வெள்ளி, 27 ஜூலை, 2018

தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! –புதுச்சேரி அரசிற்கு வேண்டுகோள்

அகரமுதல

       

கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நலப்பணிகளைச்செயற்படுத்துக !

தனித்தமிழ்இயக்கம்,

புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர்க்கு

வேண்டுகோள்!   


   தமிழ்ப் பணி,கலை,இலக்கியப் பண்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைக் கடந்த பல்லாண்டுகளாகப் புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. அவை வருமாறு:
  1. தொல்காப்பியர்விருது10ஆண்டுகளுக்குமேல் வழங்கப்படவில்லை.
2. சிறந்த நுால்களுக்கான கம்பன் புகழ்ப்பரிசு, நேருகுழந்தைகள் விருது, போன்றவைபலஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
  1.  புதுச்சேரி எழுத்தாளரகளின் நுால்கள் நுாலகங்களுக்கு வாங்கப்படவில்லை.
  2.  கடந்த 25ஆண்டுகளாக ஒரு புதிய கிளைநுாலகம்கூடத் திறக்கப்பட வில்லை.
5. இருக்கும் நுாலகங்களுக்கு நுாலகர்கள் அமர்த்தப்படவில்லை.
  1. உரோமன் உரோலந்து பொதுநுாலகம் நீண்டகாலமாக மூடப்பட்டுக் கிடக்கிறது
7. ஆண்டுதோறும் புதுச்சேரி எழுத்தாளர்களுக்கு அவர்களின் கையெழுத்துப் படிகளை நுாலாக்குவதற்கு உதவித்தொகை வழங்கப்படுவதும் கடந்த எட்டு ஆண்டுகளாக நிறுத்தப் பட்டுள்ளது.  அதை  வழங்க வேண்டும்
  1. கடந்த பல ஆண்டுகளாக நுாலகக்கண்காட்சி நடத்தப்பட வில்லை.
9 .புதுச்சேரி அரசு வழங்கிவந்த கலைமாமணி விருதுகள் வழங்கப் படவில்லை.
  1. 21 அறிஞர்களுக்குத் தமிழ்மாமணி விருது அறிவிக்கப்பட்டு ஓராண்டைத் தாண்டிய பின்னரும் அவ்விருது வழங்கப்படவில்லை. அவ்வறிப்பால் எதிர்பார்ப்பில் இருந்த மிகவும் மூத்த அறிஞர்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளனர்.
இவற்றை வற்புறுத்திப் பலமுறை பல்லாண்டுகளாக அறிஞர்கள் பலவகையான வேண்டுகோள் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் அறிக்கைகள் வெளியிட்டும் எந்தப் பயனும் இதுவரை விளையவில்லை.
செயல்முனைப்பும் ஆர்வமும் கொண்ட தாங்கள் இவற்றை நிறைவேற்றிப் புதுச்சேரிக்கு நேர்ந்துள்ள பழிகளைத் துடைப்பீர்கள் என்னும் நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோள்களைத் தங்களிடம் அளிக்கிறோம்.
இவண்
.தமிழமல்லன்
தலைவர்தனித்தமிழ்இயக்கம்
முகவரி-66 மா.கோ.தெரு தட்டாஞ்சாவடி புதுச்சேரி-605009
9791629979  vtthamizh@gmail.com           

இலக்கியச் சிந்தனை & குவிகம் இலக்கியவாசல்

அகரமுதல

ஆடி 12, 2049  சனிக்கிழமை   28.07.2018

இலக்கியச் சிந்தனை

குவிகம் இலக்கியவாசல்

தமிழ் ஆய்வுகள் – காலமும் களமும்

முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி

கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

அகரமுதல

ஆடி 11, 2049  வெள்ளிக்கிழமை   27.07.2018 
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  
இலக்கியவீதி  அமைப்பும்,
 சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும்
இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு


முன்னிலை :  இலக்கியவீதி இனியவன்
தலைமை :  திரு மெய் . உரூசுவெல்ட்டு
(தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை)

அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன்

 சிறப்புரை  : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி

  கவிஞர் சீவபாரதி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் சரவணன்  
தகுதியுரை  : துரை இலட்சுமிபதி
 

செவ்வாய், 24 ஜூலை, 2018

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2018

அகரமுதல

அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராசகோபால்)

நினைவுச் சிறுகதைப் போட்டி

(புரவலர்: அமரர் செம்பியன் செல்வன் குடும்பத்தினர்)


முதற் பரிசு: உரூ.5,000/-
இரண்டாம் பரிசு: உரூ.3,000/-
மூன்றாம் பரிசு:  உரூ.2,000/-
ஏனைய ஏழு சிறுகதைகளுக்குப் பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப் பெறும்.
போட்டிக்கான விதிகள்:
சிறுகதைகள் முன்னர் எங்கும் வெளியிடப்படாதனவாக இருக்க வேண்டும்.
போட்டியிடுபவர்கள் தங்கள் பெயர், முகவரி விவரங்களைத் தனியாக இணைக்க வேண்டும்.
அஞ்சல் உறையின் இடப்பக்க மூலையில்
‘அமரன் செம்பியன்செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ எனக் குறிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் அலுவலகம்
38, 46 ஆவது ஒழுங்கை
கொழும்பு 06.

போட்டி முடிவு நாள்:  புரட்டாசி 14, 2049   / 30.09.2018

முடிவு நாளுக்குப் பின்னர் வரும் சிறுகதைகள்
போட்டியில் சேர்க்கப்பட மாட்டா – ஆசிரியர்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40

அகரமுதல

 ஆடி 10, 2049 (வியாழக்கிழமை) 26.07.2018 

மாலை 5.45 மணி

கிளை நூலகம்,

7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,                       

சாபர்கான் பேட்டை, சென்னை  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40

தலைப்பு:     கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்
சிறப்புரை : ஆர். வெங்கடேசு
(இதழாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கட்டுரையாளர்)

அன்புடன்
நண்பர்கள் வட்டம் 

தொடர்புக்கு :

அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205

திங்கள், 23 ஜூலை, 2018

யாப்பரங்கம் -2 : பாவலர்களின் உயர்வு

அகரமுதல


யாப்பரங்கம் -2 : பாவலர்களின் உயர்வு 

  

ஆறடிஆசிரியப் பா
நிலைமண்டில ஆசிரியப் பா இயற்றுங்கள்.
‘வெல்லும் துாயதமிழ்’ வெளியிடும்.
ஓர் அடியில் நான்கு சீர்கள் இருப்பதுபோல் ஆறடிகளிலும் நான்கு நான்கு சீர்கள் அமைத்து இயற்றப்படுவது நிலைமண்டில ஆசிரியப் பா இயன்றவரை எதுகை மோனைகளை மிகுதியாகப் பயன்படுத்திப் பாடலைப்புனையுங்கள்.
பாடலின் இறுதிச்சீர் ஏ,என்,ஓ,க என்று முடிய வேண்டும்.

தலைப்பு – பசுமைச் சாலை

ஆவணி 04, 2049   /  20.8.2018க்குள் கிடைக்குமாறு அனுப்புக.

தொடர்பு எண் 97 91 62 99 79
மின்அஞ்சல் vtthamizh@gmail.com
முகவரி
முனைவர் க.தமிழமல்லன்    
66,மா.கோ.தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-6050