சனி, 3 ஏப்ரல், 2010

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்



சென்னை, ஏப்.2: தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
""தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த பிறகும், அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகக் கருத வேண்டும். அவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கெனவே பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
1950}ம் ஆண்டுக்கான தாழ்த்தப்பட்டோர் சட்டம், 1956}ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் சீரமைப்புச் சட்டம், 1976}ம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி., சட்டத் திருத்தம் ஆகியன தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து, சீக்கியர், புத்த மதங்களைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை தாழ்த்தப்பட்டவர் என்று கருத வேண்டும் எனக் கூறியுள்ளது.
1990}ம் ஆண்டு இந்தச் சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது, புத்த மதத்தைத் தழுவியர்களும் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட இந்துக்கள் என்னென்ன சலுகைகள் பெறுகிறார்களோ, அத்தனை சலுகைகளையும் அவர்கள் வேறு மதத்துக்கு மாறினாலும் கொடுப்பதாக அரசு உறுதிமொழி வழங்கியது.
எனவே, தலித் கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து உரிய சலுகைகள் வழங்க வேண்டும். நாடாளுமன்ற சட்டப் பிரிவுகளின் கீழ், நீங்கள் (பிரதமர்) தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்னையில் தலையிட்டு உதவ வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் குறிப்பாக, இடஒதுக்கீடு பெற அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க உறுதி செய்ய வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துக்கள்

2/2) பிற சமயம் மாறுபவர்கள் அந்தப் பழக்க வழக்கங்களைப்பின்பற்றுவதால் காலம் காலமாகப்பின்பற்றி வந்த மண்ணின் பண்பாட்டை உதறுகிறார்கள். (ஈழத்தில் இசுலாமியச் சமயத்தைப்பின்பற்றியதாலேயே தமிழர்களும் இசுலாமியர்களும் என வேறுபடுத்திக் காட்டி நடந்து கொள்வதை மறக்க வேண்டா.) சமய, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/3/2010 3:15:00 AM

1/2) இவ்வாறான கோரிக்கையும் செயல்பாடும் தாய்மண்பண்பாடடிற்கான சாவுமணி என்பதை யாரும் உணருவதில்லை. நேற்று வரை தமிழராக இருந்தவர் கிறித்துவராக மாறியதும், தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் கடவுளுக்குப்படைக்கவில்லை எனக் கூறிப் பொங்கல் அளித்தாலும் ஏற்பதில்லை. கிருத்துவ ஆண்டைத்தான் பின்பற்றுவோம் எனத் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. ஐரோப்பிய கிருத்துவ அறிஞர்கள் தமிழ் இலக்கியச் சிறப்பால் கவரப்பட்டு சமய இலக்கியங்களைப்படித்தாலும் மொழி பெயர்த்தாலும் சமயம் மாறவில்லை. அதுபோல் ஒருவர் எச்சமயக் கருத்தையும் போற்றத் தடையில்லை. ஆனால், சமய மாற்றம் என்பது பத்தாயிரத்துக்கு ஒன்று என்ற அளவில் மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். வேறு சமயத்திற்குச் சென்றால் உயர்ந்த நிலை அடைவோம் எனக் கருதி அல்லது கற்பிக்கப்பட்டு அச் சமயத்தைப் பின்பற்றி மாறுபவர்கள் தாம் சார்ந்திருந்த சமயச் சலுகைகளை இழக்க வேண்டியதே முறையாகும். (தொடர்ச்சி காண்க) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/3/2010 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஆங்கில ஆட்சியின் எச்சம்: பட்டமளிப்பு விழா ஆடையை கழற்றினார் மத்திய அமைச்சர்



போபாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில், மேடையிலேயே பட்டமளிப்பு விழா மேலங்கியைக் கழற்றுகிறார் மத்தி

போபால் ஏப். 2: பட்டமளிப்பு விழாவின் போது அதற்குரிய ஆடையை அணியும் பழக்கம் ஆங்கில காலனி ஆட்சி விட்டுச் சென்ற எச்சம் என்று கூறிய மத்திய அமைச்சர் ரமேஷ், விழா மேடையிலேயே பட்டமளிப்பு விழாவுக்கான மேலங்கியை கழற்றி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தினார்.
÷போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் 7-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்துகொண்டார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பட்டமளிப்பு விழா அங்கியை அணிவது வழக்கம். பட்டம் பெறும் மாணவர்களும் இதுபோன்ற அங்கி அணிவது வழக்கம்.
ஆனால் இந்த வழக்கத்துக்கு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
÷சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நாம் காலனி ஆட்சியின் அடிமைதளைகளை விடுவிக்கவில்லை. இதுபோன்று அங்கி அணிவதை அநாகரிகமான செயலாகவே நான் கருதுகிறேன் என்று கூறிய அமைச்சர் தான் அணிந்திருந்த அங்கியை கழற்றினார். அவர் அவ்வாறு செய்தவுடன் அதிர்ச்சி கலந்து வியப்பில் விழாவில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் கைதட்டி வரவேற்றனர்.
÷சாதாரணமாக ஆடை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டால் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கருத்துக்கள்

மழலையர் பள்ளிகள் முதல் பட்டமளிப்பு என ஏமாற்றிப் பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகளின் கொள்ளைகளை முதலில் தடுத்து நிறுத்துங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/3/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வருங்காலத் தலைவர் குறித்து கருணாநிதி பார்த்துக் கொள்வார்: ஸ்டாலின்



சென்னை, ஏப். 1: தி.மு.க.வின் வருங்காலத் தலைவர் குறித்து மத்திய அமைச்சர் அழகிரியின் பேட்டிக்கு தாம் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.கோவையிலிருந்து வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய கோவை சென்றேன். தி.மு.க.வின் தலைவர் பதவி தொடர்பாக மத்திய அமைச்சர் அழகிரி அளித்த பேட்டி குறித்து முதல்வர் கருணாநிதி பார்த்துக் கொள்வார். நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.
கருத்துக்கள்

கலைஞர் இருக்கும் பொழுது பேராசிரியர் உட்பட வேறு யாரேனும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்று சொல்ல முடியுமா? என்றும் இரண்டாம் நிலையில் இருந்த (தற்பொழுது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட) பேராசிரியர் உட்பட வேறு யாரும் அடுத்த முதல்வர் என்று சொல்ல முடியுமா? ஆட்சிக்கும் கட்சிக்கும் பாத்தியதை கொண்டாடுவதற்காக இவ்வாறு சொல்லி வழி யமைத்துக் கொள்கிறார்கள். அடுத்த முதல்வர என்று சொல்லி சொ ல்லி மக்களை ஆயத்தப்படுத்தி இன்று பெரும்பாலான ஊடகங்களைக் கொண்டு வருங்கால முதல்வர் என்று விளம்பரடுத்தப்படுவது போல், இவரைத்தவிர வேறு தலைவர் இல்லை என்று விளம்பரப்படுத்துவதற்காகப் போடப்படும் அச்சாரம். எனவே, திமுக இதனால் பிளவுபடும் என யாரும் கனவு காண வேண்டாம். கட்சித் தொண்டர்கள் கொத்தடிமைகளாக இருக்கும் வரை எல்லாக் கட்சிளிலும் இதே நிலைமைதான். . . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/3/2010 2:49:00 AM

சண்டை போடாம ரெண்டு பேரும சாப்பிடலாம்னு நினைக்கிறாரு தம்பி

By tvs
4/2/2010 11:35:00 PM

Mr.Stalin have proved his maturity again, there is no doubt that he can turn out to be future leader of Tamilnadu. Like father the real son is taking things easy and not reacting silly to these sensitive issues is a real mental strength.Real appreciation to Mr.Stalin.

By Jack
4/2/2010 10:54:00 PM

Karundanidhi once replied that DMK is Democratic Party not like Sankara Madam to elect the leaders, but now his son says My Daddy will decide who will be the leaders, Pongada neengalum vunga arasiyalum

By SN
4/2/2010 10:45:00 PM

annan thambi sandai angeyum undo?

By madurai
4/2/2010 10:20:00 PM

karunanithi parthukollvar endral dmk unga family asset aagivitathu, paavam kathchi start pannavaru annadurai avanga family irukka veedu kuda ellama irukanga, aadunga.. kaalam pathil sollum.

By maniannadurai
4/2/2010 9:45:00 PM

This is a drama stage managed by Mu Ka to ensure that no one else except their family is in control of the party

By king
4/2/2010 4:21:00 PM

விஞ்ஞான பூர்வமாக ஊழல்,ஒரு குடும்பம் எல்லோரும் ஆட்சி பதவி, கொள்ளையடித்த பணத்துக்கு வோட்டு - இது திமுக. கோடிக்கணக்கில் மகா ஊழல், கொடுங்கோல் ஆட்சி, 1 ரூபாய் சம்பளம் என மோசடி, தோழி கும்பலுக்காக கட்சி - இது அதிமுக. இரண்டையும் விரட்டியடிக்க, புதிய வரலாறு படைக்க சரியான தலைவர் ராமதாஸ்.

By anbu
4/2/2010 3:26:00 PM

Idhellam oru news. Idhukkellam comments. Tamila/ Tamil nadu where are you heading? This is the only State where fools and idiots alone live.

By Ulagam
4/2/2010 2:30:00 PM

கருணாநிதி குடும்பத்தை விட்டா தமிழ்நாட்டுக்கு விடிவுகாலமே இல்லையா?

By Kumaar
4/2/2010 2:14:00 PM

'புண்ணாக்கு' என்பவரோட கருத்தை படிச்சி சிரிப்புதான் வந்துச்சி... ஆனா, ஒரு கருத்தது சொன்னாகூட ஆள் வச்சி பெண்டுகிண்டு எடுத்துருவாங்க-நு பயப்படறது, எந்த அளவுக்கு பாதுகாப்பு உணர்வை இந்த கட்சியும் ஆட்சியையும் மிரட்டலையும் கொடுத்திருக்குன்னு புரிஞ்சிக்கலாம். கருத்து சொல்றவங்க கூட, ஓரளவுக்கு கொடுங்கப்பா. அவங்க என்ன இதையெல்லாம் படிச்சி நாளைக்கே திருந்திட போறாங்களா? உங்களுக்குதான் மன எழுச்சி, உளைச்சல், விரக்தி எல்லாம்.

By Kumaar
4/2/2010 2:07:00 PM

THEN WHAT IS THE ROLE OF THE DMK GENERAL BODY AND EXECUTIVE COMMITTEE TO CHOOSE ITS FUTURE LEADER AFTER THE MU.KA. ELECTION OF DMK LEADERSHIP IS IN THE HANDS OF GENERAL BODY AND CHIEF EXECUTIVE COUNCIL,NOT BY KARUNANITHI`S HANDS.

By Sp.karuppanamoorthy
4/2/2010 1:30:00 PM

இது, கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தார் நடத்தும் நாடகம். சிறிது காலம் கழித்து சூழ்நிலைக்கு ஏற்றது போல பிறகு மீண்டும் அரங்கேறும். பார்ப்போம் இன்னும் எத்தனை நாள்தான் மக்களை இவர்கள் ஏமாற்றுவார்கள் என்று.

By இரவி
4/2/2010 10:48:00 AM

ஏன்யா வருங்காலம் என்பதே கலைஞருக்கு பிறகுதானே.அப்போது இல்லாத அவர் எப்படி அதை பார்த்துக்கொள்வார். என் இப்பதி உளறுகிறாய். நாட்டில் ஜாதிகளுக்கு இடையே சண்டையை உருவாக்கி குளிர் காய்ந்தீர்கள்.கட்சிகளுக்கு இடையே வெறுப்புகளை உறவாக்கி உங்களை வெறுத்து கொண்டீர்கள். கட்சி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது உங்கள் வாழ்க்கையிலும் உண்மை ஆகி இருக்கிறது. உங்கள் அழிவை யாராலும் தடுக்க முடியாது.

By அச்சரபாக்கம் மா.பா.
4/2/2010 9:14:00 AM

Shakespeare sholud have lived to cast another play like the King Lear.

By mohan
4/2/2010 6:31:00 AM

இவனுங்க அடிசுகிட்டா மக்களுக்குத்தான் நல்லது. அரசு கேபிள் நிறுவனம்னு ஒன்னை இந்த கிழம் சுமங்கலி (சன் டிவி) நிறுவனத்துக்கு எதிரா ஆரம்பிசானே என்ன ஆச்சு? எல்லாம் மறந்துட்டீங்க இல்ல? அதுதான் இது மாதிரி கிரிமினல்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதனாலதான் சொல்கிறேன், இந்தக் கிரிமினல்கள் அட்சிக்கிட்டா மக்களுக்குத்தான் நன்மை.

By தமிழன்
4/2/2010 6:05:00 AM

ஏனப்பா ஸ்டாலின், கட்சிக்குள்ள மக்களாட்சி மலரகூடதோ? உடனே தலைவர் பதுக்குவார்ண என்ன அர்த்தம். பிரச்சினையே தலைவர் இறந்ததுக்கப்புறம் யார் தலைவர் என்பதுதான். இது ஒன்றும் கிரீடம் அல்ல, தலைவர் பார்த்து யாருக்கு முடிசூடுகிராரோ அவர்தான் அடுத்த மன்னர் என்பதற்கு.

By தமிழன்
4/2/2010 6:00:00 AM

A GENTLE MAN IN POLITICS.CAME TO THIS STAGE OUT OF HIS HARD WORK ALONE.NEVER ACTED AGAINST THE PARTY PRINCIPLES.KALAIGNAR'S WORDS ARE VEDHA'S FOR HIM.EITHER RULING OR OPPOSITION PARTY HE USED TO FACE ANYTHING &EVERYBODY.NO CORRUPTION OR CRIMINAL RECORDS IN HIS LIFE.MASS LEADER.ABOVE ALL AVERY GOOD HUMAN BEING.HE HAS A LOT OF FRIEND'S IN LITTLE FLOWER CONVENT A SCHOOL FOR SPECIAL CHILDREN,A PLACE WHERE HE CELEBRATES HIS BIRTH DAY EVERY YEAR.LONG LIVE STALIN.U R THE REAL LEADER.SIVAKUMAR

By sivakumar
4/2/2010 5:18:00 AM

kekuravan kenaiyana irunntha ithuvum solluvinga ethukku melayum solluvinga...

By rathi thevathai
4/2/2010 4:30:00 AM

அண்ணன் மணிமகுடம் சூட்டிக்கொள்ள தம்பி இடம் கொடுத்தால் அரசாட்சி மிஞ்சும்,இல்லையேல் அது எதிரிகளுக்கே சாதகம் ஆகிவிடும்,இப்ப நான் ஒரு நீதி சொல்றேன்,அழகிரி முதல்வர்,கட்சி த்தலைவர்,ஸ்டாலின் மத்தியமந்திரி எப்படி நம்ம தீர்ப்பு,எப்ப்பா ஆளைவச்சி ஆட்டோல அடியாள உட்டு பெண்டு எடுத்துடாதீங்கப்பா

By புண்ணாக்கு
4/2/2010 3:20:00 AM

Mughal Raj was then the biggest in the world and its ruler Shaw Jahan was a lover of arts and built Tajmahal,Redforts(Delhi and Agra) and innumerable buildings.but fate gave him four sons.Shaw Jahan,the emperor wanted his first son to succeed him,but his 3rd son Aurangazeb acted against his father.He put his father in jail and killed all his three brothers and became the ruler,he was the last emperor of that empire.HISTORY REPEATS.

By RM.PILLAPPAN
4/2/2010 2:48:00 AM

கத போற போக்கை பார்த்தால் ....கனிமொழிக்கு தான் அதிர்ஷ்ட்டம் அடிக்கும் என்று நினைக்கிறேன் !!!! அட இந்தப் பக்கம் பாதி பேரு அந்தப் பக்கம் பாதி பேரு நில்லுங்கப்பா கொஞ்சம் சம்பாதிச்சுக் கிடுவோம் !!!!

By rajasji
4/2/2010 2:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்