சனி, 9 ஏப்ரல், 2011

dinamalar cartoon about catching of vaiko supporters


dinamani article about holidays training: துள்ளித் திரியும் நேரம்...

மாணவர்களை ஓய்விற்கு வழியின்றி வாட்டுவது இயற்கைக்கு மீறான செயல். ஆனால், அதே நேரம் அளவான புதுப் பயிற்சி என்பது அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் அமைந்தால் தவறு இல்லை. நான் பல குறுங்கால முற்பகல் முகாம்களை நடத்தி உள்ளேன். புதிய நட்பு வட்டம் கிடைப்பதிலும் அதன் மூலம் புதிய விழிப்புணர்வு பெறுவதிலும் மாணவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். சுற்றுலா இடங்களில் முழு நேர  இருவார முகாம்களை நடத்தி உள்ளேன். புதிய இட உலாவும் புதிய தோழமைச் சுற்றமும் அவர்களுக்குப் புத்துணர்ச்சியே அளித்துள்ளது.  இத்தகைய முகாம்களில் பங்கேற்றவர்கள், பயிற்சி பெற்ற துறைகளில் பணிகளும் பெற்றுள்ளார்கள். எனவே,  விடுமுறைக்குப்பின்  இடைவெளிவிட்டு அளவான முகாம்களில் பங்கேற்கச் செய்வது நன்றே. சுற்றுலாவுடன் இணைந்த கலைப்பயிற்சி முகாம் மிக நன்றே!  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



துள்ளித் திரியும் நேரம்...


சில தினங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு அருகிலுள்ள நண்பரின் வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பள்ளி விட்டு வந்த அவருடைய 12 வயது மகன் தந்தையைக் கட்டிப்பிடித்து தொங்கியவாறு, நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் என்றான். அவனுடைய இயல்புக்கு மாறான இந்தச் செய்கை எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாத நண்பர், என்ன விஷயம் என்றார் மகனிடம்.  அதற்கு அவன், எனக்கு நாளையோட "எக்ஸôம்' முடியுது... ரெண்டு மாசத்துக்கு லீவு என்றான். மிகச் சாதாரண விஷயம்தான். ஆனால், இதன் பின்னணியில் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.  விவசாயிக்கு விளைச்சல் பெருகினால் மகிழ்ச்சி. தொழிலதிபருக்கு தடையற்ற உற்பத்தியும், நிறைந்த ஏற்றுமதியும் மகிழ்ச்சி, பணியாளருக்குப் பணி உயர்வும், ஊதிய உயர்வும் மகிழ்ச்சி, வியாபாரிக்கு விற்பனை அதிகரித்து லாபம் கிடைத்தால் மகிழ்ச்சி, தேர்தல் வெற்றியும், பதவியும் அரசியல்வாதிக்கு மகிழ்ச்சி.  இப்படி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறைதான் மகிழ்ச்சி.  குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின்போது, வியாபாரிகள், விவசாயிகள், அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாயினர்.  ஆனால், அப்போது தொலைக்காட்சிக்கு முன்பாக அமர்ந்து, பள்ளி விடுமுறைக்கான அறிவிப்பு வருகிறதா என்பதைக் கவனித்து, அறிவிப்பு வந்தவுடன் துள்ளிக் குதித்து மகிழ்ந்தவர்கள் பள்ளிக் குழந்தைகள்.  தின்பண்டங்கள், புத்தாடைகள், விளையாட்டுப் பொருள்களைக் காட்டிலும் விடுமுறையால் கிடைக்கும் சந்தோஷம்தான் அவர்களுக்குப் பெரிது.  அந்த சந்தோஷம் இப்போது அவர்களுக்குக் கிடைத்தாயிற்று. அதை அவர்கள் முழுமையாக அனுபவிக்க, கொண்டாடி மகிழ பெற்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த விடுமுறையைக் குழந்தைகள் பயனுள்ளதாகக் கழிக்க பலவிதமான திட்டங்களை அவர்கள் தயாரித்திருப்பார்கள்.  நம்மால் நம் விருப்பத்துக்குத் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துமா என்பதை ஆராய்வது மிக அவசியம்.  2 மாத விடுமுறையில் தட்டச்சு, கணினி கற்றுக் கொடுப்பது, ஹிந்தி வகுப்புகளுக்கு அனுப்புவது, முழுநேர இசை, நாட்டியப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி வகுப்பு, கணிதத் தேற்றங்களைக் கற்றுக் கொடுப்பது, அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்துவது, பொது அறிவு, நுண்ணறிவு பயிற்சி வகுப்புகள், இல்லையேல், குறிப்பிட்ட சிலர் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  இப்போதுள்ள பாடத்திட்டங்களினாலோ அல்லது அவற்றைச் செயல்படுத்தும் முறையினாலோ தங்களது விளையாட்டு நேரத்தை பெரும்பாலும் இழந்துவிட்ட இந்தச் சிறார்கள், தாங்கள் சற்று இளைப்பாற நாடுவது தொலைக்காட்சியைத்தான். இதனால், மன, உடல் ஆரோக்கியங்களை இழக்கும் இவர்கள், சிறு வயதிலேயே 25 சதம் பேர் கண்ணாடி அணியும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.  இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அதே திட்டமிட்ட பாடங்கள், வகுப்பறை, வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை இந்த விடுமுறையிலும் திணிப்பது குழந்தைகளை மன அழுத்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிடும். இன்று அதன் பாதிப்பை அவர்கள் உணராவிட்டாலும், எதிர்காலத்தில் இது பெரிய பிரச்னையாக உருவெடுக்கலாம்.  விடுமுறையில் அவர்களை ஊர் சுற்றவிட்டால் கெட்டுப்போய் விடுவார்களே.... என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தனியாகவோ, பிறரோடு சேர்ந்து ஊர்சுற்றினால்தானே கெட்டுப் போவார்கள். அதற்குப் பதிலாக, பெற்றோர்களே அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றினால் எப்படிக் கெட்டுப்போவார்கள். வியாபாரம், அலுவல் போன்றவற்றில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமே. திட்டமிடுதல்தான் முக்கியம்.  ஏப்ரல் மாதம் தொடங்கியாயிற்று. இதில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு, தேர்தல் முடிவு என முதல் 15 நாள்களை விட்டு விடுங்கள். மீதமுள்ள 45 நாள்களை 5 அல்லது 6 வாரங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.  எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை உண்டு. அந்த விடுமுறை தினத்தை உங்கள் குழந்தைகளுடன் ஊர் சுற்றப் பயன்படுத்துங்கள்.  நாம் செல்லும் இடங்கள் நம் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்காக அமைவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அறிவை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.  நம் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பயணம் செய்வது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, பயணத்தின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அங்குள்ள ரயில்வே போலீஸôரிடம் புகார் செய்வது, ரயில் ஓட்டுநர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் ரயிலை இயக்கும் முறை போன்றவற்றை விளக்குவது பயனுள்ளதாக இருக்கும்.  இதேபோல, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தலாம். கோளரங்கத்துக்கு அழைத்துச் சென்று காட்டுவதோடு, அங்கு நடைபெறும் வான் நோக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கச் செய்யலாம். அருங்காட்சியகத்துக்கு சென்று அங்குள்ள அதிசயங்களைக் காட்டலாம்.  மேலும், நாம் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே நமக்குத் தெரியாத பல வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கலைச் சின்னங்கள் நிச்சயமாக இருக்கும். அதுகுறித்து அறிந்து அங்கு அழைத்துச் செல்லலாம். நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.  நம் ஊரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் பல விஷயங்கள் உள்ளன. நூலகங்களில் உள்ள என்சைக்ளோபீடியா என அழைக்கப்படும் தகவல் களஞ்சியங்களில் வண்ணப்படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதானே என நாம் நினைக்கும் பல விஷயங்கள் நம் குழந்தைகளுக்கு அதிசயமாகவும், அறிவுச் செய்திகளாகவும் இருக்கும்.  நாம் செய்ய வேண்டியது: இந்த 45 நாள்களிலும் நம் குழந்தைகளோடு எவ்வளவு அதிமான நேரத்தைச் செலவழிக்க முடியுமோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான். இதைத்தவிர, அந்த இளம் மொட்டுகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது எதுவுமில்லை.  நான் சந்தோஷமாக இருக்கேன் என்ற வார்த்தையை ஜூன் மாதத் தொடக்கத்தில் அவர்களிடம் இருந்து கேட்க வேண்டுமானால், இந்த 2 மாதங்கள் அவர்கள் சந்தோஷத்துக்கு விட்டுவிடுங்கள். இது அவர்கள் துள்ளித் திரியும் நேரம்...  

Advise to others: ஊருக்கு உபதேசம்

தொடரட்டும் இப்போக்கு! பிற காங்.தலைவர்களும் இவ்வழியில் செல்லட்டும்! அழியட்டும் காங். ஒழியட்டும் ஊழல்! செழிக்கட்டும் தமிழினம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஊருக்கு உபதேசம்



மதுரையில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் இரு வேட்பாளர்களது தொகுதிக்கு பிரசாரம் செய்ய வராமல் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புறக்கணித்தது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரையில் தெற்கு, வடக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுக கூட்டணியில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மதுரைக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை இரவு வந்தார்.  மானாமதுரையில் இருந்து வந்த அவர், கே.கே.நகர் பகுதி வழியாகவே மதுரைக்குள் வந்தார். அந்தப் பகுதியானது காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது. ஆனால், தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து வாசன் பிரசாரம் செய்யவில்லை.  மதுரைக்குள் வந்த ஜி.கே.வாசன் செல்லூர் பகுதிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மு.க.அழகிரிக்கு நெருக்கமான வேட்பாளர் என ராஜேந்திரனை குறிப்பிட்டார். காங்கிரஸôரும் திமுகவினரும் ஒற்றுமையாகத் தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுக கூட்டணியில் ஒற்றுமை நிலவுவதாகவும், அதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்றும் கூறி அதிமுகவை சாடினார்.  செல்லூரில் பிரசாரத்தை முடித்த ஜி.கே.வாசன் மற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தெற்கு, திருப்பரங்குன்றத்துக்கு பிரசாரம் செய்யச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் திண்டுக்கல் பகுதிக்கு பிரசாரம் மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றார்.  திருப்பரங்குன்றத்தில் கே.வீ.தங்கபாலு ஆதரவாளரும், தெற்குத் தொகுதியில் ப.சிதம்பரம் ஆதரவாளரும் போட்டியிடுவதால் அந்தத் தொகுதியில் பிரசாரத்தை வாசன் தவிர்த்துவிட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.  நமது கட்சிக்குள்ளேயே கோஷ்டி பார்த்து பிரசாரம் செய்யும் வாசன், அதிமுக கூட்டணி ஒற்றுமையைப் பற்றி எப்படிப் பேசுகிறார் என்று காங்கிரஸ்காரர்களே கேட்டு சிரிக்கிறார்கள்.     

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

untouchability activities of govt. staff : ஓய்வுபெற்ற தலித் அதிகாரியின் அறையைச் சாணம் தெளித்து சுத்தம் செய்த அரசு ஊழியர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை

உயர்ந்த  பொறுப்பில்  இரு்ந்த பொழுதே செகசீவன்இராம் திறந்து வைத்த சிலையைத் தூய்மைப்படுத்த வில்லையா?  இன்றும்கூடப் பணியாள் தேய்த்து வைத்தப் பாத்திரங்களை மறுபடியும் வீட்டாள் கழுவிப் பயன்படுத்தும் நிலைமை பல் வீடுகளில் உள்ளதே!  ஒரு புறம் குற்றவாளிகளு்க்குக் கடுமையான தண்டனையும் மறுபுறம் யாவரும் கேளிர் என்ற எண்ணப் பரப்பலும் தேவை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஓய்வுபெற்ற தலித் அதிகாரியின் அறையை சாணம் தெளித்து சுத்தம் செய்த அரசு ஊழியர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை

First Published : 08 Apr 2011 12:48:50 AM IST


திருவனந்தபுரம், ஏப்.7: ஓய்வு பெற்ற தலித் அதிகாரியின் அறையை பசு சாணத் தண்ணீர் தெளித்து அரசு ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தரப்பட்டுள்ளது.  கேரள மாநில அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் அவர் பயன்படுத்திய அறை, நாற்காலி, மேஜைகள் மீது சாணத் தண்ணீர் தெளித்து சக ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ராமகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.  புகாரில் அவர் கூறியுள்ளதாவது:  நான் ஓய்வு பெற்ற பின்னர் நான் பயன்படுத்திய அறை, மேஜைகள், நாற்காலிகள், அலுவலகர் கார் ஆகியவற்றின் மீது பசுவின் சாணத் தண்ணீர் சில ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாக நம்பகமான தகவல் வந்துள்ளது. நான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதுபோன்ற செயலில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன. இது மனித உரிமைகளையும், குடிமக்கள் சுதந்திரத்தையும் மீறுவதாகும்.  இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.  இதையடுத்து வழக்கைப் பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி என். தினகர், சம்பந்தப்பட்ட வரித்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் புகார் தொடர்பாக மே 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட நபர் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் இவ்வாறு செய்யப்படவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்க வேண்டியிருக்கிறது.  அரசில் உயர்பதவி வகித்த ஒருவருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நடைபெறும் என்றால், சாதாரண பொதுமக்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்று அவர் கூறியுள்ளார்.

Raghul joke about cong. ruling: காங்கிரசு ஆட்சியில் நாடு அபரிமிதமான வளர்ச்சி:இராகுல்

காங்.ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல! ஊழலில் உலக நிலையில் முதலிட வளர்ச்சி. ௨.  தேசிய இனங்களை அழிப்பதில் முனைப்பான வளர்ச்சி. ௩. வறுமை ஒழியாமல் பார்த்துக் கொள்வதில் வியத்தகு வளர்ச்சி. ௪. சில குடுமபத்தினர் மட்டும் உலகச் செல்வர்களில் முதலிடம் பெறுவதில் வானளாவிய வளர்ச்சி. ௫. கருப்புப்பணம் குவிவதில் குவலயம் போற்றும் வளர்ச்சி. ௬. அயல்நாட்டு வங்கிகளில் திருட்டுப்பணம்  பாதுகாப்பாக வைக்கப்படுவதில் பார் புகழும் வளர்ச்சி. ௭. மக்கள் நாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதில் மாபெரும் வளர்ச்சி. அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு அளவற்ற வளர்ச்சி. எனவே, வளர்ச்சிக்குப் பாடுபட்ட காங்.கிற்கு ஓய்வு கொடுப்போம்! வளம் காண்போம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! 
/ எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


காங்கிரஸ் ஆட்சியில் நாடு அபரிமிதமான வளர்ச்சி: ராகுல்





புதுச்சேரி, ஏப். 7: காங்கிரஸ் ஆட்சியில் நாடு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்று புதுச்சேரி தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி கூறினார்.  ÷புதுச்சேரி வில்லியனூரில் வியாழக்கிழமை நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:  ÷மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வதைத்தான் நம்புகிறது.  ÷அதன் அடிப்படையில் ஏழை மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  ÷மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் காங்கிரஸ் ஆட்சியில் நாடு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது.  ÷காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா 8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் புதுச்சேரி 14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் ஏழைகளும் அதிக பயன்பெற வேண்டும்.  ÷பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஏழைகளை சென்றடையாத வரை இந்த வளர்ச்சி போதுமானதாக இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.  ÷அதனால் தான் அரசின் அனைத்து திட்டங்களும் ஏழைகள் மற்றும் சமூகத்தில் நலிந்துள்ள பிரிவினர்களை நோக்கி இருக்கிறது. விவசாயிகள் மேம்பாடு அடைய அவர்களின் கடன்கள் ரூ.70 ஆயிரம் கோடியை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ரத்து செய்துள்ளது.  ÷பெண்களின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்து வருகிறோம்.  ÷இந்தியாவிலேயே ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, இயக்கத்தை நடத்தி வருபவர்கள் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் மட்டும்தான் என்பதில் பெருமை அடைகிறேன்.  இளைஞர்களை கட்சியில் சேர்த்தால்தான் இளைஞர்களின் தேவை என்ன என்பது தெரிந்து, திட்டங்களை உருவாக்க முடியும். நாடு வளர்ச்சியடைய மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.  ÷அதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடக்க வேண்டும். இதனால் புதுச்சேரி வளர்ச்சி அடையும். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து, புதுச்சேரி வளர்ச்சிப் பாதையில் செல்ல, காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார் ராகுல்.  ÷மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி: புதுச்சேரி அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளது. ÷புதுச்சேரியின் வளர்ச்சி தொடர காங்கிரஸ் கூட்டணிக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.  ÷முதல்வர் வி.வைத்திலிங்கம்: புதுச்சேரி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் ராகுல்காந்தி. இவர் உதவியால்தான் காங்கிரஸ் அரசால் பல நலத்திட்டங்களை கொண்டு வரமுடிந்தது என்றார்.  ÷பின்னர் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ராகுல்காந்தி அறிமுகப்படுத்தினார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் பி.கண்ணன், காங்கிரஸ் பிரமுகர் மக்களவை உறுப்பினர் அனுமந்த்ராவ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.சங்கர், அமைச்சர்கள் எ.நமச்சிவாயம், ஷாஜகான், மு.கந்தசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


மதுரை Suit against the petitioner in collector's case: ஆட்சியருக்கு எதிராக வழக்கு: ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க மனு

இவ்வாறு வேண்டுவது ஒருவகையில் சரியாக இருக்கலாம். வேண்டுமென்றே களங்கம் கற்பிக்க யாரும் முன் வர மாடடார்கள். ஆனால், அதே நேரம் உண்மையான நேர்வுகளில் வழக்கு மன்றத்தை நாடும்  மன உறுதியை மக்கள்  இழக்கவும் வாய்ப்பு உள்ளது.  மேலும் இந்த வழக்கு சத்தியவாணிக்கு எதிரானதா? அழகிரி தொடுக்கப் போகும் வழக்கிற்கு எதிரானதா?  இவற்றையெல்லாம் வழக்கின்போது நீதிபதிகள் கூர்ந்தாய்ந்து முடிவெடுக்க வேண்டுமே தவிர மற்றொரு வழக்குப் பதிவின் மூலம் நீதிபதிகளுக்கு அறிவுறுத்தக்கூடாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


மதுரை ஆட்சியருக்கு எதிராக வழக்கு: ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க மனு



சென்னை, ஏப். 7: மதுரை ஆட்சியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறையாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மதுரையைச் சேர்ந்த சத்தியவாணி என்பவர் "மதுரை மாவட்ட ஆட்சியர் யு. சகாயம் பொதுக் கூட்டங்களில் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும்' என்று பேசியதாகவும், அதனால், அவரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந் நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ரத்தினம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பது:  மதுரை மாவட்டம் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்து வருகிறது. அங்குள்ள மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோர் சிறப்பாக தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களின் பணியைக் கெடுக்கும் நோக்கில் சிலர் வேண்டுமென்றே அவர்கள் மீது அற்பமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.  இப்போது இந்த நீதிமன்றத்தில் ஆட்சியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் அந்த வகைதான். அந்த மனுவை பொது நலன் மனு என்று கூறுவதற்கு போதிய முகாந்திரம் இல்லை. மனுதாரர் தனது செயல் மூலம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார். அதற்காக, அவருக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறையாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


D.M.K. will fight ever for Ilangai thamizhs!! - imagination of kalaignar: இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. என்றைக்கும் போராடும்:கருணாநிதி

தமிழ் ஈழ வீரத்தாய் மருத்துவம் நாடி வந்தபொழுது விரட்டியதும் இலங்கைத்தமிழர்களுக்கான போராட்டம்தானா? அவரது திருச்சாம்பல் கரைக்கும் நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதும் அதற்குத்தானா?  ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் அமைப்புகளை ஒடுக்குவதும் தொடர்பான பேச்சுரிமையைப் பறிப்பதும் தளையிடுவதும் அதற்குத்தானா? தமிழ்ஞாலத் தேசியத்தலைவரின்  பெற்றோர் மறைவுகளின் பொழுது இரங்கல் தெரிவிக்காததும் அதற்குத்தானா?பொய்யான தகவல்களைக்கூறி உள்ளத்தைப் புண்படுத்துவதை விட அவற்றை நினைவுபடுத்தாமல் தமிழ்நாட்டைப்பற்றி மட்டும் பேசினால் போதாதா? கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால்  இனப்படுகொலை நடக்க விட்டிருப்பாரா? மலர்ந்த  ஈழம் மடிவதைப் பொறுத்திருப்பாரா?  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. என்றைக்கும் போராடும்:கருணாநிதி





சென்னை, ஏப்.7: இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க.வினர் என்றைக்கும் போராடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.  தென்சென்னை மாவட்ட பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:  "அடுத்த ஆட்சி எந்த ஆட்சி? வேற ஆட்சி வரப்போகிறதா அல்லது தி.மு.க. ஆட்சியே தொடரப்போகிறதா என்ற கேள்விக்கு விடைகாண நீங்கள் எழுச்சியோடு வந்திருக்கிறீர்கள்.  இந்த எழுச்சியை நான் நேற்று (புதன்கிழமை) மதுரையில் கூட பார்க்கவில்லை. மதுரையில் உள்ள கூட்டத்தை வெல்லக்கூடிய அளவுக்கு நீங்கள் குழுமியுள்ள காட்சியைப் பார்க்கும்போது நான் மனதாரச் சொல்லிக்கொள்கிறேன், வெற்றி நிச்சயம்.  காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தீவுத்திடலில் வந்து உரையாற்றினார். தொகுதி நிலவரங்கள், தேர்தல் நிலவரங்கள், யார், யாரை நிறுத்தியிருக்கிறோம் என்ற விவரங்கள் இவைகளையெல்லாம் பற்றிப் பேசவில்லை. தமிழர்களின் நலனுக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக வேண்டிய தேவைகளையெல்லாம் எடுத்துரைத்தேன்.  இலங்கையில் வாழும் தமிழர்களைப் பராமரிப்பதில் இன்னமும் காலதாமதம் ஆகிறது. இலங்கை அரசு அவர்களின் தேவையை முழுமையாக இன்னமும் நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களர்களும், தமிழர்களும் சமமாக வாழ்வதற்கு சட்ட திருத்தத்தைக் கொண்டுவருவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச சொல்லியிருந்தார். அந்தத் திருத்தத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரினேன்.  இலங்கைப் பிரச்னையைப் பற்றி நான் இப்போதுதான் கவலைப்படுவதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள்.  இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுகிறவர்கள் யார், ஒதுங்கியிருந்தவர்கள் யார், அவர்கள் கொல்லப்பட்டபோது சரி, சரி என்று சொன்னவர்கள் யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழர்கள் அங்கே வாழவைக்கப்பட வேண்டும். அவர்களின் ஊர்களில் இருந்து விரட்டப்படும் தமிழர், அங்கு நடைபெறும் போரால் விரட்டப்படும் தமிழர் அந்த ஊருக்கு வர வேண்டும். அதற்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை இலங்கை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரினோம்.  பேரவையில் தீர்மானம்: தமிழகப் பேரவையில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் என்ன? இலங்கையில் இருந்த பிரபாகரனை கைதுசெய்து, இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும். சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை; நடுநிலை வகித்தோம்.  இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது நான் கண்ணீர்விட்டு கவிதைகள் எழுதினேன். போர் என்றால் ஜனங்கள் செத்துமடிவது சகஜம் என்றார் ஜெயலலிதா.  இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே பேசிய, பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு இப்போது அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார். விடுதலைப் புலிகளைப் பொருத்தவரை ஜெகன், குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள் என்னைச் சந்தித்து அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.  ஏக்கம் உள்ளது: சகோதர யுத்தத்தால் ஒரு லட்சியப் போராட்டம், பெரும் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உள்ளது.  அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள பிரதமரைக் காணும்போதெல்லாம், சோனியா வரும்போதெல்லாம் அவர்களிடம் நான் பகிரங்கமாகவும், தனியாகவும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எடுத்துச் சொல்வேன்.  அவர்கள் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் என்று கருதாமல், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று இன்றைக்கும் கோரிக்கை வைக்கிறேன்.  தி.மு.க. தலைவர் என்ற முறையில் நான் இந்தப் போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதைய அதிமுக ஆட்சி விளைவித்தது என்பதையும் தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையான தமிழன் - தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் - கருணாநிதி, அழிந்தாலும் அதைவைத்து அரசியல் லாபம் சம்பாதிக்கலாம் என்று எண்ணியவர்கள் சிலர் இன்று எழுதுகிறார்கள்.  அந்தத் தமிழனுக்கும், இந்தத் தமிழனுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, தி.மு.க.வில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்துப்பேசக்கூடியவர்கள்; போராடுவார்கள் என்பதை உணர்ந்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  

Kalaignar about dravidian movements integration: திராவிட இயக்கங்கள் விரைவில் ஒன்றுபடும்: முதல்வர் கருணாநிதி

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுபட்டுத் தமிழுக்காகக் குரல்கொடுத்து வாகைசூடும் காலம் எப்பொழுது வரும்? ௨.தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிபோல் செயல்படுவதாகக்கூறி விட்டு இப்பொழுது மாற்றிப் பேசுவதால் அதன் நடுவுநிலைமைய முதல்வர் உணர்ந்துள்ளார் என்று எடுத்துக்கொள்ளலாம். ௩. முதல்வர் பதவியைப்  பேராசிரியருககு அளித்து விட்டு அனைத்துத் தமிழ் / திராவிட இயக்கங்களின்  தலைமைப் பொறுப்பேற்று வழிகாட்டியாக விளங்கித் தமிழ்மொழியும் தமிழ் இனமும் தமிழ்நாடும் தமிழுலகும்   தன்னுரிமையுடன் விளங்கக் கலைஞர் வகைசெய்வாரா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


திராவிட இயக்கங்கள் விரைவில் ஒன்றுபடும்: முதல்வர் கருணாநிதி


துரை, ஏப்.7: திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.  மதுரையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:  தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக நான் சொல்லவில்லை. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது பாரபட்சமில்லாமல், நீதிமன்றம்போல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களேகூட சில சமயங்களில் தடுமாறும் நிலையில், தேர்தல் கமிஷன் தன் மீது எந்தவிதமான விமர்சனமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். உதாரணமாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலம் இதுவரை 1.10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள வீடுகளைக் கட்டித் தருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அவருக்கு கிடைத்த தகவல்படி அவர் அதைச் சொல்லியிருக்கலாம். அது துல்லியமாகவும் இருக்கலாம்.  மதிமுகவில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்களே என்று கேட்கிறீர்கள். இந்தத் தேர்தலில் பல இடங்களில் மதிமுக தொண்டர்கள் நேரடியாகவும், மானசீகமாகவும் திமுகவுக்கு ஆதரவு தருகின்றனர். திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும் என்பதற்கான அடையாளம்தான் இது.  தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவது பற்றி எதிர்க்கட்சிகள் குறைகூறி விமர்சித்து வருகின்றன. மின்பற்றாக்குறை என்பது ஒரு தொடர் நிகழ்வு. வீடுகள், தொழிற்சாலைகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தேவையைவிட உற்பத்தி குறைவாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்னுற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்திருக்கிறது.  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்திட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு மின்பற்றாக்குறை அகற்றப்படும்.  தமிழகத்தை மீட்டெடுக்கப் போவதாக ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். முதலில் அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து தன்னுடைய நகைகளை மீட்கட்டும்.  மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். மதுரை மக்களுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்து வருகிறார். இதைக் கண்டு பொறுக்காமல் ஜெயலலிதாவும் அவரது அணியினரும் அவர் மீது தேவையில்லாமல் புகார்களைக் கூறிவருகின்றனர்.  தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்றுள்ள சிலரின் உதவியைக் கொண்டு தேர்தல் ஆணையம் இப்போது செயல்பட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது.  அரசு அதிகாரிகள் சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கிறீர்கள். அரசியலில் மட்டுமல்ல; அதிகாரிகள் மத்தியிலும் எட்டப்பர்கள் உண்டு.  கோவையில் அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திமுக குடும்பக் கட்சி என்று பேசியிருக்கிறார். குடும்பக் கட்சியாக இருக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி திமுக அல்ல.  இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரை குறிப்பிடும்போது மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் ஞாபகம்தான் எனக்கு வருகிறது. அவர் மறையும்போது என்னை அழைத்து, எனக்குப் பதிலாக எங்கள் சமூகத்திலிருந்து ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றால் பண்ருட்டி ராமச்சந்திரனைப் போன்ற துரோகிகளை போட்டு விடாதீர். எனக்கு விரோதியாக இருந்தாலும் கடலூர் இளம்வழுதி போன்றவர்களை நியமியுங்கள் என்று சொன்னார். நான் அவருடைய பேச்சைக் கேட்காததால் அனுபவிக்கிறேன்.  தமிழகத் தேர்தல் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்குமா? எப்போது என்று கேட்கிறீர்கள். நிச்சயம் எதிரொலிக்கும். எப்போது எனில் எதிரொலிக்கும்போது தெரியும் என்றார்.  பேட்டியின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 


வியாழன், 7 ஏப்ரல், 2011

Carrot for Cancer: கேரட் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்

தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவ முறையில் புற்றுநோயைப் போக்கும் பல மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், தொடக்கத்தில் அயல் மருத்துவத்தில் நம்பிக்கை வைத்து முற்றியபின்பே தமிழ் மருத்துவத்தை நாடுவதால் நோய் கட்டுப்படுத்தப்பட்டு, பக்க விளைவின்றி வாழ்நாள் கூடும் வாய்ப்புதான் பெரும்பாலோர்க்குக் கிடைக்கிறது. தொடக்கத்திலேயே தமிழ் மருத்துவம் மேற்கொண்டால்  முழு நலன் அடைவர். எனவே, அரசு அத்தகைய மருத்துவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும். இம் மருத்துவ முறையை நூல் வடிவில் ஆக்கிப் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கச் செய்து உலகோர் பயனடையச் செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கேரட் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்



லண்டன் ஏப் 6:கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.  கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.  கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து, சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள ஃபாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா ஃபெர்ணாண்டஸ் கூறுகையில், இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார். 

Equal assets to the divorcee woman: மணவிலக்கு பெறும் பெண்ணுக்குச்சரிபாதிச் சொத்து: நிலைக் குழு பரிந்துரை

நல்ல பரிந்துரை. எனவே,. சமய வேறுபாடின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் சட்டம் இயற்ற் வேண்டும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

விவாகரத்து பெறும் பெண்ணுக்கு சரிபாதி சொத்து: நிலைக் குழு பரிந்துரை


புது தில்லி, ஏப்.6: விவாகரத்து பெறும் பெண்ணுக்கு சரிபாதி சொத்து அளிக்கப்பட வேண்டும் என்று சட்ட அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.  இக் குழுவின் தலைவர் ஜெயந்தி நடராஜன் தில்லியில் செயதியாளர்களிடம் புதன்கிழமை இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:  இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதற்கான திருத்த மசோதா, 2010 ஆகஸ்ட் 4-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு மத்திய சட்ட அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.  நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் தலைமையிலான இந்த ஆலோசனைக் குழு பல தரப்பினரை அழைத்து பல கூட்டங்களை நடத்தி இந்த மசோதாவை விரிவாக பரிசீலனை செய்தது. இது தொடர்பாக தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த மாதம் 1-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இக் குழு தாக்கல் செய்தது.  இக் குழு செய்துள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு:  தம்பதியர் திருமணத்துக்குப் பின் சம்பாதித்த சொத்தில் சரி பாதியை விவாகரத்து பெறும் பெண்ணுக்கு அளிக்க வேண்டும்.  தற்போது மசோதாவில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த தேதியிலிருந்து 6 மாத கால அவகாசம் தரத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, தம்பதியர் மீண்டும் ஆலோசிப்பதற்காக அந்த கால அவகாசத்தை அவர்களுக்கு தரவேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்.  விவாகரத்து பெறும் தம்பதியர் தத்தெடுத்த குழந்தைகள் எதையும் வளர்த்து வந்திருந்தால் விவாகரத்துக்குப் பிறகு அக் குழந்தைகளை யார் வளர்ப்பது, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான சட்டப் பாதுகாப்பு போன்றவற்றை இந்த மசோதாவில் அரசு தெளிவாக குறிப்பிடவேண்டும்.  விவாகரத்து பெறும் பெண் தனக்கு சேரவேண்டிய பாதி சொத்தை பெறுவதை உறுதி செய்ய இந்த மசோதா மட்டும் போதுமானதாக இராது. சரிபாதி சொத்தை வசூலித்து பெண்ணுக்குப் பெற்று தர வலுவான சட்டபூர்வ அமைப்பு ஒன்றை கட்டாயம் உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.  தற்போதைய மசோதாவில் உள்ள சில பிரிவுகளை திருத்துவதற்கு இக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் மசோதாவில் பல்வேறு அம்சங்களை மீண்டும் பரிசீலித்து, திருத்தப்பட்ட விரிவான ஒரு மசோதாவை அரசு மீண்டும் கொண்டு வரக்கூடும் எனத் தெரிகிறது.  லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த குழு உறுப்பினர்களாக உள்ளனர். அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

Coalition Govt. - Raghul speaks indirectly: திமுக - காங்கிரசு கூட்டணி ஆட்சி: இராகுல் சூசகம்


தமிழ் நாட்டு மேடையில் தமிழில் கூட எழுதி வைக்க விருப்பமில்லாத இவர்கள் ஆடசிக்குவந்தால் தமிழுக்குக் கேடு. தமிழினக் கொலையாளி, தமிழ்மொழிப் பகையாளி காங்.கட்சியை அரசியலில் இருந்தே துரத்துவோம்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: ராகுல் சூசகம்



ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார் ராகுல்காந்தி.
ஈரோடு, ஏப்ரல் 6: தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கட்சிகள் அங்கம் வகிக்க இருக்கும் அரசு ஏழை மக்களின் அரசாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி தெரிவித்தார்.  ஈரோட்டில் ஐனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:  வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள்தான் இந்தியாவின் வலிமை. மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசு இந்த மக்களைக் கவனிக்கத் தவறிவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் மத்திய அரசு ரூ.70 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. 100 நாள் வேலைத் திட்டம் மூலமாக ஏழை மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரித்துள்ளது.  தமிழகத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி உதவி அளித்துள்ளது. தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.  சாயக்கழிவுப் பிரச்னைக்கு  நிரந்தரத் தீர்வு:  ஈரோட்டில் ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் வகையில், அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும்.  தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் 16 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இதனால்தான் இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக அங்கம் வகிக்க இருக்கும் அரசு, ஏழை  மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இளைஞர்களுக்காக உழைக்கும் அரசாக இருக்கும். தமிழக மக்கள் இந்தக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலிலும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் ராகுல்.  காங்கிரஸ் மற்றும் திமுக அங்கம் வகிக்கும் அரசு என்று கூறியதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை ராகுல்காந்தி கோடிட்டுக் காட்டியுள்ளார் என்றனர் காங்கிரஸ் கட்சியினர்.  ராகுல்காந்தி பேச்சை, முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தமிழில் மொழிபெயர்த்தார். திமுக வேட்பாளர்கள் எஸ்.முத்துசாமி, ராஜா, காங்கிரஸ் வேட்பாளர்கள் யுவராஜா, விடியல்சேகர், ஆர்.எம்.பழனிச்சாமி, கொமுக வேட்பாளர்கள் எஸ்.சிவராஜ், கேகேசி.பாலு, பாமக வேட்பாளர் எஸ்.மகேந்திரன் ஆகியோரை வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி அறிமுகப்படுத்தினார்.   

புதன், 6 ஏப்ரல், 2011

meenakam : comments by Ilakkuvanar Thiruvalluvan

Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "உணர்வும் செயல்துடிப்பும் மிக்க விழித்தெழு இயக்கத்தினருக்குப் பாராட்டுகள்! வரலாற்றை உருவாக்கும் ப...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "பக்சேயின் கனவுகள் கலைந்தன. எனினும் தமிழினத்தையும் தமிழ் நிலத்தையும் அழித்த அவன் நிலைகுலைய வேண்டு...
 
காரியங்கள் கைகூடாத மகிந்த இராஜபக்சேவின் இந்தியப் பயணம் ஆன... -
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "இத்தேர்தலில் இக்கட்சி சராசரியாக ஒரு தொகுதியில் 1000 வாக்குகளாவது பெறுமா எனத் தெரியவிலலை. ஆனால், ...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "வரக்கூடிய தொலைவிலும் காலச்சூழலிலும் உள்ளவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்க வேண்டும...
 

Castor Oil for Mexico planes: காட்டு ஆமணக்கு எண்ணெயில் மெக்சிகோ விமானம் ஓடியது!

இராமர் (பிள்ளை) மூலிகை எரிபொருள் உருவாக்கிய பொழுது ஊக்கமளிக்காமல் வதைத்தனர். அவர் வழியில் முயன்ற பலரும் அச்சத்தால் திசைமாறினர். அவ்வாறு இல்லாமல் அரசே ஊக்கமும் உதவித் தொகையும் அளித்தால் மாற்று எரிபொருளை நாமும் கண்டுபிடிக்க இயலும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


காட்டு ஆமணக்கு எண்ணெயில் மெக்சிகோ விமானம் ஓடியது!



வாஷிங்டன், ஏப்.3: மெக்சிகோ நாட்டில் ஏ320 ரக ஏர்-பஸ் விமானத்தை விமான எரிபொருளுடன் 30% காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனை படைத்தார்கள்.பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடக்கிறது.ரயில் என்ஜின்களில் டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ஓட்டலாம் என்பதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக ரயில்பாதை ஓரங்களில் காட்டு ஆமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன காரணத்தாலோ இந்த ஆய்வும் சோதனைகளும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.ஆனால் மெக்சிகோ நாட்டில் விமானத்தையே காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்த எரிபொருளில் ஓட்டி சனிக்கிழமை சோதித்துப் பார்த்தார்கள். விமானம் வெற்றிகரமாக, எந்தவிதத் தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி பறந்தது.மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏஞ்செல் அல்பினோ கார்சோ நகரம் வரை விமானத்தை ஓட்டினார்கள்.விமான எரிபொருளைப் பயன்படுத்தினால் ஏற்படும் கரியுமிலவாயு வெளிப்பாடு இந்த கலப்பு எண்ணெயைப் பயன்படுத்தியபோது 60% குறைந்திருப்பதும் குறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 30% முதல் 60% வரை குறைந்தாலே சர்வதேசச் சந்தையில் அதன் விலை தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்தி விடலாம். அதே சமயம் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற காட்டு ஆமணக்கு எண்ணெய்க்கும் நல்ல பொருளாதாரப் பயன்பாடு கிடைக்கும். எளிதில் சாகுபடி செய்யக்கூடிய இதை இந்தியா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் சாகுபடி செய்து எண்ணெய் வளத்தை உள்நாட்டில் பெருக்க முடியும்.எனவே இந்த சோதனை முயற்சி எல்லா வகையிலும் பாராட்டத்தக்கதே ஆகும்.
கருத்துகள்

அடடா நம்ம ஆளுங்க இத எல்லாம் எப்போ கண்டுபிடிச்சி எப்போ பண்ணப்போறாகளோ? சீக்கிரம் பெட்ரோலுக்கு மாற்று கண்டுபிடிங்க சார்!
By ஜெயராஜ் வி.சி.
4/4/2011 5:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Rebirth of koyabals - article of pazha.nedumaran in dinamani: மறுபிறவி எடுக்கும் கோயபல்ஸ்

கோயபல்சகள் எல்லாக் கட்சியிலும் உள்ளனர்; ஊடகங்களிலு்ம் உள்ளனர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
 
மறுபிறவி எடுக்கும் கோயபல்ஸ்

First Published : 06 Apr 2011 12:18:00 AM IST


முந்தைய தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகும் என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருக்கிறார்.நாடெங்கும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது. வாகனப் பரிசோதனைகள், வேட்பாளர்களின் அலுவலகங்களின் சோதனைகள் என பல வகையிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இச் சோதனைகளின் விளைவாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பணமும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு யாரும் உரிமை கோர முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள் ஐந்து பேர் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டம் ஒழுங்கு நிலைமைகளையும் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நான்கு பேர் டி.ஜி.பி. உள்பட ஆறு உயர் போலீஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி முறைகேடுகளும் நடைபெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்தது. அம் மனுவில் நன்றாகத் திட்டமிட்டு வாக்காளர்களுக்குப் பணம் தருகின்றனர். போலீஸ் வாகனங்கள் மூலமாகவே பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பணப் பட்டுவாடா நடக்கிறது. இதுதொடர்பாக இதுவரை 5,400-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் விநியோகம் செய்ததாக சில போலீஸ் அதிகாரிகள் மீதே புகார் வந்துள்ளது. இவ்வாறு பணப் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்களை அறிவித்தால் நீதிமன்றத்துக்கே அதிர்ச்சியாக இருக்கும் எனக் கூறியது கேட்ட நீதிபதிகள் திடுக்கிட்டார்கள். வாகனச் சோதனைகளையும் மற்ற நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள்ளூர் போலீஸ் பாதுகாப்புக்குப் பதில் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், மடியில் கனமுள்ள அமைச்சர்கள் இதைக் கண்டு அச்சமடைந்தனர். ஏனெனில், தங்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கொண்டுதான் தேர்தல் முறைகேடுகளை அமைச்சர்கள் நடத்தி வந்தனர். அது இயலாமல் போன கோபத்தில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.மத்திய அமைச்சர்களுக்கு 11 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு 37 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான போலீஸôரைத் திரும்பப் பெற்றதைக் கண்டு அவர் கடுங்கோபம் அடைந்திருக்கிறார்.எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி, மதுரை நகரக் காவல் துறை ஆணையர் ஆகியோர்தான் பொறுப்பு என எச்சரித்தார்.அவரது காரை நிறுத்திச் சோதனையிட்டதை அராஜகம் என வர்ணித்து குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தந்திகள் அனுப்பினார்.மக்களுக்குப் போதுமான பாதுகாப்பில்லை. வீடுகள் புகுந்து கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாகி விட்டன. இந்த நிலையில் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பாதுகாப்புப் பற்றியே கவலைப்படுவது இவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.மேலூரில் பிரசாரம் செய்யச் சென்ற அழகிரியின் நடவடிக்கைகளை விடியோ படம் எடுத்தவரை அழகிரியின் ஆள்கள் ஓட ஓட விரட்டினார்கள். அவர் தாசில்தாரிடம் அடைக்கலம் புகுந்தார். பின் தொடர்ந்தவர்கள் விடியோ கேமராவைப் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், தாசில்தார் மறுக்கவே அவரையும் தாக்கி இருக்கிறார்கள். இதன் விளைவாக, அழகிரி உள்பட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது.அழகிரியின் ஆத்திரம் அத்துடன் அடங்கி விடவில்லை. மாறாக, மதுரை ஆட்சியர் மீது குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான சுகுமாறன் மதுரை ஆட்சியர் மீது புகார் கூறி தேர்தல் ஆணையத்துக்கு முறையீடு அனுப்பினார். ஆனால், மதுரை ஆட்சியர் குறித்து தலைமைச் செயலருக்கு அழகிரி அனுப்பிய புகாரில் சுகுமாறனின் புகார் மனுவும் இணைத்து அனுப்பப்பட்டது. சுகுமாறனின் புகாருக்கு அழகிரியே பின்னணி என்பது அம்பலமாயிற்று. தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய பிரச்னையில் தலைமைச் செயலருக்குப் புகார் செய்வது அறியாமையா அல்லது அதிகாரமா?திருமங்கலம் தேர்தல் தில்லுமுல்லுவின் சூத்திரதாரியான அழகிரி தனது முறைகேடான நடவடிக்கைகளைத் தொடர முடியாத கோபத்தில் அதிகாரிகள் மீது பாய்கிறார். அவரைப் பின்தொடர்ந்து தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் டி.ஜி.பி. போலோ நாத் கூறாத ஒன்றை கூறியதாகத் திரித்துக் கூறி அவர் மீது புகார் செய்திருக்கிறார்கள்.தனது மகனின் முறைகேடான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் மீது பாய்ந்திருக்கிறார்.2-4-11 அன்று சேலத்தில் பின்வருமாறு புலம்பியிருக்கிறார். ""தமிழகத்தை தி.மு.க. அரசு ஆள்கிறதா, தேர்தல் ஆணையம் ஆள்கிறதா, நான்தான் முதல்வராகத் தொடர்கிறேனா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸôரைத் திரும்பப் பெற உங்களுக்கு யார் அனுமதி தந்தது? பிரதமர் உங்களுக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளாரா? எங்களைப் பார்த்துப் போலீஸôர் கம்பை உயர்த்துவதா? ரூ. 80 மட்டுமே ஊதியம் பெற்றுவந்த போலீஸôருக்கு ஆயிரக்கணக்கில் ஊதியத்தை உயர்த்தியவன் நான்'' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.ஒரு மாநில முதலமைச்சர் பேசுகிற பேச்சாக அவரின் பேச்சு அமையவில்லை. மாறாக, சந்துமுனை சிந்துபாடியின் பேச்சாக அமைந்து சந்தி சிரிக்கிறது.ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்குத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதே புரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தையே மிரட்டும் வகையில் பேசுவதும், புழுதியை வாரித் தூற்றுவதும் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையே கெடுத்துவிட்டது.உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி லத்திகா சரணை டி.ஜி.பி. பதவியில் அமர வைத்தவர் இவர். உளவுத் துறையின் பொறுப்பில் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரான ஜாபர் சேட்டை நியமித்திருந்தார். முதல்வரின் கண்ணசைவுக்கு ஏற்ப கணைகளாகப் பாய்ந்த இந்த உயர் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றியது அவருக்குக் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தனது எடுபிடிகளைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வைத்தார். ஆனால், அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிற்று. தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த ஆயம் பின்வரும் தீர்ப்பை அளித்தது. தேர்தல் ஆணையம் அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை நிராகரித்தது, தனி நபர், வணிகர் போன்றோர் கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல் செய்ததுபோன்ற பல குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் முதல்வரின் அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் தேதி, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல்போன்ற எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே, இந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது.மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும். இதிலும், அவர் பாடங் கற்காவிட்டால் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அவசரகால நிலைக்கு அவர் ஒப்பிடுவதற்கு முன்னால் தனது கடந்தகால நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இவர் இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் 60 சதவீதத்துக்கு மேல் அழுகிக் கெட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இவர் ஆட்சியில் அதைத் திருத்துவதற்கு இவர் எடுத்த நடவடிக்கை என்ன? காவல்துறையைச் சீரமைக்க புதிய போலீஸ் சட்டம் கொண்டுவர வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை இதுவரை கருணாநிதி நிறைவேற்றவே இல்லை.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்படை புகுந்து வழக்கறிஞர்களை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கிய பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டும் அதை இறுதிவரை இவர் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் மீதெல்லாம் காவல்துறை தடியடி நடத்தியதையும் யாரும் மறக்கவில்லை. உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது இவரது காவல்துறைதான் தாக்குதல் நடத்தியது.சீமான், கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன் போன்ற பலர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியவர் இவரே. ஆனால், உயர் நீதிமன்றம் தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்தது.இவருடைய ஆட்சியில்தான் எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிக்கப்பட்டன. தமிழுணர்வாளர்கள் நடத்திய மாநாடுகளுக்குத் தடை விதித்தார். இவர் ஆட்சியில்தான் ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றன. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூவர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தி.மு.க.வினர்தான் என இவரின் பேரன் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் மோதல் சாவில் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டித்துப் பிரசாரம் செய்தவரின் ஆட்சியில் 29 பேர் மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.உண்மையில் இவரது ஐந்தாண்டு கால ஆட்சிதான் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியாகும். இவரும் இவருடைய குடும்பத்தினரும்தான் சகல அதிகாரங்களையும் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சிறிதளவுகூட மதிக்காமல் செயல்பட்டனர்.ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் முதல்வராக இருந்தபோது காவல்துறையைத் தங்களிடம் ஒருபோதும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், கருணாநிதி காவல்துறையை தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, காவல்துறையின் அத்து மீறல்களுக்கு இவரே பொறுப்பாளி ஆவார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேர்தல் ஆணையம் முனையும்போது மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், இவர் பதைபதைக்கிறார்.1933-ம் ஆண்டில் ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு கம்யூனிஸ்டுகள்தான் கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். எனவே ஹிட்லரின் சகாவான கோயபல்ஸ் ஒரு சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டினார். நாடாளுமன்றக் கட்டடத்துக்கு நள்ளிரவில் யாரோ தீ வைத்தார்கள். அதை கம்யூனிஸ்டுகள்தான் செய்தார்கள் என்ற கட்டுப்பாடான பிரசாரத்தை கோயபல்ஸ் கட்டவிழ்த்து விட்டார். இதன் விளைவாக, கம்யூனிஸ்டு கட்சி தோற்று நாஜிக் கட்சி வெற்றி பெற்றது.கோணிப் புளுகன் கோயபல்ஸ் மறுபிறவி எடுத்துக் கருணாநிதியாக தமிழகத்தில் வலம் வருகிறார். ஆனால், தமிழர்கள் இம்முறை ஏமாறப் போவதில்லை.

Dinamani editoriyal about qualifying test for doctors: தலையங்கம்: படித்தால் மட்டுமே போதுமா?

நல்ல கருத்துகள்! பாராட்டுகள்!ஆனால், அனைத்து இந்தியத் தகுதித் தேர்வு என்பது மொழித் திணிப்பிற்காகவும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராவும் அமையக் கூடாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தலையங்கம்: படித்தால் மட்டுமே போதுமா?


இளநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள், மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெற தனியாக ஒரு தேர்வு எழுத வேண்டும் என்று இந்திய மருத்துவக் குழுமம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே, சட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்வதற்குத் தகுதி பெற, அகில இந்திய அளவிலான பார் கவுன்சில் தேர்வை எழுத வேண்டும் என்று சென்ற ஆண்டு அறிவித்தது. அதே வழித்தடத்தில் இந்திய மருத்துவக் கழகமும் அறிவித்துள்ளது.சட்டப் படிப்பைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய தகுதித் தேர்வு சென்னையில் நடைபெறவில்லை. சட்டக் கல்வியை முடித்த மாணவர்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்தியதால் இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, மருத்துவக் குழுமமும் இதேபோன்று தகுதித் தேர்வு நடத்தவுள்ளதாக அறிவிப்பு வந்த நிலையிலேயே சில மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இன்னும் நிறைய எதிர்ப்புகள் வரக்கூடும்.இந்த நடைமுறையை எதிர்ப்பவர்கள் எழுப்பும் ஒரே கேள்வி, "சுமார் 5 ஆண்டுகளாகப் படித்து, தேர்வு எழுதி, தேர்ச்சியுற்று பட்டம் வாங்கிய பிறகு இன்னொரு தகுதித் தேர்வு என்பது, ஐந்து ஆண்டுகள் படித்த படிப்பையே கேலி செய்வதுபோல இருக்கிறது. மீண்டும் ஒரு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றால், அந்த மாணவர் இதுவரை படித்த படிப்புக்கு என்ன அர்த்தம்?' இது நியாயமான கேள்விதான்.இவ்வளவு எளிமையான, நியாயமான கேள்வியை அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவக் குழுமம் அறிந்திருக்காதா? அல்லது அரசுக்கு இதுபற்றிய அக்கறையே கிடையாதா என்று கேட்டால், அவர்களும் சில காரணங்களைச் சொல்கிறார்கள்.இந்தியா முழுவதிலும் தனியாரால் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு எந்த அளவுக்கு நோயாளிகள் வருகிறார்கள், எந்த முறையில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதெல்லாம் வெறும் காகிதத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாமே தவிர, இவற்றின் தரம் குறித்து பல கருத்து மாறுபாடுகள் உள்ளன.மேலும், தனியார் மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி இவற்றில் படிப்பை முடித்து வெளிவரும் எல்லா மாணவர்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. ஆகவே, ஓர் அளவுகோல் அவசியமாகிறது. அதற்காகத்தான் தகுதித் தேர்வு நடத்துவதும் அவசியமாகிறது.ஒரு மருத்துவருக்கான தொழில் உரிமம் என்று மட்டுமே இதை அணுக முடியாது; கூடாது. இது அப்பாவி நோயாளிகளின் உயிருடன் தொடர்புடையது என்பதால் மருத்துவர்களின் தரம் மிகவும் இன்றியமையாதது.அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், மருத்துவத் தொழில் உரிமம்பெற வேண்டுமென்றால் அதற்கான தனித்தேர்வு எழுத வேண்டும். இந்தியாவிலிருந்து ரஷியா போன்ற வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இங்கே தொழில்புரிய வரும் மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் அவர்களுக்கான சிறப்புத் தேர்வு எழுதியாக வேண்டும். அவர்களும் சுமார் 7 ஆண்டு படித்துவிட்டுத்தானே வருகின்றனர். அவர்களை அப்படியே ஏன் மருத்துவராகத் தொழில்புரிய அனுமதிப்பதில்லை! ரஷியாவில் மருத்துவப்படிப்பு உலகத்தரத்தில் இல்லை என்பதால்தானே!இந்திய மருத்துவக் குழுமத்தின் இந்த வாதம், எதிர்ப்பாளர்களின் வாதத்தைவிட ஆழமானதாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய சூழ்நிலையில், மருத்துவக் கல்வி என்பது அதிக பணம் கொழிக்கும் தொழில் என்பதாகத்தான் இருக்கிறது. வசதி படைத்தவர்களும், ஏற்கெனவே மருத்துவர்களாக இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாக்கி தங்கள் கார்ப்பரேட் மருத்துவமனையை நிர்வகிக்கச் செய்வதில் ஆர்வம் காட்டுவது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது.இவர்கள் எத்தனை லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தாகிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி, தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே ஆர்வத்துடன் படிக்கின்றார்களா? அல்லது தேர்வுகளில் வெற்றி பெறும் உத்திகள் மட்டுமே அறிந்திருக்கிறார்களா என்பது அந்தந்தக் கல்லூரிகளின் தரத்தைப் பொறுத்தது. இந்நிலையில் அவர்கள் படிப்பை முடித்தவுடன் மருத்துவர்கள் என்ற அங்கீகாரத்துடன் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்குவது அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக அல்லவா முடியும்? அவர் உண்மையாகவே மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றுள்ளாரா, நோயாளியுடன் அவரது அணுகுமுறை எவ்வாறு உள்ளது என்பதைச் சிறு தேர்வு மூலம் சோதித்து அவருக்கு உரிமம் வழங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?படிப்பும், பட்டமும் மட்டுமே ஒருவர் ஒரு தொழிலில் முழுமையான திறமையுடையவருக்கான தகுதியாக இருக்க முடியாது. படித்துப் பட்டம் பெறும் எல்லா மருத்துவர்களுமே நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றவர்களா, என்ன? நமது புராதன இந்திய மருத்துவ முறையில் பல ஆண்டுகள் தேர்ந்த வைத்தியரிடம் உதவியாளராக இருந்தவர் மட்டுமே தனியாக வைத்தியம் செய்யும் தகுதியைப் பெறுவதாக இருந்தது. இப்போது ஏட்டுப் படிப்புப் படித்தாலே போதும் என்கிற நிலையில், மருத்துவம் படித்தவர்கள், குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளாவது மருத்துவப் பயிற்சிபெற்ற பிறகு, அவர்கள் தரம் தேர்வு மூலம் பரிசோதிக்கப்பட்டு உரிமம் வழங்குவதுதான் முறையாக இருக்க முடியும்.மருத்துவர்கள் இவ்வாறு தகுதித் தேர்வில் வெற்றிபெறுவது மட்டுமல்லாமல், குறைந்தது கட்டாயமாக இரண்டாண்டுகளாவது கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினால் மட்டுமே மருத்துவர்களாக அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர்கள் உயர்படிப்புக்கும் தகுதி பெற்றவர்களாக முடியும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அரசியல் பின்புலமுடையவர்களால் புற்றீசல்போல தொடங்கப்பட்டு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து, நன்கொடை கொடுத்து மருத்துவர்களாகிவிட முடியும் என்கிற நிலைமையால் ஏற்படும் விபரீதங்களால் பாதிக்கப்படப்போவது அப்பாவி நோயாளிகள். அவர்களைப் பாதுகாப்பதுதான் அரசின் கடமையாக இருக்க முடியும்!

Soniya request to vote for her genocide achievements: சாதனைக்காக வாக்களியுங்கள்: சோனியா காந்தி பிரசாரம்

ஆமாம். உலக நாடுகளும் பன்னாட்டு அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள இன அழிப்பு முயற்சிகளைக் கண்டிக்க வந்த பொழுது அவர்களை மாற்றி அமைதி காக்கச் செய்த சாதனைக்காகவும் தமிழ் இன அழிப்பில் தானும் உதவி, வேறு நாடுகளையும் உதவச் செய்த சாதனைக்காகவும், போர்க்குற்றங்களை விசாரிக்க முனைந்தவர்களைத் தடுத்து வெற்றி கண்ட சாதனைக்காகவும், பேரினப்படுகொலை நடத்தியும் தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாத பொழுதும் பிற கட்சிகளைக் கூட்டணி வைக்கப் போட்டி போடச் செய்த சாதனைகாகவும் தமிழினப் படுகொலைகளைச் செய்த பின்பும் தமிழ்நாட்டில் அச்சமின்றி உலவும் சாதனைக்காகவும் வாக்களிக்க வேண்டுகிறார் மேலைஆரியச் சோனியா!  வாக்காளரக்ளாகிய நாம் அவரை அரசியலில் இருந்து விரட்டியடிக்கும் சாதனை புரி்வோம்!  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சாதனைக்காக வாக்களியுங்கள்: சோனியா காந்தி பிரசாரம்




சென்னை தீவுத் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
சென்னை, ஏப்.5: அரசின் சாதனைகளுக்காக, வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள கட்சிக்காக திமுக - காங்கிரஸ் அணிக்கு வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.சென்னை தீவுத்திடலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது:தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு இந்திய அளவில் முன்னணியில் விளங்கும் மாநிலம் ஆகும். வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது.மாணவர்களுக்கு சத்துணவு திட்டம், பெண்களுக்கு திருமண உதவி திட்டம், வயதானவர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பார்த்து இந்தத் திட்டங்களை பிற மாநிலங்களிலும் செயல்படுத்துகின்றனர்.தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்களுக்காக தமிழக அரசு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் கருணாநிதி தலைமையிலான மாநில அரசும் இணைந்து இணக்கமாகப் பணியாற்றுவதாலேயே இதுபோன்ற சாதனைகள் சாத்தியமாகியுள்ளன.தமிழகத்துக்கு மத்திய நிதி ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.9,675 கோடியாக இருந்தது. 2010-11 நிதியாண்டில் இந்த ஒதுக்கீடு ரூ.17,500 கோடியாக அதிகரித்துள்ளது. தி.மு.க. அரசு இந்த மாதத்துடன் 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ய உள்ளது. மீண்டும் மாநில அரசைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளீர்கள். கடந்த முறை (மக்களவைத் தேர்தல்) வாக்களித்தபோது எங்களது சாதனைகளுக்காகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சிக்கும் வாக்களித்தீர்கள்.அதேபோன்று இந்த முறையும் அரசின் சாதனைகளுக்காகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சிக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.காங்கிரஸ் கட்சியின் பார்வையில் வளர்ச்சி என்பது ஏழைகள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஆகும். இதே கொள்கையுடைய தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றியதால் தமிழகம் பயனடைந்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றார் சோனியா காந்தி.சோனியா காந்தியின் ஆங்கில உரையை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் தமிழில் மொழி பெயர்த்தார்.தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் "பெஸ்ட்' ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பேசினர்.இலங்கைத் தமிழர் பிரச்னைஇலங்கைத் தமிழர் பிரச்னையை மிக முக்கியப் பிரச்னையாக நாங்கள் கருதுகிறோம். இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளுக்காக அதிக அளவில் நிதியுதவி வழங்கியுள்ளோம். கடந்த ஓராண்டில் மறுவாழ்வுப் பணிகளில் அங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம அந்தஸ்து மற்றும் சம உரிமை வழங்கும் வகையில் அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசை வலியுறுத்தி வருகிறோம்.மீனவர் பிரச்னைகடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் இனி சுடப்படமாட்டார்கள் என்று எங்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்றார் சோனியா காந்தி.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

Parties of Election Seasons: dinamani article: தேர்தல் நேரக் கட்சிகள்!

இராசாசி என எழுதத் தெரிந்த விக்கிரமசிங்கனுக்கு அணணா என்று எழுத மனம் வரவில்லையா?  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்


தேர்தல் நேரக் கட்சிகள்!



ஓவ்வொரு தேர்தலின் போதும், ஒன்றிரண்டு அரசியல் கட்சிகள் உதயமாவதும் அவற்றில் சில தங்களைத் தக்க வைத்துக் கொள்வதும் மற்றவை வந்த சுவடே தெரியாமல் காணாமல் போவதும் இந்திய அரசியலுக்கே உரித்தான தனித்துவம். இந்த விஷயத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல.1957-ல் நடந்த இரண்டாவது சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் அரங்கத்தில் சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக நுழைந்தபோது அடுத்த பத்தே வருடங்களில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்தக் கட்சியினரே கூடக் கனவு கண்டிருக்கமாட்டார்கள். அன்றைய முதல்வர் கு. காமராஜின் தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பிரஜா சோஷலிஸ்ட்டுகளும் தேர்தல் களத்தில் மோதினாலும் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தி.மு.க.வின் வெற்றிதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.1962-ம் ஆண்டு நடந்த மூன்றாவது சட்டப் பேரவைத் தேர்தலில் பரபரப்பாக வலம் வந்த புதிய கட்சி ராஜாஜியால் தொடங்கப்பட்ட சுதந்திரா கட்சி. இன்றைய பொருளாதார சீர்திருத்தம், தனியார்மயமாக்குதல் போன்ற கொள்கைகளை முன் வைத்து, காங்கிரஸ் கட்சியின் சோஷலிஸத்துக்கு மாற்றாக செயல்படப் போவதாக அறிவித்த சுதந்திராக் கட்சி, தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. தி.மு.க.வின் அசுர வளர்ச்சி, காங்கிரஸô அல்லது தி.மு.க.வா என்கிற இருமுனைப் போட்டியை உருவாக்கியதாலோ என்னவோ மற்ற மாநிலங்களில் சுதந்திரா கட்சிக்குக் கிடைத்த வரவேற்பு தமிழகத்தில் கிடைக்கவில்லை.நான்காவது சட்டப் பேரவைத் தேர்தல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு நேர்ந்த துப்பாக்கிச் சூடு போன்ற பல பரபரப்பான சம்பவங்களின் பின்னணியில் அமைந்தது. அதனால், புதிய கட்சி எதுவும் களத்தில் இறங்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் அங்கம் வகித்தன.1971-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம். காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸô அல்லது காமராஜ் போன்ற மூத்த தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸô என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.மக்களுக்குப் பழக்கமான காங்கிரஸ் கட்சியின் இரட்டைக் காளை சின்னம் முடக்கப்பட்டு, ஸ்தாபன காங்கிரஸ் "ராட்டை' சின்னத்திலும், இந்திரா காங்கிரஸ் "பசுவும் கன்றும்' சின்னத்திலும் போட்டியிட்டன.ராஜாஜியின் சுதந்திரா கட்சியும், காமராஜ் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும் ஒரு புறமும், இந்திரா காங்கிரஸýடன் கைகோத்து தி.மு.க. மறுபுறமும் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலின் இன்னொரு முக்கியமான அம்சம் - சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு மு. கருணாநிதி தலைமையில் தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் இது என்பது.மக்களவைத் தொகுதியில் மட்டும் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுவது என்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜை வீழ்த்துவது குறிக்கோள் என்பதால் போட்டியிடாமல் திமுகவை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்தது இந்திரா காங்கிரஸ். அதனால், 184 இடங்களில் திமுக வெற்றிபெற்று மிருகபலத்துடன் ஆட்சியமைத்தது. அதற்குப் பிறகு இந்த அளவுக்கு இடங்களைக் கைப்பற்றி எந்தக் கட்சியும் பதவிக்கு வரவில்லை. 1972-ல் எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய பிறகு நடந்த முதல் தேர்தல் ஆறாவது சட்டப் பேரவைத் தேர்தல். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் எம்.ஜி.ஆரின் தலைமையிலான கட்சி மக்களைச் சந்தித்தது. இதற்கு முன்பே திண்டுக்கல் மக்களவைத் தேர்தலுக்கு நடந்த இடைத்தேர்தலிலும், கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் எம்ஜிஆரின் புதிய கட்சி மாபெரும் வெற்றியடைந்திருந்தது.1977-ல் நடந்த இந்தத் தேர்தலில்தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வுக்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் இடையே நடந்த பலப்பரீட்சையில் மற்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது 1977 தேர்தலில்தான்.ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி மற்றும் சோஷலிஸ்டுகள் ஒன்றாக இணைந்து ஜனதா கட்சி என்கிற பெயரில் களத்தில் இறங்கினர். அகில இந்திய அளவில் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் தாக்கம் குறைவாகத்தான் இருந்தது. காமராஜின் மறைவுக்குப்பிறகு நடந்த முதல் தேர்தல். ஸ்தாபன காங்கிரஸில் இருந்த பெரும்பான்மையான தலைவர்கள் இந்திரா காங்கிரஸýடன் இணைந்துவிட்ட பிறகு நடந்த தேர்தல் என்பதும் இதன் தனிச்சிறப்பு. 1979 நாடாளுமன்றத் தோல்வியைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர். தலைமையிலான மாநில அரசு கலைக்கப்பட்டதால் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிர்பந்தம்தான் 1980 சட்டப் பேரவைத் தேர்தல். இந்தத் தேர்தலில் தி.மு.க.வும் இந்திரா காங்கிரஸும் கைகோத்து நின்றபோது, அந்தப் பலமான கூட்டணியை எதிர்கொள்ள எம்.ஜி.ஆரால் அமைக்கப்பட்டதுதான் 16 கட்சிக் கூட்டணி.இந்தத் தேர்தலில் களம் கண்ட இரண்டு மாநிலக் கட்சிகள் - ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து வந்த குமரி அனந்தனின் தலைமையிலான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸýம், இந்திரா காங்கிரஸிலிருந்து வெளியேறிய பழ. நெடுமாறனால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸýம். காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டது. தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் போட்டியிட்டது என்றாலும் அதற்குப் பிறகு காணாமல் போய்விட்டது.எட்டாவது சட்டப் பேரவைத் தேர்தலை ஒரு அனுதாப அலைத் தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திரா காந்தியின் படுகொலையும், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைவும் பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தியதால் தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க. மற்றும் இந்திரா காங்கிரஸýக்கு சாதகமாக அமைந்தது. 1984-ல் நடந்த இந்தத் தேர்தலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லாமல் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.(தொடர்ச்சி நாளை)