சனி, 20 நவம்பர், 2010

முதன்மை 5 வாசகர் கருத்துகள் 20.11.10

இனப்படுகொலை ஆதரவாளர்களின் கொழும்பு மாநாடு – எச்சரிக்கை!இனப்படுகொலை ஆதரவாளர்களின் கொழும்பு மாநாடு – எச்சரிக்கை!

இனப்படுகொலை ஆதரவாளர்களின் கொழும்பு மாநாடு – எச்சரிக்கை!

Mullivaikal
முள்ளிவாய்க்காலில் ஈழ மக்களின் தேசிய விடுதலை ஆயுதப் போராட்டம் மாபெரும் இனப்படுகொலையுடன் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர், இலங்கை அரசு ஆதரவாளர்களின் கை ஓங்கி இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் தங்களை இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்று வெளிப்படுத்தி செயல்படுவதில்லை. இலக்கியம், நவீனத்துவம், தலித்தியம், பௌத்தம் போன்ற தங்களுக்குத் தோதான ஏதோ ஒன்றில் ஒளிந்து கொண்டு இலங்கை அரசை ஆதரிக்கிறார்கள். வன்னி மக்கள் மீது கொடூரமான போர் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அந்தப் போருக்கு எதிராகவோ அங்கு கொன்று குவிக்கப்படும் மக்களுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூடப் பேசாத இவர்கள், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு இனப்படுகொலை நடத்திய குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரும் நிலையில் இவர்களோ இனப்படுகொலைக்கு புலிகளே காரணம் என்று செய்தி பரப்புகிறார்கள்.
இப்போது மட்டுமல்ல எப்போதுமே இவர்கள் ஈழ விடுதலைக்கோ, ஈழ மக்களுக்கோ எதிரானவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ரத்தச் சகதியில் மிதந்து கொண்டிருக்க, முருகபூபதி என்பவர் தன் இலக்கிய அரிப்பை சொரிந்து கொள்ள கொழும்பில் நடத்துவதுதான் சர்வதேச எழுத்தாளர் மாநாடு. இது ஈழத் தமிழ சர்வதேச எழுத்தாளர் மாநாடு அல்ல இலங்கையைப் பூர்வீகமாகக் கொள்ளாத இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் வாழுகிற தமிழ் எழுத்தாளார்களையும் ஒருங்கிணைத்து கொழும்புவுக்கு அழைத்து நடத்தப்படுகிற மாநாடாம்.
தமிழகத்தில், புகலிடத்தில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க உடனே இந்த மாநாட்டின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவாளர்களை பெரியண்ணன்கள் என்று தாக்கி எழுதத் துவங்கினர். அவர்கள் சொன்னது இதுதான் “தமிழக பெரியண்ணன்கள் எங்கள் மக்களை பலியாக்குகிறார்கள். அத்துமீறி எங்கள் பிரச்சனையில் தலையிட இவர்கள் யார்?”. (மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்று இழிவு செய்வது போல இவர்களும் தமிழக மக்களை அவர்களின் ஏழ்மையை நக்கல் தொனியோடு எள்ளி நகையாடத் தயங்கவும் இல்லை.) ரயாகரன், தேசம் நெட் போன்ற இணையதளங்கள் பெரியண்ணன் என்ற குற்றச்சாட்டை துவக்கி வைக்க ஷோபாசக்தி, த.அகிலன், மயூரன் போன்றோர் இதைப் பெரும் கொண்டாட்டமாக வெளியிட்டார்கள். ஒரு பக்கம் தமிழக மக்களுக்கும், ஈழ விடுதலை ஆதர்வாளர்களுக்கும் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்குமிடையிலான மோதலை உருவாக்குவதுதான் இவர்களின் நோக்கமே. ஆனால் இன்றைக்கு தமிழக மக்களையும் ஈழ விடுதலை ஆதர்வாளர்களையும் பெரியண்ணன்கள் என்று எவர் எல்லாம் சொல்கிறார்களோ அவர்கள்தான் பெரியண்ணன் பூமியில் புத்தகம் வெளியிட்டார்கள். பெரியண்ணன் பூமியில் உள்ள ஊடகங்களின் பேட்டி, சிறுகதை, கட்டுரை வருவதில் ஆர்வம் காட்டினார்கள். வருடத்திற்கொரு முறை இங்குள்ள ஊடகங்களில் பேட்டி வருவதற்கு ஏங்கி, அதை நண்பர்கள் மூலம் சாதித்து, தங்களை ஹீரோக்களாகக் காட்டிக் கொண்டவர்களுக்கு இப்போது பெரியண்ணன்களாக தெரிவது ஏன்?
இன்று பெரியண்ணன்கள் என்று தமிழக மக்கள், ஈழ ஆதரவாளர்கள் மீது விஷம் கக்கும் ஷோபாசக்தி, இலங்கை அரசு ஆதரவு என்.ஜீ.ஓ. SLDF-ன் ராகவன் ஆகியோர் மாநாட்டை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். SLDF அமைப்பிற்கும் தனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை என்று சொல்லும் ஷோபாசக்தி அவரோடு சேர்ந்து எழுத்தாளர் மாநாட்டை ஆதரித்து அறிக்கை மட்டும் வெளியிடுவாராம். சரி கிடக்கட்டும் அந்த அறிக்கையில்,
// இன்று இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அரசால் கடுமையாக அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாநாடு தேவையா என எழுப்பப்படும் எதிர்ப்புகளையும் நாம் நிராகரிக்கிறோம். இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம். // என்கிறது ஆக வன்னி மக்களின் இனப்படுகொலை பற்றி யாராவாது பேசினால் அது குழு நிலை மோதலாக்கப்படும் என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கிறார் ஷோபாசக்தி. எப்படி இங்குள்ளவர்களை புலி ஆதர‌வாளர்கள் என்று முத்திரை குத்துகிறாரோ அப்படி இனக்கொலை பற்றி பேசுகிறவர்களுக்கும் புலி முத்திரை. ஆக முருகபூபதி அரசியல் பேச அனுமதித்திருப்பதாகவும் அதைத் தான் வரவேற்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு அகிலன், மயூரன் போன்ற இலங்கை அரசின் ஆதரவாளர்கள் தங்களது இணையதளத்தில் வெளியிட்ட முருகபூபதியின் நேர்காணலில் அவர் இப்படிச் சொல்கிறார்.
// 17. இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா?
நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது//
ஆக ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் உரிமைகளைப் பேச அனுமதி மறுக்கிற ஒரு மாநாட்டை அரசு ஆதரவு மாநாடு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இன்றைய சூழலில் இலங்கை அதன் உச்சக்கட்ட பாசிச வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. இராணுவ நிழலில் வாழும் தமிழ் மக்கள் எதையும் எதிர்க்கவோ, தங்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலையிலோ இல்லை. ஒரு வேளை இலங்கை அரசின் ஆதரவாளர்கள் இனப்படுகொலை ஆதரவு மாநாடு ஒன்றை நடத்தினால் கூட தமிழ் மக்கள் அதற்கு எதிராகப் பேசும் வலுவற்றவர்களாக உள்ளனர். இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடுவதே சிங்களர்கள் தான், தமிழ் மக்கள் அல்ல எனும்போது, சர்வதேச எழுத்தாளர்கள் மாநாடு என்னும் தோற்றத்தில் முருகபூபதி நடத்தும் மாநாட்டை தமிழ் மக்கள் எப்படி எதிர்ப்பார்கள்? மக்கள் முடமாக்கப்பட்டு, உருவாகியுள்ள எதிர்ப்பற்ற நிலையையே தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ள இலங்கை அரசு ஆதரவாளர்கள் இப்போது மாநாட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அரசியல் பேச முடியாத‌, தமிழ் மக்களின் சிவில் உரிமைகளைக் கூட பேச முடியாத, ஒரு மாநாட்டை கொழும்பில் நடத்தும்போதே அது தன்னியல்பில் அரசு சார்பானதாகவோ, அரசால் எதிர்ப்பதற்கு ஏதுமற்ற ஒன்றாக மாறிவிடுகிற நிலையில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு என்ற அளவுகோலின் படி தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களும் புகலிடத்தில் உள்ள எழுத்தாளர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
இவர்களோ இலங்கையில் எழுத்தாளர் மாநாடு நடத்துவது எமது பிறப்புரிமை என்கிறார்கள். அது உங்களின் பிறப்புரிமை இல்லை என்று யார் சொன்னார்கள்? எழுத்தாளர் மாநாடு மட்டுமல்ல இனக்கொலை ஆதரவு மாநாடு நடத்துவது கூட உங்களின் பிறப்புரிமைதான். ஆனால் அதை இலங்கை எழுத்தாளர் மாநாடு என்றோ, சர்வதேச இலங்கை எழுத்தாளர் மாநாடு என்றோ நடத்துங்கள். அதை விட்டுவிட்டு ஏதோ ஒட்டு மொத்த உலகத் தமிழ் எழுத்தாளர்களும் இந்த மாநாட்டை ஆதரிக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி, முருகபூபதியின் அரிப்புக்கு நாங்கள் நகம் வளர்த்துக் கொடுக்க முடியாது.
இந்த மாநாட்டை நிராகரிப்பது தொடர்பாக விடுபட்ட பல எழுத்தாளர்களும் தங்களின் மன அவதியை வெளிப்படுத்துகிறார்கள். முரண்பாடுகள் இருப்பினும் இலங்கை அரசு பயங்கரவாத எதிர்ப்பு என்னும் புள்ளியில் நாம் கைகோர்த்திருக்கிறோம் உறுதியாக. வன்னி மக்கள் தங்களின் வாழ்க்கைக்காக போராடும் நிலையில், இந்த ‘கலை கலைக்காகவே’ என்னும் மக்கள் விரோத எழுத்தாளர் மாநாடு அவசியமற்ற ஒன்று. இதை எதிர்த்துக் கேட்கும் நிலையில் ஈழ மக்கள் மட்டுமல்ல இந்த மாநாட்டை விரும்பாத ஈழத் தமிழ் எழுத்தாளர்களும் இல்லை.
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு என்கிற வகையில் ஒரு திரட்சியாக உருவாகும் சாத்தியம் கொண்ட புகலிடச் சூழலும் குழம்பிப் போயுள்ள நிலையில் தமிழகம் மட்டுமே காத்திரமான எதிர்ப்பை இலங்கை அரசுக்கு தெரிவித்து வருகிறது. ஆக மொத்தம் இருக்கிற ஒரே எதிர்ப்பலையை இல்லாமல் ஆக்குவதும் குழப்பம் விளைவிப்பதும்தான் இந்த இலங்கை அரசு ஆதரவாளர்களின் நோக்கம். பெரும்பலான ஈழ மக்களும், புலம்பெயர்ந்த ஈழ மக்களும் தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களை ஆதரிக்கும் நிலையில், எண்ணிக்கையில் வெகு சிலராக உள்ள இந்த இலங்கை அரசு ஆதரவுச் சக்திகளிடம் நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் எப்போதும் வெளிப்படையாகப் பேசி வருவதில்லை. தலித், சிறுபான்மை ஆதரவு, விளிம்பு, மையம் என்று பேசி எதிர்ப்பியக்கங்களை நசுக்குவதுதான் இவர்களின் வேலை. எச்சரிக்கை!!
- யாழினி
நன்றி: கீற்று

பேரதிர்ச்சி மிக்க தாக்குதல்

பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது.

aaivu செய்தி ஆய்வு கேட்க இங்கே அழுத்தவும்
நன்றி: தமிழர் குரல் வானொலி

பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது.

aaivu செய்தி ஆய்வு கேட்க இங்கே அழுத்தவும்
நன்றி: தமிழர் குரல் வானொலிv

தலையங்கம்: தெரியாமலா நடந்தது?

இத்தகைய அவலங்கள் ஒழிய வேண்டும் என்றால் இது வரை ஆளும்கட்சியாக இருந்த அனைத்துக் கட்சிகளும் தடை செய்யப்பட  வேண்டும். ஊழலில் சிக்கியவர்கள், உடந்தையாக இருந்தவர்கள், கட்சிப் பொறுப்பு வகிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும். அப்பொழுதுதான் நேர்மையான  தூய்மையான அரசைக் காண இயலும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
தலையங்கம்: தெரியாமலா நடந்தது?

First Published : 20 Nov 2010 02:19:00 AM IST


சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது."ஸ்பெக்ட்ரம்' ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும், அவரால் தேர்ந்து எடுத்து நியமிக்கப்பட்டவர்களுமாக இருக்கிறார்களே அதுதான் நம்மை எல்லாம் வியப்படையச் செய்கிறது.இந்திய அரசுப் பணி அதிகாரியாகவும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்த எம்.எஸ். கில், உணவு மற்றும் விவசாயப் பிரச்னைகளில் தேர்ந்தவர் என்று கருதப்படுபவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும் நேரத்தில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் மாற்றப்பட்டு, அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எம்.எஸ்.கில் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டது ஏன் என்கிற சந்தேகம் அப்போது ஏற்படவில்லை. இப்போது ஏற்படுகிறது.எம்மார் எம்.ஜி.எஃப் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குத்தான் தில்லி வளர்ச்சிக் குழுமம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட சர்வதேச அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்த நிறுவனம் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் எஸ்.கே.சிங்கின் மகனும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான கனிஷ்க் சிங்கின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், உடனடியாகக் கட்டி முடிப்பதற்காக, இந்த நிறுவனத்துககு முறையே | 750 கோடியும், | 827 கோடியும் முன்பணமாக, ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தொகைக்கும் அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறதே, அது ஏன்? எதற்காக? யாருடைய பரிந்துரையில் அல்லது நிர்பந்தத்தின் பேரில்?பல்ஜித்சிங் லல்லி என்பவர், எம்.எஸ். கில்லைப் போலவே பஞ்சாபியரான இன்னொரு இந்திய அரசுப்பணி அதிகாரி. மத்திய உள்துறையின் செயலர்களில் ஒருவராக இருந்த பல்ஜித்சிங் லல்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்ப நண்பர். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர். இவர் பிரசார் பாரதி குழுமத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது நேரடிப் பார்வையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெயரில் பிரசார் பாரதி சார்பில் நடந்தேறியிருக்கும் ஊழல், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.பிரசார் பாரதி குழுமம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவுமான உரிமையை லண்டனைச் சேர்ந்த எஸ்.ஐ.எஸ்.லைவ் என்கிற நிறுவனத்துக்கு | 246 கோடிக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தப்படி உரிமையை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுப்பதற்கோ அல்லது துணை ஒப்பந்தம் மூலம் வேறு நிறுவனத்தைப் பயன்படுத்தவோ  எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது.ஆனால் நடந்தேறியிருப்பது என்ன தெரியுமா? எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனம் மார்ச் 5, 2010 அன்று பிரசார் பாரதியால் | 246 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே நாளில், "ஜும்' என்கிற நிறுவனத்தை | 177.30 கோடிக்கு காமன்வெல்த் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இடைத்தரகராகச் செயல்பட்டு | 68.70 கோடி லாபம் சம்பாதித்துவிட்டது எஸ்.ஐ.எஸ்.லைவ். பிரசார் பாரதிக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் சேர்த்து "ஜும்' காட்டிவிட்டனர். இதன் பின்னணியில் செயல்பட்டவர் வேறு யாருமல்ல, பிரசார் பாரதியின் செயல் தலைவர் பல்ஜித்சிங் லல்லிதான்.மத்திய நிதியமைச்சகம், எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு முறையான பின்னணியோ, சேவை வரி செலுத்திய பதிவு எண்ணோ, முன்அனுபவமோ இல்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த பிறகுதான், 2010 ஜனவரி மாதத்தில் எஸ்.ஐ.எஸ். லைவ் என்கிற நிறுவனமே தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறி நிதியமைச்சகம் பிரசார் பாரதியை எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், அவசர அவசரமாக ஒப்பந்தத் தொகையான | 246 கோடியில் 80% உடனடியாக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கவும் செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல்ஜித்சிங் லல்லி!ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், முறைகேடுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பிரதமர் மன்மோகன் சிங்குடனோ அல்லது காங்கிரஸ் கட்சித் தலைமையுடனோ நெருக்கமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் என்று எல்லோருமே இந்த "மெகா' கொள்ளையில் தொடர்புடையவர்களாக இருப்பதால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாடி பலிகடா ஆக்கப்பட்டு, பிரச்னையை மூடிமறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்று தோன்றுகிறது.பிரதமர் ஏன் இத்தனை நாளாக மௌனம் சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரால் பதில் சொல்ல முடியாததுதான் காரணம் என்று நம்ப வழியில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்வார்கள். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்கக் கூடுமா என்ன?சமீபத்தில் பதவி விலகி இருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவின் கூற்றுப்படி - ""பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது!''
 

பிரேசில் அதிபருக்கு இந்திரா காந்தி அமைதி விருது

தம் நாட்டுத் தேசிய இனங்களிடையேயும் பிற நாட்டுத் தேசிய இனங்களுக்கும் அமைதியின்மையை ஏற்படுத்தும் நாட்டிற்கு - பிற நாட்டு இறையாண்மையில் தலையிட்டு அந்நாட்டின் மக்களை அழித்தொழித்த நாட்டிற்கு - அமைதி விருது வழங்கும் தகுதியில்லை.அத்தகைய விருதை வாங்குநரும் வெட்கப்பட வேண்டும்.  வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பிரேசில் அதிபருக்கு இந்திரா காந்தி அமைதி விருது

First Published : 20 Nov 2010 03:04:12 AM IST


புது தில்லி, நவ. 19: இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் அமைதி விருதுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழு இவரைத் தேர்வு செய்துள்ளது. |25 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் இவ் விருதினுள் அடங்கும். லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. சோவியத் யூனியன் முன்னாள் அதிபர் மிகைல் கோர்பசேவ், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இந்த விருது ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபராக இராசபட்சே 2-ஆம் முறை பொறுப்பேற்பு

பெரும்பாலான குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை. ஆணவத்துடன் அதிகாரத்தில் உள்ளவர்கள குற்றங்களையே நற்செயல்களாகப்பறைசாற்றுவார்கள். இதற்கு மகிந்தவும் விதி விலக்கல்ல. ஆனால், மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் அவரை அழிக்கும். தெய்வம் நின்று கொல்லும். இயற்கையின் நடைமுறையும் அதுதான்.  நாளை மாவீரர் வாரம் தொடங்குவதற்கான
வீர வணக்கங்களுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
 
 
 
இலங்கை அதிபராக ராஜபட்ச 2-ம் முறை பொறுப்பேற்பு

First Published : 20 Nov 2010 01:01:42 AM IST


கொழும்பு, நவ.19: இலங்கை அதிபராக 2-வது முறையாக வெள்ளிக்கிழமை பதவியேற்றார் மகிந்த ராஜபட்ச. போர்க்குற்றங்களுக்காக சர்வதேச அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்ட யுத்தத்தில் அப்பாவி மக்கள் பெருமளவில் பலியாக இலங்கை ராணுவம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் ஏற்க முடியாது என அவர் பதவியேற்பி நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.6 ஆண்டு காலம் பதவிவகிக்கவுள்ள அவர் இலங்கையின் பொருளாதாரத்தை பெருமளவில் முன்னேற்றமடையச் செய்வதாக வாக்குறுதியளித்தார். வியாழக்கிழமை 65 வயதை அடைந்த அவர்,கொழும்பில் கடற்கரையோரம் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற ஆடம்பரமான விழாவில் பதவியேற்றுக்கொண்டார்,அவருக்கு இலங்கை தலைமை நீதிபதி அசோக டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு வெற்றி கிடைத்தநிலையில், ராஜபட்ச இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை சந்தித்தார்.அதிபர் பதவிக்கான காலவரம்பை நீக்க கடந்த செப்டம்பரில் அரசியல் சாசனத்தை ராஜபட்ச தலைமையிலான அரசு திருத்தியது. இதனால், ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் அதிபராகலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால், இவர் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிந்தது.கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவருக்கு அமோக வெற்றி கிடைத்தது. ராஜபட்ச பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி கொழும்பு நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பதவியேற்பு விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முப்படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.  ஐக்கிய தேசிய கட்சி, மார்க்சிஸ்ட்-இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய எதிர்க்கட்சிகள் ராஜபட்சவின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன.இவ்வளவு ஆடம்பரமாக இந்த விழாவை நடத்தவேண்டியதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் கரு ஜெயசூர்யா கருத்துத் தெரிவித்துள்ளார்.ராஜபட்ச மேலும் பேசுகையில், "ஆசியாவின் அதிசயம்' என இலங்கையை உருவாக்குவேன் என்றார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டங்களை பட்டியலிட்ட அவர், தனது சொந்த ஊரான ஹம்பன்தொடாவில் சீனா உருவாக்கி வியாழக்கிழமை தான் துவக்கிவைத்த துறைமுக திட்டத்தை பற்றியும் தெரிவித்தார்.முதல் முறையாக அதிபரானபோது, இலங்கையில் கெüரவமான அமைதி கிடைக்கச் செய்வேன், புதிய இலங்கையை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தேன். அந்த  வாக்குறுதியை கடைசிவரை காப்பாற்றுவேன் எனவும் அவர் கூறினார்.நாட்டின் முன்னேற்றத்திட்டங்களை நிறைவேற்றியது பற்றி குறிப்பிட்ட அவர், மனித உரிமை மீறலை காரணம் காட்டி மேûலை நாடுகள் நிதியுதவியை நிறுத்திவிட்டபோதிலும் அதை பொருட்படுத்தாது சீனா, ஈரான், லிபியா போன்ற நாடுகளின் உதவியை பெற வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டார்.
 



சாய் பாபா பிறந்த நாள் கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்று தெரியவில்லை. சமயத்தலைவர்கள் நிகழ்ச்சியில் நாட்டடின் முதல் குடிமகன் அலலது குடிமகள் பங்கேற்பது தடுக்கப்பட வேண்டும். இவர்கள் அவர்கள் காலடியில் வீழ்வதும் இருக்கைகள் தாழ்வாக இடப்படுவதும்  சமயத்தலைவர்களே மிக உயர்ந்த நிலையில்  உள்ளதாக நடததப்படும் நிகழ்வுகளு்ம் முதல்  குடிமகனை  அல்ல அவர் வழியில் நம்நாட்டை இழிவு படுத்துவதாக்கும். அனைத்துச சமயச் சார்பு நாடாகத் திகழும் நம் நாடு  உண்மையிலேயே சமயச் சார்பற்ற நாடாகத திகழ வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்.
சாய் பாபா பிறந்த நாள் கொண்டாட்டம்: 
குடியரசுத் தலைவர் பங்கேற்பு


சாய் பாபாவின் 85-வது பிறந்தநாளை முன்னிட்டு புட்டபர்த்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தின்போது சாய் பாபாவுடன் பேசுகிறார் குடி
புட்டபர்த்தி, நவ. 19: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 85-வது பிறந்த நாளையொட்டி புட்டபர்த்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.ஒவ்வொருவரும் சுய அறிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பெற ஸ்ரீ சத்ய சாய் பாபா மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என இந்நிகழ்ச்சியில் பேசுகையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் குறிப்பிட்டார்.சாய் பாபாவின் 85-வது பிறந்த நாள் நவம்பர் 23-ல் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி மகளிர் தினம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்று தெரியவில்லை. சமயத்தலைவர்கள் நிகழ்ச்சியில் நாட்டடின் முதல் குடிமகன் அலலது குடிமகள் பங்கேற்பது தடுக்கப்பட வேண்டும். இவர்கள் அவர்கள் காலடியில் வீழ்வதும் இருக்கைகள் தாழ்வாக இடப்படுவதும்  சமயத்தலைவர்களே மிக உயர்ந்த நிலையில்  உள்ளதாக நடததப்படும் நிகழ்வுகளு்ம் முதல்  குடிமகனை  அல்ல அவர் வழியில் நம்நாட்டை இழிவு படுத்துவதாக்கும். அனைத்துச சமயச் சார்பு நாடாகத் திகழும் நம் நாடு  உண்மையிலேயே சமயச் சார்பற்ற நாடாகத திகழ வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன். (வைகறைக்கு முன்பே முதலாகப் பதி்ந்தும் முதலாகப் பதிவு இல்லை என்கிறீர்களே ! வாசகர் கருத்தை மதியுங்கள். சமயங்களுக்கு 
அப்பாற்பட்டவராகக் குடியரசுத் தலைவர் வி ளங்க வேண்டும்.)

வருவாய் அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவு அதிகரிப்பு:

பிற துறையினருடன் ஒப்பிடுகையில் வருவாய்த்துறையினருக்கு மிகுதியான பதவி உயர்வுகள் குறைந்தகால அளவிலலேயே கிடைக்கின்றன. பதவிப் பெயரை மாற்றுவதன் மூலம் தனித்துவம் உள்ளதாகக் கூறி ஊதிய அளவீட்டில் உயர்வு போன்ற நன்மைகள்  இத்துறைக்கு மட்டும் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. பதவிப் பெயர் மாற்றம் தவறானது. அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
வருவாய் அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவு அதிகரிப்பு: கருணாநிதி உத்தரவு

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=334426&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0bb5%u0bb0%u0bc1%u0bb5%u0bbe%u0baf%u0bcd+%u0b85%u0bb2%u0bc1%u0bb5%u0bb2%u0bb0%u0bcd%u0b95%u0bb3%u0bc1%u0b95%u0bcd%u0b95%u0bc1+%u0bb5%u0bbe%u0b95%u0ba9+%u0b8e%u0bb0%u0bbf%u0baa%u0bca%u0bb0%u0bc1%u0bb3%u0bcd+%u0b85%u0bb3%u0bb5%u0bc1+%u0b85%u0ba4%u0bbf%u0b95%u0bb0%u0bbf%u0baa%u0bcd%u0baa%u0bc1%3a+%u0b95%u0bb0%u0bc1%u0ba3%u0bbe%u0ba8%u0bbf%u0ba4%u0bbf+%u0b89%u0ba4%u0bcd%u0ba4%u0bb0%u0bb5%u0bc1ன்னை, நவ. 19: வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவை அதிகரித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:வருவாய்த் துறையில் பணியாற்றும் வருவாய்க் கோட்டாட்சியரின் வாகனத்துக்கு இப்போது மாதந்தோறும் 115 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. இது, 165 லிட்டராக உயர்த்தப்படுகிறது. மேலும், வட்டாட்சியரின் வாகனத்துக்கு இப்போது 90 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. அது, 140 லிட்டராக அதிகரிக்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு  1.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.உதவியாளர்கள்: வருவாய்த் துறையில் பணிபுரியும் ""இளநிலை உதவியாளர்'' பதவியின் பெயர், இனி ""இளநிலை வருவாய் உதவியாளர்'' என்றும், ""உதவியாளர்'' என்ற பதவியின் பெயர் ""வருவாய் உதவியாளர்'' என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

விஐடியில் திருவள்ளுவர், அண்ணா சிலைகள்

தமிழார்வம் மிக்க இப்பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் அவர்கள், கூடங்களுக்குத் தமிழறிஞர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகங்களில் எங்கு நோக்கினும் ஆங்கில அறிவிப்புகளே கண்களுக்குக் காட்சியளிக்கின்றன. எல்லா அறிவிப்புகளிலும் தமிழுக்கு முதன்மை தரவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

விஐடியில் திருவள்ளுவர், அண்ணா சிலைகள் 
27- இல் முதல்வர் திறந்து வைக்கிறார்

First Published : 20 Nov 2010 03:11:06 AM IST


வேலூர், நவ. 19: விஐடி பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர், அறிஞர் அண்ணா சிலைகளை இம்மாதம் 27-ம் தேதி மாலை 4.30 மணியளவில் முதல்வர் கருணாநிதி திறந்துவைக்கிறார். பின்னர், விஐடியில்  60 கோடியில் புதிதாகக் கட்டப்பட உள்ள காயிதே மில்லத் முகமது இஸ்மாயில், விஞ்ஞானி சார்லஸ் டார்வின் ஆகியோர் பெயர்களிலான புதிய விடுதிக் கட்டடங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை வகிக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்  உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

கிரந்தம் வடிவில் வரும் எமன்: - தமிழக அரசியல்




‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன்.

கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்றை அடுத்தவர் படிக்க முடியும். இந்தக் குறையைப் போக்க, தகவல் மாற்றமைப்பிற்கான இந்தியத் தரக்குறியீட்டு முறையும் (ISCII - Indian Standard Code for Information Interchange) தமிழ்த்தரக் குறியீட்டுமுறையும் (TSCII - Tamil Standard Code for Information Interchange) அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அடோப், ஆப்பிள், ஐ.பி.எம்., கூகுள், மைக்ரோசாப்டு முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டிணைவான ஒருங்குறி அவையம்

(Unicode Consortium) அறிமுகப்-படுத்திய ஒருங்கீட்டு முறை மேலாதிக்கம் செலுத்தி-யமையால் நம் நாட்டு முறைகள் பின்தங்கின.

இப்பொழுது, உலக-மொழிகளின் கணிணிப் பயன்பாட்டிற்கு இந்த அமைப்பின் ஒதுக்கீடே அடிப்படை என்னும் நிலை வந்துவிட்டது. இந்த அமைப்பின் மூலம் கிரந்த எழுத்துகளைக் கணிணியில் பயன்படுத்த ஒதுக்கீடு வேண்டும்பொழுதுதான் தமிழுக்கு எதிரான சதி தெரியவந்திருக்கிறது.

கிரந்தம் என்றால் என்ன?

சமசுகிருத எழுத்துகளைத் தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல் மொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால், நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமசுகிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.

இந்த நிலையில்... மணிப்பிரவாள நடைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு, கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் வேண்டி மத்திய அரசு 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தது. அதற்கிணங்க, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை பல கூட்டங்களுக்குப் பின் செப்டம்பர் 2010&ல் இறுதிக் கூட்டம் கூட்டி முடிவெடுத்து, ஒருங்குறி அவையத்திற்கு 18.10.2010 அன்று பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்பதற்கான முடிவெடுப்பு 06.11.2010 அன்று நடந்த ஒருங்குறி அவையத்தில் நடைபெறுவதாக இருந்தது.

அவ்வாறு அன்று அந்த முடிவை ஏற்றிருந்தால், பின் எந்த நாடு சொன்னாலும் அதனை அவ்வமைப்பு திரும்பப் பெற்றிருக்காது. நல்ல வேளையாகத் தமிழ்க் காப்பு அமைப்புகள் சார்பில் 2.11.2010 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாயிலாக, அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசாவிடம் முறையிட்டதன் தொடர்ச்சியாக இந்த முடிவெடுப்பு 26.02.2011 அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சுருக்கமாகக் கூறுவதாயின், மணிப்பிரவாள நடைக்காக, தமிழ் எழுத்துகளில்
1 2 3 4 என்பதுபோல் 26 கிரந்த எழுத்துகளைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காகக் கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகக் கதையும் கூறப்பட்டது. மேலும், தமிழ் எழுத்துகளையும் கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ‘இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துகளைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்ற முறையை அறிமுகப் படுத்துவதுதானே இதன் உள்நோக்கம்?

இதை வீண் கவலை என்று ஒதுக்கிட முடியாது. செந்தமிழ் வழங்கிய சேரநாட்டில் கிரந்த எழுத்துகளின் செல்வாக்கைப் புகுத்தியதால்தான் தமிழ், மலையாளம் ஆயிற்று. ஆக, மீண்டும் ஒரு மலையாள மொழி தமிழ்நாட்டில் தோன்ற வேண்டும் என்ற அவலத்திற்கு வித்திடத்தானே கிரந்தத்தைப் புகுத்துகின்றனர். ஆனால், இதைத் தடுத்திட நாம் என்ன செய்தோம்? ஒருங்குறி அவையத்தில் தமிழ்நாடும் உறுப்பினராக இருந்தது. ஆனால், உறுப்பினர் கட்டணம் அமெரிக்கப் பணத்தில் 12,000 செலுத்தத் தவறியமையால், உறுப்பினர் தகுதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துச் செம்மொழி மாநாட்டை நடத்திய நமக்கு இந்தத் தொகை பெரிதா?

மத்திய அரசின் மனித மையக் கணிணிப் பிரிவு (Human Centered Computer Division)இயக்குநர் சொர்ணலதா 2008&லிருந்து நடத்திய கூட்டங்களில், தமிழ்நாடு சார்பில் யாரும் பங்கேற்காததன் காரணம் என்ன? அப்படிப்பட்ட சூழலிலும் கூட்ட விவரத்தைத் தெரிவித்துக் கருத்து கேட்டுள்ளது மத்திய அரசு. உரிய காலத்தில் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக (தமிழ் இணையக் கல்விக் கழக) இயக்குநர் மறுமொழி அளித்துள்ளார். அதற்கு முன்னரே, தமிழ் இணைய வளர்ச்சிக்கு என அமைக்கப்பட்ட உத்தமம் (INFITT) சார்பிலும் ஒருங்குறி அவையத்திற்கு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள கணிணி அறிஞர்களும் தமிழார்வலர்களும் இது குறித்து எச்சரித்தும்... தமிழக அரசு கவனத்திற்கும் பொது மக்களின் கவனத்திற்கும் முன்னரே இதை ‘உத்தமம்’ ஏன் கொண்டுசெல்லவில்லை? முதலமைச்சர் கவனத்-திற்குப் பிறரால் இது குறித்த தகவல்கள் கொண்டு செல்லப்பட்ட பொழுது 4.11.2010 அன்று ஒரு கூட்டம் கூட்டியுள்ளார். ஆனால், ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஒரு பக்க மடலை, மத்திய அரசிற்கு உடனே அனுப்பாமல், ஒருங்குறி அவையம் அமெரிக்காவில் கூடும் நாளான 6.11.2010 அன்று காலத்தாழ்ச்சியாக அனுப்பியது ஏன்?

ஒருவேளை, முன்பே இது தொடர்பான முடிவெடுப்பு ஒத்தி வைத்திருக்காவிட்டால் கிரந்தத்துடன் தமிழைக் கணிணி எழுத்துருப் பட்டியலில் ஒருங்குறிக்காக இணைக்கும் அவலம் அரங்-கேறியிருக்கும். தமிழாய்ந்த தமிழர்கள் முதல்வர் அருகே இருக்கும் பொழுதே இந்த நிலை!

இப்பொழுது கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதால், பஸ், ஜாமீன், மிக்ஸி, ஜாம், ஷவர், முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்து விட்டன.

எனவே தமிழ் நிலைப்பதற்கு, நாம் இப்பொழுது உடனடியாக தமிழ்ப் பாடநூல்களில் இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தம் அறியாத தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அறிவியல் அகராதிகளில்கூடக் கிரந்த எழுத்துகள் இல்லையே! நம்மால் ஏன் முடியாது?

அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டுதான் என்று அமைதி காக்காமல், உடனே தமிழறிஞர்களையும் கலந்து பேசிச் சரியான கருத்துருவை அனுப்பி கிரந்தம் தொடர்பான முன்மொழிவைத் திரும்பப் பெற வேண்டும். இதைத்தான் உலகமெங்கும் உள்ள தமிழன்பர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ்ப் பகைவர்கள் விழிப்புடன் இருக்கையில் தமிழ், தமிழ் என முழங்கிக் கொண்டிருப்பவர்கள் உறங்குவது ஏன்? தமிழக அரசு ஆவன செய்யுமா? கணிணி உருவில் வரும் இடரிலிருந்து கன்னித் தமிழைக் காப்பாற்றுமா தமிழக அரசு?



--நன்றி: தமிழக அரசியல்(25.11.2010) [பக்: 2-3]

முதன்மை 5 வாசகர் கருத்துகள் 19.11.10

  • முந்திராவின் ஊழலைச் சொ..>Mitran
  • இந்திய நாட்டின் சரித்த..>sbala
  • தமிழக மீனவர்கள் மனித ந..>Ilakkuvanar Thiruvalluvan
  • தமிழக மக்களுக்கு பகுத்..>பொன்மலை ராஜா
  • ரூ. 1 லட்சத்து 76 ஆயிர..>சிவா

தலையங்கம்: நாள்தோறும் 240 கோடி!

வரிவிதிப்பு முறை பற்றி நன்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாத வருவாய்  பெறுவோருக்கான வரிக் கொடுமையை மாற்றவும் உயர் செல்வ வகுப்பினருக்கு மட்டும் வரிவிதிப்பில் தற்போதைய நிலை தொடரலாம் எனவும்  அவர்களுக்கும் வரிவிதிப்புச் சுமையாக இல்லாத வகையில் மாற்றினால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதையும் குறைவான சீரான வரிவிதிப்பு முறை இருப்பின் வருமான வரித்துறை என்ற  ஒரு துறை தேவையே இல்லை  என்பதையும் அரசு கருத்தில் கொள்ள அறிவுறுத்தி யிருக்கலாம்.  அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

தலையங்கம்: நாள்தோறும் 240 கோடி!
First Published : 19 Nov 2010 12:08:00 AM IST


பணம் என்று வந்தாலே பேராசை வந்துவிடும் என்பதால்தான் நமது முன்னோர்கள் துறவறத்தையும், எளிமையான வாழ்க்கை முறையையும் வற்புறுத்தி வந்தனர். இன்றைய சூழ்நிலையில் சிக்கனம், எளிமை, வசதி வாய்ப்புகளைப் புறக்கணிப்பது, அளவுக்கு அதிகமான வருமானத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது போன்றவை ஏற்றுக்கொள்ளப்படாது என்பது மட்டுமல்ல, சாத்தியமும் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. தனது நியாயமான வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது ஒருவழியில் சம்பாதிப்பது என்பது இன்றைய நடைமுறையில் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படும் ஒன்றாகிவிட்டது.இலவசமாகக் கிடைப்பது மனதுக்கு இன்பத்தை அளிப்பதுபோல, பரிசுகள், அன்பளிப்புகள் போன்றவை மகிழ்ச்சி தருவதுபோல, கையூட்டுப் பெறுவதும்கூடத் தவறில்லை என்கிற மனோநிலை அனேகமாக அரசு ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடமும் ஏற்பட்டுவிட்டிருக்கிறது என்பதுதான் எதார்த்த உண்மை. வரி ஏய்ப்பு பற்றிச் சொல்லவே வேண்டாம்.வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க அதற்கான வரி விகிதமும் அதிகரிக்க வேண்டும் என்றிருந்த முந்தைய அரசுகளின் கண்ணோட்டம், பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் கைவிடப்பட்டது. வருமானவரி மிகவும் அதிகமாக இருப்பதால்தான் பலரும் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்றும், அதிகபட்ச வருமான வரி 30%-க்கு மேல் இல்லாமல் இருந்தால் எல்லோரும் நியாயமாகவும், நேர்மையாகவும் தங்களது வருமானத்தை வெளிப்படுத்தி வருமான வரி செலுத்தி விடுவார்கள் என்றும், புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர்கள் வாதிட்டனர். வரி ஏய்ப்பை முற்றிலுமாக ஒழிக்கவும், கறுப்புப் பணமே இல்லாத பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவும் உலக வங்கியின் சார்பில் இவர்கள் முன்வைத்த உத்திதான் இது.ஆண்டு வருமானம்  5 லட்சம் உள்ளவனுக்கும்,  500 லட்சம் வருட வருமானம் உள்ளவனுக்கும் அதே 30% வருமான வரி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டியவர்களை எள்ளி நகையாடியது புதிய பொருளாதாரக் கொள்கை ஆதரவு கோஷ்டி. என்னவாயிற்று? 30% அதிகபட்ச வரி வரம்பால் பயன்பட்டது என்னவோ பன்னாட்டு நிறுவனங்களும், கோடிகளில் வருமானம் உள்ள பிரிவினரும்தானே தவிர, சாமான்யனுக்கும், அரசுக்கும் அதனால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வரி ஏய்ப்பும், கறுப்புப் பணமும் ஒழிந்ததாகவும் தெரியவில்லை.மாத வருமானம் பெறும் மத்தியதரக் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக வரி வலைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது, உண்மை. இவர்கள் மாதச் சம்பளக்காரர்கள் என்பதால் நேர்மையாக வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதனால், வருமான வரி வருவாய் அரசுக்கு அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மை. சரி, பெரு முதலாளிகளின், தொழில் நிறுவனங்களின் கறுப்புப் பணமும், வரி ஏய்ப்பும் இதனால் குறைந்திருக்கிறதா என்றால், இல்லை என்பதும்தானே உண்மை?வரிவிகிதத்தைக் குறைப்பதால் வரி ஏய்ப்புக் குறைந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பே தவறு என்பதற்கு, இவர்கள் முன்னுதாரணம் காட்டும் அமெரிக்காவையே எடுத்துக் கொள்வோம். அங்கேயும், 2% அல்லது 3% கலால் வரி உள்ள பொருள்களில் வரி ஏய்ப்பு செய்த குற்றத்துக்காக ஆண்டுதோறும் அபராதம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை நாளும் உயர்கிறதே தவிர குறையவில்லை. வியாபாரி என்பவர் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ, அதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முயற்சிப்பார் என்கிற அடிப்படை உண்மையைக்கூடப் புரிந்துகொள்ளாமல் ஆட்சியாளர்கள் செயல்படத் தொடங்கும்போது, வரி ஏய்ப்பும் கறுப்புப்பண நடமாட்டமும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் அரசுக்கு  1.8 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். ஆனால், திருட்டுத்தனமாக இந்தியாவிலிருந்து வெளியேறும் கறுப்புப் பணமும், லஞ்சப் பணமும், ஊழல் பணமும் எவ்வளவு தெரியுமா? நாள்தோறும்  240 கோடி இந்தியப் பணம் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?1948-லிருந்து 2008 வரை முறையற்ற வகையில் சேர்த்த செல்வம் ஏறத்தாழ  213 பில்லியன் டாலர்கள் ( 9.7 லட்சம் கோடி) என்றும், அது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கிறது வாஷிங்டனிலிருந்து, நேர்மையான உலகப் பொருளாதார நடைமுறைகளுக்காகச் செயல்படும் ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் தேவ் கார் என்பவர் வெளியிட்டிருக்கும் அறிக்கைதான் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்களைத் தந்திருக்கிறது.""இந்தியா சராசரியாக 19.3 பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் இழந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2004 முதல் இதன் வேகம் அதிகரித்திருக்கிறது. முறையான பொருளாதாரக் கொள்கைகளாலும், கடுமையான தடுப்பு நடவடிக்கைகளாலும் அரசு முறையற்ற செல்வம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தினாலே, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருக்கும். வறுமை ஒழிக்கப்பட்டு மிகப்பெரிய முன்னேற்றம் காண முடியும்'' என்கிறது அந்த அறிக்கை.வெளிநாட்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள், முதலாளிகள், சமூக விரோதிகள் மற்றும் நிழல் மனிதர்களின் பணத்தின் மதிப்பு சுமார்  640 பில்லியன் டாலர்கள். இந்தியாவின் மொத்த கறுப்புப் பணத்தில் 72% பார்த்தும் பார்க்காமலும் இருக்கும் அரசும், ஆட்சியாளர்களும். கையூட்டுப் பெற்று கறுப்புப் பணத்தை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கும் அதிகார வர்க்கம். இதன் விளைவுதான், வரி ஏய்ப்பின் மூலமும், லஞ்ச, ஊழல் மூலமும், சமூக விரோத நடவடிக்கைகள் மூலமும் கணக்கில் வராத அளவுக்கு அதிகமான பணத்தைச் சம்பாதித்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் போக்கு அதிகரித்து வருவது.இந்தியாவைவிட்டு வெளியேறி ஸ்விஸ் வங்கிகளிலும், கிழக்குக் கரிபியன் பகுதியான ஆங்கைலானிலும், மத்திய அமெரிக்காவிலுள்ள பெலைசிலும், கேமென் தீவுகளிலும், பனாமாவிலும் ரகசியமாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பணம் ஒவ்வோர் இந்தியனுக்கும் சொந்தமான பணம். இங்கே கஞ்சிக்கு வழியில்லாத கூட்டம் தெருவோரம் தூங்குகிறது. ஆனால், பல லட்சம் கோடிகள் அன்னிய நாட்டு வங்கிகளில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ஒரு பிரச்னையாகக்கூடக் கருதாமல், நாம் இனியும் எத்தனை காலம் மௌனம் சாதிக்கப் போகிறோம்?

இராசா பதவி விலகல் . . . .


குற்றமற்றவர் என்று சொல்லி விட  முடியாது என்றும் குற்றவாளி என்று கூறி விட முடியாது என்றும் குழப்புகிறார். கோவனின் உளறல்களுக்கு ஊடகங்கள் முதன்மை  கொடுக்கும் பொழுது இன்னும் உளறலாம்; இனியும் உளறலாம். குற்றவாளி என்றால் கூட்டுப்பொறுப்பிற்குரிய காங்.கும் குற்றவாளி ஆகும். குற்றமற்றவர் என்றால் தி.மு.க.விற்கு உதவியதாக அமையும். எனவே, எப்படி உளறல்களை உதிர்ப்பது என்று புரியாமல் ஏதோ இரண்டையும் இடைவிட்டுக் கூறி ஏமாற்றுகிறார் என்றால் நீங்களும் வெளியிடலாமா?
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
"ராசா ராஜிநாமா செய்ததாலேயே குற்றமற்றவரல்ல': ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


விழுப்புரம், நவ.18:  மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததாலேயே ஆ. ராசா, குற்றமற்றவர் என்று சொல்லிவிட முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) விழுப்புரத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பா.ஜ.க, கம்யூனிஸ்ட், அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாக ஆ.ராசா ராஜிநாமா செய்தார்.ராசா ராஜிநாமா செய்ததினாலேயே அவர் குற்றமற்றவர் என்று சொல்லிவிட முடியாது. விசாரணை செய்து தீர்ப்பு வந்தபிறகு உண்மை தெரியும்.இதைக் காரணம் காட்டி பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையை முடக்குவது தவறு. ஜனநாயகத்தில் இது தவறான நடவடிக்கை.கர்நாடக முதல்வர் எடியூரப்பா  6 ஆயிரம் கோடியில் நிலமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. மற்ற கட்சிகளைக் குறைகூறும் பாஜக, தன் கட்சியின் எடியூரப்பாவை ராஜிநாமா செய்ய சொல்வார்களா?, அவரை விசாரணைக்குட்படுத்த வேண்டும்.அலைக்கற்றை விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. தீர்ப்பு வரும்முன்பே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. பொதுக் கணக்கு தணிக்கைக் குழுத் தலைவர் மனோகர் ஜோஷியின் விசாரணைக் குழு போதுமானது.மக்களவைக் குழு விசாரணை தேவையில்லை. பாஜக விசாரணை தேவை என்கிறது, அப்படியென்றால் தன் கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷியின் விசாரணையையே அவர்கள் நம்பவில்லை என்றுதானே அர்த்தம்.முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது, உண்மைக் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றார்.முன்னதாக மாநில ஒருங்கிணைப்புச் செயலர் எஸ்.வி. தட்சிணாமூர்த்தி, மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் எஸ். ஆறுமுகம், நகரத் தலைவர் டி. சங்கர், இளைஞர் காங்கிரஸ் ஏ. சத்யா, ஒன்றியச் செயலர்கள் வெங்கடேசன், ராஜமாணிக்கம், மாயாண்டி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குற்றமற்றவர் அல்லர் எனக் குறிக்க வேண்டும். பிழையின்றி எழுதுவதை வெளியிடும் தினமணியில் இது போன்ற பிழை ஏற்படாமல் விழிப்பாக இருக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

வ.உ.சி. சிலைக்கு மாலை

ஆங்கிலயேர்களின்  அடிமையாட்சியிலிருந்து விடுதலை பெறப் பெரிதும்  போராடித் தம் உடல், பொருள், வாழ்வை இழந்த  தொழிலாளர் தோழர், தமிழறிஞர்,  விடுதலைப் போராளி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையும் நினைவு நாளையும் இந்திய அளவில் கொண்டாடச் செய்யவும்
அயலகங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் கொண்டாடச் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. சிலைக்கு மாலை


ஓட்டப்பிடாரம்,நவ.18:  வ.உ.சிதம்பரனாரின் 74-வது நினைவு நாளையொட்டி ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.ஓட்டப்பிடாரம்-புதியம்புத்தூர் பிரதான சாலையில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினர் பெ.மோகன், ஊராட்சித் தலைவி ஜெயலட்சுமி ஆதிலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறந்த அரசு அதிகாரிகள்: வ.உ.சி.யின் நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது சிலை தூய்மைப்படுத்தப்படவில்லை. அங்கு தோரணங்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படவில்லை. ஓட்டப்பிடாரத்தில் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் அமைந்திருந்தும் எந்த ஓர் அரசு அதிகாரியும் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தவில்லை.
ஊரின் பெயர் ஒட்டப்பிடாரமா? ஓட்டப்பிடாராமா? சரியாகக் குறிப்பிட வேண்டுகிறேன். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழறிஞர் பி.விருத்தாசலம் காலமானார்

தமிழியக்கப்பணிகளில் ஈடுபாடு கொண்ட தகைமையாளர். அவற்றில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின்   DOCTRINA VIM PROMOVET INSITA  என்னும் குறிக்கோள் முழக்கத்தை மாற்றப் போராடி, கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும என அடையாள முத்திரையில் குறிக்கச் செய்தமையாகும். நாவலர் ந.மு.வேங்கடசாமி அவர்கள் தொடங்க எண்ணி முயன்ற  திருவருள்கல்லூரி  கைகூடாமல் போனது. அதனை  இவர் நிறுவித் தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். அன்னாரின் மறைவிற்குத் தினமணி இணைய நேயர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்கள். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தஞ்சாவூர், நவ. 18: தஞ்சை நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனர் புலவர் பி.விருத்தாசலம் புதன்கிழமை இரவு காலமானார்.தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பூந்துருத்தியில் 1940-ல் பிறந்த விருத்தாசலம் தமிழ் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். 28 ஆண்டுகள் தஞ்சை கரந்தை கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்த இவர், சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், தமிழ் பாட திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவைச் செம்மல், மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாக் குழுவின் ராஜராஜன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு அண்மையில் தொடங்கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவையில் இந்திய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உறுப்பினராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர். இவரது படைப்புகள் 26 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. விருத்தாசலத்துக்கு மனைவி விமலா, மகள் தென்றல் (மருத்துவர்), பேராசிரியர்கள் பாரி, தமிழ்ச்செல்வன், ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலர் விடுதலைவேந்தன் ஆகிய மகன்கள் உள்ளனர்.அவரது மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தட்டச்சர்கள் பணி நிலைப்பாட்டில் பெரும் குழப்பம்

விதிகளுக்கிணங்க இவர்கள் புதிய தாகப் பணியில் சேருபவர்களாகத்தான் கருதப்படுவார்கள். இதுதான் நடைமுறை என்பதால் தனியாக அரசாணை தேவையில்லை. எனினும் தற்போதைய பணியிடங்களில் பணி நீக்கம் எனக் குறிக்கப் பெறாமல் பணி முடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகத்தெரிவித்தால்.
பின்னர் தொடர்பணி ஆணைக்கு உதவும். எனினும் எவ்வாறு குறிப்பிட்டாலும் அரசு பின்னர் இப் பணிக்காலததைச் சேர்த்துக் கணக்கிடுமாறு ஆணை பிறப்பித்தால்தான் பயன் கிட்டும். அவ்வாறு பல சூழல்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அரசு உத்​த​ரவு இல்​லா​த​தால்​ தட்டச்சர்கள் பணி நிரந்தரத்தில் பெரும் குழப்பம்

First Published : 19 Nov 2010 02:39:46 AM IST


சென்னை : தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் பணி நிரந்தரத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தாற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்களை அந்தப் பணியிலிருந்து நீக்குவதா? அல்லது விடுவிப்பதா? என்பதில் தெளிவாக அரசு உத்தரவு இல்லாத காரணத்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் பணி நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதில், தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தார்கள் நியமனமும் ஒன்று.  திமுக ஆட்சிக்கு வந்ததும், பணி நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பணியாற்ற தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் 3 ஆயிரம் தாற்காலிக அடிப்படையில் கடந்த 2007-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.  தலைமைச் செயலகத்தில் 162 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தார்கள் என சென்னையில் மொத்தம் 400 பேர் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்ததற்கான தேதிக்கு முந்தைய நாள் வரும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணிக்காலத்தில் தடை (break service) செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது.   திடீர் குழப்பம்: இந்தத் தேர்வில் தேறியவர்களுக்கு அரசுத் துறைகளில் பணிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நிரந்தரப்படுத்தும்போது ஏற்கெனவே தாற்காலிக அடிப்படையில் பணியாற்றிய அரசுத் துறையில் இருந்து அந்த ஊழியர்களை விடுவிப்பதா? அல்லது அந்தப் பணியில் இருந்து நீக்குவதா? என்ற கேள்வி எழுந்தது.  பணியில் இருந்து விடுவித்தால் அவர்கள் பணியாற்றிய காலத்தில் கிடைத்த சலுகைகள் அனைத்தும் தொடரும்; பணியாற்றிய காலமும் நிரந்தப் பணியில் சேர்க்கப்படும். ஆனால், தாற்காலிகப் பணியில் இருந்து நீக்கப்பட்டு நிரந்தரப்படுத்தப்பட்டால் அவர்கள் புதிதாக பணியில் சேர்ந்ததாக கருதப்படும்.  அரசு உத்தரவு இல்லை: ஊழியர்களை எப்படி நியமிக்க வேண்டும்? என்பது குறித்து  பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தெளிவான உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதனால், அரசுத் துறைகளில் உள்ள உயரதிகாரிகள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போன்று ஊழியர்களை தாற்காலிக பணியில் இருந்து விடுவிக்கின்றனர் அல்லது நீக்குகின்றனர்.  இந்த நிலையைப் போக்கி உரிய உத்தரவுகளை அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்கத்தா விசுவநாதன் காலமானார்

இணைய நேயர் வேண்டுகோளுக்கிணங்க ஒளிப்படத்தை வெளியிட்டமைக்குப் பாராட்டுகள். ஆனால்வண்ணப்படமாக மாற்றியுள்ளீர்கள் போலும். தெளிவாக இல்லை. இயல்பான வண்ணத்திலேயே வெளியிட்டிருக்கலாம். துயரத்தில் கருப்பு-வெள்ளைப்படம்  பொருத்தமாகத்தானே இருக்கும்.
2. மூத்த தலைமுறையினரால் நன்கு அறியப்பட்ட கல்கத்தா விசுவநாதனின் மறைவிற்கு அவர்தம் குடும்பதினருக்கும்  தினமணி இணைய
நேயர்களின் இரங்கல்கள். 
இவண் இலக்குவனார் திருவள்ளுவன்

பழம்பெரும் நடிகர் கல்கத்தா விஸ்வநாதன் காலமானார்

First Published : 18 Nov 2010 10:22:14 AM IST

Last Updated : 18 Nov 2010 06:21:42 PM IST

கல்கத்தா, நவ.18: பழம்பெரும் நடிகர் என். விஸ்வநாதன்(81) மாரடைப்பால் காலமானார். ரசிகர்களாலும் திரை உலகத்தினராலும் தமிழகத்தில் கல்கத்தா விஸ்வநாதன் என்றே அறியப்பட்டவர். இவர், நூற்றுக்கும் மேற்பட்ட வங்காள மொழிப் படங்களிலும், தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள வேலூரில் பிறந்த இவர், மனைவி பரோமிதா, மகன் அசோக் ஆகியோருடன் கல்கத்தாவில் குடியேறியவர். நேற்றிரவு கடும் மாரடைப்பு கண்டு இறந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சத்யஜித் ரேயின் கஞ்சன்ஜங்கா, மிருனாள் சென்னின் புனாச்சோ படங்களில் முக்கிய பாத்திரங்களில் இவரின் நடிப்பு பரவலாக இவருக்கு தனிப்பட்ட ரசிகர் வட்டாரத்தைப் பெற்றுத் தந்தது. சத்யஜித் ரே-வுக்கு மிகவும் பிடித்த நடிகராக விளங்கியவர். அவருடைய நகர நாகரிகம் சார்ந்த மிடுக்கான நடிப்பும், மேலைநாட்டு பாணியிலான தோற்றமும் உச்சரிப்பும் ரே-யைக் கவர்ந்திருந்தது. இவருக்கு அப்படிப்பட்ட பாத்திரங்கள் மிகவும் பொருந்துவதாக திரையுலகில் அடையாளம் காணப்பட்டார். கையில் பிரிட்டிஷார் பாணியில் ‘புக்கா’ ஏந்தியவாறு இவர் உச்சரிக்கும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

இலங்கை மீனவர்களுக்குத் தமிழக மீனவர்கள் உதவி

தமிழக மீனவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும் சிங்களர்களுக்கு அறிவு வருவதில்லை. சிங்கள அரசும் இந்திய அரசும் தமிழக மீனவர் படுகொலைகளுக்கு வாய்மூடி இருந்தாலும் சிங்கள மீனவர்களாவது  எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? இனியாவது மனித நேயத்துடன் நடந்து கொள்ளட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவி


நாகப்பட்டினம், நவ.18: கோடியக்கரை அருகே நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்து கரைக்கு அழைத்து வந்தனர்.இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது விசைப்படகில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் கரைதிரும்ப முடியாமல் தத்தளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சிலர் அவர்களை மீட்டு கோடியக்கரை கரைக்கு அழைத்துத் வந்தனர்.பின்னர் அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

62 தொலைத்தொடர்பு உரிமங்களை நீக்க டிராய் பரிந்துரை

உடனடியாகப் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் குறுக்கு வழியில் செயலை முடிக்கலாம் என எண்ணி ஊழலை விதைப்பவர்கள் பின்னர்ப் படுகுழியில் விழ வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்து நேர் வழியில் செல்வார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

62 தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய டிராய் பரிந்துரை


புதுதில்லி, நவ. 18: ஏர்செல், யூனிநார், விடியோகான், எடிஸ்சாலட் (ஸ்வான்) உள்ளிட்ட நிறுவனங்களின் 62 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருக்கிறது.2ஜி அலைக்கற்றை ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 2008-09-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு உரிமங்களை டிராய் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் 62 உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்திருக்கிறது. அதில் யூனிநார் நிறுவனத்தின் 8 உரிமங்களும் ஏர்செல் நிறுவனத்தின் 5 உரிமங்களும் அடக்கம் எனத் தெரிய வந்திருக்கிறது.ஒப்பந்தத்திலுள்ள விதிமுறைப்படி சேவைகளைத் துவக்காததே உரிமங்களை ரத்து செய்யப் பரிந்துரை செய்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வியாழன், 18 நவம்பர், 2010

மேல் அடுக்கில் சுழற்சி

சென்னை, நவ. 18-
வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார். வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு அரபிக்கடல் பகுதிக்கு சென்று விட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே லேசாக மழை பெய்து வருகிறது. ஈரப்பத காற்று காரணமாக இந்த மழை பெய்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் வட தமிழ்நாட்டில் வளி மண்டல சுழற்சியால் மழை குறைந்துள்ளது.
ஆனால் இலங்கை பகுதியில்வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இனறும் நாளையும் கன மழை பெய்யும்.
இவ்வாறு ரமணன் கூறினார்.
நேற்று அதிக பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 செ.மீ. மழையும், சாத்தாங்காட்டில் 8 செ.மீ. மழையும் பொள்ளாச்சியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
கருத்து

Thursday, November 18,2010 05:28 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
செய்தியில் வளி (காற்று) மண்டலம் எனச் சரியாகக் குறிப்பிட்டுள்ளது. தலைப்பில் வழி எனத்தவறாகக் குறிக்கப் பெற்றுள்ளது. உடனே திருத்த வேண்டுகின்றேன். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
Thursday, November 18,2010 04:51 PM, தமிழன் said:
எனக்கு தெரிஞ்சி மழை இன்னும் வரல வந்தா நல்லா இருக்கும்
Thursday, November 18,2010 04:44 PM, fred said:
சில இடங்களில் வரலாம். வராமலும் இருக்கலாம். இப்படி ஒரு வானிலை மையம் நம்ம தமிழ் நாட்டில். கஷ்டம். ரமணன்
Thursday, November 18,2010 04:40 PM, முல்லை மைந்தன் said:
அப்போ மேல் அடுக்கில் குடியிருப்பவர்கள் எல்லாம் கீழ் அடுக்கில் குடிபெயருங்கள். ஒன்னும் ஆகாது.
Thursday, November 18,2010 04:34 PM, Vijay said:
அப்ப சத்தியமா மழை வராது.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Friday, November 19,2010 03:24 AM, Ilakkuvanar Thiruvalluvan said:
வழி எனத்தவறாகக் குறித்ததை வளி எனத் திருத்திக் கொண்டமைக்கு நன்றி. ஆனால், திருத்தியதை இழிவாக எண்ண வேண்டா. கவனக் குறைவாகத்தவறு நேர்ந்துள்ளது. படிப்பவர் சுட்டிக் காட்டியதும் திருத்திக் கொண்டீர்கள். இது பாராட்டிற்குரிய செயல்தானே. திருத்துமாறு சொன்ன குறிப்பும் இப்பாராட்டுக் குறிப்பும் இருந்தால்தானே உங்கள் பணிக்குச் சிறப்பு. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thursday, November 18,2010 04:51 PM, தமிழன் said:
எனக்கு தெரிஞ்சி மழை இன்னும் வரல வந்தா நல்லா இருக்கும்
On Thursday, November 18,2010 06:23 PM, மழை வேண்டி said :
திருநெல்வேலியில் இன்று மழை இல்லை எப்போது மழை வரும்? என்று கூறுங்கள் mr .ரமணன் .
On Thursday, November 18,2010 09:27 PM, முல்லை மைந்தன் said :
தலைவா மழை வேண்டி.. நாளை திருநெல்வேலியில் கணமழை பெய்யும்.பாருங்கோ. அப்புறம் எனக்கு நன்றி கூறுங்கோ.
Thursday, November 18,2010 04:44 PM, fred said:
சில இடங்களில் வரலாம். வராமலும் இருக்கலாம். இப்படி ஒரு வானிலை மையம் நம்ம தமிழ் நாட்டில். கஷ்டம். ரமணன்