சனி, 18 ஜூலை, 2009

மாநிலங்களவையில் அழகிரி இல்லாததால் அமளி



புதுதில்லி, ஜூலை 17: மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி இல்லாததால் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் ஒரு கேள்விக்கு பதிலளித்துவிட்டு அமர்ந்தார். அதுவரை அவையில் இருந்த அழகிரி அவையை விட்டு வெளியேறினார்.இதையடுத்து ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்கத் தொடங்கினார்.உடனே எழுந்த பாஜகவைச் சேர்ந்த நஜ்மா ஹெப்துல்லா, "ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, அழகிரி ஆகியோர் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளின்போது அவையில் இல்லாமல் இருப்பது குறித்து நோட்டீஸ் கொடுத்தனரா?' என அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் கேள்வி எழுப்பினார்.பாஜக உறுப்பினர்களுக்கு ஆதரவாக மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதற்கு எதிராக திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது."அவை நடவடிக்கைகளில் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை எனில் நோட்டீஸ் கொடுப்பார்கள். ஆனால், கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நேரத்தில் அழகிரி சென்றுவிட்டார்' என்றார் பாஜக உறுப்பினரான எஸ்.எஸ்.அலுவாலியா."கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்தான் இருக்க வேண்டும் என விதி எதுவும் இல்லை. அவரது இணை அமைச்சர் கூட பதிலளிக்கலாம்' என அப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்.
கருத்துக்கள்


மு.க. அழகிரி வேண்டுமென்றே வெளியேறி இருக்க வாய்ப்பு இல்லை. வினா எழுப்ப இருப்பது கவனத்தி்ல் கொண்டு செல்லப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது இணை அமைச்சருக்கு விடையிறுக்க வாய்ப்பு தரும் பெருந்தன்மையாக இருக்கலாம். அமைச்சர் அவையில் இருக்கிறாரா இல்லையா எனச் சிக்கலை எழுப்புவதை விட அவரிடம் செயல்பாடு இருக்கிறதா இல்லையா எனக் கண்டறிந்தால் போதுமானது. செயல்பாடுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை உணரும் பொழுது செயல்பாடு இல்லாமலா போய்விடும்?

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2009 5:12:00 AM

அண்ணன் ஹிந்தி, மற்றும் ஆங்கில கிளாசுக்கு போறாரில்லே அதான் வெளியேறிவிட்டார். அது புரியாத மர மண்டைகள் தான் பாஜகவில் இருக்கிறார்கள். அண்ணன் அடுத்த தேர்தல் வரை கிளாசுக்கு போய்க்கினே இருப்பார் யாரும் ஒண்ணும் பண்ண முடியாது க்கும்!

By MKSamy
7/18/2009 4:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக