வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

குவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு

அகரமுதல

மாசி 11, 2051 / 23.02.2020 ஞாயிறு மாலை 5.00

குவிகம் இல்லம்,

6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை

16 கதாசிரியர்களின் இரண்டடி உயர உலகம்

ஐசாவின் இலேசாய் ஒரு சுமை

புத்தக வெளியீடு


வியாழன், 20 பிப்ரவரி, 2020

தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்!

இந்தியத் திருநாட்டின் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. என்றாலும் நமக்குரிய உரிமைகளை இழந்துதான் நாம் வாழ்கிறோம். இந்தியர் என்ற அடையாளம் தமிழர் என்ற அடையாளத்தைக் காக்கத்தான் இருக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கு இருக்கக் கூடாது. ஆனால், எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து வாழும் வகையி்ல்தான் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது.
தமிழ் மாநிலம் அமைக்கப்பட்ட பொழுதே நில உரிமைகளை இழந்துதானே ஏற்றுக் கொண்டோம். அதன் தொடர்ச்சியாக நாம் உரிமைகளை இழப்பதும் தொடர் வரலாறாகத்தானே உள்ளது. உரிமைகளைக் காக்க வேண்டிய அரசுகள் உரிமைகளைப் பறிக்கும் பொழுது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனச் சேர்த்துக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள் பிற நாட்டின் பெயர்கள் மாறின எனில் அவ்வாறே புதிய பெயரில் அழைப்பர். பம்பாய், மும்பை என மாறியதும் மும்பை என்று அழைக்ககும் நம்மவர்களே சென்னையைச் சென்னை என்று அழைப்பதில்லை. (மெட்ராசு என்று திரைப்படமும் வந்துள்ளது. தமிழில் இல்லாப் பெயர் தாங்கி வரும் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்.) அரசாணையையும் மீறி நம் தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் இருக்கும் துணிவு உள்ளவர்கள் இருக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கையில் தமிழர் எனப் பெருமைபட என்ன இருக்கிறது?
  மத்திய அரசில் தமிழ்நாடும் உள்ளது எனில் தமிழ்மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நீதிமன்றங்களும் மண்ணின் மக்களான தமிழர்களின் உணர்வை மதித்துத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், நடப்பதென்ன? உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க மத்திய அரசு தடை. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க்கடவுள்களின் கோயில்களில் தமிழ்வழிபாட்டிற்கு உள்ள தடையை நீக்க மத்திய அரசு முயல்வது இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையில் அல்லல் பட்டு வரும் அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொன்னாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை.
பிற மாநில மக்கள்போல் நம் மாநில உயர் நீதி மன்றத்தை நாம் மாநிலத்தின் பெயரில் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று அழைக்கும் உரிமையில்லை. மாநிலத் தலைநகர் பெயரில்தானே உயர்நீதி மன்றம் உள்ளது. அதையாவது நம்மால் ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்று அழைக்க இயலுமா? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பினும் அதற்கான உரிமை நமக்கு இல்லையே!
  தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் அதற்குக் காரணமானவர்களை  வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, மத்திய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம் போட்டு மீட்டு வரும் மத்திய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன் கைகோத்துக் கொண்டு தொடர்ந்து தமிழர்நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தியராக எண்ணினால் இணையுரிமை கொடு! இல்லையேல் தனியுரிமை கொடு! எனக் கேட்டு மத்திய அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
 மத்திய அரசின் தொலைபேசிகளிலும் அதன் அறிவுறுத்த்லுக்கு இணங்கத் தனியார் நிறுவனங்களின் தொலைபேசிகளிலும் வணக்கம் ஒலிக்காது; நமசுகாரம்தான் நச்சரிக்கும். பண எடுப்பு மையங்களில் ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆனால் பலவற்றில் தமிழைக் காணோம்!
  வங்கியின் படிவங்கள் தமிழைப் புறக்கணிக்கின்றன. நாம் அவ்வங்கிகளைப் புறக்கணிப்பதில்லை!

  அங்கன்வாடி முதலான பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழை நாமே வெளியேற்றிக் கொண்டுள்ளோம். மத்திய அரசின் துறைகளின் பெயர்களும் திட்டங்களின் பெயர்களும் முழக்கங்களும் இந்தி மயமாக்கப்பட்ட சமக்கிருதத்தில்தான் உள்ளனவே தவிர, தமிழுக்கு அங்கு இடமில்லை. மாநில உரிமைகளில் குறுக்கிட்டுக் கல்வித்துறையை எடுத்துக் கொண்டு, மத்திய அரசு, இந்தியையும் சமக்கிருதத்தையும் திணிப்பதையே அன்றாடகப்பணியாகச் செயல்படுத்தி வருகிறது.
  தமிழகக்காவல்துறை ஆங்கிலேயர்க்குச் செயல்படுவதுபோல் அறிவிப்புகள், வழிகாட்டும் குறிப்புகள், சாலைக் குறிப்புகள் யாவற்றிலும் தமிழ் இல்லை. தமிழன்னைக்குக் காவல் தேவையில்லை என விட்டுவிட்டார்கள் போலும்!
  தொடர்வண்டி அறிவிப்புகளில் தமிழ் இல்லை. எச்சரிக்கை, அபாய அறிவிப்பு என்றெல்லாம் தமிழ்நாட்டில் இந்தியிலும் மலையாளத்திலும் காண முடியும். ஆனால், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு எதற்கு எச்சரிக்கை என்று தமிழில் தருவதில்லை!
  மின்னேணி முதலான அனைத்து அவசர உதவி அறிவிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் தமிழைக் காணமுடியாது. தமிழர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று விட்டுவிட்டார்களா? இப்படியாவது தமிழர் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என எண்ணுகிறார்களா? எனத் தெரியவில்லை.
  உணவகங்களில் உணவுப் பெயர்கள் தமிழில் இல்லை! உணவு நிரலும் தமிழில் இல்லை! தமிழையா   சாப்பிடப் போகிறார்கள்! தருவதை வயிற்றில் திணித்துக் கொண்டு ஓடட்டும் என எண்ணுகிறார்களோ!
  தங்கும் விடுதிகளான உறைவகங்களில் அறைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. கட்டண விவரங்கள், வசதி வாய்ப்புகள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழர்களி்ன் மொழியான தமிழைப் புறக்கணிக்க இவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? தமிழர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள். முரண்டுபிடிக்கும் பொழுது மெதுவாகத்தட்டினாலே வீழ்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை போலும்! நமக்குள்ள உரிமைகளைக்கூடக் கேட்க முடியாமல் வாய் மூடி இருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
 உறைவகங்களில் தங்குவதற்கான பதிவில் தமிழ் இல்லை. உணவகங்களில் நாம்தான் பணம் கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முதலான விழா அல்லது நிகழ்வுக் குறிப்புகளை அவர்கள் தமிழில் எழுத மாட்டார்களாம்! என்ன கொடுமை இது!
தமிழர்கள் அடிமைகள் என்றால் சாமான்யன்முதல் அனைவரும்தானே.
   அரசாணைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் மதிக்காத பொழுது மக்கள் எங்ஙனம் மதிப்பார்கள்? சான்றுக்கு ஒன்று! ஊர்திகளில் தமிழில் பதிவு எழுத்துகளைக் குறிக்கும் அரசாணையை அமைச்சர்களோ தலைமைச் செயலக அதிகாரிகளோ துறைத்தலைவர்களோ மதிக்காத பொழுது வேறு யார்தான் மதிப்பார்கள்!
  தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் படிக்கவும் பணியாற்றவும் வாய்ப்பு உள்ளபோது யாருக்கும் உதவாத தமிழ் என்று அனைவரும் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்! இப்படி எல்லாம் இயன்ற வரை தமிழை எல்லா இடங்களில் இருந்தும் துரத்தி விட்டு யாரோ சிலர் “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என முழங்கினால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?
தமிழர்க்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் பொழுது, எதிர்த்துக் குரல் கொடுத்து அடங்கிப்போகத்தான் நமக்கு உரிமையே தவிர, அதனைத் தடுப்பதற்கு உரிமை இல்லை.
நாம் செலுத்தும் வரி வருவாயில் இருந்து இந்தி, சமக்கிருதத்தை  வளர்ப்பதற்குத்தான் ஆதரவாக இருக்க முடியுமே தவிர, நம் தாய்மொழிப் புறக்கணிப்பைத் தடுக்க இயலாது.
மத்தியில் யார் ஆட்சியில்  இருந்தாலும், தமிழக்கட்சிகள் அதில் இடம் பெற்றாலும், மத்திய அரசிற்குக் கை கட்டி வாய்பொத்தி ஒடுங்கித்தான் இருக்க முடியுமே தவிர, உரிமைக் குரல் கொடுக்க முடியாது.
நம் அடிமை நிலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்வதானால், இந்தியா ஒன்றிய ஆட்சியாக இருந்தாலும் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றன. அதனால் தமிழரும் அடிமைகளாக வாழ்கிறோம். உரிமை வாழ்வு வாழும் தமிழரே உண்மையான இந்தியராகத் திகழ முடியும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். போராட்டமும் வாதாட்டமும் இன்றி நாமும் பிற தேசிய இனங்களும் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.

இந்தியராகத் திகழத் தமிழராய் வாழ்வோம்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

உலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்

அகரமுதல

மாசி 07, 2051 – புதன் – 19.02.2020
முற்பகல் 10.00 முதல் மாலை 5.00 வரை

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழகக்கல்லூரி,
தமிழ்த்துறை
இணைந்து நடத்தும்
தேசியக் கருத்தரங்கம்
சங்க இலக்கியத்தில் திணைக்கோட்பாடுகள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அகரமுதல


பங்குனி 07, 2051 வெள்ளி மார்ச்சு 20, 2020

அறிவிப்பும் அழைப்பும்
தமிழ்த்துறை
சேவுகன் அண்ணாமலை கல்லூரி
தேவகோட்டை
சிவகாசி இராகுல்தாசன் தமிழாய்வு மன்றம்
சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம்
சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம்
இணைந்து நடத்தும்


பன்னாட்டுக் கருத்தரங்கம்

பொருள்: தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

ஆசியவியல் நிறுவனத்தின் 38 ஆம் ஆண்டுவிழாவும் முந்நூல்கள் வெளியீடும்

அகரமுதல

மாசி 08, 2051 வியாழன் 20.02.2020 மாலை 04.00

கருத்தரங்கக் கூடம்,
ஆசியவியல் நிறுவனம்
செம்மண்சேரி, சென்னை 600 119

சனி, 15 பிப்ரவரி, 2020

உற்றுநோக்கு – நாடகம் திரையிடலும் கலந்துரையாடலும்


அகரமுதல

மாசி 04, 2051 ஞாயிற்றுக்கிழமை
16.02.2020 மாலை 5.00

குவிகம் இல்லம்,

6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை

உற்றுநோக்கு – எசு.இராமகிருட்டிணன்

நாடகத்தின் ஒளிவடிவம் திரையிடலும் அது குறித்த உரையாடல்களும்

அபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி

 அகரமுதல

அபுதாபி : அபுதாபியில்  ஆக்குடிவேட்டு நிறுவனத்தின் ஓட்டப்போட்டி கடந்த  தை 27, 2020 / 10.02.2020 அன்று நடைபெற்றது. 
இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார். 
இவர் 5 புதுக்கல்(கிலோ) தொலைவுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார். 
அவருக்கு விளையாட்டுக் குழு அதிகாரி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.  
இந்த ஓட்டப் போட்டியில் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். 
முதல் இடத்தை பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
செய்தி – முதுவை இதாயத்து

வியாழன், 13 பிப்ரவரி, 2020

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 55

அகரமுதல

மாசி 03, 2051 சனி  15.02.2020 மாலை 6.00

சிரீராம் குழும அலுவலகம்

ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம்,

சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே,

மயிலாப்பூர்      சென்னை 600 004

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 55

தலைப்பு சமசுகிருதம் ஓர் எளிய அறிமுகம்

சிறப்புரை மும்மொழி வித்தகர் கா.வி.சீனிவாசமூர்த்தி

அன்புடன் அழகிய சிங்கர் 9444113205

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

இலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், பிப்பிரவரி 2020

அகரமுதல


தை 26, 2051 / 09.02.2020
ஞாயிறு மாலை 5.00


இரசவாதியின் எழுத்துகள் – திருவாட்டி இரேவதி பாலு


குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

தமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி

அகரமுதல

இன்று(மாசி 21/2051 – 4.02.2020) காலை 9.00-9.30


தமிழில் குடமுழுக்கு குறித்து உரை ஒளிபரப்பு:

திரு இலக்குவனார் திருவள்ளுவன்

நெறியாளர் : திரு பாண்டியன்

‘வணக்கம் தமிழன்’ நிகழ்ச்சி

தமிழன் தொலைக்காட்சி