சனி, 14 ஜனவரி, 2017

திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா




திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா

 சென்னை, கலைவாணர் அரங்கில், 

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017

காலை 10:30 மணிக்கு

நடைபெறும்.  முன்னதாகக்

காலை 9.00மணி முதல் கலைநிகழ்ச்சி நடைபெறும்.

  சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், வெளியிடப்பட்டது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
 இந்த ஆண்டு விருது பெறுவோர் பெயரை, முதல்வர் பன்னீர்செல்வம், வெளியிட்டார்.
விருதாளர் பெயர்களும் பெறும் விருது விவரங்களும் வருமாறு
புலவர் வீரமணி – திருவள்ளுவர் விருது
பண்ருட்டி இராமச்சந்திரன் – பெரியார் விருது
மருத்துவர் துரைசாமி – அம்பேத்கர் விருது
கவிஞர் கூரம் துரை – அண்ணா விருது
 நீலகண்டன் – காமராசர் விருது
பேராசிரியர் கணபதிராமன் – பாரதியார் விருது
கவிஞர் பாரதி – பாரதிதாசன் விருது
 பேராசிரியர் மறைமலை இலக்குவனார் – திரு.வி.க.; விருது
மீனாட்சி முருகரத்தினம் – கி.ஆ.பெ.விசுவநாதம் விருது
  திருவள்ளுவர் திருநாள் விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்குவார்.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் தலைமை ஏற்பார்.
மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார்,
செய்தி-விளம்பரத்துறை அமைசச்சர் கடம்பூர் இராசு,
ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின்
ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள்.
துறைவிருது பெறுவோருக்கு,  நூறாயிரம் உரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும்,  அகவை முதிர்ந்த, 50 தமிழறிஞர்களுக்கு, நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப்படும்.

உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு




உலகத்திருக்குறள் மையம்
திருவள்ளுவர் திருநாள் விழா
உயராய்வு எழுச்சி மாநாடு

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017
காலை 7.00 முதல் மாலை 5.00 வரை
வள்ளுவர்  கோட்டம், சென்னை
காலை 7.00 திருக்குறள் முற்றோதல்
காலை 8.30 சிற்றுண்டி
காலை 9.00 நூல்கள் வெளியீடு
நூலாசிரியர்கள்:
திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன்
திருக்குறள் செல்லம்மாள்
திருக்குறள் தி.வே.விசயலட்சுமி
வெளியிடுநர் :
இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் ப.தாமரைக்கண்ணன்
முனைவர் பா.வளன்அரசு
வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு
முற்பகல் 10.30  அறக்கட்டளைச் சொற்பொழிவு – திருக்குறள் ஆ.இரத்தினம்
முற்பகல் 11.30   ஆய்வியல் அரங்கு
நண்பகல் 12.30 இசையரங்கம்
பிற்பகல் 1.00 உணவு
பிற்பகல் 2.00 அறக்கட்டளைச் சொற்பொழிவு –  திருக்குறள் குமரிச்செழியன்
பிற்பகல் 3.00 ஆய்வியல் அரங்கம்
மாலை 4.00  விருதுகள் வழங்கு விழா
விரிவை  அழைப்பிதழில் காண்க.



வெள்ளி, 13 ஜனவரி, 2017

‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்துகள்!-இலக்குவனார் திருவள்ளுவன்


‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்துகள்!-இலக்குவனார் திருவள்ளுவன்


‘அகரமுதல’ இதழின்
படைப்பாளர்களுக்கும்
செய்தியாளர்களுக்கும்
படிப்பாளர்களுக்கும்
பகிர்வாளர்களுக்கும்
கருத்தாளர்களுக்கும்
பரப்பாளர்களுக்கும்

அல்லன தொலையவும் நல்லன பெருகவும்
இன்பமும் மகிழ்ச்சியும்  பொங்கிடவும்
அன்பு வாழ்த்துகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர் 
‘அகரமுதல’ < www.akaramuthala >