சனி, 1 டிசம்பர், 2018

கனடாக் காவியம் – நூல் வெளியீடு

அகரமுதல

கார்த்திகை 23, 2049 / 09.12.2018

பிற்பகல் 2.00

சுகார்பரோ SCARBOROUGH

கனடாக் காவியம் – நூல் வெளியீடு

நூலாசிரியர்: தீவகம் வே.இராசலிங்கம்

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! – இரவிக்குமார்

அகரமுதல

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய

அறிஞருக்கு அஞ்சலி!

தமிழறிஞர் அ.அ.மணவாளன்
(ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018) 
தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம்பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத்  திருமதி சரசுவதி என்ற மனைவியும், சீனிவாசன் (46) சகன்மோகன் (45), பிருந்தா (52) என்ற மக்களும் உள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்த மணவாளன் இந்தி மொழியையும் நன்கு அறிந்திருந்தார். ஒப்பியல் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.
இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வு முதலியவை குறித்து அவர் எழுதியவை 12 நூல்களாக வெளிவந்துள்ளன. நான்கு நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். ஐந்து நூல்களின் தொகுப்பாசிரியராக இருந்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மட்டுமின்றி அமெரிக்காவின் ஆறு பல்கலைக்கழகங்களில் அவர் மதிப்புறு பேராசிரியராக இருந்துள்ளார்.
கே.கே.பிருலா அமைப்பு வழங்கும் உயரிய இலக்கிய விருதான சரசுவதி சம்மான் விருது 2005ல் இவர் எழுதிய ‘இராமகாதையும் இராமாயணங்களும்’ என்ற ஆராய்ச்சித் தொகுப்பு நூலுக்காக வழங்கப்பட்டது. அந்த நூல், உலகம் முழுதும் வழங்கும் 48 இராமாயணங்கள் குறித்த ஆராய்ச்சித் தொகுப்பாகும். பாலி, சம்சுகிருதம், பிராக்ருதம், திபெத்தியன், தமிழ், பழைய சதவா மொழி, சப்பானிய மொழி, தெலுங்கு, அசாமி, தாய், காசுமீரி ஆகியவற்றில் வழங்கப்படும் இராமாயணக் கதைகளுடன் ஒப்பிட்டுப் படைக்கப்பட்டது அந்த நூல்.
இரவிக்குமார்

கட்டுரை விரிவிற்குக் காண்க  மின்னம்பலம்

வெள்ளி, 30 நவம்பர், 2018

வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா

அகரமுதல

வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா

        வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம்,  எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.
        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசுதலைமையேற்றார்.
நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
        தமிழக அரசின் பொது நூலகத்துறை  வழங்கிய ‘நூலக ஆர்வலர் விருது-2018’ பெற்ற வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் முருகேசுக்கும் ‘நல்நூல்கர் விருது-2018’ பெற்ற வந்தவாசி கிளை நூலகர் பூ.சண்முகத்திற்கும்பாராட்டு வழங்கினர்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்குப் பரிசளித்துத், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் இரா.கோகிலவாணி பேசினார். அவர்,  “தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் நூலகச் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நூலகச் செயல்பாடுகளை நடத்திவரும் நூலகருக்கும் நூலக வாசக வட்டத்திற்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
         2018-ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகளுக்காகத் திருவண்ணாமலை மாவட்டம் 7 விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது. அதிலும் வந்தவாசி அரசுக்கிளை நூலகம் சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருதினையும் நல்நூலகருக்கான விருதினையும் பெற்றுள்ளது. மாநில அளவில் ஒரே நூலகத்திற்கு இரு விருதுகளும் கிடைத்திருப்பது வந்தவாசிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.
         வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் வந்தவாசி கிளை நூலகம், சொந்தக் கட்டடத்தில் செயல்படுவதற்கான திட்டமிடல்களைச் செய்து வருகின்றோம். நூலகத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. நூலகத்திலுள்ள நூல்களைப் பொதுமக்களும் மாணவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
          விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன், எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மைய முதல்வர் எ.தேவா, இந்தியன் தொலைக்காட்சி இயக்குநர் முனைவர் வந்தை பிரேம்பீ.இரகுமத்துல்லா, அரிமா இரா.சரவணன், கவிஞர் முகம்மது அப்துல்லாஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          வெண்குன்றம் உலக விழா(jubilee global) பள்ளித் தாளாளர் சான் சேவியர் தங்கராசு உரூ.1000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தமைக்குப் பாராட்டினர்.
 விழாவில், வந்தாசி வட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகர்கள் கலந்துகொண்டனர்.
          நிறைவாக, நூலகர் சா.தமீம் நன்றி கூறினார்.

 வந்தையன்பன்

குவிகம் இல்லம்: அளவலாவல்

அகரமுதல


கார்த்திகை 16, 2049 / திசம்பர் 02, 2018

முற்பகல் 11.00

6, மூன்றாம் தளம்வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலைதியாகராயர்நகர்,

சென்னை 600 017

குவிகம் இல்லம்: அளவலாவல்

ஒளிப்படக்கலைஞர் எழுத்தாளர் ‘கிளிக்கு’  இரவி

திருவாட்டி இரவிச்சந்திரன்

தொடர்பிற்கு : 97910 69435, 89396 04745

இல்லம் அடைய

வியாழன், 29 நவம்பர், 2018

சப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019

அகரமுதல

தை 26, 2050 

 2019ஆம் வருடம் பிப்ரவரி 9

நேரம்:-11மணி முதல் 6 மணி வரை

கொமட்சுகவா சகுரா அரங்கம்

சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள்

அனைவருக்கும் அன்புநிறைந்த
இனிய வணக்கம்!
நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின்சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 /  
2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச்சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம்.
நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் 
சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், இனிய பொங்கல் விருந்தோடு கேட்கும் செவிகளுக்கும் நல்லுணவளிக்கும் விதமாக தாய்த்தமிழ்நாட்டினின்று வரவுள்ள நல்லறிஞர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளதெனத் தெரிவித்துக்கொள்வதுடன், நமது தாய்த்தமிழுறவுகளனைவரையும் அவர்தம் உற்றார் உறவினருடனும்,சுற்றத்தாருடனும் இவ்விழாவில் கலந்துகொண்டு
சிறப்பிக்க வருமாறு உள்ளுவகையுடனும் உளமார்ந்த பேரன்புடனும் வருக!வருக! என வரவேற்கிறோம்.
சிறப்பு விருந்தினர்கள்சிறப்பு நிகழ்ச்சிகள்பற்றி மிக விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்சப்பான் தமிழ்ச்சங்கம்கலை -பண்பாட்டுத்துறை

இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு

அகரமுதல

மார்கழி 21, 2049  சனிக்கிழமை

05.01.2019 பிற்பகல் 2.00-5.00

உயர்வாசற் குன்று முருகன் ஆலயம்

தலைமை: பேரா.நடராசா சிரீ கந்தராசா

இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு

கருப்பொருள்:  இலங்கை வடமாகாணக்கல்வி நிலை

தொடர்பிற்கு:
சச்சிதானந்தன், தலைவர் – 07788 196426
சிவலிங்கம், செயலாளர் – 07984 079371
திருவாட்டி தேவநாதன், பொருளாளர் – 07973 287038

புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை

அகரமுதல

கார்த்திகை 14, 2049 வெள்ளி 

30.11.2018 பிற்பகல் 3.00

பவளவிழா கலையரங்கம்,

சென்னைப் பல்கலைக்கழகம்

புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

பொழிஞர்:  கவிஞர் அ.வெண்ணிலா

தமிழ் இலக்கியத்துறை
சென்னைப்பல்கலைக்கழகம்

புதன், 28 நவம்பர், 2018

கவிஞர் முருகேசிற்கு அரசின் ‘நூலக ஆர்வலர்’ விருது

அகரமுதல

கவிஞர் முருகேசிற்குத்

தமிழக அரசின்

பொது நூலகத் துறை சார்பில்

‘நூலக ஆர்வலர் 2018’ விருது

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த ஏழாண்டுகளாகச் சிறப்பான முறையில் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு செயல்பாடுகளைச் செய்தமைக்காக நூலக வாசகர் வட்டம் சார்பில் அதன் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில்‘நூலக ஆர்வலர் விருது – 2018’ வழங்கப்பட்டது.
தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நூலக வளர்ச்சிக்காகச் சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர் வட்டத்திற்கு
‘நூலக ஆர்வலர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
2018-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா கடந்த நவம்பர்-14-ஆம் நாள்  சென்னை சேத்துப்பட்டிலுள்ள எம்.சி.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குத் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை ஏற்றார். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவு முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கல்வித் துறை – பொது நூலகத் துறை இயக்குநர் இராமேசுவர முருகன் முன்னிலை வகித்தார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் து.செயக்குமார் வாழ்த்துரை
வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நூலக வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. இந்த வாசகர் வட்டத்தின் தலைவராகத்
தேர்வு செய்யப்பட்ட கவிஞர் மு.முருகேசு தலைமையின் கீழ்த், தொடர்ந்து மாதந்தோறும் ‘சந்திப்பு’ எனும் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்திப்பு நிகழ்வில்,நூல் அறிமுகம், நூல் வெளியீடு, நூல் திறனாய்வு, பல்துறை வல்லுநர்களின் உரையரங்கு எனத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உரூ.1,000/- செலுத்திய 7 நூலகப் புரவலர்கள் மட்டுமே இந்த கிளை நூலகத்தில் இன்றைக்கு 190 நூலகப் புரவலர்கள் சேர்ந்திருக்கிறார்கள். உரூ.5,000/-
செலுத்தி, 4 பெரும் புரவலர்கள் இணைந்திருக்கிறார்கள். புதிதாக 8 ஆயிரம் நூலக உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் நூலகத் தந்தை எசு.ஆர்.இரங்கநாதன் பிறந்த நாள் விழா, தேசிய நூலக வார விழா, உலகத் தாய்மொழி நாள் விழா, நூலகத்திலேயே சிறப்புத் தள்ளுபடியுடன் ஒரு வார காலம் புத்தகக் கண்காட்சி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டிகள் நடத்திப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
நூலகத்திற்குத் தேவையான தூய்மையாக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், கதிரொளி(சோலார்) மின்விளக்கு, 20 நெகிழி நாற்காலிகள், 4 மர நாற்காலிகள், இரும்புப் பேழை ஒன்று, நகர மக்களிடமிருந்து நன்கொடை மூலமாக வாங்கப்பட்டுள்ளன. உரூ.30,000/- மதிப்பிலான நூல்களும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.
மேற்கண்ட செயல்பாடுகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்டமைக்காக நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ‘நூலக ஆர்வலர் விருது – 2018’ விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
இவ்விழாவில், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் இரா.கோகிலவாணி, நல்நூலகர் விருதுபெற்ற வந்தவாசி அரசுக் கிளை நூலகர் பூ.சண்முகம், திருவண்ணாமலை மாவட்ட நூலகர் வெங்கடேசன் முதலான பலர் பங்கேற்றனர்.