சனி, 12 ஜூலை, 2025

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!? – இலக்குவனார் திருவள்ளுவன் இணைய உரை

 




📚 திருக்குறள் கற்போம், கற்பிப்போம்! -அவையின்

ஆனி 29, 2056 முதல் ஆடி 06, 2056 முடிய

13.07.2025 முதல் – 22.07.2025 முடிய

📅 நாள்: ஆனி 29, 2056 / 13.07.2025 ஞாயிறு

📍 இடம்: தமிழ்த்தேசம் (Clubhouse)

───────────────

எனும் தலைப்பில்

ஆட்சித் தமிழறிஞர்

அவர்கள் நம்மிடம் உரையாற்றுகிறார்

───────────────

🌍 வாருங்கள், தோழர்களே!

கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!

நிகழ்வில் இணைந்து சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். 

───────────────

🙏 நன்றி!

121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!



(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி)

  • அப்படியெல்லாம் இல்லை. பிறரும் பேசி வருகின்றனர். சான்றாகத் திருநெல்வேலியில் சட்டமன்றத் தலைவர் அப்பாவு,  நிகழ்ச்சி ஒன்றில், தமிழகத்தில் 96 விழுக்காடு இந்துக்களுக்குக் கல்வியை மறுத்ததுதான் சனாதனம் என்று பேசியுள்ளார். எடுத்துக்காட்டுகளையும் கூறியுள்ளார்.

“சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம்.  என்று பேசியுள்ளார். மேலும்,

 1912-இல்   பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர் 6% பட்டம் பெற்றிருந்தார்கள். இதுதான் அன்றைய கல்வி முறை; இதுதான் அன்றைய சமூக நிலை. 125 ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் இருந்து படிப்பதற்காகச் சென்னை செல்வதாக இருந்தால், அங்கே இருந்த மைசூர் கபே என்ற விடுதியில் உணவருந்த, தங்க அனுமதி கிடையாது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு விடுதி தேவைப்பட்டது. அந்த 4 விழுக்காட்டைத் தவிர்த்துப் பார்த்தால் மீதமுள்ள 96 விழுக்காட்டினரும் இந்துக்கள்தான். அவர்களுக்குத்தான் கல்வி மறுக்கப்பட்டது; விடுதி மறுக்கப்பட்டது; விடுதியில் சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது.  ” என்று சனாதனக் கொடுமையை விவரித்துள்ளார்.

தமிழ் நாட்டளவிற்கோ தென்னாட்டளவிற்கோ முற்போக்குச் சிந்தனை இல்லா வட நாட்டில் உதயநிதியின் இந்தப் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சங்(க) பரிவார் சக்திகள் உதயநிதியின் பேச்சுக்குக் கடும்  எதிர்ப்பினைப் பரப்பினர். இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்துசா, “உதயநிதி 80 விழுக்காட்டு இந்துக்களை இனக்கொலை செய்யத் தூண்டி விடுகிறார்” என்று மக்களைத் தூண்டி விட்டார். மோடி முதலானோர் இதைத் தேர்தல் பரப்புரைக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

 உதயநிதி சனாதனத்தை ஒழிக்கக் கோரினாரே தவிர, சனாதனிகளையல்ல என்பதை அறிந்தும் இவ்வாறு கூறி வருகின்றனர். மகந்த பரமஃகம்ச தாசு என்னும் ஆரியச் சாமியார் உதயநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்கு உரூ. 10 கோடிப் பரிசு என அறிவித்தார். ஆனால் பாசக ஆதரவு ஊடகங்கள் இந்து மத்தை அழிப்பேன் என்று சொன்னதால் வந்த எதிர்வினை எனக் கூறி இதைக் கண்டிக்கவில்லை.

சனாதனத்தை ஒழிக்கச் சொல்லும் உதயநிதியை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க வேண்டுமென முன்னாள் உயர், உச்ச நீதிமன்ற நீதியர்கள், உயர் பதவி வகித்த மேனாள் படைத்துறை அதிகாரிகள் என 262 பேர் எழுத்து மூலமாக முறையிட்டனர். ஆனால் இவர்களில்  யாரும் உதயநிதி தலை கொய்யச் சொன்ன சாமியாரைக்  கைது செய்யவும் சொல்லவில்லை, கண்டிக்கவுமில்லை.

காங்கிரசு, மார்க்சியக்கட்சி, சமாசுவாதி, பகுசன் சமாசு முதலான எந்த வட இந்தியக் கட்சித் தலைவர்களும் கொலைகாரச் சாமியாருக்கு எதிராகக் குரல் கொடுக்க வில்லை.

.அந்தச் சாமியாரோ உதயநிதி தலைக்கு மட்டும் விலை பேசினார். ஆனால் ஒன்றிய நீர்வளத்துறை  அமைச்சர் கசேந்திர சிங்கு செகாவத்து,  சனாதன தரும எதிர்ப்பாளர்களின் நாக்கை இழுத்து அறுக்க வேண்டும், கண்களைத் தோண்டி எடுக்க வேண்டும் என்று கொக்கரித்தார்.  அமைச்சர் ஒருவர் மற்றோர் அமைச்சர் முன்னிலையில் இப்படிப் பேசலாமா எனக் கேட்ட யாரும் ஒன்றிய அமைச்சரின் கொலைவெறிக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை.

சனாதன ஒழிப்பு என்பது சமூகநீதியை எதிரொலிக்கும் அடிப்படைக் கருத்துரிமையாகும். ஆனால் சனாதனத்தை எதிர்ப்பாளர்களின் நாக்கை அறு, கண்ணைப் பிடுங்கு போன்ற எதிரான படுகொலைப் பேச்சுகள் எந்த உரிமையின்பாற்பட்டதும் இல்லை. மாறாக இந்துத்துவப் பயங்கரவாதம் எனலாம். இத்தகைய இனக்கொலைத் தூண்டுநர்களை எங்ஙனம் இந்துச் சமயப்பற்றாளர்கள் என்று கூற முடியும்?ஆனால் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களும் எதிர்பரப்புரையால் தடுமாறி உள்ளனர். வருணாசிரம எதிர்ப்பாளர்கள் இந்நூல் போன்று உண்மையைக் கூறும் படைப்புகளை பிற மாநில மொழிகளில் மொழி பெயர்த்துப் பரப்ப வேண்டும்.

  • (தொடரும்)

வெள்ளி, 11 ஜூலை, 2025

119/133. சனாதனம் இல்லறத்தைப் போற்றுவது என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

      11 July 2025      கரமுதல


  • இதுவும் பொய்யே!

ஆரியர்களின் குடும்ப வாழ்க்கை என்பது யாருடனும் யாரும் உறவு கொள்ளலாம் என்பதே. தமிழர்களின் குடும்ப வாழ்க்கையோ இல்லறம் என அறமாகக் கூறப்படுகிறது. மனைவியை இழிவு படுத்துவது சனாதனம். மனைவியின் சிறப்புகளைப் போற்றவதே தமிழர் நெறி. இது குறித்துத் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார், “இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்” என்கிறார்.

“மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமை திண்மை நிலை  உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று.  ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம்முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது” என விளக்குகிறார். (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 22-23) பெண்கள ஒழுக்கத்தையே வலியுறுத்தாத சனாதனம் ஆண்கள் ஒழுக்கத்தைப்பற்றிச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆடவருக்கு வேண்டிய ஒழுக்கத்தைப் பிறன் மனை விழையாமை மூலம் நாமறியலாம். பேரா.முனைவர் சி.இலக்குவனார் இது குறிப்பத்துப் பின்வருமாறு கூறுகிறார்.

” கற்பு நெறி பெண்டிர்க்குத்தானா? ஆடவர்க்கு வேண்டியதின்றோ  என வினவி ஆண்களுக்கும் கற்பு வேண்டியதுதான் என்கிறார். “ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புகளில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானோயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும் செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்” என்கிறார். (பேரா.முனைவர் சி.இலக்குவனார்வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 25-26)

எப்பிறப்பாயினும் பிரியாது வாழ்தல் வேண்டும் என்பதே தமிழர் இல்லற நெறி. இப்பிறிவியிலேயே பிறருடன் உறவு கொள்ளலாம் என்பதே சனாதனம். எது சிறந்தது என நீங்களே புரிந்து கொள்ளலாம்.

  • (தொடரும்)

வியாழன், 10 ஜூலை, 2025

117/ 133. ஏடுகளில் பிராமணர்களை உயர்த்திச் சொல்லியிருக்கலாம். அவற்றை மக்கள் பின்பற்றினார்களா?+118 வேதங்களைப் பின்பற்றலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? தொடர்ச்சி)

  1. மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மன்னர்களும் செல்வர்களும் உயர் பதவிகளில் உள்ளவர்களும் பிராமணர்களிடம் மண்டியிட்டதாக எழுதி வைத்தனர். இதைப் பார்த்த சிலரும் அவ்வாறு செய்து வருகின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்.

இராச சூய வேள்வியின்பொழுது அரசரின் வேலையாட்கள் பல வகை சுவையுள்ள இனிப்புகளையும் உணவுகளையும் இனிய பானங்களையும் பிராம்மணர்களுக்கு எக்காலமும் அளித்தனர். ஒவ்வொாரு நாளும் பிராமணர்கள் உண்டதற்கு அடையாளமான சங்கு ஊதப்பட்டது. அச்சங்கு அடிக்கடி ஊதப்பட்டதால் மக்கள் வியப்படைந்தனர்.

இராச சூய வேள்வியில் பிராமணர்களுக்குப் பரிமாறியது வேலையாட்கள் அல்லர். இரத்தினமாலைகளைச் சூடித் துலக்கப்பட்ட இரத்தினக் குண்டலங்களை அணிந்து அரசர்கள் ஆயிரக்கணக்கான பிரமாமணர்களுக்குப் பரிமாறினர். பல நாடுகளிலிருந்தும் வந்த பிராமணர்கள் கணக்கற்ற திண்பண்டங்களையும் கனிவகைகளையும் மலர்களையும் தேன்களையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்தனர்

அந்த வேள்வியில் பீசுமரும் துரோணரும் துரியோதனன் முதலான கெளரவர்களும் யாதவர்களும் அனைவரும் அடிமைகளாகப் பிராமணர்களுக்கு வேலை செய்தனர்.  தருமர் இந்த வேள்வியில் துணிகளையும் சால்வைகளையும் போர்வைகளையும் பொன் நாணயங்களையும் பொற் பாத்திரங்களையும் நகைகளையும் நிரம்பப் பிராமணர்களுக்குக் கொடுத்தார். அரசர்கள் காணிக்கை யாகத் தந்த மாணிக்கங்கள் முதலானவற்றையும் பிராமணர்களுக்கே கொடுத்தார்.

உயர்நிலை அரசர்கள், சிற்றரசர்கள் என அனைத்து நிலை அரசர்களும் பிராமணர்களுக்கு ஊழியம் செய்வதாகத் தெரிவிப்பதன் மூலம் பிராமணர்கள் யாவருக்கும் மேலானவர்கள் எனப் பாரதம் கூறுகிறது. வருணாசிரமத்தை விதைத்து வேரூன்றச் செய்ய வேண்டும் என்பதுதான் ஆரிய நூல்களின் நோக்கம்.

(அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை: இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதி)

வேதங்கள் வழிச் சனாதனக் கருத்துகள் விதைக்கும் நச்சுக் கருத்துகளில் சில வருமாறு:

பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும்.

பிராமணன் இம்சிக்த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான்.

பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அதன் மீது் மனம் வைக்கும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன். அவன்அதைச் சீரணிக்க இயலாது.

பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான்.

பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள்.

அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள்.

தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும் உலகத்துக்குச் செல்வதில்லை.

அக்கினி பிராமணர்களது வழிகாட்டி. சோமன் அவர்களின் உறவினன்.

பிராமணர்களைச் சபிப்பவர்களை அழிப்பவன் இந்திரன்.

பிராமணனை இம்சிக்கும் மக்கள் அடியோடு அழிகிறார்கள்.

பிராமணனது சரம் நாகம் போலும் நஞ்சு தோயும் அம்பைப்போலும் அதிபயங்கரமானது. அதனால், அவர்களைப் பழிப்பவனைத் துவம்சம் செய்கிறான்.

 அவி என்னும் சூரியன் தன் இருவரிசைப் பற்களின் இடையில் வைத்து அங்கிரசனது மகனான பிராமணனை நாசமாக்கும் மக்களை அரைத்துவிடுவான்.

பிராமணன் மீது துப்பும் மக்கள் முடியை உண்டு உதிர நதி நடுவே உட்காருபவர்களாவார்கள்.

பிராமணனுக்கு எதிரான நாடும் அரசும் பாழாகும்.

பிராமணனை அழிக்கும் அரசை 8 பாதங்கள் 4 கண்கள் 4 வாய்கள் 4 மோவாய்கள், 4 காதுகள் 2 காதுகள் உள்ளவள் அலறச் செய்வாள்.

பிராமணனை எந்த அரசில் இம்சை செய்கிறார்களோ  அந்த அரசாங்கம், ஓட்டையுள்ள படகில் நீர் பாய்ந்து அதனை மூழ்கச் செய்வதுபோல் துன்பம் பாய்ந்து அழிந்து விடும்.

பிராமணனை இம்சிப்பவன் இருக்குமிடத்தில் மழை பொழிவதில்லை.

இவ்வாறு பிராமணர்களை உயர்த்தும் வேதங்களை மனித நேயம் கொண்ட பிராமணர்களும் பின்பற்றத் தேவையில்லை யல்லவா?

  • (தொடரும்)

புதன், 9 ஜூலை, 2025

116/133 . வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி)

  • ஆம். ஆரிய நூல் எதுவாயினும் அதன் நோக்கம் சனாதனத்தை நிலை நிறுத்துவதுதான்; வரணாசிரமத்தைக் கட்டிக்காப்பதுதான். முதலில் இதிகாசம் என்பதைத் தமிழில் எவ்வாறு குறிக்கலாம் எனப் பார்ப்போம்.

தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். தொன்மக் கதையை இப்பொழுது கூறினால் தொன்மம் என்போமா? வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்  என்னும் நூலை நாம் தொன்மம் என்போமா? தொன்மம் என்று சொல்லப்படுவன எழுதப்படும்பொழுது தொன்மைச் செய்திகளை எழுதவில்லையே!  மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். ஆனால், மகாபாரதத்தில் வியாசரும் ஒரு கதை  மாந்தர்தானே. அப்படியானால் அவர் கால நூல்தானே இது. எனவே, தொன்மம் என்பது பொருந்தாது. காப்பியம், காவியம், பாவியம் என்பனபோன்று இதைக் கதையியம் எனலாம். இங்கே நாம் கதையியமாகிய மகாபாரதம் சிறப்பான கதையியம் இல்லை என்பதைப் பார்ப்போம்.

வியாசர், 226 முதன்மைப் பாத்திரப்படைப்புகளைக் கொண்டு கதைப் பின்னலை உருவாக்கித் திறம்பட எழுதியுள்ளார். ஆனால், இடைச்செருகல் மன்னர்களின் கைவண்ணத்தால் இந்நூல் மேலும் பல செய்திகள் சேர்க்கப்பட்டு மிகப்பெரும் கதையியமாக விளங்குகிறது.

மகாபாரதம் எழுதப்பட்ட பொழுது 8800 பாடல்கள் / சுலோகங்கள் மட்டுமே கொண்டிருந்தது. பின்னர் 24000 பாடல்கள் / சுலோகங்கள் கொண்ட கதையியமாக மாறியது. இதில் மூன்று தொடக்கங்கள் உள்ளன. எனவே மூன்று முறை பல இடைச்செருகல்களால் உருமாறி 1,00,000  பாடல்களாகப் பெருக்கப்பட்டுப் பெருங்கதையியமாக மாறியது.

குரு மரபுவழியைச் சேர்ந்தவர்கள் அற வுணர்வும் நற்பண்புகளும் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். இவர்களைக் கிருட்டிணன் எனப்பெறும் கண்ணனின் தலைமையில் பாண்டுவின் பிள்ளைகள் பல மோசடிகளைச் செய்து அழித்தார்கள் என்பதே மூலக் கதை. இதைத் தலைகீழாக மாற்றிப் பின்வந்த மகாபாரதம் உருவாக்கப்பட்டது என அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இது குறித்து அறிஞர் மக்குடானெல், “பழைய காப்பிய மரபை எவ்வாறு பிராமணச் சாதியின்கோட்பாடுகளைப் புகுத்தி மன்னரையும் மக்களையும் கவரும் கதையியமாக மாற்றுவ தென்பதைப் பிராமணர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்” என்று கூறுகிறார்.

பேராசிரியர் ஓல்சுமண்(Prof.Holtzmann) மகாபாரதம் கி.பி.900 ஆண்டுக்குப் பிறகு பிராமணர்களால் தரும சாத்திரமாக மாற்றப்பட்டது என்றும் அதில் பல முழுநூல்கள் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சி முடிவாகத் தெரிவிக்கிறார். ஆதிசங்கரர் தம் விளக்கவுரையில் வேதங்களையும் வேதாந்தத்தையும் கற்கக்கூடாதென்று தடைசெய்யப்பட்ட சாதியினர் படிப்பதற்காக மகாபாரதம் எழுதப்பட்டது என்கிறார்.

கிரேக்க வல்லுநர் தியோ கிறிசோதமசு(Dio Chrysostomos) கிரேக்கக் காப்பியமான இலியத்தின் சமற்கிருத மொழிபெயர்ப்பே மகாபாரதம் என்கிறார்.

கிரேக்கத் தொன்மங்களின் தாக்கம் நிறைந்தது என்று மகாபாரதம்பற்றி இசுபானிய நூலொன்று குறிக்கிறது. மகாபாரதம் மட்டுமல்லாமல், சமற்கிருத நூல்கள் பலவற்றிலும் கிரேக்க, உரோமானியச் செல்வாக்கு இருப்பதாக அறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர்.

இவ்வாறு மகாபாரதம்பற்றிய செய்திகளைப் பேரா.ப.ம.நா. ‘வடமொழி ஒரு செம்மொழியா’ என்னும் நூலில் அளித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக மகாபாரதக் கதை நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அவை அடைந்துள்ள கிரேக்க, உரோமானியத் தாக்கங்களையும் கதைப் பாத்திரங்களின் முறையற்ற செயல்களையும தெரிவிக்கிறார். அறிஞர் ஃபெருனாண்டோ உலுஃபு அலான்சோ(Fernando Wulff Alonso)தமது ‘மகாபாரதமும் கிரேக்கத் தொன்மங்களும்’ (The Mahabharata and Greek Mythology) என்னும் நூலில் நிறைவாகத் தாம் கண்டறிந்த உண்மைகளைக் குறிப்பிடுகிறார். அவை மகாபாரதம் பற்றிய அரிய உண்மைச்செய்திகளாக உள்ளன.

ஓமரின் காப்பியங்கள் இரண்டையும் பல கிரேக்கத் தொன்மங்களையும் மூலத்தில் படித்து அவற்றை அருகில் வைத்துக்கொண்டு அவற்றைத் தழுவி, சமற்கிருதமும் கிரேக்கமும் அறிந்த அறிஞர்களால் மகாபாரதம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அலான்சோவின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மகாபாரதம் வட இந்தியாவிலோ வடமேற்கு இந்தியாவிலோதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. வியாச பாரதம் கூறுவது உண்மையான வரலாற்று நிகழ்ச்சி என்றும் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாய்மொழிக் காப்பியமாகத் தோன்றிய கதையியமென்றும் (இதிகாசமென்றும்) அது பேரளவு கொண்ட மூல நூலென்றும்  சமற்கிருதச் சார்புடையார் சொல்லி வருவன  வெல்லாம் பெரும் பொய்கள் என்பதை இந்த ஆழமான தெளிவான மறுக்க முடியாத ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இழிகாமமான (ஆபாசமான) கிரேக்கத் தொன்மங்களிலிருந்து அவற்றை விட இழிகாமமான கதைகளைக் கற்பனை செய்து மகாபாரதம் உருவாக்கப்பட்டிருக்கிறது  என்னும் உண்மையையும் பேரா.ப.ம.நா. தெளிவுபடுத்துகிறார்.

இத்தகைய, தழுவலான, பொய்யுரையான, இழிகாமமான, நடுநிலையற்ற காப்பியத்தைத் தரமான இலக்கியமாக ஏற்றுக் கொள்ள முடியாதென்பதே சமற்கிருத இலக்கிய வரலாற்றாசிரியரின் முடிவு.

ஆரிய நூல்கள் என்றாலே வருணாசிரமத்தை வலியுறுத்துவதும் பெண்ணடிமையை உணர்த்துவதும்தான்.

புனித நூலென்று திரிக்கப்படுகிற இத் தொகுப்பில் பசுக்கள் பிராமணர்கள் ஆகியோரின் பெருமை எடுத்துச் சொல்லப்படுகிறது.

ஆரிய நூல்களுக்கு இல்லாச் சிறப்புகளை ஏற்றிச் சொல்லப்பட்டாலும் அவையாவும் மனிதநேயமற்ற  சனாதனத்தைக் கட்டிக் காப்பனவே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

  • (தொடரும்)

செவ்வாய், 8 ஜூலை, 2025

115. பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 


(சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114 தொடர்ச்சி)

நால்வருணங்களுள் பிராமணரைத் தவிர ஏனையோரைக் கீழானவராக இறைவன் கருதுவதாகத் தெரிவிக்கும் பாடல்களும் கீதையில் உண்டு. எல்லாப் பெண்களையும் கீழ் வருணத்தார் எனவும் கீழானவர்களாகவும் இழிவாகக் கூறியுள்ள நூல் எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும்?
பகவத்து கீதையின் ஆணைகள் ஒரு சார்புடையவை என்பது வெளிப்படை. எல்லா உயிர்களும் ஒத்த உயர்வுடையவை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து அவரவர்க்குரிய தொழில்களை முறையின்றி விதி்த்துப் பெண்ணினம் முழுவதையும் தரக்குறைவாகத் தாழ்த்தி வைக்கும் குமுகாய அமைப்பு எந்த விதத்திலும் எவ்வகையிலும் எக்காலத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. அதனை அறமென்று சொல்வதைச் சான்றோர் ஏற்க மாட்டார். அத்தகைய அமைப்புடைய குமுகாயத்தைக் கண்டு நல்லறிவு உடையார் அறச்சினம் கொள்வர் என்பது திண்ணம். பகவத்துகீதை பேசும் தருமம் மனித ஒருமைப்பாட்டு உணர்வுக்கு முற்றிலும் மாறானது. வள்ளுவர் சுட்டும் அறவாழ்விற்குப் பொருந்தாது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் எல்லாரையும் சமமாக மதிக்கும் அறத்திற்கு எதிரான ஒருதலைச் சார்புடைய கீதை எங்ஙனம் போற்றுதற்குரியதாகும்?

இராமானுசர் தம் கீதாபாசியத்தில் கண்ணனின் பண்புகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அடைமொழிகள் கீதையில் இல்லாதவை. பரிபாடல், புறநானூறு முதலிய சங்க இலக்கியச் செல்வாக்கால் குறிக்கப்பெற்றவை.

மேற்குறிப்பிட்டுள்ள மனு, கீதை முதலான பல நூல்களின் தரமற்ற நிலையையும் தமிழில் இருந்து கடன் வாங்கியுள்ள கருத்துகளையும் தமிழுக்கு மூலமாகக் காட்டப்பட்ட பொய்மையின் உண்மைத் தன்மையையும் தமிழின் தொன்மையையும்பற்றி விரிவாகவே தந்துள்ளார். எனினும் அவற்றைக் கோடிட்டுக்காட்டும் முகத்தான் சிலவே இங்கே குறிக்கப்பட்டுள்ளன. முழுமையாய் அறிய, இந்நூலைப் படித்து இன்பமும் அறிவும் அடைய வேண்டுகிறேன்.

“அகரம் எழுத்துகளுக்கு முதல் என்பது பகவத்துகீதையில் சொலலப்பட்டிருக்கிறதென்றும் அதிலிருந்தே வள்ளுவர் இக்கருத்தினைப் பெற்றார் என்றும் தமிழின் உட்பகைவர்கள் பிதற்றுவர். பகவத்து கீதை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பெற்று மகாபாரதத்தில் இடைச் செருகலாகப் புகுத்தப்பட்ட தென்பதை மேலைநாட்டு வடமொழி இலக்கிய வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, திருக்குறளிலும் பகவத்துகீதையிலும் காணப்படும் ஒற்றுமைக் கருத்துகளெல்லாம் திருக்குறளிலிருந்து பகவத்துகீதைக்குச் சென்றுள்ளன வென்பது தெளிவு.”