திங்கள், 13 ஜூலை, 2009

விடுதலைப் புலிகளை ஒடுக்கிய ஃபொன்சேகாவுக்கு மிக உயரிய பதவி



கொழும்பு, ஜூலை 12: இலங்கையில் விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்துவதற்கு காரணகர்த்தாவாக இருந்த ராணுவத் தளபதி ஜெனரல் சரத் முப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இந்த பதவி உயர்வு ஜூலை 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளை பூண்டோடு ஒழிப்பதற்காக ராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தியவர் ஃபொன்சேகா. 1990, 1991, 2000 ஆகிய ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையை வெற்றிகரமாக வழிநடத்தி அதிபரின் பாராட்டைப் பெற்றவர்.வன்னிப் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படைகளுக்கு கமாண்டராக உள்ள ஜகத் ஜயசூர்யா, புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கடற்படைத் தளபதியாக உள்ள வசந்த கர்ணகோடா, அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய கடற்படை அட்மிரல் திஸôரா சமரசிங்கே, புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்

இவ்வாறெல்லாம் பதவிகள் அளிக்கா விட்டால் சிங்கள ஆட்சியாளர்களையும் அழித்து விடுவர் என்னும் அச்சத்தால் தரப்படும் பதவி உயர்வுகள். இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 4:11:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக