நல்லுறவு உள்ள நாடு என அடிக்கடி இந்தியத்தால் போற்றப்படும் சிங்களம் மீது கொள்ளைக்கார, கொலைகாரக் கூட்டாளி முறையீடு செய்ய வாய்ப்பில்லை. எனவே, இந்தியாவில் உள்ள கட்சி அமைப்புகளும் மனித நேய அமைப்புகளும் பன்னாட்டு நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புது தில்லி, பிப். 4: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார். இது தொடர்பாக புது தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: இந்திய கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்கிறது. இது எல்லாவிதமான சர்வதேச விதிமுறைகளுக்கும் எதிரானது. இப் பிரச்னை குறித்து தூதரக அளவில் எடுத்துச் செல்வதை இந்தியா நிறுத்த வேண்டும். இப் பிரச்னையை இன்னும் தீவிரமாக மத்திய அரசு அணுக வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவரே (இலங்கை) நடத்தும் விசாரணை நியாயமாக இருக்க முடியுமா? எனவே, இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட வேண்டும். 1974-ல் செய்து கொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும். இப் பிரச்னையில் தி.மு.க. தனது கடமையிலிருந்து நழுவமுடியாது என்றார்.
ஆனால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினாலோ ஈழத்தலைவர்களின் படங்களை மாடடினாலோ உயிர்க்கொடை கொடுத்த தமிழர்களின் படங்களை வைத்திருந்தாலோ தமிழ்நாட்டில் குற்றம் என்கிறது காவல்துறையும் கோவன் குழுவும். எப்பொழுது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் .
புது தில்லி, பிப். 4: தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அசாமைச் சேர்ந்த அருப் பூயான் என்பவர், தடை செய்யப்பட்ட அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறி அவருக்கு குவாஹாட்டியில் உள்ள சிறப்பு தடா நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது: ஒருவர் வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது வன்முறையில் ஈடுபடும்படி பொதுமக்களைத் தூண்டினாலோதான் அவரைக் குற்றவாளி என கருத முடியும். இவற்றில் ஈடுபடாமல், தடை செய்யப்பட்ட அமைப்பின் செயல்படக் கூடிய அல்லது செயல்படாத உறுப்பினராக இருந்தால் அதைக் குற்றமாகக் கருதக் கூடாது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் உல்ஃபாவின் உறுப்பினர் என்பதற்கு போலீஸôரிடம் அவர் அளித்த வாக்குமூலம் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது. ஒப்புதல் வாக்குமூலம் என்பது மிகவும் பலவீனமான ஆதாரம். குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற இந்தியாவில் போலீஸôர் மூன்றாம் தர நடைமுறைகளைப் பின்பற்றுவது அனைவரும் அறிந்ததே. எனவே, ஒப்புதல் வாக்குமூலத்துடன் வலுவான ஆதாரங்கள் உள்ளதா என்பதை தீர்ப்பு வழங்குவதற்கு முன் நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் விஞ்ஞானரீதியில் விசாரணை நடத்துவதற்கு போலீஸôருக்கு பயிற்சி இல்லை. அதற்கு வேண்டிய சாதனங்களும் இல்லை. எனவே, சுலபமான வழியாக, குற்றம்சாட்டப்பட்டவரை துன்புறுத்தி வாக்குமூலங்களைப் பெறுகின்றனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், தடா நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர். மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என மனித உரிமை ஆர்வலரும், டாக்டருமான விநாயக் சென்னுக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பெண்கள் பெட்டியில் இருந்து யாரோ ீகீழே விழுவதைப் பார்த்த தொடர்வண்டிக் காப்பு ஊழியர் உடனே வண்டி யை நிறுத்தச் செய்து முதல் உதவிக்கு முயலாமல் அடுத்த நிலையம் சென்றதும்தான் காவல்துறையில் முறையீடு செய்துள்ளார். இவரைப் பணநீக்கம் செய்து வழக்கு தொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறருக்கேனும் கடமை உணர்ச்சி வரும். காம வெறியனுக்கும் கடுந்தண்டனை தர வேண்டும். பெண்ணிற்கான முழு மருத்துவச் செலவையும் குடும்பத்திற்கான உதவியையும் தொடர்வண்டித்துறை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் .பெண் இத்துறையின் அமைச்சராக இருக்கும் பொழுதே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதே!
திருச்சூர், பிப். 4: கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு கற்பழித்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் ஷொர்ணூரைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எர்ணாகுளம் - ஷோர்ணூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது சொந்த ஊருக்கு ரயிலில், பெண்கள் பெட்டியில் சென்றார். அந்த பெட்டியில் அவர் மட்டும் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெட்டிக்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை அப்பெண் தடுக்க முயன்றுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து வெளியில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் அவரும் கீழே குதித்து அந்தப் பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதனிடையே, பெண்கள் பெட்டியில் இருந்து யாரோ கீழே விழுவதைக் கடைசிப் பெட்டியில் இருந்து கவனித்த ரயில் கார்டு, ஷொர்ணூர் ரயில் நிலையம் சென்றதும் ரயில்வே போலீஸôரிடம் அதை தெரிவித்துள்ளார். இதையடுத்து படுகாயம் அடைந்து தண்டவளாத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் மீட்கப்பட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தக் கொடிய செயலில் ஈடுபட்ட நபரை போலீஸôர் தேடிவந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை போலீஸôர் கைது செய்துள்ளனர். அவர் ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர் எனவும் இடது கையை இழந்தவர் எனவும் போலீஸôர் கூறினர். அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். கொலை முயற்சி, அபாயகரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கோவிந்தசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 307, 326 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு ஆண்மை சோதனை செய்யப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-வது பிரிவின்படி கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யலாம் என பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப்பெண்ணின் உடல்நலத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தலையில் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் மூளையில் ரத்தக் கசிவு உள்ளதாகவும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்
பாராட்டுகள். பிற பல்கலைக்கழகங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும். சேப்பியார் சிலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழ் மொழி சார்ந்த இவைபோன்ற திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றுடன் தமிழ் நாட்டில் பயிலும் அயல் மாணவர்களுக்காகன தமிழ் மொழிப் பயிற்சித் திட்டத்தையும் சேர்க்க வேண்டும்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்பேராயம் தொடக்க விழாவில் தமிழ் நாள்காட்டியை வெளியிட
தாம்பரம், பிப். 3: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ப்பேராயம் மூலம் ஆண்டுதோறும் 10 தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து, ரூ.19 லட்சம் விருது வழங்கி கெüரவிப்போம் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறினார். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் என்ற புதிய அமைப்பை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது: தமிழ்மொழி தொடர்பான பல்வகைப் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் தமிழ்ப்பேராயம் மூலம் தொன்மைக்கும்,பழமைக்கும் சான்றாகத் திகழும் தொல்காப்பியத்தை அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் தொல்காப்பியப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொல்காப்பியச் சான்றிதழ் வகுப்பு, பட்டய வகுப்புகள் நடத்துதல், தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுப்பேருரைகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ் சமயக் கல்வித் துறையின்கீழ் தமிழகச் சமய வரலாறு, தமிழ் வாழ்வியல் சடங்குகள் உள்ளிட்ட பாடதிட்டத்தைக் கொண்ட தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இணையவழிக்கல்வி மூலம் தமிழ் முதுகலை, தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளும் பயில வகை செய்யப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி போன்று ஆண்டுதோறும், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த சிறுகதைக்கு புதுமைப்பித்தன் விருதும்,கவிதைக்கு பாரதியார் விருதும்,குழந்தை இலக்கியத்திற்கு அழ.வள்ளியப்பா விருதும்,மொழிபெயர்ப்புக்கு ஜி.யு.போப் விருதும்,அறிவியல் படைப்புக்கு பெ.நா.அப்புசாமி விருதும், நுண்கலைக்கு ஆனந்தகுமாரசாமி விருதும்,தமிழ் இசைக்கு முத்துத்தாண்டவர் விருதும்,35 வயதுக்குட்பட்ட தமிழ் ஆராய்ச்சிப்படைப்பாளிக்கு வளர் தமிழ் விருதும்,ரொக்கப்பரிசு தலா ரூ1.5 லட்சமும் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தமிழறிஞருக்கு பரிதிமாற்கலைஞர் பெயரில் மதிப்புறு தகைஞர் விருதுடன் ரொக்கப் பரிசு ரூ.2 லட்சமும்,வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தமிழ்ப் பேரறிஞருக்கு பச்சமுத்து பைந்தமிழ் விருதுடன், ரொக்கப்பரிசு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்றார் டி.ஆர்.பச்சமுத்து. விழாவில் தமிழண்ணல், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி,சிலம்பொலி சு.செல்லப்பன், ஆர்.இளங்குமரன், ஈரோடு தமிழன்பன், சிற்பி பாலசுப்பிரமணியன், என்.தெய்வசுந்தரம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக முதன்மைக் கல்வி அதிகாரி எம்.பொன்னவைக்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற சிறப்புகளை வரலாறு கண்டிப்பாகப்பாராட்டும். தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றிய நற்பணிகைளப் பாராட்டும் வரலாறு இத்தகையவர் ஈழத் தமிழர் ஒழிப்பிற்குத் துணை நின்ற அவலத்தையும் பதியும் என்பதை மறக்க வேண்டா. காலம் கடக்கவி்ல்லை. ஈழத் தமிழர்கள் தன்னுரிமையுடன் தம் நாட்டில் தனி நாட்டில் வாழ உரிய பணி ஆற்றினால் வையகம் உள்ள வரை கலைஞர் பெயர் நிலைத்திருக்கும். ஆங்கிலேயர் வஞ்சகத்தால் தமிழர் உரிமைகள் சிங்களவர்களிடம் அடகு வைக்கப்பட்ட இன்றைய துயர நாளிலேனும் குலைஞர் சிந்தி்த்து அடிமைத் தளையை அறுக்க உதவலாம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, பிப். 3: ஏழை, எளிய மக்களுக்கும் செல்போனைக் கொண்டு சென்றவர் ராசா என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நமது உள்ளங்களிலே அதிர்ச்சி ஏற்படுத்திய செய்தி குறித்த தீர்மானம் நமது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராசாவைக் கைது செய்தது தொடர்பானது இந்தத் தீர்மானம். ராசா இந்தத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை, எளிய மக்களுக்கும் செல்போனைக் கொண்டுசென்றதுதான். செல்போன் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதாக, பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. இப்போது நாற்று நடச் செல்லும் பெண்களும், தையல் வேலைக்குச் செல்லும் பெண்களும் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த விலையில், குறைந்த வாடகையில் செல்போன் பயன்படுத்துவதற்கான நிலையை ஏற்படுத்திய பெருமை இன்று தில்லிச் சிறையில் வாடும் ராசாவுக்கு உண்டு. அந்த ஏழை, எளிய மக்களின் சார்பாக தில்லியில் உள்ள ராசாவை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். நம்மவர்கள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துத்தான் தீரவேண்டும். இதுபோன்ற கொடுமைகளின் மூலமாகத்தான், இந்த சமுதாயத்துக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்ற உணர்வு வரும். அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் போன்ற பணிகளை எந்தப் பத்திரிகைகளும் பாராட்டி எழுதவில்லை. யாரும் தடுக்க முடியாது: திருவள்ளுவர் சிலை, சட்டப் பேரவைக்கான உயர்ந்த கட்டடம் ஆகியவற்றைப் பற்றி இவர்கள் எழுதாமல் இருக்கலாம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதி இருந்தான் என்று வரலாறு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கூட, நான் எழுப்பிய மாளிகைகள் இருந்து அதைச் சொல்லும். என் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நான் ஆற்றிய காரியங்கள் தமிழ் மக்களுக்காக, தமிழ்ச் சமுதாயத்துக்காக நான் ஆற்றிய பணிகளை ஏடுகள் கூறாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் வரலாற்றில் நிலைக்கத்தான் போகிறது. அதை யாரும் தடுக்க முடியாது என்றார்.
களங்கப்படுத்தும் காங்.உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவிக்க என்ன தயக்கம்? ஈழத் தமிழர்களைக் கொன்றதற்கே உடன்பட்டவர்கள் கட்சிக் களங்கத்திற்கா கவலைப்படப் போகிறார்கள்? ஆட்சிக் களங்கத்தை அதிகாரச் சுவை மறைக்கிறதோ! களங்கம் கண்டு பொங்கி எழுந்து துடைப்பீர்! அல்லது எதுவும் பேசாமல் அமைதி காப்பீர்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, பிப். 3: தி.மு.க.வை களங்கப்படுத்தவே ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து கூறுவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகப்போகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பீரமாக மக்களைச் சந்திக்கும் நிலையில் நாம் உள்ளோம். நமது ஆட்சியைக் குறைச் சொல்ல முடியாதவர்கள், திட்டமிட்டு, சதி செய்து, மீண்டும் தி.முக. ஆட்சிக்கு வரக் கூடாது என்று பலர் ஒன்றுசேர்ந்து பல செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஸ்பெக்ட்ரம் என்ற பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர். இதுதொடர்பாக, தி.மு.க. செயற்குழுவில் சிறப்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ராசா சி.பி.ஐ. விசாரணைக்குச் செல்லவில்லையா? கைது என்ற நிலை வந்த போது கூட உடன்பட மறுத்தாரா? இல்லையே. எந்தக் குற்றமும் செய்யாத ராசாவை, தி.மு.க.வை களங்கப்படுத்த ஜெயலலிதா தொடர்ந்து பொய் குற்றச்சாட்டைக் கூறி வருகிறார் என்றார் ஸ்டாலின். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன்: தி.மு.க.வை அண்ணா தொடங்கவில்லை என்றால் தமிழர் என்ற உணர்வே இல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளும் நிலை தொடர்ந்து இருந்திருக்கும். தமிழகத்தில் 6-வது முறை முதல்வராக வருவார் என்று இங்கே பேசியவர்கள் தெரிவித்தனர். முதல்வர் என்ற பதவி அவருக்குப் பெரியதல்ல. அரசியலில், எழுத்தில், இலக்கியத்தில், நிர்வாகத்தில் அவர் பெற்றுள்ள மதிப்பு ஆகியவற்றைப் பார்க்கும்போது தமிழை, தமிழர்களை 6-வது முறையாகப் பாதுகாப்பார் என்றுதான் கூற வேண்டும் என்றார் அன்பழகன்.
<அபரிமிதமான வெற்றியைத் தடுக்கலாமே தவிர> எச்சரிக்கையான சொற்கள்.தோல்வி வரும் என்று பேச்சிற்குக்கூடச் சொலலவில்லை. நாநலச் சிறப்பு இன்றும் குறையவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, பிப். 3: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது ஓரளவு கலங்கவும், அதிர்ச்சி அடையவும் வைப்பதாக திமுக பொதுக்குழுவில் அதன் தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் வியாழக்கிழமை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி ஆற்றிய உரை: "பொதுக்குழு கூட்டப்படுகின்ற நேரத்தில் வழக்கம்போல் வந்துள்ள ஒரு சோதனை இன்றைய தினம் நம்மையெல்லாம் ஓரளவு கலங்க வைத்து இருக்கிறது. அதிர்ச்சி அடைய வைக்கிறது. நம்முடைய மகிழ்ச்சியை, ஆர்வத்தை குறைக்கின்ற நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது. ஆனால், உண்மையின் ஒளி விரைவில் தெரியத்தான் போகிறது. பொதுத்தேர்தல் - சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் வர இருக்கிறது. முதலில் ஓராண்டு - அரையாண்டு - என்றெல்லாம் கருதப்பட்டு இப்போது நாட்களை எண்ணி -இத்தனை நாட்களில் நாம் தேர்தல் களத்தில் இறங்க இருக்கிறோம் என்ற அளவில் அந்தக் கட்டம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தில்லி சென்று வந்த பயணம் வெற்றியா தோல்வியா என்பதைத் தேர்தலில் நீங்கள் (கட்சியினர்) ஆற்றும் பணியைப் பொறுத்துதான் என்னால் சொல்ல முடியும். எனவே, சிறிய விஷயங்களை - ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய விஷயங்களை பெரிதுபடுத்தி பகைமையாக்கிக் கொள்ள வேண்டாம். நமக்குள்ளே இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகள், நமக்குள்ளே உருவாகின்ற பகை உணர்ச்சிகள், விரோத எண்ண மனப்பான்மை - ஒற்றுமையின்மை... இவைகளெல்லாம் ஒருவேளை நம்முடைய அபரிமிதமான வெற்றியைத் தடுக்கலாமே தவிர நம்முடைய ஆற்றலோ -நம்முடைய சாதனைகளோ நாம் தோற்றுப் போவதற்கு நிச்சயம் காரணமாக இருக்காது என்ற நம்பிக்கையை நான் பெற்று இருக்கிறேன். அந்த நம்பிக்கையுடன் நீங்கள் செயலாற்றுங்கள்; பணிபுரியுங்கள். தேர்தலை எதிர்கொள்ளுங்கள். அப்படித் தேர்தலை எதிர்கொள்கின்ற நேரத்தில் எத்தனை எத்தனை சங்கடங்கள் ஏற்படும் என்பதையெல்லாம் இப்போது அறுதியிட்டுக் கூற முடியாது. அவ்வப்போது ஏற்படக்கூடிய எந்தச் சூழ்நிலை ஆனாலும் அதிலே ஏற்படக்கூடிய எந்த நிலையானாலும் அவைகளை எதிர்கொள்ளக்கூடிய சாதுரியமும், ஆற்றலும் கட்சியினருக்கு உண்டு. ஆகவே, தவிர்க்க வேண்டியது பகை உணர்வு ஒன்றுதான். இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவதை விட நம்மை வீழ்த்துவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு வாளை உயர்த்திக் கொண்டு முரசு முழக்கிக் கொண்டிருக்கின்ற எதிரிகள் - பகைவர்கள் அவர்கள் வீழ்ந்தார்கள். இந்த திராவிட இனம் காக்கப்பட்டது என்ற உறுதியை உலகத்துக்கு அறிவிப்பீர்கள். நம்மை வீழ்த்த யாரும் கிடையாது என்ற உள்ளத்தோடு நடைபோடுங்கள்' என்றார் கருணாநிதி.
ஒரு வகையில் எல்லாத் தீர்மானங்களும் பாராட்டப்பட வேண்டியவையே. மற்றொரு நோக்கில் பார்த்தால் கச்சத்தீவைத திரும்பப் பெறக் கோர இயலாமல் ஒப்பந்தம் குறித்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் ஈழம் தமிழர் தாயகம் என்பதை ஏற்காமல் அதிகாரப் பகிர்வு என்ற போலிப் பாட்டு எதற்கு? தமிழ் மொழிக் குடும்பம் என்று சொல்லாமல் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்வது ஏன்? தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேணடும் எனக் குழப்பாமல் தமிழை உயர் நீதிமன்ற மொழியாகவும் உச்ச நீதி மன்ற மொழியாகவும் ஆக்குமாறு வலியுறுத்தாதது ஏன்? வளவள கொழ கொழாத் தீர்மானங்கள் ஒப்பிற்காகப் போடப்பட்ட சடங்கா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்கு
சென்னை, பிப். 3: கச்சத்தீவில் தமிழக உரிமைகளை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று திமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், இலங்கைத் தமிழர் பிரச்னை உட்பட ஏழு முக்கிய விஷயங்களில் மத்திய அரசை வலியுறுத்தி திமுக பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களிடம் திமுக தனது கருத்துகளை எடுத்துரைத்து, முழுமையானதும் உண்மையானதுமான கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதை திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில் மகளிர்க்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்ட முன்வடிவு அவ்வப்போது ஏற்படும் கருத்து மாறுபாடுகளால் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, நாடாளுமன்றம், சட்டப் பேரவைகள் ஆகிய ஆட்சி மன்றங்களில் மகளிர் உரிமை பெறுவதை மேலும் காலம் தாழ்த்தாமல் 33 சதவீத இடஒதுக்கீடு மகளிர்க்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க, இனியும் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாது எனவும், மேலும் இந்தப் பிரச்னையில் அவ்வப்போது சுமுக முடிவுகள் மேற்கொள்வதற்காக இரு சாராரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக்குழு நியமிக்க இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய-இலங்கை இடையே நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டு, பிறகு கைவிடப்பட்ட கச்சத்தீவில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கேற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கையில் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சத்து 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். அதற்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் வந்த காரணத்தால் எஞ்சியவர்களை வாழ்விடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அவர்களும் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும் மத்திய அரசு இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டும். ஏற்கெனவே உறுதியளித்தபடி இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர சகவாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதால் அதற்கான அரசியல் தீர்வினைக் காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும். சேது சமுத்திர திட்டம்: இந்த திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும். மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவும், தென் மாவட்டங்கள் பெருமளவுக்கு வளர்ச்சி பெறவும் வழிவகுத்திடும் சேது சமுத்திர திட்டத்தின் எஞ்சிய பணிகளை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால் முதல் கட்டமாக திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழ்: உயர் நீதிமன்றங்களை மக்கள் அணுகக் கூடிய நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வெளியிடப்படுவதை அந்தந்த மாநில நீதிமன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கண்காணிப்பு முறை சரியோ தவறோ! ஆனால், அமெரிக்கப் பல்கலைக் கழகத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு அறம் வழங்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்பதை நன்கு உணர்தியுள்ளீர்கள். நன்கு எழுதப்பட்டுள்ள தலையங்கம். பாராட்டுகள்.
இந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டாகிங் கூடாது என்று கண்டனம் தெரிவித்து கடந்த நான்கு நாள்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும்கூட இது முறையல்ல என்று அமெரிக்க அரசின் நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளார். பல்வேறு கட்சிகளின் இளைஞர் பிரிவுகள் அமெரிக்கத் தூதரகங்களை முற்றுகையிடும் போராட்டங்களையும் நடத்தின. இதனால் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதுடன் -இது பொதுவான நடைமுறைதான், இவர்களை நாங்கள் குற்றவாளிகள்போல நடத்தவில்லை, ஆனால் கண்காணிக்கிறோம்-என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருக்கிறது. விசா இல்லாதவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பது, அவர்களை நாடு கடத்துவது ஆகிய வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், விசாரணை முடியும்வரை அவர்கள் எந்த இடத்துக்கும் சுதந்திரமாக நடமாட அனுமதித்திருப்பதன் அடையாளம்தான் இந்த ரேடியோ டாகிங் என்று விளக்கமும் அளித்திருக்கிறது. ரேடியோ டாகிங் எனப்படும் சிறு கருவியை உடலோடு கட்டி வைப்பதன் மூலம், அவர்கள் எங்கே சென்றாலும் அவர்களைக் கண்காணிக்க முடியும். சாதாரணமாக, காட்டு விலங்குகள் எங்கெல்லாம் போகின்றன என்று கண்டறியும் ஆய்வுகளின்போது அந்த விலங்குகளின் கழுத்தில் கட்டப்படும் கருவி போன்றது இது. அதாவது இந்திய மாணவர்களை ஒரு விலங்குபோல ஆக்கியிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில், அதிலும் உலகம் முழுவதிலும் அமெரிக்கர்களுக்குத் தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாகச் சொல்லப்படும் வேளையில், தங்கள் நாட்டுக்கு முறைகேடாக விசா பெற்று வந்தவர்கள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் அமெரிக்கா செயல்படுவதை நாம் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால், தற்போது இந்த நிலைமைக்கு ஆளானவர்கள் நாடற்ற மனிதர்கள் அல்லர். இவர்கள் சொந்த நாடும் முகவரியும் உள்ள மாணவர்கள். இவர்கள் பெற்றுள்ள கல்வி விசா முறையற்றதாக இருக்கலாம். ஆனால், அதற்குக் காரணம் இவர்கள் அல்ல. இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டாகிலும் அமெரிக்க அரசு இந்த மாணவர்களை, மனிதர்களாக நடத்தவும், விதிவிலக்காகக் கருதி, ரேடியோ டாகிங் முறையைத் தவிர்க்கவும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அமெரிக்கத் தூதரகங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக் கண்காட்சியில் பங்கு கொண்டு தரமானதும் அரசின் அங்கீகாரம் பெற்றதுமான பல்கலைக்கழகங்கள் எவை என்று அறிந்து அவற்றுக்கு விண்ணப்பம் செய்தால் இத்தகைய நிலைமை ஏற்படாது என்பது அமெரிக்கா முன்வைக்கும் வாதம். ஆனால், இது எத்தனை மாணவர்களுக்கு சாத்தியம். மேலும் அமெரிக்காவில் படிப்பதுதான் ஒரு இளைஞனின் உயரிய குறிக்கோள் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி இருப்பதுகூட, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் குற்றம்தானே? அமெரிக்காவில் படிக்க வந்த நாள் முதலாகவே தனியார் நிறுவனங்களில் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம், கல்விக் கட்டணம் மிகக் குறைவு, பாடத்திட்டமோ ரொம்ப எளிது, தேர்வுகள் எளிமையானவை என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, மாணவர்களை அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. வருமானத்தில் துண்டு விழக்கூடாது என்பதற்காக, விதிமுறைகளை மீறிக் கல்வி விசா அளிக்கின்றன இப்பல்கலைக்கழகங்கள். இதற்குப் பலியானவர்கள்தான் தற்போது பிரச்னையில் சிக்கியுள்ள 1550 மாணவர்கள். இவர்களில் 90 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பதால் நாம் துடிதுடிக்கிறோம். விதிமுறைகளை மீறிய பல்கலைக்கழகத்தை மூடிவிட்டதால், சட்டத்தின் கடமை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அரசு கருதுகிறது. ஆனால், அங்கு படித்த மாணவர்களின் கதி என்ன? அவர்கள் இத்தனைக்காலம் படித்த படிப்பு முடிக்கப்படாமலேயே திரும்ப வேண்டியதுதானா? அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்கிற கடமை அவர்களுக்குக் கிடையாதா? இந்தியாவில், தரமான கல்வி வழங்காத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும்போது, அதில் பயின்றுவந்த மாணவர்கள் இந்தக் கல்லூரி எந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளதோ அதே பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள மற்றொரு கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிப்பது வழக்கம். அதேபோன்று, அமெரிக்காவில் டிரைவேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டாலும், தற்போது மாணவர்கள் படிக்கும் படிப்புக்கு இணையான படிப்பு எந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளதோ அங்கு சேர்ந்து பயில அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இதனால் கல்விக் கட்டணத்தில் செலவு அதிகரிக்கும் என்பது நிச்சயம். முறையாக விசாரிக்காமல் இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததற்கு தண்டனையாக அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டியதுதான். சற்று மாற்றி யோசித்துப் பார்ப்போம். இந்தியாவிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டிலோ ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு இதுபோல ரேடியா டாக் அணிவிக்கப்பட்டிருந்தால், இராக்குக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்காதா? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி நிலைதான் நமக்கு என்கிறது அமெரிக்கா. இந்திய அரசும் இதுபோன்ற அவமானங்களை மென்று விழுங்குகிறது. சுயமரியாதைப் பாடம் எடுக்க பெரியார்தான் பிறந்து வர வேண்டும்.
புதுதில்லி, பிப்.2: 2 ஜி ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டது திமுகவுடனான உறவை பாதிக்காது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.இப்போது நடந்துள்ளது சட்டம் அதன் கடமையைச் செய்துள்ள ஒரு நிகழ்வு என காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.இதுபோன்று அனைத்து வழக்குகளும் புலனாய்வு செய்யப்பட்டு, முறையாக விசாரிக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னதாகக் கூறியிருந்தது என திவிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்படி ஒரு மக்கள் எழுச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே! சூடு சொரணையற்றுப் போனமையால் சொந்தங்களை இழந்தோமே! இனியேனும் கலையட்டும் தூக்கம்! விலகட்டும் தமிழர்க்குப் பகையான ஆட்சி!
நான்கு நாள்களாக எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தெருவில் இறங்கி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் மட்டுமல்லாமல் அலெக்சாண்டீரியா உள்ளிட்ட எல்லா நகரங்களின் மையப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி நிலையங்கள், ஏன், அரசுக்கு ஆதரவான பத்திரிகை அலுவலகங்கள் அனைத்துமே தாக்கப்படுகின்றன.ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர்ப்புகை வீச்சிலும், தடியடிப் பிரயோகங்களிலும் காயமடைந்திருக்கிறார்கள். இணையதளம், செல்பேசி போன்றவை அரசால் முடக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுத்து வருகிறதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் போராட்டம் ஒன்று 1977-ல் எகிப்தை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்கு "ரொட்டிக் கலவரம்' என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுப் பஞ்சம்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணம். அன்றைய அதிபர் அன்வர் சதத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய அந்தக் கலவரத்தைப் போலவே, இந்த மக்கள் புரட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக்கூடும்.விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவல்களும், அல் ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் முனைப்புடன் கூடிய மக்கள் புரட்சிக்கு ஆதரவான செய்திகளும், எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கின்றன என்பது தெளிவு. மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் லஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத் திண்டாட்டம் என்று உலகின் வேறு பல நாடுகளிலும் காணப்படும் அதே நிலைமைதான் எகிப்திலும்!எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்தபிறகு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மெளனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக "அல்லாஹ் அக்பர்' கோஷம் எழுப்பப்படவில்லை. "ஆட்சி மாற்றம் தேவை' என்கிற கோரிக்கைதான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை.எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம்கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், ஜனநாயகமும் கேட்டுப் போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை - ""உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து!''.இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம்!சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா? உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்!
வேடிக்கை என்பதா? வெட்கம் கொள்வதா? வேதனை அடைவதா? சினம் கொள்வதா? சீற்றம் கொள்வதா? இது வரை 500க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிர் பறிக்கப்பட்டிருக்க இருவர் கொலை என்றே வெளியுறவு அமைச்சரும் செயலரும் பேசி உண்மையை மறைத்துத் தவறான கருத்தைப் பரப்பி வருகிறார்களே! நாட்டு மக்கள் கொல்ப்படும் பொழுது காரணமான வெளிநாட்டு உறவிற்கு ஊறு நேராத வகையில் கால், கை பிடித்து விடுவோம் என்பது என்ன கொள்கையோ! இப்படிப்பட்ட கட்சியை ஆளும் கட்சியாக ஆக்கும் நம்மைத்தான் நொந்து கொள்ள வேண்டும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
புதுதில்லி, பிப். 1: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை கடுமையான விஷயமாகக் கருதுவதாகவும், இதுதொடர்பாக இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தினார்.தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனிமேலும் தொடரக் கூடாது என்றும் இலங்கை அரசை அவர் கேட்டுக் கொண்டார்.கொழும்பில் திங்கள்கிழமை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் சந்தித்து, இந்த பிரச்னை குறித்து விவாதித்தார்.அதுகுறித்த விவரங்களை தில்லியில் முதல்வர் கருணாநிதியைச் செவ்வாய்க்கிழமை சந்தித்து கிருஷ்ணா விளக்கிக் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் கிருஷ்ணா கூறியதாவது:இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து விவாதிக்க இந்திய- இலங்கை கூட்டு செயல் குழுக் கூட்டத்தை பிப்ரவரி 15-ம் தேதி வாக்கில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு நிருபமா ராவிடம் அறிவுறுத்தியுள்ளேன்.எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது பழங்கதையாக இருக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்திலோ, வருங்காலத்திலோ ஒருபோதும் நடைபெறக் கூடாது. தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.பாகிஸ்தான் உள்பட இதர நாடுகளின் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் எவரும் கடற்படையினரால் தாக்கப்படுவதில்லை என்பதை இலங்கை அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க, இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாகச் செல்லும் தமிழக மீனவர்கள் மட்டுóம் அந்த நாட்டு கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காவது ஏன் என்றும் இலங்கை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இலங்கையுடன் இந்தியா மிகவும் இணக்கமான நட்புறவைக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்த விவகாரத்தில் இரு தரப்பு உறவுகள் பாதிக்காத வகையில் இலங்கை அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்த போது, இதுவிஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நிருபமா ராவ் தெளிவுபடுத்தினார். இந்தியாவின் கவலையைப் பகிர்ந்து கொண்ட ராஜபட்ச, தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்தப் புலனாய்வு அறிக்கையை எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இந்திய- இலங்கை கூட்டறிக்கையில், தமிழக மீனவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர்கள் எந்தவித இடையூறும் இன்றி மீன்பிடித் தொழிலில் தொடர்ந்து ஈடுபடலாம் என்றும் தெரிவிக்óகப்பட்டுள்ளது.இதுவிஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால், அத்தகைய நடவடிக்கையை எடுக்க எந்தவிதத் தயக்கமும் கிடையாது. நிறைய மீன்களைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மீனவர்கள் நமது கடல் எல்லையைத் தாண்டிச் செல்வது வழக்கமானதுதான். இதுவிஷயத்தில் மீனவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை அளிக்க நமது கடலோரக் காவல் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணா. கருணாநிதியை கிருஷ்ணா சந்தித்த போது, நிருபமா ராவும் உடனிருந்தார். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதற்கு இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை சந்தித்துப் பேசியபோது வலியுறுத்தினார்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் நமது கப்பல் படை, கடலோரக் காவல் படையை வலுப்படுத்த வேண்டும் என்றும் மன்மோகன் சிங்கிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் பேசுவதாக கருணாநிதியிடம் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.ஜனவரி 12, 22 ஆகிய தேதிகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
சிங்களக் கொலைத்தலைவருக்குச் சார்பாகச் செயல்படும் என்பதில் இருந்தே கு.ப. கட்சியின் நடுநிலைமை என்ன என்பது புரிந்து விடுகிறது. பாவம் கருணா! ஓரங்கட்டப்படுவாரா? உயிர் பறிக்கப்படுவாரா என்று தெரியவில்லை. இஙஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, பிப்.1- விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரத்துறையின் முன்னாள் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் விரைவில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்களவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு அக்கட்சி செயல்படும் என்றும், நடுநிலையான போக்கைக் கடைபிடிக்கும் என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவாக கே.பி.,யின் கட்சி செயல்படும் என்று கூறப்படுகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை, கே.பி. வடக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளை அங்கு சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அரசியல் கட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள அரசு மனித நேயத்தின்படியும் தன் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்காகத் தாய் இனததை வேரறுக்க வேண்டும் என்ற வெறி உணர்வை அகற்றியும் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் இந்திய அரசு தன் நாட்டின் குடிமக்களைக் காப்பாற்ற எவ்வகை நடவடிக்கைக்கும் ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால், இதற்கான வாய்ப்பு இன்மையால் அவற்றிற்கான வாய்ப்பும் இல்லை.
சென்னை, பிப்.1- இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி வந்தால், இந்தியா எப்படி சட்டப்படி நடக்கிறதோ அதுபோல் இலங்கையும் சட்டத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், கடந்த 2010-ம் ஆண்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சிறப்பான அணுகுமுறை காரணமாக நாட்டில் பெரிய அளவில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றும் தில்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:பிரதமரின் வழிகாட்டுதலில், மத்திய உள்துறை அமைச்சரின் நுணுக்கமான மற்றும் சீரிய அணுகுமுறைகளால், 2010-ம் ஆண்டு முழுவதும், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை இந்த அவையில் பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தமிழத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகவே விளங்கி வருகிறது என்பதை இந்த அவையில் குறிப்பிடுவதில் பேருவுவகை அடைகிறேன். மாநில அரசும், தமிழகக் காவல் துறையும் விழிப்புடனும், கண்காணிப்புடனும் தொடர்ந்து செயல்பட்டு வருவதன் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பெரிய அளவில் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அண்மையில், வனப்பகுதிகளில் தீவிரவாதப் பயிற்சி முகாம்களை நடத்திட இடதுசாரித் தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளைத் தமிழ்நாடு காவல்துறை முறியடித்துள்ளது என்பது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த அந்த அமைப்புகளின் உறுப்பினர்களையும் கைது செய்துள்ளது.மத்திய அரசின் ஆதரவோடு கடலோரப் பாதுகாப்பைத் தமிழகம் பலப்படுத்தியுள்ளது. 2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றபின் தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, கடலோரச் சுற்றுக் காவலுக்கென 24 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உட்பட தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் அவலத்தையும் இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன். அண்மையில் கூட, அதாவது 12.01.2011 அன்று, தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து 22.01.2011 அன்றும் மேலும் ஒரு மீனவரும் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நடந்துள்ளது. இவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும். இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தால் நமது நாடு அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளைப் போல இலங்கை அரசும் எல்லையைக் கடக்கும் இந்திய மீனவர்கள் மேல் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை இந்திய மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.உள்நாட்டுப் பாதுகாப்பைச் செம்மையாகப் பராமரிக்கவும், நிலைமைகளைத் தொடர்ந்து சீரிய முறையில் கண்காணிக்கவும் தமிழக அரசு எப்போதும் செயலாற்றும் என்று பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
சிங்கள அரசு நாளொரு கொலையும் கொள்ளையுமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பொழுது தமிழக மீனவர்கள் உயிர்ப்பறிப்பு குறித்து நாட்டின் தலைமையமைச்சருக்கு அவ்வளவாகத் தெரியாது என்று சொல்வது இழிவல்லவா? உண்மையில் அப்படித்தான் சொன்னரா என்று சரி பார்க்கவும். அதுதான் உண்மை யென்றால் தன் நாட்டுக் குடி மக்கள் அடுத்த நாட்டால் கொல்லப்படுவது குறித்து ஒன்றும் அறியாத தலைமையமைச்சரும் அவர் வழி நடத்தும் மத்திய அரசும் ஒன்றும் தெரிவிக்காத தமிழக அரசும் தேவைதானா என்று மக்கள் முடிவெடுப்பார்கள் அல்லவா?
"தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளது' என்று, முதல்வர் கருணாநிதி கூறியதற்கு, பா.ம.க., உடனடி பதிலடி கொடுத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வை காரணம் காட்டி, அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க நினைத்த தி.மு.க.,வின் திட்டம், "பணால்' ஆனது.
டில்லியில் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் உடனான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காகவும் தமிழக முதல்வர் கருணாநிதி, நேற்று முன்தினம் டில்லி வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசும்போது, "தற்போதைய நிலையில் எங்கள் கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன' என்றார்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் நேற்று பகல் 12 மணிக்கு, முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அரை மணி நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த கருணாநிதியிடம், "பா.ம.க, குறித்து நீங்கள் நேற்று தெரிவித்த கருத்துக்கு, நேர்மாறாக ராமதாஸ் பதில் கூறியுள்ளாரே' என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளிக்கும்போது, "நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூட்டணியில் எப்போது இணைவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றார். பா.ம.க., குறித்த முதல்வரின் நிலைப்பாடு ஒரே இரவுக்குள் மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தி.மு.க. கூட்டணியில் இம்முறை எப்படியும் முடிந்தளவுக்கு அதிகமான சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் துடிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரசுக்கு ஓரளவுக்கு அதிகமாக சீட்டுகளை அளிக்க தி.மு.க., தீர்மானித்திருந்தாலும், காங்கிரஸ் எதிர்பார்க்கும் அளவிற்கு சீட்டுகளை அள்ளிக் கொடுக்க தி.மு.க, தயாராக இல்லை. காங்கிரஸ் உடனான பேரத்தின் கடுமையை முடிந்தளவுக்கு குறைக்க தி.மு.க., பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான், மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கிடைத்த அமைச்சர் பதவிகளை தி.மு.க., ஏற்க முன்வராமல் தவிர்த்து விட்டது. இந்த வழியில், பா.ம.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், இட நெருக்கடியை காரணம் காட்டி காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை தர இயலாது என சமாளிக்கலாம் என்று தி.மு.க., திட்டமிட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திப்பதற்கு முன்பாகவே கூட்டணியில் பா.ம.க.,வும் உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் தான், காங்கிரசுடன் பேரம் பேசும் போது எளிதாக இருக்கும் என்று தி.மு.க, எதிர்பார்த்தது. இதன் மூலம் அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க தி.மு.க., நினைத்தது. இதனடிப்படையில், டில்லி வந்ததும், "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க, உள்ளது' என்று கருணாநிதி பேட்டியளித்தார்.
இப்பின்னணியை உணர்ந்த பா.ம.க., சுதாரித்துக் கொண்டது. முதல்வரின் கருத்தை மறுக்கும் விதமாக, உடனடியாக பா.ம.க.. மாற்றுக்கருத்தை நேற்று முன்தினம் இரவே வெளியிட்டது. இதை தி.மு.க., சற்றும் எதிர்பார்க்கவில்லை.இதன் காரணமாக, ஒரே இரவுக்குள் பா.ம.க., குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதில் அவசரப்பட்டு விட்டோமோ என்ற குழப்பமும் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதமருக்கு தெரியாது?பிரதமரைச் சந்தித்த பின், தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, மீனவர் பிரச்னை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு முதல்வர் பதில் அளித்தபோது, "மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவரும் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்' என்றார்.
உனக்கு ஏன்யா இந்த பொழப்பு.... இந்த வயசான காலத்துல புண்ணியம் தேடறத விட்டுட்டு இப்படி தள்ளு வண்டியில போய் உன் குடும்பத்துக்காக பிச்சை கேட்குறியே இது உனக்கே நல்லா இருக்கா... ஆச எவன விட்டுச்சி!!! வாய்ப்பு கிடைத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் 4G , 8G , 16G போன்ற விண்ணை முட்டும் சாதனைகளை செய்யலாம் என்று துடிக்கிறார் இந்த பெருசு!!!!
வெட்கம்..மூக்கறுபட்ட நிலையிலே உள்ள மனிதரை பார்க்க..! கேட்டால் அரசியல் சாணக்கியர் என்பார்.! சும்மா பம்மாத்து..ஜீரோ ஞானம் உள்ள ஓர் மனிதரை வானளாவ தனது ஏடுகளிலே, மற்றும் கைகூலிகளை கொண்டு புகழ்ந்தால் அதன் மதிப்பு இப்படித்தான் ஆகும். பா.ம.கவிற்கும் ஆப்பு..காங்கிரசுக்கும் ஆப்பு என்று கொண்டு சென்றவருக்கே இரண்டு ஆப்புக்களும்..சபாஷ்..!! எந்த முகத்தோடு வருவாரோ? ச்ச்சச்சோ..!! இந்த லட்சனத்திலே ஆ..ஆ..ஆறாவது தடவை முதல்வர் கனவு வேறு.! அரசியல் இப்படி என்றால் அதைவிட ஒரு கொடுமை..நமது மீனவர்களை பற்றி அவர்கள் கொல்லப்படுவதை பற்றி "அவ்வளவாய்"பிரதமருக்கு தெரியாதாம். எந்த லட்சணத்திலே இவரது "கடிதம்" சென்று சேர்ந்துள்ளது என்பதை பாருங்கள். உள்ளம் கொதிக்கின்றது!! எப்படியெல்லாம் இவர் தமிழக மக்களை ஏமாற்றி பிழைத்துள்ளார் என்று பாருங்கள். கேட்டால் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்..அப்புறமாய் தந்தி அனுப்பியுள்ளேன் என்றார். ஏன் இவரது கட்சி மந்திரிகளுக்கு அப்படி என்ன.. டுங்கற வேலையோ டெல்லியில் ? பிரதமரை பார்த்ததாய் சொன்ன இவரது மந்திரிமார்களும் கட்சி எம் பிக்களும் இவரால் சொல்லியபடி ஆடிய நாடகம் தானே? இப்படி நான் ஆவேசப்படுவதிலே தவறுண்டோ? பிரதமருக்கு தெரிந்த ஒரு சில விஷயங்கள் கூட அதிமுக மற்றும் வைகோ அவர்கள் கொண்டு சென்ற விஷயத்தால் தானே..! ஒரு குடும்பத்தலைவனை இழந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் படும் பாட்டை என்னென்று சொல்வது? வார்த்தை உண்டா? பெண்டு பிள்ளைகள் வாழும் வாழ்க்கை அவலங்களை இவர் ஏன் உணர மறுக்கின்றார்? எதற்க்காக இவரையெல்லாம் ஒரு பதவியிலே இருக்க விட வேண்டும்? தனது குடும்பம் மட்டுமே சுகமாய் வாழ வகை செய்தாரே அன்றி கொல்லப்படும் மீனவ சமுதாய மக்களை பற்றி ஏன் இவர் இவ்வளவு காலமாய் ஏமாற்றி வந்தார்? நான் ஆரம்பம் முதல் சொல்லிவருவதெல்லாம்..எம்ஜியாரை உளமார நேசித்த ஒரு சமுதாயம் அழியட்டும் என்கிற அலட்சிய போக்குதானே? இவரையும் இவரது திமுகவையும் இன்னுமா நாம் விட்டு வைக்க வேண்டும்? சிந்திக்கும் நேரம் அல்ல இது.."ஒழித்தே" தீரவேண்டும் என்கிற "முடிவெடுக்கும்" தருணம் இது..!! தவறினால் தமிழினமே அழியும் ..!! தவறுவோர் மடையர்களே..!! நாம் மடையர்கள் அல்ல என்பதை அவருக்கு உணர்த்துவோம்..!! நிச்சயம்..!
யாருப்பா அது முகத்த தொடச்சுக்குங்க. ஒரே கரியா இருக்கு. டாக்டர் அங்கயும் துண்ட போட்டுட்டு வந்துருகாரு . வி. கா. வோட கூட்டணி அறிவிக்காததால இவருக்கு இன்னும் மவுசு இருக்குன்னு நெனச்சுக்கிட்டிருக்காரு. வி. காந்தும் டாக்டரும் பிகு பண்ணினால்,யோசிக்காம தி. மு. க. வும் அ.தி.மு.க. வும் சரி பாதி தொகுதில நின்னு அனைத்து தொகுதியையும் கைப்பற்றலாம். எதிர்த்து நிற்கும் யாருக்கும் டெபொசிட் கூட கிடைக்காது. 21 /2 வருஷத்துக்கு ஒருத்தர் முதல்வருன்னு சொன்னா அத நம்ப முடியாது. அதனால ரெண்டு முதல்வர் இருக்கலாம். ரெண்டு துணை முதல்வர் இருக்கலாம். எலா துறைக்கும் ரெண்டு ரெண்டு மந்திரிங்க இருக்கலாம். இவங்கல கேள்வி கேக்க ஒரு பய இருக்க முடியுமா. ? பெரும்பாலான நாம இந்த ரெண்டு குட்டைல ஏதோ ஒன்னுலதன முழுகி குளிச்சிக்கிட்டிருக்கோம். இந்த ரெண்டு கட்சிக்குதான் , அவங்க எவ்ளோ மக்கள் விரோத ஆட்சி பண்ணினாலும் தேர்ந்தெடுக்கிறோம். இந்த காம்பினஷன் ரொம்ப நல்லா இருக்கும். சட்டசபையில கேள்வி கேக்க எதிர்க் கட்சிங்கன்னு ஒன்னும் இருக்காது.
ஏனோ தெரியவில்லை (நான் பகுத்தறிவு வாதி அல்ல) இவர் போடும் திட்டம் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கிறது. "Beware the ides of March" என்று ஜூலியஸ் சீசருக்கு முன்னறிவிப்பு வந்தது. அது போல கலைஞருக்கு "Beware the ides of May" (தேர்தல் வரும் மாதம்) என்று கூற வேண்டும் போலிருக்கிறது.
உமக்கும் உமது அமைச்சர்களுக்குமே மீனவர்கள் படும் கஷ்டம் பற்றி தெரியாது, பிரதமருக்கு எப்படி தெரியும்? மீனவர்களை பற்றி பேசவா நீர் டெல்லி சென்றீர். வழக்கமாக கடிதம். இல்லை என்றால் தந்தி அதை தவிர ஒமக்கு ஒன்னும் தெரியாதே ......இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ஹ....ஹ....ஹ...
மீனவர்கள் பத்தி அவ்வளவாக தெரியாது என்றால் என்ன ? அவர் பிரதம மந்திரியா இருக்கார், நீர் முதல் அமச்சரா இருக்கிறீர் ,அப்புறம் லெட்டர் எழுதினே என்று எத சொன்னே.