தமிழை வளர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு வழியாக தமிழ்த் திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைப்பதும் தமிழை வளர்க்கும் என்று அரசு கருதியதால் தமிழில் பெயரிட்டு வெளியாகும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதனால் தமிழும் வளரவில்லை, அரசுக்குக் கிடைக்க வேண்டிய கேளிக்கை வரியும் கிடைக்காமல் போனது என்பதுதான் மிச்சம். இந்த வருவாய் இழப்பால் நேரடியாகப் பாதிக்கப்படுவது பஞ்சாயத்து நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள்தான். இவற்றுக்குத்தான் திரையரங்க கேளிக்கை வரியின் வருவாய் கிடைத்துவந்தது. கிராமப்புற வளர்ச்சி பற்றிப் பேசிக்கொண்டு, பஞ்சாயத்துகளின் வருவாய் ஆதாரங்களை முடக்குவது உதட்டளவு அக்கறை அல்லாமல் வேறென்ன? தமிழக முதல்வர் அரசாணை வெளியான பிறகு இதற்காக எல்லாருமே தங்கள் படத்துக்கு தமிழ்ப் பெயரை வைத்தார்கள் - சலுகை பெறுவதற்காக. ஆனால் பாடல்களும், வசனங்களும் ஆங்கிலம் கலந்து கிடந்தன. இத்தகைய படங்கள் தமிழுக்கும் தமிழர்தம் கலாசாரத்துக்கும் ஏற்படுத்திய இழப்புதான் அதிகமே தவிர, இதனால் தமிழுக்கு ஒரு பயனும் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லிவிட முடியும். ஒரு படத்துக்கான வரி விலக்கு என்பது அந்தப் படம் தேசிய ஒற்றுமை குறித்துப் பேசுவதாலோ அல்லது நம் வரலாற்றை வெகுஜன மக்களிடம் கொண்டுசேர்க்க உதவுகிறது என்பதாலோ அளிக்கப்படும் சலுகை. அதை அரசின் பாராட்டு என்று சொன்னாலும் மிகையில்லை. ஆனால் அத்தகைய பாராட்டு அந்தப் படம் வெளியானபிறகு, அது மக்களிடம் வரவேற்பைப் பெற்ற பிறகு அத்தகைய முடிவை அரசு மேற்கொள்வதாக இருக்க வேண்டும். அதுதான் சரியான முறையும் கூட. அன்றைய காலம் தொட்டு அண்மைக்காலம் வரை அப்படியாகத்தான் வரிவிலக்குகள் அளிக்கப்பட்டன. கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன் போன்ற அன்றைய படங்களுக்கும், அண்மைக்காலங்களில் வெளியான கருத்தம்மா, பாரதியார், பெரியார் போன்ற படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டதை யாரும் குறை சொல்லவே முடியாது. இதே வரிவிலக்கு, ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ரூ.160 கோடியில் தயாரிக்கப்படும் படங்களுக்கும்கூட, தமிழில் பெயர் இருக்கும் ஒரே காரணத்தால் கேளிக்கை வரிச் சலுகை என்பது இந்த வரிச் சலுகையை பொருளற்றதாக்கிவிடுகிறது. கேளிக்கை வரி திரையரங்க நுழைவுக் கட்டணத்தில் 10 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 2,500 திரையரங்குகளில் ஒரு திரைப்படம் ரூ.200 கட்டணத்தில் வெளியாகுமேயானால், இதனால் கிடைக்கும் ஒருநாள், 5 காட்சிகள் வசூலில் மட்டும் ஏறக்குறைய 9 கோடி ரூபாய் கேளிக்கை வரியாக கிடைக்கும். இத்தகைய சாத்தியக்கூறுகளைப் பார்க்கும்போது, தமிழில் பெயர் இருப்பதாலேயே எல்லாப் படங்களுக்கும் கேளிக்கை வரி வழங்குவது என்பதால் அரசுக்கு என்ன லாபம்? என்ற கேள்வி எழுகிறது. திரையரங்குகளில் கூட்டம் குறைகிறது என்பதால், கட்டணத்தை ஆளாளுக்கு ஒருவிதமாக உயர்த்தியபோது, தமிழக அரசு தலையிட்டு, திரையங்குகளில் உள்ள தொழில்நுட்பக் கருவிகள், வசதிகளை மையமாக வைத்து, மாநகரம், நகரம் இரு பகுதிகளிலும் உள்ள திரையரங்குகளை ஏ,பி, சி என தரம்பிரித்து அதற்கான கட்டணங்களையும் நிர்ணயித்தது. அது ஒரு நல்ல முடிவு என்று பொதுமக்களால் பாராட்டப்பட்டது. ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் முதல்வரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு முதலாக புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. இதன்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் 75 விழுக்காட்டை திரையரங்குகள் உயர்த்திக் கொள்ளலாம். மொத்த இருக்கைகளில் 10 விழுக்காடு அளவுக்கு (முதலில் 20 விழுக்காடாக இருந்தது) குறைந்தபட்ச கட்டணத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தக் குறைந்தபட்ச கட்டணம் என்பது மாநகரங்களில் ரூ.10 ஆகவும், நகரங்களில் ரூ.5 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால் முதல் ஒரு வரிசை இருக்கைகள் மட்டுமே குறைந்தபட்ச கட்டணத்துக்காக ஒதுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. இத்துடன் விஷம்போல ஒரு சலுகையையும் தமிழக அரசு அறிவித்தது. முதல் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகள் கூட்டத்துக்கு ஏற்ப கட்டணத்தை, வணிக வரி அதிகாரிகளின் அனுமதியுடன் உயர்த்தலாம் என்பதுதான் அது. தமிழ்நாட்டில் எத்தனை படம் ஒரு வாரம் முழுதாக ஓடுகிறது? ஆகவே, 2007 ஜனவரி முதலாக, உயர்த்தப்பட்ட நுழைவுக் கட்டணம் குறித்து "சி' படிவம் கொடுத்தால் போதும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் திரையரங்குகளில் விருப்பம்போல கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். அதனால்தான் எந்திரன் படத்துக்கு வெளிப்படையாகவே ரூ.200, 300 என்று அறிவித்தார்கள். சரி, இப்படி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, கட்டணம் உயர்த்தப்பட்டதே இதற்கான வணிக வரி, வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில்தான் செலுத்தப்பட்டுள்ளதா என்றால் சந்தேகம்தான். ஒவ்வொரு திரையரங்கும் மாவட்ட வணிக வரித் துறையில் வாரம்தோறும் வசூல் அடிப்படையில் வணிக வரி செலுத்துகின்றன. ஆனால் வசூல் எவ்வளவு என்று தீர்மானிப்பவர்கள் திரையரங்க உரிமையாளர்கள்தான். இதில் அதிகாரிகள் ஆய்வு என்பது இல்லவே இல்லை என்று சொல்லலாம். கேளிக்கை வரியும் கிடையாது. வணிக வரியும் முறைப்படி வருவதில்லை. லாபம் சம்பாதித்துக் கொழிப்பவர்கள் தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும். இதற்கு பொதுமக்களின் நன்மைக்குக் கிடைக்க வேண்டிய வரிப்பணம் ஏப்பம் விடப்படுகிறது. நன்றாக இருக்கிறதே நியாயம்... ஒரு படம் வெளியான பிறகு அதன் தரம், கதையின் மையம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். திரைப்படத்துக்கான சலுகை அத்துறையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். நல்ல கருத்தாழமும், சமூக சிந்தனையும் கொண்ட திரைப்படங்களையும், குறைந்த பட்ஜெட்டில் திரைப்பட விழாக்களில் போட்டி போடும் அளவிலான படங்களையும் எடுக்க ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் அரசுக்கு வருவாய் கிடைப்பதும் தடைபடக்கூடாது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2010 2:05:00 PM
10/9/2010 2:05:00 PM


By Rajesh
10/9/2010 2:00:00 PM
10/9/2010 2:00:00 PM


By solomon
10/9/2010 1:29:00 PM
10/9/2010 1:29:00 PM


By manu
10/9/2010 11:26:00 AM
10/9/2010 11:26:00 AM


By vbdoss
10/9/2010 11:09:00 AM
10/9/2010 11:09:00 AM


By Muralikumar
10/9/2010 11:09:00 AM
10/9/2010 11:09:00 AM


By அன்புமணி
10/9/2010 10:50:00 AM
10/9/2010 10:50:00 AM


By Noushad
10/9/2010 10:45:00 AM
10/9/2010 10:45:00 AM


By NOUSHAD
10/9/2010 10:42:00 AM
10/9/2010 10:42:00 AM


By amjath
10/9/2010 10:31:00 AM
10/9/2010 10:31:00 AM


By kumaran
10/9/2010 10:22:00 AM
10/9/2010 10:22:00 AM


By annakan
10/9/2010 10:22:00 AM
10/9/2010 10:22:00 AM


By kamaraj
10/9/2010 10:20:00 AM
10/9/2010 10:20:00 AM


By kumaran
10/9/2010 9:59:00 AM
10/9/2010 9:59:00 AM


By kumaran
10/9/2010 9:57:00 AM
10/9/2010 9:57:00 AM


By WILLIAMS R
10/9/2010 9:45:00 AM
10/9/2010 9:45:00 AM


By mani
10/9/2010 9:32:00 AM
10/9/2010 9:32:00 AM


By J.Venkat
10/9/2010 9:22:00 AM
10/9/2010 9:22:00 AM


By மா.பாஸ்கரன்
10/9/2010 9:15:00 AM
10/9/2010 9:15:00 AM


By கோவைக்காரன்
10/9/2010 8:24:00 AM
10/9/2010 8:24:00 AM


By Unmai
10/9/2010 8:21:00 AM
10/9/2010 8:21:00 AM


By gopalan
10/9/2010 8:19:00 AM
10/9/2010 8:19:00 AM


By apimanyu
10/9/2010 8:13:00 AM
10/9/2010 8:13:00 AM


By mu.elangovan
10/9/2010 8:00:00 AM
10/9/2010 8:00:00 AM


By vasudevan.mu
10/9/2010 7:51:00 AM
10/9/2010 7:51:00 AM


By Xavier. P.J
10/9/2010 7:37:00 AM
10/9/2010 7:37:00 AM


By K HARIPRASATH
10/9/2010 7:29:00 AM
10/9/2010 7:29:00 AM


By பாஸ்கரன்
10/9/2010 6:52:00 AM
10/9/2010 6:52:00 AM


By avudaiappan
10/9/2010 6:50:00 AM
10/9/2010 6:50:00 AM


By மாயன்
10/9/2010 6:43:00 AM
10/9/2010 6:43:00 AM


By மாயன்
10/9/2010 6:40:00 AM
10/9/2010 6:40:00 AM


By உத்தமன்
10/9/2010 6:37:00 AM
10/9/2010 6:37:00 AM


By பாஸ்கரன்
10/9/2010 6:36:00 AM
10/9/2010 6:36:00 AM


By vijayfan
10/9/2010 6:25:00 AM
10/9/2010 6:25:00 AM


By selvan
10/9/2010 6:13:00 AM
10/9/2010 6:13:00 AM


By Madhavn
10/9/2010 4:15:00 AM
10/9/2010 4:15:00 AM


By vana
10/9/2010 4:04:00 AM
10/9/2010 4:04:00 AM


By vana
10/9/2010 4:01:00 AM
10/9/2010 4:01:00 AM


By மு.க
10/9/2010 3:39:00 AM
10/9/2010 3:39:00 AM


By krishnamoorthy s p
10/9/2010 3:33:00 AM
10/9/2010 3:33:00 AM


By SN
10/9/2010 3:29:00 AM
10/9/2010 3:29:00 AM


By கடைக்கோடி குடிமகன்
10/9/2010 3:16:00 AM
10/9/2010 3:16:00 AM


By thamilan
10/9/2010 3:16:00 AM
10/9/2010 3:16:00 AM


By thamilan
10/9/2010 3:15:00 AM
10/9/2010 3:15:00 AM


By thamilan
10/9/2010 3:13:00 AM
10/9/2010 3:13:00 AM


By thamilan
10/9/2010 3:12:00 AM
10/9/2010 3:12:00 AM


By kamachi
10/9/2010 3:03:00 AM
10/9/2010 3:03:00 AM


By veera
10/9/2010 2:47:00 AM
10/9/2010 2:47:00 AM


By sainny jain
10/9/2010 1:29:00 AM
10/9/2010 1:29:00 AM


By Nour
10/9/2010 1:03:00 AM
10/9/2010 1:03:00 AM


By ரிஜி.கரியாப்பட்டினம்
10/8/2010 11:39:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்10/8/2010 11:39:00 PM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரு சரவணன் அவர்களே! நாம் எண்ணற்ற தமிழ்ச் சொற்களைச் சமற்கிருதச் சொற்களாகத் தவறாகக் கருதி வருகிறோம். சான்றாக வருடை என்றால் ஆட்டைக் குறிக்கும். ஆடு போல் காட்சியளிக்கும் நட்சத்திரக் கூட்மும் வருடை எனப்படும். வருடை காட்சியளிக்கும் பொழுது தொடங்கும் காலம் வருடம் எனப்படும். இதனைச் சமற்கிருதததில் வருஷம் என்றதால் வருடம் என்பதைச் சமற்கிருதம் எனத் தவறாகக் கருதுகிறோம். இதுபோல்தான் இயந்திரம் என்னும் தமிழ்ச் சொல்லைத் தவறாக அயற் சொல்லாகக் கருதுவதும். இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டாற் போன்று சட்டம் கொண்டு வந்தால் போதும். ஆனால் ஆட்சியாளர்க்கு மனம் இருக்காது. திரைப்பட நிறுவனங்களின் பெயர்களையே ஆங்கிலத்தில் வைப்பவர்களுக்குத் தமிழில் படப்பெயர் சூட்ட சட்டம் கொண்டுவர மனமா வரும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Another excellent editorial. Are the government personeels and politicians patriotic and have social conscience enough to act on your suggestion?
Instead of giving tax relief to the flims which are having title name in absolute tamil, the Government should tax double time for the flims which are having title name in English or not having in absolute tamil. This is the wise decision, if the Government or Ruler really has interest in developing Tamil Language. Government also get more revenue through double tax. If any one wish english title is suitable to their movie like "quarter cutting" let them pay double tax and keep the name as their wish. 
குஆடேருக்கும், பிரியாணிக்கும் ஓட்டு போடுற சொஅரனை கெட்ட தமிழன் இருக்கும் வரை கருணா ,ஜெயா கட்சிகள் அராஜகம் ஒழியாது.
மொழி-ய வைத்து பிழைப்பு நடத்தி இன்னிக்கு உலக பணக்கார வரிசையில் ஒரு குடும்பம் இருக்குதுனா அது இந்த கருணாநிதி குடும்பம்தான்.சினிமா ஆதிக்கம் ஒழியனும் .நாடு உருப்படுனும் 
I totally agree with you. But please note that after the withdrawal of the Entertainment tax completely, the cinema theaters were permitted to collect a maximum admission rate between Rs.50 and 85/- depending upon the category. (G.O (Ms) No.1241 Dated 25.12.2006 and GO 1265 Dt. 31.12.2006)and now the theaters cannot increase the rates. Unfortuantely many people think that the theaters were permitted to increase the rates during the first few days but it is Wrong. Now what the theaters collecting were totally illegal and was done without minding any Rules. Mathi
ஐயா ராமதாசை ஆச்சில உக்கார வையுங்க , இந்த சினிமா நாதாரிங்கல்க்கு அவருதான் சரியான ஆப்பு வைப்பாரு 
who is thinking of tamil ?only papers like dinamani is expressing such matters.the real botheration must come from the public.you are showing the way...let them follow.thats all.
450 crores was spent in name of Tamil conference. What is real achievement. There is still no online tool to do translation from other languages to Tamil. Only Hindi language has this tool in India. Tamil technical terms have not been standardized. Tamil not compulsory in Tamil Nadu, on other hand Hindi is compulsory in Tamil Nadu CBSE schools, more and more schools are shifting to CBSE and dropping Tamil. Tamil translation in signboards is not required through Tamil Nadu. Everything in the name of Tamil by this government is a big fraud. 
திரு.இலக்குவனார் அவர்களே, இயந்திரம் என்ற சொல்லையே நாம் தமிழ்ச்சொல்லாகக் கருதமுடியாது. 'யந்த்ரா' என்ற சமஸ்கிருத சொல்லின் தமிழ்வாசிப்புதான் 'யந்திரம்/இயந்திரம்' எல்லாம். பிறகெப்படி 'எந்திரன்' தமிழ்ச்சொல்லாகும்? தமிழில் வெளியிடப்படும் படங்களுக்கு தமிழ்ப்பெயர்தான் வைக்கவேண்டும் என்று சட்டம் போட்டுவிடலாமே..! எதற்கு வரிவிலக்கு...? ஏன் மக்கள் வயிற்றில் அடித்து சினிமாக்காரர்கள் பிழைக்க வழிசெய்ய வேண்டும்? அவர்கள் எம் அடித்தட்டு மக்கள் போல பிழைக்க நாதியற்றா இருக்கிறார்கள்..? அவர்களின் SCV பிழைப்புக்காக "இலவச கலர் டிவி" என்ற புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டுவந்தவர்கள், அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் சினிமாவில் இறங்குவதை மனதில்கொண்டுதான் இப்படி வரிவிலக்கு அளித்திருக்கவேண்டும் என்று நினைப்பதில் ஆச்சரியமில்லை!
Good article. Worth publising. What is the reaction to this from the govt.? Who will ensure that the money collected as Tax is paid to the government? Many say that only children will like this movie. Media is misused - readers are confused. 
டாரண்ட் பயன்படுத்தி டவுன்லோடு செய்து பார்க்கவும். சீனாக்காரன் போட்ட அதே படம், அப்படியே இருக்கு, www.torrenthound.com/hash/3ce836c784fdb9ef820904a313cd47c4fcf31049/torrent-info/Endhiran-2010-DVDScr-Quality-TCRip-1CD-x264-~-Tamil-Movie
good editorial.keep it up.thats why in india then british govt to appointed a person to head for viilage are town or state a good and respectable persons but now we the tamils.....? uneducated our relatives are voting for money and briyani and the educated inttelectuals tamil relatives are not going for voting.thats why this type of PEAYATCHI IS running. what about our govt owned cable tv, spent around about how many crores?people tax money wasted by this govt,because of their family dispute. 
good editorial.keep it up.thats why in india then british govt to appointed a person to head for viilage are town or state a good and respectable persons but now we the tamils.....? uneducated our relatives are voting for money and briyani and the educated inttelectuals tamil relatives are not going for voting.thats why this type of PEAYATCHI IS running. what about our govt owned cable tv, spent around about how many crores?people tax money wasted by this govt,because of their family dispute.
good article... keep on writing... 
unakku enna endhiran mel appadi oru erichchal ???

By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2010 6:29:00 AM
10/10/2010 6:29:00 AM


By Raj
10/10/2010 1:31:00 AM
10/10/2010 1:31:00 AM


By S Murthy
10/10/2010 12:58:00 AM
10/10/2010 12:58:00 AM


By கட்ட துரை
10/10/2010 12:10:00 AM
10/10/2010 12:10:00 AM


By கட்ட துரை
10/10/2010 12:01:00 AM
10/10/2010 12:01:00 AM


By mathi
10/9/2010 11:59:00 PM
10/9/2010 11:59:00 PM


By கட்ட துரை
10/9/2010 11:51:00 PM
10/9/2010 11:51:00 PM


By rangaraj
10/9/2010 11:27:00 PM
10/9/2010 11:27:00 PM


By DMK Drama
10/9/2010 10:29:00 PM
10/9/2010 10:29:00 PM


By சரவணன், சென்னை
10/9/2010 10:26:00 PM
10/9/2010 10:26:00 PM


By Dr.S.Ashokan
10/9/2010 9:37:00 PM
10/9/2010 9:37:00 PM


By இடி அமீன், உகாண்டா.
10/9/2010 9:35:00 PM
10/9/2010 9:35:00 PM


By bparani
10/9/2010 8:44:00 PM
10/9/2010 8:44:00 PM


By bparan
10/9/2010 8:44:00 PM
10/9/2010 8:44:00 PM


By Veeraa ,Thanjai ( Singapore )
10/9/2010 6:55:00 PM
10/9/2010 6:55:00 PM


By mallu
10/9/2010 4:29:00 PM
10/9/2010 4:29:00 PM