வெள்ளி, 9 செப்டம்பர், 2011

Photos of Ilakkuvanar ninaivarankam: பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க ஒளிப்படங்கள்

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஒளிப்படங்கள்

பதிவு செய்த நாள் : September 8, 2011


சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க ஒளிப்படங்கள்.




வியாழன், 8 செப்டம்பர், 2011

அறிஞர் அண்ணா ஆவி எழுதிய கடிதம்

அறிஞர் அண்ணா ஆவி எழுதிய கடிதம்

இது ஒரு கற்பனை கடிதம்
பாசமிகு தம்பியே நேசமிகுந்த தங்கையே

     ன்று நீங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் தலைவராக பவனி வர காரணமாக இருந்த காஞ்சி தலைவன் அண்ணாதுரை எழுதும் அன்பு கடிதம் நான் வாழ்ந்த காலத்தில் ஆயிரக்கணக்கான கடிதங்களை தம்பிகளுக்காக எழுதியுள்ளேன் அவைகளெல்லாம் தாழ்வுற்று கிடந்த எனது திராவிட வாரிசுகளை வீறு கொண்டு எழ கொடுக்கப்பட்ட கிரியா ஊக்கிகள் என்பேன் ஆனால் இந்த கடிதமோ அப்படி அல்ல வீதி தோறும் மேடை அமைத்து மேடை தோறும் கொள்கை முழங்கி வளர்க்கப்பட்ட என் கண்ணின் கருமணியான கழகம் பாழ்பட்டு கிடப்பதை பார்த்து பரிதவித்து எழுதும் பரிதாபக் கடிதம்

தம்பி திருக்குவளை தந்த சீர் மிகு வீரத்தமிழா! நமது கழகம் எதற்க்காக ஏன் துவங்கப் பட்டது என்பதை நீ மறந்திருக்க மாட்டாய் நமக்கெல்லாம் தலைவராக இருந்த தமிழ் இனத்தையே கை தூக்கி விடுவார் என்று நாம் நம்பிய பகுத்தறிவு பகலவன் அரும்பாடு பட்டு பகலிரவாய் விழித்திருந்து உழைத்த நம்மை எல்லாம் உதறி தள்ளிவிட்டு தனது சொந்தங்களுக்கு முதலிடம் கொடுத்ததனால் தான் திராவிட கழகத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற புது மரத்தை நட்டு வளர்க்க ஆரம்பித்தோம் அன்று முதல் என் காலம் வரையிலும் வாரிசு அரசியலின் வன்கொடுமையை எதிர்ப்பதே நமது நோக்கமாக கொண்டு பாடுபட்டோம் 


ஆனால் தம்பி நீ செய்தது என்ன ஆயிரமாயிரம் கழக உடன் பிறப்புகள் ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி வளர்த்த கழகத்தை கால் மணி நேரத்தில் உடைப்பது போல ராமச்சந்திரனை வெளியேற்றினாய்! அன்றே இந்த அண்ணனின் இதயம் இரண்டாக பிளந்து விட்டது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழாம் ஆண்டில் கழகம் கண்ட வெற்றி அன்பு தம்பி ராமச்சந்திரனை நம் ராதா துப்பாக்கியால் சுட்ட காட்சியை வண்ணக் காட்சியாக வடிவமைத்து சுவர்களெல்லாம் ஒட்டி சோக கீதம் பாடியதால் அன்றோ கிடைத்தது! அதனால்தான் நானே தம்பி ராமச்சந்திரன் முகத்தை காட்டினால் போதும் முப்பது லட்சம் ஓட்டுகள் கிடைக்குமென்று சொன்னேன் அதை மறந்து உன் நலனுக்காக கழகத்தை உடைத்தாய்

வாரிசு அரசியலே வேண்டாம் என்று வாய் வலிக்க பேசிய நீயே உன் திருகுமரனை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்று இளைஞர் அணி தலைவராக இளவரசு பட்டம் கட்டினாய்! அந்த வாரிசின் வளர்ச்சிக்கு வை கோபால்சாமி தடையாக இருப்பான் என்று கொலை பாதக பழி சூட்டி வெளியேற்றினாய்! மீண்டும் கள்ளம் இல்லாத கண்மணியான கழகத்தை சம்மட்டி கொண்டு அடித்து பிளந்து போட்டாய்! அத்தோடு உனது ஆசைக்கு எல்லை கட்டியிருக்கலாம் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளமே அணைக்குள் அடங்கும் போது உன் ஆசை வெள்ளம் அடங்காதா என்று காத்திருந்தேன் காத்திருந்த கண்களை கள்ளி செடிதான் குத்தி காயப்படுத்தியது 

 மகனுக்கு பின்னால் பேரனையும் கொண்டு வந்து மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தாய் கட்டிய மனைவிகள் கொடும் தேளாய் கொட்டியதனால் ஆசை மகளை கொல்லைப்புறம் வழியாக கொலு மண்டபம் அனுப்பினாய் மதுரைக்கு அனுப்பிய இன்னொரு மகனுக்கு மண்ணாளும் மந்திரி பதவி வேண்டி தள்ளாத வயதிலும் தலைநகர் நோக்கி பறந்தாய்! வென்றாய்! அன்பு குழந்தைகளை அரியணை ஏற்றி அழகுப்பார்க்கும் ஆசைக்கு கொடுத்த வேகத்தை பஞ்சை பராரிகளாய் பரிதவிக்கும் தமிழ் இனத்தை தலை நிமிர செய்வதில் காட்டியிருந்தால் இன்று அடுக்கடுக்கான கைதுகள் நடக்குமா? நடந்தாலும் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்குமா தமிழ் இனம்?

தம்பி நீ மறந்திருக்க மாட்டாய்! காங்கிரஸ்காரர்கள் காசு கொடுத்து ஒட்டுகளை வாங்கி விடுவார்களோ என்ற எண்ணத்தில் கழக தம்பிகளுக்கு நானொரு கடிதம் எழுதினேன் ஞாபகம் இருக்கிறதா? பெருமழையால் வீடிழந்து விம்மி கிடந்தோரை காண செல்கின்றேன் அவர்கள் வாழ்த்தொலி எழுப்பி அல்லவா வரவேற்கிறார்கள் அண்ணன் வந்தானாமே உங்கள் அண்ணன் என்ன கொண்டு தந்தான் உமது அல்லலை போக்கிட ஆளுக்கு ஆயிரம் என்றா அள்ளித் தந்தான் என்று கேலி மொழி பேசிட கூட சிலர் உளர் எனினும் அந்த உத்தமர்கள் நான் என்ன தந்தேன் என்றா கேட்டார்கள் அண்ணன் வந்தான் எமது அல்லலை கண்டான் ஆவன செய்திடுவான் என்றல்லவா நெஞ்சம் நெகிழ கூறுகின்றனர் 


 அத்தகை உள்ளன்பும் உணர்ச்சி பெருக்கும் நிரம்பியுள்ள நிலை கண்டேன் பெருமகிழ்வு கொண்டேன் ஆனால் மறு கணமோ கவலை என் மனதை குடயலாயிற்று இவ்வளவு உள்ளன்பையும் உணர்ச்சி பெருக்கையும் துச்சமென்று எண்ணியல்லவா ஆளவந்தார்கள் மீண்டும் நாங்களே அரியாசனம் அமர்வோம் என்று கூறுகின்றனர் அகந்தை அது என்போம் ஆயினும் எதனால் பிறந்தது அந்த அகந்தை இத்தனை தெளிவாக ஏழை எளியோர் பாட்டாளி விவசாயி கழக பற்றினை தெரிவிப்பதும் கண்டும் மீண்டும் தாமே தேர்தலில் வெற்றி பெற போவதாக எந்த தைரியத்தில் கூறுகின்றனர்? எழுச்சி இருக்கிறது நிரம்ப ஆனால் அது ஏழையரிடம் தான் ஏழையர் விலை கொடுத்து வாங்கிடத் தக்கவர்கள் உணர்ச்சி இருக்கிறது நிரம்ப ஆனால் அந்த உணர்ச்சியை மங்க செய்திடலாம் காசு வீசி இவ்விதமாக அன்றோ தம்பி காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர் ஏழையர் ஆகவே அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் பணத்தால் அடித்து வீழ்த்தி விடலாம் என்றல்லவா எண்ணுகின்றனர்

இப்படி நான் தம்பிக்கு எழுதிய கடிதம் ஒன்று உண்டு அன்று காங்கிரஸ்காரர்கள் கனவான்கள் ஆளவந்தார்கள் செய்ய துணிந்த பணம் கொடுத்து ஒட்டு வாங்கலாம் வெற்றி வாகை சூடலாம் என்று போட்ட கணக்கை ஐயோ! தம்பி இன்று நீயே செய்து என் நெஞ்சில் ஈட்டி பாய செய்து விட்டாயே! முறமெடுத்து புலி விரட்டிய தமிழச்சியை இலவசம் கொடுத்து மயக்கி விடலாம் என்று கனவு கண்டாயே! பணத்தை வாங்காத பண்பாளர்களை தடி கொண்டு மிரட்டி வணக்கிட செய்திடலாம் என்று திட்டம் தீட்டினாயே! இதற்க்காகவா இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினோம்? தனி நாடு கேட்டு தடியடி பட்டோம்? அப்பாவி இளைஞர்களை சிறைச்சாலைக்கு அனுப்பினோம்? 


 நீயும் நானும் அறியாசனத்தில் அமர எத்தனை இளம் நெஞ்சங்கள் உயிர் கொடுத்திருப்பார்கள்! கொழுந்து விட்டு எரியும் நெருப்பிற்கு உடல் கொடுத்திருப்பார்கள்! கடந்த காலத்தை எல்லாம் நடந்த வரலாறு என்று நினைக்காமல் உடைந்த பானையாக எண்ணி அன்றோ உன் குடும்பத்து வாரிசுகள் அனைத்தையும் கொலு மண்டபத்தில் அலங்கரித்து அணிவகுக்க செய்தாய்! செம்மொழி மாநாட்டில் செப்பத் தெரியாத பேதைகளை பேச வைத்து செம்மாந்திருந்தாய்! அரும்பாடு பட்டு நான் கட்டிய கழகம் என்ற மாளிகையை கோடாலி கொண்டு பிளந்து போட்டாயே! இது நியாயமா? தம்பி இது தர்மமா?

தோளோடு தோள் நின்ற என் தோழனான கருணாநிதியை தோல்வியை சுவைக்க செய்து மருண்டு விழ செய்து விட்டு தமிழ் மண்ணை ஆளவந்திருக்கும் சீமாட்டியே! நான் மேடையேறி விரல் நீட்டி பேசும் போது தாயின் விரல் பிடித்து நடந்த பெருமாட்டியே! உன்னை நினைத்தும் என் உள்ளம் பூரிப்பால் பொங்கி மகிழ வில்லை ஓடுகின்ற திருடனில் ஓரளவு உத்தமன் யாரென்று அறிந்து உட்கார வைத்து போல் தான் நீயும் தமிழ் மக்களால் உட்கார வைக்கப் பட்டுள்ளாய்! இந்த ரகசியம் எனக்கு தெரியும் ஊரில் உள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் தெரியும் ஆனால் உனக்கு தெரியுமா என் தோழியே? 


நீ நினைக்கிறாய் நமது ஆளும் திறன் கண்டு அறிவு பலம் கண்டு ஆற்றலின் வகை கண்டு ஆள அழைத்துள்ளார்கள் தமிழ் நாட்டு வாக்காளர்கள் என்று நீ நினைப்பது தவறு தங்கையே தவறு! காலுக்கு போடுகின்ற செருப்பிலும் கணக்கற்ற வகையை நீ வைத்திருந்ததையும் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாமல் தமிழகத்து வீதிகளில் ஆயிரம் முதிர்கன்னிகள் வீட்டுச் சிறையில் அடைபட்டு கிடக்க உன் வீட்டு தண்ணீர் குழாயோ சொக்கத் தங்கத்தில் மின்னியதையும் மானம் மறைக்க அரை முழ துணி இல்லாத பல நூறு மனிதர்கள் வெயிலிலும் மழையிலும் சுருண்டு கிடக்க நீயோ மணிக்கொரு ஆடை கட்டி அழகு பார்க்கும் அளவிற்கு காஞ்சிபுரம் பட்டும் காசி பட்டும் அடுக்கடுக்காய் கொட்டி வைத்ததையும் என் இனிய தமிழ் மக்கள் இன்னும் மறக்க வில்லை

முத்து வேலர் பெற்ற என் மூத்த தம்பி நாட்டாச்சி செய்யும் நேரத்தில் அடுப்படியில் ஒழிந்து கிடந்த தனது குஞ்சு குருமான்களை காட்டாச்சி செய்ய கட்டவிழ்த்து விட்டது போல் மன்னார்குடியின் உன் மனம் கவர்ந்த தோழியின் குடும்பத்தை தாலாட்டி சீராட்டியதால் தமிழ் நாட்டு மூலை முடுக்கெல்லாம் வெறியாட்டம் போட செய்ததை மறந்து போவதற்கு என் மறத் தமிழன் மண்டையில் சரக்கில்லாதவனா? எல்லாம் அவன் நினைவில் பச்சை மரத்து ஆணியாய் பதிந்தே கிடக்கிறது ஆனாலும் உன்னை ஆள அழைத்ததற்கு ஆள் வேறு யாரும் இல்லை என்பதே ஆகும் என்பதை மறந்து விடாதே! 


மக்கள் வரி பணத்தை வாரி கொட்டி கட்டிய புதிய சட்டசபை வளாகம் மக்கள் பிரதிநிதிகள் உட்கார்ந்து பணியாற்ற உதவாது உயிருக்கு உத்தரவாதம் தராது என்று இழுத்து மூடினாய்! மனதிற்கு சங்கடம் என்றாலும் சமாளித்துக் கொண்டார்கள் தங்க தமிழர்கள் ஆனால் அடுத்தக் கணமே நீ சட்ட சபைக்காக கட்டிய இடத்தை மருத்துவ மனையாக்க போவதாக அறிவித்தாய் ஒட்டு வாங்கி வெற்றி பெற்ற உறுப்பினர்களின் உயிருக்கு உத்திரவாதம் தராத கட்டிடம் ஒட்டு போட்டு உழைத்து ஓடாய் தேய்ந்து போன ஏழை தமிழனின் உயிருக்கு மட்டும் பாதுகாப்பு தருமோ! அல்லது தமிழனின் உயிர் என்ன உப்பு போட்டு ஊறவைத்த ஊறுகாயா இலையின் ஓரத்தில் வைத்து தூக்கி எரிய? அல்லது ஏழை தானே செத்தால் என்ன என்று கருதுகிறாயா செல்வ மகளே!

சமசீர் கல்வி என்ற அரசியல் சித்து விளையாட்டில் ஒன்றுமே அறியாத பிஞ்சுகளாம் பிள்ளை குட்டிகளை அறுவது நாட்கள் கல்வி கற்க முடியாமல் கண்களை கட்டி விட்டாயே அது நியாயமா தகாத பாடங்கள் தந்த புத்தகத்தில் இருக்கிறது என்றால் உதாவாத பக்கங்களை உதறிவிட்டு நடத்தி இருக்கலாமே பாடங்களை ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்தபின் நீதி மன்றமே நீதி இல்லை இது என்று சொன்ன பிறகு அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் என்ன? நீ சமசீர் கல்வியில் காட்டியது கல்வி மீதுள்ள கரிசனம் அல்ல கருணாநிதியின் மீதுள்ள எரிச்சலின் தரிசனமே ஆகும்!


தனக்கென்று உள்ள விருப்பு வெறுப்புகளை பள்ளம் பறித்து புதைத்து விட்டு ஏற வேண்டிய இடமே நாட்டு சிம்மாசனம் தனது அழுக்குகளை சுமந்து கொண்டு ஆட்சி செய்ய நினைப்பவன் விரைவில் செல்வான் மண்ணாசனம் இந்த உண்மையை மறந்தவன் மறைப்பவன் எல்லோருக்கும் நிரந்தர இடம் இருட்டான கல்லாசனம்

ஸ்ரீ ரங்கத்து ஜெயராமன் மகளுக்கும் திருக்குவளை முத்துவேலர் மகனுக்கும் காஞ்சிபுரத்து கற்றறிந்த தலைவன் சொல்ல வேண்டிய தகவல் ஒன்றுள்ளது உடனடியாக நூலகம் போங்கள் தம்பிக்கு அண்ணாவின் கடிதம் என்ற நூலின் இருபத்தி ஒன்றாம் பாகத்தில் இருபத்தி ஒன்பதாம் பக்கத்தை எடுத்து இரண்டாவது பாராவை படித்து பாருங்கள் அதில்

பாம்பு புற்றுக்கு பால் வார்க்கும் தர்மமும் எறும்புகளுக்கு அரிசி போடும் தர்மமும் காக்கை கழுகுகளுக்கு தின்பண்டம் போடும் தர்மமும் செய்திடுவதிலே விருப்பமும் பழக்கமும் கொண்ட முதலாளிகள் அதிக விலைக்கு பண்டங்களை விற்பதற்கோ கள்ள மார்க்கட் நடத்துவதற்கோ பொய் கணக்கு எழுதுவதற்கோ கடன் பட்டவன் கதறிடும் போது அந்த கண்ணீரை கண்டு மனதை கல்லாக்கி கொள்வதற்கோ துளியும் தயங்குவதில்லை என்று எழுதி வைத்திருக்கிறேன் 


அந்த வாசகம் நான் அப்போது காங்கிரஸ் காரர்களை மனதில் வைத்து எழுதியது என்றாலும் இன்றைக்கு நிஜமாக முழுவதும் பொருந்தி வருவது உங்கள் இருவருக்கும் தான்

உங்களின் திருநாவுகள் வறுமையின் கோரத்தை பற்றி பேசுகிறதே தவிர உங்கள் கரங்கள் ஏழ்மையை ஒழிப்பதற்கான சாரத்தை தேட வில்லை உங்கள் நலன்தான் அல்ல அல்ல உங்களது குடும்பம் மற்றும் தோழியின் குடும்ப நலன் மட்டும் தான் உங்கள் கண்களில் தென்படுகிறது

காக்கும் தெய்வமாக உங்களை மட்டுமே நம்பி இருக்கும் ஓட்டாண்டி தமிழனின் நலன் என்பதை பற்றி உங்கள் மனது சிந்திக்க கூட மறுக்கிறது தமிழனை ஆட்டுக் கூட்டமாக ஓட்டுப் போடும் இயந்திரமாக பார்க்கிறீர்களே தவிர சதையும் எலும்பும் இதயமும் கொண்ட உணர்வு மனிதன் என்று நீங்கள் பார்க்கவே இல்லை

நிலைமை இப்படியே தொடர்ந்தால் உங்களை தாங்கி பிடிக்க குப்பை மேடுகள் மட்டும் தான் தயராக இருக்கும் மக்களின் இதய மேடுகள் கல்லாகி போகும் கடந்த காலத்தில் நடந்த தவறுகளை கனவாக நினைத்து மறந்து விட்டு இன்று இப்போது தான் புதிதாக பிறந்தோம் மக்களுக்கு நம்மால் இயன்ற நற்பணியை புரிவோம் என்று உழைக்க வாருங்கள் இந்த அழைப்பை ஏற்க மறுத்தால் தயங்கினால் போகி அன்று பற்ற வைக்கும் நெருப்பு குப்பைகளை எரிப்பது போல் மக்களின் இதய நெருப்பு உங்கள் தொப்பைகளை எரித்து விடும் ஜாக்கிரதை!



இப்படிக்கு      
அறிஞர் அண்ணா



எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை:வைகோ



தூத்துக்குடி:""உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை,'' என, அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளத்தில், கட்சி நிர்வாகி இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்ட வைகோ கூறியதாவது: நெல்லையில் ம.தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின் 103வது பிறந்த நாள் விழா மாநாடு, செப்.,15ம் தேதி நடக்கிறது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, பார்லியில் முதல் குரல்கொடுத்தது நான் தான்.உலகில் ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அணு உலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள், மீனவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ம.தி.மு.க., ஆதரவு தெரிவிக்கிறது. இந்த அணுமின் நிலையத்தில் சிறு அளவு ஆபத்து ஏற்பட்டாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை. எனவே, உள்ளாட்சியில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை தர, எங்கள் கட்சியினரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் போட்டி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. டில்லி ஐகோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு பலர் பலியாகியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே, எங்களது கட்சியின் நிலைப்பாடு.இவ்வாறு வைகோ கூறினார்.

S.Samy should be hanged: சுப்பிரமணிய சுவாமி ,எம்.கே. நாரயணன்,கார்த்திகேயன் முதலில் தூக்கிலிடப்படவேண்டும்- திருச்சி வேலுசாமிஆவேசம்.(Video in)

சுபிரமனிய சுவாமி ,எம்.கே. நாரயணன்,கார்த்திகேயன் முதலில் தூக்கிலிட வேண்டும்- திருச்சி வேலுசாமிஆவேசம்.(Video in)

ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றால்  முதலில் சுபிரமனிய சுவாமி , எம்.கே. நாரயணன், கார்த்திகேயன் ஆகியோரை தூக்கிலிட வேண்டும்.முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நிரபராதிகளை அல்ல .
ராஜீவ் காந்தி படுகொலைக் தீர்ப்பு  நடுநிலையான தீர்ப்பு இலை . இந்த நாட்டில் 100க்கு மேற்பட்ட ராஜீவ் காந்தி படுகொலை குற்றவாளிகள் நல்ல வாழ்கைவாழ்கிறார்கள் .ஆனால் எந்த தப்பும் செய்யாத 3  தமிழ் உயிர்கள் நிரபராதிகள். ஜெயலிதா நினைத்தால் தனது அதிகாரத்தை பயன் படுத்தி  3  தமிழ் உயிர்களை காப்பாற்றலாம். இனமானம் இல்லாத கருணாநிதி பணம் தான் முக்கியம் என்று தமிழ்  இனத்தையே அழிக்க துணை போனவர்
எல்லா பிரச்சனைகளையும் மூல்கடிக்கவே  காங்கிரசின் கபட நாடகம் அன்னாஹசாரேரின் உண்ணவிரத போராட்டம் . இது காங்கிரசின் திட்ட மிட்ட சதி . மக்களை திசை திருப்பிகிறது  காங்கிரஸ் . மேலும் பல தகவல்கள் .
நன்றி : குமுதம்
குறிப்பு : எமது தளத்தில் இருந்து இந்த காணொளியை பதிவிறக்கம் செய்யும் இணையங்கள் உங்கள் இணைய சின்னங்களை அடித்து  பிரசுரிக்காதீர்கள்.
Bookmark and Share

About the Author

has written 4796 stories on this site.

One Comment on “சுபிரமனிய சுவாமி ,எம்.கே. நாரயணன்,கார்த்திகேயன் முதலில் தூக்கிலிட வேண்டும்- திருச்சி வேலுசாமிஆவேசம்.(Video in)”

Kartheesurya wrote on 30 August, 2011, 18:10Why did he leave Shivsankar Menon?. Time and history never forgive Narayanan,Shivsankar Menon,karunanidhi and the congress party. They deceived and mocked tamil race. They should be held responsible for the killing of several thousand tamils. They should remember Karunakara Thondaiman who crushed Kalinga people for their wrong doings. History will repeat. Tamil race never bow to anyone.

இலங்கையுடன் மின் ஒப்பந்தம்:இராமதாசு கண்டனம்

இலங்கையுடன் மின் ஒப்பந்தம்: 
ராமதாஸ் கண்டனம்

First Published : 07 Sep 2011 04:21:27 PM IST


சென்னை, செப்.7: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவமதிக்கும்வகையில் இலங்கை அரசுடன் இந்தியா மிகப்பெரிய பொருளாதார உடன்பாட்டை செய்துகொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை அவமதிக்கும்வகையில் இலங்கை அரசுடன் பொருளாதார உடன்பாட்டை இந்தியா செய்து கொண்டுள்ளது.இலங்கை கிழக்கு மாநிலத்தில் திரிகோணமலைக்கு அருகில் உள்ள சம்பூர் என்ற இடத்தில் 3150 கோடி செலவில் 500 மெகாவாட் திறன்கொண்ட மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக இந்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல்மின் கழகமும், இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் மின்வாரியமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.தமிழக சட்டப்பேரவை தீர்மீனத்தை மீறி இலங்கை அரசுடன் இந்தியா செய்துகொண்டுள்ள மின்திட்ட ஒப்பந்தம் ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பி்ட்டுள்ளார்.

புதன், 7 செப்டம்பர், 2011

Perukanviko in World Poets Conference: அமெரிக்காவில் 31ஆம் உலகக்கவிஞர்கள் மாநாடு பெருங்கவிக்கோ பங்கேற்றார்

அமெரிக்காவில் 31ம் உலகக்கவிஞர்கள் மாநாடு

பதிவு செய்த நாள் : September 7, 2011
கருத்துகள் (0) 5 views
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)


அமெரிக்காவில் 31ம் உலகக்கவிஞர்கள் மாநாடு
பெருங்கவிக்கோ பங்கேற்றார்
உலகளாவிய பன்மொழிக் கவிஞர்களின் 31ம் மாநாடு அமெரிக்காவின் விசுகான்சின் மாகாணத்தின் மிச்சிகன் ஏரிக்கரையில் உள்ள நகரமான கெனொசாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராக மேரி அன் என்ற அமெரிக்கப் பெண்கவிஞர் இருந்து தம் குழுவினருடன் சிறப்பாகக் கவிஞர் மாநாட்டை நடத்தினார்.

31 – ஆம் உலகக்கவிஞரகள் மாநாடு கெனொசாவில் 28-8-2011 முதல் 3-9-2011 வரை நடைபெற்றது. 27ம் நாள் வந்திருந்த உலகக்கவிஞர்கள் தங்கள் தங்கள் பெயர்களை உரியகட்டணத்தைச் செலுத்திப் பேராளர்களாகப் பதிவு செய்துகொண்டனர். அன்றுமாலை கெனொசா உணவகத்தில் அமெரிக்க அவாய்த்தீவின் பாராம்பரிய நடனமான ஊலா நடனத் துடன் ஒரு அறிமுக விருந்தும் – பன்னாட்டுக் கவிஞர்கள் சந்திப்பும் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது உலக நாட்டுக்கவிஞர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவித் தங்கள் சகோதரபாசத்தைப் புதுப்பித்துக் கொண்டனர்.
இந்த உலகக்கவிஞர் மாநாட்டின் கருப்பொருள் “உலக அமைதி- மனிதநேயம் உலகமக்கள் ஒருமைப்பாடு”  என்ற பொருள் பற்றியதாகும். இக்கருத்துக்கள் பற்றிய இசைப்பாடல்கள் இசைக்கப்பட்டன,

29-8-2011 ஆம்நாள் கெனொசாவின் கார்ட்கெச் கல்லூரியில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்தமாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, சீனா, ஜப்பான், ஆஸ்திரியா போன்ற 21 நாடுகளிலிருந்து நூற்றுகும் மேற்பட்ட பன்மொழிக் கவிஞர்கள் பங்கேற்றனர். இந்த விழாத் தொடக்கத்தில் அனைத்துநாட்டுக் கொடிகளையும் அந்தந்த நாட்டுக்கவிஞர்கள் முன்நின்று அவர்நாட்டுக் கொடிக்கும்,  அனைத்து மக்களுக்கும் மரியாதை செய்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்திய தேசக்கொடியை நம் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழருக்கான பாரம்பரியப்பண்பாட்டு உடைஅணிந்து இந்தியக் கொடியைக் கம்பீரமாகப் பிடித்து பன்னாட்டுக் கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டது மாநாட்டின் கண்கவர் அம்சமாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் அமைந்தது.
இந்தத் தொடக்க விழாவிற்கு கெனொசா மேயர் கீத்போமேன் மேடையில் அமர்ந்து சுருக்கமாக உரையாற்றினார்.

இந்த மாநாட்டிற்குத் தமிழ்நாட்டிலிருந்து,  பெருங்கவிக்கோ முனைவர் வா.மு.சேதுராமன்,  சகடா அறிவியல் கல்லூரித் தலைவர் முனைவர் சேதுகுமணன், சென்னை வழக்கறிஞர் முனைவர் சந்திரசேகர்,  அமெரிக்க டென்னிசி மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். திருமிகு சேதுகுமணன் தமிழகத்திலிருந்து கொண்டு வந்த பொன்னாடைகள், பரிசுப் பொருள்களை பெருங்கவிக்கோ மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அணிவித்து வழங்கியது இந்திய, தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்துவதாக இருந்தது.
பின்பு அனைத்துநாட்டு மொழிக்கவிஞர்களும் தங்கள் தங்கள் நாட்டுமொழிக் கவிதைகளை வழங்கினர். இசுபாசினியல் மொழியும் சீனமொழியும் பேசும் அனைத்து நாட்டுக் கவிஞர்கள் பலர் வந்திருந்தனர். பெருங்கவிக்கோவின் “உலகம் ஒரு பூந்தோட்டம்”  என்ற கவிதை ஓசை நயத்துடன் படித்தார். தமிழ் மணிகண்டன்,  முனைவர் மகாலட்சுமியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பெருங்கவிக்கோவின் கவிதையை கவிஅரசன் ஆங்கிலத்தில் படித்து உலகக் கவிஞர்களுக்கு கவிதையின் சாரத்தையும் அளித்தார். மொழியாக்கத்தைவிட , பெருங்கவிக்கோ சந்தத்துடன் பாடிய கவிதையை நயத்துடன் உலகக் கவிஞர்கள் இரசித்தனர்.  ஆசுதிரிய நாட்டுக் கவிஞர்  பெருங்கவிக்கோ தமிழில் ஓசைநயத்துடன் பாடியவாறு ஏன் மொழியாக்கக் கவிதை ஓசை நயத்துடன் பாட இயலவில்லை என்பது குறித்துக் கேள்வி எழுப்பினார். கவிஅரசன் உலகக் கவிஞர்களுக்கு சந்தம்-சிந்துவுடன் ஒவ்வொரு சீரும் தேமா-புளிமா, கருவிளம், கூவிளம் எனற அளவு சிதையாமல் கவிதை எழுதும்போது இந்த ஓசை நயங்கள் இயற்கையாகவே கவிதையுடன் இணையும் பாங்கை விளக்கினார். மூத்த தமிழின் இலக்கணத்தையும் அந்த அளவு முறைகளையும் பாங்குடன் உலகக்கவிஞர்கள் கேட்டறிந்து கொண்டனர். இந்தக் கவிதையின் மையக்கருத்தாக எல்லைக்கோடில்லா உலகம் உருவாக வேண்டும் என்பதே. தமிழ்ச்சந்த இனிமையையும், கவிதைப் பொருளையும் உலகக் கவிஞர் சுவைத்தனர். இதுநடக்குமா? எல்லைக் கோடில்லாத உலகம் உருவாகுமா என்று கேட்டார். “இது கவிஞர் கனவு” என்றார் வா.மு.சே. மாலை நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்தது. சேதுகுமணன் அவர்கள் சிறப்பாக இந்தக் கவிதை நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

மறுநாள் 30-8-2011 அன்று கெனொசா அமெரிக்கசிவில் போர் அருங்காட்சியக வெளிஅரங்கில் அமெரிக்கக் கவிஞர் வில்லியம்மார் தலைமையில் நடைபெற்ற ஆங்கிலக் கவிதை நிகழ்வில் கவிஅரசன் ஈழ இறுதிப்போரின் அவலங்கள் குறித்து எழுதிய கவிதையைப்படித்து அனைத்துலகக் கவிஞர்களின் கவனத்தை ஈழத்தின்பால் ஈர்த்தார். ஈழத்தமிழர் இன்னல் பற்றிய இந்த ஆங்கிலக் கவிதை மிகவும் அழுத்தமாகவும், உறுதியாகவும் அமைந்ததை பலகவிஞர்கள் பாராட்டினர். வருத்தத்துடன் ஈழவிடுதலைக்கும் மறுவாழ்விற்கும் தங்களால் ஆன விழிப்புணர்வுப் பணிகளை தங்கள் நாடுகளில் செய்வோம் என்றும் உறுதியளித்தனர். பெருங்கவிக்கோவின் பேரன் கவின்சாதுகுரு கவிஅரசன் எழுதிய “எங்கிருந்து நான்”  என்ற ஆங்கிலக் கவிதையை உலகக் கவிஞர்களுக்கு வாசித்தார். பெருங்கவிக்கோவின் கவிதைப் பரம்பரையின் வெளியீடாகவும் அமைந்தது இந்நிகழ்வு.
முனைவர் சேதுகுமணன், முனைவர் சந்திரசேகருடன் பன்னாட்டுக் கவிஞர்கள் பலரும் தங்கள் கவிதையைப் பகிர்ந்து கொண்டனர். சந்திரசேகரின் கருத்து வளத்தையும், சேதுகுமணினின் கவிதை வளத்தையும் பன்னாட்டுக் கவிஞர்கள் இரசித்தனர்.
மாலையில் மிச்சிகன் ஏரிக்கரையில் மேடை போட்டு கவிஅரங்கம் நடந்தது. பலநாட்டுக் கவிஞர்கள் பாடினர். அந்தமேடை அருகில் பிரான்சுப் பெண்கவிஞர் மேரியா இராபர்ட் மனிதநேயத்தை வற்புறுத்தி பலரும் வியக்கும் வண்ணம் நாட்டியம் ஆடிச் சிறப்பித்தார்.


31-8-2011 ஆம்நாள் பன்னாட்டுக் கவிஞர்கள் மிச்சிகன் ஏரிக்கரையில் கூடினர். அமெரிக்கக் கவிஞர்கள் இந்நிகழ்வு அமைந்தது. அப்போது கவிஅரசன், சேதுகுமணன், சந்திரசேகர் ஆகியோரோடு பெருங்கவிக்கோ அமர்ந்திருந்த போது ஒரு அமெரிக்கர் ஓடோடி வந்து பெருங்கவிக்கோ கையைப் பற்றிக்கொண்டு வணக்கம், வாருங்கள் நன்றாயிருக்கிறீர்களா என்றார். அவர்பெயர் இராபர்ட். எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடினார். நான் தமிழ்நாட்டில் ஊட்டியில் பணி ஆற்றினேன். தமிழ் நன்றாகத் தெரியும். இன்று கெனொசா நியூசு  செய்தித்தாளில் உங்களைப் பற்றிய செய்திகண்டு தங்களைச் சந்திக்க வந்தேன் என்றார்.

உடனே கவிஅரசன் கெனொசா நியூசு செய்தித்தாளை வாங்கிப்படித்தார். அதில்மிகச் சிறப்பாக பெருங்கவிக்கோ முனைவர் வா.மு.சேதுராமன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு மற்ற கவிஞர்களோடும், மேயர், தலைவர் உள்ளிட்ட பலரோடு படம் வெளிவந்திருந்தது, இந்தியாவிற்குப் பெருமை அளிப்பதாக அமைந்தது.
கொலம்பசு அமெரிக்கா வரும்போது பயன்படுத்திய 15ம் நூற்றாண்டுக் கப்பல்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட கொலம்பசுக் கப்பலைக் கவிஞர்கள்கண்டு வியந்தனர்.
உலகக் கவிஞர்கள் மத்தியில் இந்திய நாட்டுக்கும், தமிழுக்கும் மிகப்பெரும் சிறப்பைத் தமிழ்க்கவிஞர்கள் உண்டாக்கினர். இந்த உலகக்கவிஞர்கள் சங்கத்தை (W.C.P.) முதன் முதலில் உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் ஒருதமிழர். அவர்தான் கவிஞானி. கிருட்ணாசீனிவாசு. இவர்சாதி, மதம்,  நாடு, மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தன்னோடு நான்கு நாட்டுப் பெருங்கவிஞர்களை இணைத்துக் கொண்டு இந்த உலகக்கவிஞர் சங்கத்தை உருவாக்கினார். ஒரு தமிழ்க் கவிஞரை உலகக் கவிஞர்களுக்கு அறிமுகம் செய்வேன் எனச் சபதம்பூண்டு அமெரிக்க சான்பிரான்சிசுகோவில் நடந்த 5ஆம் உலகக் கவிஞர் மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார் . பின்னர் உரோசிமேரி வில்கின்சன் என்ற அமெரிக்கப் பெண்கவிஞர் பலமாநாடுகளைச் சிறப்பாக நடத்தினார். இப்போது 31ம் மாநாடு கெனொசாவில் நடந்துள்ளது.
பெருங்கவிக்கோ 5ஆம் உலகக்கவிஞர்கள் மாநாட்டிலிருந்து எகிப்து, துருக்கி, உரோமேனியா, இத்தாலி. பிரான்சு, செக்கோசிலோவோகியா, சீனா, மங்கோலியா, மெக்சிகோ போன்ற பல நாடுகளில் நடந்த இருபது உலகக்கவிஞர் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ், தமிழர் இந்திய நாட்டின் பெருமையை பதிவு செய்திருக்கிறார்.
இந்த 31ம் உலகக் கவிஞர்மாநாடு மெச்சிக்கன் ஏரிக்கரையில் நடந்தபோது இந்தியாவின் பெருங்கவிக்கோ முனைவர் வா.மு.சேதுராமன் வந்த கலந்துசிறப்பித்துள்ளார் என்ற செய்தியைப் பதிப்பித்து சிறப்பித்தது. அந்தச் செய்தியை கண்டு மகிழ்ந்த கெனொசா வாழ் தமிழ் அறிந்த அமெரிக்கர் ஆர்வத்துடன், பெருமையுடன் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தியது உலகக்கவிஞர்களை வியக்க வைத்தது. இந்தியாவிற்குப் பெருமை சேர்வதாக அமைந்தது. மாநாட்டுத் தலைவர் மேரிஆன் இதைக்குறிப்பிட்டு பெருங்கவிக்கோவைப் பெருமைப்படுத்தினார். பெருங்கவிக்கோ எழுந்து நின்று வணங்கி அனைவர் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்.

1-9-2011 முதல் 4-9-2011 வரை சுற்றுலாவிற்குப் பலகவிஞர்கள் சென்றனர். இந்தச் சுற்றுலா மின்னிசோட்டா,  மினியா போலிசில் முடிவடைந்த பின் உலகக் கவிஞர் தங்கள் தாய்நாடு திரும்புகின்றனர். ஈழத்தமிழர் இன்னல் தீர்க்கவேண்டிப் பாரதப் பிரதமரைச் சந்தித்து பட்டினிப் போராட்டம் நடத்தியபின் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றார்.
மொத்தத்தில் இம்மாநாடு வா.மு.சே. தொடர்ந்து செல்லும் கவிதைப் பயணத்தில் எல்லைக்கோடு காணும் நல்ல பயணமாக அமைந்தது.

C,M,Shoul follow amerikan states: அமெரிக்க மாநிலங்களை முதல்வர் பின்பற்றலாமே?

அமெரிக்க மாநிலங்களை முதல்வர் பின்பற்றலாமே?

இந்தியாவில் “யூனியன் பிரதேசங்கள்” எனப்படும் மத்திய அரசின் நேரடி பகுதிகள் தவிர,33 மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோல அமெரிக்காவில் மொத்தம் ஐம்பது { 50 } மாநிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள மத்திய அரசும் இந்திய மத்திய அரசைப் போலவே ” மரணதண்டனையை” தனது சட்டத்தில் இன்னமும் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள மாநிலங்கள் பல துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். அதாவது 13 மாநிலங்கள் ” மரண தண்டனையை” தங்கள் மாநிலங்களில் “ரத்து” செய்துள்ளன. அங்குள்ள 50 மாநிலங்களில் 13 மாநிலங்கள் துணிச்சலாக இந்த காரியத்தை செய்துள்ளன.அவையாவன: அலாஸ்கா, ஹவாய், லோவா, மைனே, மசாசுசெட்ஸ், மிசிகன், மின்னேசோட்டா, நியு ஜெர்சி, வடக்கு டகோடா, ரோடே தீவு, வேர்மோன்ட், மேற்கு வெர்ஜினியா, விஸ்கான்சின், ஆகியவையே அந்த பதின்மூன்று மாநிலங்கள். அது தவிர, “நெபராஸ்கா” அன்ர மாநிலத்தில் உள்ள “உச்சநீதிமன்றம்” மரணதண்டனைகளை “மின்சாரம் பாய்ச்சி” நடத்துவது, ” கொடுமையானதும், மனிதத்தன்மை அற்றதும்” என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால் அந்த மாநிலத்திலும் மரணதண்டனை செயல்பாட்டில் இல்லை.
இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற “அரசு கட்டமைப்போ” அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் “அமைச்சரவைகள்” இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, “மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக” குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.
– டி.எஸ்.எஸ்.மணி
Short URL: http://meenakam.com/?p=33988

Muuvar Uyir: மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம் – வித்யாசாகர்

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம் – வித்யாசாகர்!

மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே.
தவறுகள் எல்லோரிடத்திலும் நிகழ்கிறது. சிலது தவறுகளாக காட்டப் பட்டும் சிலது வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டும் போக’ எங்கோ யாரோ ஒரு சிலரைமட்டும் குற்றவாளி என்ற பெயரில் தண்டிப்பதென்பது சரிதானா’ என்று முற்றிலும் ஆராய இருக்கையில், ஒரு குற்றத்தின் காரணமாக ஒருவரை மட்டும் கொல்லும் பின்னணியில்’ நாம் சமூகக்குற்றம் கண்டு தட்டிக்கேட்காத பங்கும், அவனவன் சுயநல காரணத்திற்கென அவனவன் செய்த பங்கிற்கு யாரோ ஒருவன் தண்டிக்கப் படுவதும், முற்றிலும் உயிர்பிக்க முடியாத மனிதன் ஒருவனால் ஒரு உயிர் கண்ணெதிரே வீழ்த்தப் படுவதும் சம்மதிக்கத் தக்கதா?
மரணம் நிகழ்ந்த வீடுகளில், நிலையில் கிடத்தப் பட்ட உயிரற்ற உடலின் உயிர் போகும் நேரத்து வலி ஒவ்வொரு முறை அவரைப் பற்றி எண்ணும் நேரமும் வாழ்வோருக்கு உண்டென்பதை’ உறவுகளைப் பிரிந்து அழும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் எச்சரித்தே வழிகிறது. மரணம் எங்கு நடந்தாலும் தடுக்கும் மனமொன்று எல்லோருக்கும் வேண்டுமெனும் எண்ணம்’ அந்த வலி தெரிந்தோருக்கே வருமென்பது ஞானமல்ல, நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
ஒரு கண்ணைப் பிடுங்கினால் இரு கண்ணைப் பறிப்பதென்பது மிருக குணம், மன்னிப்பதே மனிதரின் மாண்பு. பிறகு, நீ உன் சகோதரனைக் கொன்றவனை சும்மா விடுவாயா’ என்று கேட்கலாம். விடமாட்டேன், தண்டிப்பேன், அவன் தவறை அவன் உணருமளவிற்குத் தண்டிப்பேன். ஆயினும், அதை உணர்த்த துடிக்கும்’ என் இழப்பின் பெருவலிக்கு என் கோபம் ஒரு ஆயுதமெனில், பின்விளைவுகள் பற்றிய அறிவும், மனிதம் இழக்கா மனசாட்சியும் கூட என் மற்றிரண்டு ஆயுதங்களென்று பக்குவமுறுவேன். எது எப்படியாயினும் மரணம் நிச்சயம் எவரும் எடுத்து எவர்மீதும் வீசி தலை வெட்டும் ஆயுதமோ’ அல்லது அத்தனை இலகுவாக கொடுத்துவிடும் இறுதி தீர்ப்போ அல்ல.
தண்டனை என்பது ஒருவரை திருத்தும் வகையில் மட்டுமல்ல அது பிறருக்குப் பாடமாகவும் இருக்கிறது, எனும் வகையில் தவறுசெய்வோர் தண்டிக்கப் படவேண்டியவராகின்றனர். என் மனைவியை ஒருவன் கண்முன் கொன்று விட்டுப் போவானெனில், என் தங்கையை ஒருவன் கொளுத்திவிட்டுச் செல்வானெனில், என் குழந்தையை கத்திமுனையில் வைத்து ஒருவன் மிரட்டுவானெனில் நிச்சயம் நான் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு நிற்பது கருணை என்று ஆகிவிடாது. தவறு உள்ளோரை தட்டிக் கேட்டே தீரவேண்டும்.
ஆனால் அந்த வரிசையில் எல்லோரின் தண்டனைக்கும் மரணமொன்றே தீர்வென்று நம்மால் உறுதி செய்துவிட இயலாது. எதிரி என்றாலும் மன்னிக்க வேண்டிய மனிதம் பெற்றவர்கள் நாமெல்லோரும். இழந்தால் பெற முடியாத மரணத்தின் முன் நின்று செய்யென்றோ கொல் என்றோ கட்டளையிட எந்த ஒரு பொது மனிதருக்கும் உரிமை இருக்க இயலாது.
அதிலும், இங்கு எல்லோரும் குரலெழுப்பி நிற்பது, நியாயமற்ற ஓர் அநீதிக்கு மரணம் எப்படி பரிசாகும் என்று மட்டுமே எனில், நானும் அவர்களோடு சேர்ந்து இல்லை மரணம் இங்கு சரியான தீர்ப்பல்ல, இது மறுக்கத் தக்கதே என்றே வாதிடுவேன். எக்காலும் தீர விசாரிக்க இயலாத அல்லது தண்டனைக்கு உட்பட்டு பின் திருத்தங்களோடு வாழ முற்படும் ஒரு அப்பாவியை கொல்ல எந்த உரிமையும் எந்த கொம்பனுக்கும் கிடையாது.
அதே நேரம், மிருக குணமுற்று ‘பிறருயிரெடுத்து தன் உயிரைக் காத்துக் கொள்ளும், சுயநலவிசமிகள் இருந்தால் அவர்களால் பலர் அழியக் கூடுமெனில், அந்த ஒருவர் வாழத் தக்கவறல்ல தான், அதாவது அவர் மக்கள் மத்தியில் மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் அளவிற்கு வெளியில் புழங்க ஏற்புடையவரல்ல என்பதே சரியேத் தவிர; பொட்டென யாரைக் கொல்லவோ, தன் அறிவிற்கெட்டிய நீதியென்று சொல்லி’ யாரைத் தூக்கிலிடவோ நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே ஆழமான உண்மை.
அப்படி அவன், ஒருவரைக் கொன்றது தவறெனில், அதற்கு பதிலாய் நாம் அவனைக் கொல்வதும் தவறுதான். மரணம் எதற்கும் விடை இல்லை. மரணத்திற்கு; மரணம் பதிலில்லை. மரணத்தை விடுத்து, மரணம்வரை வலுக்கிறது பல தண்டனைகள் என்பது வேறு, சுயமாக நான் பாதிக்கப் பட்டவன் ‘அவன் தலை கொய்து வருவேன் என்பது வேறு. அது உணர்வின் அடிப்படையிலானது. பொதுவில், தண்டனை ஒருவனை திருத்தவோ அல்லது அவனை அந்த தவறை மீண்டும் செய்ய விடாமல் தடுக்கவோ அல்லது கட்டுப் படுத்தவோ அவன் தவறு பொருத்து எண்ணம் பொருத்து செய்கை பொருத்து தொடர்காவலில் வைக்க நீதியை வழங்கலாமே யன்றி, உடனே கொன்றுவிடும் அளவிற்கு அல்ல.
ஆனால், அப்படி கொன்றபின், அதே நீதி வேறு சாட்சியங்களோடு மறுக்கப் படுமெனில், அந்த உயிரை உடனே மீட்டுக் கொல்ல இயலாத நாம்’ அவனைக் கொல்லவும் தகுதி அற்றவர்களே” என்பதைச் சொல்ல வருகையில்’ அந்த கோயம்பத்தூர் மாணவிகளின் பேருந்தைக் கொளுத்தி, உள்ளே துடிக்க துடிக்க அந்தக் குழந்தைகளை எரித்தவனை எண்ணுகையில் கொன்றுபோடு அவனை உடனே என்றே கோபம் வருகிறது.
ஆனால் இங்கு அந்த ஒருவன் மீது மட்டும் வரும் ஒட்டுமொத்தக் கோபம்’ எத்தகு சரி என்பது அவரவர் பார்வையையும், அதன் பின்னணிக் காரணங்களையும் பின்னாலிருப்பவர்களையும் பொறுத்தது. பிறகு ஒருவரை மட்டுமே கொள்வதும் சரியாக வழங்கப்பட்ட நீதியில்ல என்ற உண்மை நிதானித்து யோசித்தால் புரிகிறது. தீர்வாக சொன்னால், மரணம் பொதுவில் மிக யோசிக்கத் தக்கது. மிக அலசி ஆராய்ந்து, தீர விசாரித்தப் பின் மட்டுமே ஆம் சரி இல்லை என்று முடிவுகொள்ளத் தக்கது. யாரையும் நம்பி யாரையும் கொல்வதற்கில்லை..
எனவே, தவறு செய்பவர்களை திருந்துமாறு தண்டிக்கலாம், அல்லது தவறை அறவே ஒழிக்குமாறு அவர்களை தடுக்கலாம். கட்டுப்படுத்தலாம். கடுங்காவலில் வைக்கலாம். இன்னொருவன் அதை தொடர்ந்து மீண்டும் செய்யாதவாறு எச்சரிக்கைப் படுத்தலாம், மரணம் ஒன்றைத் தவிர வேறேதேனும் யோசிக்கலாம்!!
அதிலும், நீதிபதி மனைவியை மிரட்டி, குழந்தைகளை கொன்று விடுவேன் என்று சொல்லி, பணம் கொடுத்து வாங்கி, போலிகளை வைத்து வாதாடி, இல்லாத சாட்சிகளை பணம் போட்டு அல்லது சாராயம் ஊற்றி தயார்செய்து, அரசியல் மூக்குநுழைய, செல்வந்தன் காலாட்டி மீசை தடவி வழக்கை சாதகமாக்கிக் கொள்ளவென, இப்படி நீளும் பல ஓட்டைகளை நீதித் துணியினில் வைத்துக் கொண்டு’ அதை மரணத்தின் கண்களில் மட்டும் கட்டுவேன் என்று சொன்னால் எங்கோ தவறு நம் எல்லோரிடமுமே இருப்பதாய் தெரியவில்லையா?
நம் அக்காத் தங்கை கொல்லப்பட்டால் கோபம் வராதா என்கிறார்கள், வரும். அதேநேரம் என் அண்ணன்தம்பி நீதி தவறி கொல்லப் பட்டாலும் கோபம் வருமென்பதே யதார்த்தமும் இல்லையா? அதற்காக குற்றவாளிகளின் செயல் சரி என்றோ, அவர்கள் எது செய்தாலும் மன்னிக்கத் தக்கவர்கள் என்றோயெல்லாம் அர்த்தமல்ல. செய்துவிட்டால் மீண்டும் சரி செய்துக் கொள்ளயிலாத மரணத்தை மட்டும் இயன்றவரை கடைசியாக தள்ளிவைப்போம். முயற்சித்தேனும் அதை விட்டொழிப்போம்’ என்பதே வேண்டுகோள்.
அடிமைப்பட்டு அடிமைப்பட்டு அடிதாங்காமல் ஒர்தினம் ‘உயிரை எடுப்பாயா..டா ம்ம்ம்ம் எடுத்துக் கொள்’ என்று மார்பை விரித்துக் காட்டி தன் உயிரையும் தன் மக்களின் விடுதலைக்கென துச்சப் படுத்திக் கொண்ட ஒரு இனம் இன்று உலக கண்களில் தீவிரவாதியாகவும், தன் செயலை தண்டனைக்குரியதாகவும் காட்டிக் கொண்டிருப்பது எத்தனை வருத்தத்திற்குரியது?
அந்த இனத்தின் விடுதலைக்கென நாம் உடன் நின்று ஒட்டுமொத்தமாய் கொடுக்காத ஒற்றைக் குரலால் உயிரிழந்தோர் எண்ணற்றோர். சரிதவறு’ நீதி அநீதி அலசுவதற்குள் அத்தனைப் பேரை இழந்துவிட்டோமே, இனி இருப்பவர்களையேனும் மிச்ச மனிதத்தின் ஆதாரத்திற்கேனும் காத்துவிடமாட்டோமா? என்று தவித்திருக்கையில், இருக்கும் கொடுங்கோலன்களுக்கு மத்தியில் இறக்க மறுக்கும் இம்மூவரை இப்படி இத்தனை துரிதநடவடிக்கையாக இத்தனை வருட தண்டனைக்குப் பிறகும் தூக்கிலுட தீர்ப்பளித்துள்ளது நம்மை சிந்திக்கவைக்க வேண்டாமா?
இவர்களை எதன்பொருட்டோ கொன்று தீர்க்க எண்ணுமரசியல் கிருமிகளால் இவர்களுக்குப் பின் நிற்பவர்களையும் நாளை கொண்டுவந்து தூக்கிலிடும் வலிமையுண்டா? லட்சாதிலட்சம் பேரைக் கொன்றவனை ஏனென்றே கேட்க இயலாத அரசிற்கு இந்த மூன்று உயிர் என்ன அத்தனை இளசா? தமிழரெனில் என்ன அத்தனை துச்சமா? ஒரு கொலையை ஒருவர் செய்தால் அது கொலை அதையே பலர் செய்தால் அது போராட்டம் என்று சொல்லி தண்டனையை துண்டு போடும் சட்டத்திற்கு ‘ஒரு உயிருக்கு எப்படி இத்தனை உயிர்கள் சமமாயின? அரசியல் சம்மட்டி கையிலிருந்தால் அதைக் கொண்டு யார்தலையில் வேண்டுமாயினும் அடிப்பேன் என்பது அதிகார வர்க்கத்தின் எதிர்க்க வேண்டிய இழிசெயலில்லையா?
தவறை யார் செய்தாலும் தவறெனில், ஈழத்தில் அன்று அத்தனைப் பேரைக் கொன்றதோ அல்லது அதற்கு துணைப் போனதோ மட்டுமெப்படி நீதியாகும்? தனிப்பட்ட ஒருவரின் எந்த ஒரு விருப்புவெருப்பும் இத்தனைக் கோடி மக்களின் தேசத்தை ஆளும் தலைமைக்கு இருக்கவேண்டாத ஒன்றெனில்; வேறென்ன கோபமிருந்துவிடும் என் தமிழ்மக்களின் மேல் இழைக்கப்பட்ட அதர்மத்தை ஏனென்றுக் கூட தட்டிக் கேட்காமைக்கு?
என் தேசம் என்தேசம் என்று உயிரினும் மேலாக இந்தியாவை தலையிலேந்தி நடக்கும் தமிழினத்திற்கு எதிராகவே இயங்கும், ‘இந்த அரசியல் கைக்கூலிகளால் உடையும் இந்தியரென்னும் ஒற்றுமையை இனி யார் வந்து மீட்டெடுப்பார்? அத்தகு ஒரு நல்ல தலைவனில்லையே எம் தேசத்திலென்று சிந்திக்கும் முன் யாரிருப்பவர்களை தட்டிக் கேட்பார்?
சுயம் பற்றி மட்டுமே நாம் சிந்தித்து சிந்தித்து மெல்ல மெல்ல இழந்த ஒட்டுமொத்த நம் சுதந்திரத்தின்’ சாட்சியே இந்த லட்சாதிலட்ச மக்களின் உயிரிழப்பு’ என்பது கண்முன் தெளிவாகும் ஒரு காலகட்டத்தின் கடைசி திருப்பமாய், இந்த தூக்குதண்டனை இனி நம்மால் மாற்றி அமைக்கப் படட்டும் உறவுகளே.., உயிர் எந்த ஒரு விலைக்குமகப் படாத ஒன்று; என்பதைப் புரிந்து மரணதண்டனையை மாற்றியமைப்போம்.
மனிதர்கள் நாம் மனிதம் குறைந்து அலைவதால் தான் நாட்டில் இத்தனை சீர்கேடுகள் நிகழ்கின்றன. அதை முழுதாக மீட்டெடுக்க, மரணத்தை அவரவர் விருப்பிற்கு முடிவுகட்டுமிந்த மூடத்தனத்தை முற்றிலுமாய் மாற்றிக் கொள்வோம். தலையில் இருக்கும் ஒரு முடியை பிடுங்கக் கூட தகுதியற்றோர் நாம் பிறகு, பிறர் உயிரைப் பறிக்கும் எண்ணத்தை கையிலெடுக்க மட்டும் எவ்வழியில் தகுதியுற்றோம்’ என்று மீண்டும் மீண்டும் சிந்திப்போம்.
சரி, முடியை பிடுங்கத் தகுதியில்லை, விடுவாய் சரி; ஒரு மனிதனை கொன்றபின் இரண்டாம் மனிதரை கொள்ளட்டுமே என்று விட்டு வைக்கலாமா என்றால்? வேண்டாம் அவன் கைகளை உடனே முறிப்போம், திருந்தும் வரை சிறையில் அடைப்போம், திருந்த இயலாதவனை கடைசி வரை காவலில் இருத்துவோம், உயிரை எடுப்பதை விட்டுவிட்டு கொலையை உறுதியாய் தடுப்போம். உயிர்; யாருடயதாயினும் வலியதே என்று எல்லோருமே உணர்வோம்.
இப்போதைக்கு, கண்முன் உயிர்வாழ மிச்சமிருக்கும் நாளை ஒவ்வொன்றாய் இழந்து, தன் வாழ்வின் கணக்கை வெகு சொற்பமாக எண்ணிக் கொண்டிருக்கும் இம்மூவுயிரையேனும் நம் ஒற்றுமையினால் காப்போம். ஈழத்து விடியலுக்கு இது முதற்புள்ளியென்று உலகெங்கும் முரசொலிப்போம்!!
——————————————————————————————————————
வித்யாசாகர்
Short URL: http://meenakam.com/?p=34434

poem about senkodi: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அகிம்சையின் பெருநெருப்பு!!


செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அகிம்சையின் பெருநெருப்பு!!

உள்ளெரிந்த நெருப்பில்
ஒருதுளி போர்த்தி வெந்தவளே,
உனை நெருப்பாக்கி சுடப் போயி
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..
மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ’மையில் உன் விதியெழுதி – எம்
பொய்முகத்தை உடச்சியேடி..
விடுதலை விடுதலைன்னு
வெப்பம்தெறிக்க கத்துனியா?
அதை கேட்காத காதெல்லாம்
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..
செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,
நீ நெருப்போட புரண்டபோதே
தமிழன் வரலாறே கருகுச்சேடி…
பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க -
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..
இப்படி கெட்ட பேரு வாங்கிவர
மரணம் தான் சொல்லுச்சாடி ?
இந்த சின்னவயசு கனவுகளை
வரலாற்றில் எரிச்சியேடி..
இனி கத்தியழ யாரிருக்கா
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா
நீயெல்லாம் எரிந்துப்போனா?
உன்னொருத்தியோட நிருத்திக்கடி
வேண்டாமே இனி ஓரிழப்பு
போராட்ட குணத்திற்கு -
தற்கொலைதான் பேரிழப்பு;
நீ விட்ட உயிரு மீட்டிடாத
கண்ணீர் – மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ
சேரா தமிழ் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!
————————————————————————————–
வித்யாசாகர்
Short URL: http://meenakam.com/?p=34568

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

வேல்முருகனுக்குக் "கை கொடுக்கும் கை'




மதுரை:பிஞ்சு கைகளை ஊன்றி, தவழ்ந்து, நடை பழகும் அனுபவம் வேல்முருகனுக்கு கிடைக்கவில்லை. பிறக்கும்போதே பிஞ்சு விரல்களை பறிகொடுத்துவிட்டு, தன்னம்பிக்"கை'யுடன் பிறந்த இந்த 30 வயது பிரம்மச்சாரி, வீட்டில் முடங்கி கிடக்கவில்லை. ஊனம் என்று தன்னை கேலி செய்ய காரணமாக இருந்த கைகளை கொண்டே இன்று எழுதி வருவாய் ஈட்டுகிறார்.

மதுரை தேனூர் அருகே தச்சம்பத்தைச் சேர்ந்த இவர், 9ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கைகளை நம்பி உழைக்க தயாராக இருந்த இவருக்கு, அதுவே இடையூறாக குறுக்கிட்டது. யாரும் இவரது கைகளை நம்பி வேலை தர தயாராக இல்லை.வயிற்றுப் பசியை போக்க வருமானம் வேண்டுமே? அதுக்காக வேல்முருகன் பிச்சை எடுக்கவில்லை. எது தனக்கு வேலை தர இடையூறாக இருந்ததோ, அந்த கைகளை கொண்டே உழைக்க முடிவு செய்தார். விரல்கள் இல்லாத இரு கைகளை இணைத்து எழுதி பழகினார்.

இன்று... மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இவர் "கை'ப்படாத மனுக்கள் இல்லை. பத்து ரூபாய் பெற்று கோரிக்கை மனு எழுதி கொடுத்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

அவர் கூறுகையில், ""நானும் பலரிடம் வேலை கேட்டுவிட்டேன். எனது குறையை காரணமாக வைத்து யாரும் தரவில்லை. அதுக்காக வீட்டில் முடங்கி கிடக்கவும் எனக்கு மனமில்லை. அதனால் எழுதி வருவாய் ஈட்டுகிறேன். யாராவது, "கிளார்க்' வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். அதுவரை இந்த "எழுத்து' தொழில்தான் எனது வாழ்க்கை,'' என்றார்.

தன்னம்பிக்கையுடன் உழைக்க காத்திருக்கும் இவருக்கு, வேலை கொடுக்க விரும்பினால், 83443 48135ல் தொடர்பு கொள்ளலாம்.



திங்கள், 5 செப்டம்பர், 2011

சொத்தை விற்றுத் திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை:டேனியல் வி.இராசா





சென்னை: கற்றல், கற்பித்தல் என்கிற நிலையைத் தாண்டி, திருக்குறளை அனைத்து இடங்களிலும் பரவச் செய்வதை, தன் வாழ்நாள் கடமையாகச் செய்து வருகிறார் பள்ளி ஆசிரியை ரூபி ரெஜினா.

காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரூபி ரெஜினா ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன், பாடத்தில் இருந்த திருக்குறள்களை மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு, அதிலிருந்த கருத்துச் செறிவுகள் பிடித்துப் போக, ஒட்டுமொத்த நூலையும் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.பள்ளிப் பாடநூலில் இருபது திருக்குறள்கள் இருந்தால், பத்து மனப்பாடப் பகுதியாக இருக்கும். அதைப் படிப்பதற்கே மாணவர்கள் திணறிவிடுவர். இதைக் கருத்தில் கொண்ட ரூபி, "அனைத்து திருக்குறள்களையும் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு' என்று அறிவித்திருக்கிறார். அறிவித்தபடியே திருக்குறள் நூலையும் பரிசளித்திருக்கிறார்.அதற்கடுத்த முயற்சியாக, 100 குறள் சொன்னால் 100 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார். மாணவர்களிடையே உற்சாகம் கூட, குறள்களின் எண்ணிக்கைக்கேற்ப பரிசுத்தொகையையும் உயர்த்தியிருக்கிறார்.

திருக்குறளை மக்களிடமும் சேர்க்க வேண்டுமானால், ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என்று நினைத்த ரூபி, 2007ல் "உலகப் பொதுமறை மன்றத்தை' தொடங்கியிருக்கிறார்.தான் வாங்கும் சம்பளத்தில், 5,10 புத்தகங்களாக வாங்கி வழங்கிக் கொண்டிருந்த ரூபிக்கு, நிறைய திருக்குறள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது.
ரூபி கொடுக்க நினைத்தது, 100, 200 புத்தகங்கள் அல்ல. 1330 குறள்களை 100 மடங்காக்கி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் புத்தகங்கள்(!) வழங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதற்கான பொருளாதார வசதியில்லை . இருந்தும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற, புறநகர் பகுதியில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை, 24 லட்சத்திற்கு விற்று, புத்தகங்களை வாங்கிவிட்டார்.

நிலத்தை விற்று திருக்குறள் வாங்கும் அளவிற்கு, திருக்குறள் மீது அப்படி என்ன பற்று என்று கேட்டபோது, ""இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் பின்பற்றக் கூடிய உன்னதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம் எது என்றால் நிச்சயம் அது திருக்குறள் தான்.திருக்குறளை நம் வாழ்விற்கான மையக் கருவாகக் கொண்டு வாழ்ந்தோமானால், அதை விட சிறப்பான வாழ்க்கை எதுவுமில்லை. அக, புற வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும், திருக்குறளில் இருக்கின்றன.ஒவ்வொரு குடிமகனும் திருக்குறளை நெஞ்சில் நிறுத்தி, அதன்படி வாழ்ந்தால் உலகில் எவ்விதமான குற்றங்களும் நிகழாது. திருக்குறள் என் வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது.இந்தச் சேவையை, என் உறவினர்கள் பலவாறாய் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது எனக்கு மனநிறைவைத் தருகிறது'' என்கிறார் ரூபி. இவரின் திருக்குறள் "ஆர்வத்தை' கண்ட பல்வேறு அமைப்புகள், இவருக்கு தங்கள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளன.

""கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது, 133 கவிஞர்கள் கவி பாடிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மிகவும் சந்தோஷமான தருணம்'' என நெகிழும் ரூபி, சிறைக் கைதிகளையும் விட்டு வைக்கவில்லை.விடுமுறை நாட்களில், மத்திய சிறைச் சாலைகளுக்குச் செல்லும் ரூபி, திருக்குறள் நூலை வழங்கி, அதிலுள்ள அறிவுரைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்துகிறார். புத்தகங்களை வழங்குவதில் மட்டுமல்ல, பரிசு கொடுப்பதிலும் ரூபி பிரமிப்பூட்டுகிறார். 1330 குறள்களை மனப்பாடமாகச் சொல்லும் முதல் 33 பேருக்கு, 10,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஏழு பேருக்கு வழங்கியும் விட்டார்.திருக்குறளுக்காய் தன்னை அர்பணித்துவிட்ட இப்பெண்மணிக்கு, திருக்குறள் மாமணி, குறள்நெறிச் செல்வி, குறள் அரசி, தமிழ்த்தென்றல் உள்ளிட்ட 44 விருதுகளை பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளன. இந்தச் செலவுகளுக்காக, யாரிடமும் பணம் வாங்காத ரூபிக்கு, "திருக்குறள் தியான மண்டபம்' அமைக்கும் ஆசை உள்ளது. இப்பணிக்காக நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார். ரூபி நிச்சயம் இதனை செய்து முடிப்பார்.

எப்படி என்பதற்கு விடையாக ஒரு திருக்குறள் சொல்கிறது...
""எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்''
ஒரு பொருளை அடைய எண்ணி, அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராய் இருந்தால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.