செவ்வாய், 14 ஜூலை, 2009

இலங்கை நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் தமிழர்களுக்கு 50 மருத்துவர்கள்



கொழும்பு, ஜூலை 13: இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் குணசேகரா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் ராஜபட்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டியுள்ளது. 300 நர்சுகள் இருக்கவேண்டிய நிலையில் 10 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், டாக்டர்களே நர்சுகளின் பணியையும் செய்ய வேண்டியுள்ளது. டாக்டர்கள் தங்குவதற்கு சரியான வசதியில்லை. கடந்த வாரம் சுமார் 5 ஆயிரம் பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டனர். நர்சுகளின் உதவி இல்லாமலேயே அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியதாயிற்று. முகாம்களில் உள்ள தமிழர்களின் சுகாதாரத் தேவைகளை கவனிக்க உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் டாக்டர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கருத்துக்கள்

கொத்துக் குண்டுகளில் இருந்தும் எரி குண்டுகளிலிருந்தும் எமன் வாயிலிருந்து தப்பி விட்ட தமிழர்களை எப்படிப் பூண்டோடு அழிப்பது? மருத்துவம் உணவு முதலானவற்றை மறுப்பதுதான் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதுதான் எனச் சிங்கள அரசு செயல்படுகின்றது. அடுத்த நாட்டு இறையாண்மையில் தலையிடக் கூடாது எனக் கூறிக் கொண்டே ஈழ நாட்டு இறையாண்மையில் தலையிட்டுப் பேரவலங்களை ஏற்படுததிய காங். அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. துயர் தீர்க்க வேண்டிய தி.மு.க.தலைமை குடும்ப உயர்வையே எக்காலமும எண்ணிக் கொண்டிருக்கின்றது. தமிழ் இன மக்களே பாரா முகமாக இருக்கும் பொழுது நாம் என்ன செய்வது என்று உலகநாடுகள் வாளாவிருக்கின்றன. மனித நேயமே நீயும் மடிந்து போனாயோ ஈழத் தமிழர்களுடன்!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/14/2009 4:25:00 AM

God save SL Tamils from the hands of SLA! There was another news that said 1400 SL Tamils are killed in these camps each week! :(

By srini m
7/13/2009 8:09:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக