வெள்ளி, 13 நவம்பர், 2015

புத்த வெறியல்ல… இரத்த வெறி! -புகழேந்தி தங்கராசு

bhuthaveriyall-rathaveri

புத்த வெறியல்ல… இரத்த வெறி!

  பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது.
   எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப் புளுகுமூட்டை அவிழ்ந்தது. எந்த முகாந்திரமும் இல்லாமல் தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருப்பது அம்பலமானது. ‘அப்படியெல்லாம் யாரும் சிறைகளில் இல்லை’ என்று சொன்ன அதே இலங்கை, ‘அவர்களை விடுவிக்கக் கூடாது’ என இப்போது கூசாமல் பேசுகிறது.
  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்த விக்கினேசுவரன் வகுத்த திட்டங்கள் குறித்து இப்போது பேசுவது தேவையற்றது. உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் சொன்ன மாதிரி, ‘நிறைவாகும் வரை மறைவாக இருப்பதுதான்’ நல்லது.
 தமிழ் அரசியல் கைதிகள் தொடங்கிய உண்ணாநிலைப் போராட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதியால்தான் நிறுத்தப்பட்டது. மைத்திரிபாலாவின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அது தொடர்பாக இந்தக் கிழமை(வாரம்) மைத்திரியுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் பேச இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கிறார்.
 மாவையும் சம்பந்தனும் மைத்திரியிடம் கண்டிப்பாகப் பேசுவார்கள். அதில் நமக்கு ஐயமேயில்லை. மைத்திரியும் கண்டிப்பாக வாக்குறுதி கொடுப்பார். அதிலும் ஐயமில்லை. இந்த அரசியல் விளையாட்டு இரண்டு தரப்புக்குமே கட்டாயம் தேவைப்படும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? இதில்தான் நமக்கு ஐயம் எழுகிறது.
 கூட்டமைப்பின் தலைவர்கள் முதலான அரசியலாளர்களை நம்ப இயலாத நிலைக்குச் சிறையில் வாடுகிற ஒன்றுமறியாத் தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களென்றால், கூட்டமைப்புத் தலைவர்களின் குளறுபடிகள்தான் அதற்குக் காரணம். கூட்டமைப்பிலுள்ள அறிவாளி ஒருவர், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எத்தகைய முரண்பாடான கருத்துகளையெல்லாம் வெளியிட்டார் என்பதை நாம் இன்னும் மறந்துவிடவில்லை.
  “முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அரசியலாளர்களை எங்களால் நம்ப முடியவில்லை. வட மாகாண அவை முதல்வர் விக்கினேசுவரனைத்தான் நம்புகிறோம். எங்களது விடுதலை தொடர்பாக அரசுடன் முதல்வர் பேசுவதுதான் பொருளுள்ளதாக இருக்கும்” எனத் தங்கள் பெற்றோர் மூலம் அரசியல் கைதிகள் சொல்லி அனுப்பியிருப்பதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் தெரிவித்திருக்கிறது.
 வீரகேசரியை மாவை படிக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி நமக்குத் தகவல் இல்லை. எனினும், அதைப் படிக்காததால்தான் “ அதிபருடன் பேசப் போகிறோம்” என்று அவர் கூறியிருப்பார் என நான் கருதுகிறேன்.
  அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மட்டுமில்லாமல், காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும் குடியதிபருடன்(சனாதிபதியுடன்) பேசப் போவதாக மாவை தெரிவித்திருக்கிறார். இப்படிச் சொல்வதற்கான அனைத்து உரிமையும் நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரான அவருக்கு இருக்கிறது. அந்த உரிமையோடு, சிக்கல் குறித்த புரிதலும் மாவைக்கு இருக்க வேண்டியது இன்றியமையாதது என நினைக்கிறேன்.
 காணிகள் விடுவிப்பும், தமிழர் தாயகத்திலிருந்து படையினரை(இராணுவத்தை) வெளியேற்றுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது மாவைக்குத் தெரியுமா தெரியாதா? படையினரை வெளியேற்றாமல் படையினர் பிடித்து வைத்திருக்கும் காணிகளை எப்படி விடுவிக்க முடியும்? அந்த நிலங்களின் உரிமையாளர்களான தமிழர்களிடம் அவற்றை எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும்?
 “நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்” – என்கிறது வள்ளுவம்.
அதுதானே அறிவுடைமை?
 உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பவர், முதலில் மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும். நோய்க்கான காரணம் என்ன என்பதையே அறியாமல், “காய்ச்சலுக்கு இரண்டு மாத்திரை கொடு” என மருந்துக்கடையில் போய்க் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதைத்தான் செய்கிறார் மாவை. அவருக்கும் விக்னேசுவரனுக்கும் இடையில் இருக்கிற வேறுபாட்டை இதுபோன்ற அணுகுமுறைகள்தாம் உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி காட்டுகின்றன. தமிழர் தாயகத்தில் நூற்றைம்பதாயிரம் படையினர் நிற்க வேண்டிய தேவையென்ன? போர் முடிந்துவிட்டதாக அவர்களே அறிவித்துவிட்ட பிறகு இந்தப் படைத் திணிப்பு எதற்கு? தொடர்ந்து பாலியல் முறையீடுகளுக்கு உள்ளாகும் ஒரு படையினர் எம் மண்ணில் நிற்பது எம் உடன்பிறந்தாள்களுக்குக் கண்டமா(ஆபத்து) இல்லையா? படையினரை வெளியேற்றாமல் காணிகளை எப்படி விடுவிக்க முடியும் – எனவெல்லாம் அழுத்தந் திருத்தமான கேள்விகளைத் தொடர்ந்து முன்வைக்கிறார் விக்கினேசுவரன்.
   “படையினரை வெளியேற்று!” – என்று மட்டுமே விக்கினேசுவரன் சொல்லவில்லை. சிங்கள அரசின் திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றைத் துணிவோடு அம்பலப்படுத்தினார். “தமிழர் தாயகத்தில் போதை மருந்துகளைப் பரப்புவது படையினர்தான்… எம் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்காக இந்தக் கொடுமையை அவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்கள்” என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார்.
  விக்கினேசுவரனின் இந்தக் குற்றச்சாட்டு மிக மிகக் கடுமையானது. உலகின் எந்த நாட்டிலும், ஒரு நடுவண் அரசுக்கு எதிராக, அதிலும் குறிப்பாகப் படையினருக்கு எதிராக – ‘போதைப் பொருளைப் படைப்பிரிவு பரப்புகிறது’ என்று யாரும் குற்றம் சாட்டியதாகத் தெரியவில்லை. விக்கினேசுவரன் மாகாண அவை ஒன்றின் முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அவர் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்தது, எளிதான செய்தி இல்லை!
 விக்கினேசுவரன் சொன்னது பொய்யாயிருந்தால், இலங்கை நடுவண் அரசு உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கும். அப்படிச் செய்யத் துணியாததிலிருந்து, விக்கினேசுவரனின் குற்றச்சாட்டு வலுவானது என்பது தெளிவாகிறது. அப்படியொரு குற்றச்சாட்டு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கக் கூடத் துணிவில்லாதிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புதான், ‘படையினரை வெளியேற்று’ – என முழங்காமல், ‘காணிகளை விடுவி’ என மென்று விழுங்குகிறது.
 படை யினரை வெளியேற்று – என்பதை வலியுறுத்தாமல், ‘காணிகளை விடுவித்துவிடுங்கள்’ – என மாவை கோருவது பொருளற்றது. நோய்க்கான காரணம் என்ன என்பதைப் பற்றிக் கவலையேப்படாமல், மருந்துக் கடையில் போய் மாத்திரை கேட்கிறாரா மாவை!
  பல்லாயிரம் மக்கள் வாழ்வதற்குப் போதுமான ஒரு நிலப்பரப்பு, சில நூறு பேரே இருக்கிற ஒரு படைப்பிரிவு முகாமுக்குத் தேவைப்படுகிறது. அதன் பக்கத்தில்கூட எவரும் நெருங்கிவிட முடியாத அளவுக்கு நீண்ட தொலைவுக்குப் பாதுகாப்பு வேலிகள் தேவைப்படுகின்றன. படையினரை வெளியேற்றாமல், அந்தக் காணிகளை மீட்டுவிட முடியும் என மாவை நம்புவது அவரது அறியாமையை மட்டுமே காட்டுகிறதா, ஒட்டுமொத்தக் கூட்டமைப்பின் அறியாமையையும் காட்டுகிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
  உடன்பிறவி தமிழினிக்காகப் பாவலர் ஈழவன் எழுதியிருந்த வெகு அருமையான ஒரு கவிதையை மாவை போன்ற தலைவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
 “விழுபவர் எழுவதும் வீழ்த்தியோர் அழிவதும்
எழுதிய விதியதன் உறுபயன் ஆயினும்
எதையெதை இழந்தோம் எதுவரை இழந்தோம்
அதையெலாம் அறிந்திடும் அருகதை இழந்தோம்”
 என்கிறார் ஈழவன் வேதனையுடன்!
  இந்த இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவை அறிந்திடும் அருகதையை எவர் இழப்பினும், இந்த இனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் இழக்கலாமா? இந்தத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்த எமது மக்கள்தானே விக்னேசுவரன் என்கிற புதுவரவை முழு நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்…..! அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற விக்கினேசுவரனால் முடிகிற நிலையில், அதற்கு நேர்மாறாகத் தலைவர்கள் சிலர் நடந்துகொள்வதற்கு என்ன காரணம்?
   இனப்படுகொலை எனச் சொல்வது அரசச் சூழ்ச்சி( இராசதந்திரம்) இல்லை…
  பன்னாட்டு உசாவல் கோருவது அரசச் சூழ்ச்சி இல்லை….
  படையினரை வெளியேற்றச் சொல்வது அரசச் சூழ்ச்சி இல்லை…
என மெத்தப் படித்த அறிஞர்கள் சிலர், இந்தத் தலைவர்களின் சார்பில் பேசிக் கொண்டேயிருக்கிறார்களே…… வேறெதைத்தான் அரசச் சூழ்ச்சி என்று கருதுகிறார்கள் அவர்கள்
இனப்படுகொலை – என்கிற சொல்லைப் பார்த்து நடுங்குவது இலங்கை அரசு மட்டும்தான்…
பன்னாட்டு உசாவல் கூடவே கூடாது – எனச் சொல்வது, பௌத்த சிங்கள வெறியர்கள்தாம்….
தமிழர் தாயகத்திலிருந்து படையினரை வெளியேற்றவே கூடாது – என வற்புறுத்துவது பௌத்த சமயப் பீடங்கள்தாம்…..
அவர்கள் சொல்வதையேதான் இவர்களும் சொல்வார்கள் எனில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயர் எதற்கு? தமிழ் – சிங்களக் கூட்டமைப்பு எனப் பெயர் மாற்றித் தொலைக்க வேண்டியதுதானே!
 அரவணைத்துப் போய் வேண்டியதை வென்றெடுத்துக் கொள்வதுதான் அறிவுடைமை – என எனக்கு மின்னஞ்சல் வழி அறிவுரை சொல்லுகிற நண்பர்களிடம் – ‘அரவணைத்துப் போய் எதைக் கிழித்திருக்கிறார்கள்’ எனக் கேட்பதைத் தவிர்க்க முடியவில்லை.
 2009இல் நடந்தது திட்டமிட்ட அந்த இனப்படுகொலை.
ஆறு ஆண்டுகள் முடிந் து போய்விட்டன.
எம் உறவுகளைக் கொன்று குவித்த படையினன் ஒரே ஒருவன் கூடக் கூண்டில் நிறுத்தப்படவில்லை. எம் உடன்பிறந்தாள்களைச் சீரழித்து சின்னபின்னமாக்கிக் கொன்ற ஒரே ஒரு படையினப் பொறுக்கி கூடத் தூக்கிலிடப்படவில்லை. எல்லா விதங்களிலும் அழிக்கப்பட்ட எம் இனத்துக்கு, ஒரே ஒரு முனையில் கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை.
  தமக்கான நீதியை எமது மக்கள் பெறுவதற்கு இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கூடத் தூக்கிவைக்க முடியவில்லை, மெத்தப்படித்த அறிஞர்களால்! சிங்களக் கொடும்விலங்குகளுக்குக் கால நீட்டிப்பு வாங்குகிற உள்குத்து வேலையை மட்டும்தான் நன்றியுணர்வோடு செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
 இதைத்தான் சம்பந்தனிடம் கேட்டிருக்கிறார்கள், சுரேசு பிரேமச்சந்திரனும் மற்றவர்களும்! “நீங்களும் சுமந்திரனும் உங்கள் விருப்பப்படி எடுக்கிற முடிவுகளைக் கூட்டமைப்பின் முடிவாக செனிவாவில் பறைசாற்றியது நியாயமா” என்று கேட்டவர்களிடம் சம்பந்தன் மன்னிப்பு கேட்டதோடு அவை கலைந்துவிட்டது.
 நடந்த தவற்றுக்கு [தவறா அது, பச்சையான இரண்டகம்!(துரோகம்)] சுரேசிடமும் மற்றவர்களிடமும் மன்னிப்பு கேட்ட சம்பந்தர், ‘சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடல்’ என்கிற பெயரில் மைத்திரி நடத்துகிற திட்டமிட்ட கேடுகெட்டத்தனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே… யாராவது கேட்டால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என நினைக்கிறாரா?
 செனிவாத் தீர்மானத்தில் ‘பன்னாட்டு உசாவல்’ என்கிற வார்த்தை ‘கொல்லப்பட்ட’போது, அதை வேடிக்கை பார்த்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய உசாவல் – என்று குறிப்பிடப்பட்டதே எங்களால்தான் என்று நீட்டி முழங்கியது. இப்போது, அந்த உசாவல்தானே தொடங்கப்பட வேண்டும்? அதற்கு நேர்மாறாக, ‘என்ன செய்வது’ எனக் கலந்துரையாட சமயத்தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறதே, எதற்கு? சமயத் தலைவர்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு – எனக் கேட்க வேண்டாமா சம்பந்தர்?
 இலங்கையின் விருப்பப்படியெல்லாம் வரிக்கு வரி மாற்றப்பட்டது, செனிவாத் தீர்மானம். உண்மையில் அது அமெரிக்காவின் தீர்மானமே இல்லை; இலங்கையே எழுதிக்கொடுத்த தீர்மானம். அதைக் கூட மதிக்காதென்றால், இலங்கை வேறெதைத்தான் மதிக்கப் போகிறது?
 செனிவாத் தீர்மானத்தின் எந்த இடத்திலாவது – ‘இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பு தொடர்பாக இலங்கையின் சமயத் தலைவர்களைக் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? ‘எந்த அடிப்படையில், செனிவாத் தீர்மானம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து சமயத் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்’ – என இலங்கை அரசிடம் கேட்க வேண்டாமா சம்பந்தன்?
 பௌத்த சமய வெறிதான், இலங்கை என்கிற நாடு கேடுகெட்டுப் போனதற்கு மூலக்காரணம். நாட்டு நலனைக் காட்டிலும் பௌத்த நலன்தான் முதன்மை – என்கிற தவறான அணுகுமுறையால்தான் அழிந்திருக்கிறது அந்த அழகிய தீவு.
 அமைதித் தீர்வுக்கு முயன்ற பண்டாரநாயகாவை புத்தபிக்கு ஒருவன்தான் சுட்டுக் கொன்றான். புத்த பிக்குகளின் திருவோடுகள் தமிழரின் குருதியால் நிறைவது, ஒட்டுமொத்த இலங்கையும் அறிந்த கமுக்கம்(இரகசியம்). அந்தப் பௌத்த விலங்குகளை உட்காரவைத்து, நீதி கிடைக்க என்ன செய்யலாம் எனக் கலந்துரையாடுவதை சம்பந்தன் எப்படி ஒப்புக் கொள்கிறார்?
  சிங்களப் பௌத்தர்களால் எடுத்த எடுப்பிலேயே கொன்று குவிக்கப்பட்டது, தமிழினம் இல்லை…..! அதற்கு முன்பே, புத்தன் உரைத்த அன்பையும் இன்னா செய்யாமையையும் (அகிம்சை) துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்தவர்கள் அவர்கள். அவர்களது வெறி – புத்த வெறியல்ல, இரத்த வெறி.
 ‘இரத்தப் பிக்குகளை மடியில் வைத்துக்கொண்டே நீதி வழங்குவோம்’ – எனச் சொல்கிற இலங்கையின் ஒழுக்கக்கேட்டைச் சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமில்லை, அமெரிக்காவும் இந்தியாவும் கூடப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ள முயலாமல், பாதிக்கப்பட்ட எமது தாயக மக்கள் மீது இரத்தப் பிக்குகளின் தீர்வைத் திணிக்க இவர்கள் யார்?
–திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு
pugazenthi thangarasu02
–தமிழக அரசியல் – ஐப்பசி 20, 2046 / 05.11.2015.
attai-thalaippu-thamizhaga arasiyal 
தரவு : குபேரன்நகர் அறிவொளி


Condition of hunger-striking POWs, political prisoners worsens

Condition of hunger-striking POWs, political prisoners worsens

[TamilNet, Thursday, 12 November 2015, 16:28 GMT]
At least 31 Prisoners of War and political prisoners are either forcefully admitted to prison hospitals or or their health has seriously declined as their fast-unto-death campaign reached the 5th day on Thursday at New Magazine prison in Welikade, Bogambara prision in Kandy and in Anuradhapura prison, former parliamentarian Suresh Premachandran told journalists in Jaffna today. There are Tamils from all the districts, up-country, Muslims and even Sinhalese who are alleged or accused for their involvement with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) among the prisoners who are on hunger-strike, informed legal sources in Colombo told TamilNet. A wide-scale shut-down is to take place in the country of Eezham Tamils on Friday demanding release of the POWs and the political prisoners currently jailed in the prisons of genocidal Sri Lanka.

Mr Suresh Premachandran blamed the Sri Lankan State for gambling with the lives of the political prisoners. The SL Attorney General's Department on Wednesday released 26 men and 2 women on bail. Among those released, there were 6 Sinhala criminal prisoners who were serving sentences for narcotic smuggling, robbery and murder, Mr Premachandran said condemning the SL State for its sinister act of characterising the Tamil political prisoners as criminals.

All the 22 political prisoners were those who had been detained within the last 18 months, he further said.

They are still regarded as criminals who have to present themselves every two weeks in Colombo. “Imagine the difficulties of spending four to five thousand rupees on each travel from remote districts to Colombo,” the leader of the EPRLF said while addressing a press conference in Jaffna.

The Government of Sri Lanka was release false information to the outside world as well as to the media in North-East and in the South. Tamil journalists should not be carried away by the SL propaganda, he asked the reporters in Jaffna.

The SL Attorney General's Department has admitted that there are more than 116 POWs and political prisoners whose judicial proceedings have been dragged for several years ranging between 8 and 18 years. They should be released without delay, the TNA politician demanded. He also questioned what promises the leaders of the Sri Lankan Government in South had extended to Opposition Leader R. Sampanthan of the TNA and on what basis Mr Sampanthan had urged the political prisoners to abandon their previous hunger strike.

No decision has been made on the already expedited cases in which 48 persons have been confirmed as serving severe imprisonment.

There are also another 66 individuals, whose cases were being dealt by various Magistrates Courts in the island. The SL Attorney General's office or the SL government leaders in the South are silent on these issues, Mr Premachandran said.

14 prisoners observing hunger-strike at the New Magazine prison in South have been forcefully admitted to Welikade prison hospital, Premachandran said providing their firstnames.

Ilangko, Kuganathan, Loganathan, and Thanakaran from Jaffna, Kovarthananan from Trincomalee, Kantharegan and Bavanathan Mullaiththeevu and Kirupaharan, Jayalath Silva, Parthipan, Manoharan, Raja, Senthuran and Sebastian from unknown locations were the 14 who have been admitted at the Welikade prison hospital.

Similarly, the health condition of 4 hunger-strikers at Anuradhapura prison has worsened, he said giving their names as Titus fro Ki'linochchi, Nishanthan from Mullaiththevu, Vishal and Gopinath from Jaffna.

The health condition of 13 prisoners from the Bogompara prison has detereorated, he said. There was a Sinhala prisoner from Kandy, a former major rank officer of the SL military (Wickramasinghe), among the prisoners on hunger strike in Kandy.

Up-Country Tamils identified as Rameshkumar, Selvakumar, Suranjith, Sivakumar, Yogarajah, Manoharan hailing from Maaththa'lai, Suntharamay from Kandy, Pushparajah from Lindula, Rubachandran from Thikana and Jayosan, Thevarajah from Ki'linochchi together with Ilangko from Jaffna are also seriously ill, the former parliamentarian told media in Jaffna.

Chronology:

வியாழன், 12 நவம்பர், 2015

பாரத மொழிகளின் தாயே தமிழ்தான்! – பேரா.சி.இலக்குவனார்


பாரத மொழிகளின் தாயே தமிழ்தான்! – பேரா.சி.இலக்குவனார்

  thamizh06
 நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரத கூட்டரசுச் செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும்.
  பாரத மொழிகளின் தாயே தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம். ஆனால் பாரத மொழிகளின் தாய் ஆரியமே; தமிழும் அதன் புதல்விகளுள் ஒன்றே என்று கருதிவிட்டனர். வடவாரியம், இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது. பழந்தமிழோ தனிக்குடும்பத்தைச் சார்ந்தது. மொழிக்குடும்பங்களை ஆராயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி இயல்புகள் உள என்பதை அறியலாகும்.
பேராசிரியர் சி.இலக்குவனார் : பழந்தமிழ்:  பக்கம் 35

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015)

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு – இலக்குவனார் திருவள்ளுவன்


‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

    kaikal
  ‘கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு’ என்று பாரதி வந்துதான்  கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக வைத்தார் என்று தவறாகக் கூறுபவர்கள் பலர் உள்ளனர். பிறன்மனை விழையாமையை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன என்றால் ஆடவர் தன் வாழ்க்கைத் துணையன்றி வேறு பெண்ணை விரும்பக் கூடாது என்று ஆடவர் கற்பை வலியுறுத்தியுள்ளார்கள் என்றுதானே பொருள். போர் இறப்புகளால் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தபொழுது சில வீரர்கள் இருமணம் புரிந்திருக்கலாம். ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதற்காகச் சில மன்னர்கள் அயல்நாட்டு அரசன் மகளை மணம் புரிந்திருக்கலாம். இலக்கிய மரபிலே பாடல் சுவை கருதி அவ்வாறு குறிக்கப்பட்டிருக்கலாம். எனினும் இவையெல்லாம் பொதுமக்கள் வழக்கமல்ல. ஆண்கள் கற்பை உணர்த்தும் பல பாடல்கள் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. உலக மொழியியல் அறிஞர் தொல்காப்பியர்,
மறையின் வந்த மனையோள் செய்வினை
பெறையின்று பெருகிய பருவரல் கண்ணும்
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகைஎனக் குறித்த கொள்கைக் கண்ணும்                 (கற்பியல் 10)
எனச் சொல்லுமிடத்தில் இரு மனைவியர் மிகை எனத் தொல்காப்பியம் வழி உணர்த்துகிறார்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு என்பதை நாம் உள்ளத்தில் நிறுத்துவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015)

நோய்பரப்பும் பன்றிகளைப் பிடிக்கும் தேவதானப்பட்டி பேரூராட்சி

தேவதானப்பட்டி-பன்றிகள்:104_pandrigal_pigs தேவதானப்பட்டி-பன்றி பிடிப்பு :104_pandrigal_pigs02

தேவதானப்பட்டி பேரூராட்சியில்

நோய்களைப் பரப்பும்

பன்றிகளைப் பிடித்த பேரூராட்சி

தேவதானப்பட்டி அருகே உள்ள சாத்தாகோவில்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளிலும் அல்அமீன் நகர் பகுதியிலும் நோய்களைப் பரப்பக்கூடிய பன்றிகள் உலாவருகின்றன.  இதனைக் கட்டுப்படுத்தவேண்டும் எனப் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர்  காவல்துறையும் பேரூராட்சி நிருவாகமும் பன்றிகளை வளர்ப்பவர்கள் தாமாக முன்வந்து பன்றிகளை அப்புறப்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்தன. இருப்பினும் பன்றிகளை வளர்ப்பவர்கள் தொடர்ந்து வளர்த்து வந்தனர். அதன்பின்னர் பன்றிகளை வளர்ப்பவர்களுக்குப் பேரூராட்சி சார்பில்   எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து வளர்த்து வந்ததால் பேரூராட்சி நிருவாக அதிகாரி தலைமையில்  ஏறத்தாழ 20க்கும் மேற்பட்டவர்கள் வலை, சுருக்குக் கயிறு மூலம் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்தினார்கள்.
  இதன்  தொடர்பாக நிருவாக அதிகாரி கூறுகையில், நோய்களைப் பரப்பும் பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்ந்து வளர்த்தால் பன்றி தொடர்பான நோய்களை ஒழிக்கும்வரை பேரூராட்சி நிருவாகம் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
பெயர்-வைகை அனீசு :peyar_vaigaianeesu_aniz_name

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015)

புதன், 11 நவம்பர், 2015

செயமங்கலம்: தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள்

செயமங்கலம்-தீப்பற்றி எரியும் மின்மாற்றி :104_seayamangalam_transformer_firing

செயமங்கலம் பகுதியில்

தீப்பற்றி எரியும்  மின்மாற்றிகள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள  செயமங்கலத்தில்  மின்மாற்றி எரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள  செயமங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் வழியில்  மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி  அருகே கயிறு தொழிற்சாலை,  கன்னெய்(பெட்ரோல்) நிலையம் உள்ளன.  கடந்தவாரம் ஒருநாள் 12 மணியளவில் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இத்தீயின் புகையைக் கண்டவுடன்  கன்னெய் நிலைய ஊழியர்களும், கயிற்றுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும் அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்புத்துறைக்கும்   தொலைபேசி வழித்  தெரிவித்துப் பலமணிநேரம் ஆகியும் யாரும் வரவில்லை.
  அவ்வழியே சென்ற  செயமங்கலம் ஊராட்சிச்செயலாளர் முருகன், மின்வாரிய அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மின்மாற்றி அருகே உள்ள மின்இணைப்புகளைத் துண்டிக்கக் கூறினார். அதன்பின்னர்  மின்மாற்றியில் மணலைக் கொட்டத்  தீயை அணைக்க ஏற்பாடு செய்தார். அதன்பின்னர்  செயமங்கலம் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்இணைப்பைத் துண்டித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். தீயை அணைக்காவிட்டால்  அருகில் இருந்த கயிறு தொழிற்சாலை, கன்னெய் நிலையம் ஆகியவை தீப்பற்றி எரிந்து மிகப்பெரிய  நேர்ச்சி(விபத்து) ஏற்பட்டிருக்கும்.  செயமங்லம் பகுதியில்  மின்மாற்றி, மின்கம்பங்களில் அடிக்கடி இவ்வாறு நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படுகின்றன என்பதால், முறையாகப் பேணவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பெயர்-வைகை அனீசு :peyar_vaigaianeesu_aniz_name
  (அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015)

South Africa to Singapore: global Tamils grasping geopolitics to act

South Africa to Singapore: global Tamils grasping geopolitics to act

[TamilNet, Wednesday, 11 November 2015, 06:42 GMT]
The powers of today have set their nodal points of global contention from the West to China. Whether it was landward, as visualised in Putin’s Eurasia talk at the UN, or seaward, as the traditional option left to the West, it is called the ‘Silk Route’ in their silk-coated language. The nodal points don’t care about the fundamental questions of the peoples in between, other than the question that which of the point overtakes or pre-empts the other. If the Islamic world in between is one example, Tamils without State in the sector between South Africa and Singapore is a worse example. The Eezham Tamils were particularly deceived in a similar situation before under the British, and now global Tamils have to grasp and set the bearings correct.

The move that is shuttling between South Africa and Singapore in the last couple of years on the question in the island, and showing just one of its faces in the conference at Durban in South Africa last week, clearly evidences Washington’s orchestration. One could deduce it from the participants: the trained elephants and the captured ones or the lured ones.

This is a face that is set in parallel to the orchestration of Sumanthiran, Erik Solheim and International Crisis Group outfit, in order to lure the ones that escaped the latter.

Whether there will be any guarantee of materialisation by the ultimate sponsor or not, the South African conference has come out with many demands that are dear to the heart of Tamils, such as demilitarisation, stopping Sinhala colonisation, repeal of the 6th Amendment to facilitate free negotiation etc.

But the slip was still showing when the conference avoided the term genocide, even though citing the resolutions of the NPC and the Tamil Nadu State Assembly for consideration.
Durban Conference
What was more ironical that betrayed the deception was the slogan of the conference organizers that called the country they want to salvage as ‘Sri Lanka’, boldly written in Tamil. Even the existing constitution says that the name of the country is Ilangkai in Tamil. These were the people, who were talking of constitutional changes, self-determination of Tamils etc., at South Africa.

If the Tamils of today have any democratic and Gandhian space to show their resentment to the genocidal State in Colombo and its international patrons, the foremost of it that is symbolically and practically feasible to every Tamil heart is to reject the identity ‘Sri Lanka’ to the face of those who impose the identity.

The task of priority lying ahead of the Tamil participants at the conference is not serving the deceptions of the conference sponsors, but to work for the realisation and solidarity of global Tamils to assert to their geopolitical rights and righteous political status in the region. They also have the task of enlightening the younger generation in this regard.
British maritime map
A British maritime map prepared in 1930s showing the pivotal point of Colombo in the Indian Ocean


Under colonialism of the West, Ceylon was a point to bring in war prisoners of colonial conquests in large numbers, such as the Malays of East Indies and Boers of South Africa, from east and west of the particular sector of Indian Ocean. This is only a small example showing how the colonialists and imperialists of the past viewed the island.

The then world imperialism of the British wanted the Colombo-centric State created in the island to be different from the rest of South Asia to serve as a pivotal point in their imperialist pursuits. The importance became more acutely felt when the call ‘Asia for Asians’ came from Japan.

While the congenitally genocidal Colombo-centric State was always riding on the crest of the waves, which it is doing even now, the leadership of the Tamil nation in the island was always prodded, or was gullible, or had vested interests in ‘cooperating’ with the State and its patrons.

The then Eezham Tamil leadership, having illusions about Colombo and the paradigms set by imperialism, even disassociated itself from the anti-colonial struggle taking place in the rest of South Asia, citing that the island under the British was a ‘model’ to the colonies.

There was the genre of an alternative polity that emerged among Eezham Tamils to bring Mahatma Gandhi to Jaffna and to successfully boycott the election of 1931 under the Donoughmore Constitution that confirmed the unitary cum majoritarian State in the island.

But deceptive promises and political engineering of gullible masses saw to it that this genre of polity never again came to the forefront. Citing World War II, constitutional remedy for Eezham Tamils witnessing an ‘All Sinhala Cabinet’ was postponed. After the war again the Tamils were prodded to participate in the semblance of a ‘United National Party’ State.

When one phase of colonialism and imperialism of 500 years thus ended, there was a genocidal State in the island but Tamils who were long having sea and trade power in the region, and who even under the exploitative colonial conditions had demographic dispersal from Guyana to Fiji, were left Stateless to even question when the genocide of Eezham Tamils took place in the island.

If the unfolding scenario has the ‘emergency’ of West–East contention and securing bases again, and if the Colombo-centric State is at the old game of riding on the crest, Tamils all over the world have to grasp the geopolitics and rise up in solidarity to firmly demand the powers in the game for revision of equations.

No more Colombo-centric approaches for models and solutions.

New Delhi must be very well aware that strengthening southern South Asia is of utmost priority in the current scenario. But what it has to be made to realise, is that security cannot be achieved by keeping Tamils indefinitely at the receiving end. The demand of Eezham Tamils for justice against genocide and recognition of their statehood, are not aggressive against anyone.

Related Articles:
19.10.15   OISL report downplays mass killings, silent on genocide: Law..
19.09.15   Welcoming OISL implies dropping national question and genoci..
18.09.15   Reforms will not happen, genocide will continue, warns Prof...
17.09.15   Hybrid Mechanism saves State lacking political will, fools T..
18.06.15   Fundamentals non-negotiable for non-descript formulas
22.05.15   Oppressed nations shouldn’t take mere existence of geopoliti..
22.01.15   Singapore Principles of 2013: Tamil polity taken for ride fr..
22.02.10   Myth of Sri Lankan state and the historic responsibility of ..


External Links:
The Diplomat: China’s Maritime Silk Road Gamble
Newsweek: Full text of Vladimir Putin's Speech at the UN General Assembly

Family of imprisoned Muslim joins Tamils demanding release of political prisoners

Family of imprisoned Muslim joins Tamils demanding release of political prisoners

[TamilNet, Tuesday, 10 November 2015, 16:37 GMT]
The wife and a daughter of a 41-year-old Tamil Muslim political prisoner, who is languishing in the Sri Lankan prison in the South since January 2009 after being alleged of assisting the LTTE, joined the Tamil mothers on Tuesday morning at Mannaar where they staged a protest demanding the Sri Lankan President Maithiripala Sirisena to release their kith and kin, who are on a fast-unto-death campaign. Along with Ms Segu Mohadeen Noorjahan, Tamil mothers walked from St. Sebastian Church in the city of Mannaar towards the District Secretariat appealing for the release of their family members. “If this is the plight of the declared-prisoners in jail, what is going to be the response on the missing Prisoners of War and others believed to be in secret prisons,” the mothers asked the journalists covering the protest.


Protest in Mannaar
Protest in Mannaar
Mr Abdul Hameed Umar Kathap, a trader who is a father of three hailing from Neariya-ku'lam, Maangku'lam in Vavuniyaa, was abducted while he was on his way to Colombo from Vavuniyaa in January 2009.

Later, the notorious ‘Terrorist’ Investigation Department (TID) of occupying Colombo informed his wife, Ms Segu Mohadeen Noorjahan, that her husband had been imprisoned on the charge of assisting the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The only ‘evidence’ the TID has was a confession obtained from Umar Kathap through torture.

On 03 April 2015, Anuradhapura High Court had dismissed the confession statement. However, the TID was still keeping the victim imprisoned, legal sources told TamilNet.

The political prisoners on Saturday resumed their fast-unto-death demanding the SL President to negotiate their immediate release with Northern Provincial Council Chief Minister Justice C.V. Wigneswaran.

The Sri Lankan regime has refused to consider the imprisoned Tamils as political prisoners.

The adamant refusal to recognise the Tamil-speaking prisoners as political prisoners has drawn wide-scale protests also calling the role played by the collaborative sections among the Tamil National Alliance into question. TNA Parliamentarian M.A. Sumanthiran, who had requested the prisoners to call off their earlier hunger strike, was confronted by a crowd of angry Diaspora activists in Australia last week.
Protest in Mannaar


The prisoners on hunger-strike have denounced the deceptive offer from the SL State giving bail for some of the prisoners, ‘military rehabilitation’ for others and the classification of more than 40 as involved in serious crimes to serve their terms.

The daughter of a 62-year-old Thangamalar jailed by the TID since April 2014 at Welikade prison was blamed for renting out her house to a former LTTE member, whom the TID later blamed for attempting to re-group the LTTE. The accusation was made by the TID in an alleged smokescreen campaign.

33-year-old Sasitharan Sakunthala, the daughter of Ms Thangamalar, said her mother was imprisoned on no valid legal ground and that she had no political intention behind the rental.

TNA parliamentarians representing Vanni district, lawyers, civil society activists and Catholic priests took part in the protest, which was organised by the Citizen's Committee of Mannaar.
Protest in Mannaar


Related Articles:
04.11.15   Tamil leadership need not shy away or react to unfair challe..


Chronology:

Colombo intensifies demographic genocide in Moothoor, Trincomalee

Colombo intensifies demographic genocide in Moothoor, Trincomalee

[TamilNet, Monday, 09 November 2015, 23:51 GMT]
After settling local scores with a corporate outfit associated with the previous regime of Rajapaksa by releasing some of the lands seized from Eezham Tamils in Trincomalee back to the uprooted people from Champoor and making use of the act involved in a larger re-alignment of the geopolitical nexus with external powers that were trading on influencing the OISL recommendations and finally a resolution by ‘consensus’ at UN Human Rights Council in Geneva in October, the current regime of genocidal Sri Lanka has silently intensified the plans to permanently Sinhalicise 1,500 acres of lands that were already seized from Eezham Tamils at Kangkuveali, located southeast of Champoor in Moothoor division of the Trincomalee district.

Kangkuveali
The location of Kangkuveali village and the stretch of paddy fields at the delta of Maavali Kangkai River [Satellite image courtesy: Google Earth, Legend by TamilNet]
Eezham Tamil owners of the agricultural lands complain that the SL State is engaged in a large-scale demographic land grab of genocidal proportions through annexing the already seized lands with the Sinhala division of Seruwila.

540 Eezham Tamil families were dependent for their livelihood by engaging in agriculture in the fertile lands situated at Kangku-veali GS division that comes under Moothoor DS division since 1950s. The upper-lying locality has been traditionally known as Padukaadu and Muthalaimadu in Tamil.

After seizing the East from Tamils in 2007, the Sinhala colonisers from Seruvila division had fully occupied the lands from Tamils. The resettling Tamils were assaulted when they attempted to access their agricultural lands.

The Sinhala colonisers were targeting to seize the lands from Tamils after chasing the villagers away since the SL State-sponsored genocidal pogrom against Tamils in 1983.

A Buddhist monk and his relatives from Dehiwatta and Samagipura areas in Seruwila division were assisted by the SL military, the so-called homeguards paramilitary to seize the lands despite a ‘formal’ interim order blocking the illegal occupation, the Tamil people complain.

Akaththiyar Thaapanan, an ancient Siva temple located at Kangku-veali where Hindus gather to perform the Aadi Amaavaasai ritual for ancestors, was destroyed without any traces coinciding the Heroes’ Day on 27 November in 2009.

The Akaththiyar Thaapanam at Kangku-veali is a site mentioned in a local mythological literature called Karaisaip-puraa’nam.

Last year, a group of Sinhalese led by a Buddhist monk were blocking Eezham Tamils of Kangkuveali village to access their ancient temple of Akaththiyar Thaapanam.

Kangkuveali is a large paddy field village in Moothoor. In old Tamil 'veali' itself stands for paddy field. (In Sinhala word formation 'wela' means paddy field.)

Moothoor (Mūtūr), spelt in a number of mutilated ways by the Sinhala and English media of the island, and copied by the international media, simply means ‘the ancient village’ in Tamil.

Kangkuveali
The Kangkuveali village, its tank and the expanse of paddy fields having ridges [Satellite image courtesy: Google Earth, Legend by TamilNet]




செவ்வாய், 10 நவம்பர், 2015

குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்

சிறுநீரகம் : chiruneeragam_kidney

குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள தே.வாடிப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் ஊராட்சியில் வரும் தண்ணீரைப் பிடித்து குடிநீருக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குற்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு கல்அடைப்பு, சிறுநீரகக் கோளாறு முதலான நோவுகள் அடிக்கடி ஏற்பட்டு அதற்கான மருத்துவமும் பார்த்து வருகின்றனர்.
  இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பபட்டனர். அங்கே உள்ள மருத்துவர்கள் குடிநீரில் அமிலத்தன்மை, காரத்தன்மை வேறுபாடு உள்ளது என்றும் அந்தத் தண்ணீரை ஆய்வு செய்து அக்கிணற்றை மூடவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதன் தொடர்பாகத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து குடிப்பதற்கு உகந்ததல்ல எனக் கண்டறிந்துள்ளனர்.
  எனவே மாவட்ட நிருவாகம் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்கவும் குடிப்பதற்கு தகுதியற்ற நீர் எந்தக்கிணற்றிலிருந்து வருகிறது என ஆய்வு மேற்கொண்டு அக்கிணற்றை மூடவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெயர்-வைகை அனீசு :peyar_vaigaianeesu_aniz_name