சனி, 23 அக்டோபர், 2021

கவிஞர் வைத்தீசுவரனின்சொல்ல நினைத்தேன் – அளவளாவல்

 அகரமுதல


ஐப்பசி 07, 2052 / 24.10.2021
மாலை 6.30
குவிகம் இணைய வழி அளவளாவல்

கவிஞர் வைத்தீசுவரனின்
‘ சொல்ல நினைத்தேன் ‘
புத்தகம் குறித்து
இந்திரன்
மீ.விசுவநாதன்
எச்சு.என்.அரிகரன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 

கூட்ட எண்  / Zoom  Meeting ID:

 619 157 9931
கடவுச் சொல் /  Passcode:

 kuvikam123   

பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.

 




புதன், 20 அக்டோபர், 2021

வெளிமாநிலத்தவருக்கான வேலை வாய்ப்பை மறுத்திடுக! -த.தே.பே. வலியுறுத்தல்

 அகரமுதல




அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில்

வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக்கூடாது!

தேர்வு அறிவிப்பைத் திருத்தி வெளியிட வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கிவெங்கட்ராமன் அறிக்கை!

 

தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 2021 அட்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடக்கவுள்ளதாக ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே நீக்கப்பட்டு இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த 2017இல் இதே பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை அம்பலப்படுத்தி 10.11.2017 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்துப் பல்வேறு அரசியல் கட்சியினரும் அதனைக் கண்டித்தனர். வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டுப் புதிய பட்டியல் வெளியிடாவிட்டால், வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23 அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை முற்றுகையிட்டுத் தடுப்போம் என்று ஐயா மணியரசன் அவர்கள் அறிவித்தார்.

இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு அரசாலேயே ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு, அத்தேர்வை நீக்கியதுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 27.11.2019 அன்று, இதே 1060 பணியிடங்களுக்கான மறுதேர்வு அறிவிப்பு (அறிவிப்பு எண் – 14/2019) வெளியிடப்பட்டது. தமிழ் தெரியாதோரும் இத்தேர்வை எழுதலாம் என்று கடந்த முறை (2017) அறிவிப்பு வெளியிட்டதால்தான் வெளி மாநிலத்தவர் இத்தேர்வில் பங்கேற்று முறைகேட்டில் ஈடுபட்டனர் என்ற நிலையில், 2019இல் வெளியிடப்பட்ட அறிவிப்பும் அதே விதியைக் கொண்டிருந்தது. எனினும் தேர்வு நாள் அறிவிக்கப்படவில்லை.

மகுடை (கொரோனா) முடக்கம் காரணமாகக் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாத அத்தேர்வு, தற்போது இம்மாதம் அட்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய அறிவிப்பின்படியே இத்தேர்வு நடைபெறவுள்ளதால் மீண்டும் இத்தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்கும் நிலை உள்ளது. வெளி மாநிலத்தவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், சிற்றூர்ப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும்!

 

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற இந்தி மாநிலங்களில் இந்தியும், கருநாடகா போன்ற மாநிலங்களில் கன்னடம் உள்ளிட்ட அத்தேசிய இன மொழிகளும் கட்டாயமாக்கப்பட்டு, மண்ணின் மக்கள் மட்டுமே அரசுத் தேர்வெழுத முடியும் என்ற நிலை உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் வந்தவரெல்லாம் தேர்வெழுதலாம் என்ற விதி இன்றும் மாற்றப்படாமல்  இருப்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல தமிழ் மக்களின் வாழ்வுரிமையையும் பறிக்கும் செயலாகும்!

 

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தேர்வுக்கான அறிவிப்பை நீக்கிவிட்டுத், தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மறுத்தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அட்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து ஆணையிட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கிவெங்கட்ராமன்

 

===================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

===================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===================================



கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் ஆறு நூல்கள் அறிமுகம்

 

அகரமுதல

ஐப்பசி 05, 2052 / 22.10.2021 

மாலை 6.00

அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை 600018

 






இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா

 




இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றது.

 இந்த மாதம் எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “தேவரடியார்கள் – கலையே வாழ்வாக!” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

 அமெரிக்க நேரம்: ஞாயிற்றுக்கிழமை, ஐப்பசி 07, 2052 /அட்டோபர், 24ஆம் நாள், இரவு 8:30மணி கிழக்கு நேரம் (EDT)

 இந்திய நேரம் IST : திங்கட்கிழமை, ஐப்பசி 08, 2052 /அட்டோபர், 25 ஆம் நாள், காலை 6 மணி 

 

அணுக்கி நேரலை  / Zoom Live

 

https://tinyurl.com/FeTNA2020ik

 

கூட்ட எண்    / Meeting ID : 954 1812 2755

 

எழுத்தாளரும், கவிஞருமான திருமதி. அ. வெண்ணிலா தமிழ்க் குமுகத்தில் இக்காலப் பெண் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவராவார்., திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த இவர் 1998 இல் தனது முதல் கவிதைத் தொகுப்பாக ‘என் மனசை உன் தூரிகை தொட்டு’ நூலை வெளியிட்டார்.

 தொடர்ந்து பல்வேறு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். மதுராந்தகச் சோழனின் (இராசேந்திரச் சோழன்) வாழ்க்கையைக் குறித்து இவர் எழுதியுள்ள

“கங்காபுரம் ” புதினம் தமிழ் மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

 தேவரடியார்கள் குறித்து இவர் எழுதியுள்ள ஆய்வு நூல் தமிழில் மிகவும் குறிப்பிடத்தகுந்த நூல்களில் ஒன்றாகும்.

இவர் கணவர் மு.முருகேசும் புகழ்மிகு கவிஞராவார்.

 சிறப்புரையைத் தொடர்ந்து கேள்வி மறுமொழி நேரமும் இடம்பெறும். தாங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள பேரவை இலக்கியக் குழு சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.