வெள்ளி, 17 ஜூலை, 2009

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் : திரும்பப் பெற்றனர்



சென்னை, ஜூலை 16: பயிற்சி டாக்டர்கள் தங்களது உதவித் தொகை உயர்வு போராட்டத்தை வியாழக்கிழமை (ஜூலை 16) விலக்கிக் கொண்டனர்.முதல்வர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறிய பயிற்சி டாக்டர்கள், அவரை வெள்ளிக்கிழமை சந்திக்கின்றனர்.
(முழுச் செய்திக்கு மேலே சொ டுக்குக)
கருத்துக்கள்

குறிப்பிட்ட விளம்பரத்தில், 'வேறு கோரிக்கை இருப்பின் அதற்கான பேச்சு வார்த்தைக்கு வந்தால் அதற்கும் தயார்' என முதல்வர் அறிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட மன்றத்திலேயே முதல்வர் 'பரிசீலனை என்றாலேயே கிடையாது என்றுதான் பொருள்' எனப் பேசியுள்ளார். எனவே, அரசு போராட்டத்தை நசுக்கி விட்டதாக எண்ணாமல், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து மருத்துவக் கல்விக்காகச் செலவிடும் காலத்தை நினைத்து அக்காலத்தில் குடும்பத்திற்கும் உதவும் சூழல் இவர்களுக்கு இருப்பதைப் புரிந்து , அனைத்து வகை மருத்துவப் பயிற்சியாளர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்த வேண்டும். போராடினாலே எதிர்க்கட்சியினர் அல்லது எதிர்க்கட்சியின் தூண்டுதலில் நடத்துபவர்கள் என்று எண்ணாமல், ' அழுத பிள்ளைதான் பால குடிக்கும' என்ற சூழலில் நம் நாடு உள்ளதாலும் கிளர்ச்சியே கருத்தை வலியுறுத்தும் கருவியாகப் போய்விட்டதாலும், பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு, யாரையும் தண்டிக்காமல் உடனே பயிற்சித் தொகையை உயர்த்தி உடனடி நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/17/2009 3:43:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக