சனி, 20 ஜூலை, 2019

தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்

அகரமுதல

ஆடி 05, 2050 – 21.07.2019
ஞாயிறு மாலை 5.00

கொங்கு திருமண மண்டபம், கோவை சாலை, கரூர்

முனைவர் வா.செ.குழந்தைசாமி

கல்வி-ஆய்வு அறக்கட்டளை

தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா பாராட்டுவிழா

 ப.தங்கராசு, தலைவர்
பேசி : 99524 22179

காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா

ஆடி 07, 2050 / 23.07.2019 செவ்வாய்
மாலை 5.30

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

சென்னை (உயர்நீதி மன்றம் எதிரில்)

தலைமை: பேரா.மின்னூர் சீனிவாசன்

கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் படைத்த

காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல்

வெளியிட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன்

அருணாலயா பதிப்பகம்
36அ, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு,
பெரம்பூர், சென்னை 600012
பேசி 044-2551 0605 / 98847 39593

இலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு

அகரமுதல


ஆடி 05, 2050 ஞாயிறு 21.07.2019 மாலை 5.00

குவிகம் இல்லம்
ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,
சென்னை 600 017

 இலக்கிய அமுதம் : அமரர் பாரதி சுராசு

சிறப்புரை : எசு.சதீசுகுமார்


வியாழன், 18 ஜூலை, 2019

கருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?]

கருத்துக் கதிர்கள் 19 & 20

[19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?]
19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா?
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகக் கிரண்(பேடி) பொறுப்பேற்ற பொழுதே, முதல்வருக்கு மேம்பட்டவராக நடந்து கொள்ளும் போக்கு தவறு எனச் சுட்டிக்காட்டியிருந்தோம். மத்திய அரசின் முகவர்(agent)தான் அவர். என்றாலும் மாநில அரசுடன் இணைந்தும் தேவையான நேர்வுகளில் வழிகாட்டியும் மாநில மேம்பாட்டிற்காகப் பணியாற்றியிருக்க வேண்டும். மாறாகத் தில்லி வாக்காளப் பெருமக்கள் அவரது முதல்வர் கனவுடன் அவரைத் தூக்கி எறிந்ததால் புதுச்சேரியில் முதல்வர்போல் ஆட்டம்போடுகிறார் எனப் பிறர் கூறும் வண்ணம் நடந்து கொள்கிறார். மாநில அமைச்சர் நாராயணசாமிக்கும் அமைச்சரவைக்கும்  முதன்மை அலுவலர்களுக்கும் தான் தான் அதிகாரம் படைத்தவர் எனக் காட்ட விரும்பி மக்களாட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். பலவகைகளில் முதல்வர் உரிமைக்குரல் எழுப்பிப் போராடியும் கனவு முதல்வர் கிரண் அம்மையார் ஓயவில்லை. தன் அதிகார  வெறிக்கு அரண் சேர்க்கும் வகையில் மத்திய அரசின் ஆணை ஒன்றை வெளியிடச் செய்தார். (இதுகூட மத்தியத் தலைமையின் நெறியுரையாகத்தான் இருக்கும்.) இவ்வாணையின் படி துணநிலை அலுவரான அவர் புதுச்சேரியின் அன்றாட அலுவல்பணிகளில் தலையிடலாம்.
ஒற்றையாட்சியின் குரலான இந்த ஆணைக்கு எதிராகப் புதுச்சேரியின் பேராயக்(காங்.)கட்சியின் ச.ம.உ. கே.இலட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.
மக்களாட்சியை நசுக்கும் அந்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. அத்துடன் ஆளுநர் புதுச்சேரியின் அன்றாட அலுவல் பணிகளில் தலையிடக்கூடாது என்றும் கட்டளை யிட்டது.
இத்தீர்ப்பினை ஏற்று அமைதி காத்திருக்கலாம். ஆனால், அதிகாரப்பசி உடையவரும் மாநில ஆட்சிகளை ஆட்டிப்படைக்க விரும்புநரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தலைமை நீதிபதி இரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உயர்நீதிமன்ற ஆணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. து.நி.ஆ. கிரண் கோரிக்கையை அடியோடு மறுத்தது.
இந்தத் தீர்ப்பு வந்ததும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேற வேண்யடிவர்க்குத் தமிழக ஆளுநராக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதுபோலும். 
” தமிழ்நாட்டில் மோசமான அரசு, ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு, துணிவின்மையும்   கோழைத்தனமும் தன்னலமும் உடைய மக்கள்”  இருப்பதாகக் குறிப்பிடும் வகையில் சுட்டுரை (tweet) பதிந்துள்ளார். அதிகார வெறி உச்சநீதிமன்றத்தாலேயே அடையாளம் காட்டப்பட்டதால் அதைத் திசை திருப்பக்கூட இவ்வாறு சொல்லியிருக்கலாம். ஆனால், முனைவர் கிரண் அம்மையார் செய்ய வேண்டியது புதுச்சேரியிலிருந்து வெளியேறுவதே!  தன்னை நேர்மையானவராகக்  காட்டும் அவருக்குள்ள நேர்மை உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றால் இதுவரையிலான அதிகாரக் குறுக்கீடுகளுக்கான வருத்தம் தெரிவித்துப் புதுச்சேரியை விட்டு நீங்க வேண்டும். அப்படி என்றால் புதுச்சேரி மக்களும் மக்களாட்சிப்பற்றாளர்களும் அவரை மனமுவந்து வழியனுப்பி வைப்பர்.
அதே நேரம், இவரைக் கருவியாகக் கொண்டு செயல்பட்ட உச்சத்தலைமைகளும் உடனுழைத்த அதிகாரிகளும் தத்தம் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். ஆனால், அதற்கான மனம் வராது. குறைந்தது இதுபோன்று எதிர்க்கட்சி அரசுகளைச் சிதைக்கும் முயற்சிகளையாவது நிறுத்த வேண்டும்.
இவ்வாறு எதிர்பார்ப்பது நம் அறியாமையைக் காட்டுகின்றதோ!
  • இலக்குவனார் திருவள்ளுவன்
20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?
கருநாடக மாநிலத்தில் பா.ச.க.வின் ஆட்டத்தால் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலர் குதிரை பேரங்களுக்கு ஆட்பட்டுக் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். கட்சிமாறிகள் மீது சட்டப்பேரவைத் தலைவர்  கே.ஆர்.இரமேசுகுமார் நடவடிக்கை எடுக்க இருப்பது அறிந்து அவ்வாறான ஆட்சியில் உள்ள ம.ச.த., காங்.கட்சியைச் சேர்ந்த 15  உறுப்பினர்கள் பதவி விலகல் மடலை அளித்துள்ளனர்.  முறைப்படி ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கட்சி மாறுதல் நடவடிக்கை எடுக்கும் பொழுது விலகல் மடலை ஏற்பது முறையல்ல என்றும்  பேரவைத்தலைவர் உடனடியாக முடிவைத் தெரிவிக்க வில்லை. எனவே, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதன் இறுதித்தீர்ப்பில் பேரவைத்தலைவர் முடிவெடுக்கக் கால வரையறை விதிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். அதே நேரம் விலகல் கொடுத்த ச.ம.உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்து விட்டனர்.
ஆனால், இவ்வாறு தீர்ப்பு வழங்கும் முன்னர்,  மனக்குறை உறுப்பினர்கள்பதின்மர் தொடுத்த வழக்கின் கேட்பு நாளன்று, அன்று மாலை 6.00 மணிக்குள் விலகலை பேரவைத்தலைவரிடம் நேரில்  தெரிவிக்கலாம் என்றும்  பேரவைத்தலைவர் அன்றே முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். தங்களின் முந்தைய தீர்ப்புகளுக்கு மாறாகவும் அரசியல் சட்ட நெறிகளுக்கு முரணாகவும் அவ்வாறு அவசரமான தீர்ப்புரை வழங்க வேண்டிய தேவை என்ன வந்தது? பா.ச.க.வின் தூண்டுதலால்தான் அவ்வாறு சொன்னதாக மக்கள் எண்ண மாட்டார்களா?
இதைப்போன்ற மற்றொரு தடுமாற்றத்தை அஞ்சல் துறைக்கு எதிரான வழக்கில் காணமுடிகிறது.
இந்திய அஞ்சல்துறை,  சூலை 14 அன்று நடைபெறும் அஞ்சல் பணியாளர் வேலைக்கான தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என இருநாள் முன்னதாக அறிவித்தது.  இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது, தமிழ் மொழியினருக்கு மட்டும் எதிரானதல்ல,  இந்தி தவிரப் பிற தேசியமொழியினர் அனைவருக்கும் எதிரான தாக்குதல் என்று நிறுத்துமாறு அறிவித்திருக்க வேண்டும். அல்லது தேர்வு அறிவித்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர், தேர்வு முறையை மாற்றுவது மனித உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் தேர்வை நிறுத்தியிருக்கலாம். மாறாகத் தேர்வு நடத்தலாம்; ஆனால் முடிவை நிறுத்தி வைக்கவேண்டும்  என அறிவித்தது. நல்ல தீர்ப்புகள் வழங்கி வரும் நீதிபதிகள் கே.இரவிச்சந்திரபாபு, மகாதேவன் ஆகியோர்தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
ஒருவரோ சிலரோ பாதிக்கப்பட்டு இருந்தால் அவ்வாறு சொல்லியிருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நாட்டின் பெரும்பகுதியினர் பாதிக்கப்படும் பொழுது இப்படி எப்படித் தீர்ப்பு வழங்கினர் எனத் தெரியவில்லை? தேர்வு நடைபெற்ற பொழுது 1000 இற்கு அதிகமான பணியிடங்களுக்கு ஆயிரத்திற்குக் குறைவானவர்களே தேர்வு எழுதியுள்ளனர். ஒரு பணியிடத்திற்கே ஆயிரக்கணக்கானவர்கள் போட்டியிடும் இன்றைய சூழலில் பல்லாயிரம் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதை இந்த எண்ணிக்கையே காட்டுகிறது.
பின்னர் மத்திய அரசு தமிழக மக்களின் எதிர்ப்பிற்கும் நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு. முதலான உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கும் செவிசாய்த்துத் தேர்வுகளை விலக்கி இனி அனைத்து மொழிகளிலும்தேர்வு நடைபெறும் என அறிவித்து விட்டது.  நீதிபதிகள் அஞ்சல்துறையின்  மொழிச்சமமின்மையைச் சுட்டிக்காட்டித் தீர்ப்புகள் வழங்கியிருந்தால் அதற்கேற்ப மத்திய அரசு முடிவெடுத்ததாக நீதித்துறைக்குப் பெருமை சேர்ந்திருக்கும் அல்லவா?
மத்திய ஆட்சியின் குரலாகச் செயல்படுவதாக மக்கள் கூறுவதற்கு இடமளிக்காதவகையில் விழிப்புணர்வுடன் தீர்ப்புகள் வழங்க நீதித்துறையினரை அன்புடன் வேண்டுகிறோம்.
  • இலக்குவனார் திருவள்ளுவன்