
௨.வணங்கா மண் கப்பல் மூலம் பணம் கொள்ளையிட
நினைக்கும் இலங்கை அரசு
௩. கொக்குவிலில் ஆயுதக் கும்பலால் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்
| ௪.இலங்கையில் சிறைச்சாலைகளும் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றன |
| பிரசுரித்த திகதி : 16 Jul 2009 |
இதேவேளை இச்சோதனைகள் தலைமைச் சிறை அதிகாரியின் முன்னிலையிலேயே இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். எனினும் இம்முடிவானது சிறையில் உள்ளவர்கள் மேலும் மேலும் ராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதற்கும், இலகுவில் குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதை போன்றவற்றுக்குள்ளாக்கப்படவும் ராணுவத்தினருக்கு மறைமுகமாக வசதி செய்து கொடுக்கப்படுவதாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. |
சிறைச்சாலைகளில் உள்ளவர்களைக் காண வரும் பார்வையாளர்களையும், சிறைச்சாலை ஊழியர்களையும் சோதனை செய்வதற்காக ராணுவத்தினரதும் போலீசாரினதும் உதவிகளைப் பெறுவதென இலங்கையின் சிறைச்சாலை திணைக்களம் முடிவெடுத்துள்ளது. இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். டி சில்வா கருத்துக் கூறியபோது, இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளினுள்ளே பல வன்முறைகள் குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் அவற்றைக் குறைக்கும் முகமாகவே சகலரையும் சோதனை செய்து உள்ளே அனுப்புவதற்காக ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக