சனி, 29 டிசம்பர், 2018

புத்தக வெளியீடு – தில்லைத் தென்றல்

 அகரமுதல


மார்கழி 15, 2048 ஞாயிறு
30.12.2018 முற்பகல் 11.00

6, மூன்றாம் தளம்வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலைதியாகராயர்நகர்,

சென்னை 600 017

புத்தக வெளியீடு
தில்லை வேந்தனின்
தில்லைத் தென்றல் (மரபுக் கவிதைகள்)
குவிகம் பதிப்பகம்
தொடர்பிற்கு9791069435, 9108939305

க.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை

அகரமுதல


அறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை
மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018)  மாலை  நடை பெற்றது.
இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார்.
மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா. தமிழ் நேசன், கே. ஆர். சிறீநிவாசன், வெ. சித்தார்த்தன், மிக்கேல் அந்தோணி, இறை சா. இராசேந்திரன், சிறீதர் தமிழன் உள்ளிட்ட பலர் க.ப. அறவாணனின் தமிழ்த் தொண்டு குறித்து நினைவுரையாற்றினர்.
மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து க.ப. அறவாணன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

வெள்ளி, 28 டிசம்பர், 2018

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் மகளிர் பட்டி மண்டபம்

அகரமுதல

மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 காலை 10.00
திருமால் திருமண மண்டபம்(மாடியில்)
தலைமை – முனைவர் கண்மணி
பொருள் – பாவேந்தர் பாடல்களில் நம்மைப் பெரிதும் ஈர்ப்பது
சஞ்சீவி பருவதத்தின் சாரலே.
புரட்சிக் கவியே.
அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் – புலவர் உ.தேவதாசு

வியாழன், 27 டிசம்பர், 2018

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45

அகரமுதல

மார்கழி 14, 2049 / சனி

29.12.2018 மாலை 6.00

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583

 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45

2018 தீபாவளி மலர்கள்

சிறப்புரை:  ச.கண்ணன்

அரங்கம் அடைய

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவும்

அகரமுதல

10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு

  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா

அன்புடையீர்  வணக்கம்.!
வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத்  தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள், கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பி உள்ளார்கள். 
 எந்த ஆண்டும் இல்லாத அளவுக்குச் சிறப்பாக, தொழில்முனைவோர் கூட்டம்‘GTEN’ என்ற பெயரில் ஒரு முழு நாள் நடக்கவுள்ளது. விரைவில் விழாப் பதிவுத் தகவல்கள் பேரவை இணைய தளங்களில் வெளியிடப்படும். நீங்கள் அனைவரும் உடனடியாகப் பேரவை விழாவுக்கு நன்கொடையாளர்களாகப் பதிவுசெய்து, ஆதரவு தரும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் வரும் சனவரி மாதத்தை நம் தமிழ்ச்சங்கங்கள் மரபுத் திங்களாகக் கொண்டாட வேண்டுகிறேன். தமிழ்ப் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளைப் பொங்கல் விழாவில் நடத்தி, நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது நம் கடமை.
“கீழடி நம் தாய்மடி”
என்ற மையக் கருத்தோடு தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேரவைத் தமிழ்விழா நடத்துவோம், வாரீர்!
தமிழன்புடன்,
சுந்தர் குப்புசாமி
பேரவைத் தலைவர் 
இவ்விழாவின் சிறப்பு அங்கமாக நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் கீழ்க் குறிப்பிடும் முத்தாய்ப்பான நிகழ்ச்சிகள் உங்களின் பங்களிப்புடன் சிறப்புற நடைபெறஉள்ளன.
நமது இளைய தமிழ் தலைமுறையினருக்காக:
  1. சிறுவர் சிறுமியர்களின் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த குறள் தேனீ – தமிழ்தேனீ (வினாடி வினா)
  2. சிறார்களுக்கான தேசிய அளவில் நடனம் (பரதநாட்டியம், மரபுவழி நடனம் , ஊரக இசை- திரை இசை நடனம்,  பாட்டுப் போட்டி (கருநாடக இசை / மெல்லிசை)
சிறுவர் மட்டும் அல்லாமல் 18 அகவைக்கு மேற்பட்டோரும் தங்களின் தமிழ் திறனைவெளிப்படுத்த
  1. கருத்துக்களம் – பேச்சுப்போட்டி
  2. இலக்கிய வினாடி வினா
ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.
இப்போட்டிகளுக்கு உண்டான விதிமுறைகள்  மற்றும் குறிப்புகள் பேரவையில் இடம்பெற்றுள்ள  அனைத்து தமிழ் சங்கங்களிற்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த விழாவில்  முனைவர் கன்னிக்சு கன்னிகேசுவரன் அவர்களின் மாபெரும் சேர்ந்திசை தமிழ்ப் பண் கலை நிகழ்ச்சி  ‘முரசு’  நடைபெற இருக்கின்றது. இச் சேர்ந்திசையில் இருநூறுக்கும் மேற்பட்ட பாடகர்கள்,  இசை, நடனகலைஞர்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட  சங்கக் காலம்  தொட்டு இந்நாள்தமிழ் இலக்கியங்கள் வரை உள்ள இசையின் மேன்மையை உங்கள் முன் படைக்கஉள்ளனர்.
     இந்த இசை   நிகழ்ச்சியில் பங்கு பெற  அனைத்து அமெரிக்க மாநிலங்களில் இருந்து நன்கு பாடும் திறன்  (திறமையான பாடகர்கள்)  உடையவர்களை வரவேற்கிறோம்.
     தங்கள் மாநிலத்தில் நன்கு திறன்பட பாடும் கலைஞர்களின் பெயர், தொலைபேசிஎண், மின்னஞ்சல் ஆகியவற்றை 1/5/19 தேதிக்குள்  கீழ்வரும் மின்னஞ்சலுக்குஅனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
நன்றி
‘முரசு’  குழு
தங்களின் பங்களிப்பை ஆவலுடன் எதிர் நோக்கும்,
பேரவை – சிகாகோ தமிழ்ச் சங்க விழா குழுக்கள்.

புதன், 26 டிசம்பர், 2018

பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை

அகரமுதல

மார்கழி 15, 2049 / 30.12.2018

முற்பகல் 10.00-நண்பகல் 1.00

நாற்றன் அரங்கம், பச்சையப்பன் கல்லூரி வளாகம்

சென்னை

பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல்

அன்புடன்

பச்சையப்பன் கல்லூரி, சென்னை
அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை
தொடர்பிற்கு
90032 93231 – 99445 40421 – 94426 28922 – 99655 33832

செவ்வாய், 25 டிசம்பர், 2018

தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை

அகரமுதல

 மார்கழி 13, 2049 / 28.12.2018

வெள்ளி மாலை 6.00

பண்டிதர் சவகர்லால் நேரு சாலை

மும்பை 400 080

 தலைமை: சு.குமணராசன்

படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன்

இலெமூரியா அறக்கட்டளை
தானே, மும்பை 400 606

விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்

 அகரமுதல


மார்கழி 12, 2049 / 27.12.2018

வியாழன் மாலை 5.45

கிளை நூலகம்,

7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,  

சாபர்கான் பேட்டைசென்னை

(காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து
அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு)

விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவதுகூட்டம்

தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள்

தொடர் உரை :- முனைவர்  வே சு

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர்
தொலைபேசி எண் : 9444113205