வாழ்த்துப் பேழை நூல் வெளியீடு

 ValanArasu Ayya02
பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா ஆனி 1, 2045 / 15.06.2014 ஞாயிறு காலை பத்து மணிக்கு நெல்லை சானகிராம் உணவக மிதிலை அரங்கில் நடைபெற்றது.
வழக்கறிஞர் ப.தி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்மாமணி சிதம்பரப் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட ஆட்சியர் மாட்சிமிகு இலட்சுமிகாந்தன் பாரதி ”வாழ்த்துப் பேழை” நூலை வெளியிட்டுப் பேசினார். தேசியப் பாவலர் த.மு.சா.காசாமைதீன் முதற் சுவடியைப் பெற்றுக் கொண்டார். தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அருள்மிகு அந்தோணிராசு முதலிய பதினைவர் வாழ்த்துரை நல்கினர்.
பேராசிரியர் பா.வளன் அரசு ஏற்புரை வழங்கினார்.
நல்லாசிரியர் க.ஞா.சாண்பீற்றர் நன்றி நவின்றார்.
பவளவிழா வாழ்த்துப் பேழையின் பதிப்பாசிரியர்கள் பாவலர் இராமாநுசக் கள்ளப்பிரான், தமிழ்மாமணி உல.சிதம்பரப் பாண்டியன், நல்லாசிரியர் க.ஞா.சாண்பீற்றர் ஆகியோராவர்.
உரூபாய் 100 மதிப்புள்ள இப்பேழையை, கதிவரவன்பதிப்பகம் (3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை – 627002; பேசி: 0462-2579967; 7598399967) வெளியிட்டுள்ளது.
ஆன்றோர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், மாணாக்கர்கள் முதலான தொண்ணூற்று மூவர், எல்லார்க்கும் தொண்டராயும் தோழராயும் திகழும் அறிஞர் பா.வளன்அரசு அவர்களின் பெருமையைக் கூறி வாழ்த்தியுள்ளனர்.
விழாவில் பவளவிழா நாயகரின் குடும்பத்தினரும், நெல்லைத் தமிழன்பர்களும் கல்வித்துறையினரும் புலவர்களும் அறிஞர்களும் ஆன்றோர்களும் தமிழ் அமைப்பினரும் பங்கேற்று விழா நாயக-நாயகியரை வாழ்த்தினர்.
பவளவிழாவினைக் காணும் பண்பாளர் பா.வளன் அரசு அவர்களை ‘அகரமுதல’ இதழும் வாழ்த்தி மகிழ்கிறது.

வளனும் நலனும் அளவிலா ஆண்டு

வளனார் எய்தி வாழ்க இனிதே!



ValanArasu Ayya01