சனி, 16 மார்ச், 2019

அளவளாவல் – மரபுக்கவிஞர் தில்லை வேந்தன்

குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017
பங்குனி 03, 2050 ஞாயிறு 
17.03.2019 மாலை 4.00

மரபுக்கவிதைகள் பற்றிய அளவளாவல்:
மரபுக்கவிஞர் தில்லை வேந்தன்

தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191

வெள்ளி, 15 மார்ச், 2019

கவிஞர் மு.முருகேசுக்கு மீரா விருது

அகரமுதல             


கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் குறும்பா(ஐக்கூ) கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காகக் கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்
செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சப்பானிய ஐக்கூ வடிவக் கவிதைகளைத் தமிழில் பரவலாக அறிமுகம் செய்ததோடு, இளைய படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்து,
அதனை ஓர் இயக்கம்போல் தமிழகம் முழுவதும் கொண்டுசென்ற பணிகளைப் பாராட்டி,
கவிஞர் மு.முருகேசுக்கு இந்த ஆண்டு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா பரமக்குடி அரசு கலைக்கல்லூரில் கடந்த திங்களன்று (மாசி 27 /மார்ச்சு 11) நடைபெற்றது. இவ்விழாவிற்குத், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மா.மணிமாறன் 
தலைமையேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சு.செல்வகுமாரன்அனைவரையும் வரவேற்றார்.
எழுத்தாளர் சந்திரகாந்தன், கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருதினை வழங்கிப், பாராட்டிப் பேசினார். விழாவில், ‘வளரி’ இதழாசிரியர்அருணா சுந்தர்ராசன், வழக்கறிஞர் தி.குமார், கவிஞர் இரா.சீ.இலட்சுமிஆகியோர் உரையாற்றினார்.
நிறைவாக, உதவிப் பேராசிரியர் ச.இராமகிருட்டிணன் நன்றி கூறினார்.

வியாழன், 14 மார்ச், 2019

உ.வே.சா. உலகத் தமிழர் விருது

அகரமுதல

உ.வே.சா. உலகத் தமிழர் விருது

சிங்கப்பூர் முசுதபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், உரூ. ஓர் இலட்சம் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முறை ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு‘ எனும் தலைப்பு வழங்கப்படுகிறது.
இத்தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி பொதிக்கோப்பு(PDF) வடிவ ஆவணமாக suriyaudayam@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2019
சிறந்த ஆய்வுரைக்கான தெரிவு அறிவிப்பு: 02.1.2020
கவிக்கோ மன்றத்தில் விருது வழங்கும் நாள்: 22.2.2020

செவ்வாய், 12 மார்ச், 2019

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்

அகரமுதல
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30
திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை 53
நூல் வெளியீடும் விருது வழங்கலும்:

தோழர் இரா.நல்லகண்ணு

விருது பெறுநர்:

தொல்காப்பியர் விருது:

முனைவர் இரா.இராசேந்திரன் (தேவிரா)

திருவள்ளுவர் விருது:

முனைவர் இ.எலியாசு

இலக்குவனார் விருது:

முனைவர் க.மலர்விழி

கவிஞர் செம்பை சேவியர், ஒருங்கிணைப்பாளர்
புவலர் உ.தேவதாசு, செயலர்
இலக்குவனார் இலக்கியப் பேரவை

தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா

அகரமுதல
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி
நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை

நூல் வெளியீடு:  பழ.நெடுமாறன்

படத்திறப்பு: கி.வேங்கடராமன்

சிறப்புரை:

பெ.மணியரசன்

நாஞ்சில் நாடன்

ஏற்புரை:  முனைவர் பி.(இ)யோகீசுவரன்

  அழைக்கும் அரசி பதிப்பகம்