சனி, 30 ஜூலை, 2011

திருவாரூரில் தாலின்: தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்குத் திரு சங்கரலிங்கனார் உண்ணாதிருந்து உயிர் விட்டமை, தமிழ்த்திரு சின்னச்சாமி முதலான பலர் உயிர் விட்டமை, ஈழத்தில் ஈகி திலீபன் உணவுமறுத்து உயிர் விட்டமை,தமிழினப் படுகொலைகளைத் தடுப்பதற்காக ஈகி முத்துக்குமரன் முதலான பலர் உயிர்விட்டமை என அறவழியில்  நல்ல காரணங்களுக்காக உயிர் துறந்தவர்களின் நோக்கங்களைப் புறக்கணித்த அரசு,  நம்மைப்போல் கோடி மடங்கு சொத்து உள்ளவர்க்காக, தமிழ் என்று சொல்லிக் கொண்டு ஆங்கிலவழிப்பள்ளி நடத்துபவருக்காக, தமிழ் என்று சொல்லிக்கொண்டு நிறுவனஙகளின் பெயர்களை ஆங்கிலத்தில் சூட்டியுள்ளவர்க்காக, இன்னும் இவை போன்ற பல காரணங்களுக்காகத் தண்டிக்கப்படாதவருக்காகத் தீக்குளித்தால்  என்ன செய்யும் என்று எதிர்பார்க்கிறார் இந்தத் தொண்டர்? கட்சி சார்பிலான மொழி இனப் போராட்டங்களில் ஈடுபடுங்கள். ஆனால், தீக்குளிப்பு  கற்பனையிலும் வேண்டவே வேண்டா! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திருவாரூரில் ஸ்டாலின்: தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

First Published : 30 Jul 2011 01:30:29 PM IST


திருவாரூர், ஜூலை 30: திருத்துறைப்பூண்டி அருகே இன்று காலை கைது செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் திருவாரூருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே வர்த்தகர் சங்க கட்டடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார். கட்டடத்துக்கு வெளியே திரண்டிருர்ந்த திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் விரைந்து வந்து, அந்தத் தொண்டரைத் தடுத்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து திமுக தொண்டர்கள் ரகளையில் இறங்கினர். இதைத் தடுக்க போலீஸார் உடனே லேசான தடியடி நடத்தி தொண்டர்கள் கூட்டத்தைக் கலைத்தனர்.

இயல் இசை நாடக மன்றத்துக்குப் புதிய தலைவர்: முதல்வர் நியமனம்

கலைமிகு தேவா, கலைமிகு சச்சு ஆகிய இருவருக்கும் பாராட்டுகள். மன்றத்தைத் திரைப்படக் கலைஞர்களுக்கு மட்டும்உரியது என நடத்தாமல் நாடகம், நாட்டுப்புறக்கலை, இயல்கலை, தமிழிசைக்கலை ஆகியன வளரவும் அனைத்துவகைக் கலைஞர்கள் பயனுறவும் சிறப்பாகச் செயல்பெட வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இயல் இசை நாடக மன்றத்துக்கு புதிய தலைவர்: முதல்வர் நியமனம்

First Published : 30 Jul 2011 06:25:46 PM IST


சென்னை, ஜூலை 30: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்துக்கு புதிய தலைவராக இசையமைப்பாளர் தேவா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சச்சு செயல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் தமிழக இயல் இசை நாடக மன்றத்தின் பொறுப்புகளில் நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.

இலங்கைத் தமிழர் சம உரிமை கோரி மார்க்சியப் பொதுவுடைமைக்கட்சி தீர்மானம்

இதனை நாடகம் என்று மக்கள் கருதாமல் இருக்க உலகப் பொதுவுடைமை நாடுகளிடம் வற்புறுத்தி இனப்படுகொலை குறித்தும் போர்க்குற்ங்கள் குறித்தும்  விசாரணைமேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியுரிமையுடன் வாழ வேண்டிய ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையில் வாழ வேண்டும் என்னும்  திசை திருப்பும் கருத்தைக் கைவிட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கைத் தமிழர் சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் தீர்மானம்

First Published : 30 Jul 2011 05:21:09 PM IST

Last Updated : 30 Jul 2011 05:49:13 PM IST

சென்னை, ஜூலை30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவில், இலங்கைத் தமிழர் சம உரிமை, அரசியல்தீர்வு சிறப்பு மாநாட்டில் தமிழர் சம உரிமை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த செய்திக் குறிப்பு:* இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம் வசதிகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.* தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.உடனடியாக செய்யப்பட வேண்டியவை:♦இலங்கையில் இறுதிகட்ட போரின்போது ராஜபக்சே தலைமையிலான அரசினுடைய ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும், சர்வதேச தரமுள்ள, மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய ஒரு சுயேச்சையான நேர்மையான விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட வேண்டும். ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடு என்ற முறையிலும், ஐ.நா.வின் மனித உரிமை சாசனத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் இந்த விசாரணை அமைய வேண்டும்.♦சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.♦இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்கான அனைத்து முன்முயற்சிகளும் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும்.♦மாகாண அரசுகளுக்கு காவல்துறை,நிலம் போன்ற அம்சங்களில் நிர்வாக அதிகாரம் வழங்க வேண்டும். தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.♦ஆயுத மோதலினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களது சொந்த வாழ்விடங்களில் முழுமையாக மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.♦அனைத்து நிலைகளிலும் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது மத உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பேணப்பட வேண்டும்.♦அவசர கால சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டு, ராணுவ நடமாட்டம் விலக்கப்பட்டு ஜனநாயகபூர்வ சகஜ வாழ்வு திரும்ப வேண்டும். அச்சம் அகன்று அமைதி திரும்ப வேண்டும்.♦இலங்கையில் இருந்து வந்த நாடாளுமன்ற ஜனநாயக முறை மாற்றப்பட்டு அதிபராட்சி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கூட்டாட்சியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. உண்மையான கூட்டாட்சி முறை செயல்படுத்தப்பட வேண்டும்.♦அரசு, நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் அனைத்து அம்சங்களும் நீக்கப்பட வேண்டும்.இந்திய அரசின் கடமைஇலங்கையின் அண்டை நாடு என்ற முறையிலும் சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்ற முறையிலும், இலங்கைத் தமிழ் மக்களின் துயரம் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மக்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற முறையில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தகுந்த அரசியல் தீர்வு காண உதவ வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. எனவே, இந்தியா தனது ராஜீய உறவைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா அளிக்கும் உதவி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?,பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு கிடைக்கிறதா? என்று கண்காணிக்கும் பொறுப்பும் இந்தியாவிற்கு உண்டு. இதனை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வந்துள்ளது, வருகிறது. ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து மாநில சுயாட்சி வழங்க வேண்டுமென்ற அரசியல் தீர்வே சரியான வழி என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தம் 27.7.2011 அன்று கூறிய கருத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.“ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பொருளாதார, பண்பாட்டு செயல்பாடுகள் பேணப்பட வேண்டும் எனற செய்தியையே இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.”இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பிட தமிழகமெங்கும் ஆகஸ்ட் 9, 2011 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுவது என இலங்கைத் தமிழர் சமஉரிமை-அரசியல் தீர்வு-சிறப்பு மாநாடு தீர்மானிக்கிறது. இலங்கைத் தமிழர்களை காக்கஅனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு குரல் எழுப்ப இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

மா.பொ.க.(சி.பி.எம். )திடீரென இலங்கைத் தமிழர் மாநாடு போடக் காரணம் என்ன?


சீ.பி.எம். திடீரென இலங்கைத் தமிழர் மாநாடு போட காரணம் என்ன?

நாளை அதாவது ஜூலை 30 ஆம் நாள் சென்னையில் “இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு என்ன?” என்பதாக ஒரு மாநாடு போடுகிறார்கள். இது என்ன மார்க்சிஸ்டுகளுக்கு புது அக்கறை என்று கேட்டு விடாதீர்கள். அவர்கள் இத்தனை ஆண்டுகளும் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக அந்த பிரச்னையை “ஆய்வு” செய்துகொண்டு இருக்கிறார்கள். மார்க்சிஸ்டு என்றால் மற்றவர்களைப்போல உடனடியாக ஒரு தீர்வை நம்புவதும், அதை பரப்புவதும், அதையே நடைமுறைப்படுத்த துணிவதும் முடியுமா என்ன? நிதானமாக அங்கே இருக்கும் வர்க்க சக்திகள் பற்றி ஆய்வு செய்து, அதன்பிறகு அங்கே இருக்கும் கம்யுனிஸ்ட் கட்சியிடம் கருத்து கேட்டு, பிறகு அந்த பிரச்சனையில் , கம்யுனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி நடக்கும் அருகாமை நாடுகளின் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டு, பிடகு உலக நாடுகள் மத்தியில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, எக்கதிபத்தியங்கள் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள் என்று கவனித்து, கடைசியாக தாங்கள் வாழும் நாட்டின் அரசு என்ன சொல்கிறதோ அடஹ்ர்கு விரோதம் இல்லாமல் முடிவு எடுக்க வேண்டாமா?
மூச்சு விடாமல் இத்தனை விவரங்களையும் சேர்க்கும் மார்க்சிசிடுகள், அதை தங்கள் “அரசியல் தலைமைக் குழு” விடம் காட்டி, அவர்கள் பொதுச்செயலாளரின் நேரடிப் பார்வைக்கு வைத்த பிறகு, அவர்கள் அத்தனை கருத்துகளையும் “தொகுத்து எழுதி” பிறகுதானே கட்சி முடிவு செய்ய முடியும்? அப்படி எடுக்கும் முடிவும் “தப்பித் தவறி” கூட, “தெலுங்கான” பிரச்சனை பற்றி குழப்பம் ஏற்பட்டது போல, ” மேற்கு வங்கத்தில் “கூர்காலாந்த்” பிரச்சனை மீது முடிவு எடுக்காமல் தள்ளிப் போட்டு, “மாநில ஒற்றுமையை ” காப்பாற்றியது போல , “பிரிவினைவாதம்” தலைதூக்க அனுமதிக்க கூடாது அல்லவா? அட. மார்க்சிசிடுகளே, நீங்கள் “தெலுங்கானாவில்” எடுத்த முடிவான, “ஒன்றுபட்ட ஆந்திரா” என்பது தெலுங்கான தவிர்த்த, ராயலசீமா, கடலோரம் ஆகிய ஆந்திராவின் பாணனை திமிங்கிலங்களுக்கு, அதாவது ரெட்டிகளுக்கும், கம்மா நாயுடுகளுக்கும், தெலுங்கானா பகுதியில் நிலங்களை ஆதிக்கம் செலுத்தவே உதவும். அதனால்தான் அங்கே ” தெலுங்கானாவை ஆதரிக்கும் மாவோவாதிகள்” செல்வாக்கு உயர்கிறது.
தோழர்களே நீங்கள் மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் ஒற்றுமையை கட்டிக் காக்க எண்ணி, “கூர்காலாந்து ” மக்களின் நியாயமான உரிமையை மறுத்துவந்ததால், இன்று மம்தா அதையே ஆயுதமாக்கி, “அதிக சுயாட்சியை கூர்காலாண்டுக்கு” வழங்கி நற்பெயர் பெற்று விட்டார். இது இன்றைய கதை. நேற்று அதாவது 1978 ஆம் ஆண்டு, முழு அஸ்ஸாம் மாநிலமும் “மாணவர் எழுச்சியில்” எழுந்த போது, நீங்கள் அதை எதிர்த்து நிலை எடுத்ததால் உங்களை அந்த மாநிலத்தை விட்டே மாணவர்கள் எழுச்சி விரட்டி அடித்ததே நினைவு இருக்கிறதா? இவாறு எங்கெல்லாம் “சுயாட்சி முழக்கம்” எழுகிறதோ அங்கெல்லாம் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு, அதை நீங்கள் எத்ரித்து வருகிறீர்கள். அதுதான் உங்கள் வரலாறாக இருக்கிறது. “உழைக்கும் மக்களின் ஒற்றுமை” எண்பதை பிரிவினைவாதிகள் உடைத்து விடுவதாக கற்பனைக் கதையை அவிழ்த்துவிடும் நீங்கள் “அடக்கப்படும் தேசிய இனங்களையோ, அடக்கப்படும் பிரதேச மக்களையோ, அதிகாரப் பரவலாக்குதளுகாக போராடும் மக்களையோ கண்டுகொள்வதில்லை. அதன்விளைவு அந்த குறிப்பிட்ட மக்களிடமிருந்து நீங்கள் “தனிமைப்படுவதைதவிர” வேறு வழியில்லை.
இப்போது இலங்கை பிரச்சனை எண் உங்களுக்கு “முக்கியமாக” படுகிறது? இன்று “தமிழ்நாடு “விழித்துக் கொண்டுள்ளது. நீங்கள் இருக்கும் “கூட்டணிதலைமை” இலங்கை விசயத்தில் ஒரு முடிவை எடுத்து உள்ளது. இலங்கை தமிழருக்காக பேசுகிறது. ராஜபக்சே உலக அளவில் “போர்க்குற்றவாளி” என்று அம்பலப்பட்டு கிடக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களில் கூட “ஹெட்லைன்ஸ் டுடே” வெளியிட்ட “சேனல் நாலு” பகிரங்கமாக போர்குற்றம் பற்றி மக்களிடம் எடுத்து சென்று விட்டது. ஆதியோ ஒட்டி மத்திய அரசும் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. .மார்கிசிடுகளின் தோழர்களாக கருதப்பட்ட “ஜேவிபி கட்சிகூட” தேர்தலில் தோற்று விட்டது. அதனால் தாங்களும் ஏதாவது தமிழருக்கான தீர்வு என்று கூறவேண்டிய கட்டாயம். இல்லாவிடில் சீ.பி.ஐ. என்ற மற்றொரு இடதுசாரி கட்சி, “தமிழருக்கு ஆதரவாக” செல்வது அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். அதனால் இலங்கையின் ஒற்றுமையை பாதுகாக்க சீ.பி.எம். இறங்குகிறதா என சந்தேகம் எழுகிறது.
அதனால்தான் தோழர்களே, நீங்கள் லெனின் “தேசிய இனங்கள்” பற்றி கூறியதை படியுங்கள். ஸ்டாலின் ” தேசிய இன சுதந்திரம்” பற்றி சொன்னதை செவி மடுங்கள். “பிரிந்து செல்வதற்கான் ஆரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை” என்ற சொற்கள் உங்கள் கண்களுக்கு புலப்படட்டும். அதை “ஈழத் தமிழர்கள்” எப்படி பெற முடியுமோ அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லத் தோன்றும். ஆயுதம் தாங்கிய போறோ, அரசியல் ரீதியான போராட்டமோ, எதுவானாலும் அடக்கப்படும் சிறுபான்மை தேசிய இனத்திற்கு “பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை” மட்டுமே விடுதலை வாங்கித் தரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதை அந்த நாட்டு ஈழத் தமிழ் குடிமக்கள் “தமிழீழம்” மூலம் பெற்றுக்கொண்டாலும் அது அவர்களது வழி என்று கூறி குறுக்கே நிற்காதீர்கள். இன்று உலக அரங்கில் “ஏகாதிபத்தியத்தின் வளர்ந்த வடிவமான வல்லரசுகளுக்கு எதிரான சக்தி தேசிய இனங்கள்” தான் எண்பதை உணருங்கள்.
ஆங்கிலவழிப் பள்ளிகளை நடத்தும் தி.முக. காரர்கள் மீது நம்பிக்கை யின்றித்தான் அவர்கள் போ்ராட்டத்திற்கு ஆதரவு இல்லை. ஆனால் மக்கள் ஆதரவு சமச்சீர்கல்விக்குத்தான். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுக விடுத்த வகுப்பு புறக்கணிப்பு அழைப்புக்கு ஓரளவே ஆதரவு

First Published : 29 Jul 2011 05:39:41 PM IST

Last Updated : 29 Jul 2011 05:54:27 PM IST

சென்னை, ஜூலை.29: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணிக்குமாறு திமுக விடுத்திருந்த அழைப்புக்கு ஓரளவே ஆதரவு இருந்தது.  சுமார் 9 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒருசில மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்தனர்.அந்த மாவட்டங்களில் பள்ளிகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 1500 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.கோவையில் திமுக, காங்கிரஸ், பெரியார் திக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பல்வேறு பள்ளிகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அங்கு மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்ததாகவோ, அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாகவோ தகவல் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.தர்மபுரி மாவட்டத்தில் வகுப்புகளை புறக்கணிக்குமாறு மாணவர்களை வற்புறுத்திய 539 திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.சேலத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள்

அந்த காலத்திலிருந்தே மாணவர் சமூதாயத்தை இந்த மாதிரி போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக ,மூளைச்சலவை செய்து போராட வைத்து குட்டிச்சுவராக்குவதுதான் இந்த பிற்போக்கு கும்பல் கட்சிகளின் வேலை .
By CHANDRAN
7/29/2011 9:37:00 PM
சில பேர் நான் பிரச்சாரம் செய்ததால் தான் தி.மு.க. கூட்டணிக்கு தோல்வி , என உளறுவது ஏமாற்று வேலை. நடந்து முடிந்த தேர்தலில் பலபேர் பல காரணம் சொன்னாலும் முக்கிய காரணம் நான் சொன்னால் சில பேர் ஏற்று கொள்ள மறுக்கலாம் அல்லது விளையாட்டாக எடுத்து கொள்ளலாம்.நடிகர் ரஜினிகாந்த் தான், ரஜினிகாந்தை பெருமைபடுத்துவதற்காக சொல்லவில்லை , அவர் செல்வாக்கு படைத்தவர் என்பதல்ல அர்த்தம்.ரஜினிகாந்த் காலை எட்டரை மணிக்கு வாக்களிக்க வருகிறார், அத்தனை ஊடகங்களிலும் தெரியும்படி, அவர்கள் படம் பிடித்து காட்டும் வகையில் இரட்டை இலைக்கு வாக்களிப்பதை தெரியப்படுத்துகிறார்.- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், காஞ்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் விடுதலைசெழியன் இல்ல விழாவில் கலந்து கொண்டு சொன்னது.
By selvaraj
7/29/2011 9:37:00 PM
மதிபிற்குரிய திரு கருணாநிதி அவர்களுக்கு, உங்களால் எவ்வளவு கேவலம்ஆனா அரசியல் செய்ய தெரியும் என்று உலகத்திற்கு புரிந்து விட்டது.உங்கள் தமிழ் பாசம் ,நீங்கள் இது வரை தமிழ்க்கும்,தமிழ்நாட்டு மக்களுக்கும் நீங்க செய்த செயற்கரிய செயல்கள் ஏராளம் உள்ளன.உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பதவிக்கு ஆபத்து வரும்போது நீங்கள் செய்த அரசியல்,இலங்கை மக்கள் செத்துமடிந்த பொயுது உங்கள் அரசியல்,இப்படி பலவகை நாடகங்கள் செய்து காட்டிய சாதனையாளர் நீங்கள்.உங்கள் அரசியல் சித்து வேலையெல்லாம் இனி தமிழ் நாட்டில் பலிக்காது.நீங்கள் ஒருவர்தான் தமிழ் இனத்தின் அடையாளம் என்று சொல்லிக்கொண்டு இன்னும் எத்தனை நாள்தான் நாங்கள் ஏமார்ந்து கொண்டு இருப்பது தமியன் இன்னும் எத்தனை காலம்தான் நீங்கள் சொன்ன சோற்று பிண்டங்களாக இருப்பார்கள்.காமராசரை வேண்டும் எனில் ஏமாற்றி அன்றைய தமிழ் மக்களிடம் உங்கள் தமிழ் பாச பாசாங்கு பலித்து இருக்கலாம் இனி உங்கள் வேஷம் பலிக்க கூடாது பலிக்காது .வயது ஆகி விட்டது கடைசி காலத்தில் செய்த ராமா ராமா என்று சொல்லிகண்டு (என்ன நாத்திகவாதியான உங்களிடும் இப்படி சொல்லலாமா என்றா ?மஞ்சள் துண்டு /மனைவிகள்/மருமகள்கள் கோவில்
By 5804360
7/29/2011 8:30:00 PM
சங்கர சங்கர என்று சொல்லி போய்சேர வேண்டிய வயதில் சிறுவர்களை கிள்ளப்பி பவம் கட்டிக்கிறார் கிழவனாரே சும்மா இரு
By பாலகிருஷ்ணன் J
7/29/2011 8:07:00 PM
இந்த தமிழ் துரோகிக்கு வேற வேலை கிடையாது , ஆகவே பிஞ்சு நெஞ்சத்தில் நஞ்சை வார்க்க பார்த்தான் , நடக்கவில்லை .......................இந்தியாவே உன் குடும்பத்தையும் , கட்சியையும் காரி துப்பியும் நீ திருந்தவில்லை , தினமும் ஒரு பாராட்டு விழா இல்லையே..போய் திகாரில் ஒய்வு எடுத்து வரும் உன் அன்பு திருட்டு மகளை பார்த்துட்டு வா .
By rpkssr
7/29/2011 7:58:00 PM
DMK LEADERS DOING THIS TYPE POLYTICAL STEND,VERY BAD ,ALLREDY WEARE LOSS HINDI LAST 50 YEARS,KARUNANITHY AND FAMILY WANT TO ESCAPE SPECTRAM CASE THATS WHY MAKING, NEW DERAMA. THEY WANT TO STOP , TAMIL EDUCTION ALSO (.STUDENT PLCES DON T SUPPORT)this kaint of thinks.
By vijayan
7/29/2011 7:51:00 PM
இதல்லாம் ஒரு பொலப்பு, பின்சுமனதில் நன்சை விதைக்கும், நாதாரிப்பயல்களை உள்ள வச்சு குமுரனும். வேலையத்தவெட்டி பசங்க.
By pandiyan
7/29/2011 7:22:00 PM
மஞ்சத்துண்டுக்காரன் தன் தமிழின துரோகதத்தை மறைக்கவும், தமிழனத்தின் மொத்த கோபத்தையும் திசை திருப்பவும், பள்ளி மாணவர்களை தன் சுயநலத்துக்காக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. சமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கும் நேரத்தில், மஞ்சத்துண்டுக்காரனின் செயல்கள் அம்மாவின் பிடிவாதத்தைத் தான் அதிகபடுத்துமே தவிர, தீர்ப்பதற்கு வழி செய்யாது.
By ராஜா@மதுரை
7/29/2011 6:41:00 PM
அரசியலில் தொய்வு ஏற்படும்போது தி.மு.க.தலைமை தூண்டிவிடும் சந்தர்பவாதம்.
By M.நாட்ராயன்
7/29/2011 6:33:00 PM
சாக்கு என்னடா சங்கர ! எப்படியோ ஜெயாவை எதிர்த்தாச்சு! இனி என்ன இன்றைய பொழப்பு முடிஞ்சது ! இனி பிரியாணி தான்! ம.சாந்தி
By ம.santhi
7/29/2011 5:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

இலங்கைத்தமிழர் சமஉரிமைச் சிறப்பு மாநாடு

மார்க்சியப் பொதுவுடைமைவாதிகளுக்கு உள்ளத்தில் தமிழ்ப்பற்று கிடையாது. அரசியல் சூழலுக்கேற்பத் தங்களை வெளிப்படுத்தவும் தமிழ் ஈழமே தீர்வு என மக்கள் விரும்புவதைத் திசை திருப்பவும் சமவுரிமை நாடகம் ஆடுகிறார்கள். இதுவரை நடந்த சமவுரிமை நாடகத்தின் விளைவுதான் நூறாயிரக்கணக்கான ஈழததமிழர்கள் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டதும் கொடூரமாகத் தாக்கப்பட்டு அதன்பின்  கூட்டாகப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் அவர்களின் மார்பகங்கள்  துண்டிக்கப்பட்டதும் கொத்துக் குண்டுகளால் மக்களும் பிற உயிரினங்களும் நிலப்பரப்பும் அழிந்ததும். மறைமுகமாக இந்திய அரசை ஆதரிப்பதற்காகச் சமவுரிமை பேசுகின்றனர். இவர்களின் மாநாட்டில் தமிழ் ஈழ ஆதரவுக்  கட்சியினர் யாரும் பங்கெடுக்கக்கூடாது. 
உண்மையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத்தமிழர் சமஉரிமை சிறப்பு மாநாடு நடத்த மார்க்சிஸ்ட் முடிவு

First Published : 29 Jul 2011 02:58:53 PM IST


சென்னை, ஜுலை.29: இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அளிக்கும்வகையில் அரசியல் தீர்வு காண வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: #தமிழக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும்.  #நிலப்பறிப்பு மற்றும் மோசடி செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலம் மீண்டும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.  #இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சி அளித்திடும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், இன்னும் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்திடக்கோரியும், ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது சுயேச்சையான, நேர்மையான விசாரணை நடத்திட வலியுறுத்தியும் இலங்கைத்தமிழர் சமஉரிமை-அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்

இவ்வளவு கொடூரமான கொலைபாதகத்தை நிகழ்த்திய பேரினவாத சிங்கள அரசு தமிழர்களை சரிசமமாக நடத்தும் என்று எவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்மை இன்னும் நம்ப சொல்கிறது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே ஒரு தமிழர் விரோத கட்சி. காங்கிரஸ் கட்சியை போல், இந்தகட்சியையும் தமிழகத்தில் காணாமல் போக செய்ய வேண்டும்.
By ராஜா@மதுரை
7/29/2011 6:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

thirumaa supports 3rd front: மூன்றாவது அணி: பா.ம.க. முடிவுக்குத் திருமாவளவன் ஆதரவு

கட்சி நலனுக்காகத் தமிழினப் படுகொலை காரர்களுடன் உறவு வைத்தமைக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுவிட்டு 3ஆவது அணியினர் செயல்படத் தொடங்க வேண்டும். இல்லையேல் மக்களுக்கு நம்பிக்கை வராது.வை.கோ. தலைமையில் ௩ ஆவதுஅணி அமைந்தால் நாட்டிற்கும் நன்று. அமைப்போர்க்கும் ஆதாயம்.ஆனால், இராமதாசு ஒப்புக் கொள்ள மாட்டார். அவர் மனம் மாறி. வை.கோ.வைத் தலைமை தாங்க அழைக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

மூன்றாவது அணி: பா.ம.க. முடிவுக்கு திருமாவளவன் ஆதரவு

First Published : 30 Jul 2011 01:20:26 AM IST


இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளி என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார் விடுதலைச்
சென்னை, ஜூலை 29: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை அமைக்கப் போவதாக பா.ம.க. அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரித்துள்ளார்.இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன், வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துகளை திரட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் 10 லட்சம் கையெழுத்துகளை பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை 7 லட்சம் கையெழுத்துகள் பெற்றுள்ளோம். மீதியுள்ள கையெழுத்துகளையும் திரட்டிய பிறகு சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதில், நாடு கடந்த தமிழீழ அரசின் நிர்வாகிகளிடம் அந்தக் கையெழுத்துகளை ஒப்படைத்து, ஐ.நா. சபைக்கு அனுப்ப உள்ளோம். மூன்றாவது அணி: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியது. இதற்கான முயற்சிகளை எடுக்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் வலியுறுத்தினேன். எனினும், அது பற்றி கவனம் செலுத்தப்படவில்லை.இந்நிலையில், மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளை எடுக்கப் போவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அந்த அணிக்கு வருமாறு எங்கள் கட்சியை அழைத்தால், கட்சியின் நிர்வாகிகள் கூடி பேசி, உரிய முடிவை எடுப்போம் என்றார் திருமாவளவன்.

தாய்மொழிக் கல்வி என்பது சாதனைகளைப் பெற்றுத் தரக்கூடியது.

ஆற்றல், அறிவினை வளர்க்க துணை புத்தகங்கள் மட்டுமே: 
அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

First Published : 30 Jul 2011 01:16:07 AM IST


ஆற்றலையும், அறிவையும் வளர்க்க வளரும் பருவத்தினர் துணையாகக் கொள்வது புத்தகங்களை மட்டுமே என பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பேசினார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்தனை அரங்கை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அமைச்சர் பேசியதாவது: கண் இல்லாவிட்டாலும் கற்றவர் கண்ணுடையவராகவே கருதப்படுவர். மனிதன் தன்னைத் தான் தெரிந்துகொள்ளவும், ஆற்றல், அறிவினை வளர்த்துக் கொள்ளவும் புத்தகங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. அனைவருக்கும் கை வராத கலை, புத்தகம் எழுதுவது. அறிவுக்கும், மனதுக்கும் நிகழும் போராட்டத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் துயரமின்றி வாழ முடியும். எழுதுபவனின் நோக்கத்திலேயே அதனைப் புரிந்து கொள்ள வைப்பதுதான் சிறந்த எழுத்தாளனின் சிறப்பு. புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தினை பெற்றோர்களும், பொதுமக்களும் அதிகரித்துக் கொண்டால்தான் அவ்வப்போது நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொண்டு வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்ள முடியும். மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வாசிக்கும் திறனை வளர்க்கும் விதத்தில் நல்ல உயரிய புத்தகங்களை வாங்கித் தருவது அவசியம். இளைய சமுதாயத்துக்கு அறிவுச் செல்வம் என்றால் புத்தகத்தைத் தவிர உலகில் வேறொன்றுமில்லை என்றார் ராமலிங்கம். விஞ்ஞானி ஆர்.எம்.வாசகம்: பழமைக்கும், புதுமைக்கும் பாலமாகவும், அறியாமையை அகற்றும் தூண்டுகோலாகவும் நூலகங்கள் விளங்குவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், விஞ்ஞானியுமான ஆர்.எம்.வாசகம் பேசினார். தாய்மொழிக் கல்வி என்பது சாதனைகளைப் பெற்றுத் தரக்கூடியது. இலக்கணமும், இலக்கியமும் மனிதனை நல்வழிப்படுத்துகிறது. அடுத்த தலைமுறைகளுக்கான அழியாத சொத்து அறிவு மட்டுமே. இதனைப் பெற சிறந்த புத்தகங்களை இளைஞர்கள் தொடர்ந்து தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்றார் வாசகம்.

Trining to conduct thamizh marriages: தமிழில் திருமணச் சடங்கு நடத்த பயிற்சி

பாராட்டுகள்! மக்கள்  பயன்படுத்தட்டும்! பயன்பெறட்டும்!  தாய்மொழியில் வாழ்த்துவதைப் புரிந்து வளமாக வாழட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழில் திருமணச் சடங்கு நடத்த பயிற்சி

First Published : 30 Jul 2011 01:54:41 AM IST


புதுச்சேரி அருகே உள்ள பொம்மையபாளையம் மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வரவேற்பு நிகழ்ச்சியில், முதன் முதலாக மயிலம் மடத்துக்கு புறப்பட்ட 20-ம் பட்
புதுச்சேரி, ஜூலை 29: திருமணம் உள்ளிட்ட சடங்குகள் மக்களுக்குப் புரியும் வகையில் தமிழில் நடத்தும் வகையில் பயிற்சி அளிக்க உள்ளோம் என்று புதிதாகப் பொறுப்பேற்ற மயிலம் பொம்மபுர ஆதீன 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கூறினார்.19-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் சித்தி பெற்றதைத் தொடர்ந்து 20-ம் பட்டம் சுவாமிகள் பொறுப்புக்கு வந்துள்ளார்.பொம்மையாபாளையம் திருமடத்தில் பூஜைகள் செய்து வந்த 20-ம் பட்டம் சுவாமிகள் முதன் முதலாக சமுதாயப் பணிகளில் ஈடுபட மடத்தை விட்டு வெளியே வெள்ளிக்கிழமை புறப்பட்டார். இதற்காக மயிலம் மற்றும் பொம்மையாபாளையம் மக்கள் சார்பில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் தலைமை தாங்கினார். விழாவில் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பேசியது: கோயில் இருக்கும்போது திரு மடங்கள் எதற்கு என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. கோயில்களில் இறைவன் பிரதானம். மடங்களில் மடாதிபதிகள் இருக்கின்றனர். கோயில்களில் எப்படி பூஜைகள் செய்ய வேண்டும். எப்படி இறைவனை வணங்க வேண்டும். எதற்கு வணங்க வேண்டும் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான எல்லாற்றையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். திருமடங்களுக்கு சமயம், சமுதாயம் இரண்டும் இரண்டு கண்களாக விளங்க வேண்டும். எங்கள் திருமடத்தின் சார்பில் வருங்காலங்களில் தமிழர்களின் பண்பாட்டையும், இந்து கலாசாரத்தையும் பேணிக் காக்கும் வகையில் ஒழுக்க நெறிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளி ஒன்றை தொடங்க உள்ளோம். மேலும் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் மக்களுக்குப் புரியும் வகையில் தமிழில் நடத்தும் வகையில் பயிற்சி அளிக்க உள்ளோம். இந்த திருமடத்தில் உள்ள தியான பீடத்தில் திருப்பணி நடத்த உள்ளோம் என்றார் சிவஞான பாலய சுவாமிகள். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் விழாவில் பேசினார்.பேரூர் ஆதினத்தின் இளைய மடாதிபதி மருதாசல அடிகளார், கோயமுத்தூர் கெüமார மடம் குமரகுருபரசுவாமிகள், சிதம்பரம் மெüன சுவாமிகள், தென்சேரிமலை முத்து சிவராம சுவாமிகள், தாராபுரம் மெüன சிவாச்சல அடிகளார், வடலூர் ஊரன் அடிகளார், பழனி சாது சண்முக சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் ஆதீன புலவர் ஆ. சிவலிங்கனார், சென்னை பல்கலைக் கழக சைவசித்தாந்தத்துறையின் தலைவர் பேராசிரியர் வை. ரத்தினசபாபதி, புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

C.M. opposed the Central Bill : மாநில அதிகாரத்தைப் பறிப்பதா?: மத்திய அரசின் சட்ட வரைவிற்கு முதல்வர் ‌செயலலிதா எதிர்ப்பு

முதல்வர் எடுக்கும் இந்த முயற்சி கொலைகாரப் பேராயக்கட்சியை - காங்கிரசை - ஆட்சியில் இருந்து அகற்றட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மாநில அதிகாரத்தைப் பறிப்பதா?: மத்திய அரசின் மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு

First Published : 30 Jul 2011 01:57:06 AM IST


சென்னை, ஜூலை 29: வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்ட மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்த மசோதாவால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்ட மசோதா வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மதச்சார்பற்ற, பல்வேறு மதங்கள் பின்பற்றப்பட்டு, பல்வேறு மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில் வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைக்கு இடமில்லை. உத்தேச சட்ட மசோதா தனது நோக்கத்தை சிறிதும் அடையாது.பல்வேறு அமைப்புகளிடையே இந்த மசோதா நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். குறை கூறுகின்ற, வெளிப்படையாகப் பேசுகின்ற குழுக்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளையும், தங்களது ஏமாற்றங்களை பலவீனமான நபர்கள் மீது காண்பிக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தையும் அதிகாரம் படைத்தவர்களுக்கு இந்த மசோதா அளித்து விடும்.மசோதாவின் பல பிரிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. 20-வது பிரிவு மாநில சுயாட்சியை நேரடியாக பாதிக்கக் கூடியதாக உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எண்ணத்துக்கும், மாநிலங்களுக்கு அதிகளவில் சுயாட்சி கொடுக்க வேண்டும் என்ற சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட இதர ஆணையங்களின் பரிந்துரைகளுக்கும் எதிரானதாக இந்த மசோதா அமைந்துள்ளது.திட்டமிட்ட வகுப்புவாதம், வன்முறைகள் குறித்து மத்திய அரசு மட்டுமே கவலைப்படுவது போன்றும், மாநில அரசுகள் இத்தகைய குற்றங்களுக்கு துணை போவது போன்றும் ஒரு தோற்றத்தை இந்த மசோதா ஏற்படுத்துகிறது.வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை நிகழ்வு அல்லது நிகழ்வதற்குரிய சாத்தியக்கூறு குறித்து தானாகவோ அல்லது கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையிலோ அல்லது வேறு விதமாகவோ விசாரிக்கும் அதிகாரம் இதற்கென அமைக்கப்படும் தேசிய அதிகார அமைப்புக்கு உண்டு.இந்த அமைப்புக்கு மாநில அரசையே நடத்திச் செல்லும் அளவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை குறித்து மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள், தேசிய அதிகார அமைப்புக்குள்ள அதிகாரம், செயல்பாடுகள் மாநில அரசின் அதிகாரங்களை முழுவதும் பறிக்கும் வகையில் அமைந்துள்ளன. இது மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.சட்டம்-ஒழுங்கு நிலை குலையும்: வன்முறைகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம், நஷ்ட ஈடு, இழப்பீடு ஆகியன வழங்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உரியது. இந்த அதிகாரங்களைப் பறித்துக் கொண்டும், அதிகாரத் தோரணையோடும், மேற்பார்வையிடுபவராகவும் தன்னை மத்திய அரசு கருதிக் கொண்டுள்ளதாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமை, கலகத்தை ஆதரிக்கும் வகையில் சட்ட மசோதா அமைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த குழப்பம், சட்டத்தின் ஆட்சி இல்லாமை ஆகியவற்றை ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலை குலையச் செய்து விடும்.மாநில அரசுகளை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு மத்திய அரசுக்கே ஒட்டுமொத்த அதிகாரங்களை வழங்குவதாக இந்த மசோதா அமைந்துள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சதித் திட்டம் தீட்டி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்கக் கூடிய நிலை ஏற்படலாம்.வன்முறை நிகழ்ந்தால் அதை வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை எனக் கூறி இந்த சட்டத்தின் பிரிவுகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசு கலைக்கப்படக் கூடும். இது ஜனநாயகத்துக்கு விரோதமான பாசிச சட்ட மசோதாவாகும்.இந்தச் சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே தூக்கி எறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

இதற்கு உடந்தையாகவும் பாராமுகமாகவும் தூண்டுதலாகவும் இருந்த எல்லா நாட்டு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தூக்கிலிட வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற இனப்படுகொலை இனி எங்கும் நடைபெறாது. வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


தமிழர்களின் நாக்குகளை அறுத்தனர் சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்; இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த கொடூரம் பற்றி சிங்கள வீரர் `பகீர்' தகவல்
கொழும்பு, ஜுலை.29-
 
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனால் உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கணைகள் பாய்வதோடு, போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.   இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்கள் ஒவ்வொன்றாக `சேனல் 4' டெலிவிஷன் அம்பலப்படுத்தி வருகிறது.
 
இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப்புலிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப்புலிகள் சரண் அடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.
 
கோத்தபய உத்தரவிட்டதும், சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். இந்த தகவலை அப்போது அருகில் இருந்த இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார். அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது நிïயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத்தூதராக பணியாற்றுகிறார்.  
 
போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படை வீரர்களில் ஒருவராக இருந்தவருமான பெர்னாண்டோ என்ற ராணுவ வீரர் `சேனல் 4' டெலிவிஷனுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள தகவல்கள் கல் மனதையும் கரையச் செய்வதாக உள்ளது.
 
தனது பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-
 
என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக்கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப்புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான்.   பெண்களை அடித்து உதைத்து துன்புறுத்தி கற்பழித்தனர்.
 
அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன். ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக்கிடந்ததை பார்த்தேன்.
 
இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.
<a href='http://ads.reach360ads.com/www/ads/click.php?n=a9a7d93e&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ads.reach360ads.com/www/ads/ad_view.php?zoneid=1189&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a9a7d93e&ct0=INSERT_CLICKURL_HERE' border='0' alt='' /></a>

ஆகசுட் 7- இல் பாசக கடல் முற்றுகைப் போராட்டம்; சுசுமா சுவராசு பங்கேற்பு

இந்திய நிலையில் இச்சிக்கலைக் கொண்டுபோகும் பா.ச.க.விற்குப் பாராட்டுகள். வெறும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் வாழ்விற்கும் தமிழ் ஈழ மலர்ச்சிக்கும் வழி வகையில் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஆகஸ்ட் 7-ல் பாஜக கடல் முற்றுகை போராட்டம்; 
சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்பு

First Published : 29 Jul 2011 12:25:12 PM IST


சென்னை, ஜூலை 29: ஆகஸ்டு 7-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக நடத்தும் கடல் முற்றுகைப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்தும், இதனை தடுத்து நிறுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.