காலம்: புரட்டாசி 11& 12, 2050
28&29 செட்டம்பர் 2019 சனி, ஞாயிறு
நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு
[4ème Colloque Tamoul Européen
4th European Tamil Conference
இடம்: 20. Esplanade Nathalie Saurrate Paris 18
Institut International des Etudes Supérieures இற்குப் பிற்புறம்]
தமிழ்ப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், லாயோலா கல்லூரி
ஆகியவற்றுடன் இணைந்தும், ரீ.ஆர்.ரீ.தமிழொலி வானொலியின் ஒத்துழைப்புடனும்
பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் – பாரிசு
நடத்தும்,
‘நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு’
ஆய்வுப் பொருண்மைகள்:
- 1. தமிழ் அகராதியியலின் படிநிலை ஆக்கமும் ஆக்கப் பருமமும்(பரிணாமம் மற்றும் பரிமாணம்)
- இன்பத் தமிழும் இலங்கையரும்.
* செந்தமிழ் மொழியியலாளர்களும், தண்டமிழ் கற்ற பிற மொழிஅறிஞர்களும் தமிழியல் ஆராய்ச்சியை உங்களுடன் பகிர்கின்றனர்!
* ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் ஆராய்ச்சி தொடர்பான கலை, பண்பாட்டுநிகழ்ச்சிகளும் உங்களுக்காக இடம்பெறுகின்றன!
ஒருங்கிணைப்பாளர்: பேரா. முனைவர் ச. சச்சிதானந்தம்
( தமிழ்நாடு அரசின் ‘ மொழியியல் விருது ‘ பெற்றவர் )
தொலைபேசி: 06 52 66 30 01, 09 53 93 76 94
அனைவரும் மாநாட்டுக்கு வருகை ஈந்து, ஈர்ந்தமிழ் சுவைத்து
மகிழ்ந்திடத் தமிழன்பால் அழைக்கின்றோம்!
ஐயகோ! ‘அருமந்த தமிழினை அறியாது கெட்டோம்.’ என சோமசுந்தரப் புலவர் கூறிப் போந்தது போல்
பின்வருந்தாமல் தமிழால் ஒன்றிணைவோம்!
மாநாட்டுக் கட்டுரைகளுக்கான விதிமுறைகள்
- கட்டுரைச் சுருக்கம்( தன் விபரக்கோவையும் ஒளிப்படமும்) பெறுவதற்கான கடைசி நாள்: வைகாசி 17, 2050-31.05.2019
- ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்புவதற்கான கடைசி நாள்: ஆனி 15, 2050- 30.06.2019
- கட்டுரை எழுத்துருவும் அளவும் சீருரு(யூனிகோடு), பாமினி 12″
- கட்டுரைப் பக்கங்கள்: 5-6
- மின்னஞ்சல் முகவரி:sachchithanantham@gmail.com
அ. தமிழ் அகராதியியலின் படிநிலை ஆக்கமும் ஆக்கப் பருமமும் (பரிணாமம்மற்றும் பரிமாணம்) எனும் ஆய்வுப் பொருண்மையில் வரும் கட்டுரைத்தலைப்புக்கள் :
1.தொல்காப்பியத்தில் பிறந்து நிகண்டுகளில் தவழ்ந்து அகராதிகளில் வளர்ந்த தமிழ் அகராதியியல்
- நிகண்டுகள் : உருவ உள்ளடக்க ஆய்வு
- யாழ்ப்பாண அகராதியில் அமெரிக்க – ஐரோப்பிய அகராதிகளின் தாக்கம்
- ஐரோப்பியக் கலைக்களஞ்சியம் – நிகண்டுப் பொருட்புல அமைப்பு : ஒப்பீடு
- தமிழ் அகராதியியலின் தந்தை பெட்கி
- ஐரோப்பிய அகராதியியல் வளர்த்தெடுத்த தமிழ் அகராதியியல்
- தமிழ் அகராதித் தொகுப்பில் யாழ்ப்பாண அமெரிக்கப்பரப்புக்குழு ( mission) பங்கு
- தமிழ் அகராதிகளின் தோற்றமும் வளர்ச்சிப் போக்குகளும்
- தமிழ் அகராதித் தொகுப்பும் அகராதியியல் நெறிமுறைகளும்
- தமிழ் இருமொழி அகராதிகளின் உள்ளமைப்பு வளர்ச்சியும் வரலாறும்
- யாழ்ப்பாண அகராதியில் அமெரிக்க – ஐரோப்பிய அகராதிகளின் தாக்கம்
12.முதல் கலைக் களஞ்சியத்தையும் அளித்த ஆ. முத்துத்தம்பி(ப்பிள்ளை)
- வித்வசிகாமணி குமாரசுவாமிப் புலவரின் இலக்கியச் சொல்லகராதி
- தமிழ் இருமொழி அகராதிகளில் வின்சுலோவின் புரட்சி
- தமிழ் அகராதிகளில் ஐரோப்பிய மொழிகளின் அகராதியியல் உத்திகள்
- புலம்பெயர் நாடுகளில் தமிழ் அகராதித் தொகுப்பு
- தமிழ் அகராதித் தொகுப்பில் இலங்கையரின் பணி.
- அபிதான கோசம், அபிதான சிந்தாமணி. அறிவியற் களஞ்சியம் – ஓர் ஒப்பீடு
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் சிறப்பியல்புகள்
- ஐரோப்பியர் தொகுத்த தமிழ் ஒருமொழி, இருமொழி, பன்மொழிஅகராதிகளின் படிநிலை வளர்ச்சி
- தமிழ் அகராதியியலில் காணக்கூடிய பாலைப் படிவுகள்
- புலம்பெயர் நாடுகளில் தமிழ் அகராதி முயற்சிகள்
- (இ)லிஃவ்கோ, கிரியா இருமொழி அகராதிகளின் நிறைகுறைகள்
- தமிழ்ப் பல்கலைக்கழகப் பெருஞ்சொல்லகராதியின் இலக்கிய ஆளுமை
- இலங்கை அரசகரும மொழிகள் திணைக்கணத்தின் கலைச்சொல் அகரமுதலிகள்
- தமிழ்ச் சொற்பிறப்பியலின் பிதாமகன் ஞானப்பிரகாசர்
- யாழ்ப்பாணத்து கதிரவேற்(பிள்ளைகளின்) அகராதிகள் : ஓர் ஓப்பீட்டாய்வு
- தமிழ் அகராதியியலில் மின்னகராதிகளின் உத்திகளும் பயன்பாடும்
- ஆய்வியல் அறிஞர் ப. அருளியின் அயற்சொல் அகராதியும் அருஞ்சொல் அகரமுதலியும்
- தமிழ் அகராதியியல் தற்காலத்திற்கேற்ப வளர்ந்திருக்கிறதா?
ஆ. இன்பத்தமிழும் இலங்கையரும் எனும் ஆய்வுப்
பொருண்மையில் வரும் கட்டுரைத் தலைப்புக்கள் :
1) இலங்கையில் வளர்ந்த தமிழ்மொழி
2) தமிழ் வளர்ச்சிக்கு ஈழத்தறிஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள்
3) தமிழகத்தில் தமிழ்வளர்த்த இலங்கைத் தமிழர்
4) தமிழ்த்தூதரின் தமிழ்ப் பாதை
5) முத்தமிழ் வித்தகரால் முகிழ்த்த தமிழ்
6) தமிழ்ப் பதிப்புலகின் முன்னோடி (இ)ராவ்பகதார் சி.வை.தா.
7) கிழக்கிலங்கைக் தமிழறிஞர்களின் தமிழ்த் தொண்டு
8) தமிழ் வளர்ச்சிப் பாதையில் ஈழத்து முசுலீம்கள்
9) தமிழ் மொழிக்காவலர் நாவலர்
10) ஈழத்துப் படைப்பாளர்களும் தமிழ் வளர்ச்சியும்
11) தமிழ் வரலாறு யாத்த சபாபதி நாவலர்
12) ஈழத்தில் மேல்நாட்டு அறிஞர்களின் தமிழ் தொண்டு
13) மலையகம் கட்டிக்காக்கும் தமிழ் மொழி
14) தமிழ் மொழிக்காவலர் நாவலர்
15) சிங்களவர் செய்த தமிழ்த்தொண்டு
16) புலம்பெயர் இலங்கையர் ஆற்றும் தமிழ்ப்பணி
17) தமிழ் மொழி பரப்பும் ஐரோப்பியத் தமிழா
18) கனடாவில் ஈழத்துத்தமிழ் மொழியின் பரம்பலும் வளர்ச்சியும்
19) ஈழநாட்டில் தமிழ் இலக்கணச் செயற்பாடுகள்
20) ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு தந்த மகாவித்துவான் நடராசா
21) செந்தமிழ் வளர்த்த ஈழத்து மூதறிஞர்
22) ஈழத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்
23) ஈழத்தில் கிறித்துவப் பரப்புரைமார் தமிழுக்கு ஆற்றிய பணி
24) ஈழத்தில் மதங்கள் மேம்படுத்திய தமிழ்
25) ஈழத்து இலக்கிய வரலாறும் வளர்ச்சியும்
26) ஈழப்போர் ஈன்ற தமிழ்
27) ஈழத்து ஊடகங்களும் தமிழும்