திங்கள், 1 ஏப்ரல், 2013

கை, கால்கள் மரத்துப் போகின்றனவா?







கை, கால்கள் மரத்து ப்  போகின்றனவா?

நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி:
ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கால்கள் மரத்துப் போவது சாதாரணம். ஆனால், சில சமயங்களில் சிறிது நேரமே அமர்ந்திருந்தாலும், இந்நிலை ஏற்படுகிறது. ஒரு விதத்தில், இந்த அறிகுறி, மனிதனின் உடல் உபாதைகளை தெரிவிப்பதால், பக்கவாத நோயிலிருந்து முன்னரே விடுபடலாம்.நரம்பு செயல்பாடுகளில், குறையோ அல்லது இழப்போ ஏற்படும் போது, கை, கால்கள் மரத்துப் போகின்றன. இது போன்ற நரம்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை, "நியூரோபதி' என, அழைப்பர். மரத்துப் போன நிலை ஏற்பட்டால், உடனே கழுத்துப் பகுதியில் கோளாறு இருக்கிறதா என, உறுதி செய்ய வேண்டும். கழுத்தில் பிசகு இருக்குமானால், அது, கை, கால்களுக்கு செல்லும் நரம்புகளை அழுத்தி, கை, கால் மரத்துப் போகும் நிலையை உருவாக்கும்.நீரிழிவு நோய்க்கும், இது அறிகுறியாக செயல்படுகிறது. நீரிழிவு, சுலபமாக உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும். வெறும் மரத்துப் போவதோடு, கை கால் குத்தல், எரிச்சல், தரையில் நடப்பதை உணரவே முடியாது என, நரம்பின் செயல்பாட்டை குறைக்கும்.பக்கவாதத்தின் ஆரம்ப கட்ட அறிகுறியும், இந்த மரத்துப் போகும் தன்மை தான்.

ஆரம்பத்தில், குறிப்பிட்ட ஒரு பக்கமே மரத்து போவது அல்லது பலவீனமாக இருக்கும் நிலை உண்டாகும். பின், ஒரு சில நாட்கள் கை, கால்கள் சோர்ந்த நிலை ஏற்படும். உடனடியாக, மருத்துவமனைக்கு சென்று, நரம்பியல் தொடர்பான ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., கழுத்தின் ரத்த குழாய் பரிசோதனை செய்வதால், பக்கவாத நோய் வராமல் தடுக்கலாம்."மெனோபாஸ்' நிலையில் இருக்கும் பெண்களுக்கு, இயல்பாகவே மரத்துப் போகும் தன்மை இருப்பதால், நரம்பு தொடர்பான பிரச்சனைக்கும், இதற்கும் தொடர்பில்லை என்பதால், மனஉளைச்சல் தேவையில்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக