வியாழன், 28 மே, 2015

Diaspora urged to document flow of narcotics into Tamil homeland

Diaspora urged to document flow of narcotics into Tamil homeland

[TamilNet, Wednesday, 27 May 2015, 15:37 GMT]
The Sri Lankan police will not be investigating to the fullest degree possible to assert what kind of narcotics were used by the gang rapists, who committed the brutal crime earlier this month, informed Tamil paramilitary operatives in Jaffna claim. The occupying Sri Lankan military has systematically deployed a number of Sinhala and Muslim narcotic sellers from South into Jaffna and Vanni over a long period of time. The Sri Lanka Navy sustains the flow of narcotics from India. Even the narcotic traffickers who earlier operated from Mannaar have shifted their activities to the islets off Jaffna in recent years. So-called rape drugs have been introduced in recent times, the Tamil paramilitary sources further say. The Chief Minister of Northern Province, Justice C.V. Wigneswaran, was also expressing the same message last week.

Those having experience in documenting the spread and use of narcotics should undertake a serious study of what is going on in Jaffna and Vanni, Tamil doctors in Jaffna say.

Particularly, Eezham Tamil women activists around the globe should mobilize to objectively document and mobilise themselves to fight against the systematic crime of rape, women rights activists in Jaffna say.

The majority of Colombo-based rights activists, who receive funds from foreign NGOs, are not prepared to look into the crimes destroying the social fabric of the Tamil society, they said.

A special military unit is responsible for the programme of introducing narcotics, the distribution of drugs near schools and the university. The same unit, according to informed EPDP operatives, also disseminates pornography visuals among the Tamils.

“In fact, the Sri Lankan Police has special instructions to control the flow of narcotics to the South from North,” a paramilitary operative who is on the pay list of the SL military run outfit told TamilNet.

Workshops have been conducted to occupying Sri Lankan soldiers by the same military unit, trained in counter-insurgency operations, to spread a particular message among the Tamils: “It is not the SL military, but it is the men among your own community who are the dangerous rapists.”

The nation of Eezham Tamils lacks its own security outfit to control the situation after the genocidal onslaught in 2009.
The Chief Miniser of Northern Province, C.V. Wigneswaran, reflected the sentiments of the people of North in his address on 23 May on the 150th anniversary of I'nuvil Hindu College. He said the local people and their relations outside the island have a huge responsibility in working together to address the conditions of the provinces of North-East. He was particular in stating that de-militarisation of North-East was an important demand. He was categorical in stating: “It is unacceptable, under any circumstances, to allow the military that committed war crimes to continue to stay in our soil and rule it as an occupying force.”

“The heinous crimes that occur in recent times are new to the people. They were not heard of these crimes before 2009. There was no connection between the killing of Krishanthy and the people. But, we wonder now whether there is a force systematically misdirecting the young men and women with the intentions that our youth should not have the thirst for freedom, they should not excel in knowledge and they should not become hardworking people,” the Chief Minister Justice C.V. Wigneswaran said in his Tamil address. He was connecting the dots expressing the sentiments of the people, political observers in Jaffna said.

The NPC Chief Minister's exact wording in Tamil was as follows:

“நாட்டின் எல்லைகளைக் காப்பாற்றுவதாகக் கூறி எமது மண்ணையும், வளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு போர் முடிந்து 6 வருடங்களின் பின்னரும் வேண்டாத எம்மிடையே பலாத்காரமாக நிலை நிறுத்தப் பட்டிருக்கும் ஒரு அரச படையே இராணுவமும், கடல்படையும். எமது பாதுகாப்புக்காக இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. ஆனால் நாங்கள் எவரும் எங்களைப் பாதுகாக்க நீங்கள் இங்கு இருங்கள் என்று இராணுவத்தினரிடம் கூறியதாகத் தெரியவில்லை. அவ்வாறு யாராவது கூறியிருந்தால் அவர் இராணுவத்தின் அனுசரணையாளனாகவோ இராணுவத்திற்குப் பயந்தவனாகவோ அல்லது அரசாங்கத்தின் ஒற்றனாகவோ தான் இருக்க வேண்டும்.

அண்மைக் காலங்களில் நடைபெறும் மிகக் கொடூரமான குற்றச் செயல்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் இங்கு மக்களிடையே அறிந்திராத செயல்கள். 2009க்கு முன்னரான கிருசாந்தியின் கொலைக்கும் மக்களுக்கும் தொடர்பேதும் இருக்கவில்லை. ஆனால்த் தற்போது எமது இளைஞர் யுவதிகள் சுதந்திரதாகத்துடன் உருவாகக்கூடாது, அறிவில் சிறந்து விளங்கக் கூடாது, தொழிற் பாங்குடன் கடுமையாக உழைப்பவர்களாக உருவாகக் கூடாது என்று திட்டமிட்டுப் பிழையான வழிகளில் அவர்கள் பாதை தவறி நடக்க உரிய சூழலை யாராவது வழி அமைத்துக் கொடுக்கப் பார்க்கின்றார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது.”

Krishanthi
In 1996, Sri Lanka Army and police personnel at a military checkpoint in Jaffna detained Krishanthi Kumaraswamy, a student at the Chu'ndukkuzhi Girls School. She was gang raped by up to 11 SL military personnel, before being murdered.

The islets off Jaffna, including Pungkudutheevu, have been under SL military control for 25 years since 1990.

Violent Tamil paramilitary operatives and criminal gangs have been nurtured in the islets, which remain under the iron fist control of the occupying Sinhala military to date.
Vithya Sivalonganathan
Vithya Sivalonganathan (25 Nov 1996 - 13 May 2015) wanted to become a journalist. Attending GCE A/L at Pungkudutheevu MV, her favourite subject was English.
18-year-old schoolgirl Vithya Sivaloganathan was reported missing on 13 May 2015. The following day, her dead body was recovered in a brutally abused state. Three Tamil men, all of them between 30 and 35 years, were immediately arrested and five Tamil youth, who had come from Colombo on 13 May and returned to Colombo were also arrested later. A 9th suspect, a Switzerland resident, is also a Tamil.

A Colombo-based Tamil academic and a UNP parliamentarian from Kaarai-nakar, who is also a deputy minister in the new regime, were initially blamed by the public of attempting to help the Swiss resident to escape.

However, the UNP organiser in Jaffna who also hails from the nearby Kaarai-nakar islet, managed to convince the SL police in Colombo to arrest the escaping Diaspora criminal as the people of Pungkudutheevu managed to hold the Tamil academic as hostage in their custody demanding immediate arrest of the alleged culprit. The SL military and Police were particular in providing security to the Tamil academic creating further tension among the public. The inaction by the SL police on the day when Vithya was reported missing had already caused anger among the public.

Widespread protests followed in Jaffna. Almost all the school students in the Northern Province took part in the protests. There were also protests in the three districts of the Eastern province.

Vithya's family was uprooted in 1990 and displaced later to Vanni. During the 2009 Vanni war, Vithiya was studying in Colombo. Her father, mother, sister and brother survived the genocidal onslaught on Vanni and the barbed-wire internment camp at Menik Farm in Vavuniyaa. The family had resettled in their native village in 2010.
Protest on May 20
 
Widespread protests shook Jaffna following the brutal gang rape. A planted section of paramilitary elements allegedly diverted a protest march organised by the Ceylon Teachers Union towards the Court complex in Jaffna on 20th May 2015. The youth participants were instigated by the planted group to assault the Jaffna courts. 130 protesters, among them innocent youth, were arrested by SL riot control police and jailed at prisons outside the Tamil districts. There were also prominent paramilitary persons, operated by the Indian and Sri Lankan military intelligence outfits, among the arrested individuals indicating the role of the planted elements in transforming the peaceful protest into a violent episode.
Sri Lankan President Maithiripala Sirisena visited Jaffna on Tuesday to meet the family of Vithya 
Sri Lankan President Maithiripala Sirisena, visited Jaffna on Tuesday to meet the parents and to assure them of special hearings on the brutal gang rape. Although the visit was interpreted as a public relations stunt by the SL president, who came to power with the votes of the Tamil-speaking people, sources who witnessed his presence with the victims said the visit was conducted in a simple manner. The SL president also met a selected group of student representatives. He also visited the Buddhist Vihara in Jaffna. Journalists who accompanied him were the only ones allowed to cover his visit. The Chief Minister of NPC, Justice Wigneswaran accompanied the SL president during his meeting with the victims and the students in Jaffna

புதன், 27 மே, 2015

14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்


 வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015

inaiyamaanaadu_singai2015_01inaiyamaanaadu_singai2015_02

நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி

(முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை.
அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)

inaiyamaanaadu_ partof programme

- அகரமுதல 80 வைகாசி 10 2046, மே 24, 2015

Social Service Officer shot and killed in Batticaloa

Social Service Officer shot and killed in Batticaloa

[TamilNet, Tuesday, 26 May 2015, 16:23 GMT]
Two gunmen who came in a motorbike entered the residence of a Social Service Officer at Ma'ndoor in Poaratheevu DS division shot and killed the 41-year-old SSO after talking to him for a while Tuesday morning around 8:30, news sources in Batticaloa said. The victim, identified as Sachchithanantham Mathisayan was taken to Ka'luvaagnchikkudi hospital with gunshot injuries in his head later succumbed to his wounds, the sources further said.

Mr Mathisayn was employed as SSO at Naavithan-ve'li DS office in Ampaa'rai district.

He was also engaged in social activist in his native village, Ma'ndoor, which is known for its popular Murukan temple.

Ma'ndoor is situated 55 km southwest of Batticaloa city.

SL military collects details of family members of ex-LTTE activists in Batticaloa

SL military collects details of family members of ex-LTTE activists in Batticaloa

[TamilNet, Monday, 25 May 2015, 15:06 GMT]
The soldiers of the occupying Sri Lanka Army have been collecting details including the names of family members, their occupation at Chelvaa-nakar East in Aaraiyampathi, Batticaloa during the last five days. The SL soldiers are visiting the houses and huts of the families in the villages in bicycles with a printed list of names of ex-LTTE members in their hands. Why the SL military is harassing the families by registering all the details of family members and their places of employment, Tamil families in Aaraiyampathi question.

Regardless of regime change in the South, the SL military is continuing the systematic harassment on former members of the LTTE, the families said.

Due to the prevailing military harassments, employment providers have been reluctant to provide jobs to former LTTE members.

The military occupying the Tamil homeland is pre-occupied with waging a counter-insurgency campaign with the motive of maintaining the status quo despite the so-called change of regime in the South, Tamil civil activists in Batticaloa told TamilNet.

Aaraiyampathi is situated 6 km south of the city of Batticaloa on Batticaloa - Kalmunai Road.

செவ்வாய், 26 மே, 2015

இந்துக்கள் யார்?

thudisaikizhaar_vinaavidai_attai

இந்துக்கள் யார்?

10, 000 ஆண்டுகளின் முன்னர், காகேசியரில் ஒரு கூட்டத்தார் தாம் இருந்த நாட்டைவிட்டு மேற்கே ஐரோப்பியாவிற்கும், மற்றொரு கூட்டத்தார் இந்தியாவிற்கும் புறப்பட்டார்கள். மேற்கே சென்றவர்கள் செர்மனி முதலிய இடங்களில் தங்கினார்கள். கிழக்கே சென்றவர்கள் கைபர், காபூல், போலன் கணவாய்களின் வழியாகச் சிந்து ஆற்றங்கரையில் குடியேறினார்கள். பின்னவர்களாகிய ஆரியர்கள் சிந்து ஆற்றங்கரையில் குடியேறுவதற்கு முன்னரே, தமிழர்கள் அராபியர்களுடனும் பாரசீகர்களுடனும், அக்கேடியர், சுமேரியர், அசிரிய தேசத்து அசுரர், ஃபினீசியர் முதலியோர்களுடனும் – தரைவழியாகவும் தண்ணீர் வழியாகவும் வாணிபம் செய்து வந்தார்கள். அராபியர்களும் பாரசீகர்களும் தம் நாட்டில் விளையும் பேரீச்சை, பெருங்காயம் முதலிய பொருள்களை ஒட்டகத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்து, தமிழ்நாட்டில் மாறி, தமிழ்நாட்டில் விளையும் சந்தனம், மயில் இறகு, மிளகு, ஏலக்காய், இலவங்கம் முதலிய பொருள்களையும், பணத்தையும் கொண்டு செல்வர். அவர்கள் எல்லோரும் அக்கணவாய் வழியாகப் போகும்போது சிந்து ஆற்றங்கரையில் குடியேறிய ஆரியர்கள் அவர்களை மறித்து, அடித்து வழிப்பறி செய்துவந்தார்கள். பாரசீர்களும் அராபியர்களும் அடிப்பவர்களை “இந்து” “இந்து” என்ற சொல்லிக் கூச்சலிட்டுவந்தார்கள். “இந்து” என்னும் சொல் பாரசீக மொழியைச் சேர்ந்தது. “இந்து” என்றால் அம்மொழியில் திருடன், கொள்ளைக்காரன் என்பது பொருள். அதுமுதல் ஆரியர்களுக்கு “இந்துக்கள்” என்று பெயர் உண்டாயிற்று.
- துடிசைக் கிழார் அ.சிதம்பரனார்: கழகத்தமிழ் வினாவிடை: ப.17
பி.கு. : இந்து என்ற சொல் உருவான வரலாறுதான் சொல்லப்பட்டுள்ளது. அதனால், இப்பொழுது அப்பொருளில் வழங்குவதாகக் கருதக்கூடாது

- அகரமுதல 80 வைகாசி 10 2046, மே 24, 2015

முதியோர் கொலை – வைகை அனிசு


80killing_oldperson

 பெண்குழந்தைக்கொலைபோல் 

முதியோர் கொலை தொடரும் பேரிடர்!

  “வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ” என ஒலிபெருக்கி அலறினால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று பொருள். இது தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதேபோன்று வடமாவட்டங்களில் முதியவர் கொலை அரங்கேறி வருகிறது. தற்பொழுதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையால் நடுத்தரக் குடும்பத்தில், தங்களுடைய   போலி மதிப்பைக் காப்பாற்ற பிள்ளையே தன்னைப்பெற்ற அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் அவலமும் நடக்கின்றது. மேற்கத்திய உலகத்தை ஆட்டிப்படைத்த முதியோர் இல்லங்கள் தமிழகத்திலும் நுகர்வுப்பண்பாடாக மாறிவிட்டது.
  தென்மாவட்டங்களில் உள்ள பல குடும்பங்கள் பஞ்சம் பிழைக்க குசராத்து, அசாம், மும்பை போன்ற பகுதிகளுக்கு முறுக்கு, நிதி, தவணைமுறையில் விற்பனை செய்வது போன்றவற்றைச் செய்து வருகின்றன. சில குடும்பங்கள், இதற்குத் தடையாக இருப்பது தங்களுடைய பெற்றோர்கள் என எண்ணுகிறார்கள். இதற்காக முதியவர்களைக் கொலை செய்துவருகிறார்கள். தென்னை மரத்தில் வைக்கப்படும் மாத்திரை, பூச்சிக்கொல்லிகளுக்கு அடிக்கப்படும் ‘நுவாக்ரான்’, ‘பால்டாயில்’ போன்ற மருந்துகளை வைத்துக் கதையை முடித்துவிடுவார்கள். இதற்காக முதியவர்களை அழைத்து அவர்களுக்கு ஆசையாக என்ன வேண்டுமோ அதனை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். அதன்பின்னர் முழுநிலா(பௌர்ணமி), இருள்நிலா(அமாவாசை) நாள்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துப் பலமணிநேரம் ஊறவைத்துக் குளிக்கவைப்பார்கள். இது பெரும்பாலும் ஐப்பசி, மார்கழி மாதங்களில் நடைபெறும். ஐப்பசி, மார்கழி மாதங்களில் பனி அதிகம் இருக்கும். இதில் இயற்கையாகவே மரணம் நிகழும். இம்மாதிரியான இயற்கை மரணத்தைக் காட்டி கொலை செய்யும் பழக்கம் நடைபெற்று வருகிறது. இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைவுகளில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் பறக்கும். அதன்பின்னர் உற்றார், உறவினர்களை வரவழைத்து தன்னைப் பெற்ற தாய், தந்தையரைப் பார்க்கவிட்டு அதன்பின்னர் கருணைக்கொலையை அரங்கேற்றுவார்கள். போலி மருத்துவர்கள் மூலம் ஆட்களைக் கொலை செய்யும் மருந்துகளை ஏற்றிக் கொலை செய்வார்கள் இது ஒரு வகை. மற்றொரு வகை தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையைக் கொடுத்து உயிரைப் போக்குவது. இதுபோலப் பலவகை உண்டு.
  ஆனால் சொத்திற்காகவும், பணத்திற்காகவும் பிள்ளையே பெற்றோரைக் கொலை செய்யும் அவலம் தற்பொழுது அரங்கேறி வருகிறது. இவ்வாறு கடலோர மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, காரைக்குடி முதலான பகுதிகளிலும் இக்கொடுமை நடைபெற்று வருகிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அன்றாடம் செய்தித்தாள்களில் பணத்திற்காக மூதாட்டி கொலை, நகைக்காக வயதான பெண் கொலை எனச் செய்திகள் வெளிவரும். காவல்துறையும் பெயர் அளவில் விசாணை மேற்கொண்டு கொலையாளியைத் தப்பிக்க வைத்துவிடுகிறது. இவற்றைத்தவிர கூலிப்படை வைத்தும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரை அவருடைய வீட்டு வேலைக்காரி அல்லது வாகனம் ஓட்டுநர் மூலம் மரத்தில் வாகனத்தை மோதவிட்டுக் கொலை செய்யும் நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. மதுரையில் புகழ்வாய்ந்த உணவுவிடுதி உரிமையாளரை அவருடைய உறவினர்கள் ஓட்டுநர் மூலம் வாகனத்தை மோதவிட்டுக் கொலை செய்தனர். அதன்பின்னர் காவல்துறை விசாரணையில் சொத்துக்காகக் கொலை செய்தது அம்பலமானது.
  இதேபோலத் திருநெல்வேலியில் புகழ்பெற்ற துணிக்கடை உரிமையாளரை ஓட்டுநர் உதவியால் புளிய மரத்தில் மோதவிட்டுக் கொலை செய்தனர். அதுவும் சொத்திற்காக நடந்த கொலைதான். இதே போலச் சென்னையில் நன்கறியப்பட்ட தொலைக்காட்சிச் செய்தியாளரின் பாட்டி, தாத்தாவை அவருடைய இரண்டாவது மகள் கூலிப்படை மூலம் வைத்துக் கொலை செய்துள்ளார். செய்தியாளர் என்பதால் புலனாய்வு செய்து இறுதியில் சொத்திற்காகக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
  கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் சங்கரன்பந்தலில் தன்னுடைய மகன் பெரோசுகான் என்பவர் பலமுறை கொலை முயற்சி செய்ததால் உயிர்தப்பினால் போதும் என்று அவருடைய தந்தை தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதன் தொடர்பாகச் சங்கரன்பந்தல், திட்டச்சேரி காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடியில் சீர்த்தி வாய்ந்தது பாவா சேட் மிட்டாய் கடை. இதனுடைய கிளைகள் அப்பகுதியில் ஏனங்குடி, ஆலமரத்தடி, ஆதலையூர், பேரளம், சன்னாநல்லூர் முதலான பகுதிகளில் உள்ளன. பாவா சேட் மிட்டாய் கடையின் உரிமையாளர் பாவா சேட் என்ற சுல்தான் அப்துல் காதர். இவருக்கு இரண்டு பெண்களும், ஆண்பிள்ளையும் உள்ளனர். ஒரே மகனுடைய பெயர் செல்லத்தம்பி என்ற முபாரக். அவருக்குப் பலகோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்தைத் தனக்கு எழுதித்தரவேண்டும் என்று பலமுறை கொலை செய்ய செல்லத்தம்பி முயன்றுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொலைமுயற்சியில் ஈடுபடும்போது அதிலிருந்து தப்பித்து அருகில் உள்ள திட்டச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கொலை முயற்சியின் கெடுவிளைவைப் புரிந்து கொள்ளாமல் காவல்துறை அந்த மனுவைக் குப்பையில் போட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாவா சேட்டை மகன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் சேர்ந்து அவருடைய கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்துள்ளார்கள். கொலை செய்வதற்கு முன்பு இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 3.00 மணிவரை அக்கம் பக்கத்தைச் செல்லத்தம்பி நோட்டமிட்டுள்ளான். அதன் பின்னர் காரியத்தை கனக்கச்சிதமாக முடித்துவிட்டு அதிகாலை 4.00 மணியளவில் அக்கம், பக்கத்தில் தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என்று நாடகமாடியுள்ளார். அதன்பின்னர் உறவினர், நண்பர்கள் அவருடைய பிணத்தைப் புதைத்துள்ளனர். அவர் இறந்தவுடன் அவருடைய மரணம் மருமமான மரணம் என்றும் காவல்துறை விசாரிக்கவேண்டும் எனவும் பலமுறை திட்டச்சேரி காவல்நிலையத்திற்குத் தொலைபேசி மூலம் புகார் சென்றுள்ளது. திட்டச்சேரி காவல்நிலையத்தினர் வேகமாகச் சென்று தங்களுடைய புலனாய்வைச் செய்துகொண்டிருக்கும்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் ஒன்றியத்தலைவர் மற்றும் அப்பகுதியைச்சேர்ந்தவர்களிடமிருந்து தொலைபேசி வந்தவுடன் தங்களுடைய புலனாய்வை நிறுத்திக்கொண்டு இயற்கை மரணம் எனச் சென்றுள்ளனர். அதன்பின்னர் பல இலகரங்கள் கைமாறியுள்ளன. இதே போல ஒரு பெண்ணைக் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அரசியல்வாதியின் பின்புலத்தோடு கற்பழித்து இருப்புப்பாதை தண்டவாளத்தில் தூக்கி எறிந்துள்ளனர். அதன்பின்னர் அரசியல் தலையீடு காரணமாக அந்தக்கோப்பு முடிக்கப்பட்டுள்ளது.
  பாவா சேட் மருமமான முறையில் இறந்தவுடன் முசுலிம் முறைப்படி உடலைக் கழுவும்போது அவருடைய கழுத்தில் கயிற்றைக்கொண்டு இறுக்கிய தடங்களும், உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் இருந்துள்ளன. கொலை செய்வதற்கு முதல் நாள்   ஓர் இடத்தை விற்பனை செய்ய முன்தொகை வாங்கித் திங்கள் கிழமை நாகூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யக் கூறியுள்ளார். அதற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை இக்கொலை நடந்துள்ளது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னையில் உள்ள வழக்கறிஞர் ஒருவரின் உறவினர் இருப்பதாகத் தெரியவருகிறது.

திருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண்டெடுப்பு

thiruppuvanam_romansymbols

உரோமானிய எழுத்துகளுடன் பானைகள்

தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு 

கீழடிப் பள்ளிச்சந்தையில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
மத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு  இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பண்டைய வணிக நகரமான ‘மதுரை நகரம்’ முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை. முதன் முறையாக மத்திய அரசு தொல்லியல்துறைக்கு ஒருவருட ஆய்வு மேற்கொள்ள  இசைவு  அளித்துப் பணிகள் நடந்து வருகின்றன.
  தற்போதைய ஆய்வில் பண்டைய மதுரை நகரம் வணிக நகரமாக திகழ்ந்ததற்கான சான்று கிடைத்துள்ளது.  இராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு ஏராளமான வணிகர்கள் வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், குறியீடுகள், தங்குமிடம் உள்ளிட்டவற்றைத் தேடும் பணி நடைபெறுகிறது.
மதுரை நகரை ஒட்டி வைகையாறு செல்லும் பாதையில் 12  புதுக்கல்(கி.மீ.) தொலைவில் தூரத்திற்குள் இந்த அகழ்வாராய்ச்சி பணி நடைபெறுகிறது.
இராமேசுவரம் துறைமுகத்தில் இறங்கிய வணிகர்கள், வைகை ஆறு வழியாக வந்து கரையோரத்தில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், இதனை மையமாக வைத்தும் இந்த அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரோமானியக் குறியீடுகள்: தமிழகத்தில் 1963 முதல் 1973 வரை காவிரிபூம்பட்டினத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மதுரை நகரை ஒட்டி மிக நீண்ட கால அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெறுகிறது. தற்போதைய அகழ்வாராய்ச்சிப் பணியில் உரோமானியக் குறியீடுகளுடன் கூடிய பானைகள், பாண்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்திய முத்து மாலைகள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்காலத்தில் பயன்படுத்திய அகலமான செங்கற்களுடன் கூடிய கட்டுமான அறைகள், தொட்டிகள் ஆகியவற்றையும் தற்போது கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடிப் பள்ளிச்சந்தை திடல் என்றழைக்கப்படும் இடத்தில் சோனை மகன் சந்திரன், அப்துல் சபார் மகன் திலிப்கான் என்பவரது இடங்களில் 5 பேரடி (மீட்டர்) ஆழம், 5பேரடி (மீட்டர்) அகலம் கொண்ட குழிகள் வெட்டப்பட்டு அகழ்வராய்ச்சிப் பணி நடைபெறுகிறது.
தொல்லியல்துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத்து இராமகிருட்டிணன் கூறுகையில், “தென் தமிழகத்தில் மதுரையை மையமாகக் கொண்டு பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம் குறித்த முதல் அகழ்வராய்ச்சி இது. குந்திதேவி நகரம் என்பது தான் மருவி கொந்தகையாக மாறியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதனை உண்மையா என ஆராய இந்தப் பணி நடைபெறுகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் வணிகம் சிறப்பாக நடந்தது என்பதற்கான பல்வேறு சான்றுகள் இரண்டு மாத ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.
உரோமானியக் குறியீடுகளுடன் கூடிய மண் பானைத் துண்டுகள், பாண்டிய மன்னர்கள் காலத்திய முத்து மாலைகள், அவர்கள் தங்குமிடம்  முதலான  பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் மண்பானைகளில் கருப்பு, சிவப்பு  ஆகிய இரண்டு வண்ணங்கள் மட்டுமே உள்ளன. தண்ணீர் ஊற்றப்
பயன்படும் ‘குவளை’ போன்ற அமைப்பின் வாய்ப்பகுதி கிடைத்துள்ளது. பெரிய அகலமான செங்கற்கள் கொண்ட வீட்டின் ஒரு பகுதி மட்டும் முழுமையாக உள்ளது. பள்ளிச்சந்தைத் திடல் என்பது வணிகர்கள் திடல் என்பதால் இங்குப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். மார்ச்சு முதல் அடுத்த ஆண்டு மார்ச்சு வரை அகழ்வராய்ச்சிப் பணி நடைபெறும். இதுவரை 19 இடங்களில் பணிகள் மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்துள்ளோம்,” என்றார்.
- தினமலர்: வைகாசி 8, 2046மே 22, 2015

SL Navy, Buddhist monks ‘harass’ resettling Champoor Tamils

SL Navy, Buddhist monks ‘harass’ resettling Champoor Tamils

[TamilNet, Sunday, 24 May 2015, 11:41 GMT]
Two Buddhist monks, who arrived in Champoor with Sri Lankan police escort on Sunday were telling the Tamil civilians present inside their lands, to collaborate with Colombo to establish the so-called Special Zone of Heavy Industries (SZHI) to bring ‘development’ to Champoor area. The Tamil people responded to them by stating that the people of the area should be given their lands back to them enabling them to sustain their livelihood as an agricultural society. Allowing the people of the region to evolve their own development should be the goal of a government claiming good governance, the people told them. In the meantime, Sri Lanka Navy, still occupying the lands near the 818 acres of lands being released, has been intimidating the resettling people by questioning their presence near the SL navy camp.

The SL Navy officers told the Champoor villagers that they are yet to receive official information on the decisions taken in Colombo from the SL Ministry of Home Affairs. The Government Agent or Divisional Secretary have also not informed the SL military on the ‘procedure’ for resettlement, the SL Navy officers have said. The people would not be allowed to resettle near the military base until the SL Navy was given alternative lands, the military officers have told.
The SL Governor in the East has promised 150 acres of alternative lands to the SL Navy. But, the SL Navy maintains that the allocation was not enough and demands 400 acres north of the current cantonment.
The SL Navy is also exerting pressure on a few landowners to sell their lands to the military. At the same time, the SL Navy wants the new regime to allocate more public lands to shift the cantonment.

Chronology:

திங்கள், 25 மே, 2015

பகுத்தறிவு விழா


வைகாசி 16, 2046 / மே 30, 2015

புதுச்சாம்பள்ளி, சேலம்azhai_naathikarvizhaa01 azhai_naathikarvizhaa02

நிலப்பறிப்புச் சட்டம் : தமிழக மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டம்

தமிழரே தம்மொழிக்குப் பெயரிட்டனர்!


    senthamizhchelvi
  திரவிடம் என்று வடமொழியாளர்கள் நம் செந்தமிழ் மொழிக்கு இட்ட பேரே நாளடைவில் ‘தமிழ்’ என உருத்திரிந்ததெனக் கூறி மகிழ்வர் ஒரு சிலர்.
  அஃது உண்மையற்ற வெற்றுரையென எவரும் எளிதில் அறிவர். செம்மொழியாம் ஒரு மொழி பேசும் நன்மக்கள் தங்கள் மொழிக்குத் தாம் வேறுபேரும் இடாது தங்கள் நாட்டிற் பின்வந்து குடியேறிக் கலந்தவரும், கலந்த அக்காலத்தும் தங்களால் நன்கு மதிக்கப்படாது அயலாராகக் கருதப்பட்ட வரும் ஆகிய வடமொழியாளர்கள் தம் மொழிக்கு இட்ட பேர் கொண்டே தம்மொழியைச் சுட்டினார்கள் எனின் அஃது எங்ஙனம் பொருந்தும்?
  அன்றியும் அது பொருளாயின் தமிழ் நன்மக்கள் தம்மொழி சுட்டும் குறியீடு ஒன்றும் பண்டைக்காலத்துப் பெற்றிலர் என்றேனும் அல்லது குறியீடு ஒன்று பெற்றிருந்தும் வடமொழியாளர் இட்டபேரே சாலும் எனக் கருதித் தம் குறியீட்டைக் கைவிட்டதனால் அது வழக்கு வீழ்ந்தது என்றேனும் கொள்ளல்வேண்டும்.
  அங்ஙனம் கொள்ளல் சாலுமா? தமிழ் நன்மக்கள் தம் மொழிக்குத் தாமே பேரிட்டு வழங்கினர் என்றும் அப்பேரே இன்றும் வழக்கில் உள்ளதெனக் கோடலே சாலும். மேலும், அக்கோளர் தம்மை ‘திராவிடம்’ தமிழ் என மாறியது யாங்ஙனம் என வினவுவார்க்கு, அவர் கூறும் விடை அவர்க்கே இனிமை பயக்குமல்லால் வேறெவர்க்கு உண்மையின் நழுவி வீழ்ந்ததாகக் காணப்படும்.
 தமிழ் என்பது இனிமை என்னும் பொருட்டு என்றும் இனிமை உடையதாந் தன்மைபற்றித் தமிழ் எனத் தம்மொழிக்குப் பெயரிட்டனர் தமிழர் என்றும் கூறுவர். தம் மொழியாந் தமிழ்மொழியின் இனிமை கண்டு உவந்து இனிமைக்கே தமிழ் எனப் பெயரிட்டனர் எனவே சாலப் பொருத்தமுடைத்து.
- செந்தமிழ்ச் செல்வி: சிலம்பு: 3-9

திசை காட்டும் திருக்குறள் – பாலகிருட்டிணன் இ.ஆ.ப.

enpaarvai_thirukkural

என்பார்வை: திசை காட்டும் திருக்குறள்

திருக்குறள் பண்டைய இலக்கியம். ஆனால் எப்போது படித்தாலும் இளமையாய் இருக்கிறது. கி.மு., கி.பி., என்பது எல்லாம் வரலாற்றிலிருந்து வயது சொல்லும் முயற்சியில் குத்தப்படும்
முத்திரைகள் தான். ஒருவகையில் 23 ஆம் புலிக்கேசிகளின், வாடகைக் புலவர்களின் வாய்க்கு வந்தது கூட வரலாறு தான். உண்மையில் வரலாற்றுக்குப் பிந்தைய என்ற வரையறைகளைக் கடந்து இயங்குகிறது மனித வாழ்வியலின் பயணமும் பட்டறிவும்.
படிநிலை வளர்ச்சி
திருக்குறள் ஒரு படைப்பிலக்கியமாகவோ பக்தி இலக்கியமாகவோ கருத்தை திணிக்கும் கசாய இலக்கியமாகவோ இல்லாமல் ஒரு பட்டறிவு இலக்கியமாக இருக்கிறது.
திருக்குறள் ஒரு தனிமனிதனின் குரல் அல்ல. ஓர் உயர்ந்த நாகரிகத்தின் ஒட்டுமொத்த தெளிவின் திரள். திருக்குறள் ஒரு படைப்பு முயற்சி அல்ல படிநிலை வளர்ச்சி. மிக உயர்ந்த மீமிசையே பூமிக்குக் குடையாக முடியும். மிக உயர்ந்த உன்னதமே உலகுக்கு கொடையாக முடியும். திருக்குறளை நாம் எதற்காக இன்றும் கொண்டாடுகிறோம். காரணம் திருக்குறள் இன்றும் தேவைப்படுகிறது. தலைகுனியச் செய்யும் தலைப்புச் செய்திகள். நாள்தோறும் வானிலை அறிக்கை போல வாசிக்கப்படுகிற வக்கிரங்கள். சிறைவாசலில் நின்று சிரித்துக் கையசைக்கும் சில்லறை மற்றும் தேசிய கயவர்கள். குற்றங்களை விடவும் கொடுமையாய் வலிக்கிறது, குற்ற உணர்வு முற்றிலும் அற்றுப்போன அவலநிலை. சுற்றும் உலகம் சுருங்கிவிட்டது. ஆனால் வீடும் வீதியும் விலகிச் செல்கிறது. பலவகையிலும் குழம்பிக் கிடக்கிறது வாழ்க்கை. இருந்தாலும் குழைத்துப் போட ஒரு மருந்து கையில் இருக்கிறது. இப்போதும் இது நாட்டு மருந்து. இந்த நாட்டு மருந்து இரண்டாயிரம் ஆண்டுகாலம் ஆன பின்னாலும் காலாவதி ஆகாத கைமருந்து. இது மருந்தாகித் தப்பா மரம் இல்லை. மானிடம் நிலைக்க இந்த மண்ணில் என்றோ முளைத்து இன்னும் தழைக்கும் அறம்.
திருக்குறள் பொதுமறை அல்ல உலகப்பொதுமுறை
ஏன் திருக்குறளை உலகப் பொதுமறை அல்லது தமிழ்மறை என்று சொல்கிறார்கள். தமிழில் மறைப்பதற்கு எதுவுமில்லை. பொது மறை என்றாலும் கூட எதிர்மறை தான். உண்மையில் பொதுமறை என்பதே பொருத்தமற்றது. பொதுவான எதுவும் மறையாக, அதாவது மறைவாக இருக்கமுடியாது. மறை என்ற சொல்லின் பொருளும் சொற்பொருள் ஆக்கமும் மறைதல், மறைத்தல், ஒளிதல், ஒளித்தல், கமுக்கம், இரகசியம் என்ற அடிப்படைகளில் உருவாகி நிலை பெற்றது. வெளிப்படையான, சமயச்சார்பற்ற திருக்குறளைப் பொதுமறை என்பதற்கு பதிலாக உலகப்பொதுமுறை என்று அழைப்பதே முறையாக இருக்கும். முறை என்பது அடைவு, நியமம். அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நிலைகளையும் முழுதாக உள்வாங்கி முறை செய்யக்கூடிய சொல் மறை அல்ல. எனவே திருக்குறளை உலகப்பொதுமுறை என அழைப்பதே பொருத்தம்.
திசைகாட்டும் கருவி: திசைகளின் தேர்வு தெளிவாய் இருந்தால் வழிகள் பிறக்கும்; வாசல்கள் திறக்கும். வழிகாட்டிகள் உடன் வருபவர்கள் அவர்கள் யோசிக்க விடுவதில்லை. ஆனால் திசைகாட்டும் கருவி தீர்க்கமானது. தெற்கு வடக்கைத் தெரிவிக்கும். தேர்ந்தெடுக்கவேண்டியது நாம்தான். திசை என்பது திக்கு. திருக்குறள் காட்டும் திசை தெளிவானது. தீர்க்கமானது.அறத்தின் திசையாகவும் திருக்குறள் உள்ளது. அறம் நோக்கமாகவும், பயன்பாடாகவும், வழிமுறையாகவும் இருக்கிறது. அறநோக்கம், அறவழி, அறப்பயன் அதுவே அறத்தை பொருளை, இன்பத்தை வழி நடத்துகிறது.அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடைபல்லக்கை மாந்தன் சுமக்க, அதில் இருந்து மாந்தன் செல்வது, அறநெறி ஆகாது என்கிறது குறள்.பொருளுக்கும் அறமே அடிப்படை செயல்வகை என்ற சொல்லாடலை மூன்று இடங்களில் திருவள்ளுவர் கையாளுகிறார். தெரிந்து செயல்வகை, வினை செயல்வகை, பொருள் செயல்வகை.
அறம் பொருள் இன்பம் என்ற முப்பரிணாமக் கோட்பாடுகளும் ஒன்றை ஒன்று சாந்தனவாய் சாத்திய ஒருங்குடையதாய் உள்ளன. இந்த மூன்றுக்கும் அடிப்படை நிபந்தனையாய் இருப்பது அறமே.
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்வானின்றி அமையாது ஒழுக்கு” என நீர்ப்பொருளாதாரத்தை உலகிற்கே முதலில் அறிமுகப்படுத்தியது திருக்குறள்தான். வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் குறள் தெளிவுபடுத்துகிறது. வள்ளுவரின் அறம், சமயம் சாராத அறம். இடம், காலம், வலிமை சார்ந்த நடைமுறை அறம். மனித வளத்தில் முதலீடு செய்யும் முதல் அறநூல். திருக்குறள் காட்டும் அடிப்படைத் திசை அறம். அந்த அடிப்படைக்கு அடிப்படையாய் அடையாளம் பெறுவது மனச்சான்று. அச்சம் சார்ந்த அறம் அறமல்ல. பயன், புகழ் நோக்கும் அறம் உண்மையில் அறம் அல்ல. மனநலம் காக்க மருந்தொன்று உண்டு என்றால் அது தினம் ஒரு திருக்குறள் படித்து உணர்வது தான்.
BalakrishnanI.A.S.,oddissa- பாலகிருட்டிணன் இ.ஆ.ப.,  கூடுதல் தலைமைச் செயலர்(நிதித்துறை),ரிசா

கவிதை உறவு 43 ஆம் ஆண்டு விழா


வைகாசி 4, 2046 / மே 18, 2045 

திங்கட் கிழமை

சென்னை

kavithaiuravu43.04
kavithaiuravu43.02கவிதைஉறவின் 43ஆம் ஆண்டு விழாவில் ஏர்வாடி இராதாகிருட்டிணன்  எழுதிய ‘கவிதைஉறவு’ தலையங்கங்களின் தொகுப்பான ‘உங்கள் கனிவான கவனத்திற்கு‘ நூலை இந்தியச் சேம(ரிசர்வ்) வங்கி மண்டல இயக்குநர்  மரு. சதக்கத்துல்லா வெளியிட தொழிலதிபர்   மரு. டி முருகசெல்வம் பெற்றுக்கொண்டார்.நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
kavithaiuravu43.01  கவிதை உறவு 43ஆம் ஆண்டு விழா மலர் தேசியமாமணி இல கணேசன் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் மலரை கிருட்டிணா  இனிப்பக முரளி பெற்றுக்கொண்டார். மலர் மிகச் சிறப்பாக வெளி வந்துள்ளது. மலர் வேண்டுவோர் உரூ 150 அனுப்பினால், தூதஞ்சலில் அனுப்பப்படும். கவிதை உறவு 420 இ, மலர்க்குடியிருப்பு அண்ணாநகர் மேற்கு சென்னை 600 040
ervadi43.03
  கவிதை உறவு 43ஆம் ஆண்டு மலரின் அழகிய அட்டைப்படம் இது. நண்பர் மதிராசின் கைவண்ணம். கவிஞர்கள் தமிழன்பன், முத்துலிங்கம், வேழவேந்தன் பேராசிரியர் அய்க்கண், ஏர்வாடியார் போன்றோர் தம் படைப்புகளோடு மதுரை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், தேசியமணி இல கணேசன், திராவிடர் கழகத்தலைவர் திரு கி வீரமணி, கவிப்பேரரசு வைரமுத்து, திரு வி சி. பி சந்தோசம் போன்றோர் தம் வாழ்த்துகளோடும் கவிதை உறவு ஆண்டு விழாவில் வெளியானது . படித்து மகிழவும், பாதுகாத்துப் பெருமையுறவும் தக்கப் பனுவல்.

இலக்கிய வீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்

சண்டைகளும் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே

vivekanandar_1

மதச் சண்டைகளும் வேற்றுமைக் கலகங்களும்

பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே

  இதனை நன்குணர்ந்தே சுவாமி விகேகாநந்தரும் மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருத்தலும், இருப்பதும் சமசுகிருத மொழியாகும் என்றும் சமசுகிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றும் வருந்திக் கூறினார்.
- தமிழ்க்கடல் மறைமலையடிகள்