சனி, 25 ஆகஸ்ட், 2012

Resettlement showcase brings in further miseries to uprooted Tamils

Resettlement showcase brings in further miseries to uprooted Tamils

[TamilNet, Friday, 24 August 2012, 20:29 GMT]
250 families recently brought to Chivanakar village in Puthukkudiyiruppu (PTK) division of Mullaiththeevu district complain that they have been let down by the SL authorities that rush to vacate the Menik Farm in Cheddiku'lam, Vavuniyaa. Promising the uprooted proper resettlement to the uprooted Tamils in their own village, 141 families were brought from Menik Farm to Chivanakar. Another 101 families who were residing with their kith and kin elsewhere also joined them when their village was announced opened for resettlement. Now, these families are struggling in their own village without any shelter and have sought refuge under the trees. There are no basic facilities. Most of these families, who are below the poverty line, demand at least temporary huts and basic facilities before the rainy season begins in a few weeks from now.

The complaints from the people of Chivanakar follows the reports of SL military expelling the people brought from Menik Farm to Mallikaith-theevu in PTK a few days ago. The SL military chased away the people of Mallikaiththeevu saying there were still land mines in their village. The area had been declared ready for resettlement earlier.

In the meantime, uprooted people brought from Menik Farm to Poonakari division in Ki'linochchi district a few months ago, have now announced civil protests after their requests and repeated appeals for basic facilities have been totally ignored by the Sri Lankan authorities.

The Sri Lankan State, while projecting military enclaves and Sinhala colonies in the country of Eezham Tamils, systematically sabotage external aid programmes reaching the resettling Tamils. Foreign and local NGOs are not allowed to operate in Vanni and the people are made to expect assistance coming through their enemy's genocidal gates.

Colombo authorities only gave 20,000 rupees to each of the family of Chivanakar, who were promised resettlement in their own village. Since then, there has been no credible move in assisting them with basic facilities necessary for resettlement.

Recently, SL Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa has gone on record vowing to close down the Menik Farm camp.

Diplomatic circles in Colombo said the Rajapaksa regime in Colombo was attempting to project that all the displaced Tamils have been resettled by dispersing the uprooted Tamils without providing basic facilities.

Chronology:

US Court of Appeals to hear Rajapakse war-crimes case

US Court of Appeals to hear Rajapakse war-crimes case

[TamilNet, Friday, 24 August 2012, 03:59 GMT]
United States Court of Appeals for the District of Columbia Circuit issued the briefing schedule Monday for the appeal against the dismissal of the war-crimes case against Sri Lanka's President Mahinda Rajapakse. The appeal was filed by three Tamil plaintiffs/ appellants against Rajapakse for complicity in extrajudicial killings of plaintiffs relatives in violation of the Torture Victims Protection Act (TVPA). The case, first filed at the lower court, was dismissed in February 2012 by Judge Kotelly after the U.S. State Department intervened to assert that, as a sitting head of state, Rajapakse was immune from litigation.

The complaint filed in 2011 at the District Court for this case alleged multiple violations of the TVPA) based on Sri Lanka's President Rajapaksa’s command responsibility for the extrajudicial killings of Ragihar Manoharan, the son of Plaintiff Dr. Kasippillai Manoharan, of Premas Anandarajah, a humanitarian aid worker for Action Against Hunger, and husband of Plaintiff Kalaiselvi Lavan, and four members of the Thevarajah family, all relatives of Plaintiff Jeyakumar Aiyathurai.

The appeal will be heard by a panel of three judges, unless the appellants request and if the court grants an en banc hearing. U.S. State Department has filed a motion to submit an amicus brief (an unsolicited legal opinion provided by a third party to assist the court in deciding the matter) on behalf of the appellee Rajapakse.

Plaintiff/Appellants' attorney, Bruce Fein told TamilNet, "Our opening brief is due October 2, 2012. The opposition brief by Sri Lanka's sitting President Rajapaksa is due November 1, 2012. Oral argument before the U.S. Court of Appeals will probably be held in the early months of 2013.

"We argue that the TVPA applies to "an individual" who perpetrates extrajudicial killings under color of foreign law with no exceptions for sitting heads of state; and, that torture or extrajudicial killings are so morally reprehensible and repugnant to civilized life that no government can authorize the malignity.

"Every Tamil in the United States should seek to attend the oral argument to be held in Washington, D.C., and to protest before the U.S. State Department because of its running to the defense of Rajapaksa on the ground that sitting heads of state are shielded from TVPA suits in the Secretary of State so decrees," Fein said.

Tamils Against Genocide (TAG), a US-based activist organization that seeks judicial redress to victims of war, and which is the sponsor of this case on behalf of the appellants, said in a press release, "Since alleged facts are presumed true at this phase, the appellate challenge to the court's dismissal of charges of crimes against humanity against Rajapakse will test the split in American human rights civil jurisprudence on the issue of whether individuals possess head-of-state immunity or not for jus cogens norm violations as a matter of law.

"The intervention of the State Department in support of Rajapakse's immunity at the trial phase, and the status of the United States as a party to the case at the appellate phase, tend to illuminate the Obama administration's self-contradictory posture on the issue of Tamil justice in post-Mullivaikaal Sri Lanka," TAG said.

Chronology:

UN documents use of cluster munitions in Vanni War

UN documents use of cluster munitions in Vanni War

[TamilNet, Thursday, 23 August 2012, 23:51 GMT]
The United Nations Mine Action Team, which coordinates the UN agencies engaged in humanitarian de-mining throughout the world, has documented the use of cluster munitions in the Vanni war, informed sources in Mullaiththeevu told TamilNet.

The SL Government Agent of Mullaiththeevu district was provided with a copy of evidence, the sources further said.

In the meantime, a Sri Lankan military officer, who was in charge of coordinating de-mining activities in Vanni, has resigned from his post.

The resignation comes after the Sri Lankan Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa, had warned the SL military.

Gotabhaya Rajapaksa maintains that the SL military operated demining teams have failed in their work of destroying all the traces on the use of cluster munitions in PTK.

Chronology:

தொழிலின் நெளிவு, சுளிவு தெரிந்தால் போதும்!





தொழிலின் நெளிவு, சுளிவு தெரிந்தால் போதும்! அவல், பொரிகடலை தொழிலில் ஈடுபட்டுள்ள ஜீவரத்தினம்: லாரி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்த என் கணவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இரு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக, மில் வேலைக்குச் சென்றேன். ஒரு கட்டத்தில், வேலையை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட, அதை விட்டு விட்டேன். பின், "கிராமியம்' என்ற, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில், எய்ட்ஸ் விழிப்புணர்விற்கான, "புரா ஜெக்ட்டில்' வேலை கிடைத்தது. கிராமங்களில் எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களை, சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவது தான் வேலை. மாதம், 300 ரூபாய் சம்பளம்; அதோடு, அரசின் விதவைகள் உதவித் தொகை, 200 ரூபாய் என, 500 ரூபாய் வருமானத்தில், குடும்பம் நடத்தினேன். ஒரு கட்டத்தில், கிராமியத்தின் ஐந்து ஆண்டு எய்ட்ஸ் புராஜெக்ட் முடிந்து விட, வீட்டு வேலை செய்து, பிள்ளைகளைக் காப்பாற்றினேன். கொஞ்ச நாளில், சுய உதவிக் குழுப் பெண்களுக்கு, தொழில் பயிற்சிகள் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதற்காக, அவல், பொரி தயாரிப்பதற்கு, நான் பயிற்சி எடுத்தேன். ஒவ்வொரு குழுவிற்கும், அந்தத் தொழிலை கற்றுக் கொடுக்கும் போது, அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொண்டேன். நெல்லை சுத்தம் செய்து, ஊற வைத்து, காய வைத்து, மில்லில் அரைக்கக் கொடுத்தால், நெல்லும் அரிசியும் பிரிந்துவிடும். அரிசியை ரோஸ்டர் இயந்திரத்தில் போட்டால், பொரிந்து, பொரியாக வரும். கவரில் பத்திரப்படுத்தி, மூட்டையாகக் கட்டி விடுவோம்; வியாபாரிகள் வாங்கிச் செல்வர். அவல் தயாரிப்பதற்கும், நெல்லை வாங்கி, ஊறப் போட வேண்டும். ரோஸ்டரில் அந்த நெல்லைக் கொட்டினால், வெப்பத்தில், ரோஸ்டரின் மற்றொரு பாகத்தில், தவுடு பிரிந்து, அவல் கொட்டும். பிரிந்து விழும் தவுடு, மாட்டிற்கு தீவனமாகிவிடும். எல்லா செலவுகளும் போக, மாதம், 3,500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. மற்றொரு பக்கம், இந்தத் தொழிலை, பல பெண்களுக்கும் கற்றுத் தரும் பயிற்சியாளர் வேலையால், 4,000 ரூபாய் வருமானம் வருகிறது.

தமிழறிஞர்களைப் போற்றும் தொண்டு தொடரும்: பச்சமுத்து

தமிழறிஞர்களைக் கெளரவிக்கும் தமிழ்த் தொண்டு தொடரும்: வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து



 
தாம்பரம், ஆக. 24: மதுரைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்று தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதுடன், தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் அறிஞர் பெருமக்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் தமிழ்த் தொண்டும் தொடரும் என்று எசு.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் தி.ஆர்.பச்சமுத்து கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் எசு.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்ப் பேராயம் அமைப்பின் சார்பில் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும், தமிழறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவில், ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது தோப்பில் முகம்மது மீரானுக்கும், ‘சி.யு.போப்பு மொழிபெயர்ப்பு விருது க.குப்புசாமிக்கும், ‘பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது முனைவர்.கோ.அன்பழகனுக்கும், ‘ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியர் சா.பாலுசாமிக்கும், ‘முத்துத்தாண்டவர் தமிழிசை விருது நா.மம்மதுவுக்கும், ‘வளர்தமிழ் விருது க.சுந்தரபாண்டியனுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுடன் தலா உரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் தொகைப்பரிசும் வழங்கப்பட்டது.  பேராசிரியர் செ.வை.சண்முகத்திற்குப் ‘பரிதிமாற்கலைஞர் விருதுடன் தொகைப்பரிசாக உரூ.2 இலட்சமும், முதுமுனைவர் இரா.இளங்குமரனாருக்குப் ‘பச்சமுத்து பைந்தமிழ் விருதுடன் உரூ.5 லட்சம் தொகைப்பரிசும் வழங்கப்பட்டன.  ‘அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது’, ‘பாரதியார் கவிதை விருதுத் தேர்வுக்குத் தகுதியான நூல்கள் இடம்பெறாத காரணத்தினால் நடப்பு ஆண்டில் வழங்கப்படவில்லை.  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் பேசும்போது, “காலத்திற்கு ஏற்பக் கணினித் தமிழ்க் கல்வி வழங்கும் பணியையும், தேவாரம், திருவாசகம் ஓதும் தமிழ்ச் சமயக் கல்வியையும் வழங்க முன்வந்துள்ள தமிழ்ப் பேராயத்தின் பணி பாராட்டத்தக்கது என்றார்.  பச்சமுத்து பைந்தமிழ் விருது பெற்ற முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தனது ஏற்புரையில், “எசு.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து தன் பிறந்தநாளைத் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விழாவாக நடத்துவது பாராட்டத்தக்கது! எனது நூலகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட மிகப்பழமையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் உள்ளன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பழமை ஆவணங்களாகத் திகழும் அவற்றைத் தமிழ்ப்பேராயம் தமிழ் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

‘சிலம்பொலி செல்லப்பன், குமரி அனந்தன், ‘கவிக்கோ அப்துல் இரகுமான், இந்திரா பார்த்தசாரதி, தெ.ஞானசுந்தரம், அ.மணவாளன், ‘சிற்பி பாலசுப்ரமணியன், எசு.ஆர்.எம் பல்கலைக்கழகத் தலைவர் இரவி பச்சமுத்து, துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ, பதிவாளர் என்.சேதுராமன் முதலானோர் பங்கேற்றனர்.

கண்தான விழிப்புணர்வு நாள்




இரு விழிகளில் பலருக்கு க் கிடைக்கும் வழி: இன்று கண்தான விழிப்புணர்வு  நாள்

ஒவ்வொருவரும் கண்கொடை செய்தால் நம் நாட்டில் பார்வை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்! இது குறித்துக், கண்கொடை செய்தவர்கள், பெற்றவர்கள், கண்கொடை அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆகியோரின் கருத்துகள்:

மருத்துவர்.சீனிவாசன்:
வாழும் காலத்தில் நாம் எத்தனையோ கொடை, அறம், உதவிகள் செய்கிறோம். அவற்றையெல்லாம் விட, வாழ்ந்து முடித்த பிறகு பிறருக்குச் செய்யும் கண்கொடைதான் மிகச்சிறந்த கொடை.

கண்கொடை செய்ய வயது வரம்பு இல்லை. ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்கொடை செய்ய வேண்டும். இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வை வேண்டிக் காத்திருக்கின்றனர். ஒருவர், தனது கண்களைக் கொடையாக அளிப்பதன் மூலம் இரண்டு பேர் பார்வை பெறுகின்றனர். இரண்டு குடும்பங்களுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. கண்கொடை செய்வதை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடமையாக ஏற்க வேண்டும்!

செகதீசன் (சமூக சேவகர்):
கடவுள் படைத்த உறுப்புகளில் கண்தான் மிக உயர்ந்த உறுப்பு. மனிதன் உடலிலிருந்து உயிர் பிரிந்தாலும் கண்களிலிருந்து உயிர் பிரிவதில்லை. வாழும்போது குருதிக்கொடை, வாழ்ந்த பிறகு கண்கொடை என்பதை ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்! கொடையாக வழங்கப்பட்ட கண்கள் மூலம், இறந்தவர் மீண்டும் இந்த உலகத்தைக் காண்கிறார். கண்கொடை பெற்றுத் தருவதை ஒரு சேவையாக நான் செய்து வருகிறேன். இறந்தவர்களிடமிருந்து கண்களைக் கொடையாகப் பெற்று இது வரை 1056 பேருக்குப் பார்வை கிடைக்க உதவி இருக்கிறேன். கண்கொடை அளிக்கவும் பெறவும் விரும்புவோர் 9443263868 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாகரத்தினம்:
கண்கொடை அளிப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் கணவர் இறந்தபோது, கண்கொடை கேட்டுச் சமூக சேவகர் ஒருவர் என்னை அணுகினார். நான் துக்கத்தை அடக்கிக் கொண்டு, என் கணவரின் கண்களைக் கொடுக்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகுதான் கண்கொடை அளிப்பது குறித்த விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. எங்கள் குடும்பத்தில் மட்டும் இதுவரை ஐந்து பேர் கண்கொடை அளித்துள்ளனர். அதன் மூலம் 10 பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.

வழக்குரைஞர்.சந்தானம் (இயற்கை வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர்):
மனித வாழ்க்கையில் ஏற்படும் மிகப்பெரிய துக்கம், இறப்பு மட்டும்தான். அந்தத் துக்கத்தில் ஒரு நன்மை இருக்கிறது என்றால் அஃது, இறந்தவர் தன் கண்களைக் கொடையாக அளிப்பதுதான். இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளைப் போலக் கண்கொடை அளிப்பதையும் ஒரு சடங்காக எண்ணிக் கண்களைக் கொடையாக அளிக்க வேண்டும். இயற்கை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், கண்கொடை, குருதிக்கொடை அளிப்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

கணேசன் (வாழ்நாள் காப்பீட்டு முகவர்):
நான் ஈருருளியில் போகும்போது, நச்சு வண்டு தாக்கி என் இடது கண் பார்வை போய் விட்டது. என் எதிர்காலமே இருண்டு விட்டது என்ற எண்ணத்தோடு வாழ்ந்த எனக்கு, இறந்தவர் ஒருவர் தன் கண்களைக் கொடையாகக் கொடுத்ததால், இழந்த பார்வை மீண்டும் கிடைத்தது. அந்த நல்ல உயிரைப் போல் அனைவரும் கண்கொடை செய்தால், நம் நாட்டில் பார்வை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.

சிவராம் (அரசு ஊழியர்):
இறந்தவரின் கண்கள் மூலம் இன்னொருவர் இந்த உலகத்தைப் பார்க்க முடியும் என்றால் அதைக் கொடுத்து செல்வதில் தவறில்லை. வாழும்போது நாம் மற்றவர்களுக்கு வழங்க முடியாத ஒன்றை இறந்த பிறகு வழங்க முடிகிறது என்றால், அவை கண்கள் மட்டும்தான்.

சுபா:
கண்கொடை அளிப்பது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. எங்கள் வீட்டில் மூன்று பேர் கண்கொடை அளித்துள்ளனர். ஆறு பேருக்குப் பார்வை கிடைத்திருக்கிறது. இன்றைக்கு ஆறு குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறன. கண்கொடையை விடச் சிறந்த நல்வினை (புண்ணியம்) வேறு எதுவும் இல்லை.

உசா:
என் கணவர், இளம் வயதில் மாரடைப்பால் இறந்து விட்டார். அந்தத் துயரமான நேரத்தில், பிறருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரது கண்களைக் கொடையாக அளிக்க ஒப்புக் கொண்டேன். இன்று என் கணவர் இல்லை எனும் வருத்தம் இருந்தாலும், அவரது கண்கள் யாரோ ஒருவருக்குப் பார்வை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!