விழாவில் பேசுகிறார் லட்சுமியம்மாள் கல்வியியல் கல்லூரித் தலைவர் எம்.வருவான் வடிவேலன். உடன் (இடமிருந்து) தருமபுரி தமிழ்ச் சங்கச் பொருளாளர் பொ.சச்சிதானந
தருமபுரி, அக். 15: ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார். தருமபுரி தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழ்ச் சங்கங்கள் ஊருக்கு ஊர் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான். என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்கிலேயர் போல் உடையணிந்து கொண்டாலும், வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் குடியுரிமையே பெற்றிருந்தாலும், அவர்கள் சார்ந்த இனத்தின் பெயரால்தான் ஒருவர் அடையாளம் காணப்படுவார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் ஆப்ரோ அமெரிக்கர் என்றுதான் அழைக்கின்றனர். அதுபோலதான் தெலுங்கு பேசுபவர்களை தெலுங்கர்கள் என்றும், மலையாளம் பேசும் மக்களை மலையாளிகள் என்றும், தமிழ் பேசுபவர்களைத் தமிழர்கள் என்றும் அந்தந்த மொழியின் அடையாளத்தில்தான் இனம் காண்கின்றனர். எனவே நாம் நமது மொழியின் அடையாளம் அழிந்துபோகாமல் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நமது நாட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் படித்து பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். அதற்கேற்ப ஏராளமான மேலாண்மைக் கல்வியியல், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். ஆனால் அந்தக் கல்லூரிகளில் தரமான மாணவர்கள் எத்தனை பேர் உருவாக்கப்படுகின்றனர் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. அடிப்படைக் கல்வி தரமாகப் போதிக்கப்பட்டு, அதன் பிறகு மேற்படிப்புகள் சிறப்பாக இருந்தால் மட்டுமே நல்ல மனிதர்களை நாம் உருவாக்க முடியும். தரமான மாணவர்கள் உருவாக்கப்பட அவர்களுக்கான அடிப்படைக் கல்வியில் கவனம் செலுத்தும் வகையிலான போதிய ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை. மாணவர்களின் அடிப்படை பலமாக அமையாவிட்டால் நாளைய இந்தியா இன்று உள்ள பெருமைகள் அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவே அவர்களை அடிப்படையில் தரமானவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு உள்ளது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆசிரியர் படிப்பு என்றால் மதிப்பு மிக்கதாகவும், ஆசிரியர் பணி என்றால் கெüரவமானது என்றும் கருதப்பட்டது, போற்றப்பட்டது. அப்போது அவர்களுக்குப் போதுமான ஊதியம் இல்லை. ஆனால் இப்போதோ அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறது. இருப்பினும் இப்போது அவர்களுக்கு உரிய மரியாதையோ, கெüரவமோ வழங்கப்படுவதில்லை. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் மதிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் ஆசிரியர்களாக வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட வேண்டும், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று விழைய வேண்டும். ஆனால் இந்த மூன்று பிரிவினரும் இன்றைய சமுதாயத்தில் இழிவாகவே நடத்தப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாளைய தலைமுறை வளமையாகவும், பலமானதாகவும் இருக்கும். ஆசிரியர் பணி என்பது பாடப்புத்தகத்தை போதிக்கும் பணி மட்டுமல்ல, மாணவர்களை மொழி, இன, நாட்டுப் பற்று உள்ளவர்களாக, மனித நேயமுள்ளவர்களாக மாற்றுவதேயாகும். நாளைய இந்தியா வளமானதாகவும், பலமானதாகவும் இருக்க நாம் அடிப்படைக் கல்வியிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். அஸ்திவாரம் சரியாக அமைந்து விட்டால் மட்டுமே கட்டடம் பலமாக இருக்கும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களாகிய நீங்கள் ஆற்ற வேண்டிய தேசிய கடமை அதுதான்' என்றார் வைத்தியநாதன். சங்கத் தலைவர் வழக்கறிஞர் ந.ராசேந்திரன் வரவேற்றார். செயலர் மருத்துவர் கி.கூத்தரசன், கல்வி நிறுவனத் தலைவர்கள் எம்.வருவான் வடிவேலன்,பி.ராஜமாணிக்கம், சா.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ÷நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 2:43:00 PM
10/16/2010 2:43:00 PM


By Muthapan
10/16/2010 2:40:00 PM
10/16/2010 2:40:00 PM


By Solomon
10/16/2010 1:41:00 PM
10/16/2010 1:41:00 PM


By Solomon
10/16/2010 1:37:00 PM
10/16/2010 1:37:00 PM


By Solomon
10/16/2010 1:35:00 PM
10/16/2010 1:35:00 PM


By வெங்கட்
10/16/2010 1:28:00 PM
10/16/2010 1:28:00 PM


By Dillu Durai
10/16/2010 11:29:00 AM
10/16/2010 11:29:00 AM


By GERSHOM CHELLIAH
10/16/2010 8:59:00 AM
10/16/2010 8:59:00 AM


By Unmai
10/16/2010 8:25:00 AM
10/16/2010 8:25:00 AM


By ASHWIN
10/16/2010 8:24:00 AM
10/16/2010 8:24:00 AM


By மு.இளங்கோவன்,புதுச்சேரி
10/16/2010 6:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/16/2010 6:34:00 AM