கலைஞன் பதிப்பகம் வெளியிடும் 2000-2020 சிறந்த படைப்பாக்கங்களின் தொகுப்பில் இடம்பெற இதுவரை கிடைக்கப்பெற்ற கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, புதினம் எனத் தேர்வுக் குழுவினரால் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் இப்படைப்பாக்கத் தொகுப்பில் இடம்பெற விரும்பும் படைப்பாள நண்பர்கள் தங்கள் படைப்பாக்கங்களை கிழே தரப்பட்டுள்ள மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம் நிகழ்வில் இணைய கூட்ட எண் / Meeting ID : 851 2512 3872 கடவுக்குறி Passcode : 340286 பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/85125123872?pwd=VmJGMHRGeHhHRE5qQVVnSzdNZUx1UT09 இணைப்பைச்சொடுக்கலாம்
குவிகம் இணையவழி அளவளாவலில் குவிகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் மறு அறிமுகம் செய்துவருகிறோம். புத்தககங்கள் மின்புத்தகமாக கிடைக்கின்றனவா என நண்பர்கள் பலர் கேட்டிருந்தார்கள்.
இது குறித்த தகவல்களோடு நண்பர்கள் எழுதியுள்ள மற்ற மின்புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் அளிக்க ஒரு நிகழ்வு நவம்பர் முதல் நாள் நடக்கவிருக்கிறது. புதியதாக வெளியிட விரும்புபவர்களுக்கும் சில பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கவும் விரும்புகிறோம் மின் புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பிப்பதற்கான ஒரு சிறு முயற்சியே இது.
உங்களது மின் புத்தகங்களைப்பற்றிய தகவல்களைப் பின்வரும் படிவத்தில் அனுப்பிவைக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
மின்புத்தகங்கள் வெளியிட்டுள்ள மற்ற நண்பர்களுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பி அவர்களும் கலந்துகொள்ள உதவுங்கள்!
ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளவர்கள் படிவத்தின் முதல் நான்கு பிரிவுகளிலும் அடுத்து / ‘NEXT’ பயன்படுத்தி ஐந்தாவது பக்கத்தில் உள்ள அளி / ‘SUBMIT’ பயன்படுத்தவும்.
ஒரு படிவத்தில் ஐந்து புத்தகங்களைப் பற்றிய விவரம் அனுப்பலாம். தேவைப்பட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட படிவங்கள் நிரப்பி அனுப்பலாம்.