சனி, 7 ஜூலை, 2012

Public land becoming military land is strategy of ICE in the island

Public land becoming military land is strategy of ICE in the island

[TamilNet, Friday, 06 July 2012, 23:48 GMT]
Converting all public lands or community lands of Eezham Tamils into Sinhala military lands, in the guise of ‘legally’ asserting them as ‘State Land’ of Sri Lanka is the strategy now promoted by the International Community of Establishments (ICE), partnered in the context by India and the USA that are in war with the nation of Eezham Tamils in proving a new order based on State terrorism and genocide, said political observers in Jaffna commenting on the accelerated land and sea appropriations taking place in the country of Eezham Tamils, ‘conquered’ in a genocidal war designed by the said culprits. As genuine Eezham Tamil nationalism would not agree to the grab, the culprits employ the genocidal Sinhala military to do the job, protect it from international indictment and that is why they deny any genocide taking place in the island, the activists further said.

The talk of upholding ‘State’ that ended in the biggest international terrorism of the century committed by the international community of establishments – the genocide of Eezham Tamils– has acquired a new phase after the war in confirming the ‘ICE terrorism’. The UNHRC resolution is just facilitation, said a new generation political activist in the island.

“After experimenting genocide in a war without witnesses, the same elements with the deployment of the same forces, now experiment the structural genocide, especially through the land grab of a military drunk with genocidal blood.”

Facilitating the process, while the US and its outfits carry-out the sophisticated job of hijacking the Eezham Tamil intelligentsia, especially the diaspora from any struggle, the dirty job of conforming the rest in various other ways has been undertaken by India.

“The war crime investigation hoodwink of the West and the talk of ‘integration of Tamil land through Indian investment’ told to the gullible are just two sides of same deceit. China has not come into the picture from the blues. It is these two culprits, the USA and India that have brought in China. When the strategic partners begin their contention the genocidal Sinhala nation also will posthumously realise.

“With the given resources and reaches of the establishments involved, negotiations and collaborations of individual activists with them would not work. Only the peoples’ power could stop them. The articulating Tamil politicians need to come out of their individualism and falling prey for the strategies of the ultimate culprits. They should pave way for the peoples’ power to wipe out the culprits,” the activist further said.

The following are some of the recent developments in the India-US abetted land related genocide carried out in the island by the Sinhala agent military:

* * *


After appropriating thousands of acres of lands in Vanni mainland, Colombo has accelerated genocidal land grab in Jaffna peninsula through its military-run administration led by war-crimes alleged military commander turned governor of Northern province Maj Gen (retd) GA Chandrasiri and the SL Government Agent of the Jaffna district, S Arumainayakam, civil officials in Jaffna said.

After a recent attempt by Chandrasiri was strongly by the opposing elected civic bodies in Jaffna, Mr Arumainayakam, who was posted to Jaffna as SLGA, replacing Imelda Sugumar, has been engaged by Colombo in the silent appropriation.

In Vanni, the Sinhala military used to say that the lands and properties were in Tigers’ possession and that they are seizing such lands and properties, threatening away the real owners to fight against such appropriation.

In a similar fashion, the SL military, which has been controlling most of the peninsula since 1996, has now begun to silently appropriate public, community and private lands where LTTE-run administration had set up children's parks in the 80s and in the early 90s in Valikaamam.

The GA had recently collected details of the public lands through divisional secretaries and handed over to the SL military hierarchy, the officials say.

At Naavatkuzhi, such an appropriation that took place during Imelda Sugumar's tenure, is now being challenged by the land-owner in the SL courts. Following the legal dispute, the construction work for a military base has been put off at the site, the sources said.

Now, Colombo wants to make sure that such lands are carefully scrutinized and transferred to military in such a way that it could have a ‘legal’ advantage under the discriminatory law of the unitary state of Sri Lanka.

While the SL military officials were proclaiming that they were aiming to discard their camps in the city and the suburb, what they are doing in practice is to take over more lands in other places saying that they need new lands to relocate their existing camps.

In reality, they only expand their presence by keeping the already occupied lands and buildings while extending their presence, said Tamil National Alliance (TNA) parliamentarian Suresh Premachandran citing the examples of SL navy bases in Kaarainkar and Maathakal.

New Sinhala military camps have also come up in Pa'n'nai causeway area and in the suburbs of the city.

Some time back, the SL military said it was moving its 512 Division camp from Jaffna city to Koappaay, where the Tamil Heroes Cemetery was desecrated, destroyed and a military complex was built with the help of the Chinese. But, the camp in the city was not relocated. Instead, more lands have been seized by the military in the city.

The SL military has now appropriated lands, close to near Maruthangkea'ni divisional secretariat in Vadamaraadchi East, by saying that these were ‘State lands’, the civil officials in Jaffna said.

The SL military is taking over more and more public and private lands of the people of the country of Eezham Tamils, saying that the lands are ‘State lands’.

Despite the opposition shown by the officials at local level, the GA was forcing the Divisional Secretaries to sign documents proving that the lands have been handed over to the SL military.

The uprooted people were first settled in barbed-wire camps and were later moved away from the areas. Civilians were not provided the necessary facilities. Those who protested against the moves, such as the one reported from Thirumu'rika'ndi, were brutally attacked and forcefully taken away.

SL Defence Secretary Gotabhaya Rajapaksa, whose military leadership and relationships with China are compromised by both the US and India has been directly involved in the genocidal land grab, the civil officials said.

When the public and community lands go with the occupying military, on which civic body the US State Department and the New Delhi wallahs are going to ‘devolve’ the powers as a ‘lasting solution’ they perceive to the national question of Eezham Tamils, ask Tamil political activists in the island tired of the two ultimate culprits.

Chronology:

சிங்கள விமானப்படையினரை வெளியேற்றுக : வைகோ

சிங்கள விமானப்படையினரை வெளியேற்றுக : வைகோ

தினமணி First Published : 07 Jul 2012 01:50:47 PM IST

Last Updated : 07 Jul 2012 01:51:57 PM IST

சென்னை, ஜூலை 7 : இந்தியாவில், பயிற்சி பெற வந்துள்ள சிங்கள விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிங்கள விமானப்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கின்ற அக்கிரமத்தை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.  தமிழ்நாட்டில், தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அறிந்து, தமிழகத்தில் கண்டனமும், எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.  இந்தப் போராட்டம், சிங்களவர்களைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக மட்டும் அல்ல; இந்தியாவில் வேறு எங்கும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான். கடந்த எட்டு ஆண்டுகளாக, சிங்கள விமானப்படைக்கு மிகப்பெரிய அளவில், இந்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. சிங்கள விமானப்படையை வலுவுடையதாக ஆக்கி, விடுதலைப்புலிகளை மட்டும் அல்லாத, போரில் ஈடுபடாத தமிழ் ஈழ மக்களை, பள்ளிக்குழந்தைகளை, வான்வெளித் தாக்குதலில் குண்டுவீசி அழிக்கின்ற விதத்தில், பயிற்சியையும், தொழில்நுட்பத்தையும், சக்தி வாய்ந்த ரடார் கருவிகளையும், இந்திய அரசு கொடுத்தது. அதுமட்டுமில்லாமல், யாழ்ப்பாணத்தில் பலாலி விமான தளத்தை, இந்தியா தனது சொந்த செலவில் பழுது பார்த்துக் கொடுத்துள்ளது.ஈழத்தமிழ் இனத்தையே அடியோடு கரு அறுக்க, சிங்கள அரசு நடத்தி வந்த, இன்னமும் தொடர்கின்ற இன அழிப்புத் தாக்குதலுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முழு அளவில் உதவி வருகிறது. எனவே, தாம்பரத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சியை, சாதாரண சிறிய நிகழ்வாக தமிழக மக்கள் எண்ணிவிடக் கூடாது. ஈவு இரக்கம் இன்றித் தமிழ் மக்களை, இலங்கைத் தீவில் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், விமானப்படையினர், இந்தியாவில் பயிற்சி பெறுவது என்பது,  தமிழ் மக்களின் தலையில் மிதிக்கின்ற அராஜகம்; மன்னிக்க முடியாத துரோகம். சிங்கள விமானப்படையினருக்கு பெங்களூரில் எலகங்கா விமானப்படைத் தளத்தில் தற்போது பயிற்சி கொடுக்கப்படுகிறது. அண்மையில், இந்திய-இலங்கைக் கடற்படைப் பயிற்சி, திருகோணமலை கடற்கரைக்கு அருகில் நடத்தப்பட்டது. இலங்கைக் கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் கட்டித் தருகின்ற வேலையிலும் இந்தியா ஈடுபட்டு உள்ளது.  இதன்மூலம் ஒரு உண்மை வெட்டவெளிச்சமாகி விட்டது. சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக்கு, இந்திய அரசுதான் உடந்தை என்ற உண்மை அம்பலமாகி விட்டது. இந்தியாவின் மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுமே, இந்தப் பழிக்குப் பொறுப்பாளிகள் என்பதை தமிழக மக்களும், இந்திய மக்களும் அறிந்து கொள்வார்கள். ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்து வருகின்ற தொடர் துரோகத்தை மத்திய அரசு இத்துடனாவது நிறுத்திக் கொண்டு, சிங்கள விமானப்படையினரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்; இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தோடு, இரகசியமாகச் செய்து உள்ள ஒப்பந்தங்களை, இரத்துச் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கருத்துகள்

கோவாலு ..கோவாலு ..இந்த தமாஷா எல்லாம் எடுபடாது ...டெல்லி இந்திய தமிழ் அடிமைகளை மதிப்பது இல்லை ..இலங்கையில் இன்று ஹிந்தி பேசும் இந்தியர்கள் இருந்திருந்தால் நடப்பது வேறு ..ஒரு 5அல்லது 10ஆயிரம் பேர்களுடன் டெல்லி போய்..பாதுகாப்பு ...பிரதமர் அலுவலகம் முன் ஒரு வாரம் நின்று செயல் படுவதை நிறுத்து ..முடியுமா ...சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தும் ...முடவன் கருணாநிதி ஸ்டைல் மாதிரி அறிக்கை..கடிதம் எல்லாம் வெறும் புஸ்வானம்
By KOOPU
7/7/2012 5:24:00 PM
இந்தியாவை பொறுத்தவரை எட்டு கோடி தமிழர்களைவிட ஒரு கோடி சிங்களவர்களே மேலானவர்கள்.இந்தியாவை ஆளுகின்றவர்கள் தமிழர்களை இந்தியாவின் குடிமக்களாகவே கருதவில்லை.அனால் தமிழக அரசியல்வாதிகள் தங்களது சுய நலத்திற்காக இந்தியாவை ஆளுகின்றவர்களிடம் காவடி தூக்குகின்றர்கள். என்னதான் நீங்கள் காவடி எடுத்தாலும் உங்களை இந்தியாவை ஆளுகின்றவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். தமிழர்கள் மாறுபட்ட நிலையை பற்றி சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
By தமிழ்ச்செல்வன்.K
7/7/2012 5:15:00 PM
" நூற்றிக்கு ..தொன்நோற்று ..ஒன்பது நாடுகளின் ஒப்புரவோகளின் " உதவியோடு நடந்து முடிந்த விடயம் !!.. குழப்புவர்கள் வெறும் குழப்ப வாதிகளே ,,, !
By ruthy
7/7/2012 2:51:00 PM
காங்கிரசும்,கருணாநிதியும் இருக்கும்வரை ஈழத்தமிழருக்கெதிரான துரோகம் தொடரும் வைகோ அவர்களே
By தஞ்சை ராஜு
7/7/2012 2:51:00 PM


இதய நோய், நீரிழிவில் இருந்து காக்கும் செம்புற்றுக் கனி

இதய நோய், நீரிழிவில் இருந்து காக்கும் ஸ்ட்ராபெர்ரி

தினமணி First Published : 07 Jul 2012 05:42:54 PM IST


பழங்களில் ஸ்ட்ராபெர்ரிக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. அது ஏதோ தானாக வந்துவிட்டது அல்ல. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள குணநலன்கள் தான் அந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது.அந்த வகையில், இதய நோய் உள்ளவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும், அந்நோய் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தாமல் தடுக்கும் ஆற்றல் ஸ்ட்ராபெர்ரிக்கு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதில்லாமல் இந்நோய்கள் தாக்காமல் இருக்கவும் ஸ்ட்ராபெர்ரி  உதவுவதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

Washington Post journalist confirms state of emergency in Tamil homeland

Washington Post journalist confirms state of emergency in Tamil homeland

[TamilNet, Friday, 06 July 2012, 19:46 GMT]
Referring to the all pervasive rule of the Sinhala military in the country of Eezham Tamils, Simon Denyer of Washington Post reports from Jaffna that “[t]he military has even inserted itself into almost every aspect of economic life in the north of the country, farming and selling vegetables, running hotels, restaurants and even barber shops” in a feature published Friday. Alluding to sources from the ground, the report gives a picture of how the military runs a state of emergency in the Tamil homeland, with land grabs, routine harassment, curtailment of the right to assembly and even forcible interventions in public functions.

The journalist, citing Father S.M. Praveen of the Centre for Peace and Reconciliation, notes that intimidation has increased after the recent US backed resolution in Geneva, which called on Colombo to promote “postwar reconciliation”.

But, whether the western observers and institutions that have pushed for this type of ‘reconciliation’, without addressing the fundamental political demands of the Eezham Tamils and recognizing the structural genocide of the Tamil people within unitary Sri Lanka are deliberately missing the woods for the trees, question activists in the island.

The ideological legitimacy given to the unitary Sri Lankan state will necessarily result in the prolongation of the individual human rights abuses that the western establishments seem content in highlighting overlooking structural problems, they said.

Interviewing Tamil women in the North, Mr. Denyer notes how humiliation at the hands of the almost exclusively Sinhala Buddhist army is a routine affair, and how the SL Army exercises its supervision in all gatherings and day to day activities.

“The women described how they were forced or tricked to attend demonstrations in support of the government and against its foreign critics. One said villagers were not even allowed to light a single prayer candle in their local church, because the army suspected them of trying to honor dead Tamil Tiger fighters buried nearby,” he writes.

Further referring to the occupation of Tamil social space by the Sinhala army, he notes “Today, without any fighting to do, soldiers attend meetings at Hindu temples and functions at primary schools. The military has even inserted itself into almost every aspect of economic life in the north of the country, farming and selling vegetables, running hotels, restaurants and even barber shops.”

But, what is conspicuously missing in the article is the genocidal face of this military corporatization. From the beginning, the US State Department officials and the abetting powers were particular in ‘convincing’ Tamils that there is no genocide.

Civil society activists in the Tamil homeland and TamilNet have been stressing on the phenomena of militarization and colonization of the Tamil homeland as a systemic process in the unitary Sri Lankan state, which has also brought along with it a model of ‘military corporatization’ – an exploitative economic model where the military aids the swindling land of resources in the Tamil homeland through creation of cantonments, military enclaves, and dispossession of natives.

However, the Indian and Western establishments, and some sections in the media, are pushing the argument that ‘development’ will resolve Tamil grievances, while ignoring how this ‘militarized corporate model of development’ works to ensure mutilation of Tamil political and social life.

Related Articles:
02.07.12   Right to free assembly worsens further in Vanni


External Links:
Washington Post: Abuse by Sri Lanka’s army rubs salt in wounds of war, Tamil women say

"களிமண்ணும் பெண்களை அழகுபடுத்தும்!

"களிமண்ணும் பெண்களை அலங்கரிக்கும்'

காகிதம், களிமண் ஆகியவற்றால், நகை செய்து வரும் உஷா நடராஜன்: பெங்களூருவில், சொந்தமாக ஒரு சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வந்தோம். அது நஷ்டம் அடைந்ததால், சென்னைக்கு வந்து விட்டோம். இங்கு புதிதாக என்ன தொழில் செய்யலாம் என யோசித்த போது தான், காகிதம் மற்றும் களிமண்ணைக் கொண்டு, நகைத் தயாரிக்கும் யோசனை வந்தது."காகிதத்தில் செய்த நகையை வாங்கி, என்ன செய்ய முடியும்' என, ஆரம்பத்தில் சிலர் எதிர்மறையாகப் பேசினர். ஆனாலும், அவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் இலக்கை அடைவதில், மும்முரமாய் இருந்தேன். என் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் பலன் கிடைக்க ஆரம்பித்தது.மாடலிங் செய்யும் பெண்கள் சிலர், எங்கள் நகையை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பின், நாங்கள் தயாரித்த நகைக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய வடிவங்களில், நாங்கள் காகித நகைகளை உருவாக்குவதால், பலரும் விரும்பி வாங்குகின்றனர். அதில், சில பிரபலமானவர்களும் உண்டு. ஆர்டரின் பேரிலும், நாங்கள் நகைகள் செய்து கொடுக்கிறோம்.காகிதங்களாலும், களிமண்ணினாலும் நகைகள் செய்யப்படுவதால், எடை குறைவாக இருப்பதுடன், உடுத்தும் உடைக்கு, ஏற்ற நிறத்தில், நகைகளை அணிய முடியும் என்பது தான் இதன் சிறப்பு.காகித நகைகள், 50 ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. திருமணம் உட்பட, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பலரும், இப்போது காகித நகைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விட்டனர்.தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், பேன்சி நகைகள் மீது, பெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, இந்த தொழிலில் இறங்கினால், வெற்றி நிச்சயம்.

பேசும்படம்


கைதி சித்திரவதை: கீழ் நீதிமன்றத்தின் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

நீதிபதிகள் பலரின்  தீர்ப்புகள் மனித நேயத்துடனும் அறநெறியின்பாற்பட்டும் உள்ளன. அவர்களுள் குறிப்பிடத்தக்க்வராக நீதிபதி சந்துரு அவர்கள் உள்ளார்கள். அறம் காக்கும் தலைவருக்குப் பாராட்டுகள். இதே போல் வழக்குகளை விரைந்து முடிக்கவும் அனைத்து நீதிபதிகளும்  காவல்துறையையும் அரசையும் முடுக்கி விட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
கைதி சித்திரவதை: கீழ் நீதிமன்றத்தின் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

First Published : 07 Jul 2012 12:44:04 AM IST
  தினமணி

சென்னை, ஜூலை 6: போலீஸ் சித்திரவதையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கைதிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடாத குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடு பற்றி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை சோழவரத்தைச் சேர்ந்த ஜி. பாரதி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.  கடந்த ஜூன் 16-ம் தேதி சோழவரம் காவல் நிலைய போலீஸôர் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து எனது மகன் அருணை தாக்கினர். பின்னர் எனது மகனை போலீஸôர் அழைத்துச் சென்றனர். எனது மகன் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால் டி.ஜி.பி. உள்பட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தந்தி மூலம் புகார் அனுப்பினேன்.  இந்நிலையில் கடந்த ஜூன் 20-ம் தேதி பொன்னேரியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் எனது மகனை போலீஸôர் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தன. தன்னை கட்டி வைத்து போலீஸôர் அடித்ததாக எனது மகன் கூறினார்.  தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகனுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், ஜூன் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை எனது மகனை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்து அவரை தாக்கிய போலீஸôர் மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி விசாரணை நடத்தவும், உரிய இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.  இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு பிறப்பித்த உத்தரவு:  சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருணை சந்திக்கவும், உண்மை நிலையை அறியவும் அட்வகேட் கமிஷனை அமைப்பதற்கு இந்த நீதிமன்றம் தயாராக இருந்தது. எனினும் அருணை இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயார் என்று அரசு தலைமை வழக்குரைஞர் தாமாக முன்வந்து தெரிவித்தார். அதன்படி வெள்ளிக்கிழமை அருண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், போலீஸôர் தன்னை தாக்கியதாலேயே தனது உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், தனக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்பு பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அருண் ஆஜர்படுத்தப்பட்ட போதெல்லாம் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிடவில்லை.  கடந்த 5-ம் தேதிதான் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மற்றும் போலீஸôரின் செயல்பாடு ஏற்புடையதாக இல்லை.  உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள அருணை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இனியும் ஏதேனும் புகார் வருமானால், நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உலகக்கோப்பை வீரர்களுக்கான பரிசுத்தொகை - மனமிறங்குமா தமிழக அரசு?

http://img.dinamalar.com/data/gallery/gallerye_012009818_502283.jpg
தினமலர் செய்தியாளர் :
கேரம் விளையாட்டில் உலக கோப்பை வென்ற வீரர்களுக்கு
, மாநில அரசு வழங்கும் பரிசுத்தொகை இன்னும் வழங்கப்படாததால், வீரர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். வெற்றி வாகை: சென்னையின் தெருவோர விளையாட்டு என, கேரம் பற்றி எல்லோரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதே கேரத்தை வைத்து, உலகப் கோப்பை வென்று திரும்பினர், தமிழகத்து இளைஞர்கள். சென்னையைச் சேர்ந்த இளவழகி, ரேவதி, ராதா கிருஷ்ணன் ஆகிய மூவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த, உலக கோப்பை கேரம் போட்டியில் பல பிரிவுகளில் கோப்பைகள் வென்று வந்தனர். இளவழகி இந்த முறையும், உலக கோப்பையின் நடப்பு வீரர் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டார். உடனடியாக விளையாட்டு வீரர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில், அவர்களுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என, மொத்தமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை, இன்று வரை வீரர்களிடம் அளிக்கப்படவில்லை.
கண்ணீர் கதை: கோப்பை வென்று பரிசுக்காக காத்திருக்கும் வீரர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கண்ணீர் கதை ஒளிந்துள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி, நான்கு முறை கேரம் விளையாட்டில் உலக கோப்பை
வென்றிருக்கிறார். ஆனால் இன்று வரை வியாசர்பாடியில் உள்ள குடிசைப் பகுதியில் இவருடைய வீடு இருக்கிறது. அப்பா மீன்பாடி ஓட்டுநர். கேரம் போர்டு வைத்தால், வீடே அடைத்துக் கொள்ளும் அளவிற்கு உள்ளது, அதன் கொள்ளளவு. பழைய இரும்புக் கட்டிலின் கீழே உலக அளவில் வாங்கிய கோப்பைகளை வைத்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கேரத்தையே முழுநேர விளையாட்டாக கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருவதால், சாப்பாட்டு பிரச்னைக்கு கவலை இருப்பதில்லை. பெரியமேட்டைச் சேர்ந்த ரேவதிக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் வங்கியில் வேலை கிடைத்ததால் நிம்மதியாக விளையாட முடிகிறது. மற்ற இருவரின் பாடு, படும் திண்டாட்டம்.
காரணம் தெரியவில்லை: கோப்பை வென்ற ராதாகிருஷ்ணன், ""கேரம் விளையாட்டு எனக்கு உயிர். எனவே சதா அதை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவும் மனைவியும் வேளைக்குச் செல்வதால் வீட்டின் பொருளாதார தேவை, ஓரளவிற்கு குறைந்துள்ளது. தமிழக அரசு, உலகக் கோப்பை வென்றதற்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை வழங்கினால் என் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்'' என்றார். வீராங்கணை இளவழகி, "" எங்களுக்கு வழங்க வேண்டிய பரிசுத்தொகையை ஏன் நிறுத்தி
வைத்திருக்கிறார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. அத்தொகை வழங்கப்பட்டால் விளையாட்டுத் துறையில் மேலும் சாதிப்பதற்கு உதவியாக இருக்கும்,"" என்றார்.
ஒரு கண்ணில் வெண்ணெய்: இது குறித்து கேரம் வீரர்களை தொடர்ந்து ஊக்குவிப்பவரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி கூறியதாவது: ஒலிம்பிக்கில் இல்லாத விளையாட்டான சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த், உலகப் கோப்பை வென்ற போது தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதுவும் மறுநாளே வழங்கப்பட்டது. ஆனால் இளவழகி, ராதாகிருஷ்ணன், ரேவதி ஆகிய மூவரும் பல பிரிவுகளில் உலகப் கோப்பை வென்ற போது பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியானது. இரண்டு வருடங்களாகியும் இன்று வரை அதற்கான தொகை அவர்களை சென்று சேரவே இல்லை. இன்று வரை உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காக அதிகாரிகள் அவர்களை அலைய வைக்கின்றனர். இதற்கு பின்னால், ஏதாவது "உள்' நோக்கம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. உலகக் கோப்பை வென்ற மூவரும் எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டால் அது, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் ஊக்கமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
-
நமது நிருபர் -