சனி, 16 ஜூலை, 2011

Ignored the minister meeting- Erode collector changed: அமைச்சரைப் புறக்கணித்துவிட்டு மட்டைப்பந்து விளையாட்டு : ஆட்சியர் மாற்றம்


ஈரோடு: தோல் தொழிற்சாலை பிரச்னையாலும், விளம்பர மோகத்தாலும் ஈரோடு கலெக்டர் மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகளும், அரசு பள்ளியிலிருந்து வெளியேறினார். சட்டசபை தேர்தலின் போது ஈரோடு கலெக்டராக இருந்த சவுண்டையா மாற்றப்பட்டு, மதுரை கலெக்டராக இருந்த காமராஜ், ஈரோடு கலெக்டராக, மார்ச் 20ம் தேதி பொறுப்பேற்றார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், போக்குவரத்து துறை இணைச் செயலராக காமராஜ் மாற்றப்பட்டு, தர்மபுரி கலெக்டராக இருந்த ஆனந்தகுமார், ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார். கடந்த ஜூன் 3ம் தேதி, ஈரோடு கலெக்டராக பொறுப்பேற்ற ஆனந்தகுமார், எளிமையாக பழகினார். குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தன் மகள் கோபிகாவை, யூனியன் துவக்கப்பள்ளியில் சேர்த்தார். இதன் மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய விளம்பரம் தேடிக் கொண்டார்.
ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் தினமும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வார். மனுநீதி நாள் முகாம், ஆய்வு போன்றவற்றுக்கு செல்லும் இடங்களிலும், அங்கு கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுடன் சேர்ந்து கொள்வார்.
ஜூலை 9ம் தேதி, அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம் ஆகியோர் தலைமையில், ஈரோடில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கிய நிலையில், கலெக்டருக்கு போன் வந்தது. அப்போது வெளியேறியவர், மீண்டும் கூட்டம் முடியும் போது தான் வந்தார். கூட்டத்துக்கு பின், அமைச்சர்கள் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிடச் சென்றனர். அப்போது அமைச்சர்களுடன் செல்லாமல், அந்தியூரில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட்டருந்த ஆய்வுப் பணிக்கு கலெக்டர் சென்றுவிட்டார். செல்லும் வழியில், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இது, அமைச்சர்கள் காதுக்கு எட்டியது.
ஜூலை 12ம் தேதி, கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள், தோல் தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி, மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத, 11 ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டித்தனர். இதில், ஈரோடு, பி.பி.அக்ரஹாரம் கூட்டுறவு தோல் பதனிடும் ஆலையும் ஒன்று. இதைக் கண்டித்து, கூட்டுறவு ஆலைத் தொழிலாளர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., ஆட்சியில் ஈரோடு கூட்டுறவு நூல் பதனிடும் தொழிற்சாலை மாசு பிரச்னையால் மூடப்பட்டு, அத்தொழிற்சாலைக்கு 1.40 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; 250 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அத்தொகையை செலுத்த முடியாமல் மூடிக் கிடந்த தொழிற்சாலை, அ.தி.மு.க., ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. இதே பிரச்னை, கூட்டுறவு தோல் தொழிற்சாலைக்கும் ஏற்பட்டது. இது, கலெக்டரின் நடவடிக்கைக்கு எதிராக திரும்பியது. இது குறித்தும் கலெக்டர் மீது, அரசுக்கு புகாராக சென்றது. சுயவிளம்பரம், அமைச்சரின் ஆய்வுக் கூட்டங்களில் சரி வர பங்கேற்காதது, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக பங்கேற்றது, தோல் தொழிற்சாலை பிரச்னை என, அத்தனையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் எதிரொலியாக, பதவியேற்ற 40 நாளில், ஈரோடு கலெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார். ஈரோடு முன்னாள் கலெக்டர் காமராஜ் மீண்டும் ஈரோடுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரியாவிடை பெற்றார் கலெக்டர் மகள் : ஈரோடு கலெக்டராக, ஜூன் 3ம் தேதி பொறுப்பேற்ற ஆனந்தகுமார், தன் மகள் கோபிகாவை, குமலன்குட்டையில் உள்ள யூனியன் துவக்கப்பள்ளியில் சேர்த்தார்; பலராலும் பாராட்டப்பட்டார். கல்வித் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் என, அனைவரும் பள்ளிக்கு தனி கவனம் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு, கலெக்டர் ஆனந்தகுமார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட தகவலறிந்து, கோபிகாவுடன் பழகிய சக மாணவியர், ஆசிரியைகள், தலைமை ஆசிரியைகள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தன்னுடன் படிக்கும் தோழிகளிடம், "என் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளதால், நான் விரைவில் பள்ளியை விட்டு, வேறு ஊரில், வேறு பள்ளிக்கு சென்று விடுவேன்' என, கோபிகா கூறி, பிரியாவிடை பெற்றார்.

விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு : தோல், சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுத்ததால், மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு என்ற முத்துசாமி ஆகியோர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் அனுப்பியுள்ள மனு: ஈரோடு மாவட்டத்தில், தோல், சாய, சலவை ஆலை கழிவுகளால் காவிரி ஆறு, பவானி ஆறு, காலிங்கராயன் வாய்க்கால் போன்ற நீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகளும், பொதுமக்களும் கேன்சர் மற்றும் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயமும் மக்கள் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த தோல், சாய ஆலைகளுக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மற்றும் குழுவினர், கே.கே.எஸ்.கே., உள்ளிட்ட பல தோல், சாய ஆலைகள் அனைத்து விதிமுறைகளையும் மீறி செயல்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர். மேற்கண்ட அதிகாரிகளை தனது மேல்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி, தோல் ஆலை அதிபர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இது எங்களுக்கு வியப்பையும், பெரும் அதிர்ச்சியும் தந்துள்ளது. நேர்மையாக செயல்படும் அதிகாரிகள், செயல்பட இயலாத நிலை ஏற்படும் என்று அஞ்சுகிறோம். எனவே, தாங்கள் இதை கவனத்தில் வைத்து கலெக்டர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அமைச்சரை புறக்கணித்துவிட்டு கிரிக்கெட் விளையாட்டு : கலெக்டர் மாற்றம்
 

dinamalar photo news:water scarcity: நீரின் அருமை

New facility introduce in 108 ambulance: மாரடைப்பு நோயாளிகளுக்கு 108 மருத்துவ ஊர்தியில் புதிய வசதி விரைவில் அறிமுகம்

பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. அவசர மருத்துவ ஊர்தி வந்தும் மருத்துவமனைக்குச் செல்லும் மு்னபே உயிரிழந்தோர் பலர் உள்ளனர். இனி அந்த நிலை மிகவும் குறையும். எனினும் பணியாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணிநேரம் ஆக்கியும் அவர்களுக்கு இணையான பதவிகளில் உள்ளவர்களுக்கான ஊதியத்தை வழங்கியும்  தேவையான மருந்துப்பொருள்கள் வழங்கியும் பணியாளர்கள்  ஈடுபாடடுடன் பணியாற்ற வகை செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மாரடைப்பு நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்சில் புதிய வசதி விரைவில் அறிமுகம்
சென்னை: திடீரென மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை, விரைந்து காப்பாற்ற, 108 ஆம்புலன்சில் புதிய வசதி செய்யப்பட உள்ளது. கடும் நெஞ்சு வலி காரணமாக ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது, அவருக்கு சாதாரண நெஞ்சுவலியா அல்லது மாரடைப்பா என்பதை, ஆம்புலன்சில் செல்லும்போதே கண்டுபிடித்து, மாரடைப்பு எனில், அதற்குரிய சிகிச்சை வசதிகள் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும். கடந்த 2008ம் ஆண்டு செப்., 15ம் தேதி, 108 ஆம்புலன்ஸ் வசதி, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. முதலில், 20, ஆம்புலன்ஸ் களுடன் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில், இப்போது, 428, ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், இந்த ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, நகர்ப்புறங்களில், சராசரியாக, 17 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் சராசரியாக, 20 நிமிடங்களிலும் சிகிச்சை கிடைக்கும் வகையில், இந்த ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. செயற்கை சுவாச கருவி உட்பட, முதலுதவி சிகிச்சைக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளும் இதில் உள்ளன. இந்த திட்டத்தில், இதுவரை, 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்காக தனி, ஆம்புலன்ஸ் வசதி, கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, மாரடைப்பு நோயாளிகளை விரைந்து காப்பாற்ற, புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. மாரடைப்பு ஏற்படும்போது, நேர விரயத்தை தடுக்கவும், விரைந்து சிகிச்சை அளிக்கவும் இத்திட்டம் உதவும். நெஞ்சு வலி காரணமாக, 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, அவருக்கு, "இ.சி.ஜி.,' வரைபடம் எடுக்கப்படும். அந்த வரைபடம், மொபைல் போன் மூலம், சென்னையில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். சென்னை அலுவலகத்தில் உள்ள மருத்துவக் குழு, இந்த வரைபடத்தைக் கொண்டு மாரடைப்பின் தீவிரத்தை கணிக்கும். பின், அருகில் உள்ள தீவிர இதய சிகிச்சை பிரிவை அறிந்து, அது குறித்து, தகவல் கொடுக்கும். மேலும், அந்த மருத்துவமனைக்கும், முன்பே தகவல் தெரிவித்து நோயாளிக்கு தேவையான சிகிச்சை ஏற்பாடுகளைச் செய்ய கேட்டுக்கொள்ளும். இந்த, புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை, அரசுடன் இணைந்து செயல்படுத்தும் ஜி.வி.கே., நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரபுதாஸ், இது குறித்து கூறும்போது,""இத்திட்டம், முதல் கட்டமாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் செயல்படுத்தப்படும். பின், படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கடும் மனக்குறையுடன் உள்ளனர்.

இது குறித்து, இத்திட்டத்தில் பணிபுரியும் டெக்னிஷியன் ஒருவர் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு, 12 மணி நேரம் பணிபுரிகிறோம். இப்போது, மாதச் சம்பளம், 5, 500 ரூபாய். இதில், பெண் ஊழியர்கள் அதிகம். பல ஊர்களில், பொது இடங்களில் தான் ஆம்புலன்சை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன், மருந்து தட்டுப்பாடு இருந்தது. இப்போது ஓரளவு மருந்து, "சப்ளை' சீரடைந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் உட்பட எல்லாவித நோயாளிகளையும் தொட்டு தூக்குகிறோம். ஆனால், எங்களுக்கு போதிய கையுறைகள் வழங்குவது இல்லை. ஆம்புலன்சை சுத்தம் செய்ய தேவையான அளவு, "டெட்டால், பினாயில்' வழங்குவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து, மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: பணியில் சேரும்போதே, 12 மணி நேர வேலை என்று சொல்லித்தான் சேர்க்கிறோம். எவ்வளவு ஊதியம் என்பதையும் முன்பே தெரிவித்து விடுகிறோம். இது லாப நோக்கமில்லாத சேவை நிறுவனம். இருப்பினும், ஆண்டுதோறும் சம்பள உயர்வு அளிக்கிறோம். ஆம்புலன்சை நிறுத்த, பல ஊர்களில் இடம் இல்லைதான். கழிப்பிட வசதி உள்ள இடத்தில் நிறுத்த அரசின் உதவியை கோரி உள்ளோம். "டெண்டர்' நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதால், மருந்து "சப்ளை'யில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இப்போது அதுவும் சரி செய்யப்பட்டது. ஊழியர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். இவ்வாறு பிரபுதாஸ் கூறினார்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

இரசினியிடம் நலம் உசாவினார் கருணாநிதி


வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. தானே நலம் உசாவி விட்டு மரியாதை கருதித் திரும்ப நலம் உசாவியதைச் செய்தியாக வெளியிடும் நிலைக்கா மாபெரும்  இயக்கத்தின் மாபெரும்தலைவர் தாழ்ந்து விட்டார்.தன்மதிப்பை (சுயமரியாதையை) மக்களிடம் தோற்றுவித்த கட்சி எதனால் தன்மதிப்பிழந்து போனது என்பதை உரியவர்கள்  இனியேனும் உணர்ந்து தன்மானத்துடன் நடந்து கொண்டால் நன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
ரஜினியிடம் நலம் விசாரித்தார் கருணாநிதி

First Published : 15 Jul 2011 03:13:43 AM IST


சென்னை, ஜூலை 14: சிங்கப்பூரில் சிகி ச்சை பெற்று சென்னை திரு ம்பியுள்ள நடிகர் ரஜினிகாந்திடம், திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை மாலை நலம் விசாரித்தார்.
சென்னை கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணாநிதி, அவரது உடல்நிலை குறித்தும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி உடல்நலத்தைப் பேண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், கருணாநிதியின் உடல் நலம் குறித்தும், கனிமொழியின் நலம் குறித்தும் விசாரித்ததாக, திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ill-treat to rajini: இரசினிக்கா இந்த அவமானம்!

இதோ வருகிறார்! அதோ வருகிறார்! நாளை வருகிறார்!  இன்று வருகிறார்! அடுத்த வாரம் வருகிறார்! என்றெல்லாம் மாறி மாறி வரும் செய்திகளின்அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க என்ன தேவை உள்ளது? விமான நி்லையத்தில பணியாற்றுபவர் அனைவரும் தமிழர்கள் அல்லது கன்னடர்கள் அல்லர். வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்பவர்கள்தாம் உரியவர்களிடம் தெரிவித்துத் தக்க நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். புகழ்மிகு நடிகராக அல்லாமல் எளிய நிலையில்  உள்ள நோயர் பலருக்கும் அவ்வப்பொழுது நடக்கும் இதுபோன்ற பணிக்குறைபாடு குறித்துத் தினமணி கவலைப்படுமா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ரஜினிக்கா இந்த அவமானம்!

First Published : 15 Jul 2011 12:00:00 AM IST


சென்னை, ஜூலை 14: சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து சென்னைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு, விமான நிலையத்தில் அதிகாரிகளால் தரப்பட்ட அவமானகரமான மரியாதை பலரையும் வேதனைப்படுத்தி இருக்கிறது. புதன்கிழமை இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்புவதாக "தினமணி' உள்ளிட்ட எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தும், அவரை வரவேற்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படாதது, ரஜினி ரசிகர்களை மிகவும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை திரும்பும் தகவல் கிடைத்ததால் அவரது ரசிகர்கள் புதன்கிழமை மதியம் முதலே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததே தவிர, தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.நடிகர் ரஜினிகாந்த், வழக்கமாக முக்கியமான பிரமுகர்கள் விமானத்திலிருந்து வெளியேறும் ஆறாவது வாயில் வழியாக வெளிவந்தார் என்பதும் அங்கே கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து தனக்கே உரித்தான பாணியில் தலைக்கு மேல் கையை உயர்த்தி வணக்கம் தெரிவித்தார் என்பதும்தான் பத்திரிகையில் வெளிவந்த செய்திகள். அதற்கு முன்னால் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டால், ""ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ரஜினிக்கா இந்த அவமானம் என்று நிச்சயம் வேதனைப்படுவார்கள்'' என்றார் விமான நிலைய ஊழியர் ஒருவர்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ரஜினிகாந்தும் மற்றவர்களும் வழக்கம்போல விமானப் பாலம் (ஏரோ பிரிட்ஜ்) மூலம் வெளியே வந்தனர். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இமிக்ரேஷன் என்று அழைக்கப்படும் அனுமதி சோதனைக்குப் பிறகுதான் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமான பிரமுகர்கள் இதுபோல வெளிநாட்டுப் பயணம் முடித்து இந்தியா திரும்புவதாக இருந்தால், அவர்களை விமானத்திலிருந்து இறங்கும் இடத்திலேயே வரவேற்று, இமிக்ரேஷன் அனுமதி அளிப்பது உண்டு.""தொழிலதிபர்களான "இந்தியா சிமென்ட்ஸ்' சீனிவாசன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், விஜய் மல்லைய்யா போன்றவர்களுக்கு நமது அதிகாரிகள் குழைந்தும் நெளிந்தும் விமானத்திலிருந்து இறங்கியதுமே எல்லா சேவகங்களையும் செய்து, சிறப்பு வாகனத்தில் ஆறாவது வாயில் வரை சென்று வழியனுப்புவார்கள். ஆனால், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் "இமிக்ரேஷன்' சோதனைக்கு நடத்திச் செல்லப்பட்டார். அவர் மூச்சிரைக்க நடந்து வந்ததைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது'' என்று விழிகளில் நீர்கோக்க நமக்குத் தெரிவித்தார் பணியில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்.அதுமட்டுமல்ல, ""இதுபோன்ற நேரங்களில் பிரமுகர்களை ஏற்றிச் செல்ல டாடா சுமோ போன்ற வாகனங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், ரஜினிகாந்த் ஒரு பழைய பஸ்ஸில் அழைத்துச் சென்று ஆறாவது வாயிலில் இறக்கிவிடப்பட்டார். ரஜினிகாந்த் ஒரு நோயாளியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் என்று தெரிந்தும் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள் ரஜினி ரசிகர்களான விமான நிலைய ஊழியர்கள்.விமான நிலைய ஊழியர்கள்தான் இப்படி என்றால் நமது காவல்துறையின் செயல்பாடு அதைவிட கண்டனத்துக்குரியது. ரஜினியை வரவேற்க நண்பகல் முதலே ரசிகர்கள் குவிகிறார்கள் என்று தெரிந்தும், பிரமுகர்கள் வெளியேறும் ஆறாவது வாயிலின் அருகில் தற்காலிகமாக அதிக விளக்குகளைப் பொருத்தி அதிகளவில் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்களா என்றால், இல்லை. அங்கிருந்து ரஜினி வெளியேறும் பாதையில் தடுப்புகள் (பாரிக்கேட்) போட்டிருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. அன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்குப் பொறுப்பாவது முதல்வரும் அரசுமாக இருக்கும் என்று தெரிந்தும் காவல் துறை ஏன் முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்று வருத்தப்படாத ரசிகர்களே கிடையாது.""இத்தனைக்கும் "இமிக்ரேஷன்' சோதனை நடத்தும் இலாகா ரஜினியின் நண்பரான உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கீழ் வருகிறது. விமான நிலையம் அவரது இன்னொரு நண்பரான வயலார் ரவியின் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ரஜினி வருகிறார் என்று ஊரெல்லாம் கொட்டி முழங்குவது இவர்கள் காதில் விழாதது ஏன்?'' என்று ரஜினிக்கு நெருக்கமான சிலர் கேள்வி எழுப்பினார்கள்.இத்தனை குளறுபடிகளுக்கும் ரஜினி குடும்பத்தினரும் ஒரு காரணம் என்கிறார் ரஜினி ரசிகர் ஒருவர். ""1996-ல் ரஜினி வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா முன்னேற்பாடுகளைக் கவனமாகச் செய்திருந்தார். அதேபோல, ரஜினி குடும்பத்தினர் முதல்வரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டிருந்தால், நிச்சயமாக அவர் தகுந்த ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டிருப்பார். அவர்கள் சொல்லாதது தான் தவறு'' என்று கருத்துத் தெரிவித்தார் அவர்.""ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. தவறுதான். தமிழகக் காவல் துறையின் புலனாய்வுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது? இவர்கள் ஏன் முதல்வரிடம் முன்கூட்டியே அறிவித்துத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாமல் விட்டார்கள்? இத்தனைக்கும் ரஜினிகாந்துக்கும் தமிழக முதல்வருக்கும் நல்லுறவு இருப்பது அவர்களுக்குத் தெரியாததா என்ன'' என்று கோபமாகக் கேட்பவர்கள் பலர்.தொழிலதிபர்களுக்கெல்லாம் தொழுதடிமை செய்யும் நமது அதிகார வர்க்கம், தமிழக மக்களின் ஏகோபித்த அன்பையும் அபிமானத்தைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்தை, அதுவும் சிகிச்சை பெற்று அவர் திரும்பும் நிலையில், இப்படி நடத்தியிருக்க வேண்டாம் என்று வருத்தப்படாத ரசிகர்களே இல்லை!

கனிமொழியைப் பற்றி நலம் விசாரித்த இரசினி

ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவரிடம் , நடிகர் ஒருவர்  மரியாதை கருதி நலம் உசாவுவதையும் பெருமையாகச் செய்திக் குறிப்பாக வெளியிடும் நிலைக்கா தி.மு.க. தாழ்ந்து விட்டது? தந்தை மகளிடம் தெரிவிக்க வேண்டிய செய்தியை ஊடகங்களில் வெளியிடும் அளவிற்கா தி.மு.க. கீழ்நிலைக்குத் தாழ்ந்து விட்டது.
வருத்தத்துடன்
 இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கனிமொழியைப் பற்றி நலம் விசாரித்த ரஜினி

First Published : 14 Jul 2011 10:07:15 PM IST


சென்னை, ஜூலை 14: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ள ரஜினிகாந்த், இன்று திமுக தலைவர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது கனிமொழியைப் பற்றியும் விசாரித்துள்ளார்.சிகிச்சை முடிந்து சிங்கப்பூரில் இருந்து புதன்கிழமை இரவு சென்னை வந்த ரஜினிகாந்த், வியாழக்கிழமை திமுக தலைவர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினி காந்த், கனிமொழியைப் பற்றியும் விசாரித்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ரஜினி, அவர் குறித்தும் கனிமொழி குறித்தும் நலம் விசாரித்தார் என்று திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 14 ஜூலை, 2011

பேசும் ஊர்திகள் விரைவில் அறிமுகம்

பேசும் கார்கள் விரைவில் அறிமுகம்

First Published : 14 Jul 2011 12:00:00 AM IST


லண்டன், ஜூலை 13: வாகனங்கள் தகவல்களை பறிமாறிக்கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எனவே, ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டே சாலைகளில் விரையும் கார்களை விரைவில் நாம் பார்க்க முடியும்.போலோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழுவினர் பேசும் இந்த கார்கள் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் குழுத் தலைவர் பேராசிரியர் மார்கோ ரோசெட்டி இதுபற்றி கூறியது: ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னால் சாலையில் என்ன நடக்கிறது என்பதை சென்சார் மூலம் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடு இவ்வகைக் கார்களில் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்தில் சிக்காமல் தப்புவதுடன், வீண் அலைச்சலை 40 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றார்.நாம் கார்களில் சென்று கொண்டிருக்கும் போது, வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஏதாவது விபத்து ஏற்பட்டிருந்தால், விபத்தில் சிக்கிய வாகனத்தை தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் சென்சார் பொருத்தப்பட்ட கார்கள், தானாகவே இயங்கி வேகத்தை உடனடியாகக் குறைத்து நின்றுவிடும். இதனால் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.அதோடு நின்றுவிடாமல், குறிப்பிட்ட காரில் இருந்து வெளியாகும் சென்சார் தகவல், அடுத்தடுத்து வரும் கார்களை சென்றடைந்து எச்சரிக்கும். இதனால் விபத்து குறித்து அறிந்துகொள்வதுடன், மாற்று வழியில் செல்லவும் நமக்கு ஏதுவாகும். புதிய சென்சார் அமைப்பை கார்களில் பொருத்திக்கொள்ளலாம், அல்லது அதிநவீன வசதிகள் கொண்ட தொலைபேசி போன்றவற்றை கார்களில் வைத்துக்கொள்வதன் மூலமும் இத்தகைய வசதிகளை பெற முடியும். ஆனால், அனைத்து கார்களிலும் இதற்கான மென்பொருளை பொருத்தினால் மட்டுமே தடையின்றி தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். இவ்வகை சென்சார் பொருத்தப்பட்ட கார்களை வரும் ஆகஸ்டில் சாலைகளில் சோதித்துப் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர் மார்கோ ரோசெட்டி.

Newzeland refuses to give asylum for eexham thamizhs: இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தர நியூசிலாந்து மறுப்பு

இந்தோனேசியாவும் நியூசிலாந்தும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் நாட்டு மக்களுக்கு இணையான உரிமையும் வசதிகளு்ம் பெறும் வகையில் அடைக்கலம் தர வேண்டும். தமிழ் ஈழ அரசு அமைந்ததும் உரிய  செலவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தர நியூசிலாந்து மறுப்பு

First Published : 13 Jul 2011 12:00:00 AM IST


மெல்போர்ன், ஜூலை 12: அடைக்கலம் கோரி நியூசிலாந்து நாட்டை நோக்கிச் சென்ற இலங்கை அகதிகளை ஏற்க அந்நாடு மறுத்துவிட்டது.இலங்கை அதிகதிகள் 88 பேர் சிறிய ரக கப்பலில் அகதிகளாக நியூசிலாந்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா கடற் பகுதியில் கடந்த சனிக்கிழமை அவர்கள் சென்றபோது அந்நாட்டு கடற்படையினரால் அவர்கள் வழிமறிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் நியூசிலாந்து நாட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். மேலும் நியூசிலாந்து நாட்டை வாழ்த்தும் பதாகைகளையும் வைத்திருந்தனர்.இதுபற்றி இந்தோனேஷியா அதிகாரிகள் நியூசிலாந்து நாட்டுடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இலங்கை அகதிகளை அந்நாடு அனுமதிக்கவில்லை, அவர்கள் நியூசிலாந்து நாட்டுக்கு வருவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த 88 அகதிகளும் எந்த நோக்கத்தில் நியூசிலாந்து நாட்டுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை என அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் ஜோநாதன் கோல்மன் தெரிவித்தார்.இதுபற்றி நியூசிலாந்து பிரதமர் ஜான் கி கூறுகையில், அகதிகள் நியூசிலாந்து நாட்டுக்கு வரும்போது அதை மிகவும் கவனமாகவே நாங்கள் கையாளுவோம். இதை நாங்கள் நியூசிலாந்து சட்டத்திட்டப்படியே அணுக முடியும். இதை நாங்கள் கடுமையாக கடைப்பிடிக்காவிட்டால், நியூசிலாந்தில் அகதிகள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். அவ்வாறு அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றார் ஜான் கி.

Dinamani article about the genocide of sankakara: சங்ககராவின் "இனப் படுகொலை'

உணர்வையும் உண்மையையும் வெளிப்படுத்தும் கட்டுரை.சிங்கள மட்டைப்பந்தாட்டக் குழுவினருக்குத் தரும் சிவப்புக் கம்பள வரவேற்பை நம் அரசுகள் எப்பொழுது நிறுத்தப் போகின்றன? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


சங்ககராவின் "இனப் படுகொலை'

First Published : 14 Jul 2011 03:29:48 AM IST


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை எவ்வளவு கொடூரமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசிக் கொன்றது. பிடிபட்டவர்களையும் சரணடைய வந்தவர்களையும் சித்திரவதை செய்தது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.இறந்தவர்களின் உடல்களில் இருந்த காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். கண்களைக் கட்டி, நிர்வாணப்படுத்திக் கொன்றது, உடலெல்லாம் கத்தியால் கீறி கழுத்தை அறுத்தது என உச்சகட்ட மனிதஉரிமை மீறல் நடந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் இலங்கை அரசும் அதன் ராணுவமும் தங்களது தவறுகளை நியாயப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.ராஜதந்திர வளையங்களில் ஒருபக்கம் இவர்களது சதிவேலை நடந்து கொண்டிருக்க, இன்னொருபக்கம் சேனல்-4 தொலைக்காட்சியை மிரட்டுவது, எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது போன்ற பிறவற்றையும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. எத்தனை ஆதாரங்களை வெளியிட்டாலும் அவையெல்லாம் போலி என்பது போலத் திரித்துப் பேசுகின்றனர். எல்லாம் தேச நலனுக்காகச் செய்யப்பட்டதுதான் என்பதுபோல புனையப்படுகிறது. தேச ஒருமைப்பாடு என்பதை இனப் படுகொலையை மறைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சி.இலங்கையின் இந்த முயற்சிக்கு கிரிக்கெட் வீரர் சங்ககராவும் உதவப் புறப்பட்டிருக்கிறார். அதுவும் சர்வதேச அரங்கில். கிரிக்கெட் தொடர்பான பேச்சு என்கிற போர்வையில். அண்மையில் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெüட்ரி நினைவு கிரிக்கெட் உரையில் தனது விஷமத்தனத்தை வஞ்சகமாக அரங்கேற்றினார் சங்ககரா.கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நீடித்த அவரது பேச்சு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை குறைகூறுவதாகவே கவனிக்கப்பட்டது. அதை மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் முன்னிலைப்படுத்தின. அதனால், அவரது பேச்சில் ஆங்காங்கே இலங்கை இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வசனங்கள் இருந்தது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது. இலங்கையின் வரலாற்றைப் பற்றிப் பேசிய சங்ககரா, கடந்த 30 ஆண்டுகளாக இருந்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது என்று கூறி இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை ஒரே வரியில் கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஏதோ நியாயமற்ற காரணங்களுக்காகவும் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கிலுமே இந்தப் போராட்டங்களெல்லாம் நடந்ததாகக் கூறுவது போல அவரது பேச்சு இருந்தது. இலங்கையில் நடந்த உச்சகட்டப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ராணுவம் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்ததாகக் கூறிய அவர், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறிப்பிடவேயில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை.போர் நடந்து முடிந்த பிறகும் பல்லாயிரக் கணக்கானோர் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். உணவும், மருத்துவவசதியும் இல்லாமல் அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். மர்மமான வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.போரிலும் போருக்குப் பிந்தைய ராணுவ நடவடிக்கைகளாலும் சொந்தங்களை இழந்தவர்களின் நெஞ்சங்களில் ஆறாத வடு ஏற்பட்டிருக்கிறது. உடல் ஊனமாகி நடைபிணமாக வாழ வேண்டிய நிர்பந்தம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் சங்ககராவின் நினைவில் இல்லை போலும்.போர் நடந்த பகுதிகள் மட்டுமல்லாமல் கொழும்பு போன்ற போர்முனைக்குச் சம்பந்தமில்லாத நகரங்களிலும் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; குண்டுகள் போடப்பட்டன என்றுதான் அவர் குற்றம்சாட்டினார்.அதுபோலவே, பெரும்பாலான இடங்களில் பயங்கரவாதம், "பயங்கரவாதிகள்' என்கிற சொல்லையே இவர் பயன்படுத்தியிருக்கிறார். சரி, சங்ககராவிடம் இருந்து இதைத்தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று கேட்கலாம். எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவரது பேச்சுக்கு தமிழர்கள் மத்தியிலிருந்து சலசலப்புகூட கிளம்பவில்லை என்பதுதான் வேதனை. சங்ககராவின் பேச்சுக்கு மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அவர்கள் கைதட்டியது, கிரிக்கெட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தம் பற்றிய கருத்துகளுக்காக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால், அந்தப் பேச்சில் கூறப்பட்ட தமிழர் இனப்படுகொலை தொடர்பான கருத்துகளுக்கும் கிரிக்கெட் உலகமே ஆதரவு தெரிவித்தது போலல்லவா ஆகியிருக்கிறது. இதுவே இனப் படுகொலைக்கு அங்கீகாரமாயிற்றே!ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, உலகமே உற்று நோக்கக்கூடிய ஓர் உரையில் இந்த இடைச் செருகல்கள் எப்படி வந்தன? தனது கிரிக்கெட் வாரியத்தையே சர்ச்சைக்குரிய வகையில் குற்றம்சாட்டி, இந்தப்பேச்சை சங்ககரா பரபரப்பாக்கியது ஏன் என்பதற்கெல்லாம், "இனப்படுகொலையை நியாயப்படுத்தும் திட்டமிட்ட முயற்சி' என்பதைத் தவிர வேறு என்ன பதில் இருக்க முடியும்? இலங்கை ராணுவத்தின் புகழை உயர்த்திவிட்டதாக கோத்தபய ராஜபட்ச பாராட்டியிருப்பதற்கும் அதுதானே காரணம்.1980-களில் தாம் சிறுவனாக இருந்தபோது வன்முறைகள் நடந்ததாகவும், அதில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தனது வீட்டில் தங்குவதற்கு தனது தந்தை இடமளித்து வந்தார் என்றும் தனது பேச்சில் சங்ககரா குறிப்பிட்டார்.அந்த மனிதாபிமானம்கூட உங்களிடம் இல்லையே சங்ககரா!

உலகத் தமிழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியவர் கார்த்திகேசு சிவத்தம்பி

உலகத் தமிழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியவர்
கார்த்திகேசு சிவத்தம்பி

First Published : 14 Jul 2011 01:03:57 AM IST


கார்த்திகேசு சிவத்தம்பி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன்.
ஈரோடு, ஜூலை 13: உலகத் தமிழர்களுக்கு ஆய்வுலகின் உந்து சக்தியாக விளங்கியவர் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். உலகத் தமிழறிஞர் என தமிழர்கள் அனைவராலும் போற்றப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த கார்த்திகேசு சிவத்தம்பி கடந்த 6-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் கடந்த 10ஆம் தேதி வரை வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்றார். அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் பேசியது:தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்கள் தமிழை ஆய்ந்தறிவதென்றால், தமிழின் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தமிழ் மொழியை இலக்கணம், இலக்கியம், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தத்துவம், வரலாறு என அனைத்து அம்சங்களோடும் பொருத்தி வளப்படுத்தியவர். தமிழகத்தில் பா.ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன், வானமாமலை போன்றோருக்கு இலங்கையிலிருந்த கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்றோரின் தொடர்பும் தாக்கமும் இருந்துள்ளது. அதேபோன்று சிவத்தம்பி போன்றோருக்கு தமிழகத்தின் இத்தகைய தலைவர்கள், அறிஞர்களின் கருத்துகள் வளம் சேர்த்துள்ளன. பல்கலைக்கழகங்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலம் அமைத்தவர்.பொதுவுடைமைக் கொள்கையில் தீராப் பற்றுக் கொண்டவர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு உரிய சிவத்தம்பிக்கு இலங்கையில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களும் மறைந்த நாளில் இருந்து இறுதி அஞ்சலி நடைபெற்ற நாள் வரை சிறப்புக் கட்டுரைகளையும், அழுத்தமான தலையங்ககளையும் வெளியிட்டு, அழியாப் புகழ் படைத்தவர் என்பதை உலகறியச் செய்துள்ளன. சிறந்த அறிஞராக விளங்கியதோடு பண்பும், பாசமும் மிக்க நல்ல மனிதராக விளங்கி சமுதாய மாற்றத்திற்கு உந்து சக்தியாகவும், தமிழ்மொழி உலக நாடுகளை நோக்கி பயணிக்க வழி வகுத்தவர். அவரது வழியில், உலகத் தமிழர்கள் அனைவரும் சென்று தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்றார்.

Dinamani article-thamizh in computer by anto peter: கணினித் தமிழுக்கு உயிர்ப் பிச்சை தேவை

கணினித் தமிழுக்கு உயிர்ப் பிச்சை தேவை

First Published : 14 Jul 2011 03:29:06 AM IST


கணினியில் தமிழ்ப் பயன்பாடு 1980-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகம் நூலகப் பயன்பாட்டுக்காக உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. சுமார் 32 ஆண்டுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு இருந்தும் பல குழப்பநிலைகளே உள்ளது.கணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சித் திட்டமோ, எம்என்சி நிறுவனங்களில் கூட்டுப்பணியோ இல்லை. ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற கணினியிலும் பார்க்க பொதுவான எழுத்துரு தேவைப்பட்டது. இன்றும் பதிப்பு மற்றும் அச்சுப்பணிக்குத் தேவைப்படுகிறது. இணையத்தை அனைவரும் பார்வையிட எழுத்துருவைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்யவேண்டிய நிலையுள்ளது. இந்தக் கவலைகளைப் போக்குவதற்கே யுனிகோட் தமிழ் பிறந்துள்ளது.வருங்காலத்தில் "யுனிகோட்' தமிழே நிலைக்கும். யுனிகோட் தமிழின் அருமை அறிந்தும், இவற்றைச் சீர்படுத்த அரசு தவறுகிறது. தமிழக அரசைச் சுட்டிக்காட்டினால் இது தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பென நினைத்துவிடுகிறார்கள். இதில் தமிழ் வளர்ச்சித்துறையின் பங்கும் 50 சதவீதம் உள்ளது. இவ்விரு துறைகளும் கூட்டாகத் தமிழுக்கு முயற்சி எடுக்காததாலேயே நாம் சீரழிவைச் சந்திக்க நேர்கிறது. எல்லோரும் ஆங்கில விசைமுறை சீராகவுள்ளதாகக் கருதுகிறோம். ஆங்கில கீபோர்டு 1878-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, அதுவும் சீரான நிலையை உலக அளவில் பெற்றிட 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. நாமும் இப்பிரச்னையை இந்நவீன காலத்தில் சீருடன் பெற்றிட யுனிகோட் தமிழை வலிமைப்படுத்த வேண்டும்.யுனிகோட் என்றால் என்ன? யுனிகோட் என்பது உலக மொழிகள் அனைத்தின் எழுத்துகளையும், குறியீடுகளையும் ஒரே கணினி குறியீட்டு முறையில் இணைத்து வடிவமைக்கும் ஒரு தொழில்நுட்ப முறையாகும். யுனிகோட் முறைகளின் மூலம் ஜப்பான், சீனம், கொரியா போன்ற பல சிக்கலான வரிவடிவங்களைக்கொண்ட மொழிகளைக்கூட எளிதில் கணினியில் பயன்படுத்த முடிகிறது. நாம் யுனிகோடில் டைப் செய்த பைலை உலகின் எந்தக் கணினியிலும், எந்த நாட்டிலிருந்து திறந்துபார்த்தாலும் படித்து அச்சடிக்க முடியும்.நாம் பயன்படுத்தும் ஒரே கணினியில், ஒரே பக்கத்தில், ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஜப்பான், சீனம், கொரியா என அனைத்து மொழிகளையும் செலவின்றிப் பயன்படுத்தலாம். தொழில்நுட்பம் மூலமாக சார்ந்து, எந்த மொழி வளர்கிறதோ அந்த மொழியே அழியாமல் இருக்கும். தமிழை வளப்படுத்த யுனிகோடில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.நாம் யுனிகோடில் டைப் செய்த ஒரு தமிழ்ப் பக்கத்தை அலுவலகக் கணினி, லேப்டாப் கணினி, அச்சு, பதிப்பகம், இணையம் மற்றும் செல்பேசி என அனைத்து தொழில்நுட்பத்திலும் சிக்கலின்றிப் பார்த்துப் படித்துக் கொள்ளலாம். யுனிகோட் எழுத்துருக்கள் அதிக அளவில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. யுனிகோடினால் கணினி மற்றும் இயங்குதளங்களின் செயல்படும் வேகம் அதிகரிக்கிறது. நாம் ஆயிரக்கணக்கான பக்கங்களை சில நொடிகளில் அச்சுப்படி எடுக்கலாம். எந்தக் கணினியிலும் யுனிகோட் எழுத்துருவைப் பதிக்கவோ, பதிவிறக்கம் செய்யவேண்டிய அவசியமோ இல்லை.தமிழக அரசு தமிழில் வர்த்தக எழுத்துருக்களை ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக விலை கொடுத்து வாங்குகிறது. ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக இன்ஸ்டால் செய்ய வேண்டும்.ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனிப் பதிவு எண்களைப் பாதுகாக்க வேண்டும். இணைய பயன்பாட்டுக்காக தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். யுனிகோட் எழுத்துரு உலக மொழிக்கே பொதுவானதால் இச்சிக்கல்கள் இன்றிப் பயன்படுத்தலாம். ஆனால், இதை முழுமையாக இணைய விரும்பிகளே பயன்படுத்துகிறார்கள். அரசுப்பணியில் பயன்பாடு இன்றி அவல நிலையில் உள்ளது.சமீபத்தில் அமெரிக்கா விசா பெறுதற்காக சென்னை அமெரிக்க தூதரகத்துக்குச் சென்றிருந்தேன். அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்கு நேர்காணல் வைத்தே விசா தருவார்கள். இதை அமெரிக்கர்களே நடத்துகிறார்கள். நேர்காணலின்போது எதற்கு, ஏன் அமெரிக்கா செல்கிறீர்கள் என கேட்டார்கள். அப்போது நான் அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை வளர்க்க அமெரிக்காவில் மாநாடு நடைபெறுகிறது என்று கூறினேன். அமெரிக்காவில் எம்என்சி நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் தமிழின் வளர்ச்சி விவாதங்களும், ஆராய்ச்சிகளும் தமிழகத்துக்கு உதவும் என்று கூறினேன். தமிழகத்தின் அனைத்துக் கணினிகளில் வேலை செய்யும் அனைத்து சாஃப்ட்வேர்களும் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுவதாகக் கூறினேன். புன்முறுவலுடன் தமிழகத்துக்குப் பயனுள்ளதாக உள்ளதா என்று கேட்டார், தலையாட்டினேன். உங்கள் பணி தமிழையும், மின்னணுவையும் இணைக்கிறதென கூறினார். சில நொடிகளில் அவர் புரிந்துகொண்டதை எண்ணிப் பெருமை அடைந்தேன். தமிழும், கணினியும் பல செயலாக்கங்களை வருங்காலத்தில் செய்யவுள்ளது. அவர் புரிந்துகொண்டதை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் புரிந்துகொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.யுனிகோட் சம்பந்தமாகப் பிரச்னைகளைச் சந்தித்தால் தமிழக அரசு உடனடியாகப் பணிக்குழுவை உருவாக்கிப் பிரச்னைகளைச் சமாளிக்கிறது. ஆனால், நிரந்தரத்தீர்வை ஏற்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. இப்போது அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிலும் தமிழக அரசு அதிகாரிகள் கலந்துகொள்ளாதது வருத்தத்தை அளித்தது. தகவல் தொழில்நுட்பத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் இணைந்து தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்க வேண்டும். யுனிகோட் கன்சார்ட்டியத்தில் தமிழக அரசு உறுப்பினராக வேண்டும். உறுப்பினராக இருந்தால்தானே பன்னாட்டு அறிஞர்களின் அறிவையும் நம் மொழிக்குப் பெறமுடியும். நம் மொழி சார்ந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்ய முடியும்.தமிழக அரசு 9.75 லட்சம் லேப்டாப்களைத் தேர்தல் அறிக்கைப்படி அளிக்கவுள்ளது. மாணவர்கள் பலன் பெறவுள்ள வரவேற்க வேண்டிய திட்டமாகும். இந்த லேப்டாப்களில் தமிழ் மென்பொருள்கள் அளிக்கப்படுகின்றன. லேப்டாப்பின் அடிப்படை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை தமிழில் அளிக்கச் சிந்தனையில்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. லேப்டாப்பில் உள்ள கீ-க்களையே தமிழில் பொறித்து அளிக்கலாமே, லேப்டாப்பில் உள்ள கீ-க்கள் தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் 20 சதவீதம் தமிழக மாணவர்களாவது தமிழ்த் தட்டச்சு அறிவைப் பெறுவார்கள்.லேப்டாப்பை டெண்டர் அடிப்படையில் விநியோகிக்கும் நிறுவனங்களைத் தமிழக (தமிழ் 99) அரசாணைப்படி விசைமுறைகளைப் பெற்ற விசைகளுடன் லேப்டாப்களைத் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.ஆசிய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செல்போன்களையும் தரப்படுத்தலாமே. தமிழ் விசைகளோடுதான் செல்போன்களை விற்கவேண்டுமென தரமுறையை உருவாக்கலாமே!தமிழக அரசின் இணைய தளங்கள் தமிழகக் கிராமப்புற மக்களுக்காகத்தான் இயங்குகின்றன. அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமல் அரசு சேவைகளையும், தேவைகளையும் பெறுவதற்கே இணையங்களை தமிழக அரசுத்துறைகள் நிறுவி வருகின்றன. இந்த இணையங்களை ஏன் தமிழில் நிறுவுவதில்லை என்பது தெரியவில்லை. தமிழக அரசின் அனைத்து இணையங்களும் தமிழில் மாற்றம் செய்யவேண்டும்.தமிழ் இணையப் பல்கலைக்கழகம்தான், தமிழக அரசின் தமிழ்க்கணினிப் பணிகளைச் செய்வதாகக் கூறுகிறார்கள். அந்நிறுவனத்தின் தமிழ்க்கணினிப் பணி தொய்வு நிலையிலேயே உள்ளது. கல்விப்பணியை மட்டும் அந்நிறுவனத்துக்கு ஒதுக்கி தமிழக அரசின் தமிழ்க் கணினிப் பணிக்காக தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்க வேண்டும்.ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்றால், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் தரச்சான்றிதழ் பெறவேண்டும். அதேபோல் தமிழகத்தில் தயாரிக்கப்படும் அனைத்து மின்னணுவியல் தயாரிப்புகளும் தமிழ்சார் தரக்கட்டுப்பாட்டை அளித்த பின்பே, விற்பனைக்கு வரவேண்டும். மின்னணுவியல் தயாரிப்புகளுடன் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் பயனாளர் கையேடுகள் தமிழில் வெளியிட வலியுறுத்த வேண்டும். நம் மொழியோடு குறைந்த மக்கள்தொகையுள்ள மொழிகள்கூட தத்தம் நாடுகளில் இவ்விதிகளைக் கையாள்கின்றன.தமிழ்க்கணினிப் பயன்பாடுகள் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்குத் தமிழ்க்கணினி சேவைகளையும், கலைச்சொற்களையும் ஊட்டினால் சமுதாய மாற்றத்தைக் காணலாம். மேலும், பல அரசுத் திட்டங்கள் கிடப்பில்தான் உள்ளன.யுனிகோட் தமிழ் மற்றும் பல்வேறு மின்னணுத் தமிழ்ப்பணியாக்கங்களுக்கு மனுக்களும், கோரிக்கைகளும் எங்களைப்போன்ற தொழில்நுட்பவாதிகள் அளித்து களைப்பைத்தான் கண்டுள்ளோம். சிறப்பான நலப்பணிகளைச் செய்துவரும் புதிய அரசு தமிழ்ப்பற்றுடன் கணினித்தமிழ்ப் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழக அரசின் தமிழ்க் கணினி அரசாணையைத்தான் தத்தம் நாடுகளில் அமல்படுத்துகிறார்கள். முதல்வரின் தமிழ்க் கணினிப்பணி உலகத் தமிழ்மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம். கட்டுரையாளர்:கணினித் தமிழ்ச் சங்கத் தலைவர்.

புதன், 13 ஜூலை, 2011

3 explosions hit mumbai: மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: மீண்டும் 26/11?

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: மீண்டும் 26/11?

மும்பை: மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டுவெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களிலும், பரபரப்பான நேரத்திலும் நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 10 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.

Three blasts in Mumbai

Mumbai was again shaken when three blast ripped the city this evening killing eight and injuring more than 70 people.

Reports say that the three blast happened simultaneously in Opera House, Zaveri Bazaar and Dadar station. Here's a real time update on the three blast that rocked Mumbai:

8:34 pm: The blasts occured at 6.30, 6.45 and 7 pm in sequence

8:33 pm: Police control room nos: 22621855, 1983, 5020

8:30 pm: Top security and home ministry officials meet to assess situation

8:29 pm: Opera House blast took place in Panchratna lane

8:28 pm: Police have cordoned off the area. People are stranded in Dader as the police are not allowing them to leave the place. It's raining and people are struck

8:28 pm: Dadar blast took place at bus stop near Kabhuthar Khaana

8:26 pm:  Home Secretary RK Singh confirms that one blast took place in a Maruti Esteem

8:25 pm: Home Secretary RK Singh says all injured have been shifted to hospital

8:22 pm: Home secretary RK Singh says 2 killed and 100 people have been injured in the blast.

8:20 pm: Domestic and International airports in Mumbai reportedly sealed. CISF screening airport parking lots

8:17 pm: Home Minister Chidambaram to brief the media at 9:00 pm on the Mumbai blasts

8:14 pm: BSF forensic experts being readied to fly to Mumbai

8:12 pm: PM speaks to Maharastra CM on blasts; asks him to keep him posted

8:10 pm: Maharashtra Home Secretary claims 60 have been injured

8:07 pm: Local trains in Mumbai are still functional

8:05 pm: Police sources say improvised explosive devices used in the blasts

8:03 pm: IED used in blast: TV reports

8:02 pm: If you or your loved ones are injured in the Mumbai blasts, please call 022 6133 6133 - MeraDoctor lines are open for all

8:01 pm: Kabhuthar Khaana area in Dadar cordoned off

8:00 pm: It seems to be a terror attack: Home ministry

7:58 pm: TV reports say that 8 people have been killed and more than 70 injured

7:55 pm: Dader blast victims taken to Kem hospital; Zaveri Bazaar blast victims taken to JJ hospital

7:54 pm: Zaveri Bazaar blast took place in a meter box of an electric pole

7:53 pm: Home Ministry puts NSG team on standby

7:52 pm: Teams of Maharashtra ATS rushed to the blast site

7:50 pm: One explosion was in a car in Dadar

7:50 pm: Cellular networks jammed across Mumbai

7:47 pm: Home Ministry confirms blasts are an act of Terrorism

7:45 pm: Security alert in Delhi after Mumbai blasts

7:43 pm: Chhagan Bhujpal refuses to give confirmation on mumber of injured

7:40 pm: Home ministry confirms blasts in Mumbai

7:35 pm: Probing a tiffin box found near the blast site: ACP

7:32 pm:  7:30  pm - Early reports indicate casualties in Zaveri Bazaar blast.

7:30 pm: Fire under control in Zaveri Bazaar, says eye witness.

7:25 pm: Eyewitnesses report hearing explosion sound near Kabuthar Khaana in Dadar. It is located next to Dadar Station.

7:20 pm: Home Ministry refuses to confirm that they are bomb blasts

7:15 pm: Three blasts reported from different parts of Mumbai - Dadar, Prasad Chambers in Opera House and Zaveri Bazaar.
ஜாவேரி பஜார் பகுதியில் இருந்த மீட்டர் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதே போல், தாதர் பகுதியில் கபுதார் கானா என்ற இடத்தில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Dinamani editorial about train accidents: உயிருடன் விளையாடுகிறார்கள்!

பொறுப்புடனும் விளக்கமாகவும் நன்கு எழுதப்பட்டுள்ளது. உணரவேண்டியவர்கள் உணர்வார்களாக! 
பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


உயிருடன் விளையாடுகிறார்கள்!

First Published : 13 Jul 2011 12:08:49 AM IST


அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்காமல் ஓர் அமைச்சர் தன்விருப்பப்படி நடந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் ஓர் எடுத்துக்காட்டு. அதுபோல, அதிகாரிகளின் கையில் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, ஓர் அமைச்சர் தனது மாநில அரசியலைக் கவனிக்கச் சென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு, ரயில்வேயின் சீரற்ற நிர்வாகமும் விபத்துகளும் எடுத்துக்காட்டு.உத்தரப் பிரதேச மாநிலத்தில், கல்கா ரயில் விபத்தில் 35 பேர் பலியான சம்பவம் குறித்து செய்தி வெளியான அடுத்த கணமே விமர்சனக் கணைகள் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாய்ந்ததில் தவறு காண முடியாது.மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் தொடங்கிய நாள் முதலாகவே மம்தா பானர்ஜி ரயில்வே துறையில் கவனம் செலுத்தவே இல்லை என்பது வெளிப்படையான உண்மை. அதன் பின்னர், உள்ளாட்சித் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றி, அவரைச் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றிய சிந்தனையில் ஆழ்த்தி தனது ரயில்வே அமைச்சர் பதவிக்கான கடமைகளைச் செய்யாத நிலைமையை ஏற்படுத்தியது.மார்ச் மாதம் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முழுநேரமும் தனது மாநிலத்தில் செலவிட்டாரே தவிர, ரயில்வே அமைச்சகத்துக்கு வந்தாரா என்பதேகூட சந்தேகம்தான். வெற்றி பெற்று முதல்வரானதும், அவர் இனி இந்த அமைச்சர் பதவியைத் தொடரப் போவதில்லை என்று வெளிப்படையாக, சட்டப்பூர்வமாக உறுதியான பிறகும், மே 13-ம் தேதி முதல் சுமார் இரண்டு மாத காலம் எந்த மாற்றமும் செய்யாமல், ரயில்வே அமைச்சரை மாற்றாமல் வெறுமனே வேடிக்கை பார்த்த பெருமை நமது பிரதமர் மன்மோகன் சிங்கைச் சாரும்.மம்தா பானர்ஜி தன் பொறுப்பை உணர்ந்து, இந்த அமைச்சர் பதவியை தன் கட்சியைச் சேர்ந்த மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகியிருந்தாலும்கூட நிர்வாகத்தில் ஏற்பட்ட மெத்தனப் போக்கு ஓரளவு குறைந்திருக்கும். ஆனால், அதையும் அவர் செய்யவில்லை. ரயில்வே துறை முற்றிலுமாகச் சீர்கெட்ட பிறகு இப்போதுதான் ரயில்வே அமைச்சர் பதவியைத் துறக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.ரயில்வே துறையில் மிக முக்கிய பொறுப்புகளுக்கான பதவிகளில் சுமார் 2 லட்சம் பதவிகள் காலியாக, நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணி நியமனங்களுக்கான உத்தரவுகளைப் போடாமல், கோப்புகள் கிடப்பில் உள்ளதற்குக் காரணம் அமைச்சர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான். இப்பணிகளில் மிகவும் அதிகமாக காலியாக உள்ள பணிகள் எதுவென்றால், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் தொழில்பிரிவுகளில்தான்.அதிகாரிகளை அந்தந்தப் பதவிகளில் நிரப்பிவிட்டால் போதுமா, விபத்து குறைந்துவிடுமா என்று கேட்கலாம். அதிகாரிகளை நியமித்து, சரியாகப் பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கினால் நிச்சயமாக விபத்துகள் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. கல்கா பயணிகள் ரயில் விபத்து நடந்தது குறித்து இன்னும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள் என்ற நிலையிலும், அந்த வழித்தடத்தில் அடிக்கடி பயணிக்கும் "தினமணி'யின் தில்லி வாசகர் ஒருவர் தெரிவிக்கும் கருத்தையும் சிந்திக்க வேண்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அடிக்கடி ரயில் விபத்து அல்லது ரயில் தடம்புரளுதல் ஏற்படக் காரணம், கட்டுப்பாடே இல்லாமல் அபாயச் சங்கிலியை இழுத்தல் (செயின் புல்லிங்) நடைபெறுவதுதான் என்கிறார் அவர். பல வடமாநிலங்களில் ரயிலில் அபாயச்சங்கிலியை இழுத்த நிகழ்வுகளுக்கான பதிவேட்டில் இவை பதிவு செய்யப்படுவதும் இல்லை என்கிறார். இதை முறையாகப் பதிவுசெய்து அந்தத் தடத்தில் கூடுதல் போலீûஸ அனுப்பி, தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வராதவரையிலும் இந்த விபத்துகள் தொடரும் என்கிறார் அவர்.தமிழ்நாட்டில், அபாயச் சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தப்படுமேயானால் அந்தப் பெட்டிக்கு ரயில்வே ஊழியர் வந்து யார் இழுத்தது என்று விசாரிப்பார். காரணம் பதிவு செய்யப்படும். காரணம் சரியில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் ரயில்களை அவரவர் வேண்டிய இடத்தில் நிறுத்துவதற்காக அபாயச் சங்கிலியை இழுப்பது என்பது மிகமிக சகஜம். ஒரு ரயில் வேகமாகச் செல்லும்போது இவ்வாறு சங்கிலியை இழுக்கும்போது, தண்டவாளம் சரியாகப் பொருத்தப்படாமல் பலவீனமாக உள்ள இடமாக இருந்தால், தண்டவாளம் விலகி ரயில் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.இந்த வேளையில் தில்லி வாழ், ரயில்வே உயர் அதிகாரி ஒருவர், ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளிக்கும்போது, ""சரக்கு ரயில்களில் எவ்வளவு டன் எடை சரக்கு ஏற்றப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல், அதைக் கவனிக்க ஆளில்லாமல், நிறைய எடையுள்ள பொருள்கள் ஏற்றப்படுவதால், தண்டவாளங்கள் விரைவில் வலுவிழந்து போகின்றன. அதனால்தான் ""இதுபோன்ற ரயில் தடம்புரளுதல் நிகழ்கின்றன'' என்று கூறியுள்ள கருத்தையும் ரயில்வே நிர்வாகம் கவனிக்க வேண்டும்.மேலும், ரயில்வே துறையில் தண்டவாளங்களை இணைக்கும் ஸ்லீப்பர் எனப்படும் குறுக்குக்கட்டைகள் முன்பு மரத்தால் ஆனவை. இப்போது கான்கிரீட் பலகைகளால் நிறுவப்படுகின்றன. இதைச் செய்து தருவது தனியார் நிறுவனங்கள். இதில் மிகப்பெரும் ஊழல் நடப்பதாகவும், இதனால் தரமற்ற ஸ்லீப்பர்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இரு தண்டவாளங்களைத் தாங்கிப் பிடிக்கும் இவை வலுவற்றுப்போனால் விபத்து நேரிடுவது தவிர்க்க முடியாதது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர், இத்தகைய அடிப்படையான விவகாரங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் ரயில் விபத்துகளைத் தவிர்க்கலாம். 2009-10-ம் ஆண்டில் ரயில் விபத்துகளில் பலியானோர் 225 பேர். இந்த நிதியாண்டில் ஜனவரி வரை ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 336-ஆக உயர்ந்துவிட்டது. இந்த வேதனையை சாதனையாகக் கொள்ள முடியாது என்பதை ரயில்வே அதிகாரிகளும் அமைச்சகமும் உணர்ந்தால்தான் விபத்துகள் குறையும்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

சிவத்தம்பி இறுதி நிகழ்ச்சி

அமைச்சர் பதவிகளைத் திமுக கேட்கவில்லை: கருணாநிதி

கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாருக்கும் அமைச்சர் பதவி தர மறுத்து விட்டதால் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறாரா? சீ! சீ! இந்தப்பழம் புளிக்கும் என்று ஒதுக்கி இருக்க வாய்ப்பில்லை. வேறு யாருக்கும் தகுதி  இல்லை எனக் கேட்கவில்லையா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அமைச்சர் பதவிகளை திமுக கேட்கவில்லை: கருணாநிதி
First Published : 12 Jul 2011 03:10:12 PM IST

Last Updated : 12 Jul 2011 03:18:50 PM IST
சென்னை, ஜூலை.12: ஆ.ராசாவும், தயாநிதி மாறனும் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு மாற்றாக திமுகவைச் சேர்ந்த யாரையும் மத்திய அமைச்சராக்குமாறு கோரவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது திமுக சார்பில் யாராவது அமைச்சராக்கப்படுவார்களா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்களிடம் கேட்டபோது இல்லை என்று அவர் பதிலளித்தார்.திமுகவின் தயக்கத்தால் அமைச்சரவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாதா என்று அவரிடம் கேட்டதற்கு, கோவையில் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் இந்த விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்றார் அவர்.காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பின்போது 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி விவகாரம் குறித்து பேசினீர்களா என்று கேட்டதற்கு, அந்த விவகாரம் குறித்து பேசவில்லை என கருணாநிதி பதிலளித்தார்.
கருத்துகள்

MINISTERS OF STATE: Shri Sudip Bandopadhyaya : Health and Family Welfare Shri Charan Das Mahant : Agriculture and Food Processing Industries Shri Jitendra Singh : Home Affairs Shri Milind Deora : Communications and Information Technology Shri Rajiv Shukla : Parliamentary Affairs The Prime Minister has further recommended that the portfolios of the following Ministers may be changed as indicated below: CABINET MINISTERS: Shri Vilasrao Deshmukh : Science and Technology and Earth Sciences Shri M. Veerappa Moily : Corporate Affairs Shri Anand Sharma : Commerce and Industry; and additional charge of Textiles Shri Pawan Kumar Bansal : Parliamentary Affairs and additional charge of Water Resources Shri Salman Khursheed : Law and Justice and additional charge of Minority Affairs MINISTERS OF STATE: Shri E. Ahamed : External Affairs and Human Resource Development Shri V.Narayanasamy : Personnel, Public Grievances and Pensions; and Prim
By indiresan
7/12/2011 4:08:00 PM
there is no other alternative from MK family. also they can't find the slave from their party. Please DMK volunteers, under stand Mr.MK policy.
By sivakumar
7/12/2011 3:35:00 PM
கேட்டாலும் தர மாட்டார்கள் .... வடை போனது போனதுதான் .....
By ஹரி
7/12/2011 3:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 11 ஜூலை, 2011

Ilakkuvanarin padaippumanigal 10: இலக்குவனாரின் படைப்பு மணிகள் : 10. ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக்கொண்டது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் : 10. ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக்கொண்டது.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : July 11, 2011

“பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர்.  பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துக்களோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடி வெழுத்துக்களையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துக்களைத் திருத்தி(த் தம் எழுத்துகளை) அமைத்தனர்” என்று திரு. எல்லிசு கூறுகின்றார்.
-          செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(தொல்காப்பிய ஆராய்ச்சி:  பக்கம்: 39)

thamizh kadamaigal 47.:தமிழ்க்கடமைகள் 47. வணிகத்தின் மையப்பகுதியாகத் தமிழகத் துறைமுகங்கள் விளங்கின

தமிழ்க்கடமைகள்

47. வணிகத்தின் மையப்பகுதியாகத் தமிழகத் துறைமுகங்கள் விளங்கின

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : July 11, 2011
..
உணவு உற்பத்தி மட்டுமின்றி தமிழகத் துறைமுகங்களில் நடைபெற்ற வெளிநாட்டு வாணிகமும் தமிழகத்தை நாகரிக முதிர்ச்சிக்கு இட்டுச் சென்றது. மத்திய கிழக்கு நாடுகளுடன் கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே (கி.மு.1000 ஆண்டளவில்) தமிழகத் துறைமுகங்கள் வாணிக நடவடிக்கையில் இணைந்திருந்தன. மத்தியதரைப் பிரதேசம், ஆப்பிக்கா, தென்கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றிற்கு இடையே நடைபெற்ற வணிகத்தின் மையப்பகுதியாக இவை விளங்கின. இங்கே கிடைத்த மூலப்பொருள்களும் தமிழத்தை முன்னிலைக்கு இட்டுச் சென்றன. வணிக நடவடிக்கையினைத் தொடர்ந்து கலை பண்பாட்டுப் பரிமாறல்களுக்கு வழி பிறந்தது. இதனால் விவசாய சமூகமாக இருந்த தமிழகச் சமூகம், வாணிகச் சிறப்பால் பிற நாகரிகங்களின் கலை-பண்பாட்டுப் பரிமாற்றங்களுடன் உள்ளாகும் வாய்ப்பைப்பெற்றது. இத்தகைய பங்கினை வகித்தது என வாதிடுவோருமுளர்.
- பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:
பண்டைய தமிழகம் பக்கம். 31

New medical insurance policy - C.M.announcement: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: முதல்வர் செயலலிதா அறிவிப்பு

பாராட்டுகள். திட்டத்தால் பயன் பெறக்கூடியவர்களுக்கானவருவாய் வரம்பையும் உயர்த்த வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் திட்டம் இருக்க வேண்டும்.
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

First Published : 11 Jul 2011 04:46:07 PM IST

Last Updated : 11 Jul 2011 04:48:47 PM IST

சென்னை, ஜூலை 11- தமிழகத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை.  மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே தான், “அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்” என்று 2011-12 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன்.  தற்போதைய காப்பீட்டுத் திட்டம் 2011, ஜுலை மாதம் 5 ஆம் நாள் உடன் முடிவடைந்தது.  எனது அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமையும் :-1.    முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு,  இந்த புதியத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு  ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்படும்.  அதாவது, நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவினை பெற இயலும்.  2.     முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும்.  3.    சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும் அரசு மருத்துவமனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில், ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை. 4.    நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில்  வழங்கப்படும். இந்த வகையிலான கட்டணங்களை பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. 5.    அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும்.  இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படாத ஒன்றாகும். 6.    அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன்  செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது போல் அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.  மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.7.    இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்திற்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி / சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும். இதனால் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவதற்குரிய சூழ்நிலை உருவாகும்.இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில், உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக வழங்கும். இவ்வாறு, இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை எனது அரசு உறுதி செய்யும்.இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

kannadars supporting eezha thamizhar - meenakam news: ஈழத் தமிழர்களுக்குத் தோள் கொடுப்போம் -மீனகம் செய்தி


ஈழத் தமிழர்களுக்கு தோள் கொடுப்போம்” – கன்னட மனித உரிமை அமைப்புகள் உறுதியேற்பு [படங்கள்]

தமிழகத்தைச் சேர்ந்த சேவ் தமிழ் இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்), கண. குறிஞ்சி (PUCL) , அமரந்தா (இலத்தின அமெரிக்க நட்புறவு அமைப்பு), ஆகியோரின் முன்னெடுப்பின் விளைவாய் ,கடந்த ஜூன் 2ஆம் தேதி பெங்களுருவில், கர்நாடக, ஆந்திர , கேரள, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி, “போர்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தினைத்” தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு(Forum Against War Crimes and Genocide – Karnataka State Committee), சார்பில் ஜூலை 2, பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவை வழங்கினர்.
மன்றத்தின் கர்நாடகக் குழுவில்: மக்கள் சனநாயக முன்னணி(PDF), தலித் சுயமரியாதை இயக்கம்(DSR), பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்(Pedestrian Pictures), கர்நாடக மாணவ அமைப்பு(KSO), கர்நாடக ஜன சக்தி & கர்நாடக வித்யார்தி வேதிகே, சமதா மகிள வேதிகே (All India Progressive Women’s Association), புதிய சோஷலிச மாற்று – Tamils solidarity, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு(NCHRO) மற்றும் அனைத்து கர்நாடக தமிழ் அமைப்புகள் உள்ளன.
மாலை 4:30 மணியிலிருந்து 8:30 வரை நடந்த நிகழ்வில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு முழுவதும் கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வெளிப்படும் புகைப்படங்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வை பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்-ஐ சேர்ந்த திரு.நாராயணன் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் தொடக்கத்தில், சேனல்-4 செய்தி தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள் ‘ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
தொடர்ந்து மன்றத்தை அறிமுகம் செய்து மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த திரு. நகரிகரே ரமேஷ் பேசினார்.
’2009 மே 18, 19-ல் நடந்த நிகழ்ச்சிகள் மனித உரிமை ஆர்வலர்களின் மனங்களை மட்டும் வேதனைப் படுத்துவதல்லாமல் ஒட்டு மொத்த மனித குலத்தையும் உறைய வைப்பதாக இருக்கின்றது. இது தமிழர்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல. இதுமாதிரியான ஒரு கொடூரம் நம் கண்முன் நடந்தும் கூட நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப்போகிறோமா?, நாசிக்கள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய யூதர்கள் மீதான இனப்படுகொலை என்பது கடந்தகாலம். ஆனால் இன்று நம் கண்முன்னே நிகழ்காலத்தில் ஒரு இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தியுள்ளது. அந்த இலங்கை அரசுக்கு இந்திய அரசும் ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இலங்கை பாரதப் பண்பாட்டுடன் தொடர்புடையது. எனினும் இந்திய மக்கள் மௌனமாக இருந்தனர். தற்போது மக்கள் பேச ஆரம்பித்துள்ளார்கள். போர் முடிவுற்ற நிலையிலும் தமிழ் மக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அங்குக் கொல்லப்பட்ட மக்களை மீண்டும் உயிருடன் கொண்டு வர இயலாது. ஆனாலும், அங்குள்ள மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இலங்கை அரசு மக்களை ஆள்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. இந்தக் குற்றங்களுக்காக முன்னாள் படைத்தளபதி பொன்சேகாவும் விசாரிக்கப்பட வேண்டும். இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்துவதும் இதற்கு எதிராக போராடுவதுமான கடமை நம் எல்லோருக்கும் உள்ளது.
போர் நடந்தபோதும் அதற்குப் பின்னும் நடந்த கொடுமைகளுக்கு நாம் நியாயம் கோரவேண்டும். இந்த நோக்கத்துடனே இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் பற்றி உலக அரங்கில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காக இத்தகைய பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்’ என்றார்.
கர்நாடகாவில் முக்கிய எழுத்தாளரும், சுயநிர்ணய உரிமை போராட்டங்களுகு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ஜி. இராமகிருஷணன், அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
“சேனல்4-ன் ஆவணப் படத்தைப் பார்த்த பின்பு மொழி தோற்றுப்போய்விட்டது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் மத்தியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது ‘இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். எனவே இனி அமைதியைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்’ என்றார். இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதைப் பற்றி அவர் குறிப்பிடவே இல்லை. உலக வல்லரசுகள் ‘ஒன்றாக இருக்கும் நாட்டை இரண்டாகப் பிரிப்பதன் மூலமும், இரண்டாக இருக்கும் நாடுகளை ஒன்றாக மாற்றுவதன்’ மூலமும் பேரழிவுகளை உருவாக்கியுள்ளன, உண்டாக்கி வருகின்றன.
ஒரே நாடாக இருந்த இந்தியாவை இரண்டாகப் பிரித்து நாசம் செய்தது இங்கிலாந்து. அய்ரோப்பியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன் இலங்கையில் தமிழ் மக்களின் அரசும், சிங்கள மக்களின் அரசும் இருந்தன. இவ்வாறு இரண்டு நாடுகளாக இருந்ததை ஒரே நாடாக மாற்றி இலங்கையை நாசம் செய்தது இங்கிலாந்து.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் எந்த நாட்டின் மீது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. போர் முடிந்த இந்த நிலையிலும், இலங்கையில் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள, இலங்கைக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. இலங்கை அரசு சட்டத்திற்கு புறம்பான அவமானகரமான செயல்களை எல்லோரும் அங்கீகரிக்கும்படி சட்டத்தின்மூலம் செய்துவருகின்றது. இலங்கை அரசும் இராணுவமும் செய்த கொடுமைகளை அம்பலப்படுத்த வேண்டும். இலங்கை அரசு நடத்தும் விசாரணையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஐநாவின் குழு பற்றிய இலங்கை அரசின் பதிலும், அந்தக் குழுவை இலங்கைக்கு அனுமதிக்காததுமே அதன் குற்றத்தைக் காட்டுகின்றது.
இலங்கையிலிருக்கும் பௌத்த சன்னியாசிகள் புத்தருக்குக் கௌரவம் தரும் எந்தச் செயலையும் செய்யவில்லை. உலகில் உள்ள எல்லா மதங்களும் ஒன்று போலவே இருக்கின்றன. சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமசதுங்கா ஒரு சிங்களர். இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு நெருக்கமானவர். இருந்தும், இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்தார். அந்தக் காரணத்திற்காகவே அவர் கொல்லப்பட்டார். ஐநா பரிந்துரைக் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: போரில் 40000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை தேவை, அரச பயங்கரவாதத்திற்கு முடிவு வேண்டும் உள்ளிட்டவை. இலங்கையில் இன்றும் நிலவுகின்ற அச்ச சூழ்நிலையை மாற்ற வேண்டும். ருவாண்டாவிலும், செர்பியாவிலும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அமெரிக்காவோ அல்லது அமெரிக்க ஆதரவு நாடுகளோ புரிந்த போர்க்குற்றங்களுக்கு விசாரணை நடத்தப்படுவது இல்லை.
கம்போடியாவின் ஆட்சியாளர்களுக்கு சீனாவும் ரஷ்யாவும் ஆதரவு அளித்தன. ஆனால், கம்போடிய மக்கள்தான் விசாரணை தேவை என்று கூறினார்கள். இன்று இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்பதில் சந்தேகமில்லை. இலங்கைத் தீவு அமைந்துள்ள இயற்கையான புவியியலைப் பயன்படுத்தித்தான் இலங்கை அரசு புலிகளை அழித்தது. இங்கு காட்டப்பட்டுள்ள சேனல்4 ஆவணப்படத்தை இந்தியப் பிரதமருக்குக் காண்பிக்க வேண்டும். இலங்கை அரசைப் போர்க்குற்றத்திற்காகவும், இன அழிப்புக் குற்றத்திற்காகவும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐநாவில் இந்தியா வலியுறுத்தவேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் அது அயோக்கியத்தனமாகும். இலங்கையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இலங்கையில் தமிழ்மக்கள் முள்வேலிக்குள் அடைத்து வைக்க்கப்பட்டுள்ளதைப் பார்த்தும் இந்தியா வெட்கமில்லாமல் செயலாற்றிவருகின்றது. இவ்வாறு வெட்கப்படாமல் இருக்கும் தன்மையைப் பற்றி இந்தியர்கள் அனைவரும் இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
இலங்கையில் தம் உரிமைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்” என்று இராமகிருஷ்ணன் பேசி முடித்தார்.
இதைத் தொடர்ந்து, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்(டப்ளின், அயர்லாந்து) மற்றும் ஐநா பரிந்துரைக் குழுவின் அறிக்கை குறித்து, பெங்களூரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு. பால் நியூமன் விரிவான உரையாற்றினார்.
”போரின்போது இலங்கை இராணுவம் பள்ளிக்கட்டடங்கள், மருத்துவமனைகள், மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது திட்டமிட்ட வான்வெளித் தாக்குதல்கள் நடத்தியதை ஐநா அறிக்கை உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்த அறிக்கை, இலங்கையின் இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டுகிறது என்பதை மன்னார் பகுதி பிஷப். ராயப் ஜோசப் அவர்களின் அறிக்கை தெளிவாக்குகிறது. அக்டோபர் 2008 அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிளிநொச்சி, வன்னி பகுதியில் வாழ்ந்தவர்கள் 4,29,059 பேர். ஜூலை, 2009 ஐநா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தடைந்தவர்களின் எண்ணிக்கை 2,82,380. இதன்படி 1,46,679 பேர் போரில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இந்த மிகப்பெரிய மனிதப் படுகொலையை நடத்திய இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று பேசினார்.
பெங்களூரு சட்டப் பல்கலைக் கழகத்தில் கெளவரவப் பேராசிரியராக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலரான திரு.ஹரகோபால் அவர்கள் ‘அரச ஒடுக்குமுறையில் இலங்கையின் போர் மாதிரி’ (Sri Lankan Model of War) என்ற தலைப்பில் பேசினார்.
”இரண்டாம் உலகப்போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான வன்முறைகளால் உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அதனால்தான் மனித உரிமைகளைப் பாதுகாக்க அது தொடர்பான சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட்டன. இப்படி இருக்கும்போது, மனித உரிமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கிவிட்ட இலங்கைப் போருக்குப் பிறகு, அதே நாட்டில் 44 நாடுகள் ஒன்றுகூடி இலங்கையின் வெற்றியைப் பாராட்டவும் வாழ்த்தவும் செய்திருக்கின்றன. ‘இலங்கை பின்பற்றிய அணுகுமுறை மற்ற நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டும்’ என்றும் கூறியிருக்கின்றன. இது போரை விட மிகவும் கவலைக்குரியது; இதயத்தை நொறுக்குவது.
‘தென் ஆப்பிரிக்காவில் நடந்தது போன்று வேறு எங்கும் நடக்கக் கூடாது’ என்றார் நெல்சன் மண்டேலா. ஆனால் இலங்கையில் இன ஒடுகுகுமுறையும் அதன் கொடூரங்களும் நடந்தேறி, அது ஒரு இன மக்களால் கொண்டாடப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இதற்கு எதிராகச் செயல்பட்டிருக்க வேண்டிய ஐநா அமைப்பு எந்த அதிகாரமும் அற்ற ஒரு வெற்று அமைப்பாக இருக்கிறது.
‘போபால் விசவாயு துயர சம்பவம்’ ஒரு விபத்தென்றால் பரவாயில்லை, ஆனால் ‘விசவாயு கசிந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்’ என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மக்கள்மீது நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை ஆகும். அதுபோல இலங்கை அரசும் ‘அரசுக்கு எதிராக போராடுபவர்களை, எப்படி அழித்தொழிக்கலாம்’ என்ற ஒரு பரிசோதனையை இந்தியா உட்பட மற்ற சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு நடத்திக்காட்டியிருக்கிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா தனக்கு ஆதரவாக இருக்கும் துணிச்சலில்தான் இந்த இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தியுள்ளது.
தமிழக அரசு, இந்திய அரசு, இந்திய இராணுவம், உளவுத்துறை(RAW), அமெரிக்க உளவுத்துறை(CIA) என எல்லோரும் சேர்ந்தே இந்தக் கொடூரமான பரிசோதனையை இலங்கையில் நடத்தியுள்ளார்கள். இது ஏகாதிபத்திய முதலாளித்துவம், ஊழல் மயம் இவற்றின் கூட்டணியால் நடந்தேறியுள்ளது.
இவற்றுக்கான காரணங்கள் 1970 களில் ஆரம்பிக்கின்றன. அப்போது அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுகிறது. அமெரிக்க அரசு நிலைதடுமாறிப் போகின்றது. தன்னுடைய ”வளர்ச்சி மாதிரி” யை உலகெங்கும் திணிப்பதன் மூலமே தன் இருத்தலைத் தக்க வைக்க முடியும் என்று செயல்படத் தொடங்குகிறது. உலக வங்கி உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் இயக்க ஆரம்பிக்கின்றது. அதைத் தொடர்ந்து வந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா ஒரு ‘ஒற்றை ரவுடி’யாக உருவெடுக்கிறது. இத்தகைய அமெரிக்கா தனது 400 வருட வரலாற்றில் மனித குல வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. அனைத்துலக சந்தையைக் கைப்பற்றும் ஒரே நோக்கத்துடன் பல்வேறு போர்களை நடத்தியது. ஈராக் மற்றும் ஆப்கனில் தன் படைபலத்தை நிறுத்திக்கொள்ளும் நோக்கத்தில் போர்களை நடத்திவருகிறது.
முதலாளித்துவம் தன் வளர்ச்சி மாதிரியை எல்லா சமூகங்களின் மீதும் திணிக்கப்பார்க்கின்றது. ஆனால் ஒவ்வொரு சமூகமும் தனக்கே உரித்தான பொருளியல் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ளன. சான்றாக இஸ்லாம் மூலதனக் குவிப்பை அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்வதில்லை. வட்டிமுறையைக் கடைபிடிக்காதது, வருமானத்தில் 6-ல் ஒரு பங்கை ஏழைகளுக்கு வழங்குவது போன்ற கொள்கைகளைக் கொண்டுள்ளது.
வெளியில் இருந்து திணிக்கப்படும் முதலாளித்துவ வளர்ச்சி முறைக்கும் இஸ்லாமியர்களின் பாரம்பரிய வளர்ச்சிமுறைக்கும் இடையேயான உரசலையே பயங்கரவாதம் என்று முத்திரையிடுகின்றார்கள். ஆசியாவிலுள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளின் சந்தைகளும் அமெரிக்காவிற்கு முக்கியம். தெற்காசியாவை முழுமையாகக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அமெரிக்கா இலங்கை அரசை ஆதரிக்கிறது. தனது உள்ளடக்கத்திலேயே கொடூரத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவின் வளர்ச்சி முறையை எல்லா இடங்களிலும் திணிக்க முடியாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் தமிழர்கள். தனக்கென தனித்த அடையாளம் கொண்ட இந்தத் தமிழர்களை பவுத்த சிங்களப் பேரினவாத அரசு எல்லா தளங்களிலும் புறக்கணித்து அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தியது. இதன் விளைவாகவே ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’(LTTE) இயக்கம் தோன்றியது. சேனல்4-ன் ஆவணப் படத்தைப் பார்க்கும்போது இலங்கை இராணுவத்தின் கொடூரங்கள் விளங்குகின்றன. அதே நேரத்தில் மக்கள் அஞ்சி ஓடுவதும் கதறுவதுமாக வரும் காட்சிகள், ‘விடுதலைப் புலிகள் இயக்கம் மக்களைப் போர்க்குணம் மிக்கவர்களாக தயார் செய்யவில்லையோ?’ என்ற கேள்வியை எழுப்புகின்றது.
இறந்த உடல்களைக் கூட இவ்வளவு மோசமாக இலங்கை இராணுவம் அவமதிப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு மனிதநேயம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது விளங்குகிறது.
‘ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது?’ என்ற ஒரு மோசமான முன்மாதிரியை இலங்கை அரசு நிகழ்த்திக்காட்டியுள்ளது. பங்களாதேஷ் ராணுவம் ‘இந்த முன்மாதிரியை நாங்களும் கடைபிடிக்கப்போகிறோம்’ என்று சொல்வதன் மூலம் இது தெளிவாகியுள்ளது. இது சர்வதேச ஒடுக்குமுறை அரசுகள் மனித குலத்திற்கு எதிரான ஒரு ஒட்டு மொத்தப் போருக்குத் தயாராவதையே நமக்குக் காட்டுகிறது. . மிகப்பெரிய அளவில் மனித இனத்தைக் கொன்றொழித்து நமக்கெல்லாம் ஒரு செய்தியை இலங்கை அரசு சொல்கின்றது.
‘யாரேனும், ‘ஏதாவது ஒரு வகையில் போராளிகளுக்கும் போராட்டத்திற்கும் துணைநின்றால், போராளிகளைப் போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்” ’ என்பதே அந்த செய்தி. . இந்தப் போர் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாகக் காட்சி அளிக்கின்றது. .
இதில் இன்னொரு துயரம் என்னவென்றால் இராணுவ அதிகாரத்தில் மட்டுமன்றி தகவல் பரிமாற்றத்திலும் இந்த அரசுகள் முழு ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்குள்ள ஊடகங்கள் உண்மைகளை மறைத்தும் பொய்யான செய்திகளை வெளியிட்டும் தங்களது நம்பகத்தன்மையையும் நேர்மையையும் இழந்துவிட்டன. ஒரு ஆரோக்கியமான சிந்தனையைக் கொண்ட ஒரு சமூகம் உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக ஊடகங்கள் செயல்படுகின்றன.
ஈழத் தமிழர்கள் அளப்பரிய உயிர்த்தியாகங்களைச் செய்து பெருகிவரும் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான செறிந்த படிப்பினையை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்கள். .
இதைத் தொடர்ந்து புதிய சோஷலிச மாற்று இயக்கத்தைச் சேர்ந்த திரு. ஜெகதீஸ், தமிழர்களின் 60 ஆண்டுகால வரலாற்றைப் பற்றி பின்வருமாரு பேசினார்.
“இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்பு தேடிச் சென்றவர்கள் அல்ல. அம்மண்ணின் பூர்வகுடிமக்கள். தமக்கான தாயகத்தைக் கொண்ட தனித்த தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அதன் அடிப்படையிலேயே சிங்கள அரசின் ஒடுக்கு முறையிலிருந்து காத்துக்கொள்ள தனிநாடு கோரி போராடினார்கள்.”
அதற்குப் பின்னர், காஷ்மீரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு. காலித் வாசிம் அவர்கள், ”காஷ்மீர்-ஈழ தேசிய விடுதலைப் போராட்டங்கள்” என்ற தலைப்பில் பேசினார். இலங்கையைப் போலவே, காஷ்மீரிலும் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் 8,000 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அயல்நாட்டு பயங்கரவாதிகள் என்று கூறி பொதுமக்களைக் கொல்வது என்பது இந்திய இராணுவத்தின் ஒரு மலிவான வணிகமாகவே மாறிவிட்டது. ஈழத்தின் போராட்டத்தையும் காஷ்மீர் போராட்டத்தையும் ஒப்பிடும் போது பின்வரும் விசயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.
Short URL: http://meenakam.com/?p=27923


--