேட்டர் நிர்வாகத்தினருக்கும் தி.மு.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதற்கிடையில், விருதகிரி படம் மாற்றப்பட்டு, ஆங்கிலப் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டது.  இரவுக் காட்சியின்போது, தகவல் அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் மீண்டும் விருதகிரி படத்தைத் திரையிட வேண்டும் என்று கோரி, தியேட்டரை முற்றுகையிட்டனர். இதற்கிடையே, போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தியதில் தியேட்டர் நிர்வாகம், தியேட்டரில் "தாற்காலிகமாக திரைப்படம் ஓடாது' என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஆத்திரமடைந்த தே.மு.தி.க.வினர் ஆங்கிலப் படத்தின் போஸ்டர்களை கிழித்து எரித்து கோஷமிட்டனர்.  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.

cong.has no concerns about thamizh (tamil) people: தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை:செயலலிதா

தமிழர்கள் மீது கருத்து செலுத்தாத காங்.அரசுடன் ஒட்டி உறவாடத் துடித்ததன் மூலம் தனக்கும் தமிழர்கள் மீது பற்றோ பரிவோ இல்லை என்பதை ஒத்துக் கொண்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!

தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை: ஜெயலலிதா

First Published : 25 Mar 2011 03:43:40 PM IST

Last Updated : 25 Mar 2011 03:46:12 PM IST

சென்னை, மார்ச் 25- தமிழர்கள் மீது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு அக்கறையே இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள வீரேஸ்வரத்தில் அவர் நேற்று பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.அவர் பேசியதாவது:கடந்த ஐந்து ஆண்டு காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு, நீங்கள் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இதில் உங்களை வெகுவாக பாதித்துள்ள பிரச்சினை விலைவாசி உயர்வு. விலைவாசியை கட்டுப்படுத்த கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? நிச்சயமாக இல்லை.  மாறாக விலைவாசி உயர வழி வகுத்தார். அரிசிக் கடத்தலை ஊக்குவித்தார். பதுக்கலுக்கு பக்கபலமாக இருந்தார். டீசல், காஸ் விலை உயர காரணமாக இருந்தார்.  மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு ஆதரவு அளித்தார். பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள உறுதுணையாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மணல் கொள்ளை தமிழ்நாடு முழுவதும் அமோகமாக நடைபெற்றது. இன்னமும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.இந்தியாவிலேயே மக்கள் பணத்தை சுருட்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக ஆக்கிய ஒரே முதலமைச்சர் கருணாநிதி தான். ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காலாவதியான மருந்து விநியோகம், விற்பனை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என பல வழிகளில் கருணாநிதி குடும்பத்திற்கு பணம் சென்று கொண்டே இருக்கிறது. அனைத்து அரசுத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.   மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், என்ற எண்ணம், கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. கருணாநிதியால் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்யக் கூட முடியவில்லை.தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த கருணாநிதியால் முடியவில்லை.  மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் மூலம் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களை அழித்தது தான் கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனை. இவற்றிற்கெல்லாம் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழர்கள் மீது அக்கறையே இல்லாத அரசு மத்திய காங்கிரஸ் அரசு.   அருள்மிகு ரங்கநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழுகின்ற மக்கள், அவர்களுடைய நிலத்தை விற்க முடியாத சூழ்நிலையில் உள்ளதை நான் அறிவேன். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்பதையும்;மழைக் காலங்களில் ஸ்ரீரங்கம் நகருக்கு ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணப்படும் என்பதையும் ; வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு ரங்கநாதரை தரிசிக்க வருவதால் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்பதையும் உங்களுக்கு வாக்குறுதியாக அளிக்க விரும்புகிறேன். ஸ்ரீரங்கம் தான் எனது பூர்வீகம்.  ஸ்ரீரங்கத்திற்கு வருகின்ற போது எனது வீட்டிற்கு வருகின்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது.  எனது முன்னோர்கள், எனது முதாதையர்கள் இதே ஸ்ரீரங்கத்தில் தான் பிறந்தார்கள்; வளர்ந்தார்கள். வாழ்ந்தார்கள். இப்போது நானும் உங்களில் ஒருத்தியாக இருக்க இங்கேயே வந்துவிட்டேன்.  இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள்

உனக்கு தமிழ் நாட்டு மேல அக்கறைய இல்லை கர்நாடக மக்கள் மேலே அக்கறைய? உன்னக்கு தமிழ் நாட்டு மக்களின் வரி பணத்தில்தான் அக்கறை
By bala
3/25/2011 9:08:00 PM
ஆமாம் இவர் கூட கூட்டணி சேரவில்லை
By dinesh
3/25/2011 8:13:00 PM
பகுதறிவு பகலவன் .. பெரியார் தான் இந்த மதி மயங்கிய தமிழர்களை ... கருணாக நிதியின் கோர பிடியில் இருந்து ...விழிக்க வைக்க முடியும்... டிவி யில் சொல்லுவதை சற்றும் ஆராயமால். நம்பும்..நாகரீகம்.. பத்திரிக்கை, டிவி எல்லாம் கரு வின் கையில்..
By கரிகாலன்
3/25/2011 7:23:00 PM
ஜெயலலிதா சொல்வது முற்றும் சரியே. காங்கிரசுக்கு எப்படியாவது பதினைந்து MP சீட்கள் தமிழ்நாட்டில் கிடைத்தால் போதும். மற்றபடி தமிழர்களை பற்றி கவலை இல்லை. நாகராஜன்
By Nagarajan
3/25/2011 6:40:00 PM
yes! this amma have very too much அக்கறை in our country and people!
By அப்துல் ரெஹ்மான் ச
3/25/2011 5:52:00 PM
JAYA IS ONLY PERSON WHO HAVE MORE AFFECTION TOWARDS TAMILNADU FOR LOOTING MONEY FROM TAMILNADU!
By RAVIRAJMOHAN
3/25/2011 5:34:00 PM
dear madem, Best of luck for coming chief minister for TN
By s.mani kandan
3/25/2011 5:14:00 PM
உங்களுக்கு தமிழன் மீது உண்மையான அக்கறை இருக்கிறதா என்று மனதை தொட்டு சொல்லுங்கள் ........ அறவே இல்லை காங்கிரஸ்க்கு மனசாட்சியே இல்லை ........
By தமிழன்
3/25/2011 3:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

cast suffixs in names: தமிழகத்துப் பெயர்க் கூத்துகள்

பாராட்டுகள். இந்தியா முழுமையுமே சாதிப் பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை  எடுக்க கவேண்டும். முதலில் அரசியல் தலைவர்கள் பெயர்களைச் சாதி அடிப்படையில் சுருக்கிக் குறிப்பிடுவதை நாடாளுமன்றத்தில் நிறுத்த வேண்டும். அடுத்து ஊடகங்களில் அவ்வாறு குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!

தமிழகத்துப் பெயர்க் கூத்துகள்


நம்மை வெளியில் கோமாளிகளாக்கக் கூடிய பல குறைபாடுகளில் ஒன்று, நம்முடைய பெயரிடும் முறை. பெயரிடுவது தொடர்பாக பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன நம் ஊரில். கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு வைக்கக் கூடிய பெயர் வாயில் நுழையக் கூடாது என்கிற ஒரே கொள்கையோடு பெயர் தேடுபவர்கள் ஒருபுறம். எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கட்டும், எப்படி வேண்டுமானாலும் முடியட்டும், பெயரின் ஏதாவதொரு பகுதியில் ‘ஷ்’ என்ற வடமொழி எழுத்து மட்டும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லித் தேடுபவர்கள் ஒருபுறம். இன்ன நட்சத்திரத்துக்கு இன்ன எழுத்தில் பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்று தேடுகிறவர்கள் ஒருபுறம். தனித்தமிழ் பெயர் தேடுபவர்களும் வைக்கப்பட்ட வடமொழிப் பெயர்களைப் பெரும் எண்ணிக்கையில் மாற்றிக் கொண்டிருக்கிறவர்களும் ஒருபுறம். சினிமா நடிகர் நடிகைகளின் பெயர்களைத்தான் என் பிள்ளைகளுக்கு வைக்கவேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்று இருப்பவர்கள் ஒருபுறம். குறிப்பிட்ட சில திரைப்படங்களில் வருகிற கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் வைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம். அதையே இலக்கியப் படைப்புகளில் இருந்து எடுத்துச் செய்பவர்கள் ஒருபுறம். பொன்னியின் செல்வன் வந்த காலத்தில் தமிழகம் முழுக்க நிறைய வானதிகள் பிறந்தார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கடவுள் பெயர் மட்டும் வைப்போர் ஒருபுறம். பல தலைமுறைகளாகத் தாத்தா பாட்டிமார் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு வருவோர் ஒருபுறம். புரட்சியாளர்கள் மற்றும் மக்களுக்குப் பாடுபட்டு வாழ்ந்து சென்ற தலைவர்களின் பெயர்களை மட்டும் வைப்போர் ஒருபுறம். தன் கட்சித் தலைவனின் அம்மா, ஆட்டுக்குட்டி, வீட்டு நாய் ஆகியவற்றின் பெயரை மட்டும் அவர் வாயாலேயே சூட்டக் கேட்டுக் களிக்கிற வகையினர் ஓரினம். தான் கை பிடிக்க முடியாது போன காதலி மற்றும் காதலனின் பெயரை இடுவோர் ஒருபுறம். உயிர் நண்பனின் பெயரை இடுவோர் ஒருபுறம். அந்தச் சொல்லுக்கு எந்த மொழியிலும் பொருள் மட்டும் இருக்கக் கூடாது என்று பிடிவாதமாக சில எழுத்துக்களை மட்டும் கூட்டிப் போட்டுக் கூட்டுப் பொறியல் போலப் பெயரிடுவோர் ஒருபுறம். பிள்ளை பிறக்கிற நேரத்தில் செய்திகளில் அதிகம் அடிபடுகிற பெயராகப் பார்த்து இடுகிற கூட்டம் ஒருபுறம். இப்படி நீள்கிறது பட்டியல். மேற்சொன்ன சிலவற்றைப் பின்பற்றித்தான் எங்கள் வீட்டிலும் பெயர்கள் இடப் பட்டிருக்கின்றன. தாத்தாவின் விடுதலைப் போராட்டப் பின்னணி காரணமாக அளவிலாத தலைவர்களின் பெயர்கள் எங்கள் வீட்டில். பகத் சிங்கில் தொடங்கி உள்ளூர் இடது சாரித் தலைவர்கள் வரைப் பல்வேறு விதமான பெயர்கள். அதன் சில பிரச்சனைகளை அனுபவித்தவர்கள் என்ற முறையில் இந்தப் பெயரிடுதல் பற்றிக் கொஞ்சம் பேச விரும்புகிறேன். இதில் அதிகம் பாதிக்கப் பட்டவர் பகத் சிங்காகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

மேற்சொன்னவற்றில் எவை சிக்கலுக்குரியவை என்றால் குழப்புப் படியான பிற்பெயர் கொண்ட பெயர்கள் இடுவது. பிற்பெயர் என்பது என்ன? உலகம் முழுக்க உள்ள ஒரு பழக்கங்களில் ஒன்று, ஒரு மனிதரை அவருக்கு இடப்பட்ட பெயரை முற்பெயராகவும் இன, குடும்ப, கூட்ட, தொழில், ஊர், பரம்பரைப் பெயரைப் பிற்பெயராகவும் கொண்டு விளிப்பது. நம்மிலும் இது சில தலைமுறைகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போதும் நம்ம ஊர்க் கிராமத்துப் பெருசுகள் இதை விட வில்லை. பிற்பெயர் பெரும்பாலான நேரங்களில் ஒருத்தருடைய சாதியைச் சுட்டுவதாக இருந்ததால் நம் முன்னோரில் சில நல்லவர்கள் அதைப் பயன்படுத்துவதை அநாகரீகமாகக் கருதிக் கழற்றி விட முடிவு செய்தார்கள். அதிலிருந்து நாம் நம் தந்தையின் பெயரையே பிற்பெயராகக் கொண்டு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டோம். இந்தக் கதை நம்மில் பலருக்கு உருப்படியாக வந்து சேராததால் “ஏய், உனக்குப் பிற்பெயர் இல்லையா? அப்பா பெயர்தான் அதுவா?” என்று சில வெளிமாநிலத்துக் காரர்கள் கேட்டுச் சிரிக்கும்போது உடன் சேர்ந்து சிரித்து விட்டு நகர்கிறோம். இன்று முதல் இனி அப்படி ஒரு சூழ்நிலை வருமானால் இந்தக் கதையைச் சொல்லி “அட முட்டாப் பயகளா! நீங்கள் இன்னும் நாகரிகமடையவே இல்லையா?” என்று கேட்டுப் பதிலுக்குச் சிரித்து விடுங்கள். இன்று வட மாநிலங்களில் பல இயக்கங்கள் தமிழ் நாட்டைப் போல் அவர்கள் மாநிலத்திலும் இதை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், சாதி வேரைக் கிள்ளி எறியும் முயற்சிக்கு இது சரியான முதல் படி.

அடுத்து நாம் செய்ய வேண்டிய முதல் வேலை, வட நாட்டுப் பிற்பெயர்களை இணைத்துக் கோமாளித்தனமான பெயர்கள் வைப்பது. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள், வடமொழிப் பெயர்கள் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. வடநாட்டுக் காரர்களின் பிற்பெயர்களை வைக்காதீர்கள் என்றுதான் சொல்கிறீர்கள். அதாகப் பட்டது, உங்கள் பிள்ளைகளின் பெயரில் சிங், சர்மா, குப்தா, மேத்தா, கபூர், காந்தி, நேரு போன்ற பெயர்களைச் சேர்க்காதீர்கள். காந்தியைப் பிடித்தால் மோகன்தாஸ் என்று வையுங்கள். நேருவைப் பிடித்தால் ஜவகர் என்று வையுங்கள். பகத் சிங்கைப் பிடித்தால் பகத் என்று வையுங்கள். அவைதான் அவர்களின் முற்பெயர். அதை விடுத்து அவர்களின் பிற்பெயர் வைப்பது எப்படி இருக்கும் என்றால், வடநாட்டுக்காரன் அவன் பிள்ளைக்குத் தேவர், கவுண்டர், நாடார் என்று வைப்பது போல் இருக்கும். அப்படி ஒரு கோமாளித்தனத்தை அவர்கள் செய்வதில்லை. பின் ஏன் நாம் மட்டும் செய்ய வேண்டும்?!

அப்படிச் செய்தது போன தலைமுறை வரை ஓகே. ஏனென்றால், நம் பிள்ளைகள் பெரும்பாலும் வெளியேறவில்லை அப்போது. ஊர்க்காரன் மட்டும் “ஆகா, என்ன ஒரு புதுமையான பெயர்?!” என்று ஆச்சரியப்படுவான். நாமும் ரெம்பப் பெருமையாகப் பல்லைக் காட்டித் திரிவோம். இப்போது அப்படி இல்லை. பிள்ளை வெளியே பல இடங்களுக்குப் போகும்போது பலருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும். வேடிக்கைப் பொருளாய் உடன் சிரிப்பது மட்டுமின்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மானத்தையும் இழக்க ஆரம்பிக்கும். எல்லாவற்றுக்கும் மேல் நான் இதை ஓர் அடிமைத்தனத்தின் சின்னமாக, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன். இப்படிப் பெயர்களிடம் மாட்டிக் கொண்டு புழுங்கிக் கொண்டிருப்போரையும் அறிவேன். அதனால் காமெடிப்பீஸ் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே பல்லைக் காட்டித் திரிவோரையும் அறிவேன். உங்கள் பிள்ளைகள் இரண்டில் எதுவுமே ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கடமை.




2 comments:

Kavi சொன்னது…
Well said Raja. I used be mad at people when they name their kids based on "unique" name concept which is in one of your naming category. I see this crazy naming attitude more in Tamils. Don't know why. (by the way i named my kids good Tamil names :) ).
Bharathiraja சொன்னது…
Thanks Kavi. Good to see that there is someone who relates to my agony. Yes. It is only with our people. Good that you have named your kids with good Tamil names.

வெள்ளி, 25 மார்ச், 2011

பதுங்குவது பாய்வதற்கு தான்: வைகோ ஆவேசம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: "ம.தி.மு.க., பதுங்குவது பாய்வதற்கு தான்,' என அக்கட்சி பொது செயலாளர் வைகோ ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருமண விழாவில் பேசினார்.

இவர் மேலும் பேசியதாவது: ம.தி.மு.க., தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. ஆனால் தினமலர் நாளிதழ் இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக மட்டுமே குரல் கொடுத்து வருவதாக கூறுகிறது. மதுரையில் தினமலர் அலுவலகம் தாக்கப்பட்ட போது நான், மதுரை மாசி வீதியில் ம.தி.மு.க., தொண்டர்களை திரட்டி அந்த பத்திரிகைக்கு ஆதரவாக போராடினேன். நான் எம்.பி.,யாக இருந்த போது விவசாயிகளை காப்பாற்ற நதி நீர் இணைப்பை வலியுறுத்தி வருகிறேன்.

முல்லை பெரியாறு அணைக்காக ம.தி.மு.க.,வை போல் வேறு எந்த கட்சியும் போராடவில்லை. நவரத்தினங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசி அதை தடுத்தேன். தூத்துக்குடியில் நச்சு தொழிற்சாலையான ஸ்டெர்லைட் தொழிற்சாலையை தடை செய்ய போராட்டம் நடத்தினேன். அத்தொழிற்சாலை உரிமையாளர் அகர்வால், என்னை சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தும் நான் அவரை பார்க்கவில்லை. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றேன். தற்போது சுப்ரீம் கோர்ட்டில் அத்தொழிற்சாலை இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளது. இவ்வழக்கில் நான் வாதாடி வருகிறேன். இதை தினமலர் நாளிதழ், ஆறப்போட்ட பிரச்னையை கிளப்பியதாக எழுதுகிறது.

நான் அத்தொழிற்சாலை உரிமையாளரை சந்தித்து 100 கோடி ரூபாய் வாங்கி, எங்கள் கட்சியை நடத்தலாம். நான் தமிழக மக்களை பாதுகாக்கவே தொடர்ந்து போராடி வருகிறேன். இதனால் ம.தி.மு.க.,வை தமிழக சட்டசபைக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம், 1000 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நான் சொல்ல வில்லை. பத்திரிகைகள் தான் சொல்கின்றன. தினமணி பத்திரிகை, ம.தி.மு.க., முடிவால் மாவட்ட செயலாளர்கள் மனக்குமுறல்களில் உள்ளனர். தனியாக கூட்டம் நடத்த போவதாக செய்தி வெளியிட்டிருந்தது. தேர்தல் புறக்கணிப்பு என்பது மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர் சேர்ந்து எடுத்த ஒருமித்த முடிவு. இதில் பிளவு எதுவும் இல்லை. இக்கூட்டத்தில் கட்சியினர் பேசிய பேச்சுகளை விரைவில் வெளியிட உள்ளேன். கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. எங்களின், "தேர்தல் புறக்கணிப்பு' என்ற தீர்மானத்தை தவிர, வேறு எதுவும் பத்திரிகைகளுக்கு சொல்வதிற்கில்லை. இந்த தேர்தலை மட்டும் தான் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளேன். ஆடுகள் மோதும் போது பின் வாங்குவது போல் ம.தி.மு.க., போட்டியிடாமல் உள்ளது, மீண்டும் போட்டியிட தான், நாங்கள் பதுங்குவது பாய்வதற்கு தான், என்றார்.

Dinamalar cartoon: cong.participation


Dinamalar cartoon: election free concessions:


அகந்தையால் தடுமாறும் அ.தி.மு.க; நிம்மதி பெறுகிறது திமுக!

அகந்தையால் தடுமாறும் அ.தி.மு.க; நிம்மதி பெறுகிறது திமுக!

அதீத தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் ஒரு நூலிழை தான் வித்யாசம் என்பார்கள்- அதி புத்திசாலிக்கும் பைத்தியத்திற்கும் இருக்கும் அதே நூலிழை வித்யாசம் தான். இந்த வித்யாசம் தான் வாழ்வை இயக்குகிறது. தன்னை உணர்ந்தவன் சாதனை புரிகிறான். தன்னை மாபெரும் சாதனையாளன் என்று தனக்குத் தானே எண்ணிக் கொள்பவன் சோதனைகளை அடைகிறான். கடைசியில் அவனுக்கு வேதனை தான் மிஞ்சும்.

தேர்தல் களத்தில் தத்துவமா என்ற கேள்வி எழலாம். குருக்ஷேத்திர போர்க்களத்தில் தானே கீதை ஞானம் பிறந்தது? தமிழக தேர்தல் களம் இப்போது வைகோவுக்கு மயான வைராக்கியத்தையும், தமிழக வாக்காளர்களுக்கு ஜெயலலிதா குறித்த மனச் சித்திரத்தையும் அளித்திருக்கிறது. ஒருவகையில், தேர்தல் முடிவுகளை நிர்மாணிக்கும் முக்கிய கருதுகோள்களை, அண்மைய தேர்தல் நிகழ்வுகள் அளித்துள்ளன.....
....................
திமுக தலைவர் நடத்திய அரசியல் நாடகம் சந்தி சிரித்திருந்த நிலையில், ஆண்டிமுத்து ராசாவின் பினாமி கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி (மார்ச் 16) ஆளும் கூட்டணி திகைப்பில் ஆழ்ந்திருந்த தருணம், ஜெயலலிதா நிகழ்த்திய இமாலய சறுக்கல், சற்றும் எதிர்பாராதது. வைகோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் முடிவில் ஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்த 160 அதிமுக வேட்பாளர் பட்டியல், அவரது கூட்டணித் தோழர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. 'ஜெயலலிதா மாற மாட்டார்' என்ற பேச்சுக்கள் புழங்கத் துவங்கின.
...................
தன்னிச்சையான போக்கு, யாரையும் துச்சமாகக் கருதும் அகந்தை, எவரையும் மதிக்காத கர்வம் போன்ற காரணங்களால்தான் முந்தைய காலங்களில் ஜெயலலிதா ஆட்சியைப் பறிகொடுத்திருந்தார். தற்போது அவர் மாறிவிட்டார் என்று நம்பப்பட்டு வந்தது. திமுக தலைமையின் அதி பயங்கர ஊழல்களுக்கு ஒரே மாற்றாக ஜெயலலிதா உருவாவார் என்ற நம்பிக்கை காரணமாகவும் அவரது பழைய குணாதிசயங்களை மறக்க தமிழகம் தயாராக இருந்தது. அந்த எண்ணத்தைத்தான், ஜெயலலிதா தனது ஒரே பட்டியலில் தகர்த்து எறிந்தார்....

Soniya & Raghul will not visit Thamizh nadu: சோனியா,இராகுல் தமிழகம் வருகை இல்லை

நல்லதுதான். மண்ணைக்  கவ்வும் பொழுது சொல்லிக் கொள்ளலாம் அல்லவா? இருவரும் வந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்று! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! ‌ மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சோனியா, ராகுல் தமிழகம் வருகை இல்லை


சென்னை, மார்ச் 24: தமிழகத்தில் தி.மு.க. அணிக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டுப் பிரசாரத்துக்கு வர மாட்டார்கள் என தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சட்டப் பேரவைத் தேர்தலில் தங்களுக்குக் கூடுதல் இடம் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு 63 தொகுதிகளைப் பெற்றது காங்கிரஸ்.  தொகுதிகளை அடையாளம் காண்பதிலும் ஓரிரு நாள்கள் தாமதம் ஏற்பட்டது.  இருந்தபோதிலும் வேட்புமனு தாக்கலுக்கு சில தினங்களுக்கு முன்பாகவே தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரத்துக்குச் சென்றுவிட்டார்.  கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் 2 நாள்கள் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசியுள்ளார்.  ஒவ்வொரு தேர்தலுக்கும் சோனியா காந்தியுடன் ஒரு முறை கூட்டுப் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுவது வழக்கமாக இருந்தது.  கடந்த மக்களவைத் தேர்தலில் இருவரும் ஒரே மேடையில் பேச வேண்டும் என்பதற்காக, பிரசாரம் முடியும் வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைகூட ஏற்பட்டது.  இருந்தாலும் இருவரும் கூட்டுப் பிரசாரம் என்பது நடந்து வந்தது.  இடையில் தமிழகத்துக்கு வரும் மத்திய அமைச்சர்கள், மரியாதை நிமித்தமாக முதல்வர் கருணாநிதியை சந்திப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.  ஆனால் இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்தபோதெல்லாம் கருணாநிதியை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. இது தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் பெற்றாக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ராகுல் காந்தியின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.  உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலத் தேர்தல்களின்போது ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கவும், காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெறவும் தேர்தல் பணியில் உற்சாகம் ஊட்ட ராகுல் காந்தி வருவார் என்ற எதிர்பார்ப்பு அந்தக் கட்சியினரிடம் இருந்தது.  ஆனால் இந்த முறை ராகுல் தமிழகம் வரப் போவதில்லை என்று தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்த சிறு விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால், ஓய்வு எடுக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு அவர் வர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேச சோனியா காந்தியும் தமிழகம் வர மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.  தொகுதிப் பங்கீடு பிரச்னை எழுந்தபோது, கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து ஏற்கெனவே தி.மு.க. தலைவர்களிடம் சோனியா கண்டனம் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.  மூத்த தலைவர் என்ற வகையில் கருணாநிதி மீது தமக்கு ஒரு மரியாதை உண்டு என்று சோனியா அடிக்கடி கூறுவது உண்டு. மேற்படி தீர்மானம் காரணமாக சோனியாவுக்கு ஏற்பட்ட வருத்தம், அதன்பிறகு தொகுதிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கலால் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கருணாநிதியை சந்திப்பதை சோனியா தவிர்க்கக் கூடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.  கேரள மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக சோனியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்துக்கு அவர் வரமாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.  காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் இல்லாமல், மாநிலத் தேர்தலை காங்கிரஸ் கட்சியினர் சந்திக்கும் சூழ்நிலை முதல்முறையாக இப்போதுதான் ஏற்பட்டிருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.       

திமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி !

 
i
 
2 Votes
Quantcast

Courtesy: Vinavu.com
திராவிட முதலாளிகள் கம்பெனி
படம் – தெஹல்கா
தி.மு.க, காங்கிரசு கூட்டணி முறியும் என்ற நாடகம் ஊடகங்களில் பரபரப்பாய் பேசப்பட்ட நேரம்

வியாழன், 24 மார்ச், 2011

dinamani cartoon about election promises

குடிமகனே.. நல்லா குடி மகனே என்னும் தலைப்பிலான கருத்தோவியத்திலும் இதே படம்தான் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அடிக்கடி நடைபெறுகிறது. சரி செய்க. அதுபோல் மேலும் சில குறைபாடுகள் உள்ளன. சரி செய்வதாகத் தெரிவித்தால் தெரிவிக்கின்றேன். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சொத்துப் பட்டியல்னு எதைக்குடுத்தாலும் வாங்கிடறதா?
சொத்துப் பட்டியல்னு எதைக்குடுத்தாலும் வாங்கிடறதா?


குடிமகனே.. நல்லா குடி மகனே

First Published : 23 Mar 2011 01:03:29 PM IST


குடிமகனே.. நல்லா குடி மகனே!

சுற்றுலா சென்றால் புத்துணர்வு ஏற்படும் : இறையன்பு இ.ஆ.ப.,, பேச்சு



சென்னை : ""சுற்றுலா செல்வதால், மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு ஏற்படும்,'' என, சென்னை பல்கலை கருத்தரங்கில் இறையன்பு பேசினார். சென்னை பல்கலையின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில், சுற்றுலா குறித்த கருத்தரங்கு நடந்தது. வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் வெங்கடராமன், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., பெங்களூர் நேஷனல் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பரினீதா பங்கேற்றனர்.

இதில், சுற்றுலாவின் இனிமைகள் என்ற தலைப்பில், இறையன்பு ஐ.ஏ.எஸ்., பேசியதாவது: இன்ப சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கலாசார சுற்றுலா, உணவு சுற்றுலா, வணிக சுற்றுலா, கல்வி சுற்றுலா என சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சுற்றுலா பயணத்தை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா வரும் பயணிகள் இன்பச் சுற்றுலா செல்லும் அளவுக்கு மாறுகின்றனர். ரஷ்யர்கள் தஞ்சைக்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கின்றனர். அங்குள்ள கோவில்களில் உள்ள ஓவியங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்கின்றனர். ஆனால், நம்மவர்கள் அதனருகில் நின்று புகைப்படம் எடுத்து சென்று விடுகின்றனர். சுற்றுலா என்பது மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் பயணம் செய்தால் தான் மன அழுத்தம் நீங்கி, புத்துணர்வு ஏற்படும். எனவே, அனைவரும் பயனுள்ள சுற்றுலா செல்லுங்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தது 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்ய வேண்டும். 10 ஆயிரம் புத்தகங்களை படிக்க வேண்டும். இவ்வாறு இறையன்பு பேசினார்.

Libya=Air attack increased: லிபியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் தீவிரம்!

இலிபியாவிற்கு இறையாண்மை இல்லையா? கொலைகாரச் சிங்களத்தின் இறையாண்மையைக் காப்பதாகக் கூச்சலிட்டவர்கள் இப்பொழுது ஏன் அமைதி காக்கிறார்கள்? கடாஃபியின் மீது தாக்குதல் நடத்துவது நோக்கம் இல்லை என்றால் அவரது மாளிகையின் மீதும் தங்க வாய்ப்புள்ள இடங்கள்மீதும் குண்டுகள் வீசிப்  பொது மக்களையும்  கொல்வது ஏன்? போரில்லா உலகிற்கு முயலாத பன்னாட்டு அவை (ஐ.நா.) இருந்து யாருக்கு என்ன நன்மை? வல்லரசுகளின் கைப்பாவையாகச் செயல்படும் அந்த அமைப்பைக் கலைத்துவிடுவதே நல்லது.வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

லிபியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் தீவிரம்!


திரிபோலி, மார்ச் 22: திரிபோலி உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் திங்கள்கிழமை இரவிலும் தாக்குதல் நடத்தின. இதில் கடாஃபியின் முக்கிய வளாகம், கடற்படைத் தளம் ஆகியவை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.  இதனால்,நாட்டில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  லிபியாவில் கிளர்ச்சியாளர் மீது சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் ராணுவம் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் பொருட்டு அங்கு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அண்மையில் நிறைவேற்றியது.  அதை அமல்படுத்தும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் லிபியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான எதிர்ப்பு வசதிகளையும், ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுவதுடன், ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.  ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் தலைநகர் திரிபோலிக்கு அருகே, கடாஃபி விருந்தினர்களைச் சந்திக்கும் இல்லம், அதை ஒட்டியிருந்த ராணுவக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை தாக்கப்பட்டன.  திங்கள்கிழமை இரவும் தாக்குதல்கள் தொடர்ந்தன. திரிபோலியில் உள்ள கடாபியின் பாப் அல்-அஸீஸô முதன்மை வளாகம் மீது ஏவுகணை ஒன்று விழுந்ததில் அந்தக் கட்டடம் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கிறது.  திரிபோலிக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள புசேட்டா கடற்படைத் தளமும் சேதமடைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அல் ஜஸீரா தொலைக்காட்சியும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.  ஆயிரம் கி.மீ.க்கு விமானங்கள் பறக்கத் தடை: கடாஃபியின் ஆதரவாளர்கள் நிறைந்த சுவாரா, சிர்டே,சேபா, அஜ்டாபியா ஆகிய நகரங்களில் கூட்டுப்படை விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் விமான, ஏவுகணை எதிர்ப்பு வசதிகள் நாசமடைந்தன. இந்தத் தாக்குதல் மூலம் லிபியாவில் சுமார் ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு விமானங்கள் பறக்க முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க படைத் தளபதி ஒருவர் கூறியிருக்கிறார்.  ராணுவத்துக்குப் பின்னடைவு:கடாஃபியின் முக்கியப் படைத்தளங்கள் தாக்குதலில் சேதமடைந்திருப்பதால், கிளர்ச்சியாளர்களின் மையமான பெங்காஸி நகரை நோக்கி ராணுவம் முன்னேறுவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் தாக்குதல் நடத்துவது ராணுவத்துக்கு இயலாத காரியம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது.  இதனிடையே, பழங்குடிகள் அதிகம் வசிக்கும் சேபா நகர் மீது கூட்டுப்படைகள் குண்டுகளை வீசியதில் பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டதாக லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.  திரிபோலிக்கு கிழக்கே 214 கி.மீ. தொலைவிலுள்ள மிஸ்ருதா நகரைக் கைப்பற்றுவதற்கு கடாஃபியின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக அல் ஜஸீரா கூறியிருக்கிறது. ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பே அந்த நகரைக் கைப்பற்றி முகாமிட்டிருப்பதாக கடாஃபி படையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.  கடாஃபி எங்கே? போர் நிலவரம் பற்றி ஜெர்மனியில் இருந்தபடியே பென்டகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்க படைப்பிரிவுத் தளபதி கார்ட்டர் ஹாம், "கடாஃபி, அவரது குடும்பத்தினர் இருக்கும் இடம்பற்றி போதுமான தகவல்கள் இல்லை. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கூட்டுப்படையின் நோக்கமும் அல்ல' என்று தெரிவித்தார்.  அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியது: லிபியாவில் குண்டுவீசிய அமெரிக்காவின் எஃப் - 15 ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விட்டதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எனினும் அதில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் தப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.

Traffic ramasamy contests in Thiyagaraya Nagarதியாகராய நகரில் டிராபிக் ராமசாமி போட்டி

பொதுநல வழக்கு என்ற போர்வையில் தமிழர்நலன்களுக்கு எதிராகச் செயல்படுபவர் இராமசாமி!  அவருக்கு வாக்கு அளித்து வீணடிக்க வேண்டுமா?  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புதன், 23 மார்ச், 2011

heroic death

வல்லரசுகளுக்கு எதிரான போரில் மட்டுமல்லாமல் நல்லரசு நடத்துவதிலும் வெற்றி காண வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /

வீரமரணம் அடையத் தயார்: கடாஃபி


திரிபோலி, மார்ச் 23- லிபியாவின் வெற்றிக்காக வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன் என்று அந்நாட்டு அதிபர் கடாஃபி (68) கூறியுள்ளார்.பொதுமக்களிடையே கடாஃபி உரையாற்றுவதை லிபியாவின் அரசுத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியது. அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்."மேற்கத்திய நாடுகளின் செயல் நியாயமற்றதாகும். எங்களுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கு வெற்றி நிச்சயம். லிபியாவுக்காக நான் வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன்." என்றார் கடாஃபி.லிபியாவுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடங்கிய பின்னர், முதன்முதலாக அவர் மக்களிடையே நேரில் தோன்றி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 41 ஆண்டுகளாக லிபியாவின் அதிபராக கடாஃபி இருந்து வருகிறார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரு முத்துக்குமார் அவர்களே! நல்லரசை நடத்தச் சொல்லுகிறேன். அவரை நீக்க வேண்டும்  எனில் அந்நாட்டு மக்கள்தான் முயன்று வெற்றி காண வேண்டும். ஈழத் தமிழர்கள்  கொன்றொழிக்கப்பட்டபோது தடுக்காமல் ஊக்குவித்த வல்லரசுகள்  இப்பொழுது மட்டும் மக்கள் நலனுக்காகப் போர் தொடுப்பதாகக் கூறுவது நம்பும்படியாகவா உள்ளது. மக்களுக்கு உதவ எண்ணினால் உணவின்றித் தவிக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு உணவு, மருந்து வழங்கலாமே! படைக்கருவிகள்கூடக் கொடுக்கலாம். ஆனால், நேரடியாகப் போரில் ஈடுபடுவது எந்த வகையில் முறையாகும்? ஓடி ஒளியாமல் களத்தில் நின்று வீரமரணத்திற்கு ஆயத்தமாக இருப்பதால் பாராட்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


pengaludan கும்மாளம் , ராஜபக்ஷேவுடன் நட்பு ....... இலங்கைக்கு பண உதவி .......... கடாபி நி பரலோகம் போகும் நாளை ஆவலுடன் எதிர் பாக்கும் ........ தமிழ்நாட்டு மதுரை தமிழன்
By Prabhakaran
3/23/2011 10:40:00 PM
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே, நல்லரசு இதுவரை அவர் நடத்தவில்லை; மக்கள் பொங்கி எழுந்ததே அதற்குச் சான்று!
By முத்துக்குமார்
3/23/2011 9:36:00 PM
அன்புள்ள...........மேதகு கடாபி, எதார்த்தமாக சித்தித்து, அந்த நாய்களுக்கு எதிராக உங்கள் நாட்டு மக்களை ஒரு நீண்ட போரட்டத்திற்கு தயார் படுத்துங்கள். அவர்களிடம் எதிரியின் நியாயத்தை தெரியபடுத்துங்கள். வாழ்த்துக்கள். மகோ.கண்ணன்
By மகோ.Kannan
3/23/2011 7:52:00 PM
வல்லரசுகளுக்கு எதிரான போ ரில் மட்டுமல்லாமல் நல்லரசு நடத்துவதிலும் வெற்றி காண வாழ்த்துகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2011 6:37:00 PM
No other go, has to face similar to Saddam. So long as Arab countries are not united and supporting blindly Nato, not only Libia where all oil rich wells are available, will be taken over by Nato. When Saddam was in trouble, Arab countries would have settled their own problems, how so ever but depending on US, have to face. More over, after disintegration of USSR,.US has become completely out of control, every where and anywhere stretch their hands. Arab countries have supported for UN resolution recently, now repent. Even now can raise alarm joining rest of world and give stiff resistance to Nato.
By V Gopalan
3/23/2011 4:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *