தஞ்சாவூர், ஜூலை 11: தமிழின் வறுமையை தன் வறுமையாகக் கருதி, பலரிடம் நிதி கேட்டு தமிழை வளர்த்தவர் வ.அய். சுப்பிரமணியம் என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன். மறைந்த துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்தின் அஸ்தி புதைக்கும் நிகழ்ச்சி, பல்கலைக்கழகத்தின் "அம்பலம்' வளாகச் செய்தி மடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியவை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: "தமிழில் புலமை பெற்றிருத்தல், வீட்டு வறுமையை வெளிப்படுத்திப் பொருள் கேட்டல், அவமதிப்பு நேரிட்டால் பட்டினிக் கிடத்தல் ஆகிய மூன்று பண்புகளிலும் புலவர்களை அடக்கிவிட முடியும். இந்த மூன்று பண்புகளையும் கொண்டிருந்தவர் வ.அய். சுப்பிரமணியம். அவரது ஆழ்ந்த மொழித் திறனுக்கு எடுத்துக்காட்டாக, வியாசர் எழுதிய மகாபாரதத்தில் தமிழ் இலக்கியங்களுக்கு செல்வாக்கு இருக்கிறதா, இல்லையா என்று அவர் கட்டுரை எழுதியதைக் குறிப்பிடலாம். வ.அய். சுப்பிரமணியத்தின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும்' என்றார் ம. ராசேந்திரன். மேலும், வ.அய். சுப்பிரமணியம் பெயரில் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் சார்பில் தொடங்கப்படும் அறக்கட்டளைக்கு, ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக வசூலிக்கப்பட்ட ரூ. 2,01,700-க்கான காசோலையை துணைவேந்தரிடம் வழங்கினார் மத்திய இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம். "வ.அய். சுப்பிரமணியம் சிலையை நிறுவ வேண்டும்': தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான மறைந்த வ.அய். சுப்பிரமணியத்தின் திருவுருவச் சிலையை, பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தெரிவித்தார். "தமிழறிஞருக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தவர் வ.அய். சுப்பிரமணியம். மற்ற துணைவேந்தர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவரே முதன்மையாகத் தெரிகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு தமிழ் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டவர் அவர். இந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு அவரே அடிப்படை. வ.அய். சுப்பிரமணியத்தை நினைவுகூரும் வகையில் பல்கலை. வளாகத்தில் அவரது மார்பளவு சிலையையோ, முழு உருவச் சிலையையோ நிறுவ வேண்டும். சிலை நிறுவும் பணியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஈடுபடும்போது, அதற்கு தஞ்சாவூர் தமிழ்தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், "அம்பலம்' அமைப்பின் வளாகச் செய்தி மடலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வெளியிட, அதைப் பெறுகிறார் மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. ராமமூர்த்தி. உடன் துணைவேந்தர் ம. ராசேந்திரன் (இடமிரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக