திங்கள், 25 பிப்ரவரி, 2013

கொரியாவில் தமிழ்!

 


கொரியாவில் தமிழ்!
 
தமிழுக்கும், கொரிய மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து, ஆராய்ச்சி செய்யும் ஜுங் நாம் கிம்: நான், கொரிய நாட்டில், தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும், கூட்டமைப்பின் தவைராக உள்ளேன். 2010ம் ஆண்டில், கோவையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில், கொரிய தீப கற்பத்தில் பயன்படுத்தப்படும் கொரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையே உள்ள, ஒற்றுமைகளை ஆராய்ந்து, ஆய்வறிக்கையாக சமர்ப்பித்தேன். தமிழ் மற்றும் அதிலிருந்து பிரிந்த, கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய, திராவிட மொழி குடும்பங்கள், ஒரே நிலப் பகுதியைச் சேர்ந்ததால், இம்மொழிகளில் ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், தமிழகத்திலிருந்து, 4,000 மைல்களுக்கும் தூரத்தில் உள்ள, வட கொரியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட, கொரிய தீபகற்பத்தில் பேசப்படும், கொரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும், ஏன் ஒற்றுமை ஏற்படுகிறது, அது எப்படி சாத்தியம் ஆனது என்று, ஆய்வு செய்தேன். தமிழர்கள், "நீ திரும்பி வா' என்று சொல்வதை, கொரியர்களாகிய நாங்களும், கொரிய மொழியில், "நீ திரு வா' என்று, சிறிது மாறுபட்ட தொனியில் சொல்கிறோம். இது எப்படி சாத்தியமாயிற்று? இது உதாரணம் மட்டுமே. இது போன்று, 500 வார்த்தைகள் தமிழிலும், கொரியாவிலும் ஒரே மாதிரியாக உள்ளன. கொரிய வீடுகளில், புதிதாக குழந்தைகள் பிறந்தால், மா இலை தோரணம் கட்டுவது வழக்கம்; தமிழ் நாட்டிலிலும், மா இலை தோரணம் கட்டுகின்றனர். இது போன்ற ஒற்றுமைக்கு, என்ன காரணம் என்று ஆராய்ந்ததில், பண்டைய தமிழர்கள் கடல் கடந்து, கொரியாவில் தங்கியிருந்ததால், அவர்களின் தமிழ் மொழியும், கலாச்சாரமும், கொரிய மக்களோடு கலந்திருக்கலாம். ஏனெனில், 15ம் நூற்றாண்டில் தான், கொரிய மொழிக்கு, எழுத்து வடிவமே கிடைத்தது; அதுவரை பேச்சு மொழியாகவே இருந்தது. எழுத்து வடிவம் மாறினாலும், பேச்சு வழக்கு மற்றும் ஒலி வடிவத்தில் மாற்றம் ஏற்படாததற்கு, இது தான் முக்கிய காரணம்.

அமில வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா பலி - கண்கள் தானம்:




அமில  வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா பலி கண்கள் தானம்:

 சென்னை:"ஆசிட்' வீச்சுக்கு ஆளாகி, 27 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வித்யா, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது விருப்பப்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் வித்யா, 21. பிளஸ் 2 படித்துவிட்டு மேல்படிப்பை தொடர முடியாமல், ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில், பிரவுசிங் சென்டரில் வேலை செய்து வந்தார்.கடந்த ஜன.,30ம் தேதியன்று மதியம், ஒரு வாலிபர், "பிரவுசிங் சென்டர்' உள்ளே நுழைந்து, வித்யாவின் உடலில், ஆசிட் வீசினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் ஓடி வந்தனர்.

தப்பி ஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆதம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்த, விஜயபாஸ்கர், 32, தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் என, தெரிந்தது.

"ஆசிட்' வீசியது ஏன்?: விஜயபாஸ்கர், வித்யாவை ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். தங்கை திருமணம் முடிந்த பின்புதான், திருமணம் செய்து வைக்க முடியும் என, விஜய பாஸ்கரின் பெற்றோர் கூறிவிட்டனர்.
"என் தங்கைக்கு பல ஆண்டுகளாக மாப்பிளை பார்க்கிறோம். மாப்பிள்ளை அமையவே இல்லை. இப்போதைக்கு அவளுக்கு திருமணம் நடக்காது. நாம் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம்' என, விஜய பாஸ்கர், வித்யாவை நச்சரித்து வந்தார்.
வித்யா, இதற்கு சம்மதிக்கவில்லை. விஜய பாஸ்கருக்கு, குடிப்பழக்கம் உள்ள விஷயமும் வித்யாவுக்கு தெரிந்ததால், அவரை மணப்பது குறித்து வித்யா யோசித்ததாக தெரிகிறது.
இதனால், மனமுடைந்த விஜய பாஸ்கர், தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணி, ஆசிட் வீசினார்.

கண்தானம்: ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த வித்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 27 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இறப்புக்கு ஒரு வாரத்திற்கு முன், தாய் மற்றும் அண்ணனிடம், "நான் ஒருவேளை இறந்து விட்டால், என் கண்களை தானம் செய்து விடுங்கள். என், கண்கள், மற்றவர்களுக்கு பார்வை தரட்டும்' என, கூறியிருந்தார். இதையடுத்து, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.
தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்களை பெற்றனர். அவை, இரண்டு பேருக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க அவரது தாய் சரஸ்வதி, அண்ணன் விஜயும் மறுத்தனர். ஆசிட் வீச்சில் இறந்த இளம்பெண்ணுக்கு, அரசு தரப்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என, வித்யாவின் உறவினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

போலீஸ் அதிகாரிகளும், தொடர்ந்து, ஆர்.டி.ஓ., எட்டியப்பனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம் தெரிவித்து, உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு, வித்யாவின் உடலை பெற்று சென்றனர்.

வித்யா மீது ஆசிட் வீசிய விஜய பாஸ்கர் மீது, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வித்யாவின் உடல், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் நேற்று மாலை, வித்யாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி, தாய் சரஸ்வதி, அண்ணன் விஜய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்..
"வித்யாவின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் பெற்று தர வேண்டும்' என, உறவினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசிடம் தெரிவித்து, விரைவில் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வதாக கலெக்டர் உறுதியளித்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின், வித்யாவின் உடல், ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தண்டிக்க வேண்டும்:வித்யாவின் அண்ணன் விஜய் கூறியதாவது:என் தங்கை, எப்படியும் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வினோதினி மரணமும், அதே வார்டில் மற்றொருவரின் மரணமும், என் தங்கைக்கு மரண பயத்தை ஏற்படுத்தி விட்டது.

மகளை இழந்த தாய் சரஸ்வதி கூறுகையில், ""என் மகள் சாவுக்கு காரணமானவரை, இந்த சமூகம் வேண்டுமானால் மன்னிக்கலாம். என் மகளின் ஆத்மா மன்னிக்காது. போலீசார், கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்,'' என்றார்.

தூக்கிலிடக் கூடாது: தண்டனை விதித்த நீதிபதி எதிர்ப்பு

இராசீவு கொலையாளிகளை த் தூக்கிலிடக் கூடாது: தண்டனை விதித்த நீதிபதி எதிர்ப்பு

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும், அத்தண்டனையை நிறைவேற்றக் கூடாது. அவ்வாறு நிறைவேற்றுவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. இந்த அமர்வுக்கு தலைமை வகித்தவர் நீதிபதி கே.டி. தாமஸ்.நீண்ட காலத்துக்குப் பின், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:
ராஜிவ் கொலை வழக்கில், 22 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள அவர்களின் வழக்கை மறு ஆய்வு செய்யாமல் தூக்கிலிடுவது, அரசமைப்பு சட்டத்தின்படி சரியானதல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் இயல்பு, நடத்தை ஆகியவற்றை நாம் பரிசீலிக்கவில்லை. ஆகவே, அரசமைப்புச் சட்டம் 22ஆவது பிரிவின் படி தூக்குதண்டனை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.மிகத் தாமதமாக அவர்களுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானதல்ல.குற்றவாளியின் தனிப்பட்ட நடத்தையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்  என்று கூறினார்.

International investigation essential - Navi Pillay

International investigation essential - Navi Pillay

[TamilNet, Sunday, 24 February 2013, 21:50 GMT]
UN High Commissioner for Human Rights, Navaneetham Pillay, in an e-mail interview with Sunday Times, held steadfastedly to her belief that since the steps Sri Lanka has taken domestically has not inspired confidence, an International investigation into the crimes committed by both adversarial parties was essential for accountability, and to reconciliation. High Commissioner Pillay remained focused on the need to establish the truth of what happened during the final months of war while fending off the journalist's leading questions, and infused a fresh determination to establish accountability to the otherwise stiffling inaction of other International actors, Tamil political observers noted.
United Nations High Commissioner for Human Rights, Navi Pillay
United Nations High Commissioner for Human Rights, Navi Pillay
When asked why there is a need for another resolution [UNHCR] when the first one had "little impact," Pillay explained that "it is not that the resolution had little impact", but that the "Govt. [Sri Lankan] has made little progress in pursuing true accountability and reconciliation measures."

On the journalist's statement of Colombo's position that "such resolutions are impediments to reconciliation and its domestic programmes," Pillay said, while LTTE is a brutal organization, "[i]t is, nevertheless, important to address all situations where there have been massive HR violations, so that they are not brushed under the carpet....It is hard to see how real reconciliation will be possible, if the truth is not told, and if justice is not seen to be carried out.

On Navi Pillay "overreaching her mandate in expressing concern over impeachment of the Chief Justice," Pillay responded that her mandate is to "protect and promote the HR of everyone everywhere."

On the importance of calling for international war crimes investigation, Navi Pillay replied,
    Because tens of thousands of civilians were reportedly killed. Because there are very credible allegations and some strong pictorial evidence and witness accounts indicating that war crimes and other serious international crimes, including summary executions, use of child soldiers and the use of civilians as human shields took place on a large scale.

    These are crimes that are viewed with the utmost seriousness under international human rights and humanitarian law, and there is plenty of evidence to suggest both sides committed them. Unfortunately, none of the steps taken domestically in Sri Lanka, to investigate any of this, inspire confidence. There is a long history of national inquiries in Sri Lanka that have led nowhere, but to impunity. This makes such an international investigation essential. Crimes like these cannot simply be ignored or pushed aside. If there has been exaggeration or distortions, or unjust allegations, then such an inquiry should also expose those. There has to be justice, if there is to be lasting peace.
When Sunday Times mentioned that "perhaps there is little appetite for an investigation," because the war ended 3 years ago and there are several other crises in the world, Pillay's response was that "there is actually increasing appetite, as people start to see more details of what happened."

When prompted to comment on the "little local interest" in war crimes investigation, Pillay replied, among other factors, "Tamil population in Sri Lanka, especially in the war-affected parts of the country, must be treated fairly. They went through a quite atrocious experience. Crimes committed against them must be investigated, just like crimes committed by the LTTE."

Sunday Times mentions a curious form of "torture." The HRC is genuinely accused of double standards vis-a-vis Sri Lanka, and some other pro-Western countries (for instance, Saudi Arabia, Bahrain, Yemen, Occupied Territories). Is this exercise merely to inflict continuing diplomatic torture on Sri Lanka, until they fall in line with the West?

Pillay points out that "None of the countries mention[ed] has gone through a conflict like the one in Sri Lanka."

When Sunday Times asks if there is an "orchestrated conspiracy" against Sri Lanka, and if this is fair, Pillay educates the journalist not to confuse conspiracy with campaigns. And adds, "I am not at all surprised that there are campaigns being carried out by HR activists, for all the reasons we have discussed already. This is a symptom of the fact that there has not yet been a proper independent and credible investigation into all the HR violations that took place during the conflict, with the aim of bringing sorely needed justice and reparations."

Sunday Times then claims that the State "has engaged with the UN system consistently and transparently," and hence expects reciprocity, Pillay's reply implies that her engagement with Sri Lanka is more than satisfactory.

On why UNHCR's approach to Sri Lanka is not cooperation but confrontational, Pillay replies that she looks for "cooperation with all govts., but, at the same time, my mandate also involves acting as the voice of the victims, and speaking out when needed."

External Links:
ST: Govt. efforts at investigating alleged war crimes lack credibility: NP

‘Tamil Van’ undertakes tour of Europe to highlight justice for genocide

‘Tamil Van’ undertakes tour of Europe to highlight justice for genocide

[TamilNet, Sunday, 24 February 2013, 21:31 GMT]
Even as Tamils across the world are anticipating yet another watered down resolution on Sri Lanka at the forthcoming Geneva session this year, a group of Eezham Tamil youth activists from the UK have undertaken a journey on a ‘Tamil Van’ to reach out to the Tamil diaspora across Europe and also to interact with European civil society activists, solidarity groups and politicians, to raise awareness of the protracted genocide of the Tamil nation and the need for a corresponding just political solution. The Van, which began its journey from London on 12 February, is currently in Germany and will finish its tour at Geneva coinciding with the UNHRC sessions. Appealing to Tamils not to fall for any watered down resolution, the activists undertaking the tour stated that any solution which does not address the genocide of the Eezham Tamil nation was a farce.
“Tamil Van” in Hanover, Germany
“Tamil Van” in Hanover, Germany


Speaking to TamilNet from Osnabruck, Germany, Gobi Sivanthan, grassroots Eezham Tamil activist from the UK and leading the Tamil Van journey, opined that the US and India and other countries were going to give one more year to complete the genocide of the Eezham Tamil nation through the ruse of the LLRC.

“We are trying to appeal to the democratic voices and people of Europe to push for an independent international investigation to get justice for the genocide of the Eezham Tamils. We have also appealed to the Tamil people to be wary of establishments and certain NGOs that are only pushing for regime change while diluting the question of sovereignty of the Eezham Tamil nation," he said.

Departing from Harrow, London on 12 February, the Tamil Van travelled to France, Holland, Belgium, Luxembourg and Germany. Scheduled to leave from Germany on the 28th, the Van shall further visit Austria and Italy, before culminating its travel in Geneva, Switzerland.

The Tamil Van has met 5 European MEPs, 13 diplomats, human rights activists affiliated with different political parties, and numerous solidarity activists in the countries they have visited till now.

Left groups in Germany, the SPD and the Linke, expressed solidarity with the Tamil Van.

In Germany, TYO Germany and VETD assisted the Tamil Van with leaflets, public campaigns, by arranging meetings with the Tamil community in every city, and with the mobile exhibition with photos of the Tamil genocide.
“Tamil Van” in Berlin, Germany
“Tamil Van” in Berlin, Germany

New Delhi, Colombo, jointly ‘cherish’ IPKF memory at Palaali SMZ

New Delhi, Colombo, jointly ‘cherish’ IPKF memory at Palaali SMZ

[TamilNet, Saturday, 23 February 2013, 22:13 GMT]
New Delhi Establishment’s envoy in Colombo, Ashok K. Kantha, accompanied by his wife Mrs. Sharmila Kantha paid tribute at the newly ‘rediscovered’ IPKF memorial at Palaali in the Sinhala Military Zone (SMZ) on Saturday. Joining the couple in cherishing the legacy of the IPKF was Colombo’s occupying Sinhala military commander in Jaffna, Maj. Gen Mahinda Hathurusinghe, senior officers of the SL military, New Delhi’s Defence Advisor at the Colombo High Commission and the Establishment’s Consul General in Jaffna. New Delhi already has a memorial built for the war-crimes-accused IPKF at Colombo. New Delhi’s current gesture of rediscovering another memorial at Palaali along with the occupying genocidal Sinhala military signals negatively when there is demand for international investigation of war crimes in the island.
IPKF memorial in Palaali
New sources in Jaffna say that the memorial was ‘discovered’ along the border of the Sinhala Military Zone (SMZ). The low resolution photos released by the Indian consulate are not clear on the background of the locality. Something screens the background. [Photo: Consulate General of India, Jaffna]


“A long-forgotten memorial of Indian soldiers inside the Palaly High Security Zone has been re-discovered,” reported The Hindu known for its pro-Colombo and anti Eezham Tamil stand on Saturday, adding, “as in the case with forgotten historical structures, the discovery was an accident.”

The IPKF ‘memorial’ at Palaali, consisting of 7 structures, remembers 33 ‘martyrs’ of the Indian elite special forces of the 10 Para Regiment. A company of the Regiment suffered casualties while it was heli-landing to raid the LTTE headquarters on October 12, 1987, The Hindu further reported.

The Hindu’s ‘historical concern’ found elucidation in the speech of genocidal Sri Lanka’s Commander, Hathurusinghe, at Palaali on Saturday, when he said that the LTTE committed a ‘war crime’ in shooting the parachute troops while they had not landed and were still descending.

Hathurusinghe's ‘new discovery’ of LTTE war crimes against the IPKF set the intent of Saturday's event, news sources in Jaffna reporting his speech, told TamilNet.

While The Hindu was reporting on the ‘High Security Zone’, Hathurusinghe speaking to media in Jaffna on Saturday denied the existence of the HSZ. He said that out of the 11,284 acres of land, 5,282 acres had been handed back to people and another 6,000 would be handed over soon in different stages. His claim was that most of the land is the property of the State in Colombo and therefore there was no question of occupation.

A permanent Sinhala Military Zone (SMZ) has already been created around Palaali, replacing the so-called HSZ, is the observation of news sources in Jaffna.

New Delhi’s envoy Ashok K. Kantha is currently engaged in fulfilling many of the programmes of genocidal Colombo in the territory of Eezham Tamils, news sources in Jaffna said.

While sections of news circles in India indicate that there is a favourable response in the New Delhi Establishment in promoting cases of war crimes investigations against Colombo, such as what the Channel 4 is currently engaged in, another section of political observers citing the actual activities of New Delhi say that that the aim is to get only strategic land in the island at the cost of justice to Eezham Tamils.

The political observers refuted views that the New Delhi-The Hindu mission is merely to pass the blame of war crimes on the LTTE to diffuse the current public sentiments in India, especially in Tamil Nadu.

New Delhi’s direct war crimes in 1987-89, complicity in war crimes in 2006-2009 and continued abetment of structural genocide of Eezham Tamils are yet to be investigated internationally.

According to the observers, the whole thing of promoting the war crimes awareness against Colombo on one hand but simultaneous deal with genocidal military of Colombo on the other hand is engineered to gain New Delhi’s interests in the island either in competition or in ‘strategic partnership’ with Washington.

The political parties, civil movements and above all the public in Tamil Nadu should not be carried away by the machinations making them deviating from achieving fundamental justice to the question of Eezham Tamils, the observers said.

The peoples movements in Tamil Nadu and elsewhere in India have to guard themselves against deceptions, the observers further said.

IPKF memorial in Palaali
[Photo: Consulate General of India, Jaffna]
IPKF memorial in Palaali
[Photo: Consulate General of India, Jaffna]
IPKF memorial in Palaali
[Photo: Consulate General of India, Jaffna]
IPKF memorial in Palaali
[Photo: Consulate General of India, Jaffna]
IPKF memorial in Palaali
[Photo: Consulate General of India, Jaffna]


External Links:
The Hindu: Forgotten IPKF memorial rediscovered in Palaly

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

இரசியாவில் வாழ்கிறது தமிழ்!

இரசியாவில் உள்ள இநதியத் தூதரகத்தில் உள்ளவர்களுகக்குத்  தமிழ் மொழி எழுதப்பட்ட விவரம் தெரிந்திருக்காது. அதை வேறு ஏதோ ஒரு மொழி என நினைத்திருப்பார்கள். (தமிழ்நாட்டிற்கு வர விரும்பிய பெண்மணி தமிழ் கற்பது தொடர்பாகக் கேட்டதற்குத் தாங்கள் சமையல்  பயிற்சி எதுவும் அளிக்கவிலலை என இநதியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்ததை அறிந்தவர்கள் நான் கிண்டலுக்கு எழுதவில்லை. உண்மையைத் தான் கூறுகிறேன் என்பதை உணர்வார்கள்.) தமிழ் எனத் தெரிந்திருந்தால் உடனே இந்தியில் எழுதச் செய்து இருப்பார்கள். எனவே, அவர்களுக்கும் உருசியர்களுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 

இரசியாவில் வாழ்கிறது தமிழ்!




தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது' என்ற தலைப்பில் ஓர் இணையதளம் கீழ்க்காணும் செய்தியை வெளியிட்டுள்ளது.
"தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.
÷தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.
÷""உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.
÷வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்' - இதுதான் அந்த இணையதளத்தில் வெளிவந்துள்ள செய்தி.
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

இளைஞர் காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து யுவராசு நீக்கம்

கருத்து
Sunday, February 24,2013 11:39 AM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி.ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் அடங்கித்தானே ஆக வேண்டும். இனியேனும் ஒழுக்கமாகவும் நாவடக்கத்துடனும் தமிழ் உணர்வுடனும் நடந்து கொண்டால் அவருக்கு நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
Sunday, February 24,2013 09:43 AM, jayakumar said: 3 5
இந்த சின்ன பையன் கலைஞர் , ஜெயலலிதா கூட அரசியல் பண்ண முடயுமா அந்த சின்ன பையன் ராகுல் - க்கு என்ன தெரியும் .
Sunday, February 24,2013 09:15 AM, காத்தவராயன் said: 3 6
அதுக்கெல்லாம் கார்த்திக் தான் சரிப்பட்டு வருவார்
 
இளைஞர் காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து யுவராசு  நீக்கம்
இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து யுவராஜ் சஸ்பெண்டு
மாலை மலர் -சென்னை, பிப்.24:-

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்து வருபவர் யுவராஜ். ஈரோட்டை சேர்ந்த இவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது. கட்சிப் பணிகளை சரிவர ஆற்றவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர் காங்கிரஸ் பதவி வகித்து வரும் யுவராஜ் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் பிரமுகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஸ்பெண்டு செய்யப்பட்ட யுவராஜ் கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
++++++++++++
 

இந்தியா என்றால் ‘இந்தி’யாவா?

 இந்தியா என்றால் ‘இந்தி’யாவா?

இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழ் காப்புக்கழகம்)

Feb 15, 2013   

இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும், வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால்,  நடைமுறையில் இந்தி படித்தவரே, இந்தியாவில் வாழ இயலும் என்ற மோசடியான சூழலே விளங்குகிறது.  சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும்.  இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக்கூடிய வாய்ப்பைப் பிற மொழியினர் பெற இயலாது. படைத்துறையில் சேர்ந்த பின்பும் இந்தி, இந்தி, இந்திதான். நமக்குத் தேவை ‘இந்தி’  யாவா? இந்திய ஒருமைப்பாடா?
                நடுவண் அரசின் நோக்கம் இந்தியா என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள்வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பு கண்டு நடுவண்  அரசு மிரளாது. எந்த அளவிற்கு விரைவாக நாம் பொங்கி எழுகிறோமோ அந்த அளவிற்கு நாம் அடங்கி விடுவோம்.  சான்றாக ‘சடுகுடு’ இடத்தைக்  ‘கபடி’ பிடிக்க முயன்ற பொழுது எழுந்த எதிர்ப்பு ‘சடுகுடு’  தொலைக்கப்பட்டது போல் தொலைந்து போயிற்று அல்லவா? எனவேதான் நடுவண்  அரசின் திட்டங்கள் & ஊரக வளர்ச்சியாகட்டும், சிறு சேமிப்பாகட்டும், காப்பீடாகட்டும், வங்கியாகட்டும் எங்காயினும் எதுவாயினும் இந்தியே வீற்றிருக்கிறது.
                எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர் பயிலும் தொழிற்பயிற்சி நிலையங்களின் வினாத்தாள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ளது போல், இந்தியா முழுமைக்கான எதுவாயினும் இந்திதான் இடம்பெறுகிறது. ஆங்கிலம் அயல்மொழி எனக்கூறி இடம்பெயர்க்கப்பட்டு அந்த இடத்தில் அயல்மொழியான இந்திமொழி கால் பதித்து வருகிறது.
                தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் ஒட்டுநர், நடத்துநர் பதவி உயர்விற்கான தேர்வை ஆங்கிலத்தில் தான் நடத்துகிறது. இக்கொடுமையிலும் கொடுமையாக ஒரே நாடு, ஒரே முறையான பயிற்சி என்று நாளை இங்கு இந்திதான் வரப்போகிறது.
                தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனையினருக்கான நோய்கள் பெயர்ப்பட்டியல் குறிப்பிட்டு எண் தொகுப்பு, சிறுதொழில், குறுதொழில் பெருந்தொழில்களுக்கான தொழில்வகைப் பெயர்ப்பட்டியல் குறியிட்டு எண்  தொகுப்பு போன்ற அனைத்து இந்திய அளவிலான அனைத்து தொகுப்புகளும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் உள்ளன. நடுவண் அரசு, நடுவண் அரசு சார் அமைப்புகளின் பணிகளுக்கு இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களையும் முனைவர் பட்டம் பெற்றவர்களையும் அமர்த்தச் செய்கின்றார்கள். ஆனால் தமிழ் நாட்டிலோ தமிழ் வளர்ச்சித் துறையிலேயே தமிழ் படித்தவர்கள் துரத்தப்படுகிறார்கள்.
                அன்றாடம் மக்கள் ‘வணக்கம்’ என்பதை மறந்து ‘குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங், குட்நைட்’ என்று ஆங்கிலத்தில் வாழ்த்தினைப் பரிமாறிக்கொள்ளும் அவலம் ஒரு புறம் இருக்க, மத்திய அரசு அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டால் இனிய தமிழ் மறந்து “நமஸ்காரம்’’ அல்லவா ஒலிக்கிறது? தொலைபேசி பொது எண்களுடன் தொடர்பு கொள்ளுகையில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக உள்ள இத்துறை தமிழ்நாட்டு மக்களிடம் தமிழில் வணக்கம் சொல்லக்கூடாதா?  என்ன பண்பாண்டுக் கொலை இது? கேள்வி கேட்பார் யாருமில்லையே?
                அதுபோல் மத்திய அரசு அலுவலகங்கள் என்றால் தமிழ்த் “திரு’’  மறைந்து  -’ ஸ்ரீ   ’ தான் ஆட்சி செய்கிறது, இதுதான் மத்திய அரசின் இந்திக் கொள்கை என்னும் பொழுது தமிழால் ஆட்சிக்கு வந்த ஆட்சியர்களாவது எதிர்த்து இம்முறையை ஒழிக்க வேண்டாமா?
                தொலைக்காட்சி, வானொலிகளில் விளையாட்டு குறித்த நேரடி வருணணையாகட்டும் பிற குறித்த நேர்முக விளக்க உரையாகட்டும் தமிழ் நாட்டிலே நடைபெறும் நிகழ்ச்சியாகட்டும் தமிழுக்கு இடமில்லையே! ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி வழங்கி, இந்த நாடு இந்தி  பேசுவோருக்கு மட்டுமே உரியது என மத்திய அரசு ஆணித்தரமாக அறைகிறதே!  மாநிலத் தன்னாட்சியாளர்கள் உறங்குவது ஏன்?
                தொலைக்காட்சி  வரிக்குச் சுருக்கப் பெயர்களைப் பதிந்து கொள்ளும் வாய்ப்பை அத்துறை தருகிறது. ஆனால் இப்பெயர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் இது என்ன கொடுமை?  தமிழ்நாட்டு நிறுவனம் அல்லது அமைப்பு நிறுவனம் பெயரைச் சுருக்கமாகத் தமிழில் வைக்கக் கூட உரிமை இல்லையா?
                மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களும் சரி, மத்திய உதவியுடன் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் ஊர்கள், நகர்களின் பெயர்களும் சரி தமிழில் இல்லை. எந்த இந்திக்காரன் பணத்தில் இதனை அமைக்கின்றனர்? தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே? பிறகு ஏன் இந்த அவலம்? நமது பணத்தால் பெறும் உதவிகளுக்கு இந்தி பேசும் பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயரையா சூட்டுகின்றனர்? வெட்கமின்றித் நம் அரசும் ஏற்று நடைமுறைப் படுத்துகிறது. சூடு சொரணையின்றி நாமும் எற்றுக் கொள்கிறோம். இவ்வாறு பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்திய நாட்டில் தமிழர் அயலவராக நடத்தப்படும் பொழுது தமிழ் எங்கே வாழும்?  மலரும் தமிழ் நாட்டிலேயே தமிழ் தளரும் பொழுது பிற நாடுகளில் வாடத்தானே செய்யும்.
                                                             ( தொடரும்…)

இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழ் காப்புக்கழகம்)

அழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா

அழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா...மணல் மூடைகளால் சூழப்பட்ட ராணுவத்தினருக்கான பாதுகாப்பு அரணாக விளங்கும் அறை அது என்று பார்த்த உடனேயே தெரிகிறது.

அதனுள் ஒரு மரப்பலகை.

அந்த பலகையின் மீது ஒரு 12 வயது பாலகன் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான்.

சந்தையில் தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்டவன் போல பரிதாபமான தோற்றத்துடன், சட்டை இல்லாத வெற்று உடம்புடன், பார்த்த உடனேயே அள்ளி, அரவணைத்து தூக்கி கொஞ்ச தோன்றும் பால்மணம் மாறாத குழந்தை முகத்துடன் அந்த பாலகன் அமர்ந்து இருக்கிறான்.

கறுப்பு கலரில் கால்சட்டை, தோளில் கந்தலாய், கசங்கிப் போன, அணிந்து கொள்ள பிடிக்காமல் போட்டிருப்பது போல ஒரு லுங்கி.
கையில் பிஸ்கெட் போன்ற ஒன்றை வாயில் வைத்திருக்கிறான் ஆனால் அதை சாப்பிட பிடிக்கவில்லை என்பதை பரிதாபமான அவனது முகம் காட்டுகிறது. ஏதோ ஒரு இக்கட்டில் சிக்கியிருக்கிறோம், அம்மா, அப்பா முகம் கூட வேண்டாம், ஏதாவது ஒரு தெரிந்த முகம் தென்படாத என்ற ஏக்கம் கண்களில் அலை பாய்கிறது.
அடுத்த படத்தில் அவன் கண்களில் ஒருவித பதட்டம் தென்படுகிறது, ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்கும் சிறுவனின் அந்த பார்வையே நம்மை திகைக்கவைக்கிறது.
அடுத்த வினாடி அவன் கைநீட்டி தொட்டுவிடும் தூரத்தில் இருந்து வெடித்த சிங்கள சிப்பாயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு மார்பை துளைக்க, அப்படியே மல்லாந்து சாய்கிறான், மண்மீது கைகால் இழுத்தபடி சரிகிறான், "இதற்குதான் கூட்டிவந்து பிஸ்கட் கொடுத்தீர்களா?' என்பது போல கையறு நிலைகொண்டு பரிதாபமாக பார்க்கிறான், சிப்பாயின் துப்பாக்கி மீண்டும் சீறுகிறது, மீண்டும் மீண்டும் சீறுகிறது, தொடர்ந்து நான்கு முறை அந்த பாலகனின் உடலை சல்லடையாக துளைக்கிறது, நிறைய கனவுகளுடன் வளர்ந்த அந்த சிறுவன் சின்ன, சின்ன துள்ளலுக்கு பிறகு செத்து போகிறான்.
இறந்து போன அந்த சிறுவன் பெயர் பாலசந்திரன்.
விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன்.
மூன்று நாட்களுக்கு முன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட "கில்லிங் பீல்ட்ஸ் ஆப் ஸ்ரீலங்கா' என்ற தலைப்பில் வெளியிட்ட புதிய ஆவண படத்தில்தான் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
பார்த்தவர்கள் அத்தனைபேர் இருதயத்தையும் வெட்டிப் பிளந்தது போன்ற உணர்வு.
கொஞ்சமும் மனிதாபிமானமற்ற மன்னிக்கமுடியாத இந்த செயலை செய்தததன் மூலம் இலங்கை மன்னிக்கமுடியாத மாபெரும் போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இலங்கை மீது சர்வதேச பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற்ற பிறகே பொருளாதார தடையை நீக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
மனிதகுலத்தின் மனசாட்சி இன்னுமா விழிக்கவில்லை, உலகத்தில் நீதி மொத்தமாக செத்து விட்டதா? இப்படி எத்தனை, எத்தனை பாலசந்திரன்களை பலிகொடுத்தோமா? ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளை விட இவர்கள் நடத்திய இந்த இனப்படுகொலைதான் மிகவும் கொடூரமானது, என்னால் தாங்க முடியவில்லை என் இதயத்தை வெட்டி கூறுபோட்டது போல உணர்கிறேன் என்று மனம் வெதும்பியுள்ளார் வைகோ.
இல்லை இவையெல்லாம் நம்பமுடியாது என்று இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருடன் நான்தான் திருடினேன் என்று எப்போது ஒத்துக்கொண்டுள்ளான், அது போலத்தான் இவர்கள் கூற்றும்.
சில நிமிடங்களே ஒடும் இந்த ஆவண படத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக உண்மையின் பக்கம் மட்டுமே நின்று தயாரித்துள்ளதாக கூறுகிறார் கெலம் மெக்ரே.
ஆவண படத்தை பார்த்த பல தடயவியல் நிபுணர்களில் ஒருவரான டெரிக் பவுண்டர் இந்த படத்தில் எந்த பகுதியிலும் பொய்யில்லை, சிறுவன் பாலசந்திரன் உயிருடன் இருக்கும் போதும், இறந்த பிறகும் எடுத்த நான்கு படங்களுமே ஒரே டிஜிட்டல் கேமிராவில் ஒரே நாளில் ஒரு சில மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவனின் மார்பில் குண்டு பாய்ந்த இடத்தின் நிறத்தையும், அது உடலை சிதைத்துள்ள விதத்தையும் பார்க்கும் போது மிக அருகில் நின்று சிறுவனை குரூரமாக கொன்றிருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது என்று சொல்லியுள்ளார்.
நாங்கள் நடத்தியது மனிதாபிமானப் போர்தான், பிரபாகரன் குடும்பத்தை பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தோம், போரின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்புகளில் காயம்பட்டே பிரபாகரன் இறந்தார். அவரது மனைவி, மகன் பற்றியெல்லாம் எங்களுக்கு தகவல் தெரியாது, பிரபாகரன் உடலையே கருணா அடையாளம் காட்டித்தான் கண்டுபிடித்தோம் என்றெல்லாம் ராஜபக்ஷே சொன்னது அத்தனையும் பொய், புளுகு என்பதை இந்த படங்கள் இப்போது உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது என்றே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கருதுகிறார்கள்.
இது வெறும் கருத்து மட்டுமல்ல, உணர்வு, ஒரு தொப்புள் கொடி உறவின் வெளிப்பாடு, ஒரு சின்னஞ்சிறு குருத்து காரணமேயில்லாமல் இனவாத அடிப்படையில் சாய்க்கப்பட்டதே என்ற வேதனை.
மனதிலும், கண்களிலும் ரத்தத்தை வரவழைத்த இந்த சம்பவம் வெறும் அனுதாப அலையோடு நின்றுவிடக் கூடாது, விரைவில் கூடவிருக்கும் ஐ.நா சபையில் எதிரொலிக்க வேண்டும், மன்னிக்கமுடியாத போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று இலங்கைக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் இதில் ஒன்றுபட வேண்டும் என்பதே இன்றைய தேதிக்கு அனைவரது கருத்தாகும்.
- எல்.முருகராசு
Bookmark and Share
 









கும்பமேளாவில் கார்த்திகேயன் கைவண்ணம்

 
 
ஆர்.கார்த்திகேயன்.

செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனர் வேலை பார்ப்பவர்.

இந்த வேலை எப்படிப்பட்டது என்றால் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள், மற்றும் கார்ட்டூனிஸ்ட்கள், நிருபர்கள் போன்ற படைப்பாளிகள் தரும் படைப்பை மெருகேற்றி பக்கங்களில் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும், அழகுபடவும் சேர்க்கும் அருமையான பணி.
இதற்காக டில்லி, பெங்களூருவில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தனது பணியை மேம்படுத்திக்கொண்டவர்.
வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது.
இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை புகைப்படக் கலைஞர்களுடன் சென்று, அவர்கள் படமெடுக்கும் பாங்கினை மனதில் வாங்கி பதிய வைத்துக் கொண்டே வந்தார்.
இதே போல தானும் ஒரு சொந்தமாக ஒரு கேமிரா வாங்கி நிறைய படங்கள் எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார், இவரது இந்த எண்ணம் ஈடேற நான்கு ஆண்டுகளாயிற்று.
சமீபத்தில் சொந்தமாக நிக்கான் டி.90 கேமிரா வாங்கினார், கேமிரா வாங்கிய அதிர்ஷ்டம் உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து மூன்று கோடி பேர் வருவார்கள் என்பதும், அவர்களில் வெளி உலகத்திற்கு தங்களை காட்டமால் இருந்து வரும் நாகா சாமியார்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களும் இருப்பார்கள் என்பதும் விசேஷமாகும்.
இதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏழாம் தேதி துவங்கி பதிமூன்றாம்தேதி வரையிலான எட்டு நாட்கள் அங்கேயே முகாமிட்டு, இரவு இரண்டு மணிக்கு வீசும் உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல படங்களை எடுத்து வந்துள்ளார்.
பல படங்கள் அருமையாக வந்துள்ளது. அடுத்த மகா கும்பமேளா வரை பேசப்படும் இந்த ஆவண படங்களில் இருந்து சில படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பக்கம் பருப்பு வேகாத நிலையில், கும்பமேளாவிற்கு தன் தொண்டர்கள் சகிதம் சென்று, அங்குள்ள அகடா (சாமியார்களுக்கான மடம்) ஒன்றை மதுரை ஆதினத்தை பிடித்தது போல பிடித்து, அந்த மடத்தின் மகா மண்டேலஸ்வரர் என்ற பட்டம் சூட்டிக்கொண்டு, கங்கையில் புனித நீராட தங்க பல்லக்கில் வந்த நித்யானந்தாவை, இவர் மட்டுமே படமாக பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் படத்திற்கு கீழே உள்ள போட்டோ கேலரி என்ற சிவப்பு பட்டையை கிளிக் செய்து கும்பமேளாவில் எடுத்த படங்களை பார்க்கலாம், படங்கள் குறித்து கார்த்திகேயனிடம் பேசுவதற்கான எண்: 8754481047.

- எல்.முருகராசு
 

கை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்!



கை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்!
இலங்கையில் நடைபெற்ற போரால், இரண்டு கைகளை இழந்தாலும், கணினி கற்றுத் தரும், செல்வநாயகி: நான், இலங்கையில் உள்ள, வெற்றிலைக்கேணி முள்ளியானை என்ற இடத்தில், தமிழ் குடும்பத்தில் பிறந்தவள். இலங்கை ராணுவம் நடத்திய, கடுமையான போர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் மட்டுமின்றி, பொது மக்கள் மீதும், பல தாக்குதல்கள் நடந்தன. கடந்த, 1990ம் ஆண்டு மார்கழி, 22ம் தேதி இலங்கை ராணுவம், புலிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில், அவர்கள் வீசிய எறிகணை வீச்சில், என் இரு கைகளையும் இழந்த போது, எனக்கு, 14 வயது. நான், வாழ வழியற்ற நிலையில், இருந்த போது, "தமிழ் புனர் வாழ்வுக் கழகம்' என்ற தமிழர் அமைப்பு, என்னை பராமரித்து வளர்த்தது. அந்த அமைப்பிலேயே வளர்ந்ததால், எனக்கு கணினி பயிற்சியும் தர, முன்வந்தனர். கணினி பயிற்சியை, நல்ல முறையில் கற்றுக் கொண்டேன். தற்போது, தமிழர்கள் அதிகம் வசிக்கும், வன்னிப் பகுதியில் வசிக்கிறேன். 2009ம் ஆண்டு, இலங்கை ராணுவத்தினரின் போர் நடவடிக்கைகள், முடிவுக்கு வந்த பின், மீண்டும் எனக்கு தமிழர் புனர் வாழ்வுக் கழகம், ஆதரவளித்தது. கணினி துறையில், எனக்குள்ள ஆர்வத்தை பார்த்து, என் வளர்ச்சிக்கு உதவினர். அன்று கற்ற கணினி கல்வி மூலம், பலருக்கு கணினியை கற்றுத் தரும், ஆசிரியர் என்கிற, உன்னத இடத்திற்கு முன்னேறி உள்ளேன். முல்லைத் தீவுக்கு அருகில், மாமூலையில் உள்ள கணினி நிலையத்தில், ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இரண்டு கைகளும் இல்லாததால், நேரடியாக கரும்பலகையில் எழுதி, மாணவர்களுக்கு சொல்லித் தர இயலாது. எனவே, நான் சொல்வதை, ஒருவர் கரும்பலகையில் எழுத, அதை, மாணவர்கள் குறிப்பெடுத்து படிக்கின்றனர். கணினியில், நேரடியாக விளக்க வேண்டியவற்றை, யாருடைய உதவியும் இன்றி, நானே மாணவர்களுக்கு விளக்குகிறேன். எதிர்காலத்தில், கணினி மையம் ஒன்றை, சொந்தமாக நடத்த வேண்டும்
என்பதே, என் லட்சியம்.


பெண்களை முன்னேற்றணும்!



விவசாயப் பெண்களுக்கு, பைகள் உற்பத்தி செய்ய பயிற்சி தந்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ராகுலன்: என் சொந்த ஊர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள, திருப்பனந்தாள் கிராமம். தந்தையின் வேலை காரணமாக, மும்பை சென்றோம். அவர் மரணத்திற்கு பின், சொந்த ஊர் திரும்பினோம். இங்கு வாழ்க்கையை நடத்த, மேற்கொண்ட பல முயற்சிகள், பலன் அளிக்கவில்லை. அதனால், பல ஊர்கள் சுற்றி, கடைசியில் கரூர் வந்தேன். ஏற்றுமதி தொழில், அங்கு சிறப்பாக நடைபெற்றதால், அங்கேயே ஒரு சில நிறுவனங்களில் பணியாற்றி, சொந்தமாகவே ஒரு ஏற்றுமதி தொழில் துவங்கினேன். ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நிறைய ஆர்டர்கள் கிடைத்ததால், அங்கேயே குடிஉரிமை பெற்று குடியேறினேன். இருந்தாலும், ஆண்டிற்கு ஒரு முறையாவது, சொந்த ஊரான திருப்பனந்தாளுக்கு, குடும்பத்துடன் வருவது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த போது, சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்ததில், பெண்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவது தெரிந்தது. அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்து ஆண்களையே நம்ம வேண்டியிருந்தது.
பெண்கள், வெறுமனே அடுப்பூதி, கட்டாயத்திற்காக வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதைக் கண்டு, மனம் வாடினேன். எனவே, என் பணியான, ஏற்றுமதி தொழில் மூலம், சொந்த ஊரில் உள்ள பெண்களுக்கு உதவலாம் என, எண்ணி, "க்ரீன் இன்னோவேஷன்ஸ்' எனும் நிறுவனம் துவங்கினேன். அதன் மூலம், நம்மூரில் குப்பையில் போடப்படும், தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை, நேரடியாக விலை கொடுத்து வாங்கி, "அப்சைக்ளிங்' எனும் உயர்சுழற்சி முறையில், லேப்-டாப் பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக் என, தரமாக தயாரிக்க, பெண்களுக்கு உதவினேன். உயர்சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்டதால், ஐரோப்பிய சந்தைகளில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, 25 பெண்கள் தொழிலை கற்று, வேலை செய்கின்றனர். குடும்பத் தேவையை தாங்களே சமாளிக்கும் அளவிற்கு முன்னேறிஉள்ளனர்.

அம்மாவைக் காப்பாற்றிய குழந்தை

 


காவல் உதவிக்குத்  தொலை பேசி யில் அழைத்து அம்மாவை க் காப்பாற்றிய குழந்தை

எடின்பர்க்: அவசர போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, தாயின் உயிரை காப்பாற்றிய, இரண்டு வயது குழந்தைக்கு, ஸ்காட்லாந்து போலீசார் விருது வழங்கியுள்ளனர். ஸ்காட்லாந்தின், மெல்ரோஸ் பகுதியில் வசிக்கும், ராபர்ட்-பிரான்சிஸ்கா தம்பதியின், இரண்டு வயது மகள் ரோவன் ரைச்சல்.
கடந்த, 2011ல், வீட்டில், மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த பிரான்சிஸ்கா, சோபாவில் இருந்து வேகமாக எழுந்த போது, மயக்கம் ஏற்பட்டு, தரையில் விழுந்தார். உடனே ரைச்சல், அவசர போலீஸ் எண், 999க்கு போன் செய்து, "என் தாய் தூங்கிவிட்டார்; கண் விழிக்கவில்லை' என, கூறினாள். ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதை யூகித்த போலீசார், அழைப்பு வந்த எண்ணின் முகவரியை கண்டுபிடித்து, பிரான்சிஸ்காவின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர் மயக்கமடைந்த நிலையில், தரையில் கிடப்பதை கண்டதும், மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின், மறுநாள் அவர் வீடு திரும்பினார்.
புத்திசாலித்தனத்தால், தாயின் உயிரை காப்பாற்றிய குழந்தைக்கு, ஸ்காட்லாந்தின், "லோதியான் அண்டு பார்டர்ஸ்' போலீசார், கடந்த, 21ம் தேதி, விருது வழங்கி கவுரவித்தனர். ""விளையாட்டாக, 999 என்ற எண்ணுக்கு, ரைச்சல் டயல் செய்வது வழக்கம். அப்படி செய்தால், போலீஸ் வந்து விடும் என, அவளை செல்லமாக கண்டித்தேன். அதை நினைவில் வைத்திருந்து, ஆபத்து சமயத்தில், என் உயிரை காப்பாற்றி விட்டாள்,'' என, பிரான்சிஸ்கா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

"அம்மா " திட்டம் அறிமுகம்





சென்னை: வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் அலைவதை குறைக்கும் வகையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கே, வருவாய்த் துறையினர் சென்று பணியாற்றும், "அம்மா' திட்டம், இன்று தமிழகத்தில் துவக்கப்படுகிறது.

முதியோர், விதவை பென்ஷன் பெறுவோர், பட்டா மாறுதல் வேண்டுவோர், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று என, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய, தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் அணுக வேண்டி உள்ளது. எல்லா தாலுகா அலுவலகங்களிலும் தினமும், பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காணலாம்.

அங்குள்ள, வருவாய்த் துறை அதிகாரிகளிடம், விண்ணப்பங்களை அளித்தால், விண்ணப்பம் மீண்டும், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என, அதிகாரிகளுக்கு சென்று, அவர்கள் பரிசீலித்து, ஆய்வு செய்து, சான்று, பட்டா உள்ளிட்டவற்றை, வழங்க பரிந்துரைப்பர்.இதற்கு, நாள் கணக்கில் அலைய வேண்டியுள்ளது. அதிக அளவு லஞ்சம், ஊழலும் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில், வருவாய்த் துறை சார்பில், கிராமந்தோறும், வருவாய்த் துறை அதிகாரிகளே நேரடியாகச் சென்று, மக்களின் குறைகளைத் தீர்க்கும் புது திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் வாழும், கடை கோடி மக்களுக்கும் மிகையான சேவையை உறுதிப்படுத்துதல் - "அம்மா
திட்டம்' என, இந்த திட்டத்திற்கு பெயர் சூட்டப் பட்டுள் ளது.

இத்திட்டத்தை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வின்னப்பள்ளி கிராமத்தில், வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், இன்று துவக்கி வைக்கிறார். வயதானோர், ஏழைகள், பணம், நேரம் செலவழித்து, தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, வாரத்தில் ஒரு நாள், ஒரு ஊராட்சியில், வருவாய்த் துறை சார்பில், அதிகாரிகள் சென்று முகாமிடுவர். அங்கு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை, ஊராட்சியிலேயே ஆய்வு செய்து, அங்கேயே உடனடியாக வழங்கப்படும்.

இது தவிர, குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னை, நிலம் சம்பந்தமான பிரச்னைகளை நேரில் ஆய்வு செய்து, தீர்வு காணப்படுகிறது. இதுகுறித்துவருவாய்த்துறை செயலர் ராஜிவ் ரஞ்சன்
கூறுகையில், ""இதன் மூலம், வருவாய்த் துறையின் சேவை துரிதப்படுத்தப்படும்,'' என்றார்.
இது தவிர, கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில், பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம், திங்கள் கிழமையில் நடத்தப்படுகிறது. இதிலும், பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.

மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமத்தில், மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை, "மக்கள் தொடர்பு முகாம்' நடத்தப்படுகிறது. இதில், கலெக்டர் தலைமையில், அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று, பொதுமக்கள் குறைகளைக் கேட்பர்.