சனி, 14 மே, 2011

Youth cong. completely washed out: No use of Raghul propoganda: இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி:இராகுல் பரப்புரை எடுபடவில்லை

தோழமைக் கட்சியின் தலைவரின் அகவை திறமை ஆகியவற்றைக்கூடப் பொருட்படுத்தாமல் அவரைப் புறக்கணித்த  போக்கு,தவறான அணுகுமுறை  ஆகியவற்றால் இராகுல் மண்ணைக் கௌவியுள்ளார். தமிழினப் பகையாளியாக இருக்கும்வரை அவரது கட்சிக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனம்திருந்தி தமிழினப் படுகொலையாளர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும் தமிழ் ஈழம் மலரவும் ஆவன செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாடு அவரை வரவேற்கும். இளைஞர் காங்.ஐ அடியோடு புறக்கணித்த தமிழக மக்களுக்குப் பாராட்டுகள். உற்சாகத்துடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி: ராகுல் பிரசாரம் எடுபடவில்லை
சென்னை, மே. 14-
 
 
மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் 29 ஆயிரத்து 204 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி. மு.க. வேட்பாளர் ராஜலட்சுமியிடம் படுதோல்வியை தழுவினார்.
 
அவரை போலவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா, ஆகியோரும் தோல்வி அடைந்தனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவரான ஜெயக்குமார், தொழில் அதிபர் வசந்தகுமார், செல்வப்பெருந்தகை, ஆகியோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.
 
வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஞானசேகரன், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் தோல்வி கிடைத்துள்ளது.   இந்த தடவை இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
 
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா (ஈரோடு மேற்கு), அறிவழகன் (அண்ணா நகர்), விஜய் இளஞ்செழியன் (ஆம்பூர்), அர்த்தநாரி (ஆத்தூர்), ஜோதிமணி (கரூர்), மகேந்திரன் (பேராவூரணி), வரதராஜன் (மதுரை தெற்கு), மயூரா ஜெயக்குமார் (சிங்காநல்லூர்), பெருமாள்சாமி (விளாத்திக்குளம்), நவீன் ஆம்ஸ்ட்ராங் (விருதுநகர்) ஆகிய 10 பேர் களத்தில் இறக்கப்பட்டனர்.
 
இவர்கள் 10 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.   தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்த ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் சென்று பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் எடுபடாமல் போய்விட்டது.

 
++++++++++++

Saturday, May 14,2011 05:22 PM, Mano said:
அது மட்டுமல்ல... ஈழத்தில் அப்பாவி தமிழர்கட்கு நடந்த கொடுமைகள் யாவும் இவர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பே இல்லை!.... அன்று நமக்காக இவர்கள் எந்தவித குரலும் கொடுக்கவில்லை... நம் குரல்களும் இவர்கள் காதில் விழவும் இல்லை... நம்கண்ணில் வந்த ரத்தக்கண்ணீர் தான் இன்று இவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது... 63 - க்கு 5 - கூட வந்திருக்க கூடாது! 0 தான் கிடைத்திருக்க வேண்டும்... மனிதாபம் அற்ற மகான்கள் அல்லவா அவர்கள்!....
Saturday, May 14,2011 05:21 PM, தமிழன் said:
ராகுல்காந்தி நீ காந்தி பெயரை இழிவு படுத்ததே தமிழனுக்கு தோரகம் செய்தல் இதன் நிலமை
On Saturday, May 14,2011 05:51 PM, subbiah said :
இந்திய பிரதமரை கொன்ற விடுதலை புலிகளை நீ ஆதரிகிரையே நீ ஒர் தேச துரோகி இல்லையா .
On Saturday, May 14,2011 06:02 PM, vivek said :
அப்போ இந்திரா காந்தி அஹ கொன்ன சிங்க் எல்லாம் தேச துரோகி இல்லையா,மன்மோகன் சிங் மகான் அஹ,

Saturday, May 14,2011 05:14 PM, புலி said:
ஆனந்த் தனித்து நின்னவங்களுக்குதான் உன்னோட கணக்கு எடுபடும் அதை முதலில் புரிந்து கொள் தி மு க வோட வாக்குலதான் அந்த அஞ்சு சீட்டும் கிடைச்சது தனித்து நின்னு உங்க சதவீதம் என்னன்னு காட்டுங்க அடுத்தவன் முதுகுல சவாரி செய்யாதீங்க முதலில் உங்க கட்சியில உள்ள ஒவ்வொரு கோஷ்டிக்கும் எவ்வளவு சதவீதம் ஒட்டு இருக்குனு பாருங்க எத்தனை இலட்சம் மக்களோட சாபம் இலங்கையில இருந்து கேட்டுருக்கும் மனசாட்சி உள்ள எல்லோருக்கும் இது புரியும் இன்னும் உங்களுக்கு தண்டனை முடியல கண்டிப்பா தொடரும். பாகிஸ்தானும் இந்தியாவும் பிரிஞ்சது மததால பாகிஸ்தானும் பங்களாதேசும் பிரிஞ்சது மொழியாள இந்த இரண்டுமால பிரிஞ்சி இருக்குற இலங்கையில மட்டும் எப்படி இருக்கும் இறையாண்மை பிடல் காஸ்ட்ரோ துப்பாக்கி எடுத்தா அது புரட்சி சே குவேரா எடுத்த அது புரட்சி மா சே துங் எடுத்தா அது புரட்சி அதுவே இலங்கை தமிழன் எடுத்தா அது தீவிரவாதமா எங்காவது ஒரு இடத்திலாவது விடுதலைப்புலிகள் சிங்கள பெண்களை கற்பழித்து இருக்கிறார்களா அதுவே சிங்கள ராணுவத்தை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை எங்கள் இதய தெய்வம் எம் ஜி ஆர் ஆதரவு பெற்ற விடுதலை புலிகளின் நோக்கம் கையளவு நிலத்திலாவது தமிழசிகள் கற்புடன் வாழ வேண்டும் என்பதுதான் நிச்சயம் ஈழம் பிறக்கும் எங்கள் இனமும் செழிக்கும். நன்றி தமிழக வாக்கள தெய்வங்கள்

அன்பழகன் முதல் தமிழரசி வரை 18 தி.மு.க. அமைச்சர்கள் தோல்வி

இனமானப் பேராசிரியர் அவர்கள் கூர்த்த மதியும் செயல்திறனும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர். தனது மூத்த நிலையை விட்டுக் கொடுத்து மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது அதனை ஏற்றதால் மக்களால் தள்ளப்பட்டாரா எனத் தெரியவில்லை.வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு  என்றாலும் அவரது தோல்வி வருத்தத்திற்குரியதுதான். அதுபோல் உபயதுல்லா அவர்கள், எளிமையும் கொடை உணர்வும் மிக்க்வர்.எனினும்  பன்றியோடு சேர்ந்த கன்று நிலைக்குத் தி.மு.க. சென்றமையால், இவர்கள் தோல்வியைத் தழுவினர். எனவே, கட்சியின் தலைமைப் பொறுப்பிற்குப் பேராசிரியர் வர வேண்டும்.  கலைஞர் தன் குடும்பத்தினர்  கட்சியின் முதன்மைப் பொறுப்பு எதிலும்  வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நாட்டு நலனுக்காகவும் தமிழியம் காக்கப்படவும் இவை தேவை. திருநாவுக்கரசர தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவராக இருப்பினும் சேராத இடம்  தனில் சேர்ந்து தமி்ழ்ப்பகைக்குத் துணை புரிந்துள்ளமையால் தோல்வியைத் தழுவி உள்ளார். இதனை அனைவரும் பாடமாகக் கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


அன்பழகன் முதல் தமிழரசி வரை 18 தி.மு.க. அமைச்சர்கள் தோல்வி

First Published : 14 May 2011 03:42:19 AM IST


சென்னை, மே 13: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. மூத்த அமைச்சர் க.அன்பழகன் உள்பட 18 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர்.முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன் உள்பட மொத்தம் 28 அமைச்சர்கள் தி.மு.க. சார்பில் போட்டியிட்டனர். இவர்களில் 8 பேர் மட்டுமே வெற்றியடைந்துள்ளனர். மீதமுள்ள 2 தொகுதிகளில் முடிவு அறிவிக்கப்படவில்லை.முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, டி.பி.எம். மைதீன்கான், சுப.தங்கவேலன், கா.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை அறிவிக்கப்படவில்லை. இந்தத் தொகுதிகளில் முறையே அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் அதிக அளவாக 35,079 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்வியடைந்த அமைச்சர்கள் விவரம் (தொகுதி, வெற்றிபெற்றவர், வாக்கு வித்தியாசம்):க.அன்பழகன் (வில்லிவாக்கம்) - ஜே.சி.டி. பிரபாகரன் (அ.தி.மு.க.) - 10,782.கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) - கே.குப்பன் (அ.தி.மு.க.) - 27,318.பரிதிஇளம்வழுதி (எழும்பூர்) - நல்லதம்பி (தே.மு.தி.க.) - 202.தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்) - ப.தன்சிங் (அ.தி.மு.க.) - 17,374.க.பொன்முடி (விழுப்புரம்) - சி.வி.சண்முகம் (அ.தி.மு.க) - 12,097.எஸ்.வீரபாண்டி ஆறுமுகம்(சங்ககிரி) - விஜயலட்சுமி பழனிச்சாமி (அ.தி.மு.க.) - 35,079.கே.என்.நேரு (திருச்சி தெற்கு) - என்.மரியம்பிச்சை (அ.தி.மு.க.) - 7,179.என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்) - டி.பி.பூனாட்சி (அ.தி.மு.க.) - 19,190.எஸ்.என்.எம்.உபயதுல்லா (தஞ்சாவூர்) - எம்.ரெங்கசாமி (அ.தி.மு.க.) - 7,329.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை) - வைகைச்செல்வன் (அ.தி.மு.க.) - 11,538.கீதா ஜீவன் (தூத்துக்குடி) - சி.த.செல்லபாண்டியன் (அ.தி.மு.க.) - 26,193.பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்) - பி.ஜி. ராஜேந்திரன் (அ.தி.மு.க.) - 299.சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி) - கே.டி.பச்சைமால் (அ.தி.மு.க.) - 17,804.பொங்கலூர் நா.பழனிச்சாமி (கோவை தெற்கு) - ஆர்.துரைசாமி (அ.தி.மு.க.) - 27,796.உ.மதிவாணன் (கீழ்வேளூர்) - பி.மகாலிங்கம் (சி.பி.எம்.) - 724.தமிழரசி (மானாமதுரை) - ம.குணசேகரன் (அ.தி.மு.க.) - 14,020.மு.பெ.சாமிநாதன் (மடத்துக்குளம்) - சி.சண்முகவேலு (அ.தி.மு.க.) - 19,669.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (குறிஞ்சிப்பாடி) - ஆர். ராஜேந்திரன்(அதிமுக) -23,848.முக்கியப் பிரமுகர்களின் வெற்றி, தோல்வி விவரம்: அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், 24,609 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையாவிடம் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.லட்சுமணனைவிட 29,906 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் 2,879 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் சார்பில் அறந்தாங்கியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ராஜநாயகத்திடம் 16,656 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க. கொறடா கே.ஏ. செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 41,192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ், அ.தி.மு.க. வேட்பாளர் பி.செந்தூர் பாண்டியனிடம் 16,086 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது - வைகோ

வைகோ கூறுவதுபோல் தேர்தல் ஆணையம் தன் கடமையில்  வென்றுள்ளது. அதற்கு மேலும் பல கடமைகள் காத்திருக்கின்றன, பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன, பெயர்  நீக்கம் முன் உரியவர்களுடன் தொலைபேசித் தொடர்பு,மின்னஞசல் தொடர்பு, பதிவு அஞ்சல் தொடர்பு , மேல் அலுவலரின் ஆய்வு முதலானவற்றின் மூலம் சரி  பார்த்தே  நீக்க வேண்டும்,  வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரின் பெயர்களும்  இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தேர்தல் ஆணையத்திற்குப் பாராட்டுகள. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது - வைகோ

First Published : 14 May 2011 03:33:47 AM IST


சென்னை, மே 13: சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து பல்வேறு கட்சியினர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கடந்த 5 ஆண்டுகளில் தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத்துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், பன்னாட்டுக் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட்டு நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின் வெட்டு, விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசுக்கு துணை நின்ற துரோகம் போன்ற செயல்களை மக்கள் சக்தி தூக்கி எறிந்துவிட்டது.தமிழக வாக்காளர்கள் ஊழல் பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்துக்குப் பொன் மகுடம் சூட்டிவிட்டனர். எதிர்காலத்தில் இனி அதிகார துஷ்பிரயோகத்தையும் ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் பாடத்தை வாக்காளர்கள் கற்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது.இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்: தமிழகத்தில் பண பலம், அதிகார பலம், ஜாதி ஆதிக்கம் ஆகியவற்றைத் தாண்டி ஆட்சி மாற்றத்துக்கு வாக்காளர்கள் வித்திட்டுள்ளனர். தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும்; இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்காது என்றெல்லாம் பேசி வந்த அறிவுஜீவிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நடுநிலையோடு சிறப்பாக இருந்த காரணத்தால் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் அதிக சதவீதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தலில் முதல் வெற்றி தேர்தல் ஆணையத்துக்குத்தான்.ஐக்கிய ஜனதா தளம் பொதுச் செயலாளர் டி.ராஜகோபால்: திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு தமிழக மக்கள் மிகச் சரியான தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்தும் திமுகவால் வெற்றி பெறமுடியவில்லை. குடும்ப ஆட்சி, ஊழல், விலைவாசி உயர்வு, மின் வெட்டு, மணல் கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்றவையே திமுக கூட்டணியின் தோல்விக்குக் காரணம்.வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி: கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் நீடித்து வந்த மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சியை மக்கள் தங்கள் ஓட்டுரிமையின் மூலம் அகற்றியுள்ளனர். இந்த மகத்தான மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். எதிர்வரும் ஐந்து வருட ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக அமைய வேண்டும். சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். முதலியார், வேளாளர், செங்குந்தர், சேனைத்தலைவர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி கல்வி வேலைவாய்ப்பில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.திண்டிவனம் ராமமூர்த்தி: தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். அவருடைய தலைமையில் தமிழகம், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மையான மாநிலமாகத் திகழ வேண்டும்.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்': தொல்.திருமாவளவன்

எதிர்கால ஆட்சிப்பொறுப்பிற்கு வர வேண்டியவர் தமிழ் ஈழ நண்பனாக இருந்துவிட்டு த் தமிழினப் படுகொலைகாரர்களுடன் சேர்ந்ததாலேயே தோல்வியைத் தழுவ நேர்ந்தது என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்ல எதிர்காலம் உள்ளது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


"மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்': தொல்.திருமாவளவன்

First Published : 14 May 2011 03:35:49 AM IST


சென்னை, மே 13: சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பகல் 12 மணிக்கு திருமாவளவன் சந்தித்தார். மதியம் 2 மணி வரை சந்திப்பு நீடித்தது.இதன்பின்பு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைக்கு உரிய பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அதற்கு ஏற்றாற்போல் கூட்டணியும் வலுவாக இருந்தது. ஆனால் எதிர்பார்க்காத முடிவுகள் வந்திருக்கின்றன.அரசியலில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பின்னர் ஆராய்வோம் என்று அவர் கூறினார்.



தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்: செயலலிதா உறுதி

தி,மு.க. அரசின் மீது மக்களுக்குச் சினம் ஏற்பட்டதற்கான காரணங்களை அறிந்தவர் என்ற வகையில் அவ்வாறான சூழல் வரா வண்ணம் திறம்பட நடந்து ஊழலற்ற ஆட்சியை அளித்து அனைவர்க்கும் தமிழ் வழியிலான கல்வி முதலான தமிழ் நலப்பணிகளிலும் மக்கள் நலப் பணிகளிலும் கருத்து செலுத்தி தமிழ் ஈழம் மலர ஆவன செய்து ஒளியமான தமிழகத்தை உருவாக்கும் செயற்பாட்டிற்கு வாழ்த்துகள்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்: ஜெயலலிதா உறுதி
First Published : 14 May 2011 01:00:47 AM IST

சென்னை, மே 13: தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோதே, சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தத் தேர்தலில் பண பலம் தோற்றுப் போய்விட்டது.கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மக்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்ததை உணர முடிந்தது. திமுக அரசின் மீதான கோபத்தை வெளிப்படுத்துவதற்கான நேரத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். இறுதியாக அவர்கள் அந்த வாய்ப்பை பெற்றுவிட்டனர்.இப்போது ஆட்சியை அமைத்து, தமிழகத்தை மறு சீரமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதுமாக சீரழிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தின் பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதை மீட்டெடுப்பது என்பது எளிதான காரியமல்ல.கடந்த 1989 முதல் 1991 வரை திமுக தலைமையிலான அரசு ஆட்சி செய்தபோது, தமிழகத்தின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால், 1991-ல் ஆட்சியைப் பிடித்த எங்களுக்கு, பொருளாதார நிலையை உயர்த்த வேண்டிய மிகப் பெரிய சவால் காத்திருந்தது. அந்த சவாலையும் எதிர்கொண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்தினோம்.1996-ல் மீண்டும் ஆட்சி மாறியது. இதனால் மாநிலத்தின் பொருளாதார நிலை மீண்டும் பாதிப்புக்கு உள்ளானது. அந்த இக்கட்டான சூழ்நிலையின்போது, அதிமுக 2001-ல் ஆட்சியை பிடித்தது.உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் மத்திய திட்டக் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், தமிழக பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தன. முதல்வராக பொறுப்பேற்ற என் மீதும் அந்த அமைப்புகள் பரிதாபப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் பொருளாதாரத்தை அதிமுக சீர்செய்தது.ஆனால், இந்த முறை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. 2001 நிலைமையுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் பிரச்னை இம்முறை 10 ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இதை சீர் செய்வது கடுமையான இலக்கு என்றபோதும், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதையும் சவாலாக எடுத்துக்கொள்வோம்.வாக்குறுதிகள் ஒன்றரை ஆண்டில்... தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கும். மேலும் தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அதிமுக மக்களுக்கு அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் முன்னுரிமை அளிக்கப்படும். ஆட்சிப் பொறுப்பேற்று தோராயமாக ஒன்றரை ஆண்டுக்குள் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான். தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால், இது சர்வதேசப் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.ஒன்று, போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு இலங்கை அரசும், இலங்கை அதிபரும் பணிந்தாக வேண்டும்.2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கண்காணிப்பு தொடருமா? இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே தனது நேரடிப் பார்வையில் எடுத்துக்கொண்டு நடத்துகிறது. எனவே, அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றே நான் கருதுகிறேன். கேபிள் டி.வி. அரசுடைமை எப்போது? எங்கள் தேர்தல் அறிக்கையில் என்னவெல்லாம் செய்வோம் என்று உறுதியளித்திருக்கோமோ அந்த வாக்குறுதிகளை தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க எண்ணியிருக்கிறோம்.தமிழக மக்களுக்கு செய்தி: தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், கடந்த 5 ஆண்டுகளாக எவ்வளவோ அல்லல்பட்டுவிட்டீர்கள், துன்பப்பட்டு விட்டீர்கள். அதையெல்லாம் மறந்துவிடுங்கள். கண்ணீர்விட்டீர்கள். உங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். இனி சிரித்துக்கொண்டேயிருங்கள். தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்று உறுதி கூறுகிறேன்.சட்டப் பேரவைத் தேர்தலை நேர்மையான, நியாயமான முறையில் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு என்னுடைய பாராட்டுக்கள். வாக்காளர்களுக்கும், தேர்தலில் கடுமையாக உழைத்த கூட்டணிக் கட்சி நண்பர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.பதவியேற்றதற்குப் பிறகு தில்லி செல்ல உள்ளதாக மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது கூறினார் ஜெயலலிதா.

Thanks for giving rest - kalaignar: ஓய்வு கொடுத்ததற்கு நன்றி: கருணாநிதி

ஓயாமல் உழைப்பவர்  என்பதை இவரை எதிர்ப்பவர்களும் ஒத்துக் கொள்வர்.இலக்கியங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தியதிலும் தன் உரையாடலைப் பேசிப் பழகியே பல கலைஞர்கள் உருவாகும் திறம் படைத்தவர் என்பதையும் யாவரும் உணர்வர். எனவே, தனிப்பட்ட முறையில் வெற்றி கண்டு்ள்ளார். இருப்பினும் கொள்கையில் தடம்புரண்டு காங். உறவிற்காக அமைதி காத்து ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்குத் தானும் காரணமாக இருந்தவர்  என்ற வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் விரட்டப்பட்ட காங். கிடம் அடிமையாகக் கிடந்தவர் என்ற முறையில் இனமானப்  பேராசிரியரை ஒதுக்கித் தன் குடு்ம்பத்தினர்களையே முன்னிலைப் படுத்தியவர்  என்ற நிலையில் கட்சியைத் தவறாக வழி நடத்திக் கட்சியின் தோல்விக்கும் தோழமைக் கட்சிகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்து விட்டார். வெற்றியும் தோல்வியும் இயற்கை என்று எண்ணாமல் தோல்விக்குக்காரணமான சறுக்குப் பாதையில் இருந்து நல்ல பாதைக்குச் செல்ல வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


ஓய்வு கொடுத்ததற்கு நன்றி: கருணாநிதி

First Published : 14 May 2011 04:27:20 AM IST


சென்னை, மே 13: தமிழக மக்கள் எனக்கு நல்ல ஓய்வை அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி என முதல்வர் கருணாநிதி கூறினார்.தேர்தல் முடிவு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவர், இவ்வாறு கருத்து தெரிவித்தார். தி.மு.க. கூட்டணி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், திருவாரூர் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.12-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Great success for A.D.M.K. alliance : அதிமுக கூட்டணி அமோக வெற்றி

ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்குத் துணை நின்றவர்களைப் பழி வாங்கிய தமிழக  வாக்காளர்களைப் பாராட்ட வேண்டும். தமிழ் ஈழ நண்பர்களாகக் குரல்  கொடுத்துக் கொண்டு காங்.உடன் கூட்டணி வைத்ததால் தோல்வியைத் தழுவின வி.சி.க.வும் பா.ம.க.வும். பேராசிரியரின் தோல்வி வருந்தத்தக்கது என்றாலும் வாகை  சூடிய பிராபாகரனும் செயல் திறம் மிக்கவரே! முன்னாள் துணை முதல்வர் தோற்றிருப்பின் முத்துக்குமாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருந்திருக்கும். எப்படியோ வெற்றி பெற்று விட்டார். இத் தேர்தலில்  வெற்றி வாய்ப்பை இழந்த கட்சிகளுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை வெற்றி பெற்றவர்கள் உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என நம்பலாம், புதிய அரசிற்கு வாழ்த்துகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


அதிமுக கூட்டணி அமோக வெற்றி

First Published : 14 May 2011 03:19:57 AM IST

Last Updated : 14 May 2011 04:53:40 AM IST

3-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா
சென்னை, மே 13: அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார்.அ.தி.மு.க. தான் போட்டியிட்ட 160 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவையும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளையும் வென்றுள்ளது. இந்தக் கூட்டணி ஏறத்தாழ 200 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. திமுக 119 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தக் கட்சியின் மூத்த அமைச்சர்களான க.அன்பழகன், வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், க.பொன்முடி, பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏப்ரல் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 10 மணி அளவில் அதிமுக கூட்டணி வெற்றி உறுதியானது.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அந்தக் கூட்டணியின் முன்னணி தலைவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.அ.தி.மு.க. 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைக்கிறது. தேமுதிக போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.கருணாநிதி வெற்றி:திமுக தலைவர் கருணாநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகிய ஒரு சிலரைத் தவிர அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். கருணாநிதிக்கு இணையான அனுபவம் கொண்ட மூத்த தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான க. அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரனிடம் 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.மூத்த அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, நேரு, பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் வெற்றி கடைசிவரை இழுபறியாகவே இருந்தது. இந்தத் தோல்வி திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.காங்கிரஸ் கட்சி மொத்தம் 63 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 2 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னணியில் இருந்தது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது. திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஞானசேகரன், பீட்டர் அல்போன்ஸ், யசோதா ஆகியோர் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.தகர்ந்தது தி.மு.க. கோட்டை: திமுக கோட்டை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த சென்னை நகரம் இப்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது. சென்னை நகரில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தவிர மற்ற எல்லா தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றுபெற்றுள்ளது. இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுடன் மாநில ஆளுநர் எஸ்.எஸ். பர்னாலாவைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெற்றிச் செய்தியை அடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா, ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.வாக்கு எண்ணிக்கை தாமதம்: பல புதிய விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது வாக்குகளை எண்ணுவதற்கு காலதாமதமானது. இதனால் இரவு 9.30 மணி அளவில்தான் 201 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.கட்சிகள்           வெற்றி   முன்னணி   மொத்தம் அதிமுக அணி அதிமுக                      148                 2                 150 தேமுதிக                      29                 1                  30 மார்க்சிஸ்ட்                 10                 0                  10 இந்திய கம்யூனிஸ்ட்                 9                 0                    9 மனிதநேய மக்கள் கட்சி                   1                 0                   1 புதிய தமிழகம்               2                 0                   2   பார்வர்டு பிளாக்            1                 0                   1 திமுக அணி திமுக                              21                 2                 23 காங்கிரஸ்                       5                 0                   5 பாமக                                2                  1                  3ஸ்ரீரங்கம் - அதிமுக வெற்றிஜெ.ஜெயலலிதா (அதிமுக) 1,05,328என்.ஆனந்த் (தி.மு.க.) 63,480வாக்கு வித்தியாசம் 41,848திருவாரூர் - திமுக வெற்றிமு.கருணாநிதி (தி.மு.க.) 1,09,014குடவாசல் ராஜேந்திரன் (அதிமுக) 58,765வாக்கு வித்தியாசம் 50,249கொளத்தூர் - திமுக வெற்றிமு.க. ஸ்டாலின் (தி.மு.க.) 65,462சைதை துரைசாமி (அதிமுக) 63,039வாக்கு வித்தியாசம் 2,423ரிஷிவந்தியம் - தேமுதிக வெற்றிவிஜயகாந்த் (தேமுதிக) 91,164சிவராஜ் (காங்கிரஸ்) 60,369வாக்கு வித்தியாசம் 30,795ஆலந்தூர் - தேமுதிக வெற்றிபண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் (தேமுதிக) 76,537டாக்டர் கே.காயத்ரி தேவி (காங்கிரஸ்) 70,783வாக்கு வித்தியாசம் 5,754
அய்யோ(யா) போச்சே...
மேற்குவங்க நிலவரம்மொத்த தொகுதிகள் - 294வெற்றி முன்னிலைதிரிணமூல் காங்கிரஸ் 182 2காங்கிரஸ் 42 0இடதுசாரி கூட்டணிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 39 1 பார்வர்டு பிளாக் 11 0புரட்சிகர சோஷலிச கட்சி 7 0இந்திய கம்யூனிஸ்ட் 2 0மற்றவர்கள் 8 0கேரள நிலவரம்மொத்த தொகுதிகள் 140காங்கிரஸ் கூட்டணி 72காங்கிரஸ் 38இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 20கேரள காங்கிரஸ் (மானி) 9எஸ்.ஜே. (டி) 2கேரள காங்கிரஸ் (ஜோசப்) 1கே.ஆர்.எஸ்.பி. (பி) 1கேரள காங்கிரஸ் (பாலகிருஷ்ணபிள்ளை) 1இடதுசாரி முன்னணி 68மார்க்சிஸ்ட் 45இந்திய கம்யூனிஸ்ட் 13மதச்சார்பற்ற ஜனதா தளம் 4தேசியவாத காங்கிரஸ் 2புரட்சிகர சோஷலிச கட்சி 2ஐ.என்.டி. (எல்.டி.எப்) 2அசாம் நிலவரம்மொத்த தொகுதிகள் 126காங்கிரஸ் 78அசாம் கண பரிஷத் 10பாஜக 5அசாம் ஐக்கியஜனநாயக முன்னணி 18போடோமக்கள் முன்னணி 12திரிணமூல் காங்கிரஸ் 1மற்றவை 2புதுச்சேரி நிலவரம்மொத்த தொகுதிகள் 30என்.ஆர்.காங்கிரஸ் 15காங்கிரஸ் 7அ.தி.மு.க. 5தி.மு.க 2சுயேச்சை 1


வியாழன், 12 மே, 2011

யாழ்ப்பாணக் கடற்பிரதேசம் திடீரென சிவப்பு நிறமாக மாற்றம்

படுபாவிகள். தமிழ் மக்களை வெட்டிக்கடலில் எறிந்தும் இருக்கலாம். எவ்வாறாயினும்  இனப்படுகொலையில் தொடர்புடைய அனைவரும் தண்டனை பெறுவது உறுதி,. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


யாழ்ப்பாணக் கடற்பிரதேசம் 
திடீரென சிவப்பு நிறமாக மாற்றம்

First Published : 12 May 2011 05:59:56 PM IST


கொழும்பு, மே.12: இலங்கையில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பிரதேச நீர் திடீரென சிவப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனவடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீரே அவ்வாறு  சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை அவ்வாறு கடலில் சிவப்பு நிறமாக நீர் தென்படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.கடல் நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அதற்காக அந்த கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கருத்துகள்

இலங்கை ராணுவம் கொன்று குவித்த, தமிழர்களின் குருதியாக இருக்கலாம். கடவுள், இப்போது கண்ணில் காட்டுகிறார் போல.
By கம்பம். பி.டி.முருகன் திருச்சி
5/12/2011 6:37:00 PM

speaking photo by dinamalar


Sculpture of malai kaali memorial stone found in kalvarayan hills : கல்வராயன் மலையில் மலைக்காளி நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

வரலாற்றுப் பண்பாட்டு உணர்வுடன் இது போன்ற செயதிகளைத் தொடர்ந்து வெளியிடும் தினமணிக்குப்  பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கல்வராயன் மலையில் மலைக்காளி நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

First Published : 12 May 2011 12:53:35 AM IST


எருக்கம்பட்டுமலையில் கிடந்த நடுகல், தேவனூர்மலையில் உள்ள நடுகல், ராகுத்தன்நல்லூர்மலையில் கிடந்த நடுகல்.
கள்ளக்குறிச்சி, மே 11: கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி, வரலாற்றுத் துறை மாணவர் ஆரோக்கிய ஜெயசீலன், காரல் மார்க்ஸ், அமெரிக்க பொறியாளர் எய்த்தான் டோரான் அண்மையில் கண்டெடுத்தனர்.  ÷விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது கல்வராயன்மலைப் பகுதியாகும். கள்ளக்குறிச்சியில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் இம்மலை அமைந்துள்ளது. மலையின் உயரம் 1500 மீட்டரும், 600 சதுர மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். இம் மலையில் தேன்பாடி, சிறுக்கலூர், பேராரு, மேகம், முட்டறவி உளளிட்ட 10 அருவிகள் உள்ளன.  ÷15 பஞ்சாயத்துகளை கொண்ட பகுதியாகும். இம் மலையை குரும்பக் கவுண்டன், சடையக் கவுண்டன், அறையக் கவுண்டன், சாதாக்கவுண்டன் உள்ளிட்டோர் ஆண்டு வந்தனர்.  ÷பின்னர் 23.06.1976-ல் கொத்தடிமை முறை சட்டம் செல்லும் என்பதன்படி கொத்தடிமை முறையிலிருந்து ஆகஸ்ட் மாதம் 1976-வது ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். ÷இந்த நடைமுறைகள் இருந்தபோது, சென்னை மாநில வருவாய்த் துறைக்கு தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக பத்பநாபன் இருந்தார்.÷  ÷5.9.77-ல் இந்த நிலையில்தான் கல்வராயன்மலைக்கென்று ஒரு தனி சிறப்புநிலை ஆட்சியர் சம்பந்தம், வருவாய் கோட்டாசியர் செங்கல்வராயன், தனி காவல் துணை ஆய்வாளர் முருகையன் பணியில் இருந்தனர்.  ÷இம் மலையில் தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி, வரலாற்றுத் துறை மாணவர் ஆரோக்கிய ஜெயசீலன், கல்வராயன்மலை சிறப்பு கொத்தடிமை மக்களின் வாழ்வும் வரலாறும் புத்தக இணை ஆசிரியர் எம்.காரல்மார்க்ஸ் மை இந்தியா கிராமப் புற ஆய்வாளர் அமெரிக்க பொறியாளர் எய்த்தான் டோரான் மலையின் வரலாற்றுக்கு களப்பணியில் எருக்கம்பட்டு கிராமத்தில் ஈடுபட்டிருந்தனர்.  ÷அப்போது மலை காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை கண்டெடுத்தனர். இந்த நடுகல் சிற்பம் குறித்து கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைப் பெருந்தலைவர் இன்னாடு உண்ணாமலை, மலையக விவசாயி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் ஊர் வழக்கத்தை கூறினர்.  மலை வரலாறு  ÷அக்கா தங்கை இரண்டு பேர் மலையில் வாசம் செய்து வந்துள்ளனர். இவர்களின் தங்கைக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.  ÷மலைக்காட்டில் அக்காள், தங்கை இருவரும் குழந்தையை தூக்கிக் கொண்டு மூவரும் காட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.  ÷அங்கு வந்ததும் தங்கை தன் பெண் குழந்தையை அக்காவிடம் கொடுத்து, "பார்த்துக் கொள். நான் காட்டுக்குள் சென்று நமது பசிக்கு காரக்காய், சூரக்காய், கள்ளுமடையான், பன்னைக்கீரையைத் தேடி பார்த்து பறித்து ஆய்ந்து எடுத்து வருகிறேன்' என்று கூறி சென்று விட்டார்.  ÷சற்று நேரம் ஆனதும் இவளின் அகோர பசிக்கு தங்கையின் பெண் குழந்தையை கால் பகுதியில் இருந்து தனது வாய் வழியாக விழுங்க ஆரம்பித்து விட்டாள்.  ÷அப்போது குழந்தை அழ ஆரம்பித்து தொடர்ந்து அழும் சப்தம் விட்டு விட்டு வந்து கொண்டு இருக்கவே சப்தம் கேட்டு கீரை பறிக்கப் போன குழந்தையின் தாய் ஓடிவந்துள்ளார்.  ÷தன் குழந்தை, அக்காளின் அகோர பசிக்கு, கால் பகுதியிலிருந்து உடல், வயிறு, மார்பகம் பகுதி வரை விழுங்கி இருப்பதைப் பார்த்ததும் அழுது கதறிக் கொண்டு "அக்கா மிஞ்சாதே' என்று குரல் கொடுத்தும் அவர் குழந்தையை விழுங்குவதை அப்படியே நிறுத்தியுள்ளார். அப்போது கழுத்துக்கு மேல் தலை பகுதி வெளியில் நின்று விட்டது.  ÷இந்த அகோர நிகழ்வை பார்த்த தங்கை, கோபத்தோடு அக்காவிடம், "நீ வெங்கோடு, எருக்கம்பட்டு, நடுப்பகுதி காட்டுக்குள் போய் இருந்துக் கொள். நான் பட்டுலேயே இருந்துக்கிறேன் உனக்கும், எனக்கும் ஒத்துவராது. உனக்கு மக்களை விழுங்கும் வேங்கை பசி இருக்கும்வரை நீ தனியாக இருக்க வேண்டும்.  ÷உனக்கு என்னிக்கு காய்கனி பசி எடுக்கிறதோ? அன்று நான் வசிக்கும் பட்டு மக்கள் யாரிடமாவது கனவில் வந்து என்னைப் பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறாயோ? அப்போது ஊர்கூடி ஒன்று திரண்டு அங்கு வந்து மலை நாட்டில் கிடக்கும் உணவு தானியங்களையும் காய்கனிகளையும், காட்டு பழவகைகளையும் எடுத்துக் கொண்டு வருவோம். அன்றுவரை யாரும் உன்னை வந்து தனியாக பார்க்க மாட்டோம்.  ÷"அங்கு வரும்போது பிறந்த மேனியாகவோ அல்லது வெள்ளை ஆடை உடுத்தி நீ இருக்கும் சம்பாவி அம்மை சோலைக்கு வருவோம். உன்னை பார்க்க பெண்கள் வரமாட்டோம். ஆண்கள் மட்டும் வருவார்கள்' என்றாள்.  ÷அந்த காலம் முதல் 2011-ம் ஆண்டுவரை அந்த சம்பாயி அம்மா யார் சொப்பணத்தில் எந்த ஆண்டு எப்போ வரசொல்லுகிறாளோ? அந்த ஆண்டு காட்டுசோலை கோயிலுக்கு என்று மலை நாட்டு கிராம நெம்பியான் பூசாரி என்று ஒருவரை நியமனம் செய்து பூஜை செய்து படையல் இட ஊர்மக்கள் நியமிப்பர்.  ÷நல்ல விசேஷமாக, சம்பாவி என்று இருந்து மருவி சம்பாயி அம்மா என்று விளங்கும் மலைகாட்டு காளிதேவிக்கு பொங்கல், பூஜை நடைபெறுமாம். இப்படி பூசாரியாக (நெம்பியான்) இருந்து நடத்தியவர் இறந்து விடுவது உண்டாம்.  ÷அதனால் இந்த சம்பாவி அம்மாளுக்கு சாமி கனவு சொப்பனம் கிடைக்க, பத்து, பதினைந்து ஆண்டு கூட ஆகுமாம் என்று கூறினர். இந்த செய்தியை விளக்கும் வகையில் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ÷இந்த நடுகல் 4 அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்டது. முழு பலகை கல்லான இந்நடுக்கல், புடைப்பு சிற்பங்களைக் கொண்டது. இந்த உறவு அமைப்பைக் கொண்டு பார்த்தால் மலைக்காளி அமைப்பைக் கொண்டு காணப்படுகிறது. ஆனால் மலை கிராம மக்கள் சம்பாயி அம்மா என்று அழைக்கின்றனர்.  ÷மலைக்காளி தலையில் கிரீடம் தரித்து விரிசையுடன் காணப்படுகிறாள். மூக்கில் புல்லாக்கு, காதணி, கழுத்து மாலைகள் ஆடை அணிகள் தரித்தும் காணப்படுகிறாள். இவள் எட்டு கைகளை கொண்டு விளங்குகிறாள்.  ÷கையில் சூலம், வாள் கேடயம், கபாலம், வில் அம்பு, கஜகஸ்தம் வைத்து இருக்கிறாள். மேலும் ஒரு குழந்தையின் உடலை தனது கையில் வைத்திருக்கின்றாள். இவள் இடது காலை ஊன்றி அதன் கீழ் வீரன் இறந்த நிலையில் இருப்பதும் அதன் மீது சூலம் பாய்ச்சுவது போலவும் காணப்படுகிறாள். வலதுகால் மடக்கிய நிலையில் அமர்ந்துள்ளாள்.  ÷மலைக்காளிக்கு நேர் எதிர்புறம் இரண்டு வீரர்கள் ஆடையின்றி காணப்படுகின்றனர். அதன் கீழ்புறம் இரண்டு பெண் உருவம் காணப்படுகிறது. அவர்கள் நடனம் ஆடி திருவிழா கோலம் கொண்டு இருப்பதை இது உணர்த்துகிறது.  ÷இதன் காலம் சரிவர உணரப்படவில்லை. நடுகல் அமைப்பை வைத்துப் பார்த்தால் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தெரிகிறது என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை கௌரவ விரிவுரையாளர் பி.சுதாகர்.  ÷சூரனை சூலாயுதத்தால் காலில் போட்டு மிதித்து குத்துவதுபோல் உள்ளது. தேவனூர் சோலையில் இராகுத்தன் நல்லூர் மலை ஐய்யனார் கோயில் அருகிலும் குதிரையில் சவாரி செய்வது போலவும் வனக்காளி சிற்பம் உள்ளது.

thamizh nadu student selected by writing in thmizh : முழுவதும் தமிழில் தேர்வு எழுதி இஆ.ப. தேர்ச்சி பெற்று மாணவர் சாதனை

பாராட்டுகள். தேர்ச்சிக்கு உதவிய தமிழன்னையை மறவாமல்  தமிழ்ப்பற்றுடனும் மனித நேயத்துடனும் மக்கள்  தொ்ண்டாற்றிச்சிறக்க வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

முழுவதும் தமிழில் தேர்வு எழுதி ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று
மாணவர் சாதனை

First Published : 12 May 2011 02:39:28 AM IST


சென்னை, மே 11: திருவாரூரைச் சேர்ந்த மாணவர், இந்தியக் குடிமைப் பணித் தேர்வை முழுவதும் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.  திருவாரூரைச் சேர்ந்த சீனிவாசன், இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என் மூன்று நிலைகளையும் தமிழில் எழுதியுள்ளார்.  தாய் மொழியில் தேர்வு எழுதிய இவர் முதல் முயற்சியிலேயே 134-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.  தமிழ் இலக்கியப் பட்டதாரியான இவர், மின் ஆளுமைத் துறையை மேம்படுத்தும் ஆவல் உள்ளது என்றார்.

thamizh nadu students created record I.A.S. :தமிழ்நாட்டுப் பெண் இ.ஆ.ப. தேர்ச்சியல் முதலிடம்

அனைவருக்கும் வாழ்த்துகள். மக்களுக்குத் தொண்டாற்றும் நற்பணிக்காகவே ஊதியம் தருவதை எண்ணி நேர்மையாகவும் கடமை உணர்வுடனும் மனித நேயத்துடனும் தாய்மொழிப்பற்றுடனும் உழைத்து உயர்ந்து நாட்டையும் உயர்த்தப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




தமிழ்நாட்டுப் பெண் ஐ.ஏ.எஸ்ஸில் முதலிடம்

First Published : 12 May 2011 01:29:31 AM IST

Last Updated : 12 May 2011 03:02:09 AM IST

முதல் ரேங்க் பெற்ற திவ்யதர்ஷிணி, 3-வது ரேங்க் பெற்ற வருண்குமார், 4-வது ரேங்க் பெற்ற அபிராமசங்கர், 8-வது ரேங்க் பெற்ற அரவிந்த்.
சென்னை, மே 11: இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) 2010 தேர்வில் தமிழக மாணவி முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.  மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது ரேங்குகளையும் தமிழகம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.  இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.  2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்திலிருந்து 22 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 847 பேர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 240 பேர்.  கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திவ்யதர்ஷிணி என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் 3-வது ரேங்க்கை தமிழகத்தைச் சேர்ந்த வருண்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார்.  அபிராமசங்கர் என்ற மாணவர் 4-வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதோடு, மிகக் குறைந்த 22 வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், இப்போது குடும்பத்துடன் கேரளத்தில் வசித்து வருகிறார். இதுபோல் 8-வது ரேங்க்கை அரவிந்த் என்ற தமிழக மாணவர் பெற்றுள்ளார். முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறை.  கடந்த 2005-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மாணவர் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.       
 
ஐ.ஏ.எஸ்., இறுதித்தேர்வு முடிவு வெளியீடு; தமிழக மாணவர்கள் அபார சாதனை
 
சென்னை:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான இறுதிக்கட்ட தேர்வில், தமிழக மாணவர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்ததுடன் இல்லாமல், ஒட்டுமொத்தத்தில் 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்று சாதித்துள்ளனர்.

புதன், 11 மே, 2011

தமிழ்மொழி தொன்மையை வெளிப்படுத்தும் பேரகரமுதலி தொகுப்பை கருணாநிதி வெளியிட்டார்;

கட்சிக் கண்ணோட்த்திலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையிலும் இதனைக் காணக் கூடாது. பெருமுயற்சி ஒரு கட்டத்தில் நிறைவுற்றுள்ளது. இருப்பினும் உரிய இயக்ககத்தை மூடிவிடக்கூடாது. விடுபட்ட சொற்களைச் சேர்க்கவும் மேலும் செம்மையாக்கவும் இவ்வியக்ககம் தேவை. மொழிஞாயிறு பாவாணர் அவர்களின்  பணியைத் தொடர்ந்து பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! /  எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


தமிழ்மொழி தொன்மையை வெளிப்படுத்தும் பேரகரமுதலி தொகுப்பை கருணாநிதி வெளியிட்டார்; 37 ஆண்டு பணி முடிந்தது
சென்னை, மே.10-
 
செம்மொழியாம் தமிழ் மொழியின் தனித் தன்மையையும், தொன்மையையும், மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகரமுதலி ஒன்றை உருவாக்கும் திட்டம், 8-5-1974 அன்று தி.மு. கழக அரசு பொறுப்பிலே இருந்த போது மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டு, அந்தப் பணியை முனைவர் இரா.மதிவாணன் பின்னர் பொறுப்பேற்றுத் தொடர்ந்து பணியாற்றி, அகர முதலியின் மடலங்களை வரிசையாக அச்சியற்றி வெளியிட்டதோடு, அதன் இறுதி மடலமாகிய 12-ம் ஆண்டு மடலத்தினை திட்டத்தின் 31-வது வெளியீடாக தயாரித்து, இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதன் முதல் பிரதியை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்கள். 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மாபெரும் பணி இத்துடன் முடிவுறுகிறது.
 
இந்த பன்னிரெண்டாம் மடலம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வெளியிடும் போது இதன் மதிப்புறு இயக்குநர் முனைவர் இரா.மதிவாணன் உடன் இருந்தார்.
 
 
 
Tuesday, May 10,2011 04:19 PM, உண்மை said:
ஐயோ இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலா சாமி .....
On Tuesday, May 10,2011 04:31 PM, மணிமகன் said :
பாராட்டத்தக்க பணியைத் தமிழக அரசு செய்து முடித்திருக்கிறது.இந்த நூல்களை எல்லோரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய அரசு ஆணையிடவேண்டும்.மேலும் அனைத்து கல்லூரிகள்,பல்கலைக் கழகங்களிலும் இந்நூல்கள் வைக்கப்படவேண்டும்.
On Wednesday, May 11,2011 12:34 AM, karu naai nidhi said :
பாராட்டத்தக்க பணியைத் தமிழக அரசு செய்து முடித்திருக்கிறது ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி The below are definition to Karu Naai Nidhi காலை ஒரு கண்மணியிடம் கோப்பியும் இட்லியும் மாலை ஒரு மங்கையிடம் மணக்கும் புறியாணி செமியாக்குணம் போக்க சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும் ஒரு செலுக் கூட்டம். நல்லெண்ணெய் தோசை நாட்டுக்கோழி சூப்பு பல்லிடுக்கில் தங்கிவிடா மெல்லிய மீன் பொரியல் சில்லென்று பருகிவிட சிறப்பான மினரல் நீர் பாலும் பழமும்
 
Tuesday, May 10,2011 10:00 PM, mahendran.g.k. said:
செம்மொழியாம் தமிழ் மொழி kani moli யின் தனித் தன்மையையும், தொன்மையையும், மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகரமுதலி இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதன் முதல் பிரதியை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்கள். 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மாபெரும் பணி இத்துடன் முடிவுறுகிறது. 
Tuesday, May 10,2011 07:47 PM, maamalai said:
தமிழை வைத்து அரசியல் வியாபாரம் ,இவர்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?வியாபாரம் ஒன்றே குறிக்கோள் .இது போன்ற வேலை செய்வதற்குத்தான் தமிழ் பல்கலைகழகம் மற்றும் தமிழ் அறிஞர்கள் உள்ளார்கள் ,இவர்களிடம் தமிழ் தப்பிப்பிழைத்தால் போதும் தானாக வளரும். 
 
Wednesday, May 11,2011 10:28 AM, தமிழ்நாடன் said:
மதிவாணன் அவர்களின் அயராத உழைப்புக்கு பாராட்டுகள்.
 
 
 

opinion about election results by Kavin


கற்பனை என்பது அவரவர் உரிமை. முடிவு வரும்வரை என்ன வேண்டும் என்றாலும் கற்பனை செய்து கொள்ளலாம். நமக்குத் தேவை தமிழுக்குத்  தலைமையும்  தமிழர்க்கு முன்னுரிமையும் தரும்  - தமிழ் ஈழ ஏற்பைப் பெற்றுத் தரும் தமிழ் நல அரசு.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! /  எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

முந்தும் தி.மு.க.! தொடரும் அ.தி.மு.க !
கவின் மதிப்பீடு



May 11, 2011 by கவின் in கவின் வாசல் 2 comments
Blog post image #1
ஒரு மாத கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வர இருக்கிறது. மே 13ந் தேதி காலை 8.30 மணி முதல் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தெரியவரும். அடுத்து ஆட்சியமைக்கும் வாய்ப்பை தமிழக மக்கள் யாருக்கு வழங்கி யிருக்கிறார்கள் என்பது அன்றைய தினம் மாலையில் முடிவாகிவிடும்.
எந்தத் தேர்தலையும்விட, இந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கடுமையான போட்டியைச் சந்தித்தது. இரண்டு பெரிய அணிகளுக்குமே வாக்கு பலம் ஏறத்தாழ சமமாக இருந்ததால், வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி மிகக்குறைவாகவே இருக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கணிப்பு. கள நிலவரமும் அதுதான். அதனால்தான் இரண்டு அணிகளில் உள்ள கட்சிகளுமே வெற்றி நிச்சயம் என்று நம்புகின்றன.
அ.தி.மு.க. தரப்பின் எதிர்பார்ப்பு 160 முதல் 180 தொகுதிகளாக இருக்கிறது.
தி.மு.க தரப்பில் அதிகபட்சம் 140 அல்லது 150 தொகுதிகள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முடிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் ஆங்கில ஊடகங்களுக் கிடையே பலத்த வேறுபாடு நிலவுகிறது. ஒரு சேனல் தி.மு.க.வுக்கு 130 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது. மற்றொரு சேனல் அ.தி.மு.க.வுக்கு 132 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்கிறது.
மேற்குவங்க மாநிலம் தொடர்பான கருத்துக்கணிப்பில் அனைத்துச் சேனல்களுமே மம்தா பக்கம் பலமான காற்று வீசுவதாகத் தெரிவிப்பதையும், தமிழகத் தேர்தல் களம் குறித்து மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவதையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கும்மிடிப்பூண்டியில் தொடங்கி குமரிமுனை வரை ஒரே மாதிரியான போக்கு நிலவுவது வழக்கமாக இருந்து வந்தது. அந்த நிலை, கடந்த தேர்தல்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு விதமான போக்கு நிலவுகிறது. மேற்கு மண்டலம் எனப்படும் கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமாகவும் வடக்கு மண்டலம் தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமாகவும் அமைந்துள்ளது.
தெற்கு மண்டலத்தில் இரு அணிகளும் பலத்த போட்டி போடுகின்றன. அதில், அ.தி.மு.க. அணி சற்று கூடுதல் பலத்துடன் உள்ளது. மத்திய மண்டலமான டெல்டா மாவட்டங்களிலும் போட்டி வலிமையானதுதான். இங்கு, தி.மு.க. கூட்டணிக்கு கூடுதல் பலம் காணப்படுகிறது.
எந்த மண்டலத்திலும் சேராத சென்னைக்குட்பட்ட தொகுதிகளில் இந்த முறை, தி.மு.க. அணி படுவீழ்ச்சியடையும் என்பது பொதுவான எதிர்பார்ப் பாக இருந்தது. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய மதிப்பீடுகளின்படி, சென்னையில் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலானவை அதற்குச் சாதகமாகவே இருக்கின்றன. சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மிகப் பெரும்பாலான வை அ.தி.மு..க அணிக்குத் தாரை வார்க்கப்பட்ட தொகுதிகளாகவே இருக்கின்றன.
இத்தகைய நிலவரங்களை கவனத்தில் கொள்ளாமல் வெறும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், பொதுவான ஃபார்முலாவைக் கொண்டு கணிப்புகளை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது.
இந்தத் தேர்தல் களத்தில், தி.மு.க. அணி தனது சாதனைகளை முன்வைத்து வாக்கு கேட்டது. அ.தி.மு.க. அணி, தி.மு.க. ஆட்சியின் ஊழல் முறைகேடுகளையும் தி.மு.க.வின் குடும்ப அரசியலையும் முன்னிறுத்தி வாக்கு கேட்டது.
தி.மு.க. அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்திருக் கின்றன. அதே நேரத்தில், ஒவ்வொரு ஊரிலும் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதிகளிலும் கடும் அதிருப்தியை உண்டாக்கி யுள்ளன. குறிப்பாக, சில அமைச்சர்கள், அவர்களின் ஆதரவாளர்கள், தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் பொதுமக்களை நடுங்க வைத் திருப்பதைத் தேர்தல் களத்தில் காண முடிந்தது. அத்துடன், தி.மு.க. வேட்பா ளர்களுக்கு எதிராக தி.மு.க. பிரமுகர்களே பல உள்குத்து வேலைகளைப் பார்த்துள்ளனர். இவையெல்லாம் தி.மு.க. அணிக்கு ஏற்பட்ட பாதிப்புகள்.
அ.தி.மு.க. அணிக்குச் சாதகமாக இருந்த முக்கிய அம்சங்கள் எவை யென்றால், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பலமில்லாத காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கித்தந்த 63 தொகுதிகள், உள்ளூர் தி.மு.க.வினரின் நடவடிக்கைகள், ஊடகங்களின் பலத்த ஆதரவு, படித்த வாக்காளர் களிடையே நிலவிய மாற்றம் தேவை என்ற மனநிலை ஆகியவையாகும்.
இந்த நிலையில், தேர்தல் களத்தில் தி.மு.க. தரப்பு மேற்கொண்ட அணுகுமுறைகள், கூட்டணிக் கட்சியினருடனான ஒருங்கிணைப்பு, தாராளமான செலவு ஆகியவை அதன் பலவீனங்களைப் பின்தள்ளியது.
அ.தி.மு.க. அணியில் தொண்டர்களின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருந்தன. குறிப்பாக, முதன்முறையாகக் கூட்டணி கண்ட தே.மு.தி.க.வின் தொண்டர்கள் வெற்றி வெறியுடன் வேலை பார்த்தார்கள். ஆனால், இதனை ஒருங்கிணைக்கக்கூடிய அளவில் கூட்டணித் தலைமையின் அணுகுமுறைகள் இல்லை. அத்துடன், தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர் களில் பெரும்பாலானவர்கள் செல்வி ஜெயலலிதாவை மாற்று சக்தியாக வோ, மாற்றம் தரக்கூடிய தலைவர் என்றோ கருதவில்லை.
10 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஜெயலலிதா , தமிழகம் முழுவதும் செய்த பிரச்சாரத்தில் தன்னுடைய சாதனைகள் என்று எதையும் சொல்லமுடியவில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அடியொற்றி அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதா, அதில் தெரிவித்த திட்டங்களையும்கூட தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதாக வலியுறுத்தவில்லை.
அதே நேரத்தில், தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தனது 5 ஆண்டு கால சாதனைகளை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதைத் தி.மு.க.வினர் தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.
இலவசத் திட்டங்களால் நேரடிப் பலனடைந்த பெண்களின் வாக்கு இம்முறை தி.மு.க.வுக்கு ஆதரவாகத் திரும்பியிருப்பது அந்த அணிக்கு சாதகமாக உள்ளது. அனைத்துப் பிரிவினரையும் மனதிற்கொண்டு நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களும் வாக்கு வங்கியாக மாறியிருப்பதை தேர்தல்கள ஆய்வுகளில் அறிய முடிகிறது.
இந்த வாக்குவங்கியை ஒருமுகப் படுத்துவதில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அணுகுமுறைகள் நல்ல பலன் தந்துள்ளன. கட்சிக்காரர்களைத் தேர்தல் பணிகளில் முடுக்கிவிட்டது, கூட்டணிக் கட்சியினரை ஒருங்கிணைத்துச் சென்றது, எதிர்க்கட்சியினர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து சாதனைகளைச் சொல்லியே ஓட்டு கேட்டது, அதன் மூலம் பெண்களை அதிகளவில் கவர்ந்தது என மு.க.ஸ்டாலினின் தேர்தல் பணிகள் தி.மு.க. கூட்டணிக்கு வலு சேர்த்தன.
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், திட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையும், ஜெயலலிதா பதவிக்கு வந்தால் இவையெல்லாம் நிறைவேற் றப்படுமா என்ற பயமும் பெண்கள் பலரிடம் காணப்படுகிறது. இதுவும் தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமான அம்சங்கள்.
புதிய தலைமுறை வாக்காளர்களில் நகர்ப்புறங்களைச் சார்ந்த - படித்த வாக்காளர்கள் மாற்றம் தேவை என்ற மனநிலையில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில், கிராமப்புறத்தைச் சேர்ந்த புதிய தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு தி.மு.க. அணிக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
2ஜி உள்ளிட்ட விவகாரங்களும் நகர்ப்புறத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கிராமப்புறங்களில் மின்வெட்டு, விலைவாசியேற்றம் போன்றவை தி.மு.க.வின் வாக்கு வங்கியை ஓரளவு பாதித்துள்ளது. இவையெல்லாம்தான் தி.மு.க. அணிக்கும் அ.தி.மு.க. அணிக்குமான போட்டியைக் கடுமையாக்கியது.
இந்தப் போட்டியின் இறுதிக்கட்டத்தில், தி.மு.க. கூட்டணி மேற்கொண்ட தேர்தல் நிர்வாகத்திறன் (Poll management), தனக்கு ஆதரவான வாக்குகளை வாக்குச்சாவடிக்குக் கொண்டுவரும் பணி, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியையும் மீறி வாக்காளர்களை ‘கவர்’ செய்த முறை உள்ளிட்டவற்றால் அந்த அணி, அ.தி.மு.க.வைவிட சற்று கூடுதல் இடங்களைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, அதன் பொருளாளர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் பலர் உள்ளிட்டோர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்கின்றனர். அதே நேரத்தில், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி போன்றவர்கள் வெற்றிக் குத் திணறுகிறார்கள்.
புதிதாகக் களம் காணும் தி.மு.க. வேட்பாளர்களில் ஆயிரம் விளக்கு அசன் முகமது ஜின்னா, நன்னிலம் இளங்கோவன், திருவிடைமருதூர் கோவி.செழியன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, சாத்தூர் கடற்கரைராஜ் உள்ளிட்ட பலருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அதே நேரத்தில், இவர்களில் பலருக்குச் சொந்தக் கட்சிக்காரர்களே குழி பறித்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில், காங்கிரசின் நிலை படுகவலைக்கிட மாக உள்ளது. பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் தி.மு.க. கூட்டணிக் குப் பலம் சேர்க்கிறார்கள்.
அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க தனது தனிப்பட்ட செல்வாக்கால் தி.மு.கவின் எண்ணிக்கையை நெருங்கும் அளவுக்கு வெற்றியினைப் பெறும் வாய்ப்புள்ளது. எனினும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி எண்ணிக் கை குறிப்பிடும்படியாக இல்லை. வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கும் என்பதால், இரு அணிகளுக்குமான வெற்றித் தொகுதிகளின் எண்ணிக்கைக்கிடையிலான வேறுபாடும் மிகக் குறைவாகவே இருக்கும். அப்படியென்றால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படுமா?
ஏற்படும். 1984 தேர்தலுக்குப் பிறகு, ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அதில் இம்முறை மாற்றம் ஏற்பட்டு, ஆளும் தி.மு.க.வே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தி.மு.க. கூட்டணிக்கு 120 முதல் 130 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தோழமைக் கட்சிகளின் துணையுடன் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழலுக்குத் தி.மு.க. உள்ளாகிறது. அ.தி.மு.க. அணிக்கு 100 முதல் 110 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழக சட்டமன்றம் புதிய பரபரப்புகளைக் காணவிருக்கிறது.