ஹைதராபாத், ஆக.24: உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் இந்தியக் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.விஸ்வநாதன் ஆனந்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக ஹைதராபாத் பல்கலைக்கழகம், மத்திய மனிதவள அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. அமைச்சகம் அதற்கு அனுமதி வழங்காமல், விஸ்வநாதன் ஆனந்த் இந்தியக் குடியுரிமை பெற்றவரா என்ற கேள்வியை எழுப்பியது.தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த் சில ஆண்டுகள் ஸ்பெயினில் இருந்தார். இருப்பினும் இந்திய பாஸ்போர்ட்டையும் அவர் வைத்துள்ளார்.ஆனந்தின் பாஸ்போர்ட் நகலை ஒப்படைத்து, ஏராளமான விளக்கங்களை அளித்த பின்னரும், மனிதவள அமைச்சகம், டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான கோப்பை நிறுத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதையடுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழாவையும் ஒத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்தது.பல்கலைக்கழகத்தின் கணிதப் பேரவை சார்பில் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் பட்டத்தைப் பெற, முன்னதாக விஸ்வநாதன் ஆனந்த், தன் மனைவி அருணாவுடன் ஹைதராபாத் சென்றிருந்தார். ஆனால், பல்கலையின் இந்த அறிவிப்பால் வருத்தம் அடைந்து, இந்த டாக்டர் பட்டத்தை ஏற்கப் போவதில்லை என்று ஆனந்த் தெரிவித்தார். செய்தியைக் கேள்விப்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டுக்காக விளையாடி கௌரவம் தேடித்தந்த ஆனந்த் அவசியம் இந்தப் பட்டத்தைப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 5:36:00 PM
8/24/2010 5:36:00 PM


By M.J.AJMEERALI
8/24/2010 5:33:00 PM
8/24/2010 5:33:00 PM


By Siva
8/24/2010 5:31:00 PM
8/24/2010 5:31:00 PM


By nirmal kumar
8/24/2010 4:21:00 PM
8/24/2010 4:21:00 PM


By sar
8/24/2010 4:18:00 PM
8/24/2010 4:18:00 PM


By Observer
8/24/2010 4:17:00 PM
8/24/2010 4:17:00 PM


By Krishnan
8/24/2010 3:34:00 PM
8/24/2010 3:34:00 PM


By K.Thirumalairajan
8/24/2010 3:26:00 PM
8/24/2010 3:26:00 PM


By bliss
8/24/2010 2:45:00 PM
8/24/2010 2:45:00 PM


By MANI
8/24/2010 2:35:00 PM
8/24/2010 2:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்