ஞாயிறு, 20 அக்டோபர், 2013
ஆதியூர் அவதானி சரிதம்
எழுதிய ஆண்டினைப் பார்க்காமல் பின்னர் வந்த புதினம் எழுதியவர் பிராமணர் என்பதால் அதுவே முதல் புதினம் என்றனர். எனவே, அவதானி குறித்தும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எனினும் இதன் படையல் பாடலை இங்கே அளிக்கின்றேன்:
சீராருமகராணி விக்டோரியாவெநுஞ்
செல்விசெங்கோலினோங்கும்
தேசங்கள்பலவுளும் வீசுபுகழ்மேவுமித்
தென்னிந்தியா நாட்டிலே
ஏராரிளஞ்சிறுவர் வித்தையது கற்றுமன
விருளோடமருளோடவே
ஏற்றவப்பெருமாட்டி யாற்றலுடனாட்டிய
விருங்கலை வகுப்பினுக்கே
நேராருமதிகாரி யூணர்கல்விமுதல்
நேயமாங்களித்த
நிபுணராம்-அயர் பர்ட்டந்பெளவல்துரைபாற்கலைகள்
நேர்மையுடன் கற்றுணர்ந்த
பாராணுமாக்கர் கூட்டத்தோரேழைநான்
பாடுமிச்சிறுநூலவர்
பண்பிற்குமிக்கபே ரன்பைற்குமீடாப்
பரிந்தங்கிதஞ் செய்வனே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் இந்து, பெருமாள்முருகன்
இலக்கிய வரலாற்று நூல்களில் எல்லாம் ‘முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார்
சரித்திரம்’ என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ‘முதல் தமிழ்
நாவல்’ என்னும் அடையாளத்துடன் 1994ஆம் ஆண்டு ‘ஆதியூர் அவதானி சரிதம்’
என்னும் நூல் வெளியாகியுள்ளது. ‘வித்துவான் சேஷையங்கார் இயற்றியது’ என்று
ஆசிரியர் பெயர் காணப்படுகிறது. இதைப் பதிப்பித்தவர்கள் தமிழ் நவீன இலக்கிய
வரலாற்று முன்னோடிகளாகிய ‘சிட்டி, சிவபாதசுந்தரம்’ ஆகியோர்.
‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’, ‘தமிழில் சிறுகதை வரலாறும்
வளர்ச்சியும்’ ஆகிய நூல்களை எழுதியவர்கள் இவர்கள். இவ்வரலாற்று நூல்களை
எழுதுவதற்காகப் பலவிதமான தேடல்களை நிகழ்த்தியவர்கள். நூல்கள் வெளிவந்த
பின்னும் முடிவு பெறாத தேடலின் மூலமாகக் கண்டடைந்த ஒன்றுதான் ‘ஆதியூர்
அவதானி சரிதம்.’ 1875ஆம் ஆண்டு வெளியான நூல் இது. லண்டனில் உள்ள பிரிட்டிஷ்
மியூசியம் நூலகத்தில் இந்நூலின் பிரதியைக் கண்டு நகலெடுத்தவர்
சிவபாதசுந்தரம் அவர்கள். விரிவான முன்னுரை ஒன்றையும் எழுதி கோவை விஜயாப்
பதிப்பகம் மூலமாக நூலை வெளியிட்டனர்.
இவர்களுக்கு முன்னரே இதைத் தமிழின் முதல் நாவல் என்று சொன்னவர் ஒருவர்
உண்டு. 1976ஆம் ஆண்டு ஜூலை – செப்டம்பர் மாதப் ‘புலமை’ இதழில் ‘ஆதியூர்
அவதானி பாட்டு நாடோடி இலக்கியத்தில் ஒரு திருப்பம்’ என்னும் தலைப்பில்
கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதை எழுதியவர் பெரும்தமிழறிஞராகிய
மு.இராகவையங்காரின் பேரன் ஜெ. பார்த்தசாரதி என்பவர்.
இந்நூலை இயற்றிய தூ.வீ.சேஷையங்கார் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்று
தெரிகிறது. ‘சென்ற நூற்றாண்டில் கீர்த்தி வாய்ந்த பேராசிரியராகவும்
பொறியியல் வல்லுநராகவும் வாழ்ந்து வந்தார் என்பது தவிர அதிக விவரங்கள்
கிடைக்கவில்லை’ என்பது ஜெ.பார்த்தசாரதியின் குறிப்பு. இந்நூலின்
முன்னுரையில் ‘இதற்கு முன் யானியற்றிய குணாகரம் எனுங்காவியம்’ என்று
குறிப்பிட்டிருப்பதால் ‘குணாகரம்’ என்னும் நூல் ஒன்றையும் அவர் இயற்றி
இருப்பதாகத் தெரிகிறது. அதைக் காவியம் என்று குறிப்பிடுவதோடு ‘முதிய
தமிழும் புதிய கருத்தும்’ கொண்டது எனவும் தெரிவிக்கின்றார். காவியம் என்று
குறிப்பிடுவதால் அதுவும் கதை தழுவிய நூலாகவே இருக்க வேண்டும்.
ஆதியூர் அவதானி சரிதத்தைச் சென்னை பிரசிடென்சிக் கல்லூரியின் முதல்வராக
இருந்தவரும் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவரும் அவரது ஆசிரியருமான
‘அயர்பர்ட்டன் பௌவல் துரை’ அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நூலின்
கதையைப் பற்றி ‘இதிலடங்கிய சங்கதிகள் பல இந்துக் குடும்பங்களில் இக்காலத்தி
லுள்ளவைகள்தாம். ஆதலால் இது பொய்ப்பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்’
என்கிறார்.
ஆதியூர் அவதானி சரிதத்தை ‘An original Tamil Novel’ என்று ஆங்கிலத்திலும்
‘நவீனமாகவியற்றிய கட்டுரைக் கதை’ எனத் தமிழிலும் ஆசிரியரே
குறிப்பிட்டுள்ளார். ‘நானோவெனில் நமது வித்துவான்கள் வழக்கமாயிறங்குந்
துறைகளை விட்டுக் காலத்தியற்கையைத் தழுவிப் புதுத்துறையில் காலிட்டேன்’
என்று தம் முயற்சி பற்றித் தெளிவுடன் கருத்துரைத்துள்ளார். பத்தொன்பதாம்
நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்
தோன்றிய நாவல்கள் பலவற்றிற்கு இரட்டைப் பெயர் சூட்டும் வழக்கம்
இருந்துள்ளது. அதேபோல இந்நூலுக்கும் ஆங்கிலத்தில் ‘ATHIYUR AVADHANI OR THE
SELF – MADE MAN’ என இரட்டைப் பெயர் காணப்படுகிறது.
நூலின் கதையைப் பற்றி ஜெ.பார்த்தசாரதி அவர்கள் தெரிவிக்கும் சுருக்கம் இது:
‘உறவினர்களின் ஓயாத தொல்லை; ஊரினரின் வம்புப் பேச்சுகள்; அண்டை அயலார்
முட்டுக்கட்டைகள்; பொருந்தாத இல்லறத்தின் இன்னல்கள் – இவைகளைப்
பின்னணியாகக் கொண்ட வாழ்க்கையில் பெருங்கசப்புற்று ஓர் அந்தணன் கலப்பு சாதி
மணத்தை விரும்பி அதன் புனிதத்தை நாட்டுவது கதையின் சாராம்சம்.’
நூல் முழுவதும் பாடல் வடிவிலானது. நாவல் என்பது உரைநடை இலக்கிய வடிவம்
என்பது பொதுப்புரிதல். ஆனால் இது பாடல் வடிவில் இருக்கிறதே என்று கேட்டால்,
1986ஆம் ஆண்டு விக்ரம் சேட் எழுதிய The Golden Gate என்னும் நாவல் கவிதை
வடிவில் எழுதப்பட்டதுதான். அதை நாவல் என்று ஏற்றுக்கொள்ளும்போது இதை ஏன்
ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோர் வினா
எழுப்புகின்றனர். இதுதான் தமிழின் முதல் நாவல் என்பதில் அவர்களுக்கு எந்தச்
சந்தேகமும் இல்லை.
வெளியாகிக் கிட்டத்தட்ட நூற்றிருபது ஆண்டுகளுக்குப் பிறகு மறு
கண்டுபிடிப்புச் செய்யப்பட்டு மறுபதிப்பு வெளியிடப்பட்ட இந்நூலைத் தமிழ்
கூறு நல்லுலகம் பொருட்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. இதை முதல் நாவலாக
ஏற்றுக்கொள்ளலாமா கூடாதா என்று விவாதிக்கவில்லை. வெகுசிலருக்கு மட்டுமே
அறிமுகமான நூலாக இது இன்றுவரைக்கும் உள்ளது. பாடல் வடிவிலானதும் சமகால
வாழ்வைப் பற்றியதுமான இந்நூலை நாவல் என்று சொல்லலாமா? இல்லை என்றால் வேறு
என்னவென்று வகைப்படுத்துவது? எந்த வகைக்குள்ளும் சேராத காரணத்தால் இப்படி
ஒரு நூல் வரவில்லை என்பது போல மௌனம் காத்துவிடலாமா?
கருத்தரங்கக் கூடமாகப் புது சட்டசபை மாற்றம்
கருத்தரங்க க் கூடமாக ப் புது சட்டசபை மாற்றம்: சன.17இல் நவீன மருத்துவமனை திறப்பு?
சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலகத்தை,
மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 17ம் தேதி
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் அன்று, இந்த கட்டடத்தில் அதிநவீன மருத்துவமனையை
திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. புது தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை
கட்டடம், அதிநவீன கருத்தரங்க கூடமாக மாற்றப்பட்டுள்ளது. சட்டமேலவை கட்டடம்
தற்போது, மருத்துவ ஆய்வரங்கமாக மாற்றப்பட்டு உள்ளது.
புது
தலைமைச் செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் இந்த பணி, ஜனவரி
மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை முதன்மை தலைமை
பொறியாளர், கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஏழு உதவி செயற்பொறியாளர் கொண்ட
தனிக்குழு, அங்கு முகாமிட்டு, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
வார்டுகள்:
ஒவ்வொரு
தளத்துக்கும், ஒரு உதவி செயற்பொறியாளர் வீதம், நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரியதாக கட்டப்பட்ட அறைகள், இரண்டு வார்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு
தளத்தில் இருந்தும், நோயாளிகளை படுக்கையில் அழைத்துச் செல்ல, சாய்தளம்
அமைக்கும் பணி, இரண்டு பக்கங்களிலும், தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது,
மூன்று தளங்கள் வரை அமைக்கும் பணிகள் முடிந்து, நான்காம் தளததில் இருந்து,
ஐந்தாம் தளத்துக்கு சாய்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே,
மேலவைக்காக கட்டப்பட்ட கட்டடம், எந்த மாற்றமும் செய்யப்படாமல், சிறப்பு
ஆய்வரங்க கட்டடமாகவும், சட்டசபை கட்டடம், கருத்தரங்கு கூட அரங்கமாகவும்
மாற்றப்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனையில், பேராசிரியர், துறை
தலைவர்களுக்கு, 90 கழிப்பறைகள் வீதம், மொத்தமாக, 560 கழிப்பறைகள்
கட்டப்பட்டு உள்ளன. அனைத்து வார்டுகளிலும், முழுவதுமாக, 'ஏசி' அமைக்கும்
பணி, முடியும் தறுவாயில் உள்ளது. அதேபோல், தரைத்தளம் மற்றும் முதல் தளம்,
புறநோயாளிகள் பிரிவாகவும், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் நிர்வாகம் மற்றும்
அறுவை சிகிச்சை அறைகளாகவும், நான்காம் தளம், அவசர சிகிச்சை பிரிவாகவும்,
ஐந்து, ஆறாவது தளங்கள் உள்நோயாளிகள் சிகிச்சை வார்டுகளாகவும் மாற்றப்பட்டு
வருகின்றன.
500 பேர்:
நவம்பர் மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க, பொதுப்பணித் துறை திட்டமிட்டு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களோடு, தினமும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர், கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் இறுதிக்குள், கட்டுமானப் பணிகளை முடித்து, அதன் பிறகு, மருத்துவமனைக்கான உபகரணங்கள் அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான ஜனவரி, 17ல், பல்நோக்கு மருத்துவமனை செயல்படத் துவங்கும் என, தெரிகிறது.
- நமது செய்தியாளர், தினமலர் -
ஓவிய வடிவில் திருக்குறள் : ஓவியர் நடராசன்
ஓவிய வடிவில் திருக்குறள் தந்துள்ள ஓவியர் நடராசன்
உலகின் மூத்த, இனிய, ஒப்புவமையற்ற மொழியான தமிழ் மொழியில் எண்ணற்ற காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவைகளில் தனிச்சிறப்பு கொண்டது திருக்குறள்.
வாழ்க்கைக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையும் 1330 குறளில் வடித்திட்ட வள்ளுவனின் வார்த்தைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஒத்துவருவதுதான் மிகப் பெரிய விஷயம்.
வாழ்க்கைக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையும் 1330 குறளில் வடித்திட்ட வள்ளுவனின் வார்த்தைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஒத்துவருவதுதான் மிகப் பெரிய விஷயம்.
இதன்
காரணமாகவே திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக
பொதுமறையாக போற்றப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களை தாண்டியும் இப்போதும்
திருக்குறளுக்கு உரை பலரும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் ஒரே ஒருவர் மட்டும் 1330 குறளுக்கும் ஏற்ப ஓவியம் வரைந்துள்ளார்.
அவர் பெயர் நடராஜன், திருப்பூர் பக்கம் உள்ள நல்லூர் விஜயாபுரத்தில் குடியிருக்கும் இவர் ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற ஓவிய ஆசிரியராவார். இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் ஓவியப்பணியில் இருந்து ஓய்வு பெறாமல் எப்போதும் தூரிகையும், கையுமாகவே இருப்பவர். பித்தன் சித்ர கூடம் அமைத்து இலவசமாக ஓவிய பயிற்சியளித்து வருபவர்.
சிறு வயது முதலே இயற்கை காட்சிகள், சாமி படங்கள், தேசிய தலைவர்கள், மனித நேயமிக்கவர்களை ஓவியங்களாக வரைந்தவர், யாரும் செய்திடாத ஒரு சாதனையை படைத்திட எண்ணினார்.
அப்போதுதான் இவரை பெரிதும் ஈர்த்திட்ட திருக்குறளை ஏன் ஓவியமாக வரைந்திடக்கூடாது என்று முடிவு செய்து களமிறங்கினார். ஒவ்வொரு குறளுக்கும் ஏ3 பேப்பரில் தத்ரூபமாக குறளுக்கு ஏற்ப ஓவியம் வரைய ஆரம்பித்தார்.
இது பற்றி ஓவியர் நடராஜன் கூறுகையில், "அதிகாலை மூன்று மணிக்கு ஓவியம் வரைய ஆரம்பித்தேன். குறளின் அர்த்தத்தை நன்றாக உள்வாங்கி அதே நேரத்தில் எளிமைப்படுத்தும் விதத்தில் வரைந்தேன். வரைந்தேன் என்பதை விட வள்ளுவரோடு ஓரு வருட காலத்திற்கு மேல் வாழ்ந்தேன் என்றே சொல்லலாம். அதிலும் 250 குறள் மட்டுமே உள்ள இன்பத்து பாலை வரையும்போது அதிகம் கவனம் எடுத்துக்கொண்டேன் காரணம் கோடு கொஞ்சம் மாறினாலும் தவறான அர்த்தத்தையும் கொடுத்து விடுமே. ஆனால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது, காரணம் முன்பே சொன்னது போல வள்ளுவர் துணை நின்றதால்'' என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.
அகர முதல எழுத்தெல்லாம் எனும் முதல் குறளில் துவங்கி 1330 குறளுக்கும் ஓவியம் வரைந்து முடித்திட்ட போது அது 13 தொகுதிகளை கொண்டிருந்தது. இதற்கு திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை' என்ற தலைப்பிட்டுள்ளார்.
இந்த குறளோவிய பேழையை போட்டோ பிரின்ட் மூலமாக கையடக்க புத்தகமாகவும், சிடியாகவும் மாற்றி முதல்வர் மூலமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெறுவதை அடுத்து பாரதியார் கவிதைகள் துவங்கி இனியவை நாற்பது வரையிலான பல்வேறு தமிழ இலக்கியங்களையும் ஓவியமாக படைத்திட எண்ணியுள்ளார்.
இவரது எண்ணமும், எழுத்தோவியமும் வெற்றி பெறட்டும்.
- எல்.முருகராசுஆனால் ஒரே ஒருவர் மட்டும் 1330 குறளுக்கும் ஏற்ப ஓவியம் வரைந்துள்ளார்.

இவருடன் தொடர்பு கொள்ள:
99762 55579, 0421-2375124.
குறளோவியங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்திடவும்.Spanish court to hear genocide case against China
Spanish court to hear genocide case against China's ex-President
[TamilNet, Saturday, 19 October 2013, 13:04 GMT]
Spain's top criminal court has decided to hear a case brought by Tibetan rights activists who allege that China's former President Hu Jintao committed genocide in Tibet. Judges ruled that they were competent to handle the case because one of the activists, Tibetan monk Thubten Wangchen, is a Spanish citizen, BBC reported.

The ruling by the Spanish National
Court on Wednesday came in response to an appeal against an earlier
decision to shelve the lawsuit against Hu.
The lawsuit against Hu Jintao the Madrid-based Tibetan Support Committee alleges that as Communist leader in the region he was ultimately responsible for actions "aimed at eliminating the uniqueness and existence of Tibet as a country, imposing martial law, carrying out forced deportations, mass sterilisation campaigns, torture of dissidents," according to the BBC report.
The Spanish legal system recognizes the universal justice principle, under which genocide or war-crimes suspects can be put on trial outside their home country, but Spanish law requires that any case brought forward must directly involve Spain or a citizen or resident of Spain.
The Washington-based International Campaign for Tibet (ICT) described the court's decision as "significant."
“This verdict sends a strong signal to the Chinese leadership and is a significant development in seeking accountability at the highest levels in China for the Communist Party leadership’s failed policies in Tibet,” said Bhuchung Tsering, ICT’s interim president.
But China on Friday slammed the Spanish court’s ruling, calling the move an attempt to “attack the Chinese government and sabotage friendly relations between China and [Spain].”
When Thubten Wangchen was 4 years old, his mother died in a Chinese work camp. She was pregnant at the time, and according to Mr. Wangchen, the Chinese were rounding up pregnant women and working them to death.
"That was their way of limiting the Tibetan population," says Wangchen, a Tibetan refugee who has lived in Spain for 24 years.
Since the Chinese invaded Tibet in 1950, hundreds of thousands of Tibetans have been killed, arbitrarily imprisoned, or forced to flee their country. But when the victims of what some call genocide finally get their day in court, it probably won't be in China. Instead, Spain - which is conducting a judicial investigation on the issue - is likely to hold the first trial.
Similar probes supported by universal jurisdiction, have long been exercised in Spain by the mercurial Judge Baltasar Garzón, whose case against Chilean General Augusto Pinochet in 1998 helped lead to the undoing of amnesties that had protected dictators.
Argentina might also become a suitable forum to bring charges against alleged war criminals in other parts of the world hiding behind the cover of diplomatic immunity, or by keeping UN silent using the support of other rights violator nations. Cases of torture, murder and disappearance of Franco's political opponents during Spain’s Civil War between 1936 and 1939 was also litigated in Argentina.
Related Articles:
29.10.10 Argentina: a possible forum to prosecute war criminals
External Links:

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)