சனி, 9 ஜனவரி, 2016

பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் வேறுபட்டால் தமிழ் வழக்கற்றுப் போகும்! – பரிதிமாற்கலைஞர்


thalaippu_thamizhverupattaal_vazhakkatrupogum

  தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும்.
  – பரிதிமாற்கலைஞர்
தலைப்பு-தமிழ்மொழியின் வரலாறு : attai_thamizhmozhiyinvaralaaru


நூலறிமுகம் – நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்)


அட்டை-முன்னுரைத்தமுன்னுரைகள்01 : attai_naanmunnuraithamunnuraigal01 அட்டை-முன்னுரைத்தமுன்னுரைகள்02 : attai_naanmunnuraithamunnuraigal02
நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்)
ஆசிரியர்: ப.அருளி 
வேரியம் பதிப்பகம் 
ஒரு தொகுதி: உருவா 300
இரண்டு தொகுதிகள் : உருவா 500
 பல்வேறு நூல்களிலும் இதழ்களிலுமாக அருளி அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள முன்னுரைகளின் தொகை. உரை எழுதுவது முடிவெய்திய பிறகு, -அவ் உரை நூலைப் படிக்கப் புகுவதற்கும் முன்னர்… எதற்காக? என்ன பொருளில்? யாரால் இது ஆக்கம் பெற்றுள்ளது?… என்பவற்றுக்கான தொடக்கவாயில் ஒன்று, அடிப்படைத் தேவையாயுள்ளமை – அறிவுலகத்தின்கண் பரவலாக எழவே, நூலின் முகப்பாகிய வாயிலில் இவ்விளக்கப்பதிவினை முற்படுத்தும் வழக்கம் தோன்றித் தொடரலாயிற்று!
தொடர்புக்கு:
தாழி புத்தகக் கடை,
33, செங்குந்தர் வீதி, ஒர்லையன் பேட்டை,
புதுச்சேரி – 605 005, இந்தியா 
தொடர்பு எண்: 94445 76660
மின்னஞ்சல்: tbspdy@gmail.com
நூல்களின் தளம்



வெள்ளி, 8 ஜனவரி, 2016

தமிழ், தமிழர் செய்திகள் இணைப்புகள் சில

மே பதினேழு இயக்கம் : பேரழிவை உருவாக்கியது யார்? – கருத்தரங்கம்


சென்னை – கடலூர் பேரழிவை உருவாக்கியது யார்? இனிவரக்கூடிய பேரழிவினைத் தடுப்பது எப்படி? – கருத்தரங்கம்
 
 மார்கழி 24, 2046 / 09.01. 2016, சனிக்கிழமை மாலை 4 மணி,
செ.தெ.நாயகம் பள்ளி, தியாகராயநகர், சென்னை.

மே பதினேழு இயக்கம்

அழை-கருத்தரங்கம், பேரழிவு01 : azhai_perazhivukarutharangam_may17_01 அழை-கருத்தரங்கம், பேரழிவு02 : azhai_perazhivukarutharangam_may17_02