சனி, 15 ஆகஸ்ட், 2009


இலங்கைப் பிரச்னையில் சுமுக நிலை ஏற்பட்டுவிட்டதா? கருணாநிதிக்கு ராமதாஸ், நெடுமாறன் கண்டனம் * புதுச்சேரியில் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி * வன்னியில் மனித புதைகுழிகள்: அம்னெஸ்டி இன்டர்நேஷனல் * பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து நாளை சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு *
Increase Speed Stop Decrease Speed

தலையங்கம்: இந்நினைவகற்றாதீர்...!

சுதந்திர நாடாக இந்தியா உலக அரங்கில் முத்திரை பதிக்கத் தொடங்கி 62 ஆண்டுகள் கடந்துவிட்டன...

அரசின் நலத் திட்டங்களில் ஊழலுக்கு இடம் தரக்கூடாது: பிரதிபா பாட்டீல்

ஊழலுக்கு இடம் தரக்கூடாது என ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் குடியரசுத் தலைவர்...

இலங்கையில் நிலவுவது சுமுக நிலையா? முதல்வருக்கு நெடுமாறன், ராமதாஸ் கண்டனம்

சுமுக நிலை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் மு. கருணாநிதி கூறியிருப்பதற்கு கண்டனம்...

அம்மா, நமக்கெல்லாம் இன்னிக்கு சுதந்திர தினமாம்...! இன்னிக்காவது ரொட்டிக்குத் தொட்டுக்க ஏதாவது குடும்மா...!!

" style="border: 3px solid White; height: 250px; width: 227px;">

அம்மா, நமக்கெல்லாம் இன்னிக்கு சுதந்திர தினமாம்...! இன்னிக்காவது ரொட்டிக்குத் தொட்டுக்க ஏதாவது குடும்மா...!!



வன்னியில் பாரிய மனித புதைகுழிகள்
பிரசுரித்த திகதி : 13 Aug 2009

வன்னியில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றதன் பின்னர் தொடர்சியாக எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் பாரிய மனித புதைகுழிகள் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையானது அரசாங்கம் பாரிய ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்பதற்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழிகளும் மோட்டார் எறிகனை தளங்களும் மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றமையே இந்த செய்மதி படங்கள் காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

செய்மதி படங்களின் படி மூன்று பாரிய புதைகுழிகளும் அதனை தவிர மொத்தமாக ஆயிரத்து 346 மனித புதைகுழிகளும் காணப்படுவதாக மன்னப்புச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி செய்மதி படங்கள் எடுக்கப்பட்ட போது அங்கு புதைகுழிகள் காணப்படவில்லை. எனினும் மே மாதம் 24ஆம் திகதியளவில் சுமார் 342 புதைகுழிகள் காணப்பட்டதாக லண்டனை தலைமையகமாக கொண்ட மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த குழிகளில் பொதுமக்களா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளா புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்த சபை தெரிவிக்கவில்லை. எட்வான்ஸ் மென் ஒப் சயன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனமொன்றே இந்த செய்மதி படங்களை எடுத்துள்ளதாக மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

புதிய செய்மதி படங்களின் அடிப்படையில் அரசாங்கம் பொது மக்களுக்காக அறிவித்த பாதுகாப்பு வலயங்களை சுற்றி 17 மோட்டார் தளங்கள் உள்ளதையும் காணமுடிகிறது.

இந்தநிலையில் இலங்கை படையினரும் தமிழீழ விடுதலை புலிகளும் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை தெரிய வந்துள்ளதாக மன்னிப்புச் சபையின் அலுவலரான கிறிஸ்டோப் கோடடெல் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தகவல்களின் அடிப்படையில் வன்னியில் யுத்தம் இடம்பெற்ற இறுதி கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை இலங்கையின் பாதுகாப்பு பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல்ல உண்மைக்கு புறம்பானதென குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலத்தையும், மனநலத்தையும் சேர்த்து
மக்களுக்கு தந்தவர் வேதாத்ரி மகரிஷி:
தமிழருவி மணியன் புகழாரம்



பொள்ளாச்சி, ஆக. 14: உடல் நலத்தையும் மன நலத்தையும் சேர்த்து மக்களுக்குத் தந்தவர் வேதாத்ரி மகரிஷி என்று பேச்சாளர் தமிழருவி மணியன் தெரிவித்தார். ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் வேதாத்ரி மகரிஷியின் 99-வது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் தமிழருவி மணியன் பேசியது: புத்த மதம் உலகம் குறித்து பேசியது. இறைவனை மையமாக வைத்து பேசியது இந்து மதம். சமண மதம் கடவுள் இல்லை என்று கூறியது. ஆனால் புத்த மதம் கடவுள் பற்றி சிந்திக்கவேயில்லை. பற்று, பயம் மற்றும் சினத்தை தவிர்க்க வேண்டும் என்கிறது பகவத் கீதை. ஆனால், வேதாத்திரி மகரிஷியோ ஆசையை சீரமைக்க வேண்டும் என்கிறார். நம்மில் பலருக்கு வாழத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தன்னை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் வேதாத்ரி மகரிஷி. வேதாத்ரியத்தின் அடிப்படையே எண்ணம் ஆராய்தல்தான். மனம்தான் மனிதனை வாழ வைக்க உதவும் உந்து சக்தியாக்குகிறது. செயலின் உந்து சக்தி எண்ணம். எண்ணத்தின் பிறப்பிடம் மனம். ஒவ்வொருவரும் பிற மனிதர்களின் துயரைத் துடைப்பவர்களாக மாற வேண்டும். வாழ்க்கை பிறருக்காக வாழ வேண்டும் என்பதுதான் வேதாத்ரி மகரிஷியின் எண்ணம் என்று தமிழருவி மணியன் பேசினார். நூலகத்துக்கு ரூ.10 லட்சம்: நா.மகாலிங்கம் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் உலகத் தரத்திலான நூலகம் அமைக்க வேண்டும். இங்கிருந்து இன்டர்நெட் மூலம் உலகம் முழுவதும் உள்ள நூல்களைப் படிக்கச் செய்ய வேண்டும். இதைத் தனி ஒருவரால் செய்ய முடியாது. இதற்காக ரூ.10 லட்சம் நன்கொடை தருகிறேன். மற்றவர்களும் சேர்ந்து இதைச் செய்ய வேண்டும். சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் தத்துவங்களை தாய்மொழியில் வேதாத்ரி மகரிஷி கூறியுள்ளார். இந்த சிந்தனைகள் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வந்தாலும் பழைய நூல்களில் உள்ள கருத்துகள்தான் புதிய சிந்தனைகளாக வருகிறது. வீட்டுக்குள் அடைந்து கிடைந்த பெண்களை ஞான மார்க்கத்தை நோக்கி வாழ்க்கை நடத்த பயிற்சி தந்தவர் வேதாத்ரி மகரிஷி. ஞானிகளின் உடல் மறைந்தாலும் ஞானம் மறைவதில்லை என்றார்.
இலங்கையில் நிலவுவது சுமுக நிலையா?
முதல்வருக்கு நெடுமாறன், ராமதாஸ் கண்டனம்



சென்னை, ஆக. 14: இலங்கைத் தமிழர் பிரச்னையில் சுமுக நிலை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் மு. கருணாநிதி கூறியிருப்பதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறப்பு விழா சென்னையில் வியாழக்கிழமை நடந்தபோது பேசிய கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்னையில் சுமுக நிலை ஏற்பட்டுவிடக் கூடாது எனச் சிலர் விரும்பியதாகவும், இப்போதும்கூட சிலர் அதைக் கிளறிவிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக நெடுமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: "இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்து இல்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் இறந்து போகின்றனர். தமிழர்களுக்கென தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுகின்றனர். இதை சுமுக நிலை என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளாரா?' என நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் அட்டூழியங்களை மறைக்க துணை செய்யும் வகையில் கருணாநிதி செயல்படுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ராமதாஸ்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 1977-ல் இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு அரிசியோ, கோதுமையோ அனுப்ப வேண்டும் என்றும், தமிழர்களுக்கு அகதி முகாம் நடத்த மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜபேயியை சந்தித்து, திமுக வேண்டுகோள் விடுத்தது. இப்போதும் அந்த நிலையில் மாற்றம் இல்லை. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல ஈழத் தமிழர்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையைப் பெறும்போதுதான், அங்கு சுமுகநிலை திரும்பியதாகக் கருத முடியும். அத்தகைய நிலை ஏற்பட உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்' என ராமதாஸ் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

1/2) இன் தொடர்ச்சி சிங்கள ஊடகங்களே வதைமுகாம்கள் பற்றியும் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள் பற்றியும் சராசரி ஒருவருக்குத் தேவையான இயற்கைத் தொல்லைகள் வசதியில் 100 பேர் வீதம் அடைபட்டுக் கிடப்பது பற்றியும் மருத்துவ வசதியின்றிப் பலர் மாண்டு போவது பற்றியும் சிங்களக் குடியேற்றங்கள் பற்றியும் ஒரு நாளக்குஒருவருக்கு ஒரு குவளை நீர் என்ற அளவில்மட்டும் வழங்கப்படும் பற்றாக்குறை பற்றியும் எதிக்கட்சிகள் தொண்டூழியர்கள் செல்வதற்குத் தடைவிதிப்பது பற்றியும் விவரிக்கையில் செய்திகளை அவ்வப்பொழுது படிக்கும் முத்தமிழறிஞர் அவர்கள் இதனைச் சுமுக நிலை என்றால் என்ன சொல்வது? விரைவில் அவருக்குச் சிங்கள அரசு'லங்கா ரத்னா' விருது வழங்கினாலும் வியப்பதற்கில்லை. உண்மை நிலையை விளக்கி அவற்றைக் களைய வேண்டிய பொறுப்பும் உணர்வும் கடமையும் உள்ள முதல்வர் அவர்கள் எதையும் மூடி மறைக்காமல் இருப்பதே நல்லது. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/15/2009 2:57:00 AM

1/2) முதுமை ஏற ஏறத் துறவு எண்ணமும் பொது நல எண்ணமும் மேலோங்க வேண்டும். ஆனால் முத்தமிழ் அறிஞருக்கு நேர்மாறாகக் குடும்பப் பற்றே மேலோங்குவதால் காங்.காரன்கூடப் பேசத் தயங்கும் பொய் மூட்டைகளைத் தாராளமாக அவிழ்த்து விடுகிறார். ஏன் இந்தத் தடுமாற்றம்? தான் கடந்து வந்த பாதையையும் மறந்து தன்னால் உருவேற்றப்பட்ட இன உணர்வுக் கொள்கையையும் துறந்து ஏதேதோ பேசுவதைவிட அமைதி காக்கலாமே! திருவள்ளுவர் சிலை சிறப்பு தந்த உற்சாகத்தில் வாய்க்கு வந்ததைப் பேசுகிறாரா? அல்லது தான் என்ன பேசுகிறோம் என்று அறிந்துதான் பேசுகிறாரா? இந்தியாவைச் சேர்ந்த தமிழ் மாநிலத்தின் முதல்வரா? அல்லது சிங்கள அரசின் பணியாளரா? 2/2 காண்க வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/15/2009 2:56:00 AM

Mr.S.Srinivasan, pls learn english & post your comments. Thanks.

By Savita
8/15/2009 2:35:00 AM

கருணாநிதியின் இந்த போலிப்பேச்சைக்கேட்பவருக்கு சூடு, சுரணை இருந்தால் கண்டிப்பாக கோபமும், ஆத்திரமும் வரும். தமிழினத்தை அங்கே சாகவிட்டுவிட்டு இங்கே சால்ஜாப்பு சொல்கிறார். மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டதற்கு ‘பேராசை பிடித்த மீனவர்கள்’ என்று சொன்ன வாய்தானே அது. சொத்துக்களையும், பதவியையும், வாரிசுகளையும் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் பேசும்.

By Surya
8/15/2009 2:26:00 AM

Sri Lankan ARMY did manage to SLAUGHTER more than FIFTY thousand TAMIL civilians including women and CHILDREN within few months time. Banned weapons like CLUSTER BOMBS and phosphorous bombs were used against the innocents. (Death and destruction in a Terror Island , Richard Dixon, Telegraph .co.uk. - 12 July 2009)

By James Ratnam
8/15/2009 2:17:00 AM

The top aide to the United Nations Secretary-General was told more than a week ago that at least 20,000 Tamil civilians were killed in the Sri Lankan Government’s final offensive against the Tamil Tiger rebels this month, The Times can reveal ( The Times UK, 30 May 2009)

By James Ratnam
8/15/2009 2:16:00 AM

About 1,400 people are dying every week at the giant Manik Farm internment camp set up in Sri Lanka to detain Tamil refugees from the nation’s bloody civil war, senior international aid sources have told The Times (The Times UK, 10 July 2009)

By James Ratnam
8/15/2009 2:15:00 AM

somebody has to stop these two jokers from making money in the name of tamil eezham. Especially this Nedumaran fu.cker, good for nothing fellow...he guides the youngsters on the wrong path..

By Kumaran
8/15/2009 2:08:00 AM

DEAR TAMILNADU POLITICAL LEADERS, LAST TIME MP ELECTION CINI STAR VIJAYKANTH VOICE BOYCAUGHT THE MP ELECTION.IF TIME TAMIL NADU VOTERS CAN STOP TO VOTE THERE IS POSIBLE TO SAVE 50,000 PEOPLE, INDIAN GOVERNMENT TO SUPPORT TAMIL EELAM.IN THIS TIME OUR INVESTERS GOES TO TAMIL EELAM DEVELOP THE TAMILIANS.WE HAVE FAILED TO DO THAT!! NOW OUR INDIAN GOVERNMENT WERE SUPPORTED GENOCIDE IN SRILANKA TO WIPE OUT TAMILIANS!!!UNTIL UN.NOW THERE IS CEMENTRY ONLY BALANCE.I NEVER FEEL INDIA IS DEMACRETIC COUNTRY!! SOME MORE WE ARE CELEBRATING INDEPENDENCE DAY WHAT A SHAME!!! IN POLESTEEN 2,000 PEOPLE KILLED THAT INDIA HAS RAISED THEIR VOICE TO ISREAL, WHY NEVER RAISE AGAINST SRILANKA?????PLS UNIT THE LEADERS AND CALL TAMILNADU TO STAND ROAD SHOW IT TO THE WORLD VANTHE MATHARAM.VENDRATHEY TAMIL EELAM!!!!

By s.srinivasan
8/15/2009 1:24:00 AM



மதுரையில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டில் கலந்துகொண்டு ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராமராவ் ஆற்றிய உரையின் சில பகுதிகள் வருமாறு: ""இந்த மக்கள் மகாசமுத்திரத்தில், ஒவ்வொருவர் முகத்திலும் கவலையைக் காண்கிறேன். இலங்கையில் நம் தமிழ்க்குடிமக்கள் படும் கஷ்டத்தை நினைக்கும்போது நம் கண்கள் குளமாகின்றன. மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே வன்முறையைக் கடைப்பிடிக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்குகிறது... சிறுபான்மையினருக்கு அன்பு காட்டி, கட்டிக்காத்து, பெரும்பான்மையினரையும் வளர்ப்பது எந்த அரசிற்கும் தலையாய கடமையாகும். சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பகுதிகளில் அவர்களுடைய மொழி, மதம், இனம், இதர உரிமைகள் காக்கப்பட வேண்டியது போக, அவர்களிடமிருந்து சாதாரண குடிமக்களுக்குரிய உரிமைகளைக்கூடப் பறித்து ஆதரவற்றவர்களாகச் செய்யும் முறையை என்னென்பது? சிறுபான்மை-மைனாரிட்டி வர்க்கத்தினர் இருக்கும் பகுதியில் அவர்களுக்கு அவசியமான பாதுகாப்பு கொடுப்பது அரசியல் நீதி அல்லவா? இதை இலங்கை அரசாங்கம் மறந்தது ஏன்? இது நியாயமா? இது தர்மமா? இது பொறுக்குமா? தர்மத்தின் பெயரால், சட்டத்தின் பெயரால், குடியரசு, ஜனநாயகம் என்ற உயர் அரசியல் முறையின் பெயரால், பண்பாட்டின் பெயரால், இந்த மாபெரும் அநீதிக்குத் தீர்வு காண அறைகூவல் விடுக்கிறேன். பரிகாரம் -பிராயச்சித்தம் செய்யக் கோருகிறேன். இங்கே நாம் விடுக்கும் அறைகூவல் அனைவரது காதுகளிலும் விழவேண்டாமா? அனைவரது இல்லங்களிலும் எதிரொலிக்க வேண்டாமா? சுதந்திரம் நமக்கு உயிர் என்று சொல்லிக்கொடுத்தது சீவகசிந்தாமணி. உயிர் கொடுக்கும் தமிழரின் சுதந்திரம் பறிபோகக்கூடாது'' என்.டி.ராமராவ் தமிழில் பேசியபோது கரவொலி விண்ணைப் பிளந்தது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஏ.பி.வாஜ்பாய் பேசியதாவது: ""இலங்கையிலே தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய துயரத்தையும் -அதன் காரணமாகத் தமிழர்கள் எல்லாம் கொண்டிருக்கும் வேதனையையும் மனதில் கொண்டு அவைகளில் பங்குகொள்வதற்கு இங்கே வந்திருக்கிறேன். இலங்கையிலே தமிழர்கள் படுகிற அவதி உங்களை மட்டுமல்ல, இந்தியாவையே பாதிக்கக்கூடிய பிரச்னையாகும். அந்தத் தமிழர்களின் அவதி நம்முடைய அவதி. அவர்களுடைய கஷ்டம் நம்முடைய கஷ்டம். அந்நாட்டுத் தமிழர்களுடைய ரத்தம் நம்முடைய ரத்தம். அவர்களுடைய உணர்வுகளோடு நாங்களும் ஒன்றுபட்டு இருக்கின்றோம் என்பதைக் காட்டிக்கொள்ள நாம் இங்கே கூடியிருக்கிறோம். தமிழ் மக்களைக் கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயவர்த்தனாவிற்கு இந்த மாநாடு ஓர் எச்சரிக்கையாக விளங்க வேண்டும். இந்தக் கூட்டத்தைக் கண்டபிறகாவது மத்திய அரசு தனது மெத்தனப்போக்கைக் கைவிட வேண்டும். தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்தியா, இலங்கையிலே நடைபெறும் மனித வேட்டைகளைப் பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டிருக்காது என்பதை மெய்ப்பிக்க வேண்டும்'' கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் (எஸ்) பிரிவுத் தலைவர் உண்ணிக்கிருஷ்ணன் கூறியதாவது: ""இலங்கைத் தமிழர்கள் அங்கே போய் குடியேறியவர்கள் அல்ல. அவர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும் அவர்கள் தாங்கள் மானத்தோடு வாழ ஓர் இடம் வேண்டுமென்று கேட்கிறார்கள். இலங்கையிலே, தங்களுடைய மண்ணிலே, தங்களுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் வாழவேண்டுமென்றுதான் கேட்கிறார்கள். அதிலே என்ன தவறு இருக்கமுடியும்? பல லட்சக்கணக்கான தமிழ்மக்கள் மீது ஜெயவர்த்தனா ஒரு யுத்தப் பிரகடனமே செய்திருக்கின்றார். இலங்கையிலே தமிழர்களுக்கு நடக்கின்ற கொடுமை இங்கேயிருக்கக்கூடிய நமக்கும் ஆபத்து வரவிருக்கின்றது என்பதற்கான அறிகுறி. ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமரானதிலிருந்து துரதிருஷ்டவசமாக இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் நிலைமையை, பிரச்னையைப் புரிந்துகொள்ள அவர் மறுக்கிறார். இலங்கைத் தமிழர்களே, தொடர்ந்து போராடுங்கள். இறுதி வெற்றி உங்களுக்கே'' அகாலிதளப் பிரதிநிதியான பல்வந்த்சிங் ராமுவாலியா எம்.பி. பேசியதிலிருந்து: ""இலங்கையில் போராடும் தமிழர்களின் வீரத்திற்கு என்னுடைய வணக்கம். இலங்கையில் காற்று உள்ளவரையிலும், நீர் உள்ள வரையிலும், நிலம் உள்ள வரையிலும் தமிழர்களின் கலாசாரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிக்கும். ஆயிரம் ஜெயவர்த்தனாக்கள் வந்தாலும் அவர்கள் போவார்களே தவிர, அவர்களுடைய முயற்சியால் உங்களது கலாசாரத்தை, தனித்தன்மையை அழித்துவிட முடியாது. தமிழர்களே, உங்களுடைய போராட்டத்திற்கு எங்களது ஆதரவு என்றென்றும் உண்டு'' மாநாட்டில் டாக்டர் சுப்ரமணியன்சுவாமி பேசியது: ""இலங்கையில் தவித்துக்கொண்டிருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு நான் கூறுகிறேன் -என் குரல் உங்களுக்குக் கேட்குமானால், நான் சொல்வதைக் கேளுங்கள் -கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தியா எப்போதும் உங்கள் பக்கம்தான். நாங்கள் விரைவில் உங்களுக்கு உதவ வருவோம். ஜெயவர்த்தனாவே கேளும். உமது முதுமைப் பருவத்தில் உமது மூளை மழுங்காமல் இருந்தால், உமது காதுகள் செவிடாகாமல் இருந்தால் கேளும். தமிழர்கள் தனியாக இல்ல. அவர்கள் பக்கம் 80 கோடி இந்தியர்கள் இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு நீர் செய்யும் கொடுமைகளுக்குப் பிரதியாகத் திரும்ப அனுபவிக்கும் நேரம் வந்தே தீரும்'' கர்நாடக அரசுக் கொறடா பெருமாள் பேசுகையில், ""இந்திய ஒருமைப்பாட்டில் ராஜீவ் காந்திக்கு அக்கறை இருக்குமானால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு கண்டிட வேண்டும்'' என்று குறிப்பிட்டார். தெலுங்கு தேசக்கட்சி பொதுச்செயலாளர் உபேந்திரா எம்.பி. பேசுகையில், ""இலங்கைத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை என்று ராஜீவ் காந்தி சொல்வாரானால், நடுநிலை நாடுகள் மாநாட்டில் நமீபியா பிரச்னையை, பாலஸ்தீனப் பிரச்னையை அவர் எதற்காக எழுப்பினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அத்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. இப்பொழுது சிதம்பரம் தலைமையில் சென்றிருக்கிற குழுவின் பேச்சுவார்த்தைகளும் எந்த முடிவுக்கும் கொண்டு வரபோவதில்லை. அப்படி முடிவிற்கு வந்தாலும் நிச்சயமாக அதனை ஜெயவர்த்தனா நிறைவேற்றப்போவதுமில்லை. கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது ஜெயவர்த்தனாவுக்கு வாடிக்கை'' என்றார். காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஷீத் காபூலி எம்.பி. பேசும்போது, ""இலங்கைத் தமிழர் பிரச்னை -இங்கேயுள்ள தமிழர்கள் பிரச்னை மாத்திரமல்ல; இந்தியா பூராவும் இருக்கின்ற மக்கள் குமுறி எழவேண்டிய -கவலைக்குரிய, பிரச்னை என்பதால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் வழிகாண வேண்டும்... இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுக் கொன்று குவிக்கப்படுவதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்ப்பதற்கு வழிவகைகளைக் கண்டாக வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்டில் பேசும்போது, ""எங்கள் தமிழர்கள் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இது ஏதோ தமிழ்நாட்டுப் பிரச்னை என்று பிரதமர் ராஜீவ் காந்தி இதுவரை சுட்டிக்காட்டி வந்தாலும் -தேசவிரோத சக்தி என்று சொன்னாலும் இப்போது வாஜ்பாய், பகுகுணா மற்றும் பல்வேறு தலைவர்கள் எங்களோடு குரல் கொடுக்கும்போது இனி என்ன சொல்ல முடியும்... மத்திய அரசே இனிமேல் தயவுசெய்து செப்படி விளையாட்டுக்களையெல்லாம் விளையாட வேண்டாம். எங்கள் இனம் அழிக்கப்படுவதை நாங்கள் ஒருக்காலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இல்லாவிட்டால் அந்த முயற்சியில் நாங்களும் அழிந்துபோகத் தயாராகிவிட்டோம்'' என்று குறிப்பிட்டார். மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய ப.நெடுமாறன் பேசுகையில், ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஓர் அகில இந்திய வடிவம் கொடுக்கவும், இந்தியா முழுவதிலுமுள்ள அனைவரின் ஆதரவையும் இப்பிரச்னைக்குத் திரட்டவும், இது வெறும் தமிழர் பிரச்னை அல்ல; இந்தியாவின் தேசிய பிரச்னைகளில் ஒன்று என்பதை எடுத்துக்காட்டவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது... இந்திய அரசின் முயற்சியால் 1985-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு ஒரு மோசடி நடவடிக்கையாக்கப்பட்டிருப்பதை நான் நேரில் கண்டேன். போர் நிறுத்த உடன்பாடு அமலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மூன்று மாத காலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்கள். லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்த நாட்டில் வாழமுடியாமல் இந்தியாவில் இரண்டு லட்சம் பேரும், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் அகதிகளாகச் சிதறிக் கிடக்கிறார்கள்... இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை இந்தியாவின் தேசியப் பிரச்னையாகக் கருதி, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழர் பகுதிகளில் நேரில் சென்று 23 நாள்கள் சுற்றிப்பார்த்து அறிந்து வந்து சொல்கிறேன். அழிவின் விளிம்பில் நிற்கும் அந்த மக்களின் ஒரே நம்பிக்கை இந்தியாதான். அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றமுடியும் -காப்பாற்ற வேண்டும்'' என்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.கே.ஏ. அப்துல் சமது பேசும்போது, ""அந்த நாட்டில் ஒரு சமஷ்டி அரசியல் இருக்கவேண்டும் என்றுதான் தமிழ் மக்கள் ஆசைப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால் சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாததினாலேயே, இலங்கைத் தமிழர்கள் பிரிந்து வாழ்கிறோம் என்று சொல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிமைகள் முறையாக அளிக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார். நாளை: சார்க் மாநாடும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பறிப்பும்!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

கன்னடக் கவிஞர் சர்வகஞர் சிலை


தியாகிகளின் வாரிசுகளும் போராடுகிறார்கள்!

First Published : 14 Aug 2009 12:42:00 AM IST

. . . . . . .
. . . . . .
மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகளோடு சேர்க்காமல் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்குத் தனி சலுகைகள், தேசிய நல வாரியம், பேரன் அல்லது பேத்திகளுக்கு அரசின் சலுகைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே தியாகிகள் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு.

கருத்துக்கள்

மொழிப்போர் தியாகிகளை ஒதுக்கி வைக்கும் தீண்டாமைக் கொள்கை ஏன்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/14/2009 5:07:00 AM




தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (பஹம்ண்ப் உங்ப்ஹம் நன்ல்ல்ர்ழ்ற்ங்ழ்ள் ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய்) உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக திமுக தலைவர் மு.கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்கள்:* இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு, * இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது,* போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது,* தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருப்பது,* இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது - ஆகியனவாகும்.இந்த 5 உறுதிமொழிகளை "டெசோ' அமைப்பு சார்பில் நடத்தப்படும் பேரணி - பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.கருணாநிதி படித்து, மக்கள் ஏற்பதை நடைமுறைப்படுத்தியிருந்தனர்.இந்த அமைப்பில் தி.மு.க., தி.க., தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகியவை அங்கம் வகித்தன. இக்கட்சிகள் தனித்தனியே ஈழப் பிரச்னைக்காக ஆதரவு தெரிவித்தாலும், உலக அரங்கில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் இவ்வமைப்பு தனது பணிகளை மேற்கொண்டிருந்தது.மதுரையில் 4-5-1986 அன்று கூட்டப்பட்ட மாநாட்டில் தமிழகத் தலைவர்கள் மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி., இந்துஸ்தான் முன்னணி சார்பாக சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸôம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி., க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, விடுதலைப் புலிகள், ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப், பிளாட், புரோடெக் ஆகிய இலங்கைத் தமிழர் அமைப்பு பிரநிதிகளும் கலந்துகொண்டனர்.மதியம் நடந்த கூட்ட அரங்கில் இலங்கைத் தமிழர்கள் இலங்கை நிலைமைகளை எடுத்துரைக்க, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தீர்மான விவரங்களை விவாதித்து முடிவுக்கு வந்தனர். சுமார் நாலரை மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.தீர்மான விவரங்களை திமுக தலைவர் மு.கருணாநிதி வாசித்தார்:* இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு தனது அலட்சியப் போக்கை கைவிட வேண்டும் என்றும், மத்தியஸ்தர் நிலையிலிருந்து இந்தப் பிரச்னையை அணுகாமல் இலங்கைத் தமிழர்களோடு நேரடியாகவும் நெருக்கமாகவும் தொடர்புள்ள நாடு எனும் அடிப்படையில் அணுகி, இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் முயலும் வண்ணம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து தமிழ் மக்கள் சமத்துவத்தோடும், பாதுகாப்போடும் கண்ணியத்தோடும் வாழ வழிசெய்ய வேண்டும் என்றும் இந்திய அரசை வலியுறுத்தி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.* மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலைச் செயலில் ஈடுபட்டு தமிழர்களை அழிப்பதற்கு தனக்குக் கிடைக்கும் நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தும். ஆதலால் இலங்கைக்கு எத்தகு நிதியுதவிகளையும் அளிக்க வேண்டாம் என்று நிதியுதவி அளிக்கும் நாடுகளையும் சர்வதேச நிதியுதவி நிறுவனங்களையும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.* இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட இனப் படுகொலைச் செயல்கள் அதனுடைய பொய்யான தகவல்களையும் மாறுபாடான செய்திகளையும் மீறி, உலகத்தின் நாகரிக மக்களின் கண்முன்னால் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கி விட்டன. ஆகவே, இந்தப் பிரச்னையை உலக அமைப்புகளான ஐ.நா. மன்றம், காமன்வெல்த் மாநாடு, அணிசேரா நாடுகள் அமைப்பு ஆகியவனவற்றில் மிகத் தீவிரமாக எழுப்பி, தீர்வு காணுமாறு இந்திய அரசாங்கத்தை இந்த மாநாடு வற்புறுத்துகிறது.மாநாட்டின் துவக்க உரையில், அந்த நாடுகளிடம் சொல்ல வேண்டும் என்று இந்திய அரசிடம் நாம் கேட்டுக் கொள்ளவில்லை. அந்த நாடுகளிடமே நேரடியாக கேட்கத் தொடங்கி விட்டோம். அந்த நிறுவனங்களையே நேரடியாக கேட்கத் தொடங்கிவிட்டோம்.அதையும் மீறி இலங்கையிலே படுகொலை தொடர நிதியை வழங்கி, அதைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு, அதன் கொலை வாளுக்கு உடந்தையாக இருக்க முனையுமேயானால், அந்த நாடுகள் எங்கள் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்றும் - இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கின்ற அத்துணை மக்களின் அதிருப்தியையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்-என்றும் மு.கருணாநிதி தெரிவித்தார்.அவர் தனது வரவேற்புரையில், "தமிழ்நாட்டு அளவிலேதான் இந்தப் பிரச்னை பேசப்படுகிறது என்று சொல்பவர்களின் வாயை அடைப்பதற்காக இந்திய அளவில் இந்தப் பிரச்னை பேசப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக - இது மேலும் மேலும் வளரும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் இந்த மாநாட்டில் என்.டி. ராமராவ் தமிழில்தான் பேசினார்.தமிழர்களை மட்டுமே பாதிப்பதால் இப் பிரச்னையில் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளோர் முக்கியத்துவம் தருவதில்லை - கவனம் செலுத்துவதில்லை என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது... இப்பிரச்னையில் தமிழர்கள் மாத்திரமல்ல, இந்திய நாடே இலங்கைவாழ் தமிழர்களின் கவலையைப் பகிர்ந்து கொள்கிறது. எனவே, நீங்கள் பங்கேற்றுக் கொண்டது தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தவும் பயன்படும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.கடந்த ஆண்டு ஜெனிவாவில் கூடிய ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவில் இப் பிரச்னையை அர்ஜென்டினா எழுப்பிட முனைந்தபோது பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறி இந்தியா அதனைத் தடுத்துவிட்டது. கடைசியாக அரைகுறை மனதுடன் இந்த ஆண்டு (1986) ஜெனிவாவில் இந்தியா பிரச்னையை எழுப்பியதே தவிர, இதுகுறித்து பிறநாடுகளோடு பேசி விளக்கிட எந்த முயற்சியும் எடுக்காததால் உரிய பலன் எதுவும் கிட்டவில்லை...1983 ஜூலையிலிருந்து இலங்கை காவல் துறையும் ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ராணுவத் தீர்வு காணப் போவதாக பிப்ரவரி மாதம் ஜெயவர்த்தனா பிரகடனம் செய்தார். அதை நிறைவேற்றும் வகையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மீது விமானத் தாக்குதல்களுக்கு ஆணையிட்டார். "பாதுகாப்புப் பிரதேசங்கள்' என்று வரையறுத்துக் கொண்டு ராணுவம் தமிழர்களை அழிக்கத் தொடங்கியது. ஆகாய மார்க்கத்திலும், கடல் மார்க்கத்திலும், தரை மார்க்கத்திலும் முப்படைகளும் தாக்குதல் நடத்தி தமிழர்களைக் கொன்று - சொத்துக்களைச் சூறையாடியது...இலங்கைப் பிரச்னை குறித்து இந்திய அரசுக்கு ஒரு திட்டவட்டமான கொள்கை கிடையாது. ஏனோதானோ என்ற இந்தப் போக்கினால் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.ஜெயவர்த்தனா விரித்த வலையில் இந்தியா விழுந்ததன் விளைவு - அந்நியச் சக்திகளைப் பயன்படுத்த அவருக்கு மேலும் வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது இலங்கை ராணுவம் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வர அனுப்பப்படுகிறது - பாகிஸ்தான் மட்டுமல்ல இஸ்ரேலிய மொசாத்தும், பிரிட்டனின் எஸ்.எ.எஸ். படையினரும் - தென்னாப்பிரிக்கா ஒற்றர் படையினரும் மற்றும் அதிரடி குண்டர் படையினரும் இலங்கை அரசுக்கு துணை நிற்கும் நிலை...இலங்கை மனப்பூர்வமாகவோ, நேர்மையாகவோ பேச்சுவார்த்தையில் ஈடுபடாத வரையில் எந்த மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் அதில் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை. ஏமாற்றுக் கலையில் வல்லமை மிக்க ஜெயவர்த்தனா இந்தியத் தூதுக் குழுவை வரவேற்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச நிதி உதவி ஸ்தாபனம்' கூட்டம் நடைபெறும் நேரத்தில் தனக்கு நிதியுதவியைப் பெறுவதற்காக இலங்கை இனப் பிரச்னையில் அரசியல் தீர்வு காண தீவிர முயற்சி எடுப்பதாகக் காட்டிக்கொள்ள இலங்கைக்கு ஓர் "அலிபி' தேவை. இந்த ஆண்டு அந்த "அலிபி' நாடகத்தை இந்தியாவே நடத்திவிட்டது. இந்தப் பெரும் உதவி செய்த ராஜீவ் காந்திக்கு ஜெயவர்த்தனா நன்றியுள்ளவராக இருப்பார்... என்றும் மு.கருணாநிதி குறிப்பிட்டார்.பத்திரிகையாளர்களிடையே அவர் பேசுகையில், இவ்வகையான மாநாடு முதல் தடவையாக நடைபெறுகிறது. தமிழர் பிரச்னைகளை விளக்குவதற்காக இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மாநாடு நடத்தப்படும். அடுத்த மாநாடு ஆந்திரப் பிரதேசத்திலும் - புது தில்லியிலிலும் நடத்தப்படும்! என்றும் மு.கருணாநிதி தெரிவித்தார். மாநாட்டின்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் - டெலோவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கசியவும், ஸ்ரீசபாவுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்றும், சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் குழுக்களும் ஒருங்கிணைந்து தமிழர் பிரச்னையில் செயல்பட வேண்டும் எனவும் என்.டி.ஆர்., வாஜ்பாய் போன்றோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க டெசோவின் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுடன் "தாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவதையொட்டி உறுதி அளிக்கவேண்டும்' என்றும் கேட்டதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அ.அமிர்தலிங்கம், எல்டிடிஈ சார்பாக திலகர், டெலோ சார்பாக மதி, புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈரோஸ் சார்பாக இரத்தினசபாபதி, டிஇஎல்எம் சார்பாக ஈழவேந்தன், ஈபிஆர்எல்எப் சார்பாக வரதராஜபெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவா ஆகியோர் "இனி ஒன்றுபட்டு செயல்படுவதாக' உறுதியளித்தார்கள்.
கொழும்பில் இன்னமும் ஆயுதங்கள் பதுக்கல்?



கொழும்பு, ஆக. 13: கொழும்பில் இன்னமும் பல இடங்களில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளனர் விடுதலைப் புலிகள் என்று இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயக எச்சரிக்கிறார்.ஹெüரண என்ற ஊரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் விக்ரமநாயக இதைத் தெரிவித்தார்."விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெட்டிச் சாய்த்ததன் மூலம் பற்றி எரியும் பெரு நெருப்பை நாம் அணைத்துவிட்டோம். ஆனால் இன்னமும் அந்த ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டதாகக் கூற முடியாது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தலைவர் கே. பத்மநாதனை விசாரித்தபோது, இலங்கைத் தலைவர்களைக் கொல்வதற்காக நகரின் பல பகுதிகளில் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஆங்காங்கே பதுக்கி வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் மேலும் பேசி தகவல்களைப் பெற வேண்டியிருக்கிறது. அவர் கூறும் தகவல்கள் உண்மைதானா என்று சோதிக்க வேண்டிய வேலையும் இருக்கிறது.விடுதலைப் புலிகளை ஒடுக்க முடியாது, அவர்களுடைய சர்வதேசத் தொடர்புகளை முறியடிக்க முடியாது என்றெல்லாம் பேசினார்கள். அவர்களை அடியோடு அழிக்கவும் முடியும் வெளிநாடுகளில் கிளைபரப்பியிருந்தாலும் நினைத்த நேரத்தில் நினைத்தபடி அவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டுவரவும் முடியும் என்பதைத்தான் இலங்கை அரசு இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.அதே சமயம், புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் நம் நாட்டின் எந்த மூலையிலும் பதுங்கிக் கொண்டிருக்கலாம், தக்க சமயத்தில் வெளிப்பட்டு சிறு சிறு நாச வேலைகளில் ஈடுபட்டுவிட்டுத் தலைமறைவாகிவிடலாம் என்பதையும் நிராகரித்துவிட முடியாது. அவர்களிடமிருந்து வரும் சோதனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை எதிர்த்து வெற்றி பெறும் சக்தி நம்முடைய அரசுக்கு இருக்கிறது என்பதை உலகுக்கே உணர்த்தி வருகிறோம்' என்றார் ரத்னஸ்ரீவிக்ரமநாயகே.கே.பத்மநாதன் அளித்த தகவல்களின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் பிரதமர் அப்போது தெரிவித்தார்.கே. பத்மநாதனைக் கைது செய்ததில் சர்வதேச சட்டங்களையோ விதிகளையோ இலங்கை அரசு மீறிவிடவில்லை என்று செய்தித்துறை அமைச்சர் லட்சுமண் யப அபயவர்தன நிருபர்களிடம் தெரிவித்தார்.
கருத்துக்கள்

வெளிநாட்டில் எங்கு இருந்தாலும் நினைத்த நேரத்தில் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரமுடியும் ஆற்றலுள்ள சிங்களம் இலங்கையில் பிற நாடுகளின் உதவியை ஏன் நாடுகிறது? எஞ்சியுள்ள தமிழர்களையும் அழிப்பதற்குத்தானே! அதற்குத்தான் இந்தியா முதலான நாடுகள் எப்போதோ பச்சைக் கொடி காட்டி விட்டனவே! ஏன் இந்த அலட்டல்? தமிழின அழிப்பில் கைகோத்துள்ள சிங்களமும் கூட்டாளிகளும் தாங்கள் அழிவுப் பாதைக்குச் செல்வதை எப்பொழுது உணர்ந்து திருந்தப் போகிறார்கள்? சிங்கள நாட்டில் உள்ள மனித நேயமிக்க புத்த நெறியினரே! சிங்களர்களே! நீங்கள் ஒன்று பட்டு இனி மேலாவது இன அழிப்பு நடைபெறாமல் இருக்கப் பாடுபடுங்கள்! உங்கள் தலைமுறையினர் என்றென்றும் நலமாய் வளமாய் வாழட்டும்! உரிமையுள்ள தமிழ் ஈழமும் தனி இலஙகையும் அமைந்து உலகில் உங்கள் தீவினை வலிமையுள்ள நல்லரசாக மாற்றுங்கள்! வாழ்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/14/2009 4:54:00 AM

வருமான வரியைக் குறைக்க புதிய பரிந்துரைகள்



புது தில்லி, ஆக. 12: மாதச் சம்பளதாரர்களின் வருமான வரிச்சுமையைக் குறைக்க புதிய வரி விதிப்பு கையேடு வழி செய்கிறது. இந்தக் கையேட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் தில்லியில் புதன்கிழமை வெளியிட்டனர். புதிய கையேட்டின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும். இப் பரிந்துரைகள் வரி விதிப்பில் எளிமையைக் கையாள உதவும்; தனி நபரும் நிறுவனங்களும் அதிக வரி விதிப்பு விகிதத்திலிருந்து குறைந்த வரி விகிதங்களுக்கு மாற இது பெரிதும் துணை புரியும். ஆண்டு வருவாய் 10 லட்சம் ரூபாய் வரையில் உள்ளவர்கள் இனி தங்களுடைய வருவாயில் 10 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதாவது ஒரு லட்ச ரூபாயை வருமான வரியாகச் செலுத்தினால் போதும். இப்போது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் 10% வருமான வரி விதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் இனி 20% வருமான வரி செலுத்த வேண்டும். அதற்கும் மேல் வருமானம் இருந்தால் அந்த கூடுதல் மதிப்புக்கு 30% என்று வருமான வரி செலுத்த வேண்டும். இப்போது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் 20% வருமான வரி செலுத்துகின்றனர். 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறவர்கள் 30% வரி செலுத்துகின்றனர். அதே சமயம், இப்போது அதிகபட்ச வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1,60,000 ஆக இருப்பதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்று கையேடும் பரிந்துரைக்கிறது. அதே போல சேமிப்புகளுக்கு அளிக்கும் வருமானக் கழிவையும் அதிகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ரூ.3 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்குக் கழிவு தர வேண்டும் என்கிறது. இது சேமிப்புகளுக்கு பெருத்த ஊக்குவிப்பாக அமையும். மாதச் சம்பளம் தவிர தரப்படும் இதர படிகள், மற்றும் பணச் சலுகைகளையும் வருமானத்துடன் சேர்த்தே வருமான வரி விதிப்புக்கு உள்படுத்த வேண்டும் என்று கையேடு கூறுகிறது. கம்பெனி வரி: கம்பெனிகள் மீதான அதிகபட்ச வருமான வரி விதிப்பு 30% ஆக இப்போது இருக்கிறது. இதை 25% ஆகக் குறைக்க வேண்டும் என்று கையேடு தெரிவிக்கிறது. இதை கம்பெனிகள் மகிழ்ச்சியோடு வரவேற்கும் என்பதில் ஐயம் இல்லை. குறைந்தபட்ச மாற்றுவரி: அரசு தரும் பல்வேறு வரிச் சலுகைகள் காரணமாக எந்த வரியையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத தொழில் நிறுவனங்கள் மீது குறைந்தபட்ச மாற்று வரியை விதிக்க, அவற்றின் வருமானத்தைக் கணக்கிட புதிய முறை ஒன்றை கையேடு தெரிவிக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் கம்பெனி வரியாக இப்போது 40% செலுத்துகின்றன. அவற்றையும் 25% ஆகக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கிளைகள் ஈட்டும் லாபத்தின் மீது 15% வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் புத்தகக் கணக்கில் காட்டும் லாபத்தின் மீது 15% வரி விதிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அவற்றின் நிகர சொத்து மதிப்பின் மீது 2% குறைந்தபட்ச மாற்று வரியாக விதிக்கலாம் என்று கையேடு பரிந்துரைக்கிறது. வங்கி நிறுவனமாக இருந்தால் அவற்றின் மொத்த சொத்து மதிப்பில் 0.25% ஆண்டுதோறும் வரியாக வசூலிக்கப்பட வேண்டும் என்கிறது பரிந்துரை. பங்கு பரிவர்த்தனை வரியை ரத்து செய்ய வேண்டும், நீண்ட கால மூலதன ஆதாய வரியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கையேடு பரிந்துரைக்கிறது. குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதாவைக் கொண்டுவர அரசு உத்தேசித்திருப்பதாக பிரணாப் முகர்ஜி அப்போது தெரிவித்தார்.
கருத்துக்கள்

மாதச் சம்பளக்காரர்களை நசுக்காத வருமானவரி முறையே சிறந்தது. அவ்வாறு இல்லாத எதுவும் - இந்த முறை உட்படச் - சிறந்தது இல்லை. சலுகைகள் பணக்கரர்ககள், வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டிடம் நிதி உதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கே என்னும் பொழுது அரசு யாருக்காக என்ற கேள்வி எழுகிறது. சேமிப்பிற்கும் முழுத் தள்ளுபடி இல்லாததால், நடுத்தர மக்களால் சேமிக்கவும் இயலவில்லை. மாதச் சம்பளக்காரர் உரூபாய் ஐமபதாயிரம் நிலுவை பெறுகிறார் என்றால், வரிக்கட்டுவதைத் தவிர்க்க இதைப் போல் ஐந்து மடங்கு சேமிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இது மிகவும் மோசடியான முறையல்லவா? எனவே, உழைக்கும் மக்களுக்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கும் நலன் விளையும் வகையில் வருமான வரி முறை‌யை மாற்றுக.

ன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/14/2009 4:36:00 AM

The Govt is enforcing the law strictly only the salaried people what abt the politicians business nman advocates doctors cine actress who are nw hiding their income and evding their income tax, If the attention of the Govt will go to the abve people vigorously there is large income to Govt Salaried people wont hide their income.

By PG Venkatesan
8/13/2009 11:38:00 AM

The Govt is enforcing the law strictly only the salaried people what abt the politicians business nman advocates doctors cine actress who are nw hiding their income and evding their income tax, If the attention of the Govt will go to the abve people vigorously there is large income to Govt Salaried people wont hide their income.

By PG Venkatesan
8/13/2009 11:38:00 AM

HAPPY NEWS TO THE SALARIED PEOPLE. IT SHOULD BE IMPLEMENTED FAST.

By T VENKU
8/13/2009 10:15:00 AM

A good news for sa;aried peoples and also business people also. we are expecting it should be implemented soon.We are most welcome this direct code policy

By basker
8/13/2009 8:38:00 AM

very easy to know the current news of Tamilnadu and

By sukumaran
8/13/2009 3:06:00 AM