வெள்ளி, 6 ஜூலை, 2018

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு ஆலாசியன்



ஆனி 24, 2049  ஞாயிறு – சூலை 08, 2018 –

 நண்பகல் 11.00 – 1.00

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல்: 

தமிழ் இதழ்களில் அறிவியல் கட்டுரை எழுதி வரும்

திரு. ஆலாசியன்


அனைவரையும் வரவேற்கும்
சுந்தரராசன்:  9442525191
கிருபா நந்தன்: 8939604745

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள்


17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள்
உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு சூ லை 6,7,8, 2018 நாள்களில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர்,
மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600 உரூ அரைநாள் பயிற்சி, 900 உரூ முழு நாள் பயிற்சி)
 இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது. (இலவசம்)
இதில் ஏதேனும் ஒரு கணினி மொழி நிரலாக்கம் தெரிந்தோர் கலந்து கொண்டு, தமிழுக்கான ஏதேனும் ஒரு கணியத்தை(மென்பொருளை) உருவாக்கலாம். சிறந்த கணியத்திற்கு (மென்பொருளுக்கு)ப் பரிசுகள் உண்டு.
இதன் விதிகள் –
நீங்களே மடிக்கணினி கொண்டுவர வேண்டும்
உருவாக்கும் கணியத்தை (மென்பொருளை) கட்டற்ற கணியமாக (மென்பொருளாக) மூலநிரலுடன் வெளியிட வேண்டும்
இது தவிர, கண்காட்சி அரங்கில், பல்வேறு நிறுவனங்களின் கணிய(மென்பொருள்) அறிமுகம், தமிழ்க்கணினி தொடர்பான உரைகள் நடைபெற உள்ளன. இவற்றில் பொது மக்கள் யாவரும் இலவசமாகவே கலந்து கொள்ளலாம்.
கோவையைச் சுற்றி உள்ளோர், இந்த அரிய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் விவரங்களுக்கு:

சீனிவாசன்

உத்தமத்தின் 17 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, கோயம்புத்தூர்



ஆனி 22 – 24, 2049 : 6-8/07/2018

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்

வியாழன், 5 ஜூலை, 2018

தமிழ்க்கல்வி, தமிழ்வழிக்கல்வி தொடர்பான கட்டுரைகள்

திருக்குறள் கல்வெட்டுகள் – முப்பெரும் விழா




ஆனி 30, 2049 – சனி – 14.07.2018 – வடலூர் 

காலை 9.00 முதல் மாலை 5.00 வரை