கோவை, ஜூலை 11: கோவை மணி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடந்த 26-ம் ஆண்டு சிலப்பதிகார விழாவில் புதுவை பல்கலைக்கழக கம்பன் இருக்கை பேராசிரியர் தெ.ஞானசுந்தரத்துக்கு (படம்) டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் விருது வழங்கப்பட்டது. விழாவின் துவக்கத்தில், தொழிலதிபர் இயகோகோ சுப்ரமணியம் சிலப்பதிகார மலரை வழங்க, அதை தாயம்மாள் அறவாணன் பெற்றுக் கொண்டார். டாக்டர் உவே.சாமிநாத அய்யர் விருதை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் வழங்க, புதுவை பல்கலைக்கழக கம்பன் இருக்கை பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் பெற்றுக் கொண்டார். இளங்கோ அடிகள் அறக்கட்டளைத் தலைவர் சி.சௌந்திரராஜுக்கு பொற்கிழியை அறவாணன் வழங்கினார். இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத் தலைவர் ஜி.கோபாலன், செயலர் நா.நஞ்சுண்டன், இணைச் செயலர் க.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை 10.45 முதல் 11 மணி வரை முனைவர் க.முருகேசன் எழுதிய "பூம்புகார் பொற்கொடி' நூலை தாயம்மாள் அறவாணன் வெளியிட, வி.செல்வபதி, சங்கர சீதாராமன் ஆகியோர் அதைப் பெறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக